Skip to content
Post Views: 3,378
எதிரில் நிற்பவனை கண்டதும் பேச்சற்று போனாள்.
இது நிஜம் தானா…. என்றொரு உணர்வும் வராமல் இல்லை. தனக்காக வந்திருக்கிறானா என்ற பெருமை அவளை பூரிக்க செய்யாமலும் இல்லை.
விழி இமைக்காது துளைக்கும் அவன் பார்வை கண்டு அவளுக்குள் ஏதேதோ செய்தது.
குலாபி உனக்காக தூங்காம கொள்ளாம கேப் புக் பண்ணி ஓடிவந்திருக்கேன்…. அவ்வளவு காதலையும் அக்கறையையும் எப்படி அந்த குரலில் குழைத்தானோ…?
Advertisement
ஸாரி என்றாள் குற்றவுணர்வில்…. கண்கள் உடைப்பெடுத்து விட்டது.
இந்த பெண்களுக்கு எப்படி தான் ஒரே செகண்டில் கண்ணீர் அருவி உடைப்பெடுக்குதோ…? அதிசயித்தவன் அவளை நெருங்கி வந்தான்.
ஸாரி என்றாள் மீண்டும்!
Advertisement
எந்துக்குறா ஸாரி? பாவை அவளை பார்வையால் வருடி ஆசையுடன் அவள் கரம்பற்றிக் கொண்டான்.
Advertisement
என்னால எப்போவுமே உங்களுக்கு சங்கடம் தான் லூசுத்தனமா பேசி இவ்வளவு தூரம் உங்களை அலைய விட்டுட்டேன்… விரல்கள் லேசாய் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தது,தானாய் தலை கவிழ்ந்து கொண்டது.
இதில் என்னரா சங்கடம்?
உனக்கு என்னை பார்க்கணும் போல தோணுன மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு!
Advertisement
என்னையே இங்கே விட்டுட்டு போன மாதிரி மனசு தவிச்சது. உன்னை என்கூடவே பொம்மை மாதிரி வச்சுக்கணும்னு தோணுது… அவளை தன் கைவளைவில் பொத்திக் கொண்டான்.
நிஜமா என்று கண்களால் வினவினாள். காதல் வந்து விட்டால் கண்கள் அதிகம் பேசும் போல…
நிஜம்ரா குலாபி…. அவள் கரம் பற்றி கட்டிலில் அமர்த்தினான்.
இருவரும் சற்று நேரம் மௌனித்து அமர்ந்திருந்தனர். மௌனம் சூழ்ந்த அறையின் கனம் தாரகைக்கு தாளவில்லை போலும்…
அவளே மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.என்னவோ தெரியல உங்கள பார்க்கணும் போல தோணுச்சு முணகளாய் வந்தது வார்த்தை.
பதட்டத்தில் நகம் சுரண்டினாள்.
வா என்று கொ(கெ)ஞ்சினாள் தான் அதற்காக காலங்காத்தாலே வந்து நிற்பான் என்று கண்டாளா?
அதிலென்ன தப்பிருக்கு? உன் பாவாவை இந்த அழகான கண்ணு தேடி இருக்கு…
இப்படிலாம் ரொமான்ஸ் தோணலைனா தான் தப்பு….! ரொம்ப நாள் பிரிஞ்சு இருந்துட்டோம் இல்லையா அது தான் ஒரு நொடி கூட விலகி இருக்க முடியாம மனசை பிசையுது….உணர்ந்து கூறினான். அவன் கண்களில் அப்படி ஒரு அதீத காதல்.
உணர்வு குவியலாய் அமர்ந்திருந்தாள். தன் ஆழ்மனதை எப்படி உணர்ந்தான் என்ற பிரம்மிப்பு!
பட படத்த அவள் இமைகளை பரவசத்துடன் உற்று நோக்கினான்…அம்மாயி இப்படி ஏதாவது நடக்குமோன்னு தோணவே தான் பிளைட்ல போகாம பாவா காரில் போனேன்….பற்கள் தெரியாது அழகாய் சிரித்தான்.
என்ன தோணுச்சு? இல்ல என்ன தோணுச்சுன்னேன்…
பெண்ணவளின் வெட்கம் கோபத்தின் பின்னே ஒளிந்துகொள்ள முயன்றது.
இல்ல…திடீர்னு உன்னை பார்க்கணும்னு எம்மனசு முரண்டு பிடிச்சா என்ன பண்ணன்னு தான்….ராகமாய் இழுத்தான்.
அவளுக்கு வெட்கம் வெட்கமின்றி பீறிட்டது.
வெட்கி சிவந்து தலைநிமிர இயலாது நெளிந்து நிற்பவளை காண காண திகட்டவில்லை காதலன் அவனுக்கு.
இதுவரை இருந்த அசதியும் உறக்க கலக்கமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ பிறந்து சென்று விட்டது…நேருக்கு நேராய் அவள் விழி இரண்டை துளையிட்டு அவளுள் புகுந்து விட முயன்றது அவனின் காதல் மிகுந்த பார்வை. அந்த பார்வையில் காதலோடு துளி காமமும் கலந்துவிட்டது.
தனக்காய் தவித்து நிற்பவளை கண்டு ஒருவித மிடுக்கு செருக்கும் சேர்ந்து கொண்டதோ…
இங்கே ஏன் வந்தீங்க? மாமா தவறா நினைக்கப் போறாரு….
மிகுந்த சங்கோஜம் அவளுக்கு.
என் சின்னயனா ரொம்ப நல்ல டைப்…தங்கச்சி பொண்ணு மேல இந்த பையனுக்கு எவ்வளவு லவ்வுன்னு சந்தோஷப்படுவாரு…சிரித்தே மயக்கினான்.
சின்னயனாவா? விழி விரித்தாள்.
ஆமா…உன் மாமய்யா எனக்கு சின்னயனா தானே…?
அது சரி…மெச்சிக் கொண்டாள்.
பாவா உன்னை பார்க்க அடிச்சு பிடிச்சு ஓடிவந்திருக்கேன்… உன்
பாவாக்கு என்ன ஸ்பெஷலா கொடுக்கப் போற? வார்த்தை வாயில் உதிர்ந்தாலும் பார்வை மட்டும் பாவையவளின் இதழை இமைக்காது பார்த்திருந்தது.
இடியாப்பம் வெள்ளைகுருமா தான் ஸ்பெஷல் என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
அப்படியா என்றான் லேசான கோப சுழிப்புடன்.
அத்தை கைபக்குவம் சூப்பரா இருக்கும் என்றாள். மேலும் வெறுப்பேற்றும் விதமாக…
சாப்பிட்டுட வேண்டியது தான் என்றான் இதழை மையமாய் பார்த்துக்கொண்டே ஒரு மார்கமாக…
இமைகள் மட்டும் படபடக்கவில்லை, இளமையும் சேர்ந்தே படபடத்தது.
வாங்க மாமா என்றாள் வாயில் நோக்கி…
சட்டென்று சுதாரித்து எழுந்து நின்று கொண்டான் ஹரி .
ஹா ஹா ஹா என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே வெளியே ஓடிவிட்டாள்.
அடியே…. சிணுங்கினான் சிரித்தான்… வெட்கம் பீறிட சிகையை கோதிக் கொண்டான்.
“——————“
ஒன்பதரை ஆகுது அவரை சாப்பிடக் கூப்பிடு பவி.
நீங்க கூப்பிடுங்க அத்தை நான் அம்மாச்சியை பார்த்துட்டு வரேன் நைசாக நழுவிக் கொண்டாள்.
அம்மாச்சி என்று துள்ளி ஓடிவந்த பவியை கண்டு நிறைவாய் புன்னகைத்தார் சுந்தராம்பாள்.
வயோதிகத்தின் காரணமாக வெளியில் எங்கும் செல்வதில்லை அவர். பேத்தியின் நிச்சயதார்த்த விழாவில் கூட நேற்று அவர் கலந்து கொள்ளவில்லை.
அம்மாச்சி என்று பொலிவாக அவரை கட்டிக்கொண்ட பேத்தியை கன்னம் வழித்து அடியே என் ராசாத்தி என்று ஆசையாய் முத்தமிட்டார்.
அம்மாச்சி மாப்பிள்ளை தம்பி எப்படி இருக்காரு? கண்ணடித்து சிரித்தாள்.
அவருக்கு என்னடி ராசா கணக்கா எம்புட்டு அழகா இருக்காரு…. மோவாயில் கைவைத்து வியப்பைக் காட்டினார்.
ராசாவா…. எந்த நாட்டுக்கு? கிளுக்கி சிரித்தாள்.
அடி வாயாடிக் கழுத எம்பேரன் இந்த உலகத்துக்கே ராசாடி… அவரு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணுமடி… கிழவி நீட்டி முழக்கினார்.
அப்படி சொல்லுங்க பாட்டி… காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
பவித்ரா கண்ஜாடை காட்டவே… அவளோடு இணைந்து அம்மாச்சியின் பாதம் பணிந்தான்.
ரெண்டு பேரும் நோவு நொடி இல்லாம புள்ள குட்டி பெத்து சந்தோஷமா நூறு வருஷம் வாழணும்…. அம்மாச்சி மனசார வாழ்த்தினார்.
நூறு வருஷம் வாழ்ந்து விட்ட உணர்வை அந்த மூதாட்டியின் ஆசிர்வாதம் கொடுத்தது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உள்ளம் சிலிர்த்தது.
அம்மாச்சி சாப்பிட்டீங்களா?
ஆச்சு செல்லம்.
நீங்க போய் சாப்பிடுங்க!
தலைவாழை இலை போட்டு சூடான இடியாப்பம் அதற்கு தோதான வெள்ளை குருமா. கல் தோசை மிளகாய் சட்னி, வேர்க்கடலை சட்னி என்று உணவு பரிமாறினார் மணவாளன் மனைவி அஞ்சுகம் .
அஞ்சு ஸ்வீட் எதுவும் செய்யலையா மனைவியிடம் கேட்டார் மணவாளன்.
கேசரி செய்திருக்கேங்க… சரண்யா அடுப்புல கேசரி இருக்கு ஒரு கிண்ணத்துல போட்டு கொண்டாம்மா… அம்மாவின் குரலுக்கு அடுத்த ஐந்தாவது நிமிஷம் முந்திரி பொன்னாய் மின்ன டூட்டி ப்ரூட்டி மின்னி சிரிக்க கேசரியை கொண்டு வந்து வைத்தாள் சரண்யா.
நீயும் சாப்பிடு பவி என்றார் அஞ்சுகம்.
இருக்கட்டும் அத்த அவர் சாப்பிடட்டும் என்றாள். மாமா வீட்டில் அவனோடு அமர்ந்து சாப்பிட கூச்சமாக இருந்தது.
பின்னி இடியாப்பம் ரொம்ப நல்லா இருக்கு. பவி கூட நல்லா செய்வா. அமெரிக்காவில் அகிலன் வீட்டில் இருக்கும் போது செய்து கொடுத்திருக்கா… ரசித்து உண்டான்.
தன் அத்தையை பின்னி என்று அவன் உறவுமுறை வைத்து அழைப்பது கண்டு அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. பயங்கர விவரம் தான் என்று நொடித்துக் கொண்டாள்.
அகிலன் எப்போ வராரு? நிச்சயத்துக்கே வரல… குறைப்பட்டுக் கொண்டார் மணவாளன்.
விவாகத்துக்கு வந்துடுவான் சின்னயனா. அவனுக்கு லீவ் கிடைக்கல… பிராஜக்ட் இன்னும் மூணு வாரத்தில் முடிஞ்சுடும். அடுத்த மாதம் கண்டிப்பா வந்துடுவான்.
ஹரி சாப்பிட்டு எழுந்துவிட பவித்ரா சாப்பிடத் தொடங்கினாள்.
பவி நானும் மாமாவும் கடைத்தெரு வரைக்கும் போய் வரோம். நீ தம்பியோட பேசிட்டு இரு என்றார்.
இல்ல பின்னி நான் கிளம்புறேன் என்றான்.
அத்தை டிரஸ் செலக்ட் பண்ண தானே நான் வந்தேன்… நானும் உங்ககூட வரேன் என்றாள்.
அக்கா டிரஸ் செலக்ட் பண்ணவா வந்த…? சரண்யா சிரித்துவிட்டாள்.
சின்னயனா நான் கிளம்புறேன் என்றான்.
இப்போவேவா?
திருச்சியில் ஈவினிங் நாலு மணிக்கு பிளைட் என்றான்.
அப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க பத்து மணிக்கு மேல கிளம்புனா சரியா இருக்கும்.
பவி தம்பிக்கு தோட்டத்தை சுத்தி காமி என்றார் மணவாளன்.
சரிங்க மாமா என்று அவள் முன்னே நடக்க அவள் பின்னே சென்றான்.
மாமரத்தடியில் இருந்த கயித்து கட்டிலில் அவள் அமர அருகில் தானும் அமர்ந்தான்.
மௌனம்… மௌனம்… இருவரிடத்திலும் மௌனம். பறவைகள் சத்தம் மட்டுமே கிரீச்சிட்டுக் கொண்டிருந்தது.
அவன் கிளம்புகிறேன் என்றதுமே அவளுக்கு முகம் கூம்பி விட்டது. இப்போது அவன் முகம்காண இயலாது நிலம் நோக்கி அமர்ந்திருந்தாள்.
ஓய் குலாபி என்ன பாவாவை பார்க்க முடியாத அளவுக்கு வெட்கமா? அவள் தோள்பற்றி முகம் நிமிர்த்தினான்.
நீர் முத்துக்கள் நிறைந்த விழிகள் அவனை காண விரும்பாது அலைபாய்ந்தது.
என்னரா பட்டுமா என்றான் தழு தழுப்பாய்.
ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தாள்.
ஏமிரா… மன இன்டிக்கு வெல்தாமா? ( நம்ம வீட்டுக்கு போகலாமா )
ம்கூம்… வேகமாய் மறுத்தாள்.
என்னாரா பங்காரம்? அவள் கரம் பற்றிக் கொண்டான்.
தெரியல….பயமா இருக்கு! கண்ணீர்முத்துக்கள் உருண்டோடி வந்தது.
பயம் எந்துக்குரா? துடித்து போனான்.
தெரியல…. தவித்து துடித்தது அவள் குரல்.
ராஜேஷ் நினைச்சா?
தெரியல என்றாள்…. முகம் சுணங்கி.
என் மஹாராணிக்கு எந்த பயமும் இருக்க கூடாது.
நுவ்வு பெல்லயின ஸ்த்ரிவி (நீ கல்யாண பொண்ணு ) ஹேப்பியா கனவு கண்டுட்டு இரு. பாவா இருக்கேன்ரா அம்மாயி. அவள் கரத்திற்கு அழுத்தத்தை கூட்டினான்.
ம்ம்ம்ம் என்றாள்…. தலையாட்டி.
அவனுக்கு புரிந்தது. மனதளவில் பலகீனப்பட்டு இருக்கிறாள். இந்த விவாகம் நல்லபடியாக நடந்து முடியவேண்டும் என்ற பயம். இனி ஒரு பிரிவை தாங்கும் வல்லமை அவளுக்கு இல்லை.
அம்மாயி நீ இந்த ஹரியோட பவி. இந்த ஜென்மத்துல நீயும் நானும் தான். தேவையில்லாத பயத்தை சுமக்க கூடாது. ரொம்ப சிறப்பா நம்ம விவாகம் நடக்கும்.
ரொம்ப ஒல்லியா இருக்கியாம் அம்மா கவலைபடறாங்க. நீ இப்படி ஒல்லி பெல்லியா இருந்தா… அவள் காதிற்குள் அவன் கிசுகிசுக்க ச்சீ என்று சிணுங்கியவள் அவன் மார்பில் பட படவென்று அடிக்கத் தொடங்கி விட்டாள்.
ஏய் குண்டூர் மிரப்பா.. நானா அண்டுனாரு நா ஜாதகப் பிரகாரம் நமக்கு எத்தனை பேபி பிறந்தாலும் பாய் பேபி தானாம்.
அதுக்காக நம்ம முயற்சியை விட முடியாது. நாக்கு ஆடப்பிள்ள காவாளி. (பெண் குழந்தை வேண்டும் ) உன்னை வச்சுக்கிட்டு எப்படி முயற்சி பண்றது… அவன் மீசைமுடி அவள் காதுமடலில் குறு குறுக்க அவன் பேச்சு அவளை சூடேற்றி சிவக்க வைத்தது.
ச்சீ பேச்சை பாரு… அவனை வெட்கத்துடன் தள்ளி விட்டாள்.
பேச்சு மட்டும் இல்லைரா ஆக்ஷனிலும் பாவா…அவன் சொல்லி முடிக்கவில்லை வெட்கி சிவந்தவள் அவன் வாயை அவசரமாய் பொத்தினாள். பொத்திய அவள் கரத்தில் அழுந்ந்ந்ந்த முத்தமிட்டு முக்தி பெற்றான்.
அவள் அவஸ்தையாய் முறைக்க… உரிமையாய் கரம் பற்றி அப்படி ஒரு பார்வை பார்த்தவன் உள்ளங்கையில் அழுந்த மீண்டும் ஒரு முத்தம் வைத்தான்.
அவள் சுற்றம் உணர்ந்து படபடப்புடன் பார்க்க…
என்ன என்றான் விழியால்…. ஒன்றுமில்லை என்பது போல் உதட்டை பிதுக்கி பதில் கொடுத்தாள்.
அவள் விழி தவித்திருக்க அவன் விழி அணங்கவளின் செவ்விதழில் திளைத்திருக்க பின்னால் சரண்யா டீ டம்ளர் கொண்ட தட்டுடன் நின்றிருக்க… அம்புட்டு தான் ரொமான்ஸ்.
பவிக்கா என்ற சரண்யாவின் அழைப்பில் சுயநினைவிற்கு வந்தனர்.
இப்போ தானே டிபன் சாப்பிட்டேன் என்றவன் கொஞ்சமாய் டீ எடுத்துக் கொண்டான்.
அண்ணா… அப்பா பஜாருக்கு கிளம்புறாங்க உங்களை வர சொன்னாங்க…. சரண்யா சிரித்துக்கொண்டே வேகமாய் ஓடிவிட்டாள்.
பவிம்மா சின்னபிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்கு கூடாதுரா . நல்லா சாப்பிடணும்!
ஆந்திராவில் இருந்து நான் நினைச்ச நேரம் வர முடியாதுரா அம்மாயி. மசாலா பிசினசுக்கு ஜெர்மனில் இருந்து நியூ மெஷினரீஸ் கொண்டு வந்திருக்கோம். நிறைய வேலை இருக்கு. விவாகத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டா அந்த வேலையும் சேர்த்து இன்னும் அலைச்சல் அதிகமாகும்.
ஹேப்பியா இருடா… என் குலாபி என்னை நினைச்சுட்டு சந்தோசமா இருக்காங்கிற நினைப்புல தான் நான் எனர்ஜிட்டிக்கா ஓட முடியும்!
ம்ம்ம்ம்ம் என்று மெல்லிய இதழ் விரிப்புடன் தலை அசைத்தாள்.
தினமும் கால் பண்றேன்….! கலங்கி வருந்தி ஒரு வார்த்தை வரக்கூடாது. ஹேப்பியா பேசணும்! நம்ம விவாகத்தை எப்படி நடத்தலாம்னு பிளான் பண்ணி வை !அவள் தலை வருடி கன்னத்தில் தட்டிவிட்டு விடை பெற்றான்.
“————————-“
எவ்வளவு பெரிய வேலை தனக்காக காத்திருந்தாலும் தினமும் இரண்டு முறை தன் குலாபிக்கு அழைத்து பேசிவிடுவான்.
அடிக்கடி தாரணியும் மருமகளுக்கு அழைத்து பேசுவதுண்டு.
காதலும் காத்திருப்பும் நாட்களை அழகாக்கி கொண்டிருந்தது.
மார்ச் 8, 20 ரெண்டு தேதி சிறப்பாக இருக்கிறது சாஸ்திரிகள் முகூர்த்த தேதி குறித்து கொடுத்திருந்தார்.
பெண் வீட்டுக்கு அழைத்து அவங்களுக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்க கூறினார் சுப்ப கிருஷ்ணா.
வெங்கி மணவாளனுக்கு அழைத்து பேச அவர் தங்கையிடம் கலந்து பேசிவிட்டு பதில் சொல்வதாக கூறிவிட்டார்.
இரவு வீட்டிற்கு வந்த ஹரிக்கு தகவல் கூறினார் ஷியாம்மா.
தம்பி மகளை தூக்கி குதூகலமாய் தட்டாமாலை சுற்றினான். குட்டி தேவதை பொக்கை வாய் திறந்து சிரித்து மயக்கியது.
ஹரி குழந்தைக்கு வாந்தி வரும் தாரணி அதட்டினார். குழந்தையை தாயிடம் கொடுத்து விட்டு தனதறைக்கு வந்தவன் குளியலறை கூட செல்லாமல் தன் பிரியத்தமாவிற்கு அழைத்து விட்டான்.
குலாபி ஹேப்பி நியூஸ் வந்துச்சா? அவ்வளவு துள்ளல் அவன் குரலில்.
குட் நியுஸா?
அடியேய் வந்து கடிச்சு வைக்க போறேன்… கடுப்பாகிவிட்டான்.
என்னன்னு சொன்னா தானே தெரியும்? சடைத்துக் கொண்டாள்.
டேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்க போல…. உதடு கடித்துக் கொண்டு சிரித்தான்.
ம்ம்ம்ம்… மார்ச் 20 ஓகே பண்ணியிருக்காங்க என்றாள்.
எது மார்ச் 20 யா…? உள்ளே போய்விட்டது குரல்.
ம்ம்ம்ம் என்றாள் இயல்பாய்.
அடியேய் மார்ச் 8 ஓகே பண்ண வேண்டியது தானே…? காய்ந்து விட்டான்.
ஏன் 8 க்கும் 20 க்கும் பெருசா என்ன கேப் இருக்கு… சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
என்ன கேப் இருக்கா? ரெண்டு வாரம் கேப் இருக்கு. பார்க்கணும் போல இருக்கு
இப்போவே வா இப்போவே வான்னு மனுஷன் உசுரை வாங்க மட்டும் தெரியுது…!
நீ சீக்கிரம் வரதுக்கு என்ன? அனல் அடித்து அவள் காதை பொசுக்கியது.
ரொம்ப தான்… முறுக்கிக் கொண்டாள்.
ஆமா ரொம்ப தான்… செல்ல கோபம் இல்லை சீரியஸ் கோபம் அவனுக்கு.
ஹலோ ஹலோ…. ஹலோ… ம்ம்ம்ம்ம் அவன் லைனில் இல்லை.
“—————-“
அண்ணையா நமக்கு சொந்த பந்தம் அதிகம்.பிசினஸ் லைன்,பொலிடிக்கல், சினி
பீல்ட்னு VIP வருகை ஒருபக்கம் இருக்கும் மண்டபம் சரியா வராது. வெங்கியும் சுப்ப கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
நயனா நானும் ராமும் என்ன டிசைட் பண்ணியிருக்கோம்னா நம்ம தோப்பில் விவாகம் வச்சுக்கலாம் என்றான் தேவ் சரண்
ஆமா நம்ம தோப்பு இங்கேயே இருநூறு ஏக்கர் இருக்கு இதுல அரேஞ்ச் பண்றதும் நல்ல ஐடியா தான் என்றார் வெங்கி.
அப்படியே செய்துவிடலாம் என்று ஏகமனதாக முடிவு செய்தனர்.
யார் யாரை அழைக்க வேண்டும்…. விருந்தினர்கள் வந்து போக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என்றெல்லாம் ஆசோசனை செய்தனர்.
மூன்று நாள் திருமண சடங்குக்கு என்னென்ன உணவு பதார்த்தம் விருந்தில் சேர்ப்பது என்று பலகட்ட தீவிர ஆலோசனையின் பின் முடிவு செய்யப்பட்டது.
பெண்ணழைத்து கரீம்நகர் வீட்டில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டது.
பெண்ணை சார்ந்தோர் வந்து சேர விமான டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி இருப்பதால் அதுசம்மந்தமாக மணவாளனிடம் பேச வேண்டும் என்று கூறினார் சுப்பு.
அனைத்தையும் பார்வையாளனாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிசரண்.
அண்ணனின் ஒட்டாத தன்மை கண்டு என்னாச்சு என்பது போல் ராம்சரண் தம்பி தேவ்சரணை பார்க்க தனக்குத் தெரியாது என்பது போல் தோளை குலுக்கிக் கொண்டான் தேவ்.
இன்றே இப்போதே இந்நொடியே தன் கைவளைவில் அவள் வேண்டும் போல் மனம் ஏங்கியது.
ரொம்ப காலம் பிரிந்திருப்பது போன்றோர் பிரம்மை அவனுக்கு. பெருமூச்சுடன் எழுந்தவன் அறைக்கு செல்ல… அண்ணையா உங்களுக்கு கால் என்று தன் மொபைலை கொடுத்தான் தேவ்.
அழைப்பில் யாரென்று பார்த்தான் பவித்ரா தான்.
நான் பேசிக்கிறேன் நீ போ… தம்பியிடம் மொபைல் கொடுத்து அனுப்பிவிட்டு கட்டிலில் சரிந்து கொண்டான்.
போடி ஓவரா தான் பண்ற… சிலுத்துக் கொண்டவன் கவிழ்ந்து படுத்தான்… குலாபி என்று வாய் அதுவாகவே முணு முணுத்தது. கவிழ்ந்து படுத்தாலும் கடலில் மூழ்கினாலும் அவள் நினைவு நீங்கிவிடுமா என்ன?
“——————–“
அக்கா உன் போன் என்னாச்சு? விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்த யுவராஜ் கேட்டான்.
ஏன் யுவி என் மொபைல் நல்லா தான் இருக்கு… கட்டிலில் இருந்த மொபைலை எடுத்து வந்து காட்டினாள்.
மாமா கூட டிஷ்யுமா? சிரித்து விட்டான்.
ச்ச ச என்று அவசரமாய் மறுத்தாள்.
இல்ல மாமா எனக்கு போன் பண்ணி நீ நல்லா இருக்கியா சாப்பிட்டியான்னு கேட்டு குடைந்தெடுத்துட்டார்.
நான் அடுத்த வாரம் தான் வீட்டுக்கு வர இருந்தேன் மாமா பண்ணின டார்ச்சரில் இன்னைக்கு வந்துட்டேன் என்று பெரிதாய் சிரித்தான்.
கடு கடுத்து போனாள். லூசு லூசு மூணு நாளா கால் பண்றேன் அட்டன் பண்ணாம சீன் போட்டுட்டு இவனுக்கு கால் பண்ணி மானத்தை வாங்குது.
ஹரி மருமக உன்கிட்ட பேசணுமாம்… டிவி பார்த்துக் கொண்டிருந்த மகனிடம் தன் மொபைலை நீட்டினார் தாரணி.
நான் பேசிக்கிறேம்மா என்று தன் அறைக்கு வந்து மொபைல் எடுத்து அவளுக்கு அழைத்தான்.
ஹலோ என்றாள் வேகமாக. …
என்ன ஹலோ? என்றான் அதைவிட வேகமாக.
கால் பண்ண நீங்க தான் சொல்லணும் என்றாள் மிதப்பாய்.
உன் மாமியாருக்கு கால் பண்ணியிருக்க… கிண்டலாய் கேட்டான்.
அத்தம்மா பட்டுபுடவை வாங்குறது பத்தி அம்மாட்ட ஏதோ கேட்டாங்களாம் அதுக்கு பதில் சொல்ல தான் கால் பண்ணேன். சாப்பிடாம கொள்ளாம சோகமா இருக்கீங்கலாம் போனா போகுதுன்னு உங்கட்ட நாலு வார்த்தை பேச சொன்னாங்க என் அத்தம்மா… அது தான் கொடுக்க சொன்னேன் என்றாள் வீராப்பாய்.
திமிரு… திமிரு… எவ்வளவு திமிரு உனக்கு… பல்லை கடித்தான்.
சரியா கேட்கல….என்ன சொன்னீங்க? வேண்டுமென்றே கேட்டாள்.
ஒண்ணுமில்ல பட்டுபுடவை நான் ஆர்டர் கொடுத்தாச்சு என்றான்.
ஹலோ என்ன கலர் என்ன டிசைன் வேணும்னு என்கிட்ட ஒருவார்த்தை கேட்டிங்களா? கோபம் வந்துவிட்டது அவளுக்கு.
ஏன் கேட்கணும் என்றான் தெனாவட்டாய்.
கட்டிக்க போறவ நானு!
ஏய் போடி. புடவையை கட்டிக்க போறவளையே கட்டிக்கப் போறவன் நான் எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு.
ஹலோ… ஓவரா தான் பண்றீங்க… என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க தோனல உங்களுக்கு. உங்களுக்கு தான் திமிரு… திமிரு.. உடம்பு மொத்தமும் தான் என்ற திமிரு… திட்டி தீர்த்தாள்.
ஏய்…உன்கிட்ட கேட்க என்ன இருக்கு? நம்ம வழக்கபடி வெண்பட்டு சிவப்பு பார்டர் வச்சு தான் கட்டுவாங்க.
தர்மாவரம் போய் தறி போடற இடத்துலேயே கோல்ட் ஜரி சேர்த்து ஹரியோட படம் முந்தியில் டிசைன் வர மாதிரி நெய்ய சொல்லி இருக்கேன் என்றான்.
என்னது உங்க படமா?
இல்ல காட் ஹரி… ஐ மீன் குழல் ஊதும் கிருஷ்ணா படம்.
அப்படியா என்றாள் ஆர்வமுடன். டிசைன் உனக்கு அனுப்பி இருக்கேன் பாரு என்றான்.
ம்ம்ம்ம் என்றவள் ஏன் மூணு நாளா என்கிட்ட பேசல என்றாள்.
ஏன் பேசணும் என்றான்.
ஏன்னா நான் உங்களோட இபோதைய காதலி எதிர்கால மனைவி என்றாள்.
அடி லூசு நீ எப்போதுமே என் காதலி தான் அதுவும் தவிர பார்த்த உடனே மனசுல மனைவியா பிக்ஸ் ஆனவ தான்.
அட அட என்ன ஒரு லவுஸ்…. சீண்டிவிட்டாள்.
ஆமா ஹரியோட லவ் எப்போதுமே மாறாம தான் இருக்கு. சொல்லப் போனா நாளுக்கு நாள் கூட்டிட்டே தான் இருக்கு.
என்னோட லவ் மட்டும் மாறிடுச்சா இல்ல குறைஞ்சுடுச்சா … கோபம் வந்து விட்டது பெண்ணவளுக்கு.
ஆமா உன் லவ் குறைஞ்சிடுச்சு. சீக்கிரம் என்கூட நீ வேணும்னு நான் தவிக்கிற மாதிரி துடிக்கிற மாதிரி நீ துடிக்கலையே… கேட்டு விட்டான் தன் ஆதங்கத்தை ஏக்கத்தை.
புரியாம பேசாதீங்க…. 8ம் தேதி எனக்கு பீரியட்ஸ் டைம் இருக்கும் அதுக்கு தான் வேண்டாம்னு 20 ந் தேதி பிக்ஸ் பண்ணோம்.
ஓ அப்படியா… சாரிடா குலாபி என்றான்.
சரி வைக்கிறேன் என்று கட் பண்ணிவிட்டாள்.
ஹலோ செல்லம் பவிம்மா ஹலோ… அவள் எங்கே லைனில் இருக்கிறாள்.
“—————–“
இரு தரப்பிலும் திருமண வேலைகள் தீயாய் நடந்து கொண்டிருந்தது.
தன் ஆசையை அந்தஸ்தை சுப்ப கிருஷ்ணா மகன் திருமணத்தில் காட்டிக் கொண்டிருந்தார்.
பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் தொழில் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் என்று அவர்கள் குடும்பத்திற்கே சேர்த்து துணிமணி வாங்கிவிட்டார்.
ஒரு மாதமாக பந்தல் போட்டு மணமேடை அமைக்கும் பணி இரவு பகலாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எர்ரபள்ளி ஊருக்குள் இருந்து தங்கள் தோப்பிற்கு செல்ல மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு தங்கள் சொந்த செலவில் தார்சாலை அமைத்தார் சுப்ப கிருஷ்ணா.
பெண்ணுடன் முப்பதுபேர் வருகிறார்கள் என்று விமான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டது. பெண்ணின் உறவினர்கள் வந்து போக நவீன குளிர்சாதன பேருந்து முன்பதிவு செய்யப்பட்டது.
ஆந்திராவின் தலைசிறந்த கேட்டரிங் சர்வீஸ் தான் மூன்று நாள் விருந்திற்கும் மொத்தமாய் புக் செய்திருந்தார்கள்.
உறவினர்கள் தங்குவதற்கு கரிம்நகரில் உள்ள முக்கிய ஹோட்டல்கள் லாட்ஜ்கள் முன்பதிவு செய்யப்பட்டது.
“————————-“
என்ன பரமு சொல்ற….? சுசிலா தவித்து நின்றார்.
கலா வீட்டுக்காரர் தான் பேசினார். ராஜேஷ் கை நரம்பை அறுத்துக்குட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கானாம்.
என்ன கேடாம் அவனுக்கு? கடுங்கோபம் அவருக்கு.
பவித்ராவை கட்டி வைக்கணுமாம்.
என்னது? திடுக்கிட்டார்.
ஆமாம்மா ஒரு வாரமா ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணிட்டானாம். அழுது கெஞ்சி பார்த்திருக்கான். அவன் ஆசை நிறைவேறலைன்னு கை நரம்பை அறுத்துக்கிட்டு இருக்கான்.
இப்போ எப்படி இருக்கான்…? பேரனின் நிலை எண்ணி கவலை அவருக்கு.
ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கானாம்.
கலா வீட்டுக்காரர் பெண் கேட்டு வர ரெடியா இருக்காரும்மா.
என்ன பரமு பேசற… பெரிய மனுஷனா யோசித்து பேசு! இன்னும் இருபது நாளுல கல்யாணம் நடக்க போற வீட்டுல பொண்ணு கேட்டு வராங்களாம்மா…
ஆந்திராகாரனுங்களுக்கு தெரிஞ்சுது வகுந்துடுவானுங்க என்றார் சீற்றமாக.
————தொடரும் ——-
error: Content is protected !!