Skip to content
Post Views: 918

மெய்யனூர்
நீண்ட நாட்கள் கழித்து வந்து நிற்கும் தன் மகனை பாசத்தோடு அணைத்து கொண்டான் வாணன்… நந்தினி தூரமாக நின்றே அவனை கண்களில் நிரப்பி கொண்டாள்… முன் இருந்ததுக்கு இப்போது நந்தினியிடம் முகம் காண்பிப்பது இல்லை… அவள் பேசினால் நிற்கிறான்… ஆனால் பேசுவது இல்லை… அதுவே நந்தினிக்கு போதுமானதாய் இருந்தது….
Advertisement
வாணனுடன் பேசி விட்டு அவன் வர்ணன் இருக்கும் வீட்டிற்கு தான் சென்றான்…. அவன் வருவது வாணன் தவிர்த்து யாருக்கும் தெரியாது… எனவே வர்ணன் முன் வந்ததுக்கு சந்தோசமாக அணைத்து கொண்டான்… “சிவா வரேன்னு சொல்லவே இல்ல.. எப்படி இருக்க… ஜிம்முக்கு போறியா டா… போன டைம் வந்தத விட இப்போ பாடி ஏறி இருக்கு…” என்று கேட்டான்…
Advertisement
“ஹ்ம்ம் சித்தா… மார்னிங் ஈவினிங் போயிட்டு தான் இருக்கேன்” என கூறி கொண்டு இருக்கும் போதே “அண்ணா” என கத்தி கொண்டே கார்த்திகாவும் அருனேஷும் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டனர்….
Advertisement
பேச்சு குரல் கேட்டு வந்த ஜனனி “சிவா” என அழைத்து கொண்டு வந்தவள் அவன் தலையை கலைத்து “என்ன சிவா இளைச்சு போயிட்ட… ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா….” என்று அக்கறையுடன் கேட்டாள்..
Advertisement
“ஐயோ ஜனனி ம்மா நல்லா பாருங்க… நான் இளைச்சு போய் இருக்கேனா… உங்க பாசத்துக்கு அளவே இல்லையா…” என்று கூறி அவளை அணைத்து கொண்டு செல்லம் கொஞ்சினான்…
அப்போது ஜனனியின் அம்மா வர “பாட்டி” என அழைத்து கொண்டே அவரை அணைத்து கொண்டவன் அவரிடம் செல்லம் கொஞ்ச கார்த்திகாவும் அருனேஸும் அவன் பக்கம் அமர்ந்து கொண்டு விளையாடி கொண்டு இருந்தனர்…
ஜனனி வர்ணனிடம் கண்களில் பெருமை பொங்க “ஒரு வருஷத்துல ரொம்ப வளர்ந்துட்டான்ல… பெரிய மனுஷன் மாதிரி இருக்கான் மாமா… இருவது வயசு கூட ஆகல… ஆனா உங்களை விட பெரியவன் மாதிரி பாடிய ஏத்தி இருக்கான்… நம்ம பையன் ஒரு வருஷத்துல எவளோ வளர்ந்துட்டான்…” என்று சிவாவை பார்த்தவாறு கூறினாள்… வர்ணனும் அதை ஆமோதித்து “ஆமா வாய்ஸ் கூட மாறி இருக்கு..” என்று கூறினான்…
கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்த ஜனனியின் அம்மா கொஞ்சம் தூங்க சென்றுவிட்டார்… ஜனனி அவனுக்கு பிடித்தது சமைக்க சென்று விட அருனேஸ் விளையாட சென்று இருந்தான்… வர்ணன் ஒரு வேலையாய் வெளியில் சென்று விட்டான்….
கார்த்திகா சிவாவிடம் “அண்ணா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்” என்று தயங்கி கூறினாள்.. “என்ன கார்த்தி என்கிட்ட என்ன தயக்கம்…. கேளு” என்று கூறினான்…
“அண்ணா அன்னிக்கு நிரவி இங்க வரப்ப நீ போன் பண்ணி இருந்தல…. ஏன் அன்னிக்கு அவ கூட பேச கூட இல்லை நீ… அவ எவளோ ஆசையா இருந்தா தெரியுமா உன் கூட பேச… ஆனா அவ கூட நீ பேசவே இல்லை… அவ சோகமா வீட்டுக்கு போயிட்டா…” என்று கவலையாக கூறினாள்….
“அவ பர்த்டே நாளைக்கு வருதுல டா சும்மா நேர்ல சப்ரைஸ்சா வரலாம்னு வந்தேன் டா… அது தான் சும்மா அவ கிட்ட பேசாத மாதிரி பண்ணேன்…. நாளைக்கு அவ எப்படி ரீயாக்ட் பண்றானு பாக்கலாம்….நாம நாளைக்கு அய்யனார்புரம் போகலாம் ஓகேவா…” என்று கேட்டான்…
“அண்ணா அவ அங்க இல்லையே அவ டெல்லி போயிட்டா… இன்னிக்கு காலைல தான் போனா… அர்ஜுன் மாமா பிரென்ட் டெல்லில இருக்காங்கல அவங்க வீட்டுக்கு லீவுக்கு போய் இருக்கா…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே ஜனனி “கார்த்தி நீ போய் அருணை கூட்டிட்டு வா…” என்று அனுப்பி விட்டு “சிவா வா சாப்பிடலாம்…” என்று அவனை இழுத்து கொண்டு வந்து அமர வைத்தாள்…
சிவா கார்த்திகை கூறி சென்ற அதிர்ச்சியுடன் “ஜனனி ம்மா நிரவி டெல்லி போயிட்டாளா…” என்று கேட்டான்…
“ஆமா சிவா…அர்ஜுனன் அண்ணா அவங்க கேட்டதும் அனுப்பிட்டாங்க.. ஆனா சுபாவுக்கு இதுல விருப்பம் இல்ல… ஆனா அண்ணா தான் எல்லாரையும் சம்மதிக்க வெச்சு அனுப்பி இருக்காரு.. நீ சாப்பிடு டா…” என்று அவனுக்கு உணவை பரிமாறினாள்…
அன்று நிரவி வீட்டிற்கு வந்த போது சிவனேஸ் அனைவரிடமும் பேச அழைத்து இருந்தான்…. நிரவி மட்டும் அங்கு செல்லவில்லை…. குழந்தைகள் அனைவரும் வந்து இருந்தனர்… அனைவரிடமும் பேசியவன் நிரவியிடம் மட்டும் பேசவில்லை… வேண்டும் என்றே தான் அவன் பேசவில்லை… நேரில் வந்து அவளை சப்ரைஸ் செய்யலாம் என நினைத்து அவளை வேண்டும் என்றே தவிர்த்து விட்டான்.. ஆனால் நிரவிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது… கார்த்திகா தான் “அண்ணாவுக்கு வேலையா இருக்கும் நிரவி நாம அப்பறம் பேசலாம்” என கூறி சமாதானம் படுத்தினாள்… அதனால் தான் வீட்டிற்கு வரும் போது சோகமாக இருந்தாள்…
அய்யனார்புரம் சென்று விட்டு அங்கு அரை மணி நேரம் பேசி விட்டு வீட்டிற்கு வந்து விட்டான்… ஒரு வாரம் இருந்துவிட்டு செல்லலாம் என நினைத்து தான் வந்தான்… ஆனால் நிரவி இங்கு இல்லாததால் இரண்டு நாட்களில் டெல்லி சென்றுவிட்டான்….
அங்கு டெல்லியில் நிரவியோ இளவரசி போல் இருந்தாள்… அப்துல் ஆஷா இருவரும் அவளை அப்படி பார்த்து கொண்டனர்…. அவள் பிறந்த நாளில் அவளை பன்னிரண்டு மணிக்கு எழுப்பி அவளுக்கு சப்ரைஸ் கொடுத்து அவளுக்காக பார்பி கேக் வாங்கி வெட்டி அமர்க்களம் செய்து விட்டனர்…
ஒரு மாதம் நிரவி இங்கு தான் இருந்தாள்… அப்துல் ஆஷா அன்பு மழையிலும் ரியாஸுடன் டாம் அண்ட் ஜெர்ரி சண்டையிலும் அவளுக்கு ஒரு மாத காலம் அழகாக சென்றது… வீட்டினரிடம் இரவு பேசுவாள்… சசி மட்டும் அவளிடம் பேச வேண்டாம் என தோன்றினால் உடனே அழைத்து பேசி விடுவான்…
சசி தான் அழைத்து செல்ல வந்து இருந்தான்… அவனை பார்த்ததும் “சசிப்பா” என்று ஓடி சென்று அணைத்து கொண்டாள்… அவள் கிளம்புவது மூவருக்கும் வருத்தமாக இருந்தது… ஆஷா எல்லாம் அழுதுவிட்டாள்… நிரவி அவளை அணைத்து கொண்டு “அத்தம்மா நான் எல்லா லீவுக்கும் இங்க வந்துறேன்… நாம ஜாலியா இருக்கலாம்…” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அப்துலிடம் “மாமா இவனை நம்பாதீங்க… படிக்குறேன்னு ஏமாத்திட்டு போன் நோண்டிட்டு இருக்கான்…” என்று கிளம்பும் போதும் ரியாஸை கோர்த்து விட்டு தான் கிளம்பினாள்…
“ஹே சுண்டெலி… வாடா போடா சொல்ல கூடாதுனு சொல்லி இருக்கேன்ல…” என்று அவளை கொட்ட பார்க்க அவள் அப்துலிடம் “மாமா இவனை பாருங்க” என்று சலுகையாக அவன் தோள் சாய்ந்து கொண்டாள்…
சசி அதிசயமாக பார்த்து கொண்ட இருந்தான்… நிரவி இந்த நான்கு வருடத்தில் மிகவும் அமைதியாகி இருந்தாள்… அர்ஜுனன் சுபா மீண்டும் அய்யனார்புரம் வந்த போதும் நிரவி இவ்வளவு எல்லாம் சேட்டை செய்யவில்லை…. அமைதியாய் தான் இருப்பாள்… இப்போது இவர்களிடம் செல்லம் கொஞ்சுவதை ஆச்சர்யமாய் பார்த்து கொண்டு இருந்தான்….
நிரவி மூவரிடம் பிரியாவிடை பெற்று அழுது கொண்டு தான் ஊருக்கு திரும்பினாள்….ஊருக்கு வந்த பின்னும் ஆஷாவுடன் தினமும் பேசி விடுவாள்… சுபாவுக்கே இவர்களின் பிணைப்பு ஆச்சரியத்தையும் பொறாமையையும் சேர்த்து ஏற்படுத்தி இருந்தனர்… ஆனால் இதற்கு எல்லாம் அவள் ஆஷாவுடன் பேசுவதற்கு தடை போடவில்லை….அந்த அளவிற்கு இவர்களின் பிணைப்பு இருந்தது…
அடுத்த மூன்று மாதத்தில் ஊர் திருவிழா வர காலை முதல் மரியாதை பூஜையும் நல்ல முறையில் முடிந்து இருக்க ரா பூஜையும் நல்ல முறையில் முடிந்து இருந்தது… அனைவருக்குமே அய்யனார் நல்ல வாக்கை தான் கூறி இருந்தார்… இந்த வருடமும் நிரவியை கடைசியாய் அழைத்து சாமி பாதத்தில் வைத்து இருந்த கயிற்றை கட்டி விட்டு அர்ஜுனன் உடம்பில் இருந்து இறங்கினார்…… நாட்களும் யாருக்கும் காத்திராமல் மாதங்களாய் கரைந்து வருடங்களும் உருண்டு ஓடி இருந்தது… இவர்கள் வாழ்வும் மாறி இருந்தது….
error: Content is protected !!