Skip to content
Post Views: 876

அடுத்த நாள் விடியற்காலை நான்கு மணி…
Advertisement
முகுந்தனின் மகன் ஆகாஷ் விமான நிலையம் சென்று ஆரவை அழைத்து கொண்டு வந்து இருந்தான்… ஜீப்பில் வரும் போதே “ஆரவ் கார்த்திகாவுக்கு வர்ணன் சித்தப்பா வெளிய மாப்பிளை பாத்துட்டு இருக்காரு… ஒரு ஜாதகம் செட் ஆகுற மாதிரி இருக்கு… கார்த்திகா ஒரே அழுகை… நீ வருவனு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா… வீட்டுக்கு போய் அவ கிட்ட பேசிடு” என்று கூறினான்….
ஆரவ் அமைதியாய் இருக்க “என்னடா பதிலை காணோம்” என்று மீண்டும் ஆகாஷ் கேட்டான்… “திருவிழா முடிஞ்சு நானே மாமா கிட்ட பேசனும் மாமா….என் தங்கம் எனக்கு மட்டும் தான் மாமா… அவளை யாருக்கும் தர முடியாது” என்று பிடிவாதமாக கூறினான்…
Advertisement
Advertisement
அவன் வீட்டிற்கு வரும் போது மணி ஐந்து இருக்கும்… அப்போது நிரவியை தவிர்த்து யாரும் எழவில்லை.. நிரவியும் ரியாஸுடன் போன் பேசி கொண்டே வாக்கிங் சென்று கொண்டு இருந்தாள் தோட்டத்தில்… அதனால் ஆரவ் வந்ததை கவனிக்கவில்லை…. விளையாட்டிற்காக ஆரவ் நிரவியை பின்னிருந்து பயன்படுத்த அவளும் பயத்தில் அம்மா என சத்தமிட்டு கொண்டு போனை கீழே போட்டு விட்டாள்…
அங்கு ரியாஸோ “ஹெலோ பாப்பு.. பாப்பு என்ன ஆச்சு..” என அவன் கத்தி கொண்டே இருக்க அவளுக்கு அது கேட்கவில்லை… போனும் கீழே விழுந்ததில் டிஸ்பிலே போய் இருந்தது… ஆரவ் அவள் பயந்ததில் “குட்டிமா… நான் தான் பயப்படாத….” என்று கூறி அவளை சமாதானம் படுத்தினான்…
Advertisement
“அண்ணா” என சிணுங்கி கொண்டே அவன் தோள் சாய்ந்து கொண்டாள்… ஆரவை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததில் ரியாஸுடன் பேசி கொண்டு இருந்ததை மறந்து இருந்தாள்… ரியாஸ் அவளுக்கு அழைத்து அழைத்து பார்த்து அவள் எடுக்காததால் நேரத்தை கூட பார்க்காமல் சசிக்கு அழைத்து இருந்தான்…
சசி முதலில் அதை கவனிக்கவில்லை.. அதன்பின் இந்த நேரத்தில் ரியாஸ் அழைக்க மட்டன் என எண்ணி பதட்டமாக அழைப்பை ஏற்றான்.. அவன் ஏற்ற நொடி “மாமா பாப்பு என்கிட்ட பேசிட்டே வாக்கிங் போயிட்டு இருந்தா திடீர்னு கத்துனா… அதுக்கு அப்பறம் போன் எடுக்கவே இல்லை.. என்னனு போய் பாருங்க மாமா…” என்று அவன் கூறி முடிக்கும் முன் வீட்டை விட்டு வெளியே வந்து தோட்டத்தை எட்டி இருந்தார்…
அங்கு நிரவி ஆரவ் மேல் சாய்ந்து கொண்டு இருந்தவள் சசியின் “குட்டிமா” என்ற அழைப்பில் நிமிர்ந்தாள்.. “என்ன சசிப்பா” என கேட்டாள்…
“உன் போன் எங்க குட்டிமா… ரியாஸ் போன் பண்ணான்…பேசிட்டு இருக்க அப்ப கட் ஆகிடுச்சுனு சொன்னான்… அவன் கிட்ட பேசு முதல்ல டென்ஷனா பேசுனான்…”என்று கூறி விட்டு பார்க்கும் போது தான் ஆரவை கவனித்தார்…
“ஆரவ் எப்போ வந்த.. நான் பாக்கவே இல்லை…” என்று கூறி அவனை அணைத்து அவன் தோளை தட்டி கொடுத்தார்… இருவரும் பேசி கொண்டு இருந்தவர்கள் நிரவியின் “ஐயோ” என்ற சத்தத்தில் தான் அவளை பார்த்தனர்… “என்ன ஆச்சு குட்டிமா” என்று கேட்டார் சசி…
“சசிப்பா போன் டிஸ்பிலே போச்சு… அவன் கிட்ட பேசிட்டு இருந்ததையே மறந்துட்டேன் அண்ணாவை பார்த்ததும்… உங்க போன் கொடுங்க… ரொம்ப கோவத்துல இருப்பான்….” என்று கூறி ரியாஸுக்கு அழைத்தாள்…
“டேய் டபரா மண்டையா… சாரி சாரி அண்ணா வந்து இருக்காங்க… அவங்களை பாத்ததும் உன் கூட பேசிட்டு இருந்ததை மறந்துட்டேன்… தெளசண்ட டைம் சாரி” என்று கெஞ்சல் குரலில் கேட்டாள்… அவன் அமைதியாக இருக்க இவளே மீண்டும் “மாமு” என்று அவள் கூறியவுடன் மிக மிக பொறுமையான குரலில் “நீ பாரு நிரவிகா…. உன் சொந்தத்தை பார்த்ததும் என்னை மறந்துட்ட… உனக்கு அவங்க தானு முக்கியம்.. நான் பாசிங் கிளவுட்ஸ் தானே… காலேஜ் முடிஞ்சதும் நீ டெல்லி விட்டு கிளம்பிடுவ… நான் தான் பைத்தியம் மாதிரி ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன் சாரி…. இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ணல…” என்று கூறி வைத்து விட்டான்…
அவன் பேச பேச இவள் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது.. அதை பார்த்து பதறிய சசி ஆரவ் ஆகாஷ் மூவரும் அவளை சூழ்ந்தனர்…. சசியின் தோளில் சாய்ந்தவள் “சசிப்பா மாமு கோவமா இருக்கான்.. அவன் பயந்து இருப்பான்ல அவன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது தான் கத்திகிட்டே போன் கீழ போட்டேன்…. அதுக்கு அப்பறம் நான் அவன் கிட்ட பேசி இருக்கனும்.. ஆனா நான் அண்ணாவை பார்த்ததும் மறந்துட்டேன்… உங்க வீட்டுக்கு போனதும் என்னை மறந்துட்ட தானு.. நான் பாசிங் கிளவுட் தானே அப்படி பேசுறான் சசிப்பா…” என்று அழுது கொண்டே கூறினான்…
சசியோ அவள் தலையை தடவி கொடுத்து “குட்டிமா அவன் கோவம் எல்லாம் பனி போல போயிடும்… அதுவும் உன்மேல இருக்குற கோவம் எல்லாம் உடனே போயிடும்…. நீ வேணா பாரு அவன் இன்னிக்கு நைட்குள்ள போயிடும்… பாரு அழுது அழுது முகம் எல்லாம் சிவந்து போச்சு… போய் தூங்கு” என்று கூறினான்…
“அவன் பேசிடுவான்ல சசிப்பா…” என்று பாவமாக உதட்டை பிதுக்கி கேட்டாள்…
அதில் உருகிய சசி “கண்டிப்பா பேசுவான்… அவனும் உன்கிட்ட பேசாம இருக்க மாட்டான்… போய் தூங்கு வாக்கிங் எல்லாம் போகாத….” என்று கூறி அவளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டு “ஆகாஷ் நீயும் காலைல வீட்டுக்கு போ… ஆரவ் கூட அவன் ரூமுக்கு போ” என்று கூறினார்….
ஆரவ் “அது இருக்கட்டும் சித்தா…. குட்டிமா ஏன் அவங்களுக்காக இவளோ பீல் பண்றா… நம்ம கிட்ட கூட அவளோ கிளோஸ் இல்லல…. ஆனா அவங்க பேச மாட்டேன்னு சொன்னதும் இப்படி அழுகுறா….” என்று கேட்டான்…
“அது தான் எனக்கும் தெரியல… அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குற உறவு ரொம்ப புனிதமானது… நட்பை விட ரொம்ப தூய்மையானது… காதல்னு ஒரு உறவுக்குள்ள அதை அடைக்க முடியாது.. அவங்க உறவு அதுக்கு எல்லாம் மேல… ரெண்டு பேருக்கும் ரெண்டு பேருக்குமே அந்த மாதிரி எண்ணம் இல்லை… எனக்கு அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை துணையா இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோசம்… எனக்கு மட்டும் இல்லை அண்ணாவுக்கும் அந்த ஆசை தான்…எல்லாம் கடவுள் சித்தம்… எங்க ஆசை அது தான்… கடவுள் அதை நிறைவேத்தி வெச்சா என்னை விட அதிகமா சந்தோச படுற ஆள் யாரும் இருக்க மாட்டாங்க … போய் தூங்குங்க டா ரெண்டு பேரும்…” என்று அனுப்பி வைத்து விட்டு மீண்டும் ரியாஸுக்கு அழைத்தார்….
அவன் கடைசி நேரத்தில் தான் போன் எடுத்தான்.. சசியோ “குட்டிமா ரொம்ப அழுவுறா… அவ அவளா இருக்குறது உங்கிட்ட தான்.. நீயும் இப்போ பேச வேண்டாம்னு சொன்னா என்னப்பா… அவ தெரியாம பண்ணி இருப்பானு உனக்கும் தெரியும்… அப்புறம் ஏன்” என்று கேட்டார்…
ரியாஸோ “எனக்கு தெரியுது மாமா.. ஆனா எனக்கு ஹர்ட் ஆகிடுச்சு.. அவ அப்பறம் பேசுறேன்னு சொல்லி வெச்சு இருக்கலாம்.. ஆனா என்கூட பேசுனதையே மறந்துட்டா… அவ கிட்ட பேசாம எங்க போக போறேன்… கண்டிப்பா பேசுவேன்.. அவளை பாத்துக்கோங்க… நான் வைக்குறேன்” என்று கூறி வைத்து விட்டான்…
சசி தான் “இவங்க ரெண்டு பேரோட உறவை புரிஞ்சிக்கவே முடியல” என கூறி அறைக்கு சென்றார்… அங்கு மித்ரா எழுந்து இருக்க “என்ன ஆச்சு சசி… எதுக்கு அவளோ வேகமா எழுந்து போன” என்று கேட்டார்…
அதற்கு சசியோ நடந்ததை கூறி “ரெண்டு பேருக்குமான உறவை என்னால புரிஞ்சிக்க முடியல நவா… அவனும் என்கிட்ட பேசுறப்ப வருத்தப்பட்டு பேசுனான்… பாப்பாவும் ரொம்ப அழுதா… ரெண்டு பேரும் மத்த விசயத்துல தெளிவா இருக்காங்க.. ஆனா இந்த விஷயத்துல ரெண்டு பேருமே தெளிவு இல்ல… குட்டிமாவுக்கு அதுக்கான வயசும் வரல… பாக்கலாம் என்ன பண்றாங்கன்னு.. எனக்கு தூக்கம் வருது நீயும் கொஞ்ச நேரம் படு…ஸ்கூல் இன்னிக்கு லீவு தானு.. நானும் ரெஸ்டாரன்ட்க்கு லேட்டா தான் போவேன்.. கொஞ்ச நேரம் தூங்கலாம்” என அவரை அணைத்து கொண்டு உறங்கிவிட்டார்…
நிரவி அறைக்கு சென்றாலும் அழுது கொண்டு தான் இருந்தாள்.. அழுது கொண்டே உறங்கியும் இருந்தாள்.. அர்ஜுனனுக்கு என்ன தோன்றியதோ நிரவியின் அறைக்கு சென்றார்… அங்கு நிரவி அழுத முகத்துடன் உறங்கும் தன் மகளை பார்த்து பதறி அவள் அருகில் சென்றான்… உறங்கிய நிலையிலும் அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வர அதை துடைத்தார்.. அந்த பரிசத்தில் கண் விழித்த நிரவி அர்ஜுனனை பார்த்து அவர் மடியில் படுத்து கொண்டாள்…
அவள் தலையை தடவி கொடுத்து “என்ன ஆச்சு குட்டிமா… ஏன் அழுவுறீங்க…” என்று கேட்டார்..
அவளும் அழுது கொண்டே நடந்த அனைத்தையும் கூறினாள்… அர்ஜுனன் மேல் வருத்தம் இருந்தாலும் குழந்தையாய் இருக்கும் போது எப்படி நடந்த அனைத்தையும் மறந்து அவனிடம் ஓடுவாளோ அதே போல் இப்போதும் அவரிடம் தன் துக்கத்தை கூறிவிட்டாள்…
அவரும் அவளை தட்டி கொடுத்து “ரியாஸ் உன் கூட பேசாம எங்க போக போறான்.. கண்டிப்பா பேசிடுவான்.. கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறினார்.. அவளும் அழுது கொண்டே உறங்கியும் இருந்தாள்…
அவள் ஆழ்ந்து உறங்கும் வரை அவள் அருகில் இருந்து விட்டு மெதுவாக அவள் தலையை எடுத்து தலையணையில் வைத்து விட்டு அவளுக்கு நெற்றி முத்தமிட்டு விட்டு ஆரவின் அறைக்கு சென்றார்… அங்கு ஆரவ் ஆகாஷின் மேல் காலை போட்டு கொண்டு உறங்கி கொண்டு இருக்க அவன் தலையை தடவி கொடுத்து விட்டு அவனை விட்டு நகர பார்க்க ஆரவ் அவர் கையை பிடித்து கொண்டு அவரை தான் பார்த்து கொண்டு இருந்தான்….
“தூங்கிட்டு இருந்த உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா தம்பி… நீ தூங்கு” என்று கூறி அவர் நகர பார்க்க “அப்பா இங்க வாங்க….” என்று கை நீட்டி அழைத்தான்…
“என்ன தம்பி… நீ தூங்கு பிளைட் ட்ராவெல் வேற பண்ணிட்டு வந்து இருக்க… உனக்கு டையர்ட்டா இருக்கும்… தூங்கு தம்பி…” என்று அவன் உச்சியில் முத்தமிட்டு விட்டு அவனுக்கு தட்டி கொடுத்தார்… அவனும் அவரின் கையை பிடித்து கொண்டே உறங்கி இருந்தார்…
அவர் அவன் உறக்கம் கலையாமல் கையை எடுத்து கொண்டு வெளியேற பார்க்க என்ன மாமா அப்பா பையன் பாச மழை முடிஞ்சு போச்சா என்று கிண்டலாக ஆகாஷ் கேட்டான்….
“டேய் படவா தூங்கு…” என்று அவனிடம் கூறி விட்டு சிரித்து கொண்டே அறையில் இருந்து வெளியில் வந்து கீழே வந்தார்.. அப்போது சுபா குளித்து விட்டு வெளியில் வர “என்ன மாமா.. காலைல எழுந்து பாக்கும் போது ஆளை காணோம்” என்று கேட்டார்….
“ஒன்னும் இல்லை அம்மு மனசு ஒரு மாதிரி தவிப்பா இருந்தது அது தான் குட்டிமாவை பாக்க போனேன்… போய் பாத்தா அழுதுட்டு தூங்கிட்டு இருந்தா… நான் போய் தலையை தடவி கொடுத்தும் எழுந்துட்டா… ரியாஸ் கூட சண்டை போல அது தான் ஒரே அழுகை…” என்று நடந்ததை கூறினார்…
இப்பவும் பாப்பா அழுவுறாளா மாமா… நான் போய் பாக்க போகட்டா என்று கேட்டு கொண்டே நிரவியின் அறைக்கு செல்ல பார்க்க அம்மு பொறுமை… குட்டிமா தூங்கிட்டு இருக்கா.. ரியாஸ் பேசுனா சரி ஆகிடுவா… நான் குளிச்சிட்டு வரேன்… நீ கீழ போ… என்று கூறினார்….
“மாமா தம்பியும் வந்துட்டான்ல… நான் அவனை பாத்துட்டு வரேன்…” என்று மேலே செல்ல பாக்க “அம்மு தம்பியும் தூங்கிட்டு இருக்கான்… மேலயும் கீழயும் அலையாத… போ கீழ போ…” என்று கீழே அனுப்பி விட்டு அவரும் குளிக்க சென்றார்…
கர்ணன் அறையில் கர்ணன் தூங்கி கொண்டு இருக்க “மாமா என்னை விடு மாமா…. நீ தூங்கு அக்கா எழுந்து இருப்பாங்க நான் போறேன் என்னை விடு” என்று சுப்ரியா கெஞ்சி கொண்டு இருந்தார்…
கர்ணன் இன்னும் அவளை அணைத்து கொண்டு உறங்க பார்க்க “யோவ் மாமா என்னை விடு… இப்போ நீ விடலனா உன் பிள்ளையை எழுப்பி விட்ருவேன்” என்று மிரட்டினார்….
“அம்மா தாயி நீ போ… என் தங்கத்தை மட்டும் எழுப்பி விட்றாத…” என்று கெஞ்சலாக கூறினார்…..
“அந்த பயம் இருக்கட்டும்” என மிரட்டி விட்டு தன் துணிகளை எடுத்து கொண்டு குளிக்க சென்றார்…
சுப்ரியா வரும் போது கர்ணன் தன் மகளை அணைத்து கொண்டு உறங்கி இருக்க இருவரையும் ரசித்து பார்த்து விட்டு கீழே சென்றார்…
கீழே வரும் போது சுபா மட்டும் எழுந்து இருக்க மெதுவாக அவரின் பின் சென்று அவரை அணைத்து கொண்டு “குட் மார்னிங் க்கா…” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு விலகினார்…
“குட் மார்னிங் பிரியா… இன்னும் தூங்கி இருக்கலாம்ல…” என்று கேட்டார்..
“அக்கா நீங்க மட்டும் வேலை பாப்பிங்களா” என்று அவர் கேட்க அப்போது என்ன “பிரியாம்மா உன் பெரிய அக்காக்கு மட்டும் தான முத்தமா எனக்கு இல்லையா என்று மித்ரா வம்பு பேசிய படியே வர அக்கா உங்களுக்கு இல்லாததா” என்று கேட்டு அவருக்கும் கொடுத்தார்…
பின் மூவரும் ஆளுக்கு ஏற்றவாரு டீ காபி கஞ்சி என காய்த்து வைத்து விட்டு காலை உணவுக்கு தயார் செய்ய ஆரம்பித்து இருந்தனர்…
ரித்திகா அறையில் ரித்திகா எழுந்து அமர்ந்து இருக்க சிவா அவள் காலை பிடித்து விட்டு கொண்டு இருந்தான் .. “ரிதும்மா உன் கால் ஏன் அதிகமா வீங்குது… டாக்டர் கிட்ட கேட்கலாம்… இல்லனா பெரிய பாட்டி கிட்ட கேட்கலாம் எதோ கை வைத்தியம் சொல்லுவாங்க….” என்று கூறி கொண்டு இருந்தான்…
ரித்திகா சிரித்து கொண்டே “மாமா இது இந்த டைம்ல இது எல்லாம் நார்மல் தான்…. எதுக்கு இவளோ டென்ஷன்… பெரிய பாட்டி இங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து தினமும் பார்த்துட்டு தான் போறாங்க… நீங்க டென்ஷன் ஆகாதீங்க… நான் நல்லா நடக்கனும்… நேத்து அதிகமா நடக்கல… அது தான் இன்னிக்கி வீங்கி இருக்கு…. ஒன்னும் பிரச்சனை இல்லை சரியா பீல் பண்ணாதீங்க….” என்று அவன் தலையை கலைத்து விட்டு கூறினாள்…
அவன் எதுவும் கூறாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்க “மாமா ஏன் உங்க முகம் வாட்டமா இருக்கு… உங்க குட்டி கூட முன்ன மாதிரி பேச முடியல அப்டினா….” என்று கேட்டாள்..
அவனோ வருத்தத்துடன் “ஆமா ரிது ம்மா சின்ன வயசுல என் கூடவே தான் இருப்பா.. இப்போ அந்த பாண்ட் வர மாட்டிங்குட்டு..” என்று கூறினான்..
“குட்டி உங்க கூட ஒழுங்கா பேசாம இருந்ததுக்கு நானும் ஒரு காரணம்ல மாமா… நான் மட்டும் அர்ஜுன் அப்பா கண்ணுல படாமா இருந்தா நீங்க இன்னும் சந்தோசமா இருந்து இருப்பிங்களா… குட்டியை கல்யா…..” என்று கூற முடிக்கும் முன் “ரிது ம்மா அதை பத்தி பேசாத… முடிஞ்சது முடிஞ்சது தான்… அத பத்தி இனிமே பேச கூடாது…. எனக்கு நீ மட்டும் போதும்… எனக்கு இப்போ புரியுது எனக்கு அவ கூட இருக்கிறது அப்பா பொண்ணு உறவு தான்….. நான் அவளை அந்த எண்ணத்துல அப்ப அப்படி பாத்ததே தப்பு…. வேண்டாம் ரிது நான் உன்கூட ரொம்ப சந்தோசமா இருக்கேன்….” என்று கூறினான்…
“சாரி மாமா….” என்று கூறி கை நீட்டி அழைத்தாள்…. சிவாவும் சிறுபிள்ளை போல் அவள் கைக்குள் அடங்கி கொண்டான்….. அவனின் எண்ணம் பத்து வருடங்களுக்கு முன் சென்றது….
error: Content is protected !!