Skip to content
Post Views: 1,879
கருணாம்பிகை சீதாலட்சமி குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்பா அம்மா இருந்த அறைக்குள் சென்றாள்.
சுமதியின் காலை மெல்ல பிடித்து விட்டு கொண்டிருந்தார் சங்கரன்.
Advertisement
“என்னம்மா கால் ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டுக்கொண்டே அவரின் அருகில் அமர்ந்தாள் கருணா.
“ஆமா கருணா, கால் ஊனவே முடியலை, எப்படியோ இவ்வளவு நேரம் சாமாளிச்சிட்டேன். வந்து உட்கார்ந்ததும் தான் தாங்கவே முடியல”
Advertisement
Advertisement
“நீங்க தள்ளுங்க அப்பா, நான் கொஞ்ச நேரம் பிடிச்சு விடறேன்” என்றாள் தந்தையிடம்.
“நான் சும்மாதானே இருக்கேன்.. நீ உட்காருடா…”
Advertisement
எப்பொழுதும் சிரித்த முகமாகவே தான் இருப்பார் சுமதி. பாட்டி வாய் அதிகம் பேசினாலும், கோவம் காண்பித்தாலும் சுமதியிடம் எந்த முகச்சுணக்கமும் இருக்காது… சங்கரன் பொதுவாக வீட்டில் எந்த உதவியும் பெரிதாக செய்யமாட்டார். சுமதி யாரையும் எதுக்கும் குறை கூறாத பெண்மணி. நான் தான் எல்லாம் என்ற கர்வமும் இருக்காது அவரிடம்.
மனைவியை நினைத்து சங்கரனுக்கு பெருமைதான். சமீப காலமா இவளை நான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற வருத்தம் வர தொடங்கி இருந்தது.
சங்கரன் அமைதியாக மனைவியை பார்த்து கொண்டிருந்தார்.
“கேட்காதவங்க பாக்கி இல்லை, பொண்ணை வச்சிட்டு பையனுக்கு பண்றீங்களேன்னு..” என்றார் சுமதி கொஞ்சம் வருத்தமாக.
“நாம பேசி முடிவு செஞ்சது தானே சுமதி.. விடு பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க..”
“நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒன்னு சொல்லணும்” என்றாள் கருணா.
தாய் தந்தை இருவரும் தன்னையே பார்க்கவும்,
“எனக்கு ஒருத்தரை பிடிச்சிருக்கு அம்மா” என்றாள் சுமதியை பார்த்து.
“பார்த்தீங்களா என்கிட்டே தான் முதல்ல சொல்றா என் பொண்ணு..” என்றார் சுமதி சங்கரனிடம் பெருமையாக.
“அட! ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும் போது தானே சொன்னா?”
“இருந்தாலும் என்கிட்டே தானே அம்மான்னு சொல்லி தானே சொன்னா?”
கருணாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஒருத்தரை விரும்புவதாக சொன்னதும் யார்? என்ன? என்று கேட்காமலே அம்மா என்ன எப்படி பேசுறாங்க என்று விழித்தாள்.
“அப்பா..” என்றாள் சங்கரனை பார்த்து குழம்பியவளாக.
“எங்களுக்கு அவினாஷை ரொம்ப பிடிக்கும் டா.. எங்களுக்கு பூரண சம்மதம்” என்றார்
“உங்களுக்கு எப்படி?”
“நாங்க எல்லாம் என்ன மக்கு பிளாஸ்திரியா? நீ ஒருத்தர் கிட்ட பேசறதை வச்சு உன் மனசு எங்களுக்கு புரியாதா? நீ என்ன நினைப்ப என்ன செய்வன்னு பெத்தவங்களா எங்களுக்கு தெரியும். அதுவும் அவினாஷை நீ நேசிக்கிறதுக்கு முன்னமே, அவினாஷ் உன்னை நேசிக்கிறதை நாங்க கண்டு பிடிச்சிட்டோம்“ என்றார் சுமதி பாவனையாக.
“எப்படிம்மா?” கருணா அம்மாவின் மடியில் சலுகையாக படுத்து கொண்டாள்.
அதுவரை சுமதியின் காலை பிடித்து விட்டுக்கொண்டிருந்த சங்கர், மகளின் பாதத்தை வருடிக்கொடுத்தார்.
“நீங்க ரெண்டு பேருமே பொறுப்பான பிள்ளைங்க, அதான் நீங்களே முதல்ல பேசி எங்க கிட்ட வரட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்”
“ஆனாலும் அப்பா, எனக்காக அவினாஷ் நிறைய விட்டு கொடுக்க வேண்டி வருமோ? நான் என் லட்சியத்துக்காக அவன் கனவுகளுக்கு கடமைகளுக்கு தடையா இருந்திடுவேனோன்னு தான் ஒரு தயக்கம்.. சுயநலமா யோசிக்கிறேன்னான்னு ஒரு குழப்பம் “
“நீ சாதாரண பொண்ணு இல்லை கருணா. கடவுள் உனக்கு நிறைய அறிவையும் திறமையும் கொடுத்திருக்கார். மிக சில பேர் கிட்ட மட்டுமே இருக்கும் நல்ல விஷயங்கள் உன்கிட்ட இருக்கு. இது நீ என் பொண்ணுங்கிறதுக்காக நான் சொல்லலை. பர்போஸ் ஆப் லைப்… உன் வாழ்க்கையின் நோக்கம் என்னன்னு நீ தான் முடிவு செய்யணும்.. உன்னோட இந்த பயணத்தில் உன்னை புரிஞ்சுகிற வாழ்கை துணை ரொம்ப அவசியம். அவினாஷ் மாதிரி புரிஞ்சு நடத்துகிற பையன் கிடைக்கிறது அபூர்வம்.
நீ சின்ன வயசுல ஒரு பொண்ணுகிட்ட ,’நீ நினைச்சா நீ கண்டிப்பா போலீஸ் ஆகலாம்னு’ சொன்ன இல்ல, இப்ப நிஜமாலுமே அந்த பொண்ணு நம்ம ஏரியாவில போலீசா இருக்கு. உன்னோட பேச்சுனால ஒரு பொண்னோடு வாழ்க்கையே மாறி இருக்குன்னா அது சாதாரண விஷயம் இல்லை.. உன்னால நிறைய பேருக்கு நல்லது நடக்கணும் என்பது கடவுள் சித்தமா தான் நான் பார்க்கிறேன்.
அதே மாதிரி, உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். அவினாஷ் மட்டுமே உன்கூட நிக்கனும்னு அவசியம் இல்லை.. நாங்க, தாத்தா பாட்டி, வில்வா, பாரி.. இப்படி இவ்வளவு பேர் பக்க பலமா இருக்கும் பொழுது எதுக்கு தயங்குறீங்க? எங்க கருணா எப்பவுமே சுயநலமா யோசிக்க எல்லாம் மாட்ட… காலம் உங்களுக்கு வழி காட்டும். உங்க உண்மையான நேசம் உங்களுக்கு துணை நிற்கும்.. பார்த்துக்கலாம் கருணா.. நாங்க எல்லாரும் இருக்கோம்..”
அப்பாவின் பேச்சு தெளிவை கொடுத்தது பெண்ணுக்கு.
“உங்க அப்பா மாதிரி எனக்கு சொல்ல தெரியல கருணா, ஆனா நீ எப்படி தங்கமோ அதே மாதிரி அவினாஷும் சுத்த தங்கம்… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல பொருத்தம்” என்றார் சுமதி மகளின் தலையை வருடிக்கொடுத்து.
மறுநாள் காலையில் அனைவரும் சென்னை புறப்பட்டார்கள்.
புது பொண்ணு மாபிள்ளை ஜோடிங்க முதல் ரெண்டு சீட்ல உட்காரட்டும், மத்தவங்க எல்லாம் பின்னாடி போங்க என்றார் பாட்டி.. அதன்படி அனைவரும் ஏறி அமரவும், இரண்டு புது ஜோடிகளும் கோவிலில் இருந்து திரும்ப வரவும் சரியாக இருந்தது.
முதலில் ஏறிய பாரியும் வில்வாவும் முதல் இருக்கையில் அக்கம் பக்கம் அமர்ந்து கொண்டார்கள்.
அனைவரும் கொலை வெறியுடன் பார்த்ததை எல்லாம் கண்டுகொள்ளவில்லை இருவரும்.
பின்னால் வந்த ஹர்ஷ், வர்ஷ் இருவரும் தலையில் அடித்து கொண்டு மற்றொரு இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள்.
ஊரில் இருந்து வந்த இரண்டு கார்களில், கை குழந்தை இருந்ததால் சீதா லட்சமி குடும்பம் ஒன்றிலும், லக்கேஜ்கள் ஒன்றிலும் ட்ரைவர் உடன் அனுப்பி விட்டார்கள்.
தர்ஷன் அமெரிக்காவிற்கும், ராஜி விக்ராந்த் டெல்லிக்கும் சென்னையில் இருந்து அந்த வாரமே செல்லுவதாக ஏற்பாடு.
சங்கரன் தான் கருணா அவினாஷ் கல்யாணம் தான் அடுத்து என்று அனைவருக்கும் அறிவித்தார்.
‘ஆங்’ என்று வாய் பிளந்து பார்த்தனர் பாரியும் வில்வாவும்.
“நாங்க மட்டும் உன்கிட்ட தானே முதல்ல எங்க லவ்வ சொன்னோம், நீ எங்க கிட்ட சொல்லவே இல்லை தானே?” என்று இருவரும் கருணாவுடன் கோவித்து கொண்டு முகத்தை உம்மென்று வைத்து கொண்டனர்.
கருணாவும் அப்படி எல்லாம் இல்லை, நாங்களே நேத்து தான் மனசு விட்டு பேசிக்கிட்டோம், உங்க கிட்ட சொல்லாம இருப்பேனா? என்று இருவரிடமும் சாரி கூட கேட்டு விட்டாள்.
யார் சமாதானம் செய்தும் இருவரும் மலைஇறங்கவில்லை.
விக்ராந்த் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக வந்தார்.
காலை உணவிற்கு ஓரிடத்தில் நிறுத்தினார்கள்.
அப்பொழுது ராஜி தான் வில்வா பாரியுடன் அமர்ந்து கொண்டார்.
” நிஜமாலுமே பெரிய ஆளுங்க தான் வில்லு ரெண்டுபேரும்.. எப்படி நம்மளையே ஏமாத்திருக்காங்க பாரேன்”
“சின்ன பாப்பா சொன்னப்ப கூட நாங்க நம்பலை ராஜிம்மா”
“ஏன்னா அப்படி இருந்திருந்தா எங்க கிட்ட கருணாம்பிகை சொல்லி இருப்பான்னு நினைச்சோம்”
“காதல்ன்னு வந்துட்டா ரகசியமும் கூடவே வந்துடும் பாரு, வில்லு.. இப்ப என்ன, நம்ம யாருன்னு அவங்களுக்கு புரிய வைக்கிறோம்.. நம்ம மிஷனை சீக்ரெட்டா வச்சுப்போம் ஓகேவா?”
“என்ன விட்டுட்டீங்க? என்ன மிஷன் ” என்று வந்து இணைந்து கொண்டாள் அருந்ததி.
“அதானே? என்ன மிஷன்?” என்று மூவரும் இப்பொழுது ராஜியை பார்த்தனர்.
“அதை இனிமே தான் யோசிக்கணும்.. இப்ப பசிக்குது, சாப்பிடுவோம் வாங்க” என்றார் ராஜி அசால்ட்டாக.
உம்மென்று இருந்த நன்பர்கள் சிரித்து விட்டனர்.
————–
error: Content is protected !!