Skip to content
Post Views: 2,317
நதி 4
தீனதயாளன் வழக்கம் போல காலை குளியலை முடித்துவிட்டு கீழே வர குமரனிடமிருந்து போன் வந்தது.
Advertisement
“சொல்லுடா..” என்ற தீனாவிடம்,
Advertisement
“அண்ணே.. இங்கே மெஸ் நடத்தறவங்க வீட்டு சைட் ஏதோ பெரிய காரியம்(எழவு) ஆகிடுச்சாம்.
Advertisement
அதனால மெஸ் க்ளோஸ்
பண்ணிட்டாங்க. இன்னக்கு டிஃபன் அங்கே பாத்துக்கோ ண்ணே..
Advertisement
நீ சாப்பிடாம இருந்தா.. மணி அண்ணே வந்ததும் சொல்லிடுவேன்.
ஒழுங்கா இப்பவே போய் சாப்பிட்டு வந்திடுங்க. நானும் இங்க வர்ற வழியில சாப்பிட்டு வந்துடுறேன்..” என மிரட்டலாகவே சொல்ல,
அதற்கு காரணம் உணர்ந்தவன், மெல்லிய புன்னகையோடு, “சரிடா.. நா பார்த்துக்கறேன்..” என்றான் தீனா.
நேரத்தை பார்த்துவிட்டு, தனது சைக்கிளை எடுத்தவன் நேராக சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்றிற்கு சென்று உண்டுமுடித்து வரும் போது தான் யமுனாவை நடு வீதியில் பார்த்தது.
அவன் சைக்கிளில் வந்திருக்க, அவளுக்கு முன்னதாக வந்தவன்.. தன்னை துளைக்கும் பார்வை பார்ப்பவளிடமிருந்து தப்ப வேண்டியே வந்த உடன் கீழிருக்கும் கட்டிங் அண்ட் பேக்கிங் செக்ஷனுக்குள் நுழைந்திருந்தான்.
அவன் உள்ளே சென்ற பின்னே அவனின் பின்னோடு வந்த யமுனாவை அங்கு அப்போது கண்டிருந்தாலும், அவளை அவன் இங்கே வேலை பார்ப்பவரின் மகளாகவோ.. அல்லது யாரோ ஒருவரின் தங்கையாவோ நினைத்திருப்பானே ஒழிய.. தன்னை பார்வையால் தொடரும் பெண்ணாக நினைத்திருக்கவே மாட்டான்.. என்பது வேறு விசயம்.
ஏனெனில் அவளை கண்டதும் அவனின் எண்ணத்தில் உதித்தது.. ‘அவள் இன்னும் சிறுபிள்ளை..’ என்பதே..
அந்த பிம்பம் நன்றாக பதிந்துவிட, எப்படி மாற்றி யோசிப்பான்..?!
அவளின் அந்த உருவம் தான் இத்தனை மாதங்களாய் அவனிடமிருந்து அவளை காத்திருந்தது என்றால் மிகையில்லை.
அவன், அந்த பார்வையை உணர்ந்த நாள் முதலே எப்போது தனது தேடலை ஆரம்பித்தாலும், சேலை அல்லது சுடிதாரில்.. பெரிய பெண்ணாக யாரேனும் இருக்கும்.. என்ற எண்ணித்தில் அவர்களிடம் கவனத்தை வைக்க,
அந்த கூட்டத்தோடு கலந்திருக்கும் யமுனாவிடம்.. அவனின் கவனம் துளியளவு கூட செல்லவில்லை.
***
அன்று சனிக்கிழமை என்பதால்.. அந்த வார கணக்கு முடித்து மாலை சம்பளம் கொடுக்க வேண்டி தங்கமணி பேங்க் சென்று, ‘ஓரளவு தேவைப்படும்..’ என முன் தினம் வரை கணக்கு போட்டு சொல்லியிருந்த தொகையை எடுத்துக்கொண்டு வந்து சேர மதியத்தை தொட்டிருந்தது.
தீனா எப்போதும் செய்யும் வேலைகளை முடித்து, திங்கள் சந்தைக்கான பண்டல்களை சரி பார்த்து, பார்ட்டிகளுக்கு என பேக் செய்ததை பார்சல் சர்வீஸூக்கு அனுப்பி வைக்க மாலையாகியிருந்தது.
அதற்குள் வெளி யூனிட்களிலிருந்து கட்டு எடுத்து தைத்து தருபவர்கள் தங்களின் அந்த வாரத்திற்கான பில்லோடு வர அவர்களின் கணக்கை சரி பார்க்க ஆரம்பித்தான்.
அவர்களுக்கான தொகை சிறிது எனில் கையிலும், பெரும் தொகையெனில் அவர்களின் அக்கவுண்டுக்கு அனுப்பியும் வைக்க தொடங்கினான் தீனா.
இந்த வேலைக்கு இடையிலேயே, அன்றைய வேலை நேரம் முடிந்து அவர்களுக்கான சம்பளத்திற்காக வந்து சேர்ந்தனர் அங்கு வேலை பார்ப்பவர்கள்.
‘ஷிஃப்ட் முறை..’ உள்ளவர்களுக்கு தீனா சம்பளத்தை கணக்கிட்டு கொடுக்க,
‘பீஸ் ரேட்..’ டெய்லர்களுக்கு நேற்றைய கணக்கோடு இன்று அவர்கள் தைத்த கணக்கையும் சேர்த்து.. மொத்த தொகையை கணக்கெடுத்த பஹதூர், தீனாவிடம் காட்டி பணத்தை வாங்கி வந்து தரத்தொடங்கினான்.
யமுனா, ‘பீஸ் ரேட் டெய்லர்..’ என்பதால், இப்போதும் அவளை அவன் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
ஆனால் அவளோ அங்கே வந்தது முதல் அவன் மும்முரமாக வேலை பார்ப்பதை.. மற்றவர் அறியாத படி கண்களவு செய்து கொண்டிருந்தாள்.
‘பண விசயம்..’ என்பதால் வேறு எந்த சிந்தனையும் இன்றி வேலை பார்த்தவனை அந்த பார்வை தொந்தரவு செய்யவில்லையா..? இல்லை அது தெரிந்தும் கண்டு கொள்ளவில்லையா..? அவனுக்கே வெளிச்சம்.
எல்லாம் முடிந்து, ‘தீனாவின் கணக்கு..’ என பணம் அவன் அக்கவுண்டுக்கு வந்த அடுத்த நொடி, அதில் பாதியை ஜெயசீலன் அக்கவுண்டுக்கு அனுப்பியவன், கால் பகுதியை வாணிக்கு அனுப்பினான்.
இது எப்போது நடப்பது தான் என்றாலும் இதில் சற்றும் உடன்பாடு இல்லை தங்கமணிக்கு.
“ஏன்டா.. இப்படி..? அவர் சீர் செய்யன்னு வாங்கறார் இல்ல.. அப்புறமும் எதுக்கு உன்னோட அக்காக்கு அனுப்பனும்.. கேட்டா பதில் மட்டும் வச்சிருப்பே.. போடா..” என சலித்தவர்,
“உனக்குன்னு வச்சிருக்கறதுல தான் நீ சாப்பிடனும். உனக்குன்னு துணி மணில இருந்து மத்த செலவெல்லாம் பாக்கனும்.
மாசத்தோட முதல் கிழமை மிச்சம் பிடிக்கற இந்த கால் வாசியையும் எதாவது காரணத்த சொல்லி வாங்க தான் பார்ப்பார்.
இப்போ வாணிக்கு அனுப்புனது கூட ஓகே. அவருக்கு கொடுக்கறதாவது கம்மியா கொடுடா..” என்றார் மனது கேளாமல்.
அவரிடம் இடையில் தேவை.. என அவன் கேட்கவும் மாட்டான்.
ஒருமுறை, ‘காலை டிபன் சாப்பிட வார சம்பளம் வரும் போது குமரனுக்கு தந்தால் போதும்..’ என்பதால், அது மட்டும் சரியாக சாப்பிட்டவன்.. அந்த நாள் முழுவதும் சாப்பிட காசில்லாமல் சுத்திக்கொண்டிருந்தான்.
மதிய உணவு உண்ண குமரனோடு இருப்பவன் அன்று வராமல் இருக்கக்கண்டு அவனிடம் விசாரிக்க,
‘அது.. இதென..’ அவன் சொன்ன சாக்கிலேயே கண்டு கொண்டவன், அவனுடைய காசில் வாங்கி வந்து.. திட்டி, உண்ண வைத்ததும் இல்லாமல்.. தங்கமணியிடம் போட்டும் கொடுத்துவிட அவ்வளவு கோபம் அவருக்கு.
அதிலிருந்து குமரன் எப்போதும் இவன் மீது ஒரு கண் இருந்து கொண்டு தான் இருக்கும். தங்கமணியும் உத்தரவின் பேரில்.
அதான் காலை அவன் பேச்சிலும் வெளிப்பட்டது.
இரவும் வேலை முடிந்ததும் தீனாவை இழுத்துக்கொண்டு போய் உண்ண வைத்து விட்டு தான் அவன் தங்கியிருக்கும் வீட்டுக்கு செல்வான்.
அவன் தங்கியிருக்கும் இடம் கொஞ்சம் தொலைவாக இல்லாமல் இருந்திருந்தால், தீனாவையும் அவர்களோடு தங்கிக்கொள்ள அழைத்து சென்றிருப்பான்.
அழைத்தாலும் ‘தீனா வரமாட்டான்..’ என்பது அவனுக்கும் புரிந்தே இருந்ததால், அவனின் உணவு விசயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாய் பார்த்துக்கொண்டான் அன்றைய நாளிலிருந்து.
குமரனின் இந்த செயலால் தங்கமணிக்கு தீனாவின் உணவு விசயத்தில் இருந்த கவலை தீர்த்தது என்றே சொல்லலாம்.
ஆனாலும், ‘பணவிசயத்தில் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கலாமே..!’ என்ற ஆதங்கம் எப்போதும் அவருக்கு உண்டு.
‘உடல் நோக சம்பாதிக்கும் பணத்தின் மதிப்பை உணர்ந்து செலவு செய்யும் மனிதர்..’ என்றால் அவருக்கும் அப்படி தோன்றாது.
ஆனால் வாரம் ஒருமுறை எதாவது ஒரு சாக்கு சொல்லி வாங்குவதோடு, மாதத்தின் முதல் கிழமையும் சரியாக வசூல் செய்து கொள்பவர்,
‘இவனுக்கு..’ என ஒரு வாழ்க்கை பற்றி நினைக்காமல், பணத்தை மட்டும் எதிர்பார்ப்பது அவருக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது.
தீனாவே அதை பெரிதாக நினைக்காமல் செய்யும் போது, மூன்றாம் மனிதராய் அவரால் என்ன செய்ய முடியும்..?
*****
நேற்று இருந்த பரபரப்பு எதுவும் இல்லாமல் ஞாயிறும் இனிதாய் தொடங்க, வாரம் முழுவதும் சேர்ந்திருந்த துணிகளை அள்ளிக்கொண்டு மேல் மாடிக்கு சென்றான் தீனா.
அங்கு துவைக்கவும் துணி காய வைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டிருக்க,
எடுத்து வந்த துணிகளை துவைத்து உலர போட்டவன், கையோடு ஒரு குளியலையும் முடித்துவிட்டு சாவகாசமாக கீழே வந்தான்.
ஞாயிறு பெரும்பாலும் விடுமுறை தான். அதும் டல் சீசனில் கேட்கவும் வேண்டுமா..?. அப்படியான நாளில் காலை உணவும் வெளியிலேயே உண்பது தீனாவின் வழக்கம்.
அன்று ஏனோ தனியாக சென்று உண்ண வெறுப்பாக இருக்க, ‘யாரு ரெண்டு தடவ போறது. மத்தியானமா சாப்பிட்டுக்கலாம்..’ என நினைத்தவன்,
அவன் தூக்குமிடம் வந்து ஓய்வாக அமர்ந்து, லைப்ரரியில் இருந்து எடுத்து வந்திருந்த பொருளாதார வணிகம் தொடர்பான புத்தகம் ஒன்றை வாசிக்க ஆரம்பித்தான்.
பன்னிரண்டாம் வகுப்போடு இங்கு வந்திருந்தாலும், அவனின் படிக்கும் ஆர்வம் குறையாமல் இருக்க.. இது போன்ற உபயோகமான சில புத்தகங்களை படிப்பது அவனின் வழக்கம்.
ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது அவனின் செல்பேசி.
அதில் அவனின் அக்காவின் எண்ணை கண்டவன்.. ஆர்வத்தோடு அதை எடுத்து, “வாணி.. எப்படி இருக்கே..? மாமா, பாலாக்குட்டி எல்லாரும் எப்படி இருக்காங்க..?” என்றான் பாசமாய்.
இருவருக்கும் நான்கு வருட இடைவெளி என்றாலும், தாயின் மறைவுக்கு பின் தன்னை தாயாய் தாங்கிய தமக்கையை அவன் பேர் சொல்லி தான் கூப்பிடுவான்.
அதுவே அவர்களுக்கிடையே ஒரு பிணைப்பை உண்டாக்கியிருந்தது.
“நாங்க நல்லா இருக்கோம்டா.. நீ எப்படிடா இருக்கே..?” என்றவரின் குரல் உணர்வு தாக்கத்தால் கரகரத்தது.
“ப்ம்ச், வாணி.. நா நல்லா இருக்கேன்.. நீ ஏன் இப்படி..?” என்றான் அவளின் கலங்கிய குரலில் தவித்து..
“என்ன பாக்க கூட வரமாட்டே இல்லே.. பாலாவும் உன்னயத்தா ரொம்ப தேடறான்டா.
எனக்குன்னு இல்லாட்டி அவனுக்கொசரம் ஒருவாட்டி ஊருக்கு வாயேன்டா.. இப்புடியே தனிச்சு இருந்தா ஆச்சா..?” என்றார் மறுமுனையில் இருந்த வாணி ஆற்றாமையோடு.
தன் திருமணம் ஆன நாளிலிருந்து.. தனித்தே நிற்கும் தம்பியின் மீதான ஆதங்கம் அவள் குரலில் நிறைந்து வழிந்தது.
பிறந்தது முதல் விளையாட்டு தோழியாய் உடனிருந்தவள், தாயின் மறைவுக்கு பின் அவனுக்கு தாயாய் தானே உடனிருந்து வளர்த்தாள்.
அப்படிப்பட்டவளிடமிருந்தும் விலகியே நிற்கிறானே.. என்ற ஆதங்கம் வாணியை பெரிதும் வருத்திக்கொண்டு தான் இருக்கிறது.
“உன்னோட வீட்டுக்கு மட்டும் வந்துட்டு.. அங்கே போகாம வரமுடியாது வாணி.
அங்கே போனாலும் நிம்மதியா என்னால இருக்க முடியாது. அவரும் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டார்..” என்றதும்,
“அப்புடி என்ன தான்டா பிரச்சன உங்குளுக்குள்ளே..?
கேட்டா ஒத்த வார்த்த சொல்ல மாட்டிங்கறே..! அவுருகிட்ட இத பத்தி கேட்டாக்க,
அவெனுக்கு என்ன கொறச்சல்..? நல்லா தானே இருக்கான்.. போயி உன்ற ஜோலிய பாருங்கறார்.. என்ன தான்டா நடந்துச்சு..?” என,
‘தம்பியின் விலகலுக்கு விடை தெரிந்து, அதை சரி செய்து விடமாட்டோமா..?’ என்ற பரிதவிப்போடு இம்முறையும் வாணி கேட்க,
மௌனத்தையே இன்றும் பதிலாக்கியவனின் உள்ளம் மட்டும் கொதிகலனாய்
கொதித்துக்கொண்டிருந்தது.
error: Content is protected !!