Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

முள்ளை மலராக்கினாய் முழு நிலவே – Epilogue

ஐந்து வருடங்கள் கழித்து.

கட்டிலில் படுத்துக் கொண்டு, தன் மனைவியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.

பொடிசு, எப்படி ஆகிட்டா இப்ப? பார்த்தவர்கள் எல்லோரும் எங்கள அப்படியே மேட் பார் ஈச் அதர்ன்னு சொல்றாங்க!

கல்யாணம் ஆன புதுசுல கூட அவ்வளவா தெரியல, அப்போ என் ஹைட்டுக்கு ஈக்வலா இருந்தாலும் கூட, எங்களோட அந்த வயசு வித்தியாசம் நன்றாக கவனிப்பவர்களுக்கு தெரிய தான் செய்யும்!



Advertisement

ஆனா டெலிவரிக்கு அப்புறம் உடம்பு இன்னும் கொஞ்சம் நல்லா பூசினா மாதிரி ஆகி, இப்ப எனக்கும் அவளுக்கு அப்படி ஒரு பொருத்தமா இருக்கு பார்க்க!

ஒரு கல்யாணத்திற்கு போய் விட்டு திரும்பியிருந்தார்கள்.

அன்வரின் கடைசி மகன் சமீரின் கல்யாணம்.

Advertisement

சென்னையில் நடந்தது.

Advertisement

அதற்கு தான் போய் விட்டு வந்திருந்தார்கள் ரிஷியும் மான்ஸியும்.

கூடவே இன்னொரு உறவினர் வீட்டு திருமணமும் சென்னையிலேயே நடக்கவிருக்க, பிருந்தாவும் சதாவும் அவர்கள் கூடவே வந்து  இருந்தார்கள்.

அனைவரும் இப்போது நவ்தீப் வீட்டில் தான் இருந்தார்கள்.

Advertisement

இன்னும் இரண்டு நாட்களில் நவ்தீப்பின் மகன் ஆத்விக்கின் பிறந்த நாள் வருகிறது!

அதனால் இங்கேயே தங்கி விட்டனர் நால்வரும்.

கல்யாணத்திற்கு அணிந்து சென்றிருந்த நகைகளை கழற்றி வைத்துக் கொண்டிருந்தாள்  மான்சி.

ஒவ்வொரு நகையாக கழற்றி அதற்குரிய பாக்ஸ்களில் பத்திரமாக வைத்து, அங்கிருந்த வார்ட்ரோபில் அதை வைத்து விட்டு திரும்பியவளிடம்,

“அவ்வளவு தானா?” என்றான் ரிஷி.

“என்ன அவ்வளவு தானா?”

“இல்ல. நகையை எல்லாம் கழட்டி வச்ச,

இன்னும் பட்டுப்புடவையிலேயே இருக்கியே? ட்ரஸ் சேன்ஜ் பண்ணலையா?”

“ம்ம். பண்ணப் போறேன்”, என்று ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றவளை,

“இது என்ன மான்சி புது பழக்கம்? இங்கயே மாத்த வேண்டியது தானே?” என்றான் ரிஷி,

நன்றாக அவள் பக்கமாய் திரும்பிப் படுத்து, ஒரு கையால் தன் தலையைக் தாங்கிக் கொண்டு!

“ஹாங்.. சார்வாள் மூஞ்சியே சரியில்ல, இன்னிக்கு ஈவனிங்ல இருந்து! வந்த இடத்துல சமர்த்துப் பிள்ளையா லட்சணமா இல்லாம!

இப்படியா கடிச்சு திங்கிற மாதிரி பார்த்து வைப்பீங்க. அத பிருந்தா அத்தை வேற கவனிச்சுட்டாங்க.

அதான் பாப்பாவைக் கூட அவங்க கூடவே வச்சுக்கிட்டு, நீ போ மான்சி. கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தது,

ரெண்டு பேருக்கும் அலைச்சலல்ல டயர்டா இருக்கும்னு சொல்லி ஒன்பது மணிக்கே என்னை உள்ளே அனுப்பி வச்சுட்டாங்க!

ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க?”

“ஏய். பொடிசு, நான் என்னடி அப்படி செஞ்சுட்டேன்.

சும்மா உன்னைப் பார்த்தேன்!

 இன்னிக்கு கல்யாண வீட்டில வேற எல்லோரும் உன்னையும் என்னையும் நல்ல ஜோடிப்பொருத்தம்னு சொன்னாங்க.

உன் நஸீரா அம்மா வேற வீட்டுக்கு போய், சுத்திப் போடு புள்ளன்னு சொல்லி அனுப்பல!

அதான்! சும்மா பார்த்துட்டு இருந்தேன்!” என்று  பேசியபடி எழுந்து வந்து அவளை இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் அமர வைத்தான் ரிஷி.

சமீரின் கல்யாண வீட்டில் வைத்து சனூப்பைக் கண்டவுடன் “மாமா” என்று அவனிடம் ஒரே தாவாக தாவி விட்டது ரிஷி மான்சியின் பெண் குழந்தை யுவந்திகா!

அடிக்கடி வீடியோ காலில் பேசி, பேசி, அவனை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டு விட்டது!

அதன் பின் அவன் தோளை விட்டு இறங்கவேயில்லை!

பயங்கர வரவேற்பு அந்த வீட்டினரிடம் ரிஷிக்கும் மான்சிக்கும்!

அனேக சொந்தகாரர்களுக்கு மான்சியை தெரிந்து இருக்க, அனைவரும் அவர்களை நலம் விசாரித்தனர்.

பின் கல்யாணம் முடிந்தவுடன் நண்பர்கள் கூட்டம் பிரியாணியை ஒரு வெட்டு வெட்ட ஆயத்தமாக, ரிஷி மான்ஸியும் சைவ உணவு பக்கம் சென்றனர்.

கல்யாண வீட்டுப் பெரியவர்களில் பெரும்பான்மை முஸ்லீம் முதியவர்கள் எல்லோரும் அங்கு தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்!

ரிஷி மான்சியை நல்லபடியாக கவனித்து உபசரித்தார்கள்!

சாப்பிட்டு முடித்தவுடன், அந்த கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்த போட்டோக்ராபர், இப்போதைய ட்ரெண்டின்படி, சினிமா காமெடி சீன்களுக்கு வாயசைத்து எடுக்கும் இன்ஸ்டா ரீல்ஸ்களை எடுத்தான்!

சமீரின் மகள், யுவந்திகாவை தூக்கி வைத்துக் கொண்டு

“நான் தர மாட்டேன், நான் தர மாட்டேன், என் உயிரே போனாலும் என்னோட குட்டியை நான் தர மாட்டேன் என்று விவேக் ஜோக்கிற்கு வாயசைத்து பேசி நடிக்க அதை வீடியோ எடுத்தார்கள்!

மிகவும் மகிழ்ச்சியாக அங்கு இருந்து விட்டு, பெரும் மனநிறைவுடன் வீடு திரும்பும் போது தான் நஸீரா சுத்திப் போடும்படி சொல்லி அனுப்பினார்.

அங்கிருந்து வந்ததில் இருந்தே ரிஷி இப்படி தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் பொடிசை!

“அத்தான் விடுங்க, எனக்கு கச கசன்னு இருக்கு, முதல்ல போய் ஒரு குளியல் போட்டுட்டு வரேன்”, என்று அவள் எழ முயல,

“வா, சென்னையில எல்லாம் நம்ம ஊரு மாதிரி காவேரி ஓடல, இஷ்டத்துக்கு  தண்ணீர் செலவு பண்ண!

அதனால வா, நாம ரெண்டு பேரும் சேர்ந்தே குளிச்சு தண்ணீரை சேவ் பண்ணலாம்!

நேச்சுரல் ரிசோர்சை எப்பவும் வேஸ்ட் ஆக்க கூடாது!”

“அய்யோடா! என்ன ஒரு சமூக அக்கறை! ரொம்ப தான்” என்று சொல்லி அவனைத் தள்ளி விட்டு போக முயன்றவளை,

“சமூக அக்கறை மட்டுமில்லடி, ஒரு நல்ல புருசனா இருந்து, என் பொண்டாட்டியோட வெற்றிக்கு பின்னால நிக்கணும்!

அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்னு கூட நினைக்கிறேன்!”

“இப்ப எதுக்கு இந்த டயலாக்? சம்மந்தமே இல்லாம!” என்றவளை மீண்டும் கட்டிலுக்கே அழைத்து சென்று அமர வைத்தான் ரிஷி!

“ரொம்ப நாளா சொல்லணும் சொல்லனும்னு என் மனசுகுள்ள பூட்டி வச்சிருந்த அந்த மனக்குறையை இப்போ உன்கிட்ட மனசு விட்டு சொல்லப் போறேன்” என்று வீரபாகு வடிவேல் ரேஞ்சிற்கு ஆரம்பித்தான் ரிஷி!

“என் பொண்டாட்டி, நீ சின்ன பிள்ளையிலிருந்தே எல்லாத்துலயும் பர்ஸ்ட்டா வருவ.. இல்லையா?

எல்லாத்துலயும் நீ தான் முதல்ல வந்து ஜெயிப்ப இல்லையா?”

“ஆமா! அதுக்கென்ன இப்போ?”

“ஆனா இந்த பேபி விசயத்துல மட்டும், உன்னை என்னோட தங்கச்சி ஜோ ஓவர்டேக் பண்ணி முதலா வந்துட்டா!

அது ரொம்ப நாளா, என்னோட மனச உறுத்திக்கிட்டே இருக்கு!

என்னடா ஒரு புருஷனா இருந்து உன் பொண்டாட்டிய இப்படி தோக்க வச்சுட்டியேன்னு என்னோட மனச்சாட்சி ரொம்ப நாளா என்னை கொன்னுட்டு இருக்கு!

அதனால, நான் இப்போ, நவ்தீப் ஜோ, ரெண்டாவது பிள்ளைய பெத்துக்கிறதுக்கு முன்னாடி, என்னோட பொடிசை மறுபடியும் மம்மியாக்கி..” என்று சொல்லி முடித்து ஒருமுறை மூச்சு வாங்கினவன், தொடர்ந்து பேசினான்.

“அவளை இந்த சமூகத்தின் முன்னே ஒரு வெற்றியாளரா நிக்க வைக்க வேண்டியது என்னோட கடமையில்லையா?” என்று வடிவேல் மாடுலேசனில் ஆரம்பித்து சிவாஜி மாடுலேசனில் முடித்தான் ரிஷி!

என்னவோ சொல்ல வாயெடுத்த மான்சியின் வாயில் கையை வைத்து மூடியவன்,

“நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும் மான்சி!

நான் நவ்தீப் அளவு ஸ்மார்ட் இல்ல தான், பொண்டாட்டிய கவர் பண்றதுல!

ஏன்னா, அப்படி இருந்த ஜோவையே அவன் கரெக்ட் பண்ணி எனக்கு முன்னாடியே அவளை மம்மியாக்கிட்டான்!

ஆனா நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணியும், லூஸு மாதிரி உன்னை தேவையில்லாம பேசி, உன்னை கோபப் படுத்தி, டைம் வேஸ்ட் பண்ணினவன்!

நான் கொஞ்சம் பேச தெரியாதவன் தான்!

இல்லன்னு சொல்லல” என்று இன்னமும் பேசிக் கொண்டே போனவனின் கையை உதறி விட்ட, மான்சி, தன் கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள்!

“அடப்பாவி மனுஷா! உனக்கா பேச தெரியாது! அதெல்லாம் நீயும் வாக்கு சாமர்த்தியம் உள்ளவன் தான்! பேசி பேசி தானே என்னை கரெக்ட் பண்ணி, பாப்பா பிறந்தா!”

“இல்ல மான்சி, எனக்கு உன்னை மாதிரி அழகா, என்னை மாதிரி அறிவா..  இல்ல இல்ல வேண்டாம், தாய் மாமன் ஜீவன் மாதிரி அறிவா.. ஒரு பையன்.. இல்ல.. வேண்டாம்!

உன் அண்ணனுக்கு உள்ள ஊமைக் குசும்பு அவனுக்கும் வந்திடும்!

நம்ம ரெண்டு பேரோட ப்ளஸ் எல்லாத்தையும் கொண்டு, ஒரு தம்பி பாப்பா, நம்ம யுவந்திகாவுக்கு ரெடி பண்ணலாமா?” என்றான் ரிஷி!

“என்ன? என்னோட அண்ணன் ஊமைக் குசும்பா? அப்போ உங்க தங்கச்சி ரிதனி?

அவ மட்டும் என்ன லேசு பட்ட ஆளா,

நம்ம கல்யாணத்தில் இருந்தே அது ரெண்டுக்கும் பழக்கம் ஆகி, கடலைத் தாண்டி கடலைப் போட்டு கடலைப் போட்டு, பின்னாடி அதுவே காதலாகி, இப்படி எவ்வளவோ நடந்தும் கூட ஒரு வார்த்தை நம்ம யார்கிட்டயும் சொல்லவே இல்ல!

அப்புறம் நாம தான் அவங்க பேசிக்கிட்டு இருக்கிறப்போ கண்டுபிடிச்சு அப்புறம் அவங்க கல்யாணம் நடந்துச்சு!

என்னமோ ஜீவன் தான் ஊமைக்குசும்பன்ன்னு சொல்றீங்க?”

“பின்னே! அவன் ஐடியாவின் படி  தானே அன்னிக்கு நாம அங்க மறைஞ்சு இருக்கிறத தெரிஞ்சுகிட்டே அவங்க ரெண்டு பேரும் நம்ம கிட்ட மாட்டுற மாதிரி பேசியிருக்காங்க!

அப்பவே நவ்தீப் சொன்னான், மச்சான் கால் தெரியுது.. கால் தெரியுதுன்னு.. நான் தான் வெள்ளந்தியா இருந்துட்டேன்!

ஏண்டா, இப்படி பண்ணி எங்களை சீட் பண்ணினன்னு கேட்டா, எனக்கு வேற வழி தெரியல அத்தான்னு சொல்றான்!

நாங்க ரெண்டு பேரும், அதான் இப்ப நம்ம வீட்டில எல்லோரும் செட்டில் ஆகியாச்சே,

எல்லா பிரச்சினையும் முடிஞ்சு போச்சே, அடுத்து எங்க ரெண்டு பேர் கல்யாண பேச்சை எடுப்பீங்கன்னு பார்த்தா,

அதுக்கான சிம்டம்ஸ் ஒண்ணுமே தெரியல!

பார்த்தேன், அதான் ஒரு ஸ்க்ரீன் ப்ளே பண்ணிட்டோம், அப்படிங்கிறான்!

சரியான கண்ணாடிப் போட்ட கேடி அவன்!

பாக்க பழம் மாதிரி இருந்துகிட்டு அவன் பண்ணின வேலை!

அது சரி, இப்ப எதுக்கு அவங்க பேச்சு எல்லாம்!

நீ அத்தானை கவனிம்மா! அத்தான் உன்னோட வெற்றிக்கு தானே பாடுபடறேன்!”

என்று மீண்டும் அவளை தன்னோடு இழுத்துக் கொண்டான்!

“சான்சே இல்லை! யூ டேக் ரெஸ்ட்!” என்று சொல்லி பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டு விட்டாள் மான்சி!

“நான் ரொம்ப கோபமா தூங்குறேன்” என்று சொல்லி, போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான் ரிஷி!

சில நிமிடங்களில் குளித்து விட்டு வந்த மான்சி,

தூங்கி கொண்டிருந்தவனை, பார்த்து புன்னகைத்து விட்டு, அவன் கன்னத்தில் ஒரு கடி கடித்தாள்!

“ஏய்.. இப்ப எதுக்குடி இப்ப கன்னத்தைக் கடிச்சு வைக்கிற?

நாளைக்கு எனக்கு ஒரு க்ளையண்டோட வீடியோ கால் இருக்கு!

இப்படி கன்னத்தில் கடிச்சு மார்க்கோட நான் எப்படி மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன்!”

“அது.. வந்து.. புருசனைக் கோபப் படுத்துனதுக்கு பரிகாரம் இப்படி அவரோட கன்னத்தை கடிச்சு வைக்கனும்னு பொண்டாட்டி சாஸ்த்திரம் சொல்லுது!”

“அதெல்லாம் பழைய வெர்சன்!

இப்ப அதுல அமெண்ட்மென்ட் வந்துடுச்சு!

இப்ப எல்லாம் கன்னத்துக்கு பக்கத்துல இருக்கிற வாய் தான் சரியான இடம்!

ஆமா உனக்கு யார் இத சொல்லிக் கொடுத்தா?”

“வேற யார், எல்லாம் என்னோட அத்தான் நீங்க தான்!”

“நான் இத மட்டுமா சொல்லிக் கொடுத்தேன்?

இன்னும் என்ன எல்லாம் சொல்லிக் கொடுத்தேன்!” என்று அவன் சொல்ல ஆரம்பித்ததை, நீங்களும் நானும் கேட்க வேண்டாம்!

போதும்.. போதும்! அது எதுக்கு நமக்கு? நாம அங்க இருந்து அப்பீட் ஆகிக்கலாம்!

—-

“இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கா? இந்த ஜோ பாத்ரூமில்!” என்றான் ரிஷி அலுப்பாக.

அன்று தான் நவ்தீப் ஜோவின் மகன் ஆத்விக்கின் பிறந்த நாள்!

சாந்தாம்மா, ஸ்வாமிநாதன் வயது மூப்பு காரணமாக வர முடியாததால், வீடியோ காலில் வாழ்த்தி விட்டார்கள்! மற்றவர்களும் அப்படியே!

“பாத்ரூம் கிளீன் பண்ணிட்டு குளிச்சுட்டு வந்தேண்ணா, அதான் லேட்!” என்றபடி வெளியே வந்தாள்  ஜோ.

அவளை ஆச்சர்யமாக பார்த்தான் ரிஷி!

ஒரு லீவ் லெட்டர் எழுதவே ஆளைத் தேடின அவன் தங்கையா இது என்று!

“நீங்களே சொல்லுங்க மச்சான், அதான் மாசம் ரெண்டு வாட்டி பாத்ரூம் டீப் க்ளீனிங் பண்ற கம்பெனி வந்து கிளீன் பண்ணிட்டு போறாங்க!

ஆனாலும் இவ கேக்கவே மாட்டா” என்றான் நவ்தீப் குறையாக!

“இல்ல.. குட்டிப் பசங்க யூஸ் பண்றது இல்ல! ஹை ஜீன் முக்கியம்! அதான்!” என்றாள் ஜோ.

ஜோ மற்றவற்றில் எல்லாம் மான்சியை விட பின் தங்கினாலும் தாய்மை அடைந்ததில் அவள் தான் முதல்!

அப்புறம் தான் மான்சி கருவுற்றாள்!

அதே போல குழந்தை வளர்ப்பிலும் மான்சியை விட ஜோவே அதிகம் ஸ்கோர் செய்து கொண்டிருந்தாள்!

பார்த்து பார்த்து உணவு அளிப்பதில் ஆரம்பித்து, நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லித் தருவது வரை!

தான் குழந்தையாக இருந்த போது செல்லம் கொடுத்து, கொடுத்து கெடுத்து விட்டார்கள் என்று,

தன் பிள்ளை அது மாதிரி வளர்ந்து விடக் கூடாது என்பதில் அதிகம் கவனம் கொண்டிருந்தாள்!

அளவான செல்லம், நிதானமான கண்டிப்புடன், நல்ல டிசிபிளினோடு ஒரு ஐடியல் சைல்ட் போல வளர்ந்து வந்தான் ஆத்விக்!

எல்லோரும் வந்தவுடன், எல்லோருக்கும் காலை உணவு பரிமாறினார்கள் ஜோவும் மான்ஸியும்!

தனியே இருந்த ஒரு பாத்திரத்தை எடுக்கப் போன மான்சியைத் தடுத்தாள் ஜோ!

“அது எனக்கு” என்ற ஜோவை ஆச்சரியமாக பார்த்தாள் மான்சி!

“அது இட்லி உப்புமா! நேத்து நைட் லெப்ட் ஓவர் இட்லியை இட்லிப்பொடி போட்டு பிசைந்து, வெங்காயம் போட்டு தாளிச்சு உப்புமாவா மாத்தி வச்சுருக்கேன்!

அத இவங்களுக்கு வைக்க வேணாம்” என்ற ஜோவின் பேச்சைக் கேட்டு மான்சிக்கு மயக்கம் வராத குறை தான்!

திருமணத்திற்கு முன்பு அத்தனை விலை உயர்ந்த ஐஸ்க்ரீம்களை வாங்கி விட்டு பிடிக்கவில்லை என்று சொல்லி வேஸ்ட் ஆக்கிவிட்டு, மான்சியையும் கேவலமாக பேசிய ஜோவா இது?

“ஜோ நீ மாறலாம் தான் அதுக்குன்னு இப்படியா?” என்றாள் மான்சி சிரித்துக்கொண்டே!

“இது மட்டுமா மான்சி! மேடம் பெரிய தொழிலதிபர்!

அவ பாட்டுக்கு, செயின் சூப்பர் மார்க்கெட்ஸா திறந்து கிட்டே போறா இப்போ அவளோட சூப்பர் மார்க்கெட் செயின் ஸ்டோர்ஸ் திருச்சிக்கும் வரப் போகுது” என்றான் ரிஷி பெருமையாக!

ஆம்! நவ்தீப் ஜோவை சேர்த்து விட்ட அந்த டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் உண்மையில் அவனும் அவன் நண்பனும் சேர்ந்து ஆரம்பித்தது!

சேர்ந்து ஆரம்பித்தாலும் முழுக்க முழுக்க முதல் போட்டது நவ்தீப் மட்டுமே!

அவன் நண்பன், இது மாதிரி கடை வைக்க விரும்புவர்களுக்கு கன்சல்டன்சி கொடுப்பவன்!

ஒரு கடையை இடம் தேர்வு செய்வதில் ஆரம்பித்து, இன்டீரியர், கொள்முதல், வேலையாட்கள் சேர்க்கை, மார்கெட்டிங், பில்லிங் சாப்ட்வேர் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டு அதற்குரிய கன்சல்டிங் பீஸ் வாங்கிக் கொள்பவன்!

நவ்தீப் கேட்டுக் கொண்டதற்காக கொஞ்ச மாதங்கள் அவனே அந்த கடையை நிர்வாகம் செய்தும் வந்தான்!

கூடவே ஜோவிற்கு பயிற்சியும் அளித்தான்!

அதனால் தான் வேறந்த ஸ்டாப்க்கும் ஜோ அளவு ட்ரைனிங் தரப்படவில்லை!

ஜோவின் நல்ல நேரம், அவளுக்கு அதில் ஈடுபாடு தோன்றி நன்றாக பிடித்துக் கொண்டு விட்டாள்!

தொழில் கற்றுக் கொள்ளவும் செய்தாள்!

அவளுக்கு குழந்தை பிறக்கும் வரை கூட இந்த உண்மையை ஜோவிடம் நவ்தீப் சொல்லவே இல்லை!

மற்றவரையும் சொல்ல விடவில்லை!

அவள் ஒரு தொழிலாளியாக இருந்தே அனைத்தையும் கற்றுக் கொண்டதால் எங்கு தவறுகள் நடக்க வாய்ப்புகள் என்று அறிந்து கொண்டு,

அதை சரி செய்யும் வழிகளையும் நவ்தீப்பின் மென்டர்ஷிப் கொண்டு கற்று தேர்ந்தாள்.

மான்ஸியும் ரிஷியின் கோகோபிட் எக்ஸ்போர்ட்டோடு சேர்த்து, மற்ற வேளாண் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருந்தாள்!

கூடவே ஸ்வாமிநாதனின் குடும்ப பிசினெஸ் அனைத்தும் அவள் தான் நிர்வகித்து வந்தாள் அந்த பள்ளியைத் தவிர!

பள்ளி நிர்வாகம் பிருந்தாவின் பொறுப்பில்! அவர் தான் இப்போது நிர்வாகக் கமிட்டித் தலைவர்!

சதாவின் துணையுடன்! அன்வர் சாரின் வழிகாட்டுதலுடன்!

ஆரம்பம் முதல் பொறுப்புகளை அதிகப்படியாக சுமந்து வந்த சாந்தாம்மாவிற்கு ரிட்டயர்மென்ட்!

அவருக்கு பதில் வீட்டு நிர்வாகம் பிருந்தாவின் கையில்!

சுவாமிநாதன், சாந்தாம்மா, கோமதி ஆச்சி நால்வருக்கும் ஆன்மீக சுற்றுலா செல்வதும் கோவில் திருப்பணிகளும் முழு நேர வேலைகள்!

நவ்தீப், ரிஷி, கவுதம் ரிதனி ஜீவன் நம்ரதா அனைவரும் பார்ட்னர்ஷிப்பில் அவர்களின் சொந்த சம்பாத்தியத்தில் ஆரம்பித்த சாப்ட்வேர் கம்பெனி சென்னை, பெங்களூர், அகமதாபாத் மற்றும் அமெரிக்காவில் கிளைகளோடு நன்றாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது!

அனைவரும் சாப்பிட்டு முடித்த பின், “நீங்க ரெண்டு பேரும் உக்காருங்க, நான் பரிமாறுகிறேன்” என்று சொன்ன பிருந்தாவை அனுப்பி விட்டு,

“நாங்களே போட்டுக்கிறோம்” என்று சொல்லி இருவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர் மான்ஸியும் ஜோவும்!

“அப்புறம்.. மான்சி சொல்ல மறந்துட்டேன், நேத்து நான் நம்ம கடையில வச்சு, ஜம்மிய பார்த்தேன்!” என்றாள் ஜோ!

மான்சி, அய்யோ என்று மனதுள் நினைத்துக் கொண்டு பார்க்க, நவ்தீப் தவிர அனைவருக்குமே அதே உணர்வு தான்!

 நவ்தீப் சிரித்து கொண்டே, “என்ன சொன்னா?” என்றான்,

அதில் யார் வந்து என்ன பேசினாலும் என் பொண்டாட்டி ஸ்டாராங்காக இருப்பாள் என்ற அதீத நம்பிக்கை தெரிந்தது கண்டு நிம்மதியானார்கள் மற்றவர்கள்!

“ம்ம். ஒரே புலம்பல்! வைத்தியோட ஒரே சண்டையாம் எப்போதும்!

வைத்திக்கு அவ மேல சந்தேகம்! அவளுக்கு அந்த ஆள் மேல் சந்தேகம்!

சின்ன வயசா இருக்கிறா, காசுக்கு ஆசைப்பட்டு எவன் கூடவாச்சும் ஓடி போய்டுவாளோன்னு அந்த ஆளுக்கு பயமாம்!

முதல் ஓய்புக்கு பிறந்த மகனை அடிக்கடி போய் பார்க்கிறார், எங்க அவளை கழட்டி விட்டுடுவாரோன்னு அவளுக்கு பயம்!

ஒரே சண்டைதானாம் எப்போதும்!” என்றாள் ஜோ.

“ஊர்க் குடியை கெடுக்க நினைச்சவங்களுக்கு அப்படி தான் நடக்கும்” என்றாள் மான்சி.

“இப்போ எதுக்கு நல்ல நாள் அதுவுமா அவங்க பேச்சு, ஜோ, இனி நீ அவ வந்தா பேசாதே!” என்றார் பிருந்தா.

“இனி அவ வரவே மாட்டா!” என்றாள் ஜோ சிரித்தபடி!

“ஏன்?”

“அவ வாங்கின பொருட்களுக்கு பணம் கட்டாம ப்ரீயா கொடுப்பேன்னு நினைச்சா! பைசா பாக்கியில்லாம வாங்கிட்டு தான் விட்டேன்! அதனால இனி வர மாட்டா” என்றாள் ஜோ!

கேட்டுக் கொண்டிருந்த மான்சிக்கு உண்மையிலே மயக்கம் வரும் போல இருந்தது, ஜோவின் ட்ரான்ஸ்பார்மேசன் கண்டு!

அவள் மயங்கியது போல தள்ளாடி, “அய்யோ ஜோ! எனக்கு மயக்கமே வருதே!” என்றாள்.

“மயக்கமா?’ என்று பதறியபடி, அதை உண்மை என்று நினைத்து பயந்து விரைந்து வந்து அவள் தலையைப் பிடித்தார் பிருந்தா!

“சும்மா. அத்தை!” என்று அவள் சிரிக்கவும்,

“என்ன மான்சி, நான் கூட நீ மயங்கினதைப் பார்த்துட்டு, யுவந்திகாவுக்கு தம்பிப் பாப்பா வரப் போறான்னு நினச்சேன்” என்றார் பிருந்தா!

“அதெல்லாம் முடியாது, இந்த முறையும் நாங்க தான் பர்ஸ்ட்! இல்லையா ஜோ” என்று நவ்தீப் சொல்ல,

“அதெப்படி எல்லா தடவையும் நீங்களே பர்ஸ்ட் வருவீங்க? இந்த  தடவ நாங்க தான் இல்லடி பொடிசு!” என்றான் ரிஷி மான்சியைப் பார்த்து!

“பாக்கலாமா? நீ முதல்ல ரெண்டாவது தடவையா மாமா ஆகுறியா, இல்ல நானான்னு” என்று விளையாட்டாய் முட்டிக் கொண்டார்கள் மைத்துனர்கள் இருவரும்!

“எப்பா, விடுங்கப்பா, யார் பர்ஸ்ட் வந்தாலும் எங்களுக்கு பிரமோசன் தான்” என்றார் சதா நிறைவாக சிரித்தபடி!

முள்ளை மலராக்கினாய் முழு நிலவே நிறைவுப் பெற்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!