“ஆமா வசு.. நாம ரெண்டு பேரும் அதை எடுத்துட்டு இந்த பக்கமா தான் வந்தோம்”
Advertisement
“ஆமாடா அமுதா, அப்ப கையில அந்த பென்சிலை வச்சிருந்தியா?”
“அது மட்டும் நியாபகம் வரவே மாட்டேங்குது வசு”
“என்னடா இப்படி சொல்ற? சரி எதுக்கும் வழியில இருக்கா பார்க்கலாம் வா..” என்று சோகமாக அமுதனும், வசுந்துராவும் அவினாஷ் வீட்டில் இருந்து பாரி வீடு வரை, இருபுறமும் தேடி கொண்டே வந்தனர்.
Advertisement
“என்ன வசும்மா? ஏன் சோகமா இருக்க?” என்று கேட்டுக்கொண்டே வந்து வசுந்தராவை தூக்கிக்கொண்டான் வில்வா.
Advertisement
பாரி வந்து அமுதனை தூக்கிக்கொண்டு, ”என்னாச்சு அமுதா?” என்றான் வாஞ்சையாக. அவன் பாரியின் செல்லம்.
இவர்கள் இருவரும் விஷயத்தை கூறவும், “அய்யயோ.. “ என்ற அலறலுடன் அவர்களும் சேர்ந்து தேட தொடங்கினார்கள்.
அவினாஷ் வீட்டின் மாடியில் தான் அருந்ததியின் குடும்பம் இருக்கிறது. மாடி பால்கனியில் இருந்து இவர்களை பார்த்த அருந்ததி, அங்கே இருந்தே, ”அண்ணாஸ் என்ன தேடுறீங்க எல்லாரும்” என்று சத்தமாக கேட்டாள்.
“வசு, இங்க விட்டுட்டு போயிருக்கீங்க, இரு நான் எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்று கொண்டு வந்தாள்.
“சூப்பர் சின்ன பாப்பா.. அங்கே இருந்து கேட்ச் போடு” என்றான் வில்வா உற்சாமாக.
அருந்ததியும் மேலே இருந்து கீழே வீசி எறிந்தாள்.
சரியாக அப்பொழுது ஒரு பைக் கிராஸ் ஆனது. அதில் ஒரு பை பின்புறம் மாட்டியிருந்தது. பென்சில் சரியாக அதற்குள் விழுந்து விட்டது.
“அய்யோ! என்ன பாப்பா இப்படி பண்ணிட்ட” என்று பாரி, முதலில் அந்த பைக் பின்னாடி ஓடினான், அவனை தொடர்ந்து வில்வா இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடினான்.
அப்பொழுது வந்த ராகவ் “என்ன மச்சான் எல்லாரும் ஓடி பிடிச்சு விளையாடுறீங்களா?” என்றான் வில்வாவிடம்.
“அட பாவி, எங்களை பார்த்தா எப்படி இருக்கு.. நீ வண்டியில தானே இருக்க, போ போய் முன்னாடி போற பைக்கை நிறுத்து” என்று அவனை அனுப்பினான்.
ராகவனும் என்ன ஏது என்று விசாரிக்காமல் முன்னே சென்று அந்த பைக்கை நிறுத்தினான்.
இவர்களும் மூச்சுவாங்க அங்கே சென்று நின்றனர்.
“யார் நீங்க எல்லாம்?” என்று அதில் வந்தவர் முரட்டு குரலில் கேட்டார்.
“சார் சார், எங்க பென்சில் உங்க பையில விழுந்திடுச்சு, கொஞ்சம் எடுத்து தர்றீங்களா?”
“பென்சிலுக்கா இப்படி எல்லாரும் ஓடி வந்து வழி மறிக்கிறீங்க?” என்றார் அவர் கடுப்பாக.
“ப்ளீஸ் ப்ளீஸ் அங்கிள்” என்றனர் அமுதனும் வசுவும்.
அவரும் பிள்ளைகளை பார்த்ததும் கொஞ்சம் இலகுவாகி,
“நான் இந்த ஏரியா இன்ஸபெக்ட்டர்.. போலீஸ் காரன் வண்டியையே நிப்பாட்டறீங்க பாருங்க..” என்று பெரியவர்களை முறைத்து கொண்டே, பையினுள் தேடினார்.
“இதுல இருக்க மாதிரி தெரியலையே பாப்பா” என்றார் வசுவிடம்.
“என்ன கலர்?”
“குட்டி பென்சில் அங்கிள்.. ரெட் கலர்”
பின் அவர் பையில் உள்ள பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து பின் தேடினார்.
கிடைத்த பென்சிலை பார்த்ததும் அவருக்கு ஒரு நிமிடம் திக் என்றானது.
பென்சிலையும் சுற்றி நின்ற அனைவரையும் மாறி மாறி பார்த்தார்.
ஒன்றரை சென்டிமீட்டரில் இருந்தது அந்த பென்சில்.
“என் பொண்ணுது சார்.. இதை என் மாப்பிள்ளை” என்று அமுதனை காட்டி, “வாங்கிட்டு போயிருக்கான். அது காணும்னா எங்க எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுவா” என்றான் வில்வா அசட்டு சிரிப்புடன்.
அவரும் தலையை ஆட்டிக்கொண்டு பென்சிலை அமுதன் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இவர்கள் அனைவரும் அப்படியே வில்வா வீட்டிற்கு வந்தனர்.
“இந்தா அபயா உன் பென்சில்” என்று அமுதன் சென்று அபயாம்பிகையிடம் கொடுத்தான்.
ராகவிற்கு அப்போதிலிருந்து ஒரு சந்தேகம். “எப்படி அபயா இந்த குட்டி பென்சில் பிடிச்சு எழுதுவ?” என்றான் அவளிடம்.
‘இது கூட தெரியாதா?’ என்பதை போல மேலிருந்து கீழ் வரை அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சென்று அவள் பென்சில் பாக்சை எடுத்து வந்தாள். அதில் ஒரு பழைய பென் கேப் இருந்தது, அதை எடுத்து பென்சிலின் பின்புறம் போட்டு காட்டினாள்.
“இன்னும் டூ டேய்ஸ் எழுதலாம் இதை வச்சு..” என்று உள்ளே சென்றுவிட்டாள்.
ஆ.. என்று வாய் பிளந்து நின்றுவிட்டான் ராகவ்.
“ஏன் பாரி, அவினாஷுக்கு லெட்டர் எழுதுன நம்ம, என் விஷயத்துல கோட்டை விட்டுட்டோம் போல டா” என்றான் வில்வா சோகமாக.
பின்னே, அபயாம்பிகை உருவத்திலும் சரி, குணத்திலும் சரி அப்படியே அவள் அத்தையை உரித்து வைத்து பிறந்திருந்தாள்.
“எப்ப பாரு தங்கத்தை ஏதாவது சொல்லிட்டு இருக்காதீங்க” என்று இவர்களை கடிந்தபடி வந்தான் அவினாஷ்.
தன் கண்ணம்மாவின் மறுபிம்பம் போல இருந்த அபயா என்றால் அவினாஷிற்கு அத்தனை இஷ்டம்.
“இன்னிக்கு கருணா எல்லாரையும் சாப்பிட எங்க வீட்டுக்கு வர சொன்னா, பாட்டி” என்றான் அவினாஷ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.
“அவி, சமையல் எப்பவும் போல நீதானே?” என்றார் சுமதி வேகமாக.
“உக்கும்.. விளங்கிடும், யாராவது மாப்பிள்ளைக்கிட்ட இப்படி கேப்பாங்களா?” என்றார் பாட்டி நொடித்துக்கொண்டே.
“ஏன் பாட்டி, உனக்கு கருணா சமையலை சாப்பிடனும்னு ரொம்ப ஆசை போல, பேசாம உனக்கு மட்டும் கருணாவை சமைக்க சொல்லிடுவோம்..” என்றான் வில்வா.