Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜதி தரும் அமுதம்

Jathi Tharum Amutham 20 3

மகனின் தோளை  தட்டி ஆறுதல் படுத்தியவர்,… “வைஷுவுக்கு  பேபி வந்தது   தெரியுமா?”…

“தெரியும் டாடி, தெரிஞ்சுதான் டான்ஸ் ஆடி இருக்க,, அவளுக்கு என் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தா,, என் வாழ்க்கை?”..

இந்திரா தேவியை பார்த்தவன் “உங்களுக்கு  அப்படி என்ன இந்த  கோப்பை மீது அவ்வளவு ஆசை”  என்றவன் கோப்பையை தட்டி விட..



Advertisement

மகனை இந்திரா தேவி அதிர்ந்து பார்க்க..

“நம்பர் 1, நம்பர் 1 எதுல நம்பர் 1,,:ஒருதன்  அவன் வாழ்க்கை  முதல்லஜெயிக்கனும், அத விட்டுட்டு, என் பிள்ளைகள் விட உங்களுக்கு இந்த கோப்பைதான் ரொம்ப முக்கியம் மீ?”… என்றதும்..

Advertisement

Advertisement

“விஜெய் இல்ல விஜெய் நீ தான் எங்களுக்கு பெருசு,, உன் பிள்ளைகள் எங்க பொக்கிஷம், அத நாங்க தடுப்போம்மா,,  நீ என்கிட்ட  முதல்லே சொல்லி இருக்கலாமே, விஜெய் நான் வைஷுவை தடுத்து இருப்பேனே, வைஷுவையும், என் பேர பிள்ளைகளை விட எனக்கு எதுவும் பெருசு இல்ல கண்ணா”  என்று இந்திரா தேவி அழ….

Advertisement

பத்ரி அக்காவை காண வந்திருந்தான்.. அனைவரையும் பார்த்துக்கொண்டே வந்தவன், வீ. பியின் அருகில் வந்து நிற்க..

வைஷுவின்  சாடையில் ஒரு ஆண் மகனை பார்த்ததும்.. யார் நீ என்பது போல் புருவத்தை தூக்க…

“மாமா நான் பத்ரி,, வைஷு அக்கா எப்படி இருக்க..?”..

“நீ தான் அவளுக்கு ஊசி போட்டீயா?”.

பத்ரி “ஆமாம்” என்று தலையாட்ட..

பளார் என்று அறைந்திருந்தான் அவனை..

பத்ரி பாவம் போல் கன்னத்தில் கைவைத்து நிற்க..

“நீ பெரிய டாக்டர், உன் பேச்ச கேட்டு, அவ ஊசி போட்டு ஆட கிளம்பி இருக்க,, நீ அத பாத்துட்டு இருந்திருக்க”?.. என்றவன் கோபத்தில் பல்லை கடிக்க..

வீ. பியை பார்த்து பயந்து  அவன் பின்னாடி நகர்ந்து விட…

“டாக்டர்,,  இவன் பெரிய டாக்டர் வந்துட்டான் போடா”… என்றான்…

டாக்டர்  வைஷுவை வநது   பார்த்து விட்டு  கண்முளிச்சதும் கூட்டிட்டு போங்க  என்று சொல்லிவிட..

“அவளுக்கும் என் பிள்ளைகளுக்கு எதாவது ஆகியிருந்தா இருக்கு உங்களுக்கு”.. என்றான்..

வைஷு சிறிது நேரத்தில் கண் முளிக்க…

நர்ஸ் வந்து “பேஷண்ட் கண்முளிச்சிட்டாங்க,   நீங்க போய் பாருங்க” என்று,  சொல்ல…

அனைவரும் வைஷுவை  சென்று பார்த்தனர்.. வீ. பி அவள் இருக்கு அறை வாசல் பக்கதில் உள்ள சேரில் அமர்ந்து விட… இந்திரா தேவி வெற்றி  கோப்பையோடு சென்று மருமகளை பார்த்தவர், அவளிடம் கோப்பையை கொடுத்து ,

“ஏன்டா வைஷு  வையுத்துல பிள்ளையை வச்சு கிட்டு இப்படியெல்லாம் ஆட லாமா, பிள்ளைகளுக்கு என்னவாகும்.. அத்தைகிட்ட ஒரு வார்தைதை சொல்லி இருக்கலாமே..?”..

என்று வருத்தபட..

பத்ரி வைஷுவிடம் வந்து “எப்படி இருக்க வைஷு கா.., இப்போ ஓகேவா”.. என்றான்.. தம்பியின் கன்னம் சிவந்து இருப்பதை பார்த்தவள்..

“என்னாச்சுடா கன்னம் சிவந்து இருக்கு?”..

“மாமா அடிச்சிட்டாங்க கா..”. என்றான்..

“ஏன்டா?”..

“நான் ஊசி போட்டதுக்காக”..

“உன் புருஷன் என்னையும் தான் திட்டினான், திட்டிவிட்டு நீ கஷ்ட பட்டு  ஆடி வின் பண்ண கோப்பையை  கீழே  தட்டி விட்டான்”.. என்றதும்..

“பாவாவுக்கு என் மேல கோபம் அத்தை நான் பாத்துக்கிறேன், நான் பேசி, மன்னிப்பு கேட்டா சரியாகிடு வாங்க” என்றவள்  கணவனை தேட..

அவனோ வாசலில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு  வைஷுவின் குரல் கேட்டு கண்களை மூடி அமைதியாக அமர்ந்தவன், நல்லா வேளை எதுவும் யாருக்கும் ஆகல, வேற எதாவது ஆகியிருந்த என் நிலமை, வைஷூவின் மீது கட்டுகடங்காத கோபமா, என் பிள்ளைகளை விட அப்படி என்ன டான்ஸ் வேண்டியத இருக்கு இவளுக்கு.. அவளை பார்த்தாள் கண்டிப்பாக அடித்து விடுவான், அப்படி ஒரு  கோபம் அவனுக்கு,

இந்திரா தேவி மருமகளை அணைத்து நன்றி சொன்னார்.. “நீயில்லாமல் இது சாத்தியம் இல்ல வைஷு, இது என் கனவு” என்று வைஷு வைத்திருந்த கோப்பையை வருடி கொடுக்க..

“இனிமே இப்படி ரிஸ்க் எடுக்காத வைஷு”..

“அத்தை எனக்கும், என் பாவாவும், பிள்ளைகளும் தான் முதல்ல, அவங்களுக்கு ஏதும்  ஆகாதுன்னு தெரிஞ்சுதான் போட்டியில ஆடுனேன்,  இதுவும்  முக்கியம் தானே அத்தை, நம்ம அகாடமி நம்பர் 1″…. என்று சொல்லி சந்தோஷ பட..

“எனக்கும் தான் வைஷு ரொம்ப சந்தோஷம்”… என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்க..

வெளியே அமர்ந்திருந்த வீ. பிக்கு தான் எரிச்சலாக இருந்தது…

நாகில்லி பெருமையாக மருமகளை  பார்த்தவர்,  “வாழ்த்துக்கள்மா, உங்க அத்தை நெனச்சத நீ சாதிச்சிட்ட'” என்று வாழ்த்து கூறியவர், “உன்னையும் பாத்துக்கோம்மா”  என்றார்.

“சரி மாமா”  என்றவள் யாழினியை பார்க்க..

அவளோ வைஷுவுக்கு பாப்பா பிறக்க போகுது என்று தெரிந்து சந்தோசபட்டவள், வைஷு அருகில் வந்து “மீ உங்க வைத்துல இரண்டு பாப்பா இருக்கா?”..

“ஆமாம் டா இரண்டு பாப்பா இருக்கு, நீ  பாப்பை  பத்திரமா பாத்துப்ப தானே”…  என்றதும்.

“ஊம்ம் கண்டிப்பா எனக்கு சிஸ்டர், பிரதர் இரண்டு பேபியும் வேணும்” என்றதும்..

மகளை கட்டி அணைத்துக்கொண்டவள் கணவனை தேட..

“உன் பாவா வெளியே தான் உட்கார்ந்து இருக்கான் கோபமா” என்றார் இந்திரா தேவி…

கணவனிடம் பேச வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், அவனை அணைக்க வேண்டும் என்று வைஷுவுக்கு தோன்ற… கணவன்  வருவானா என்று வாசலையே  பார்த்திருந்தாள்..

டாக்டர் வந்து வைஷுவை செக் பண்ணி பார்த்து விட்டு..

வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல..

நாகில்லி ஹைதெராபாத் செல்வதற்கு  அனைவருக்கும்  பிளைடில் டிக்கெட் போட…

 வைஷுவை இந்திராதேவி தான் மெல்ல அழைத்து வந்தார்… வைஷு நடக்க முடியாமல் நடந்து வந்ததை பார்த்த வீ. பி,, அவளை அப்படி தூக்கிக்கொண்டு  காரின் பின் சிட்டில்  ஏற்றினான்..

கணவனின் முகத்தை பார்த்தவளின், முகத்தை  கூட பார்க்க வில்லை வீ. பி..

வைஷு அவனை ஏக்கமாக பார்த்து “பாவா”  என்று அழைக்க..

அவளை இறக்கி விட்டவன் டிரைவர் சீட்டுக்கு சென்று ஹார்ன் மீது கைவைத்து சத்தம் எழுப்ப..

அனைவரும் வேகமாக வந்து ஏறிக்கொள்ள கார் ஏர்போர்ட்க்கு சென்று  நின்றது.

அனைவரும் இறங்க,, வைஷு இறங்கும் போது “நீ காரில் இரு”  என்றவன்..

நாகில்லியிடம் “நீங்க ஹைதெராபாத் போங்கப்பா  நான்  நாளைக்கு வர்ரேன்” என்றவன்..

யாழினியை  பார்த்து “நானா நாளைக்கு இன்டிக்கு வர்ரேன் , நீ தாத்தா கூட போ”.. என்றவன். ஏர்போர்டில் இருந்து  வெளியே வந்ததும் வேகம் எடுத்தது..

வீ. பி  கார் ஓட்டிய வேகத்தில் நன்றாக உட்கார முடியாமல் ஆடியவள் “பாவா மெதுவா போங்க பாவா எனக்கு  பயமா இருக்கு”  என்றதும்..

இன்னும் வேகமாக காரை ஓட்ட..

“பாவா பயமா இருக்கு பாவா, மெதுவா போங்க”..

“ஓ…. இது  உனக்கு பயமா இருக்கா,,  நெத்து ஒரு ரோப்புல தொங்குன, அப்போ  பயமா இல்லையா,?. இப்போ காருக்குள்ள வசதியா, சேப்டீயா உட்கார்ந்திட்டு பயப்படுற அப்படித்தானே”  என்றதும்.

அவள் கண்ணீல் இருந்து கண்ணீர்  மட, மடவென வர..

“உன் அழுகைக்கு எல்லாம் உருகுற ஆள் இல்லை நான் இப்போ, கன்னத்  தொடடீ'” என்றான்.

அவன் கோபத்தை பார்த்தவள் இனி அவரிடம் பேச கூடாது, என்று  அமைதியாக வர..

கார் செல்லும் பாதையை பார்த்தவள்.. அமைதியாக பின்சீட்டில் படுத்து விட..

8 மணி நேரம்  பயணம் செய்யும்   தூரத்தை நான்கு மணி நேரத்தில் வேகமாக வந்திருந்தான்..

அவனின் கார் ஸ்ரீரங்கபட்டிணத்திற்க்கு நுழைய  வைஷு மெல்ல கண்விழித்தவள்..

வீ. பி யை பார்க்க.. கார் வைஷுவின்  தாத்தா கிருஷ்ணப்பா வீட்டின் முன் நின்றது..

கார் லாக்கை  திறந்து விட்டவன்.. “இறங்கு”  என்றான்..

“நீங்களும் வாங்க” என்றாள்..

“நான் உன்னை உன் தாத்தா வீட்டில்  விட தான் வந்தேன், இறங்கு”…

“என்னை விட்டுட்டு நீங்க தனியே இருந்திருவீங்களா? பாவா”..

“இறங்கு டி… பெரிய என் மேல பாசம் வச்சு இருக்குற மாதிரி சீன் போடுற”..

“யாரு சீன் போட்டா?”..

“நீ தான்?”..

“நான் என்ன பண்ணேன் பாவா?”..

“ஓ… நீ  என்ன பண்ணேன்னு உனக்கே தெரியல,,  என் பேச்சு கேட்காமா பின் வாசல் வழியே எகுறி குதிச்சு, மேடம் என்ன பண்ணிங்க?”…

” சாரி  பாவா, உங்க பேச்ச கேட்காம போனது தப்பு  தான் சாரி பாவா” என்று கணவனிடம் மன்னிப்பு கேட்க..

“நீ என் பேச்சை கேட்காதது பெரிய தப்பு.. அதுவும் தப்புண்ணு தெரிஞ்சும்,  இவன் கிட்ட மன்னிப்பு கேட்டு இவனை சமாதானம் பண்ணலாமுன்னு, எல்லார்கிட்டையும் சொல்லுற. இறங்குடி  கீழ”.. என்றான் கோபமாக..

“பாவா, உங்கள விட்டு என்னால இருக்க முடியாது பாவா, என்னை விட்டு போகதீங்க”… என்றுஅழுதவளை..

“ஓ  இப்படி அழுதா நான் உன்னை கூட்டிட்டு போயிடுவேண்ணு நினைக்காத, நீ தப்பு பண்ணிட்டு சாரி சொல்லுவ, நான் மன்னிக்கனும்,  காரை விட்டு கீழே இறங்குடி”  என்றதும்..

வைஷு மெல்ல காரைவிட்டு கீழே இறங்க. “நானே வந்து கூப்பிடுற வரைக்கும் நீ ஹைதெராபாத் வரகூடாது போ”… என்றான்.

வைஷு துடித்து போனாள் வீ. பி இவ்வளவு கோபப்படுவான்  என்று அவள் நினைக்க வில்லை..

அவள் இறங்கியதும்  அவளை  திரும்பி கூட பார்க்காது காரை கிளப்பி கொண்டு  சென்று விட்டான் வீ. பி..

பேத்தி சோர்வோடு  தட்டு தடுமாறி  மெல்ல நடந்து வருவதை பார்த்த கிருஷ்ணப்பா பேத்தியை பார்த்து அருகில் வர..

தன் தாத்தாவை பார்த்த வைஷு  “தாத்தையா”  என்று கதறி அழ…

அவள் அழும் சத்தம்  வீ. பியின் காதில் கேட்டும் கேட்காதது போல் சென்று விட்டான் வீ. பி…… கோபம்… கோபம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!