Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️எபிலாக்

தேனாய் தித்திக்கும் தேனிலவை இருவாரங்கள் ராஜஸ்தானில் கொண்டாடினார்கள்.

உடலின் சங்கமம் என்றில்லாமல் மனதினால் இணைந்தார்கள். என்னதான் காதல் திருமணம் என்றாலும் அதிகம் பேசி சிரித்து அவர்கள் காதல் வளர்க்கவில்லை.

இப்போது பேசினார்கள் பிறப்பு தொடங்கி மழலையாய் வளர்ந்து மங்கையாய் பரிமளித்து காதலில் விழுந்தவரை… கல்யாணத்தில் என்னவெல்லாம் சிறப்பு என்னவெல்லாமம் சிரிப்பு என்று… பேசி பேசி களைத்தனர்.

எதையாவது சொல்லாமல் விட்டுவிட்டோமா என்று அவள் யோசிக்கும் அளவிற்கு பேசினாள்.



Advertisement

தங்களுக்குள் ஒளிவு மறைவு இருக்க கூடாது என்று இருவரும் உறுதியாக இருந்தனர்.

தன் அம்மாயி ரொம்பவே சென்சிடிட்டிவ் என்று உணர்ந்து கொண்டவன் இனி அவள் வாழ்வில் கவலையும் கண்ணீரும் இருக்கவே கூடாது என்று உறுதி பூண்டான்.

அவன் எங்கு சுற்றி எங்கு வந்தாலும் ஒரு கண் தன் குலாபி மீது வைத்திருப்பான்.

Advertisement

கொண்டவனை கொண்டு தான் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் மரியாதை என்பது அவ்வளவு உண்மை.

Advertisement

கிருஷ்ணா குடும்பம் பவித்ராவை உள்ளங்கையில் வைத்து தாங்கியது.

புதுமணத் தம்பதிகளாக எத்தனை நாள் இருந்துவிட முடியும்?

சுற்றம் நிதர்சனம் உணர்ந்து தினசரி வாழ்வில் கலந்து போயினர். ஹரியை பொறுத்தவரை தினமும் தேனிலவு தான்.

Advertisement

பகல் முழுதும் வேலை வேலை என்று தீயாய் திரிந்தாலும் இரவில் அவன் குலாபியிடம் குளிர்ந்து விடுவான்.

ஆரம்பத்தில் அந்த வீட்டோடு பொருந்தி போக முடியாமல் திண்டாடிவிட்டாள்.

பேசும் மொழியில் இருந்து உண்ணும் உணவு, பண்டிகை கொண்டாட்டம், சடங்கு சம்பிரதாயம் எல்லாமே வேறாகி  அவளை அச்சுறுத்தியது.

மிரண்டு நிற்பவளை தோள் தாங்கி கொண்டான் கொண்டவன். விஜயதாரணி தாயாய் அரவணைத்தார். ஆச்சரியம் என்னவென்றால் எல்லாரிடமும் கெத்து காட்டும் ஷியாமளா கூட பவித்ராவிடம் அவ்வளவு அன்பு காட்டினார்.

சர்வதனி முதலில் வந்த மருமகளாக இருந்தாலும் உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் பவித்ரா தான் மூத்த மருமகள் என்று அவளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தனர்.

வதின வதின என்று  அவளை சுற்றி சுற்றி வந்து தேவ், நிவேதா அன்பு மழையில் நனைத்தனர். அம்மாயி அம்மாயி என்று வாய்நிறைய அழைத்து தகப்பனை போல் அன்பு காட்டினார் சுப்பு.

இதெல்லாம் யாரால்….? ஹரிசரண் என்ற ஒருவனால். இன்னும் தன் பாவாவின் மீது காதலாகினாள்.

தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆரம்பத்தில் அப்படி அழுது கரைந்தவள் இப்போது தனக்கா இப்படி வாழ்க்கை என்று பூரித்து நிற்கிறாள். அது தான் வாழ்க்கை….  நடக்கும் எந்த நிகழ்வும் ஏன் எதற்கு என்று புரியாது ஆனால் நம்மை மீறி அனைத்தும் நடந்துவிடும்.

இப்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகள் தெலுங்கில் மாட்லாடுகிறாள். தெலுங்கு படம் பார்க்கிறாள். எந்நேரமும் தெலுங்கு பாடல்களை தான் முணுமுணுக்கிறாள்.

ஹரிக்கு பாரியாளின் பாரிய முயற்சி பயிற்சி கண்டு சிரிப்பு தான்.

என்ன… எதுக்கு இந்த சிரிப்பு…? முறைத்தாள்.

ஒண்ணுமில்லரா…. சும்மா சிரித்தேன்.

அட லூசே…. அவள் கேலியாய் சிரிக்க…. பிடித்து கன்னத்தில் கடித்து வைத்தான்.

ஸ் ஆஆ… கன்னத்தை தேய்த்தவள்… கோபமாய் முறைக்க…

இல்லரா குலாபி…. லூசு இப்படி தான் பண்ணும்…. தன்னோடு இறுக்கிக் கொண்டான்.

அவன் தலைமுடியை பற்றி ஆட்டினாள்.

ஏய்… என் தாரும்மா பார்த்தா அவ்வளவு தான்.

பார்க்கட்டும் என் புருஷனை நான் அடிக்கிறேன்… அவங்க வேணா அவங்க புருஷனை அடிக்கட்டும்.

எதே…. சிரித்து விட்டான்.

சிரித்து சிரித்து வெறுப்பேத்தாதீங்க பாவா சிணுங்கினாள்.

என் பங்காரம் பேசுற தெலுங்கு கேட்டா அவ்வளவு சிரிப்பா இருக்கு….. மீண்டும் சிரித்தான்.

ஹலோ நீங்க தமிழ் பேசும்போது காதில் தேன் வந்து பாயுதா?

இடுப்பில் கையூன்றி முறைத்தவளை காதலுடன் கண்டு ரசித்தான்.

நாய்க்கு வாழ்க்கை பட்டா குறைத்து தானே ஆகணும் அதுதான் தெலுங்கு பிராக்டிஸ் என்று பழிப்பு காட்டிவிட்டு ஓடியே விட்டாள். இவள் அடிக்க அவன் கடிக்க எதற்கு வம்பு என்று தான்…

“—————-“

வாரம் இரண்டு மூன்று முறை பிறந்த வீட்டிற்கு அழைத்து பேசிவிடுவாள். தம்பி தங்கையிடம் அவ்வளவு சுவாரஸ்யமாய் பேசுவாள்.

மகள் புகுந்த வீட்டில் எப்படி வாழ்கிறாள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் தமயந்திக்கு…. தாயின் கைக்கு போன் போனால் அவளுக்கு வார்த்தைகள் வற்றிவிடும்.

நல்லாயிருக்கீங்களா? உடம்பை பார்த்துக்கோங்க… அவ்வளவு தான் அவள் பேச்சு.

தாய் எது கேட்டாலும் ம்ம்ம்… ம்கூம்… சரி அவ்வளவு தான் அவளின் பதில். பேசக்கூடாது என்பதல்ல…. பேச்சு வரவில்லை. இந்நிலையும் மாறும் என்று இருவரும் நம்பினார்கள்.

கிருஷ்ணா குடும்பத்தோடு பாந்தமாக பொருந்தி கொண்டாள் பவித்ரா.

எல்லாரிடமும் ஒரே மாதிரி இயல்போடு சிரித்த முகமாய் சிநேகபாவம் காட்டும் பவித்ராவை எல்லாருக்கும் பிடித்தது.

எந்நேரமும் சுற்றி சுற்றி வந்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டேயிருப்பாள்.

ஒரு சில நாள் ஷியாமளாவோடு அவர் நடத்தும் பள்ளிக்கு சென்று வருவாள்.

ஒரு நாள் தேவ்சரணுடன் பால் பண்ணைக்கு சென்று வந்தாள்.

சர்வதனியோடு சேர்ந்து மசலாப்பொடிகள் தயாரிக்கும் கம்பெனிக்கு சென்று வந்தாள்.

திடீர் என்று ஆசைப்பட்டு வயலுக்கு சென்று பார்த்து வந்தாள்.

சர்வதனி மகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். தோட்டத்தில் எதையாவது கொத்திக் கிளறிக் கொண்டிருப்பாள்.

யூடியூப் பார்த்து புது புது ரெசிபி முயற்சித்து எல்லாரையும் சோதனை எலியாக்கிவிடுவாள்.

பாரியாளின் நடவடிக்கைகளை கண்ணுற்றவன்  பவிம்மா ரொம்ப போரிங்கா இருக்கா?

வேலைக்கு போகணும்னா போ என்றான் ஹரி.

நா கொடாலு எந்துக்கு பணிக்கு வெள்ளாலு…..? (என் மருமகள் எதுக்கு வேலைக்கு போகணும் )அவ்வளவு கோபம் சுப்புவிற்கு.

ஹரி தந்தையை முறைத்துக் கொண்டிருக்க…

ஏன் பாவா வேலைக்கு போனாதான் எனக்கு பூவா கிடைக்குமா என்றாள் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு.

ஹரி கடுப்புடன் முறைக்க… என்ன முறைப்பு? நான் ஏன் வேலைக்கு போகணும் என்றாள் சட்டமாய் கைகட்டிக் கொண்டு…

பங்காரம் உன்னை வேலைக்கு போகச் சொல்லி கட்டிப்போட்டு அடிக்கல… வீட்டுக்குள்ளே இருக்க ஒரு மாதிரி போரிங்கா இருக்குமேன்னு தான் சொன்னேன்.

நான் கொடாலு செப்பந்ததாரா? கடு கடுத்தார் சுப்பு.

மாமய்யா எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. வீட்டோட இருந்து குடும்பத்தை கவனிக்க தான் ஆசை என்று முற்றுப்புள்ளி வைத்தாள்.

“———————–“

உருண்டு வந்து தன் மார்பில் மோதி சிரிக்கும் மனையாளை அள்ளிக் கொண்டவன் குலாபி நிஜமாவே உனக்கு வீட்டோட இருக்க ஓகே தானா? என்றான்.

ம்ம்ம்ம்…. என்று அவன் மீசையை நீவியவள் முகம் கொள்ளா புன்னகையுடன் கணவனை ரசித்தாள்.

அம்மா நானா ஏதாவது சொல்வாங்கன்னு யோசிக்கிறியா? மனையாளின் மூக்கில் முத்தம் வைத்தான்.

என்ன மேன் உங்க பிரச்னை? கடுப்பாகி போனாள் சிணுங்களுடன் அவனை தள்ளிவிட்டாள்.

தேவுடா இந்த அம்மாயியை என்னால புரிஞ்சுக்க முடியலரா… சிரிப்புடன் கண்சிமிட்டினான்.

என்ன புரிஞ்சுக்க முடியல? மீண்டும் உருண்டு அவனோடு ஒட்டிக்கொண்டு கட்டிக்கொண்டாள்.

ஒண்ணுமில்ல…. மூக்கை சுருக்கினான்.

எதுக்கு உங்களுக்கு இவ்வளவு டென்ஷன்?எனக்கு குடும்பத் தலைவியா வாழறது தான் பிடித்திருக்கு.

உனக்கு என்ன இஷ்டமோ அப்படியே இரு… அவள் கன்னத்தை பிடித்து செல்லமாய் ஆட்டினான்.

நீங்க பிறந்து வளர்ந்த இந்த வீடு பிடித்திருக்கு… உங்களைப் பெற்று வளர்த்த அப்பா அம்மாவை பிடித்திருக்கு… உங்க சொந்தமெல்லாம் என் சொந்தம் என்ற பெருமை இருக்கு. உங்களுக்காக புதுசு புதுசா யோசித்து சமைக்க பிடித்திருக்கு நீங்க வரும் வரை வாசலை பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அந்த சந்தோஷம் பிடிச்சிருக்கு.

என் பாவாக்கு மனைவியா வாழற இந்த சுகம் அதை நான் சொல்லி புரிய வைக்க முடியாது.

நான் அனுபவிக்கனும் சலிக்க சலிக்க அனுபவிக்கனும்…. அவனோடு ஒன்றிகொண்டாள்.

பவிம்மா குழந்தை வந்துட்டா உனக்காக வாழ முடியாமல் போயிடுச்சேன்னு ஒரு வலி இருக்கும்… அவள் கரம் கோர்த்துக் கொண்டான்.

எதுக்கு வலி? எனக்காக தனியா ஒரு வாழ்க்கை இருக்கா? நீங்க இந்த குடும்பம் நம்ம குழந்தைங்க இது தான் என்னோட உலகம்… உங்களுக்காக வாழறது தான் என்னோட வாழ்க்கை.

நம்ம குழந்தைகளா? ஒன்னு போதாதா உனக்கு? கேலியாய் சிரித்தான்.

ஒன்னா…? கடும் ஆட்சேபம் அவளிடம்.  மூனு பெத்துக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றாள் வெட்கத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு.

கவர்மென்ட் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று தான் சொல்லுது! சீண்டிவிட்டான்.

கவர்மெண்ட் சொல்லும்… அதுவா வளர்க்க போகுது?படிக்க வைக்க போகுது? சொத்து சுகம் கொடுக்கப் போகுது? எகிறிவிட்டாள்.

அம்மாயி இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தா ஒண்ணுக்கே வழி இருக்காதுடி … எப்படி மூனு பெத்துக்க முடியும்? படு சீரியஸாக கேட்டான்.

முகம் சிவந்து விழிமூடி உதடுகடித்து கிடந்தவளை வாரி சுருட்டிக் கொண்டான்.

“————————–“

நாட்கள் அழகாய் சென்று கொண்டிருந்தது.

பவித்ரா அன்பால் ஆண்டு கொண்டிருந்தாள் கிருஷ்ணா குடும்பத்தை.

இந்த ஐந்து மாதத்தில் இருமுறை தாய்வீடு போய் வந்தாள்.

இயல்பாக சீராக நாட்கள் சென்று கொண்டிருந்தது.

ஒரு சொட்டு காதல் குறையவில்லை ஹரியின் அன்பில்.  எவ்வளவு பிசியாக இருந்தாலும் எட்டு மணிக்குள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவான் அவன் அம்மாயியை காண.

காதல் கொடுக்க கொடுக்க பெருகும் என்பது அனுபவித்து அறிய வேண்டிய உண்மை. கண்களால் உணரும் காதல் காட்சியில் நிற்கும் உள்ளத்தால் காணும் காதல் தான் உயிர்ப்புடன் என்றும் தொடரும்.

தன் பாவாவை பிடிக்கும் என்பதாலே அவன் சார்ந்த அனைத்தும் அவளுக்கு அவ்வளவு பிடித்தமாகி போனது.

“———————“

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு….

Dad please save me beat your Gulabi துள்ளி குதித்து நானாவை கட்டிக் கொண்டது அழகிய மலர்செண்டு

நா மன்ச்சி அம்மாயிக்கு ஏமாயிந்தி? பூக்குவியலை பொக்கிஷமாய் அள்ளி அணைத்துக்கொண்டான் ஹரிசரண்.

ஆ புவ்வுனு உன்சமணி அம்ம ஆமெனு டிஸ்டர்ப் செஸ்துண்டி (பூ வைக்க சொல்லி அம்மா டிஸ்டர்ப் பண்றாங்க ) குற்றபத்திரிகை வாசித்தது ஹரி பெற்ற செல்லம் ஹர்ஷினி.

ஏய் மாயவரம் நா பங்காரத்தை தொல்லை பண்ற நீ…? செல்ல மகளுக்கு முத்தம் வைத்துக்கொண்டே மனைவியை மிரட்டினான்.

எர்ரபள்ளிக்கு கொஞ்சம் மஸ்து கூடி இருக்கு…. அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

கீழே குனிந்து மகளின் பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட் எடுத்தாள்.

என்னாரா இது… இப்படி பட்டுனு குனியுற…பதறிபோனான்.

ஹைய்ய…. முகத்தை முறுக்கினாள்.

ஹர்ஷி குட்டிமா நுவ்வு ராவலனி தாருஅவ்வா கோரிந்தி  என்று மகளை முத்தமிட்டு இறக்கிவிட்டான். குழந்தை அவ்வாவை தேடி ஓடிவிட்டது.

புள்ளிமான் போல் துள்ளி ஓடும் தன் தேவதை அழகை லயித்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அடேங்கப்பா பொல்லாத தேவதை…. ஊருல உலகத்துல யாருக்கும் பெண் குழந்தையே இல்லப்பாரு…. இவங்க வீட்டில் தான் அதிசயம்…. அவ்வளவு நக்கல் அவள் பேச்சில்.

உனக்கு ஏன்டி இவ்வளவு பொறாமை….? என் பொண்ணு எங்க குலதெய்வம்…. அவ்வளவு பூரிப்பு அவனுக்கு.

ரொம்பதான் பழிப்பு காட்டிக் கொண்டே . கீழே இரைந்து கிடந்த  மகளின் சொப்பு சாமான்களை சேகரிக்க தொடங்கினாள்.

ஏய் குலாபி எத்தனை முறை சொல்றது உனக்கு, சட்டுன்னு குனியக்கூடாது…. பாரியாளை அணைத்து செல்லமாய் கடிந்து கொண்டான்.

அவள் இரண்டாவது கருவுற்றதில் இருந்து அவ்வளவு கண்ணும் கருத்துமாய் காத்துவருகிறான்.

காதலுடன் கணவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.

ஆறுமாத கர்ப்பிணிக்கு இயற்கையாய் வனப்பு கூடியிருக்க அவ்வளவு ரசித்தான் தன் குலாபியை.

முதல் குழந்தை உண்டாகி இருந்தபோது தான் குடும்பமே கொண்டாடியது என்றில்லை…. இப்போது இரண்டாவது குழந்தைக்கும் அதே கவனிப்பு அக்கறைதான்.

முதல் குழந்தை சிசேரியன்…. பவித்ராவின் கவனக்குறைவால் தையல் பிரிந்து சீழ் வைத்து மீண்டும் தையல் போட்டு ரொம்பவே அவஸ்தை பட்டுவிட்டாள். மனையாளின் வலியும் வேதனையும் கண்டு  ஒரு குழந்தை போதும் என்று கூறிவிட்டான் ஹரி.

அடம் பிடித்து அழுது மாய்ந்து இரண்டாவது குழந்தை பெற்றுகொள்ள மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.

தன் கைவளைவிற்குள் மனைவியை கொண்டு வந்தவன் நீ ஓகே தானே என்றான்.

ம்ம்ம்ம்… எனக்கென்ன….? இன்னும் பத்து குழந்தை பெத்துக்கிட்டாலும் என் பாவா பார்த்துக்குவார்…. பெருமையாய் சிரித்தாள்.

அய்யயோ…. குலாபி இந்த ஒன்னோட ஸ்டாப் பண்ணிக்கலாம்ரா… வைரமூக்குத்தி மினுக்கும் மூக்கில் முத்தம் வைத்தான்.

பார்த்துக் கொண்டே இருந்தான் தன் அம்மாயியை… நிறம் கூடி சற்று சதை ஏறிய கன்னம், மேடிட்ட வயிறு… மஞ்சள் பூசிய அவள் மதி முகம், ஒளிவீசும் வெள்ளைக்கல் மூக்குத்தி, கழுத்தை அலங்கரிக்கும் கருகமணி  தாலி… வழக்கம் போல் அவனுக்கு பிடித்த ஜிமிக்கி… ஜென்மமே கொண்டேன் இதற்காக என்று பாடலாம் போல….

என்ன லுக்கு? புது மணமகள் போல் நாணம் கொண்டாள்

இவ்வளவு அழகா என் குலாபி இருந்தா பார்க்காம…. அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

காதல் மன்னன் தான்….. வெட்கத்தை அடக்கிக் கொண்டு  இடித்து வைத்தாள்….

ஆமா அதில் என்ன சந்தேகம் உனக்கு? சதாபிஷேகம் அன்னைக்கு பாரு…. அன்னைக்கும் உன் பாவா இதே ரொமான்ஸ் மோடில் தான் இருப்பான்…. வாஞ்சையுடன் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தான்.

காதலுடன் கண்ணீரும் பொங்கியது ஹரியின் குலாபிக்கு. என்ன தவம் செய்தோம் என்ற பிரம்மிப்பு இன்றளவும் அவளுக்கு குறையவில்லை.

நானா…அவ்வா நுவ்வு தொந்தரகா பயலுதேரு அனி அடிக்கிண்டி ( பாட்டி சீக்கிரம் கிளப்ப சொன்னாங்க ) ஹர்ஷினி குட்டி ஓடிவந்து தகப்பன் மீது தாவியது.

குழந்தை தெலுங்கு தான் பேசுகிறது. தமிழ் சொல்லி கொடுத்து ஓய்ந்து  விட்டாள் பவித்ரா. அடியேய் தெலுங்கு தாய்மொழி இல்லடி உன்தந்தை மொழி கடுப்பாகி போனாள்.

ஹா ஹா ஹா…. பெரிதாய் சிரித்துவிட்டான் ஹரி. குழந்தைக்கு என்ன பேச வருதோ பேசட்டும். மூனு வயசு குழந்தையை என்ன பாடு படுத்துற நீ… செல்லமாய் முறைத்தான்.

ஊருக்கு அடிக்கடி போக வர இருந்தா தானே எங்க பாஷை  அவளுக்கு வரும்… வருஷத்துக்கு ஒருமுறை அனுப்பவே மூக்கால அழுகறீங்க… பத்து நாள் தங்கிட்டு வாங்கன்னு பெருமையா அனுப்பி வைக்கிறது. அடுத்த பிளைட் பிடித்து  நீங்க  வந்து நிற்கிறது……

உண்மை தான்  மனைவி குழந்தை இல்லாமல் அவனுக்கு ஒரு நாள் கூட நகராது.

“———————–“

பவிம்மா கவனமா உட்காருரா…. ம்மா அவ மேல் ஒரு கண்ணு இருக்கட்டும்… ஹர்ஷி குட்டி அம்மாவை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.தாத்தையா கூட உட்காருங்க…

எல்லாம் சரி பார்த்த பின்னே டிரைவர் சீட்டில் வந்தமர்ந்து சீட்பெல்ட் அணிந்து கொண்டான்.

தேவ்சரண் காயத்ரி அவர்களின் புதுமனை புகுவிழா நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. அதற்கு தான் இந்த பயணம்.

என்ன… புதுமனை புகுவிழாவா?

ஆமாங்க ஒரு வருஷம் ஆகிடுச்சு அவங்களுக்கு விவாகம் முடிந்து.

தம்பிக்கு காயத்ரியின் மீது நோக்கம் இருப்பது ஹரிக்கு தெரியாமல் இல்லை.

அவன் காதல்உண்மை எனில் அவன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவி கேட்டு வந்தால் பார்த்து கொள்ளலாம் என்று அமைதி காத்தான்.

காயத்ரியோடு அலைபேசி தொடர்பில் இருந்து கொண்டு தான் இருந்தான் தேவ்.

எப்படி தன் காதலை வீட்டில் சொல்வதென்று அவன் குழம்பி கொண்டிருந்தான்.

அன்று…பவித்ரா குழந்தைக்கு பப்பு பூவா ஊட்டிக் கொண்டிருக்க… நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. முல்லை மலரை சரம் தொடுத்துக் கொண்டிருந்தார் தாரணி. மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டு மசாலாகடலை கொரித்துக் கொண்டிருந்தார் ஷியாமளா.

பூவா சாப்பிட அடம் பிடித்துக் கொண்டிருக்கும் ஹர்ஷினியை குதிரை பொம்மையில் அமர்த்தி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான் தேவ்.

ஹலோ சின்னானா சொல்லுங்க…. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நாங்க நல்லா இருக்கோம்…

அப்படியா? நல்ல செய்திதான்… மாப்பிள்ளை அக்ரி டிபார்ட்மெண்டா… ஒரே பையனா?

சீர் அதிகம் எதிர்பார்க்கிறாங்களா? பரவாயில்லை சின்னானா… எவ்வளவு கேட்டாலும் செய்திடுவோம். அத்தம்மாக்கு சொல்லுங்க இந்த இடத்தையே பேசி முடித்திடுவோம்.

நீங்க பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க… நாங்க வரோம்.

யாருங்க போனுல…? பவித்ரா கேட்டாள்.

உங்க மாமா தான்!

என்னவாம்?

காயத்ரிக்கு ஒரு வரன் வந்திருக்காம். நல்ல இடமாம். எல்லாருக்கும் பிடித்திருக்காம்.

ஏன் நான் நல்ல வரன் இல்லையா? நம்ம நல்ல இடம் இல்லையா?சட்டென்று கேட்டுவிட்டான் அவ்வளவு கோபம் தேவிற்கு.

ஷியாமளா அப்படியே அசையாது அமர்ந்துவிட்டார். தாருக்கு ஆச்சரியம்.

பவித்ரா அவஸ்தையாய் கணவனை பார்க்க… கண்ணை மூடி திறந்து தைரியம் கொடுத்தான்.

என்ன தேவ் சொல்ற? நம்பமுடியாமல் கேட்டார் தாரணி.

ஆமா தாரும்மா… எனக்கு காயத்ரியை பிடித்திருக்கு. தாய் முகம் காணும் துணிச்சல் இன்றி பெரியன்னையிடம் சொல்லிவிட்டான்.

இல்ல இது சரி வராது… பவித்ரா பதறினாள்.

ஏன்… ஏன் சரி வராது? நீங்க கிருஷ்ணா குடும்பத்து மறுமகளா வாழறது சரி வரும்னா உங்க தங்கை வரது சரிவராதா? கோபம் கொழுந்துவிட்டது தேவிற்கு.

தேவ் அவ என்ன தவறா சொல்லிட்டான்னு அவகிட்ட காயற…? ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் எடுக்கவே நம்ம வீட்டில் யாரும் விரும்பல… நம்ம வீட்டில் எத்தனை எதிர்ப்பு எவ்வளவு பிரச்னை… இப்போ அதே வீட்டில் அடுத்த பொண்ணு.. மீண்டும் ஒரு பிரச்னையா? ஹரி ஆயாசமாய் மூச்சு விட்டான். அவனுக்கு அவன் பின்னியை பற்றி தெரியுமே…

நீங்க மட்டும் ஒரு பெண்ணை ஆசைப்பட்டு அதுக்காக போராடி கல்யாணம் பண்ணுவீங்களாம் நான் மட்டும் வீட்டில் உள்ளவங்க பேச்சு கேட்டு அவங்க கை காட்டுற பெண்ணை விவாகம் பண்ணிக்கணுமா?

மகனின் ஆணித்தரமான பேச்சில் அயர்ந்து விட்டார் ஷியாமளா.

உணர்வற்று அமர்ந்திருக்கும் சின்ன மாமியாரை கண்டு உள்ளம் நடுங்கியது பவித்ராவிற்கு.

சாரி இது சரியா வராது இந்த பேச்சு வேண்டாம்… குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே போய்விட்டாள் பவித்ரா.

ம்மா…. பதட்டத்துடன் தாய் முகம் பார்த்தான்.

ம்ம்ம்ம்… நான் உன் அம்மா… என்ற ஷியாமளா மனம் நொறுங்கி போனவராய் எழுந்து கொண்டார்.

அம்மா காயத்ரி ரொம்ப  நல்ல பொண்ணு… வதினவை கொண்டாடறீங்க தானே… அவங்க தங்கை தானே அவ… மன்றாடலும் கெஞ்சலும் அவன் குரலில்.

எழுந்து உள்ளே சென்றுவிட்ட தாயை பார்த்துக்கொண்டே நின்றவன் உண்மையில் சோர்ந்து போனான்.

அமைதியாய் தம்பியை பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.

வாடிய முகத்துடன் தலைக்கவிழ்ந்து நின்றான் தேவ்.

தேவ் இங்கே பாரு…! பாருன்னு சொல்றேனில்ல… அதட்டினான்.

அண்ணையா… வேதனையுடன் அணைத்துக்கொண்டான்.

நீ சின்னக் குழந்தை இல்லை தேவ்.. இருபத்தேழு வயசாகுது. நல்லா யோசித்து முடிவெடு! இந்த காதலில் எங்கேயும் பவித்ரா பெயர் வந்துடக் கூடாது சொல்லிட்டேன்… அவ்வளவு கரார் அவன் பேச்சில்.

உனக்கு பிடிச்சது… நீ ஆசைப்பட்ட, உன் விருப்பத்தை சொல்லியிருக்க அவ்வளவு தான்.

என் மாமியார் வீட்டு மனிதர்களை பற்றி ஒரு வார்த்தை மட்டமா வந்திடக்கூடாது.

அவங்க உன்னை மாப்பிள்ளை கேட்கல… நீயா தான் அந்த பெண்ணை விரும்புற.. எதுவானாலும் சமாளிக்க முடியும்னா அடுத்தகட்டம் பற்றி யோசி… இல்லைனா இப்படியே விட்டுவிடு!

“——————-“

ஹலோ சொல்லுங்க!

என்ன சொல்லணும்?

நீங்க தானே கால் பண்ணீங்க ஏதாவது சொல்லுங்க.

நீ முடிவா என்னதான் சொல்ற?

எது முடிவா…? என்ன முடிவு? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

மாப்பிள்ளை பார்த்தாச்சு போல….?

மறுமுனையில் பதில் இல்லை… மௌனமே பதிலாக…

“காயத்ரி” …. சிங்கம் ஒன்று பிடரியை குலுக்கி கர்ஜித்தது போல் இருந்தது.

சொ… சொல்லுங்க!  பதறிவிட்டாள்.

அங்கே என்ன நடக்குது? அணைகடந்த கோபம் அவனுக்கு.

எனக்கு சரியா தெரியல… மாப்பிள்ளை பார்க்கறாங்கன்னு நினைக்கிறேன்.

நினைக்கிறியா …. அப்படியே நினைச்சுட்டே இரு.. எவனாவது வந்து தாலிகட்டி கூட்டிட்டு போவான்.

மௌனம் மட்டுமே…

வாயை திறந்து பேசு! கடுகடுத்தான்.

எதிர்புறம் மௌனமே…!

இதோ பாரு எங்க அண்ணையா மாதிரி நான் பொறுமையான ஆள் கிடையாது. எப்போவோ முடிவு பண்ணிட்டேன் கிருஷ்ணா குடும்பத்து கடைசி மருமக நீ தான்னு…

தூக்கிட்டு வந்து தாலிகட்ட கூட தயங்க மாட்டேன்.

அசிங்கமா இல்ல உங்களுக்கு? எங்கக்கா வாழ்க்கைபட்டு வந்த வீடுன்னு பார்க்கிறேன்… இல்லைனா அவ்வளவு தான் சொல்லிட்டேன்… பொறிந்துவிட்டாள்.

எனக்கு என்ன அசிங்கம்? ஜிவு ஜிவு என்று இறுகியது கன்னம்.

உங்க லவ்வை நான் என்னைக்கு அக்செப்ட் பண்ணிகிட்டேன்? எங்க வீட்டுல நீங்க என்னைக்கு வந்து என்னை பெண் கேட்டீங்க? மௌனமா மனதுல நினைச்சுகிட்டு நீங்களா சுத்தி வந்தால் அதுக்கு நான் பொறுப்பு இல்லை…. அசரவில்லை அவள்.

மௌனமா இல்ல…என் வீட்டில் பேசிட்டேன்… அடுத்து உன் வீட்டில் பேச வரேன். ரெடியா இரு… எர்ரபள்ளி குடும்பத்தில் ஐக்கியமாக….

என்ன சொல்றீங்க? அவளுக்கு காற்று தான் வந்தது.

சீக்கிரம் விவாகம் பண்றோம் ஹர்ஷினிக்கு தம்பியோ தங்கச்சியோ ரெடி பண்றோம்…!

“——————-“

ஏன் காயத்ரிக்கு என்ன குறை? மாஸ்டர் டிகிரி முடித்திருக்கா… நல்ல அழகா இருக்கா… வதின கூட சேர்ந்து ஒற்றுமையா இருந்தா நல்லா தானே இருக்கும் ராம்சரண் தன் கருத்தை கூறினான்.

வேண்டாம் ராம்… என் மச்சினிக்கு நான் மாப்பிள்ளை பார்த்து மடக்கிட்டதா ஷியாம்மா நினைப்பாங்க….

நம்ம தாரும்மா பவியை ஏத்துக்கிட்டாங்கன்னா… நம்ம அம்மாவும் சரி நானாவும் சரி ரொம்ப அந்தஸ்து பேதம் பார்க்க மாட்டாங்க…

ஷியாம்மா சின்னானா பேசி முடிவு செய்யட்டும்… நம்ம கருத்து இதில் வேண்டாம்! திட்டவட்டமாய் மறுத்துவிட்டான் ஹரி.

உண்மையில் ஷியாமளாவிற்கு விருப்பம் இல்லை. ஒரே வீட்டில் ஏன் இன்னொரு பெண் எடுக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

தங்கள் தகுதிக்கு இணையான இடத்தில் தேடினால் தானே தங்களுக்கு மரியாதை. ஒரே மகன் அல்லவா? அவரின் ஆசை கனவு எல்லாம் அவன் தானே…?

நேராய் தந்தையிடம் சென்று நின்ற தேவ் மனதை மறைக்காது காயத்ரியை மணந்துகொள்ள விருப்பம் இருப்பதை நேரடியாகவே சொல்லிவிட்டான்.

ஒரே மகனின் ஆசை வெங்கட கிருஷ்ணாவை இசைய வைத்தது. அவர் ரொம்பவெல்லாம் யோசிக்கவில்லை.

வீட்டின் மூத்தவரான சுப்ப கிருஷ்ணாவின் காதிற்கு செய்தி எட்டியது.

அவர் ஷியாமளாவை அழைத்து கருத்து கேட்டார்.

மகனின் தவித்த முகம் பார்த்த ஷியாமளா சம்மதம் சொல்லிவிட்டார்.

மணவாளனுக்கு அழைத்து பேச சொன்னார் வெங்கி.

இல்ல நானா பெரியவங்க நீங்க பேசுவதுதான் சரியா இருக்கும் என்று நழுவி கொண்டான் ஹரி.

மணவாளன் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தபடியால் அதிகம் ஆச்சரியம் கொள்ளவில்லை.

விஷயத்தை தங்கைக்கு கொண்டு சென்றார்.

தமயந்தி திகைத்து விட்டார்.

அண்ணே இது சரியா வராது… எடுத்த எடுப்பில் மறுத்தார்.

ஏம்மா?

அண்ணே பவித்ரா வாழற வீட்டில் இவ…. வேணாம்.. சரியா வராது.

இல்ல தமயந்தி கல்யாணம் ஆகிட்டா அவங்கவங்க பிழைப்பை அவங்கவங்க பார்த்துக்க போறாங்க…

அண்ணே பவிக்கு எதிர்மாறு காயத்ரி. காயத்ரி குணத்துக்கு அங்கே செட்டாகாது.

அதெல்லாம் காரணம்னு சொல்லாதம்மா… பையன் நல்லவன்.. பவியை நம்பி அந்த வீட்டில் காயத்ரியை கொடுக்கலாம் பேசி பேசி கரைத்தார்.

மகளுக்கும் தேவ் மீது நோக்கம் இருப்பதை புரிந்து கொண்ட தமயந்தியால் மறுக்க முடியவில்லை.

“————–“

திருமண வேலைகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது.

அக்காவிற்கு நடந்ததை காட்டிலும் ஆடம்பரமாய் தன் திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசை காயத்ரிக்கு.

எதுக்கு இப்படி என்ற தேவின் கேள்விக்கு….

உங்க பெதநானா ரெண்டு பையன் வச்சிருக்காரு அவர் அவ்வளவு கிராண்டா பண்ணினாரு. நீங்க உங்கப்பாக்கு ஒரே மகன் தானே… ஆடம்பரமா செய்தால் உங்க சொத்துபத்து குறைந்துடுமா… துடுக்காக கேட்டு வைத்தாள்.

என்ன இவள் இப்படி பேசி வைக்கிறா… இன்னும் மருமகளாக அடியெடுத்துக் கூட வைக்கவில்லையே… முதன் முதலாய் மனம் கசங்கி நின்றான் தேவ்.

திருமணம் முடிந்து அக்காவிற்கு ஓரகத்தியாய் வந்து சேர்ந்தாள் காயத்ரி.

ஷியாமளாவும் விஜயதாரணியுமே இத்தனை ஆண்டுகளில் ஓரகத்திகளாய் உரசிக் கொண்டதில்லை. ஆனால் காயத்ரிக்கு பவித்ரா மீது அதிருப்தி.

அவங்க வீட்டுக்கு அவங்க செல்ல மருமகள் என்றால் என் மாமனார் மாமியாருக்கு நான் தானே செல்ல மருமகள்?

அது எப்படி ரெண்டு குடும்பத்துக்கும் சேர்த்து பவித்ராவை மூத்த மருமகள் என்று கொண்டாடலாம்?

பிரித்து பேசி அறியாத குடும்பத்தில் பிளவுக்கு வழி வகுத்தது காயத்ரியின் தொடர் நடவடிக்கை.

காயத்ரிக்கு எப்போதுமே பவித்ராவை கண்டால் ஆகாது… இப்போது இன்னும்.

பவி என்னதான் ஒதுங்கி போனாலும் காயத்ரி எந்நேரமும் முணுமுனுத்துக் கொண்டே இருந்தாள்.

இதோ பாரு காயு… உன் மேல் எனக்கு அளவு கடந்த காதல் இருக்கு… உனக்கு என்ன வேணுமோ என்னை கேளு…! உன் மேல் இருக்கும் காதலை விட அதிகமா இந்த குடும்பத்து மேல அக்கறையும் இருக்கு.

இந்த வீட்டுல சுப்பு நானா தான் தலைவர். தாரும்மா தான் எல்லாமே.. எங்க ரோல் மாடல் ஹரி அண்ணையா தான் அடுத்து பவித்ரா வதின தான். இந்த அமைப்பு எங்கேயும் பிசிறக் கூடாது… கடுமையாய் எச்சரித்தான்.

தமயந்தி புலம்பி தள்ளினார். நான் தான் அப்போவே சொன்னேனே… காயத்ரியால அனுசரித்து போக முடியாது… இப்போ இந்த சின்னவளால நமக்கு தலைக்குனிவு. பவித்ராக்கு தான் சங்கடம்.

பொறுத்து பொறுத்து பார்த்த ஹரி… மனைவி மகளுடன் அமெரிக்கா சென்றுவிடும் யோசனையில் இருந்தான்.

தாரணி அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார்.

என் மருமகளையும் பேத்தியையும் என்கிட்ட விட்டுட்டு நீ எங்கே வேணா போ என்றார் சுப்பு.

சரி ஹைதரபாத்தில் மருத்துவமனை கட்டும் யோசனை இருப்பதாகவும் அங்கே குடும்பம் சென்றுவிடுகிறேன் என்றான்

அக்கா தங்கைக்குள் ஓரகத்தி சண்டை வெடித்தால் நன்றாகவா இருக்கும்?

நீ இந்த குடும்பத்தின் மூத்த வாரிசு… எங்களுக்கு பிறகு எல்லாமே உன் நிர்வாகத்தின் கீழ் தான்… இந்த பரம்பரை வீட்டில் நீ தான் இருக்கணும்… நீ எர்ரபள்ளியை விட்டு போகக் கூடாது. நீயும் உன் மனைவியும் தான் இந்த குடும்பத்தின் பெருமையை கட்டி காக்கணும். தேவ் கொஞ்ச நாள் தனிக்குடித்தனம் இருக்கட்டும் என்றார் வெங்கி.

ஷியாமளாவும்  தன் கணவர் சொல்வதையே சரி என்று ஏற்றுக் கொண்டார்.

தேவிற்கு குடும்பத்தை பிரிந்து தனியே செல்ல விருப்பம் இல்லை… ஆனாலும் நல்ல விதமாய் விலகி இருந்தால் தான் இறுதிவரை உறவு நீடிக்கும் என்று உணர்ந்து கொண்டான்.

அவர்களுக்காக ஹைதரபாத்தில் கட்டிய வீட்டிற்கு நாளை மறுநாள் கிரஹப்பிரவேசம் அதற்கு தான் குடும்பமாய் கிளம்பி கொண்டிருக்கின்றனர்.

புதுமனை புகுவிழா வீட்டில் தம்பிக்காக எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தது ராமும் ஹரியும் தான்.

மனமகிழ்வுடன் பார்த்து பார்த்து வீடு கட்டி கொடுத்திருக்கிறார்கள் சுப்புவும் வெங்கியும்.

தான் பழைய வீட்டில் பரம்பரை வீட்டில் கிராமத்தில் இருக்கிறோமே… பெரு நகரத்தில் இவ்வளவு பெரிய பங்களாவில் தங்கை வாழப் போகிறாளே என்றெல்லாம் பவித்ரா யோசிக்கவே இல்லை.

கூட்டுகுடும்பத்தில் வாழ்வது கொடுப்பினை என்று அவள் அறிந்திருந்தாள்.

அவளுக்கு அவள் பாவா போதும் திகட்ட திகட்ட அவன் கொடுக்கும் காதல் போதும்…!  கிருஷ்ணா குடும்பம் விலகி இருந்தாலும் சிதையாமல் இருக்க வேண்டும் அது மட்டுமே பவியின் வேண்டுதல்.

நானா… ஈ இல்லு சாலா அந்தங்கா உந்தி… குழந்தை ஹர்ஷினி ஓடிவந்து தந்தையை கட்டிக் கொண்டது.

பளிச்சென்று வண்ணம் பூசிய வீடு குழந்தையின் கவனத்தில் பதிந்து விட்டது.

நம்ம எர்ரபள்ளி வீடும் அழகா தானேடா செல்லம் இருக்கும்… மகளுக்கு முத்தம் வைத்தாள்.

குழந்தைக்கு அடுத்து என்ன கேட்க வேண்டும் என்று தெரியாமல் கண்ணை உருட்டியது.

நம்ம வீட்டில் லட்சுமி கண்ணாலாம் இருக்காங்களே… பசுவும் வளர்ப்ர்பு நாயும் தான் அது…!

ஆமாம்மா… குழந்தை முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி…

நம்ம தாத்தையா அவ்வாலாம் எங்கே இருக்காங்களோ அங்கேதாண்டா பங்காரம் நாமளும் இருக்கணும்!

அப்படியாம்மா விழி விரித்து கேட்ட தன் அம்மாயியை அணைத்துக்கொண்டான் ஹரி.

இந்த வாழ்க்கை போதும்.. இன்னும் ஏழு ஜென்மத்திற்கும் இந்த வாழ்வே வேண்டும்… ஹரியின் மனம் நெகிழ்ந்திருந்தது.

———-முற்றும் ——

இது கொஞ்சம் பெரிய கதை, எல்லா கதையுமே யதார்த்தம் என்று எழுதினால் ஒரு மாதிரி போரிங் பீல் வருது. கொஞ்சம் மசாலா தூவி ஹீரோயிசம் தூக்கலா சேர்த்து எழுதிய கதை. உங்களின் ஆதரவு கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுவது எனக்கு கஷ்டம். நேரம் கிடைக்கும் போது அல்லது எழுத வேண்டும் என்று தோன்றினால் மட்டுமே எழுதும் ஆள் நான்.  போட்டி கதைகள் எழுத அதற்கு தான் கலந்து கொள்வதில்லை. நல்ல மூட் இருந்தால் ஒரே நாளில் மூன்று நான்கு எபி கூட எழுதி தள்ளிவிடுவேன். சில நேரம் ஒரு வாரம் பத்து நாள் கூட எழுதாமல் விட்டுவிடுவேன். என் கதையை பொறுமையோடு படித்து தொடர்ந்து என்னை ஊக்குவிக்கும் அனைத்து அன்பிற்கினிய தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏

அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள். மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் 💕💞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!