Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ரீங்காரமாய் என்னுள்ளே

ரீங்காரமாய் என்னுள்ளே 19

ரீங்காரமாய் என்னுள்ளே 19

பள்ளியிலிருந்து ஹாஸ்டெல்லுக்கு வந்த, தத்தையின் முகமோ தீவிர சிந்தனையில் பிரதிபலித்தது. அப்போது, சிந்துவின் கவனத்தை திசை திருப்பியது அவளின் அலைபேசி. அதில் தன் சிந்தனையை விடுத்து போனை கையில் எடுத்து பார்க்க, திரையில் மின்னிய அவளின் தந்தையின் அழைப்பை பார்த்து, அதிர்ந்தாள். 

அதனை அட்டென்ட் கூட செய்யாது பார்த்தவாறே இருந்தவள், முழுதாய் அழைப்பு நின்றதும் தான் அவளின் மூளை இயங்கவே செய்தது. பின்னே அவனவளின் வீட்டிற்கு சென்று வந்ததிற்கு பிறகு, அவளின் மூளை, அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி பயணிக்க சொல்ல, அதற்க்கு அவளின் மனமும் இயங்க, இந்த வார இறுதியில் வீட்டிற்கு சென்று வரலாமென்று முடிவெடுத்து, அதை பற்றிய சிந்தனையிலேயே உழன்றிருந்தவள், தற்போது எதிர்பாராத விதமான தந்தையின் அழைப்பு அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவளின் அதிர்ச்சியை மூளை உள்வாங்கி நடப்பிற்கு கொண்டுவந்த நிமிடம், மீண்டும் தந்தை எண்ணிலிருந்து அழைப்பு வர, இம்முறை தத்தை பெரிய மூச்சாக இழுத்துவிட்டு, தன்னை ஒருநிலை படுத்தி அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.



Advertisement

மறுமுனையில், “கண்ணு… சிந்து கண்ணு… அப்பா பேசுறேன்… எப்படி இருக்குற கண்ணு…” என்று கொஞ்சம் தயக்கத்துடன் வர,

சிந்துவின் மண்டையோ, “அவர் எதற்காக அழைத்திருக்க கூடும், என்ன பூதம் வரப்போகுதோ…” என நொடியில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வலம் வர, தந்தையின் அழைப்பிற்கு பதில் பேசாமல் இருக்க,

தந்தை இம்முறை “கண்ணு இருக்கியா?…” என கொஞ்சம் அழுத்தி சத்தமாக கேட்க,

Advertisement

“ம்…ம்ம்… சொல்லுங்க அப்பா…” என்று கொஞ்சம் தயங்கி பதிலளித்தாள்.

Advertisement

” நீ வேலைக்கு போனதிலிருந்து அப்பாவா இதுவரைக்கும் உன்கிட்ட, ஒன்னு கூட பேசுனதில்ல… இப்போ என்ன புதுசா, உனக்கு கூப்பிடுறேன்னு யோசிக்குறியா கண்ணு… காலம் கடந்த ஞானோதயம்ன்னு கூட வச்சிக்க கண்ணு… இப்போதான் உன் அருமை புரியுது…” என அவர் அடுத்து பேசிக்கொண்டே இருக்க,

இங்கு சிந்துவின் மனதோ “இது எதற்காகவோ…” எனத் தீவிரமாக சிந்திக்க,

தந்தை, ” கண்ணு… நாளைக்கு வீட்டுக்கு வந்துட்டு போ முடியுமா?… ரொம்ப முக்கியமா சேதி உன்கிட்ட சொல்லணும் கண்ணு… மறுப்பு சொல்லாம ஓரெட்டு வந்துட்டு போறியா கண்ணு… இந்த ஒருமுற மட்டும் கண்ணு… வரமாட்டேன்னு மட்டும் சொல்லாத கண்ணு…” என கொஞ்சம் இரஞ்சலாய்  மகளை அழைக்க,

Advertisement

சிந்து, ” தகப்பனின் பேச்சை உள்வாங்ககிக்கொண்டே, ஒரு முடிவோடு, சரிங்க அப்பா…” என்று பதில் தந்தாள்.

“ரொம்ப சந்தோஷங் கண்ணு… நாளைக்கு வந்திரு  கண்ணு…” என சொல்லி அழைப்பை துண்டித்தார்.

அழைப்பு துண்டிக்க பட்டதும், தன்னை கொஞ்சம் நிதானித்துக்கொண்ட சிந்து, தந்தையின் இந்த அழைப்பு எதற்காக இருந்தாலும், அதனை எதிர்கொண்டு தன்னுடைய விருப்பத்தை முடிவாய் சொல்லி, அடுத்து என்னவென பார்க்கும் வழியை யோசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டாள். 

……….

நாளை வீட்டிற்கு செல்வதற்கு, தனக்கு வேண்டியவை எல்லாம் ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது, மறுபடியும் சிந்துவின் அலைபேசி அழைத்தது.

“வித்யு கால்லிங்” என்று வர, அதனை அட்டென்ட் செய்து, “சொல்லு வித்யு” என சோர்வாய் ஒலித்தது சிந்துவின் குரல்.

வித்யு, “என்னடி தூங்கிட்டு இருந்தியா?… மணி ஒன்பது தானேன்னு கூப்பிட்டேன்…”

சிந்து, “பச்… இல்ல வித்யு…”

“அப்பறம் எந்த பேப்பர் கப்பல் கவுந்துச்சின்னு, மேடம் இவ்வளோ அலுத்துட்டு இருக்கீங்க…” என வித்யு கேள்வியெழுப்ப,

சிந்து, “ம்…”

வித்யு, “என்ன ம்ம்… ன்னு ராகம் இழுக்குற?…. கப்பல் கவுரலயா அப்போ?… காவல்துறை கூட தான் அப்போ டூவா?…” என தோழி சுவாரசியமாக கேக்க,

“அடப்போடி… உனக்கு அவரை இழுத்து ஓட்டலைனா தூக்கமே வராது…” என சிணுங்கினாள் சிந்து.

வித்யு, “நான் ஏன்டி தூங்காம இருக்க போறேன்… நீ தான், எங்கும் நீ… எதிலும் நீன்னு… காவல்துறைகூட டூயட் பாடிட்டு இருக்க…” என்று சொல்லி, “எனக்குன்னு ஒரு ஆள் இருந்தா… நான் ஏன் இந்த நைட் நேரத்துல உன்கூடவெல்லாம் வெட்டியா பேசிட்டு இருக்க போறேன் சொல்லு…” என கேட்டு வைத்தாள்.

“உன்னோட கஷ்டம் தான் வித்யு…” என சின்ன சிரிப்போடு சொன்னாள் சிந்து.

” அது எனக்கு வரப்போறவனோட பாடு…” என்று பதிலளித்த வித்யு, “என்னாச்சி மேடம் ரொம்ப சோகமா இருக்கீங்க…” என்று வினவினாள்.

சிந்து, “அப்பா பேசினார்… வீட்டுக்கு கூப்பிட்டார்…”

” என்னா …” என்றாள் தோழி அதிர்ந்து,

“நாளைக்கு வீட்டுக்கு போறேன்…” சிந்து 

” என்னடி சொல்லுற… எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சிராத…” என்ற வித்யு, ” உங்க அப்பா எதுக்கு வர சொன்னாரு… அதுவும் இவ்வளோ நாள் இல்லாம இப்போ?…” என நண்பியிடம் கேக்க,

” நான் எதுவும் கேக்கலையே…” சிந்து.

வித்யு, ” என்னடி இப்படி சொல்லுற…”

“ம்…” என்றிழுத்து, ” இதெல்லாம் என்னவோ கனவு போல இருக்கு வித்யு…” என்றாள் பாவை.

” எதே கனவா?…” என்று அந்தப்பக்கம் வித்யு அதிர்ந்து கேக்க,

” ம்… அப்படி தான் இருக்கு… என்னமோ இப்போதான் நான் அவங்க பொண்ணுன்னு கண்ணுக்கு தெரியுது போல… கால் பண்ணி பாசமா பேசுறாங்க… உடனே வீட்டுக்கு வா ன்னு அன்பு கட்டளை எல்லாம் வருது, என்னோட அப்பா கிட்டயிருந்து… அப்போ நான் என்னனு நினைக்குறது. நீயே சொல்லு…” என சிந்தனையுடன் சிந்து கேட்க,

“எந்த போதிமரத்துக்கு கீழ உக்காந்து இந்த ஞானோதயம் வந்துச்சின்னு… உங்க அப்பா திடீர்ன்னு எதுக்கு உன்னைய வா வான்னு வீட்டுக்கு அழைக்குறாரு தெரியலையே…” என்று சொல்லி,  “நீ எதுக்கும் எல்லாத்தையும் காவல்துறைக்கு சொல்லி வச்சிக்கோ… உங்க வீட்டுல உன்னைய என்ன பண்ணறதுக்காக காத்திருக்காங்கன்னே அம்புடமாட்டுது… நானும் என் பெரிய மூளையை வச்சி யோசிச்சி பாத்தாலும் ஒன்னும் தோனமாட்டுது…” என்றாள் விளாவரியாக வித்யு.

“பச்… விடு வித்யு பாத்துக்கலாம்…”

வித்யு, ” என்னடி இப்படி அசால்ட்டா சொல்லுற… எனக்கு தான் பக்குனு இருக்கு…”

சிந்து, ” என்ன பண்ணுவாங்க அப்படினு பாக்குறேன் நானும்… எப்படியும் என் விருப்பம் வீட்ல சீக்கரம் சொல்லணும்னு அவங்க வீட்டுக்கு அன்னைக்கு போய்ட்டு  வந்ததுல இருந்து யோசிச்சிட்டே இருந்தேன்…  அதுக்கு இதுவொரு வாய்ப்பு கடவுளே குடுத்துட்டாரு…” என முடித்தாள் சிந்து.

“ஓ… நீ அப்படி சொல்லுறியா?…” என இழுத்து, “நானும் உனக்கு துணையை வரலாம்னு பாத்தா, இந்த படுபாவி பிரசன்னா கிட்ட போயி லீவு கேக்க கடுப்பா இருக்கு… வாயால லீவு வேணாம்ன்னு சொல்ல வச்சிட்டு தான் விடுவான்… அவ்வளோ சீன் அவன்… உன்னைய தனியா அனுப்பவும் பயமா இருக்கே…” என சொன்னாள் வித்யு கவலையாக.

சிந்து, “விடு வித்யு… நீ லீவெல்லாம் ஒன்னும் போடா வேணாம்… ஸ்கூல் மேனேஜ்மென்ட் பத்தி உனக்கு தெரியாதா?… உனக்கு என்னவோ முதல்ல இருந்தே பிரசன்னா சாரை குறை சொல்லிட்டே இருக்கனும்… உனக்கு அப்படி என்னத்த பண்ணுனாரு தான் தெரியல போ…”

“அவன் சீன் பார்ட்டி… வேணும்னே என்கிட்ட வம்பு வளக்குற போல தான் பேசுவான்… ஒரு நாள் அவன் என்கிட்ட வசமா சிக்கட்டும்… அப்பறம் இருக்கு அவனுக்கு…” என கருவினாள் வித்யு.

சிந்து, “அச்சோ… போதும் வித்யு… பாவம் அவரை விடு…”

வித்யு, “நான் என்னமோ அவன் கையை பிடிச்சு இழுத்த மாறி சொல்றடி நீ…”

“நீ பண்ணக்கூடிய ஆளு தான்…” என சொல்லி சிரித்தாள் சிந்து.

“போடி இவ ஒருத்தி… அவன் என் சுருட்டமூடியை பாத்து, உங்க தலையை எத்தன குருவிக்கு வாடகை விட்ருக்கீங்கன்னு கேட்டு நக்கல் பண்ணுறான் அவன்…” என பல்லைக்கடித்து கொண்டு வித்யு சொல்ல,

“ஹா ஹா ஹா…” என சத்தமாக சிரித்தாள் சிந்து.

“நீ சிரிக்குற?…” என கோவமாக வித்யு கேக்க,

சிந்து, “சரி சரி… நோ டென்ஷன்… நான் சிரிக்கல… விடு…”

“சரி… என்னை விடு நீ…” என சொல்லி, “ஆனா ஒன்னுடி… உங்க வீட்டுல எதோ பெரிய சம்பவம் நடந்திருக்குமோ…” என தன் யூகத்தை வித்யு கேக்க,

சிந்து, “அப்படியும் இருக்கலாம் வித்யு… இல்லனா திடிர்னு  போன் பண்ணி, எதுக்கு அப்படி பேசணும்… ஒரு அப்பாவா கையாலாகாதவனாய் இருக்கேன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் வந்துருச்சி…உன்னைய கண்டுக்காம என் போக்குல இருந்துட்டேன் தாயி… அது தப்புன்னு இப்போ புரிஞ்சிட்டு… நீ வீட்டுக்கு வான்னு சொல்லி கூப்பிடுறாங்க…” என தந்தை சொல்லியதை தோழியிடம் பகிர்ந்தாள்.

வித்யு, “அப்போ விஷயம் ரொம்ப பெருசோ?…”

சிந்து, “என்னவேனும்னாலும் இருக்கட்டும்… பாத்துக்கலாம்…”

“ஓகேடி… எப்படியும் உனக்கு காவல்துறை கூடவே இருக்கு… அவரு பாத்துப்பாரு… டோன்ட் ஒர்ரி…” என்ற வித்யு, “சரி… நான் நாளைக்கு பேசுறேன்…” என சொல்லி போனை வைத்தாள்.

——-

தோழியிடம் பேசிவிட்டு மணியை பார்க்க, அது இரவு பத்தை கடந்து  நிமிடங்கள் ஆகியிருந்தது.

தன் போனில் விஷ்ணுவிடமிருந்து ஏதும் மெசேஜ் வந்திருக்கிறதா என அவள் பார்க்க, அவள் அனுப்பிய மெசஜை பார்த்ததற்கான குறியீடு இல்லாமல் இருக்க, அதை பார்த்திட்டு அழைக்கலாமா?, வேணாமா? என இரண்டு நிமிடம் யோசிக்க, கைகள் தானாக அவனிற்கு அழைப்பு விடுத்தது.

அங்கு விஷ்ணுவோ, ஆள் நடமாட்டமில்லாத சாலையின் ஒரு ஓரத்தில் அவனின் வாகனத்தின் பென்னேட்டில் சாய்ந்து நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் குமார் அவனின் முகத்தையே அவ்வப்போது பார்க்க,

“என்ன குமாரண்ணா… என் முகத்துல எத்தனை மச்சம் இருக்குன்னு சொல்லுங்க பாக்கும்?…” என கண்சிமிட்டி கேட்டான் காவல் அதிகாரி.

“ஆஹ்… தம்பி…” என முழி பிதுக்கி பார்க்க,

“இன்னும் கிட்டவந்து வேணும்னா பாருங்களேன்… கண்ணு தெரியலைனா?…” என்று வேறு சொல்ல,

அவசரமாக, “இல்ல… இல்லிங்க தம்பி…” என்றார்.

விஷ்ணு, “என்ன முடியாத அளவுக்கா மச்சம் இருக்கு…” என அடுத்தும் கேக்க,

அப்போது அவனின் போன் அடிக்க, “தம்பி உங்க போன் அடிக்குது…” என சொல்லி தப்பிக்க,

“அது அடிச்சிட்டு போகட்டும்… நாம எவ்வளோ முக்கியமான விஷயத்தை பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்…” என விடாமல் விஷ்ணு சொல்ல,

“தம்பி…” என பாவமாக பார்த்தார் அவனை.

அதற்குள் போன் அடித்து நின்றிருக்க, கால் செய்த சிந்துவோ ரொம்ப பிஸி போல என்று நினைத்து, அவனிற்கு “டூ கால், வென் யு ஆர் ப்ரீ…” என மெசேஜ் தட்டிவிட்டு தூங்க சென்றாள்.

“இது என்ன நவரசங்கள்ல, பாவம் ஆஹ்?… ஓகே… அடுத்து அழுகை ஆஹ்?…” என விடாமல் விஷ்ணு அவரை பந்தாட,

அவனிடம் பந்தை போல சிக்கிய குமாரோ, “விட்ருங்க தம்பி…” என்று பரிதாபமாக சொல்லி, “ஏதும் முக்கியமான போன் ஆஹ் இருக்க போகுது தம்பி…” என மாற்றி சொல்ல,

“முக்கியமா இருந்தா தான் போன் பேசணுமா குமாரண்ணா?…” என விடாமல் இன்னும் இடக்காக கேட்க,

“இந்த ராத்திரில எதுக்கு நிக்குறனே தெரியாம நின்னுகிட்டு இருக்கேன்… இதுல இப்படியெல்லாம் கேட்டா, நான் என்னத்த சொல்ல?… இந்த மனுஷனை…” என மனதினுள் நினைத்துக்கொண்டே அவனை “என்னை விட்றேன்…” என்பது போல் பார்த்தார் பாவப்பட்ட குமார்.

அதற்குள் வேறொரு வாகனம் வரும் சத்தம் வர, விஷ்ணுவின் கவனம் அங்கு செல்ல,

” அப்பாடா தப்பிச்சோம்…” என சத்தமாக சொல்லிவிட்டு அவரசமாக விஷ்ணுவை பார்க்க, 

அவனின் கவனம் அவரிடத்தில் இல்லை என்பதே பெருத்த நிம்மதியாய் இருந்தது குமார் அண்ணனுக்கு.

………

தன்னுடைய வேலையை கச்சிதமாக முடித்துவிட்டு விஷ்ணு வீடு திரும்ப நள்ளிரவு ஒரு மணியை கடந்திருந்தது.

தன்னை ரெப்பிரேஷ் செய்து விட்டு, மெத்தையில் படுத்தவாறே, போனில் தனக்கு வந்திருந்த மெசஜை அனைத்தையும் பார்வையிட்டவன், இறுதியில் அவனின் சுண்டக்கா அனுப்பிய மெசஜை பார்த்திட்டு, வாய்க்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டே அவளிற்கு அழைத்தான், அவளின் காவலன்.

மறுமுனையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தா சிந்துவோ, அழைப்பை எடுக்காமல் விட, விடாது திரும்ப அழைத்தான் விஷ்ணு.

இம்முறை அழைப்பு நிற்கும் தருவாயில், தூக்க கலக்கத்தில் அட்டென்ட் செய்த சிந்து, “ஹலோ…” என்க,

“என்னங்க சுண்டக்கா மேடம், பிரீ ஆஹ் இருக்குறப்போ கால் பண்ண சொல்லிட்டு… நான் கால் பண்ணும் போது இப்படி சுருண்டு சொகுசா தூங்கிட்டு இருக்கீங்க…அப்பறம் நான் எதுக்கு கால் பண்ண சொன்னிங்க சொரக்கா…” என அவள் அட்டென்ட் செய்ததும் அடாவடியாக பேச்சை துவங்கினான் விஷ்ணு.

“ம்… தூங்கிட்டேன்…” என சிந்து இன்னும் கண்ணை மூடி தூக்கத்திலேயே பேச,

“மறுநாள் விடிஞ்சே போச்சு… ஆனாலும் கத்திரிக்காக்கு இன்னும் கண்ணு முழிக்கணும்னு தோணலையோ…” என சீரியஸ் ஆக கேட்டான் கள்வன்.

அவனின் பேச்சை காதில் வாங்கிய சிந்துவின் தூக்கம் சடுதியில் பறந்து, கண்ணை நன்றாக தேய்த்து எழுந்து, ” என்ன விடிஞ்சிட்டா…” என அதிர்ந்து கேட்டாள்.

விஷ்ணு, “அப்பறம் இப்போ நான் என்ன சொன்னேனாம் சுண்டக்கா கிட்ட…” என சாவகாசமாக கேட்டான்.

அவனின் பேச்சை காதில் வாங்கியவாறே, கண்ணை சுழலவிட்டு அறையின் ஜன்னலை பார்த்தவாறே, காதிலிருந்து போனை எடுத்து மணியை பார்த்தாள்.

அவளின் செயலை யூகித்த காவலன், ” விளாங்காய்க்கு விளங்கிட்டு போலயே…” என சிரிப்பை அடக்கி கேட்டான்.

“அர்த்தராத்திரிலில எழுப்பி, இவரு சேட்டையை பாரு…” என கோவமாக முணுமுணுத்தவாறே, ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள்.

“கால் பண்ண சொல்லிட்டு இப்படி பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்… இந்த அர்த்தராத்திரியில ஏதாவது அர்த்தமா குடுக்க தான் இப்படி அமைதியோ…” என சீண்டினான் விஷ்ணு.

சிந்து, “ஹான்… என்ன?… என்ன?…”

நமுட்டு சிரிப்புடன், “அது தான் உனக்கு புரிஞ்சிட்டே கிஸ்மிஸ்… அப்பறமும் நீ என் வாயால கேக்கணும்ன்னு ஆசைப்படுறியோ?…” என்று விடாமல் பேச,

“என்ன… இப்படியெல்லாம் பேசுறீங்க?…” என கொஞ்சம் திணறலாய் சிந்து கேக்க,

“என்னத்த பேசுறாங்க?…” என இடைவெட்டியவன், 

“லவ் பன்றேன்னு தான் சொன்ன… இதுவரைக்கும் ஒரு லவ் யு சொல்லிருக்கியா?… அப்பறம் ஏதாவது இதுவரைக்கும் முத்தம்…கித்தம் குடுத்துருக்கியா?… அதும் இல்ல. அட்லீஸ்ட் அப்படி… இப்படி பேசிருக்கியா?… அதும் இல்ல. அப்பறம் அட்லீஸ்ட்  இறுக்கி கட்டிபிடிச்சிருக்கியா ?… அதும்  இல்ல. ஆஹ் அப்பறம் ஏதாவது அட்லீஸ்ட்…” என சொல்லிக்கொண்டே போக,

“ஏங்க… போதும்…போதும்…” என சத்தமாக போனில் அலறினாள் சிந்து.

விஷ்ணு, “நான் என்னவோ சொல்லக்கூடாதத சொல்லிட மாறி, இப்படி அலறுற அவரக்கா?…”

“தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி விட்டு, என்னலாம் பேசுறீங்க நீங்க… உங்களை நான் என்னதான் பண்ணுறது?… ” என சலுகையாய் அவள் குறைபட்டு சொல்ல,

“பாருடி பரங்கிக்கா… இப்போ அதுதான் சொல்லிட்டு இருந்தேன்… நீ தான் போதும் சொல்லி, இப்போ என்னையவே திரும்பி கேக்குற…” என அவன் அசால்ட்டாக பேச்சை தொடர,

“அவ்வா… அவ்வா…” என சொல்லி அவளின் வாயிலேயே அடித்துக்கொண்டு, “இவரை பத்தி தெரிஞ்சும் கேட்டேன்ல…” என தன்னையே நொந்துகொண்டு அவள் முணுமுணுக்க,

“அதுதான் உன் மாமியார் கூட சேர்ந்து, நல்லா வாய் அடிக்குறியே… அப்பறம் என்ன அவங்க பையன்கிட்ட மட்டும், என்னவோ பேசத் தெரியாத மாறி அங்க என்ன முணுமுணுப்பு…” என்றான் நல்லவனாய் விஷ்ணு.

சிந்து, “ஏங்க… ப்ளீஸ்…” என அவனின் பேச்சிற்கு ஈடுகட்டமுடியாமல் பின்வாங்க,

“வருங்கால பொண்டாட்டி கால் பண்ண சொல்லிருக்காளேன்னு, என் வேலையை ஒதுக்கி வச்சிட்டு… அப்பறம் முக்கியமா என் தூக்கத்தையும் ஒதுக்கி வச்சிட்டு, ஒரு நல்ல பிள்ளையா உனக்கு கால் பண்ணுனா… நீ பாரு, என்னையவே சொல்லுற…” என அப்பாவியாய் விஷ்ணு கேக்க,

“ஏங்…க…” என அவனின் அலுச்சாட்டியதில், பதில் பேச கூட முடியாமல் அவள் இழுக்க,

“என்னமோ போ… இது தான் நல்லதுக்கே காலமில்லன்னு சொல்லுறாங்க போல… இருந்தாலும் எங்க அம்மா, என்னைய இப்படி ஒரு நல்ல பிள்ளையா வளத்துட்டாங்க… நான் என்னதான் பண்ணுறது?… நீ எனக்கு ஒரு பதில்  சொல்லு…” என சோக கீதம் வாசித்தான்.

அவனின் பேச்சை கேட்டவள், “இங்க பாருங்க… சத்தியமா என்னால முடியல… ப்ளீஸ்…” என அழாத குறையாய் சொன்னாள் மங்கையவள்.

“அதுக்கு நான் இங்க இருந்து என்ன பண்ணமுடியும் சொல்லு… வேணும்னா உன் ஹாஸ்டல் வரவா?… என்ன, எங்க?, முடியலைன்னு பாக்குறதுக்கு…” என பதிவிசாய் கேட்டான் கள்வன்.

“உங்களை…” என அதற்கு மேல் பேச முடியாமல், “போங்க நீங்க… இதுக்கு மேல நீங்க ஏதாவது பேசுனீங்க…” என சிணுங்களாக சொன்னாள் சிந்து.

” என்ன பண்ணுவாங்களாம் என் கொழுந்து கொத்தமல்லி…” என்றான் ஆசை கள்வன் .

“போங்க… நான் போனை வைக்கிறேன்…” என்று விரும்பியே போனை அணைத்தாள் அவனின் அவரக்கா.

——–

மறுநாள் கதிரவன் யாருக்கும் காத்திராமல் அவனின் ஒளியை எங்கும் பரவ செய்ய, சிந்துவோ வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தாள்.

 விருப்பத்தை சொன்னால் கண்டிப்பா பேச்சு வரும் என்று நூறு சதவீதம் நன்கு அறிவாள். இருந்தும் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்றொரு நம்பிக்கை. அது அவளின் மீதா?, இல்லை அவளவனின் மீதான நம்பிக்கையா என்று அவளே அறிவாள். அங்கு அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்… என்னவோ?…

………….

இங்கு சிந்துவின் வீட்டிலோ, 

” பொண்ணு இன்னைக்கு வீட்டுக்கு வரா… அவகிட்ட ஒழுங்கா நடக்கணும்… ஏதாவது அவ மனசு நோக்குற போல பேசுனேன்னு தெரிஞ்சது… அப்பறம் அன்னைக்கு மாறி அரையோடவெல்லாம் விடமாட்டேன்… மொத்தமா முடிச்சி விட்ருவேன்… நல்லா ஞாபகத்துல பதிய வச்சிக்கோ…” என தன் மனைவியிடம் எச்சரித்து சென்றார் சிந்துவின் தந்தை முருகேசன். 

செல்லும் அவரையே பார்த்திருந்த மனைவின் கைகள் அனிச்சையாய் அவரின் கன்னத்தை பற்றியது. செல்லும் முருகேசனின் மனதிலோ அன்றைக்கு நடந்த நிகழ்வு கண் முன்னே வலம் வந்தது.

என்ன நடந்தது ?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!