Skip to content
Post Views: 3,248
யாதுமாகி #3
கார் கதவை திறந்தவள் ஒரு நிமிடம் நின்று அவன் முகத்தை ஏறிட்டாள்.
போகாதே என்று மனம் கூவிய போதும் அவன் உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான்.
கன்னிப் பெண் ஓரழகு,கர்ப்பிணி ஓர் அழகு, தாய்மை அதையெல்லாம் விட பேரழகு.
Advertisement
குழந்தை பெற்ற பின்னே பேரழகாய் மிளிரும் மனைவியை அணைத்து முத்தமிட ஏங்கும் எண்ணத்திற்கு பிரேக் போட்டவன் காரை டாப் கியருக்கு மாற்றி சீறி கிளம்பினான்.
உள்ளே வாங்க என்று அவளும் அழைக்கவில்லை அவனும் செல்ல விரும்பவில்லை.
மாமியார் வீட்டுடனான அவன் உறவு அந்த நிலையில்தான் இருக்கிறது.
Advertisement
அவன் மாமனார் விரும்பாத மாப்பிள்ளை ஆகையினால் தான் இந்த நிலை.
Advertisement
“—————-”
குழந்தைக்கு மருந்து கொடுத்து உறங்க வைத்தவள் தானும் பெயருக்கு உண்டு முடித்து கட்டிலில் சரிந்தாள்.
இவன் வேண்டாம் இவன் குடும்பம் செட்டாகாதுன்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன் கேட்டாளா உன் பொண்ணு? காதல் மயக்கம் கண்ணை மறைக்கும் போது பெத்தவங்க பேச்சு கசக்கத்தான் செய்யும்! இப்போ சுருண்டு படுத்து அழுது புலம்பி என்ன பண்ண முடியும்?மனைவியிடம் பொரிந்து தள்ளினார் வெங்கடாசலம்.
Advertisement
மாப்பிள்ளை தங்கமானவரு! உங்க பொண்ணுக்கு முணுக்குன்னு ஒன்னு சொல்லிட்டா போதும் கோபம் பொத்துக்கிட்டு வந்துடும்! அப்பா மாதிரி பொண்ணு. வேதம் மாப்பிள்ளைக்கு தான் வக்காலத்து வாங்கினார்.
பெத்தவளாடி நீ? பெத்த பிள்ளையை குறை சொல்லிக்கிட்டு… சலிப்புடன் மனைவியை முறைத்தார்.
எக்கேடு கெட்டுப் போங்க எனக்கென்ன? முகத்தை முறுக்கி கொண்டார் வேதம்.
கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி சண்டைக்கு போகலாம் என்று சொல்வார்கள்.இவளை உயிரா நினைக்கிற புருஷன் அமைந்தும் இவ ஏன் இப்படி சிலுத்துக்கிறாளோ… புலம்பிக் கொண்டே சமையல் அறைக்கு சென்றார்.
தாய் தகப்பன் ஆதங்கத்தை செவிமடுத்தவள் ஜன்னல் கம்பிகளினூடே இருள்வெளியை வெறித்தாள். அவள் வாழ்க்கையைப் போலவே அதுவும் சூனியமாய் இருந்தது.
தன் மனம் கவர் கள்வன் விஷ்ணு பற்றி நினைத்துப் பார்த்தாள்.
அழுத்தமான கம்பீரமான தோற்றத்துடன் சற்று இறுக்கமாகவே இருக்கும் அவன் வெளித்தோற்றமே இந்த உலகம் அறியும்.சிறுபிள்ளை போன்ற அவன் பிடிவாதமும், குறும்பும், அடாவடியும் அவள் மட்டுமே அறிவாள்.
பாசாங்கு இல்லாத எளிய மனிதன் அவன். அவனது நடை, உடை,பாவனை கூட எளிமையாகவே இருக்கும்.
அவள் மிகப்பெரிய கிரிமினல் லாயர் என்றோ, மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தின் ஒற்றை ஆண் வாரிசு என்றோ யாரும் நம்ப மாட்டார்கள்.
விஷ்ணு வழவழக் கொழகொழ என்று விளக்கெண்ணையில் வெண்டைக்காயை வதக்கியது போன்ற பேச்சுக்கு சொந்தக்காரன் அல்ல,வெட்டு ஒன்று துண்டு மூன்று நான்கு என்று கூட சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவு கறார் பேர்வழி .
தன்னவனை நினைக்க நினைக்க நெஞ்சம் அடி கரும்பாய் இனித்தது.
ஆளுமை திறன் அதிகம் கொண்ட அவன் எவ்வளவு பெரிய ஆளையும் ஒற்றை பார்வையில் தராசில் நிறுத்தி எடை போட்டு விடுவான்.
அவன் பேச்சுக்கு யாரையும் சம்மதிக்க வைத்துவிடும் ஜித்து கற்றவன்.
பெண்கள் மேல் ஈர்ப்பு இல்லாதவன் நேத்ரா மேல் காதல் கொண்டதுதான் அதிசயம்.
வெறும் மூன்று மாத காதல் தான் அதை திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியவனை இப்போது எண்ணினாலும் சிலிர்த்து போனது.
எல்லாம் இன்பமயமாக இருந்தாலும் அவனின் பிடிவாதமும்,அவன் அம்மாவின் நெருப்பை உமிழும் வார்த்தைகளும் அவளுக்கு வாழ்க்கை மீதான வெறுப்பை கொடுத்தது.
இந்த ஒரு வருடம் நான்கு மாத திருமண வாழ்வு அவள் தன்மானத்தை உரசி,தன்னம்பிக்கையை குலைத்து,தளர்ந்து அமர வைத்துவிட்டது.
“—————–”
விஷ்ணு வந்து சாப்பிடு! மாடி ஏறியவனை ஜோதி இரவு உணரவிற்கு அழைக்க…வெளியில் சாப்பிட்டேன்! அவர் முகம் காணாது பதில் சொல்லிக்கொண்டே மாடி ஏறி போய்விட்டான்.
சுண்டக்காய்ச்சியை பாதாம் பாலுடன் வந்த ஜோதி டீபாய் மீது பாலை வைத்துவிட்டு…என் பேரன் எப்படி இருக்கான்? இதமான குரலில் கேட்டார்.
நல்லா இருக்கான்… ஏசியை ஆன் பண்ணி கட்டிலில் சாய்ந்தான்.
ஏம்பா அவனை கொண்டு போய்விட்ட?அந்த ராங்கிக்கு பயந்து கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டியா?
கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்த நானே அம்மா கூட தானே இருக்கேன்? ஒரே வாக்கியத்தில் ஊசியை ஏற்றினான்.
“நீ அப்பா கூடவும் இருக்க!” நான் உனக்கு அம்மாடா என்பதாய் இருந்தது அவரின் பதிலுக்கு ஏற்றிய ஊசி.
ஏன் என் புள்ள அம்மா கூட மட்டுமே இருந்துடுவானா? நான் எங்க அப்பா மாதிரி “பொண்டாட்டியை வச்சு வாழறதுல” தாயைப் பார்த்து மெலிதாய் நகைத்தான். அதன் மறைபொருள் உணராதவர் இல்லை கிரிமினல் லாயரை பெற்ற ஜோதி.
சில்லாவடி பேச்சு பேசும் உன்னையே என்னப்பா விட்டுக் கொடுக்காமல் வாழ்கிறாரே…நான் ஆசைப்பட்டு கட்டியவளை கைவிட்டு விடுவேனா என்பதே அவன் குத்தல் மொழிக்கு பொருள்.
மேற்கொண்டு மகனுடன் வாதிட விரும்பாமல் மெல்ல வெளியேறினார் ஜோதி.
மேற்கொண்டு பேசினாள் அவன் இன்னும் கடுமையாக பேசி விடுவான் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
“————”
என்னடா வாசு காலங்காத்தாலே வந்திருக்க?இன்னைக்கு சனிக்கிழமை தானே… மெடிக்கல் ஷாப்பிற்கு லீவ் விட்டுட்டியா?ஆச்சரியமாய் நண்பனை கேட்டான் விஷ்ணு.
லீவு இல்ல மாப்ள பத்து மணிக்கு மேல் போகலாம்னு…. வேலைக்கு தான் நாலு கேர்ள்ஸ் இருக்காங்களே.
காபி சாப்பிடறியா?
இப்போதான் வீட்ல டிபன் முடிச்சுட்டு வந்தேன்.
என்னடா ஏதோ பேச வந்துட்டு ஆடு திருடின மாதிரி இந்த முழி முழுசிட்டு நிக்கிற? சம்திங் ராங்… சொல்லு மேன்! நண்பன் தோளில் கை போட்டு அணைத்தபடி கேட்டான் விஷ்ணு.
விஷ்ணுவின் உயிர் நண்பர்கள் இருவர் வாசு,சுரேந்தர்.
மேல்நிலைப்பள்ளி வரை ஒன்றாய் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளிகள் படித்தவர்கள்.
விஷ்ணு சட்டத்தை விரும்பி படித்து லாயர் ஆகிவிட, வாசு D.Pharm, M. pharm என்று படித்து மெடிக்கல் ஷாப் வைத்து விட்டான். சுரேந்தர் பிஎஸ்சி அக்ரி படித்துவிட்டு பெரிய அளவில் அக்ரோ ப்ராடக்ட்ஸ் வியாபாரம் செய்து வருகிறான்.
வாசுவும் சுரேந்தரும் இல்லை என்றால் விஷ்ணு நேத்ராவை திருமணமே செய்திருக்க மாட்டான். அந்த அளவிற்கு விஷ்ணு நேத்ரா திருமணத்தில் இறங்கி வேலை செய்தவர்கள் அந்த நண்பர்கள்.
விஷ்ணு நான் ஒன்னு சொல்லுவேன் கோபப்படாமல் கேட்கணும்! தயக்கத்துடன் ஆரம்பித்தான் வாசு.
மகனே காலையிலே வீடு தேடி வந்து கோபப்படுத்த போறேன்னு புரியுது… நண்பன் முதுகில் செல்லமாய் மொத்தினான்.
விஷ்ணு நேத்ரா போன் பண்ணுச்சு!
நினைச்சேன்டா! சிவக்கத் தொடங்கிய விழிகளுடன் தலையை சிலுப்பி விட்டான்.
சொல்லு உன் பாசமலர் சாவித்திரி என்ன படம் ஓட்டினா? குறுக்கு விசாரணையை தொடங்கினான்.
அது மாப்ள….நீ பேசாம நேத்ராவோட தனிக்குடித்தனம் போயிடேன்! எச்சில் விழுங்கி ஒரு வழியாக சொல்லிவிட்டான்.
வாசு உனக்கு நேரமாகுதுல்ல மெடிக்கல் ஷாப்புக்கு கிளம்பு! பல்லை கடித்து வாயிலை நோக்கி விரலை நீட்டினான்.
நண்பனின் குணம் அறிந்த வாசு தொங்கிய தலையுடன் வெளியேறினான்.
“——————-”
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு! ரஹ்மானின் பாடல் புல்லாங்குழல் ஒலியில் ஒலித்தது.
குழந்தையின் துணிகளை மடித்துக்கொண்டிருந்தவள் சலிப்புடன் மொபைலை எடுத்தாள்.
போச்சு….எரிமலையா? பயத்துடனே பார்த்துக் கொண்டிருந்தாள். போன் அடங்கி அமைதியாகிவிட்டது.
மீண்டும் உயிரே உயிரே என்று தொடங்க வேறு வழியின்றி பச்சை வட்டத்தை ஸ்வைப் செய்து காதுக்கு கொடுத்தாள்.
என்னடி உனக்கு கொழுப்பு கூடிப் போச்சா?சிவகாசி பட்டாசாய் வெடித்தான்.
இல்லையே ரீசன்டா தான் மாஸ்டர் செக்கப் பண்ணினேன் கொலஸ்ட்ரால் லெவல் நார்மல். அலட்டிக் கொள்ளாமல் அவன் தொனியிலேயே பதில் கொடுத்தாள்.
நேரில் வந்தேன்னு வை மகளே நடக்கிற கதையே வேற…. மரியாதையா வீட்டுக்கு வந்து சேருடி உறுமினான்.
சாரி எனக்கு வர ஐடியா இல்லை கமரிய குரலில் அழுத்தமாய் சொன்னாள்.
எனக்கு விடற ஐடியா இல்லை பல்லை கடித்தான்
அவள் புறம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
என்ன நயாகரா ஃபால்ஸ் ஓபன் பண்ணிட்டியா? விகடம் பேசினான்.
நான் என் அழப்போறேன்? அவள் அடக்கிய கண்ணீர் குரலை வெளிப்படுத்தாது கேட்டாள்.
நம்ம ரெண்டு பேருக்குள்ள மூன்றாவது மனுஷங்க நுழையறதை நான் எப்போதும் விரும்ப மாட்டேன் உனக்கு தெரியுமே…
புரிந்து கொண்டவள் பதில் ஏதும் கூறவில்லை.
லவ் பண்றப்போ சந்தோஷமா இருந்துச்சா? இப்போ என்னோட வாழறது உனக்கு கசக்குதோ…?
உங்களோட வாழறது கசக்குதுன்னு சொன்னேனா?
என்னோடன்னா என் குடும்பத்தோடன்னு அர்த்தம்!
நம்ம குடும்பம்னா அது நீங்க,நான், நம்ம குழந்தை அவ்வளவுதான்.
வாயை மூடு!உனக்கு எல்லாம் சொல்லி தான் கல்யாணம் பண்ணினேன்.அப்போ பல்லை இளிச்சிட்டு ஓகே சொன்ன தானே…?
ஆமா சொன்னேன்…என் தலையில் நானே மண்ணை வாரி போட்டுகிட்டேன் போதுமா? அவள் வெடித்து சிதறினாள்.
யாருகிட்ட பேசறேன்னு நினைவு இருக்கா?அவன் கொலை வெறியானான்.
இன்னும் இன்னும் பேச்சை வளர்க்க விருப்பமின்றி சலிப்புடன் மொபைலை பார்த்தாள்.
அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்! அரிச்சந்திரனுக்கு ஒரு சொல்,அர்ஜுனனுக்கு ஒரு வில், ராமனுக்கு ஒரு இல் அப்படின்னு எங்க பாட்டி சொல்லுவாங்க.அதை நான் ஸ்ட்ரிக்ட் ஃபாலோ பண்ற ஆளு!
(இல் என்றால் வாழ்க்கை துணை) எனக்கு கழுத்தை நீட்டிட்டா அவ்வளவுதான் எந்த சூழ்நிலையிலும் என்னை விலக அனுமதிக்க மாட்டேன்னு சொல்லி தான் உன்னை கல்யாணம் பண்ணினேன்.
நீயா வந்தா மரியாதை நான் வந்தா உங்க அப்பனுக்கும் எனக்கும் முட்டிக்கும். எப்படி சௌரியம் என்று நீயே முடிவு பண்ணிக்கோ! அவள் பதிலை எதிர்பாராது அழைப்பை துண்டித்தான்.
“——————-”
வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு மண் சட்டியில் புதிதாய் மலர்ந்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு மிக மிக பிடித்த சிவப்பு ரோஜா…இன்று ரசிக்க தோன்றாது வெறும் காட்சியாய் கண்ணில் பட்டது அவ்வளவுதான்.
அவளுக்குள் இருந்த துடிப்பு குறும்பு எல்லாம் அடங்கி போய் விட்டிருந்தது.
நேத்ரா என்னம்மா மொட்டை மாடியில் உட்கார்ந்துவிட்டேன் துணி காய வைக்க வந்த வேதம் கேட்டார்.
சும்மாதம்மா….ரோஜா செடியை பார்க்கணும் போல இருந்துச்சு!மழுப்பலாய் சிரித்தாள்.
நேத்ரா உன்னால மாப்பிள்ளை விட்டுட்டு இருக்க முடியாது…ஈகோ பார்க்காம கிளம்பி போம்மா!
குடும்பம்னா மாமனார்,மாமியார், நாத்தனார்,கொழுந்தன் இப்படி எல்லாம் சேர்ந்ததுதான்.இதில் புருஷன் ஒருவன் சரியா அமைந்துட்டா மற்ற உறவில் வரும் உரசலையெல்லாம் பெருசு படுத்த கூடாது!
உன் புருஷன் கோபக்காரனாக இருந்தாலும் குணத்தில் கோபுரம்.நீ காதலிச்சு ஆசைப்பட்டு கட்டினவரை பற்றி நான் உனக்கு சொல்ல தேவையில்லை.
மகளை யோசிக்க வைத்து விட்டு அவர் கீழ இறங்கி போய்விட்டார்.
“—————-”
நேத்ரா ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவு. மாமியார் வீட்டில் கோபித்துக் கொண்டு குழந்தையோடு வந்தாலே தவிர என்ன பிரச்சனை என்று பெற்றவர்களிடம் சொல்லவில்லை.அவள் சொல்ல விரும்பியதும் இல்லை அவர்களும் தோண்டி துருவி கேட்கவில்லை.
அப்பா சாயந்திரம் நான் கிளம்புறேன்! அலுவலகம் கிளம்பும் தந்தையிடம் சொன்னாள்.
ஏம்மா? உனக்கு விருப்பம் இல்லாம நீ போக வேண்டாம். வெங்கடாசலம் மகளை பரிவுடன் பார்த்தார்.
இல்லப்பா மனசு சரியில்லைன்னு நாலு நாள் தங்கிட்டு போகலாம்னு வந்தேன்.வந்து ஒரு வாரம் ஆகுதே!
சரிம்மா டிரைவரை அனுப்புறேன் பார்த்து பத்திரமா போயிட்டு வாடா! அவள் சிகை கோதி விட்டுப் போனார்.
“————”
அன்னம் கொள்ளு பேர குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அக்கா அக்கா கிளி அக்கா அழகு பச்சைக்கிளி அக்கா என்று குழந்தை மொழியில் பாட்டு பாடி சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தார்.
காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்த உடனே முகம் புன்னகையை அப்பிக் கொண்டது.
பிரணவ் குட்டி வந்துட்டீங்களா செல்லம்… ஓடிப்போய் குழந்தையை வாங்கிக் கொண்டான்.
டேய் வெளியில் போயிட்டு வந்தா கை கால் கழுவாமல் குழந்தையை தொடக்கூடாது! அன்னம் பேரனை சத்தமாய் அதட்டினார்.
மங்களம்மா நேத்ரா சாப்பிட்டாளா?கிச்சனுக்குள் குரல் கொடுத்தான்.
இல்லை தம்பி,பாப்பா பசிக்கலைன்னு சொல்லிடுச்சு! உள்ளிருந்தபடியே பதில் கொடுத்தார்.
“————–”
விடு விடு என்று அறைக்குள் நுழைந்தவன் சுருண்டு படுத்திருக்கும் மனைவியை பார்த்தான். அவசரமாய் குளித்து உடைமாற்றி கீழே போய் இருவருக்குமாய் சப்பாத்தியும் தக்காளித் தொக்கும் கொண்டு வந்தான்.
நேத்ரா எழுந்திரு சாப்பிடலாம்.
அவளிடம் அசைவே இல்லை.
நேத்து குட்டி எழுந்திருடி!அவளை தூக்கி அமர வைத்தான்.
அழுது சிவந்து வீங்கிய முகத்தை கண்டான்.
ஒரு கணம் துடித்து போனான்.இப்போ என்னடி நடந்து போச்சு? எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லை?அவள் கன்னத்தை மிருதுவாய் தட்டினான்.
அவன் கரத்தை வெடுக்கென்று தட்டி விட்டாள்.அதில் அவ்வளவு எரிச்சல் மண்டி கிடந்தது.
சரி சாப்பிடு! தட்டை நீட்டினான்.
பசிக்கல… மீண்டும் படுக்க முயன்றாள்.
தாய்ப்பால் கொடுக்கிறவ பட்டினி கிடக்கலாமா?சாப்பிட்டு படு! முறைத்த வண்ணம் தட்டை நீட்டினான்.
இதற்கு மேல் அவனிடம் முரண்டு பிடிக்க முடியாது என்று உணர்ந்தவள் எந்திரம் போல் கடகடவென்று மூன்று சப்பாத்தியை முழுங்கினாள்.
குழந்தையோடு சற்று நேரம் விளையாடினான்.குழந்தை உறங்கிய பின் அலுவலக அறைக்குள் நுழைந்து கொஞ்ச நேரம் வேலை பார்த்தான்.
கையை தலைக்கு அண்டை கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தாள்.
தண்ணீர் குடித்துவிட்டு வந்தவன் அவளை தன் புறம் திருப்பி அணைத்துக் கொண்டு படுத்தான்.
ம்ம்ம்ம்ச்…. அப்பட்டமான சலிப்புடன் அவனை விலக்கி விட முயன்று உதறினாள்.
ஒரு மில்லி மீட்டர் கூட அவனை அசைக்க முடியவில்லை.
சோர்ந்து இருப்பவளை பார்த்து சிரித்தவன் இதுக்கெல்லாம் வாய்தா வாங்க முடியாது கண் சிமிட்டியபடி அவளை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டான்.
———- தொடரும் ——–
error: Content is protected !!