வைஷுவுக்கு கணவனின் கோபமுகத்தை பார்த்து பயந்தவள்,, அவர் சொல்வது சரி தான் அதற்காக இந்த போட்டியை எப்படி விடுவது..
Advertisement
Advertisement
வீ. பியை எப்படி சமாளிக்க, அவர் கண்டிப்பா என்னை ஆட விட மாட்டார் பின்பு எப்படி என்று யோசித்தவள், தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட..
வைஷு தலையை பிடித்து கண்கலங்கி பயந்தது போல் அமர்ந்திருப்பதை பார்த்த வீ. பி. இவ கிட்ட இப்படி தான் நடந்துக்கணும், இல்லைன்னா என்னையே ரோப்புல ஆடவிட்டுருவா?..
Advertisement
எவ்வளவு தைரியம் இருந்தா, என் பிள்ளைகளை வயித்துல வச்சுகிட்டு டான்ஸ் ஆடியிருப்பா, அதுவும் ஸ்கை டான்ஸ், அவனால் அதை ஏத்துக்கொள்ள முடியவில்லை,, அவள் ஆடியதை நினைத்து, கோபத்தோடு… அவளை பார்த்தவன்…
ஒரு வேலை வைஷு ஆடும்போது கீழே விழுந்து இருந்தாள்.. அவளுக்கு ஏதாவது ஆகி, என் பிள்ளைகளும் என்னை விட்டு சென்றிருந்தால்.. திரும்ப வா என்றால் வருமா,, எவ்வளவு சந்தோஷசமாக கொண்டாட வேண்டிய நாளை இப்படி ஆக்கி விட்டாளே….
இவளுக்கு அப்படி என்ன? பிள்ளைகளை விட டான்சின் மீது அவ்வளவு பிரியம்,, இந்த போட்டியில்லன்னா அடுத்த போட்டி இல்லையா? என்ன இப்போ? எத்தனை டான்சர் நம்ம அகாடமி இருக்காங்க, அவங்கள ஆட சொல்ல வேண்டியது தானா… இவ ஆடிதான் வின் பண்ணனுமா என்று அவளை மனத்தில் வருத்தெடுத்தவன்.. கடுமையாக முகத்தை வைத்துக்கொள்ள…
அவளோ மீண்டும் அவனை கெஞ்சுவது போல் பார்க்க..
“அப்படி பார்க்காத?” என்றான் குரலை உயர்த்தி…
இவளுக்கு அவர் கண்டிப்பாக டான்ஸ் ஆட அனுமதி தரபோறது இல்லை என்று தெரிந்து கொண்டவள்.. இன்று எப்படி எல்லாம் ஆட வேண்டும், வின் பண்ணி கோப்பையை இந்திரா தேவியிடம் கொடுத்து சந்தோஷ பட வேண்டும் என்று ஆசைப்பட்டேன், எத்தனை நாள் கனவு இது எல்லாம் வீணாக போனதே என்று கலங்கியவள் தேம்பி, தேம்பி அழுக..
“நீ என்ன பண்ணாலும் நான் உன்னை டான்ஸ் ஆட விட மாட்டேன், ட்ரெஸ் மாத்திட்டு ரெடியாயிரு நான் போயி யாழினியை பார்த்து கூட்டிட்டு வர்ரேன், கிளம்பனும்” என்றவன்.. யாழினி அறைநோக்கி செல்ல…
வைஷுவுக்கு எப்படியாவது இன்று இறுதி போட்டியில் கண்டிப்பாக ஆடியே தீரா வேண்டும் என்ன பண்ண?.. என்ன பண்ண? என்று யோசித்தவள்.. பாவாவிடம் இப்போ சொல்லி, புரியவைக்க முடியாது, என்று யோசிக்க டக்கென்று ஒரு யோசனை தோன்ற,, இதான் அதற்கு முடிவு வேற வழியில்ல என்றவள் கிளம்பியிருக்க…
வீ. பி யாழினியின் அறைக்கு சென்று மகளை பார்க்க..
யாழ் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்..
மகளை மெல்ல எழுப்பினான் வீ. பி.
வீ. பியை பார்த்ததும் “நானா” என்றவள்,, அவனை அணைத்துக்கொள்ள.
“உன் திங்ஸ் எல்லாம் அப்பா பேக் பண்ணிட்டேன் வா” என்று மகளை அழைத்துக்கொண்டு வைஷுவின் ரூம் வர.வைஷு ரூம்பில் இருப்பதாக தெரியவில்லை, அவள் மொபைல் மட்டும் அங்கே இருக்க.. அவள் எங்கே போனால் என்று அவளின் டெஸ்ட் ரூம் பார்க்க.. அங்கேயும் அவள் இல்லை, எங்கே போனாள் இவள் என்று வீ. பி அந்த வீடு முழுக்க சுற்றி வந்தான்..
எங்கையும் அவள் இல்லை, அப்போ டான்ஸ் ஆட கிளம்பிட்டாளா,,, நான் வேண்டாமுன்னு சொல்லியும், இவ ஆட போயிட்டாளா,, அப்படியெல்லாம் இருக்காது, வெளியே இருந்தாலும் இருப்பா.. என்று மனதை தேற்றி கொண்டவன்.. யாழினியை அழைத்து கொண்டு வெளியே வந்து வைஷுவை தேட..
அவள் அங்கேயும் இல்லை என்றதும்.. போயிட்டா யூ…. என்று அவளை திட்ட கூட முடியாமல் தவித்தவன்…
யாராவது இருக்காங்களா என்று பார்க்க.. அங்கே தோட்டத்தில் வேலை செய்பவன் மட்டும் வேலை பார்த்துக்கொண்டு இருக்க…
வீ. பி அவனை “வா” என்று அழைத்தவன். “வைஷு மேடம்மை பார்த்தீங்களா”.. என்று கேட்க..
“ஆமாம் சார் பின்வாசல் வழி வந்தாங்க சார்,, டிரைவர் கிட்ட டான்ஸ் நடக்கும் இடத்துக்கு போக சொல்லி போயிட்டாங்கா”.. என்றதும்..
இருக்குடி உனக்கு, உன்ன ஆடவிடுவேனா நான் வர்ரேன்டி, என்று மனதில் அவளை திட்டியவன். காரை எடுக்க… காரின் சாவி இல்லாமல் போக..
“யோவ்வ்.. தோட்டக்காரரே கார் சாவி எங்கேய்யா?”..
“சார் மேம் தான், எல்லாம் கார் சாவியையும் எடுத்துட்டு போனாங்க”….
அடி பாவி வந்து வச்சுக்கிறேன் உன்னை..
“இதுக்கு ப்பேர் சாவி இருக்கா?”.. என்றதும்..
தோட்டக்காரன் உள்ளே சென்று கார் கீயை தேடி எடுத்து வந்து வீ. பியிடம் கொடுக்க..
வீ. பி யின் கோபத்தில் கார் பறந்தது..
வைஷு முன் வாசல் வழியே சென்றால், வீ. பி பார்த்து விடுவான் என்று இவள் பின்வாசல் வழியே குதித்து வெளியே சென்றாள்..
அங்கே நின்று இருந்த காரின் கீயையை எல்லாம் முதலில் எடுத்தவள். காரில் ஏறி
வீ. பி தன்னை துரத்தி வரகூடாது என்றே..
கார் டிரைவரை காரை டான்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு போக செல்ல..
அங்கே சொர்ணமுகி இன்னொரு பெண் டான்ஸரை போட்டி நடனத்துக்கு நடனம் ஆட சொல்லிக்கொண்டு இருக்க, அவளோ “முடியாது மேம், நான் ஆடினா கண்டிப்பா தோத்துடுவேன் வேண்டாம்” என்று மறுத்து விட.
வேற என்ன செய்யலாம் என்று சொர்ணமுகி யோசித்துக்கொண்டு இருக்கும் போதே..
சரியாக வந்து சேர்ந்தாள் வைஷு..
சொர்ணமுகி அவளை பார்த்தது “நீ எப்படி இங்கே?”..
வைஷு சொர்ணமுகியை பார்த்து கண்ணடித்தவள், “பின் வாசல் வழியே குதித்து வந்தேன் மேம், வாங்க” என்றவள் அவரையும் தன்னோடு இழுத்துக்கொண்டு சொல்ல..
“வைஷு வேண்டாம் வைஷு, வீ.பி யைபத்தி உனக்கு தெரியாது அவருக்கு கோபம் வந்தால்” என்று புலம்ப..
“மேம் என் ஹஸ்பெண்டை நான் சமாதானம் பண்ணிக்கிறேன், நீங்க வாங்க போட்டி முடியட்டும். கப்போடு சேர்ந்து அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு. எப்படியோ சாமாளிக்க வேண்டியது தான், அது என் பாடு நீங்க வாங்க”… என்று போட்டி நடக்கும் இடத்துக்கு செல்ல..
இவர்களுக்கு முன் அங்கே மற்ற இரண்டு போட்டியாளர்களும் தங்கள் ஹெல்த்தை செக் பண்ணிக்கொண்டு இருக்க..
வைஷுவும் தன் உடல் நலத்தை சோதித்துக்கொண்டவள்.. எல்லாம் சரியாக இருக்க..
டாக்டர் டான்ஸ் ஆடுபவர்களிடம் உங்களுக்கு வேறு ஏதாவது தொந்தரவு இருக்க என்று கேட்க..
மற்ற இரண்டு பேரும் ஒரு தொந்தரவும் இல்லை என்று கூறி விட..
வைஷு டாக்டரிடம் தன் மெடிக்கல் ரிப்போர்டை கொடுத்தாள, அதை வாங்கி பார்த்தவர்,,
“எப்படிமா, நீண்ட நேரம் உன்னால ஆட முடியுமா கஷ்டமே?””.. என்று கூற.
“எனக்கு நம்பிக்கை இருக்கு டாக்டர் சார்”.. என்றாள் தைரியமாக…
அவளை வியந்து பார்த்து கைகொடுத்தவர், வாழ்த்தி விட்டு “கேர்புல்”… என்று அவளை நடனம் ஆட அனுமதி வழங்கினார்..
அந்த பெரிய ஆடிடோரியத்தில் இறுதி போட்டிக்காக நடன மேடையில் அலங்காரம் பண்ணி இருந்தனர்..
ஒரே மேடையில் மூன்று பேரும் நின்று தனி. தனியா ஆட இடம் விட்டு இருக்க..
மூன்று போட்டியாளர்கள் போட்டி நடனம் ஆட ரெடியாக வந்து நின்று இருக்க..
வைஷு கதக் நடனம்,
சிங்கப்பூர் அகாடமியில் இருந்து ஜெனிதா பரதநாட்டியம்,
கேரளாவில் இருந்து ஒரு பெண் மோகினி ஆட்டம் என்று மூன்று நடனம் கலைஞர்கள் ஆட தயாராக இருக்க…
போட்டிகள் தொடங்கின..
பின்னாடி திரையில் இவர்கள் எவ்வளவு மணிநேரம் ஆடுக்கின்றார்கள் என்று கணிக்க டைமர் செட் பண்ணி வைத்திருக்க..
நடனம் தொடங்கியது மூன்று பேருக்கும் ஒரே பாட்டு தான்.. அவர்களுக்கு ஏற்ப வாறு பாட்டு மாறி, மாறி வரும்..
முன் வரிசையில் நாக்கில்லி வெங்கடேஸ்வரரும், இந்திரா தேவியும் அமர்ந்திருக்கு..
வைஷு மேடை ஏறியதும் இவர்களை பார்த்து தலைகுனித்து கைகூப்பி வரவேற்றாள்..
இந்திராதேவிக்கு தன் மருமகளை எண்ணி அவ்வளவு சந்தோசம்,, பெருமை, கண்டிப்பாக அவள் வின் பண்ணீயே தீருவாள் என்று முடிவு கட்டியிருந்தார்..
வீ. பி நடனம் தொடங்கியதும் தான் வந்தான் அந்த இடத்திற்கு.. வைஷுவை ஆட விடகூடாது என்று நினைத்து மேடையின் அருகே வர.. அவனை யாரும் மேடை பக்கம் அனுமதிக்க வில்லை..
நான் போகனும் என்று வீ. பி மேடைக்கு எனாறு சொல்ல.
அங்கே உள்ள செக்கூருட்டி தடுக்க.. வீ. பியின் சத்தம் கேட்டு வந்த நாக்கில்லி மகனை பார்த்து “விஜெய், யாழ், வாங்க உட்காத்து வைஷு டான்ஸை பார்க்கலாம்” என்று அவர்களை முன் வரிசைக்கு அழைத்து செல்ல…
தந்தை பார்த்ததும் அமைதியாக அவர் பின் சென்றான் வீ. பி.. யாழினியும் இவர்களுடன் சென்று அமர்ந்து விட..
முதலில் பரத நாட்டிய பாடல் தான் ஒலித்தது.. அதற்கு ஏற்றார் போல மூன்று பேரும் அவர்களுக்கு தெரிந்த நடனத்தை ஆட.. அடுத்தது கதக் நடன பாடல் ஒலித்தது, அடுத்தது மோஹினி நடனம் என்று மாறி, மாறி வர அதற்கு ஏற்றார் போல மூன்று பேரும் பாட்டோடு இணைந்து ஆடிக்கொண்டிருந்தனர்..
ஜெனிதா சரியாக பரதநாட்டியத்தை அபிநயத்தோடு ஆடினாள்.
வைஷு கதக் நடனம் ஆடினாள், அவளின் நிறத்திற்கு எடுப்பான கரும்சிவப்பு உடை அதற்கு ஏற்றார் போல் ஆபரணங்கள் அணிந்து தலை ஆலங்காரம்,, நெத்தியில் பெரிய நெத்தி சுட்டி, கை நிறையா வளையல் அணிந்து,, அசத்தலாக இருந்தாள் வைஷு, அவளை ரசிக்க வேண்டியவன் கோபமாக அவளை பார்த்துக்கொண்டு இருக்க.
வைஷு கணவன் அமர்ந்திருப்பதை பார்த்தவள் கண்களை மூடிக்கொண்டாள்.. அவன் இருக்கும் பக்கம் கூட அவள் திரும்ப வில்லை..