Skip to content
Post Views: 1,811
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 21
Advertisement
வைஷு வாழ்க்கையே வெறுத்து வாழ்வது போல் இருந்தாள்.. எதிலும் ஒரு பிடிப்பு இல்லாமல், வயிற்றில் உள்ள பிள்ளைகளுக்காக உண்டு கொண்டு இருந்தாள்..
Advertisement
Advertisement
வீ. பி அவளை விட்டு சென்றதை அவளால் தாங்க முடியவில்லை..
அவள் குழந்தை உண்டாகி இருப்பதை தெரிந்து அனைவரும் அவளை பார்த்துவிட்டு செல்ல.. அவளின் அக்கா சௌமியா, தன் மகள் கம்யாஸ்ரீயோடு வந்து ஒரு வாரம் ஸ்ரீரங்க பட்டிணத்தில் தங்கி விட்டு சென்றாள்.
Advertisement
வைஷுவுக்கு வீ. பியை விட்டு இருக்க முடியவில்லை கணவன் எப்போ வருவான், அவனை பார்க்கனும், என்று அவனுக்காக காத்து இருந்தாள்.. ரோட்டில் புதிதாக கார் சத்தம் கேட்டால் போதும்.,, ஓடி வந்து வீ. பியின் காரா என்று வெளியே வந்து பார்த்துவிட்டு செல்வாள்.. கிருஷ்ணப்பாவுக்கு பேத்தி பார்த்து மிகவும் வருத்தப்பட்டு.
மகளுக்கு போனில் அழைத்து வைஷுவை ஹைதெராபாத் அழைத்து செல்ல கூற..
இந்திராதேவி சொன்னா விசயத்தால் கிருஷ்ணப்பா அமைதியாகி விட.
நாட்கள் மாதமாக ஆகின.
வைஷுவுக்கு ஐந்தாவது மாதம் தொடங்க, இரட்டை பிள்ளைகள் என்பதால், அவளுக்கு வயிறு நன்றாக வெளியே தெரிய..
தாத்தாவும், பாட்டியும் அவளுக்கு பார்த்து. பார்த்து தன் பேத்தி , என்பேத்தி என்று அவளை நன்றாக பார்த்து கொள்ள.
அவள் கேட்டதை செய்து கொடுத்து அவளை உண்ண வைத்து விட்டு,, டெய்லியும் வைஷுவை தோட்டத்துக்கு அழைத்து சென்று அவளை தனியே விடாமல் நன்றாக பார்த்துக்கொள்ள.
இந்திரா தேவி மருமகளை பார்க்க வந்திருந்தார். வைஷுவுக்கு ஐந்தாவது மாதம் மாமியார் மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு சடங்கு இருக்க. அதை செய்ய வந்திருந்தார்,, வைஷு தன் தாய், தந்தை வீட்டில் இருப்பதை பார்த்து அவருக்கு சந்தோஷம்..
இந்திராதேவி மருமகளுக்கு, பழங்கள், இனிப்பு, மருந்து கண்ணாடி வளையல் என்று அனைத்தையும் வாங்கி வந்து மருமகளுக்கு கொடுத்து விட்டு. இரண்டு நாள் தங்கி விட்டு கிளம்ப..
இந்திரா தேவி தன்னை அழைத்து செல்ல மாட்டாறா என்று வைஷு அவரின் முகத்தையே பார்த்திருக்க..
இந்திரா தேவி மருமகளின் முகத்தை பார்த்தே அவள் தன்னோடு வர நினைக்கிறாள்,, என்று புரிந்து கொண்டவர்.. அமைதியாக கிளம்ப..
பேத்தி வருந்துவதை பார்க்க பொறுக்காமல். “இந்திரா வைஷுவை உன்கூட கூட்டிட்டு போ” என்றார் கிருஷ்ணப்பா..
“அப்பா நான் எப்படி பா, வீ. பிக்கு தெரிஞ்சா திட்டுவான் பா”.
மகளை திட்டியவர் “உன் மருமகளை நீ பாரு,, நாங்க வயசானவங்க, எங்களை ஏன் இந்த வயசுல கஷ்டபடுத்துறீங்க. உன் மகன் வாழ வேண்டாமா.. பிள்ளைகள் அப்படி தான் சண்டை போடுவாங்க, நம்ம தான் புத்தி மதி சொல்லி ஒன்னா இருக்க வைக்கனும்,, உன் மகன் தானே நீ தான் சொல்லனும்”…
இந்திரா தேவிக்கும் மனதில் எத்தனை நாள் தான் இப்படியே இருவரும் இருப்பார்கள். என்று தோன்ற வீ. பி என்னை திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்து “வைஷு கிளம்பு” என்றதும்…
உடனே கிளம்பி வந்த மருமகளை பார்க்க பாவமாக இருந்தது..
இருவரும் பிளைட்டில் கிளம்ப.. பெரியவர்கள் மூட்டைகளில் காய், பழம் என்று கொடுத்துவிட்டனர்.. வைஷு தாத்தா, பாட்டியை அணைத்து முத்தமிட்டு ஹைதெராபாத் கிளம்பினாள்…
வைஷுவுக்கு கணவனை பார்க்க போகும் சந்தோஷம், அவன் திட்டினாலும், பேசினாலும் நம்ம எதுவும் பேச கூடாது என்று நினைத்திருந்தாள்.
ஆமாம் வைஷுவுக்கு அவள் பண்ணிய முட்டாள் தனம் தெரிந்திருந்தது,, அவளின் அக்கா வைஷுவை நன்றாக திட்டியிருந்தாள்..
“குழந்தையின்னா உனக்கு அவ்வளவு லேசா போச்சா வைஷு,, அவன்னவன் குழந்தையில்லாம எத்தன கோவில், எத்தனை பரிகாரம், எவ்வளவு ட்ரிட்மெண்ட், ஹாஸ்பெட்டலுக்கு லட்ச, லட்சமா செலவு பண்ணிட்டு குழந்தையில்லாமா கஷ்ட படுறாங்க. ஏன் யாரையோ சொல்லனும் நான் அவ்வளவு கஷ்டபட்டேன், என் மாமியார் என்னை எப்படியெல்லாம் பேசி இருக்காங்க தெரியுமா, குழந்தை இல்லண்ணு..
நம்ம டெல்லி ஹாஸ்பெட்டல் போக காரணம் என்ன? குழந்தை இல்லாத காரணம் தானே.. உனக்கு புரியலயே.. வீ. பியை நெனச்சு பாரு, அவர் அக்காவுக்கு குழந்தை இல்லாமல் அவர் எவ்வளவு கஷ்ட பட்டு இருப்பாரு..
உனக்கு கடவுள் குழந்தை வரத்தை ஈசியா கொடுத்திருக்கார்,, அத நீ பொத்தி பாதுகாப்பா பெத்து எடுக்கணும், அத விட்டுட்டு, ஸ்கை டான்ஸ் ஆடி இருக்க,, டான்ஸ் ஆடும் போது உனக்கும், குழந்தைக்கு ஏதாவது ஆகியிருந்தா?”…
“சௌமி அப்படி எல்லாம் பேசாதா”..
“சொன்னதுக்கே உனக்கு கஷ்டமா இருக்கே, உன் புருஷனை நினைச்சி பாரு,, அவரு எவ்வளவு பயந்து போயிருப்பாரு”..
“எல்லாரும் என்னையே திட்டுங்க” என்று அழுத தங்கையை மடி தாங்கி தலை கோதிய சௌமி…
மெதுவாக தங்கையில் தவறுகளை சொன்னாள்.. “நான் குழந்தையில்லாம எப்படி கஷ்டபட்டேன், உனக்கு தெரியும் தானே வைஷு, என் நேரம் நம்ம முயற்சி பண்ணும் போது குழந்தை கிடைச்சிருச்சு.. உனக்கு அப்படி இல்ல.. நீ பண்ணது ரொம்ப தப்பு, நீ குழந்தை உண்டாகி இருப்பது தெரிஞ்சும் டான்ஸ் பண்ணது பெரிய தப்பு, இதுல ஸ்கை டான்ஸ் வேற. உனக்கு ரொம்ப தைரியம் டீ, உன் புருஷன் பரவாயில்ல உன் கொண்டு வந்து இங்கே தாத்தா வீட்டுல விட்டார் டீ.. என் புருஷனா இருந்த எனக்கு டைவர்சே குடுத்து இருப்பாரு”.. என்று தன் புருஷனின் கோபத்தை சொன்னவள்..
“வீ. பி யை நெனச்சு பாரு அவர் உன் மேல எவ்வளவு பாசமா, ஆசை இருந்தாரு, அவர் இவ்வளவு கோபப்பட காரணம் என்ன, யோசிச்சு பாரு, அவர் மனசு எவ்வளவு வருத்தபட்டிருக்கும், உன்ன விட்டு அவரும் தானே கஷ்டபடுவாரு” இன்னும் நிறைய புத்தி மதிகளை தங்கைக்கு சொல்லி, சென்றிருந்தாள் சௌமி..
வைஷுவுக்கு சௌமி சொல்லியது அனைத்து சரி என்று தோன்ற.. கணவனை இன்னும் தேடினாள்..
அவன் இடத்தில் இருந்து யோசித்து பார்த்தாள். நான் செய்தது தப்பு என்றே தோன்ற.. அதான் எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்ததே என்று தனக்கு தானே பேசிக்கொண்டு.
மாமியாருடன் ஹைதெராபாத் வந்து சேர்ந்தாள்.
வீடு அமைதியாக இருக்க.. “சௌசன்யா அண்ணி அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க அத்தை”…
“ஆமாம் வைஷு போன மாசம் தான் வீட்டுக்கு போனா,, நீ வந்தத மெஜேஜ் பண்ணியிருந்தேன்,, வர்ரேன்னு சொல்லி இருக்கா”….
“சரி அத்தை, யாழினி எங்கே அத்தை? ஸ்கூல் போயிருக்காளா எப்போ வருவா?”..
யாழினியை பத்தி இப்போ சொல்ல வேண்டாம், அவள் இப்போ ஓய்வு எடுக்கட்டும் என்ற நினைத்தவர்..
“அவ வருவா, நீ சாப்பிடு வா” என்று மருமகளுக்கு உணவு உண்ண கொடுத்து விட்டு அவரும் உண்டு விட்டு “நீ ரெஸ்ட் எடு வைஷு அத்தைக்கு அகாடமியில ஒரு வேலை இருக்கு அத முடிச்சிட்டு வந்துடுறேன்”.. என்று சொல்லி சென்று விட்டார்..
வைஷுவுக்கு அவளின் ரூம் சொல்லவே பிடிக்க வில்லை, என்னவோ கணவன் இல்லாமல் அவர்கள் அறைக்கு சொல்ல விருப்பம் இல்லாமல் ஹாலிலே அமர்ந்திருந்தவள் தூங்கியிருக்க..
வீ. பி ஒரு பைலை எடுக்கவென வீட்டுக்குள் வந்தவன் .. சோபாவில் யாரோ அமர்ந்திருப்பதை பார்த்தவன் யார் என்று பார்க்க..
வைஷுவை சத்தியமாக எதிர் பார்க்க வில்லை வீ. பி.. அவளை பார்த்து அதிர்ச்சி ஆனவன்.. பின்பு அவளை பார்த்துக்கொண்டே அவள் அருகில் மெல்ல வந்து. அவள் எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டவன்..
அவளை பார்த்தபடியே அப்படியே அமர்ந்தான். சோபாவில் அமர்ந்து கொண்டே சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்த மனைவியை பார்த்த சந்தோஷத்தில் கண்ணீல் நீர் நிறைந்து விட்டது அவனுக்கு..
அவளை வாரி அணைக்க தோன்றிய கைகளை கஷ்ட படுத்தி அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.. அவளை வெகுநேரம் பார்த்த வண்ணம் இருந்தவன், மனைவியை ரசித்து பார்த்திருந்தான்.. கடல் நீல கலரில் காட்டன் புடவைவில் மேடிட்ட வயிறுடன் இருக்கும் மனைவியை ஆசை தீர பார்த்துக்கொண்டு இருந்தான்..
மனதில் பங்காரம், நா பங்காரம் தல்லி வந்துட்டீயா றா, என்று அவளிடம் பேசியவன்.. உன்ன விட்டு எனக்கு இருக்க முடியலடி.. ஏன்டி நான் கோபப்படுற மாதிறி நடந்துக்குற.. போடி,, என்றவன். அவன் வந்த சுவடு தெரியாமல் பைலை எடுத்துக்கொண்டு சென்று விட…
வைஷு சோபாவில் உட்கார்ந்து படியே தூங்கிக்கொண்டு இருந்தவள்..
நாகில்லி குறல் கேட்டு கண் திறக்க.
“வைஷுமா” என்றவர் மருமகளில் பக்கத்தில் வந்து அமர்ந்தவர்.
“எப்படி இருக்கேமா?”..
“நல்லா இருக்கேன் மாமா”?..
“உடம்பை பார்த்துக்கோம்மா , எது நடந்தாலும் தைரியமா இருக்கனும், எதுக்கும் வருத்தபட கூடாது சரியா” என்று கூற..
“சரி மாமா,” என்று தலையாட்டி இருந்தாள்..
“நீ உன் ரூம் போம்மா இங்கே ஏன் தூங்குற” என்று அவளை அவள் ரூம்புக்கு அனுப்பினாள்..
வைஷு மெல்ல நடந்து மாடியில் உள்ள அறைக்கு வந்து அவர்கள் அறையை திறந்து பார்த்தவள் அதிர்ச்சியாகி நின்று விட்டாள்..
அந்த அறை சுவர் முழுவதும் இரட்டை குழந்தைகளின் புகைபடங்கள் , பிறகு வைஷுவின் சில படங்கள், யாழினி குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் பெரியதாக சுவர் முழுக்க ப்பிரேம் போட்டு மாட்டி இருக்க..
கணவன் ரூம்பே அவனின் ஆசையை சொல்ல.. கலங்கி போனாள் வைஷு, ஒவ்வொரு புகைப்படத்தையும் நின்று பார்த்தால், ஒரு, ஒரு புகைப்படமும் வீ. பிக்கு குழந்தைகளின் மேல் எவ்வளவு ஆசை வைத்திருக்கிறான் என்பது புரிய, உடைந்து போனாள் வைஷு, பாவா சாரி பாவா, என்று சொல்லிக்கொண்டே வர.. ஒரு புகைப்படத்தில் பார்த்து அப்படியே நின்று விட்டாள்,, அது அவளுடைய சிறு வயதில் எடுத்த புகைப்படம்,, பக்கத்தில் வீ. பியின் சிறு வயது புகைப்படத்தை சேர்த்து இருவரின் புகைப்படத்தை ஒரே புகைப்படமாக மாற்றி வைத்திருந்தான்..
கணவனின் எதிர்பார்ப்பு அவளுக்கு புரிய மனதால் புண்பட்டு போனாள் வைஷு..
நான் என் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறேன், அவர், அவர் இதயத்தில் அல்லவா எங்களை சுமக்கிறார் என்று வைஷுவுக்கு தோன்றியது..
அனைத்தையும் பார்த்து முடித்தவள், சோர்ந்து போயி கட்டிலில் அமர.. கட்டிலில் கிடந்தவைகளை பார்த்து கதறி அழுதாள் வைஷு,, அவளின் புடவைகள் அனைத்தும் கட்டிலில் விரிந்து கிடக்க..
இதை விட, அவன் அன்பை, பிரிவை எப்படி சொல்வான்..
பாவா, சாரி பாவா என்று அந்த கட்டிலில் படுத்து கொண்டு கதறி அழுது அப்படியே சிறிது நேரம் இருந்தவள். பின்பு.
யாழினி வரும் நேரம் வந்ததும் முகம் கழுவி கீழே வர….
யாழினி வரும் நேரம் ஆகியும் அவள் வீடு வராமல் இருக்க..
வைஷு வேலைகார பெண்ணிடம் “ஏன் யாழினி இன்னும் வரல, வேற கிளாஸ் எதுவும் போறாளா?” என்று அவரிடம் கேட்க..
அவர் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் நிற்க..
“வைஷு வா இங்கே” என்று இந்திரா தேவி அவளை அழைக்க..
“யாழினி என்ன கிளாஸ் போற அத்தை ஏன் இன்னும் வரல, எங்கே போயிருக்க அவ ?”..
“நீ அத விடு, என்ன சாப்பிடுற, சூஸ் கொண்டு வர சொல்லவா, குடிக்குறீயா?”.. என்று கேட்க.
“அத்தை யாழ் எங்கே அத்தை?”.. என்றதும்..
கோபம் கொண்ட இந்திரா தேவி “உன்னால தான் எல்லாம் வைஷு, என்ன பேச வைக்காத, உன் வயித்துல உள்ள பிள்ளையை மட்டும் பாரு,, யாழினி பத்தி பேசதா”..
“என்ன சொல்லுறீங்க, நான் என்ன பண்ணேன்?”..
“நீ மட்டும் பண்ணல, எல்லாரும் சேர்த்து தான் என் பேத்தியை தொலச்சிட்டோம்” என்று அவரின் தலையில் அடித்துக்கொண்டு அழ..
“அத்தை என் பொண்ணுக்கு என்ன ஆச்சு அத்தை சொல்லுங்க” என்று வைஷுவும் அழ..
error: Content is protected !!