Skip to content
Post Views: 1,749
“இப்போ சொல்லு என் பொண்ணு, பொண்ணுன்னு இரண்டு மாசமா எங்கடி போனா, ஒரு போன் பண்ணி என் பேத்திக்கூட பேசி இருக்ககூடாதா,, நீதானே அவள நல்ல பாத்திருந்திருக்கனும்,, அவள அப்போ விட்டுட்டு இப்போ வந்து யாழினி, யாழினியின் அழற”
…
“அத்தை என் பொண்ணு யாழுக்கு என்னாச்சுயின்னு சொல்லுங்க.. அவ அங்கே இருக்க என்னா ஆச்சு சொல்லுங்க?”..
Advertisement
“அவ வீட்ட விட்டு போயி ஒரு மாசம் ஆச்சு,,”.
Advertisement
“எங்கே போனா?”..
Advertisement
“சஞ்சனா அவளை கூட்டிட்டு போயிட்டா”..
Advertisement
“அவ எப்படி என் பொண்ணை
கூட்டிட்டு போகலாம்? அவ யாரு என் பொண்ணை கூட்டிட்டு போவதற்க்கு, யாழ் என்னபொண்ணு… இந்த சஞ்சனா யாரு?” என்று கத்தி பேச..
“நம்மால இனி ஒன்னும் பண்ண முடியாது வைஷு, கோர்டுல தீர்ப்பே சொல்லிட்டாங்க இனி பேசி என்ன ஆக போகுது”.. என்று இந்திரா தேவி புலம்ப..
“என்ன அத்த சொல்லுறீங்க எனக்கு ஒன்னும் புரியலயே?”..
“எல்லாரும் சேர்ந்து என் பேத்தியை என் கிட்ட இருந்து பிரிச்சிட்டீங்களே” என்று இந்திரா தேவி மீண்டும் கண்கலங்கி அழ..
நாகில்லி மனைவியின் அழு குரல் கேட்டு வெளியே வந்தவர் “இந்திரா” என்று அதட்ட, சத்தம் வராமல் அழுதார் அவர்…
“வைஷுகிட்ட எதுவும் சொல்ல கூடாதுன்னு வீ. பி சொல்லி இருக்கான், நீ ஏன் இதயெல்லாம் அவகிட்ட சொல்லுற, பாரு வைஷு கலங்கி போயி இருக்குறா? மாசமா இருக்குற பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்துக்குவீயா?”… என்று அவர் மனைவியை சத்தம் போட்டவர்.
மருமகளை பார்த்து.”நீ போம்மா வருத்தப்படாத வீ. பி வந்து சொல்லுவான்”…
“என்ன நடந்துச்சு மாமா, நீங்களாவது என்கிட்ட சொல்லுங்க மாமா..”..
நாகில்லி மருமகளிடம் சொல்ல ஆரம்பித்தார்..
“வீ,பிக்கும், உனக்கும் சண்டை, உன் கிட்ட சண்டை போட்டு உன்னை உன் தாத்தா வீட்டுல விட்டுட்டான் அவன்..
நீயும் இங்கே இல்ல, வீ. பியும் ஆபிஸ்லே இருந்து கிட்டான்,, இந்திரா தேவி சௌசன்யாவை, குழந்தையும் பார்த்து கிட்டு யாழினியை சரியா பார்க்கல.. போல.. நானும் கூட என் பேத்தியை பக்கத்தில் இருந்தும் கூட அவளை கவனிக்கல..
யாழினி நீ இல்லாம தனியா ரொம்ப கஷ்டபட்டு இருக்க. அதை யாருகிட்டையும் சொல்லல்ல..
அத சரியான நேரத்துல பயன் படுத்தி சஞ்சனா உள்ளே புகுந்திட்டா”.. என்றவர்..
“நீ யாழினி டான்ஸ் ஆடும் போது அடிச்சீயா?”..
“ஆமாம்” என்று தலையாட்ட..
“நீ அடிச்சத அவளால தாங்க முடியல போல அத மனசுலே வச்சு இருந்திருக்கா..
சஞ்சனா சரியான நேரத்துல உள்ளே புகுந்துட்டா, யாழினிகிட்ட உனக்கு குழந்தை பிறக்க போகுது, அதுவும் இரட்டை குழந்தை உன் நானா உன்னை இனி பாத்துக்க மாட்டாரு, அந்த குழைந்தையை தான் தூக்கி வச்சுக்குவாரு, பாரு, அப்படியின்னு கொஞ்சம், கொஞ்சம் நம்மல பத்தி தப்பா சொல்லி, அவ யாழினியை நல்லா பாத்துப்பேன், எனக்கு யாரும் இல்ல, நீ என் கூட வா, நான் உன்னை நல்லா பாசமா பாத்துப்பேன்னு சொல்லி.. யாழினி கோர்ட்ல சஞ்சனா கூட தான் போவேன், இவங்க யாரும் என்னை சரியா பாத்துக்கல,, சஞ்சனா ஆண்ட்டி தான் என்னை நல்லா பாத்துக்குறாங்க, நான் அவங்க கூட போறேன்னு, சொல்லிட்டு சஞ்சனா கூட போயிட்டா..
கோர்ட்ல வீ. பி யை நீங்க ஏன் உங்க பொண்ணை சரியா கவனிக்கல, உங்க வைப்.. உங்க கூட இல்ல, நீங்களும் உங்க வேலையை பார்த்து கிட்ட, சின்ன பொண்ணை சரியா கவனிக்கல….
குழந்தை யாரு கூட இருக்க ஆசை படுதோ அவங்க கூடவே இருக்கலாம், நீங்க கோர்ட் அனுமதியோட உங்க பொண்ணை பார்க்கலாம்,, என்று கோர்டில் ஜட்ஜ் தீர்ப்பு சொல்லி விட்டார்..
வீ. பி ரொம்ப உடஞ்சு போயிட்டான்,, நான் என் பொண்ணை சரியா பாத்துக்கலன்னு சொல்லி அழுதான்..
கோர்டுல அவன் யாழினிகிட்ட பேசுனான், ஆனா யாழினி யாருகிட்டையும் பேசல””…
“நீங்க எப்படி அவளை சஞ்சனா வோட விட்டீங்க, மாமா அவ நம்ம வீட்டு பிள்ளை, என் பொண்ணு”..
“இல்ல வைஷு, எல்லாம் முடிஞ்சது கோர்டுல தீர்ப்பே சொல்லிட்டாங்க, விடுமா அவளே வருவா நம்மள தேடி , ஒரு நாளைக்கு வருவா”. என்றதும்.
“கோர்ட் ல எப்படி யாழினியை அவ கிட்ட விட சம்மதிச்சாங்க, யாழ் என் பொண்ணு”..
“வைஷு யாழினி பிறந்த சர்டிபிகேட்டுல அவளோட அப்பா என்ற இடத்துல ராம் பேரு இருக்கு.. அப்போ சஞ்சனா யாழினிக்கு அத்தை முறை தானே,, இரத்த உறவு சௌசன்யா வேற கல்யாணம் பண்ணிகிட்ட, அதனால, அவளும் இதில் ஒன்னும் பேசமுடியாது,, வீ. பிக்கு உனக்கும் குழந்தை பிறக்க போகுது, சோ, யாழினிக்கு எங்க இருக்க விருப்பமோ, அங்கே இருக்கலாமுன்னு கோர்ட்டுல சொல்லிட்டாங்க”…
“யாழினி என் பொண்ணு மாமா,, அவ என் கூடதான் இருப்பா,, கோர்ட்ல சொன்ன தீர்ப்பு, இத எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது, யாழினி எனக்கு வேணும், என் பொண்ணு யாழினி. அவ இல்லாம எனக்கு இங்க என்ன இருக்கு, நான் யாழினி பார்த்து பேசி கூட்டிட்டு வர்ரேன்” என்று கிளம்ப..
நாகில்லி மருமகளிடம் “நீ போனாலும் அவ வர மாட்டா மா”… என்று எடுத்து சொல்லியும்,, “என் பொண்ணு யாழ் நான் கூப்பிட்ட கண்டிப்பா வரவா” என்றவள்.. காரில் தனியே கிளம்பி விட்டாள்..
அவளுக்கு ஏற்கனவே சஞ்சனா இருக்கும் வீடு தெரியும் என்பதால் சரியாக அவள் வீட்டுக்கு முன் காரை நிறுத்தி கேட்டை தட்ட..
செக்குருட்டி வந்து “யாரை பார்க்கனும்” என்று கேட்க..
“என் பொண்ணு யாழினி உள்ள இருக்கா அவளை பார்க்கனும்” என்று சொல்ல..
செக்குருட்டி சஞ்சனாவிடம் போன் போட்டு சொல்ல..
“அவளை உள்ள விடாத, யாழினியை பாக்க முடியாதுன்னு அவ கிட்ட சொல்லு, அப்படி யாழினியை பாக்கனுமுன்னா கோர்ட்ல ஆர்டர் வாங்கிட்டு வர சொல்லு” என்று சஞ்சனா சொல்லியதை அப்படி அந்த செக்குருட்டி சொல்ல.
“யார் பிள்ளையை, யார் கோர்டுல ஆர்டர் வாங்கி பாக்குறது, யாழினி என் பொண்ணு,” என்று கோபப்பட்டவள்.
கேட்டை வேகமாக தட்டி “சஞ்சனா, ஏய் சஞ்சனா கேட்டை திர, நான் யாழினியை பார்க்கனும்” என்று கத்த. செக்குருட்டி “மா இங்கே வந்து கத்த கூடாது போங்க” என்று மிரட்ட.
“என் பொண்ணு யாழினி இல்லாம நான் போக மாட்டேன்,, யாழி, யாழி அம்மா டா, அம்மாட்ட வாடா, யாழ், யாழ் குட்டி “என்று கேட்டின் முன் நின்று சத்தம் போட..
அவளின் பின்னால் வீ. பியின் கார் வந்து நின்றது..
காரை வேகமாக திறந்து கொண்டு கோபமாக வந்தவன்..
“இங்கே என்ன பண்ணுற வைஷு, காருல ஏறு” என்றான்…
“முடியாது யாழ் இல்லாம நான் வரமாட்டேன், யாழ், யாழ்குட்டி” என்று அந்த வீட்டை பார்த்துக்கொண்டே கத்த..
“வைஷு வா ரோடுல நின்னுகிட்டு கத்தாத வீட்டு போயி பேசிக்கலாம், வா” என்று அவளின் கை பிடித்து அழைக்க..
அவன் கையை தட்டி விட்டவள்.
“நான் யாழினி வராமல் வர மாட்டேன்” என்று மறுபடியும் “யாழ் வா யாழ்” என்று கத்திக்கொண்டு இருக்க..
“ஏன்டி , என் பேச்சை கேட்கவே மாட்டியா, வா பங்காரம், நம்ம வீட்டுக்கு போலாம் யாழினி கண்டிப்பா நம்ம கிட்ட வருவா, நீ வா”..
“இல்ல பாவா நான் யாழினி வாரமா, நான் வர மாட்டேன்” என்றவள் அந்த பெரிய கேட்டின் முன் அமர்ந்து விட..
வீ. பியின் கார் பக்கத்தில் ஒரு போலிஸ் சீப் வந்து நிற்க..
அதிலிருந்து வந்த ஒரு போலிஸ் காரர் வீ. பிக்கு வணக்கம் வைத்து.. “ஏன் சார் இங்கே வந்தீங்க, போன்மேல போன் வருது, மேம் வந்து யாழினியை கேட்டு பிரச்சனை பண்ணுறத,, அது உங்களுக்கு தான் கஷ்டம். மேடமை கூட்டிட்டு போங்க சார்” என்று தன்மையாக அந்த போலிஸ் காரர் சொல்ல..
“வைஷு” என்றான் அதட்டலாக..
அவளோ “யாழினி இல்லாமா நான் வர மாட்டேன்” என்று கேட்டின் பக்கத்திலேயே அமர்ந்து விட..
“சார் கிளம்புங்க” என்று போலிஸ் காரர் எச்சரிக்கை செய்வது போல் சொல்ல..
இவளை என்ன தான் பண்ணுறது, என்றவன் அவள் அருகில் சென்றவன்..
“இப்போ நீ காருல வந்து ஏறுலன்னா, நான் காரை ஸ்டாட் பண்ணி என் எதிரே வர்ர வண்டி மேல காரை விட்டுடுவேன், , நீ வர்ரீயா, இல்ல இப்படி உட்கார போறீயா” என்று அவளை மிரட்ட..
“ஏன் பாவா, இப்படி பண்ணுறீங்க, யாழினி பாவா, அவளை விட்டு நான் எப்படி வருவேன்,, அவளை பாக்கனும் பாவா” என்றவள் சொல்லிக்கொண்டே எழுந்து நிற்க..
அவள் எழுந்து கொள்ள கைகொடுத்து உதவி பண்ணியவன் அப்போது மனைவியை நன்றாக பார்த்தான்.. இரண்டு மாதத்தில் எடை கூடி, கண்ணுக்கு கீழ் புதிதாக ஒரு கருவளையம் போல தெரிய, அது அவள் சரியாக தூங்கவில்லை என்று தெரிய,, அவனின் இரட்டை பிள்ளைகள் நாங்க அம்மா வயிற்றில் இருக்கிறோம் என்று மேடிட்டு அவனுக்கு காட்ட,, மனைவியை பார்த்து ரசிக்க முடியாது தன் சூழ்நிலை எண்ணி வருத்தப்பட்டவன் அவளை அப்படியே பார்த்து நிற்க..
அங்கே நின்று இருந்த போலிஸ் காரரிடம் “என் பொண்ணு சார், உள்ளே இருக்க, பிலிஸ் அவளை என் கிட்ட குடுத்துட சொல்லுங்க சார்,, இனிமே அவளை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன், சார்” என்று போலிஸ் காரரிடம் புலம்பி கெஞ்சி பேசிய மனைவியை பாவமாக பார்த்தவன்..
“வா வைஷு” என்று தோள்லணைத்து காரில் ஏறினான்.. வைஷு வீட்டுக்கு வரும் வரை யாழினி, யாழினி என்று புலம்பிய படியே வர..
காரை அவர்கள் வீட்டுக்கு முன் நிறுத்தியவன்..
அவளை காரில் இருந்து “இறங்கு” என்று சொல்ல..
வைஷு வீடு வந்தது தெரியாமல் ஏதோ புலம்ப..
“வா” என்று அவளை கைபிடித்து வீட்டின் உள்ளே அழைத்து வர..
சௌசன்யா இந்திரா தேவிக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு இருக்க..
வைஷு சௌசன்யாவை பார்த்ததும் “அண்ணி” என்று சௌசன்யாவை கட்டி அணைத்துக் கொண்டு “என் பொண்ணு யாழினி, யாழினி எங்கே அண்ணி அவ எனக்கு வேணும்” என்று ஏங்கி, ஏங்கி அழ.
அவள் அழுவதை தாங்க முடியாத வீ. பி .
“வைஷு அழதா, குழந்தைய வையித்துல, வச்சுகிட்டு, இப்படி அழுதா என்ன அர்த்தம் அமைதியா இரு,, யாழினி கூடிய சீக்கிரம் வருவா” என்று அவளை அதட்ட..
“எல்லாம் உங்களால தான்” என்று வீ. பியின் சட்டையை பிடித்தவள்..
அவனை உலுக்கி, “நீங்க எல்லாரும் நல்லா பாத்துப்பீங்கன்னு தானே, என் பொண்ணை விட்டேன்,, இல்லன்னா நானே அவள என்கூடாவே வச்சி இருந்திருப்பேனே,, உங்களை நம்பி தானே விட்டேன் இப்படி என் பொண்ணை தொலச்சிட்டு நிக்கிறீங்களே, எனக்கு என் யாழ் வேண்டும்” என்று அவனின் மார்பில் தன் கைகொண்டு அடித்தவள் மயங்கி சரிந்தாள்…
error: Content is protected !!