Skip to content
Post Views: 3,553
சித்ரா பாதி நாட்கள் தாய் வீட்டோடுதான் என்றாலும் வளைக்காப்பை முறையாகச் செய்யவேண்டுமே என்ற எண்ணத்தோடு கணவனிடம் வந்து நின்றார் மயிலம்மா அவர் வடிவேலு பாணியில் தன் வேட்டியை உதறி காண்பித்தார்.
Advertisement
மகனிடம் எப்படி கேட்க என்ற தயக்கம் கொஞ்சம்… பயம்கூட… பிறகு பேச்சு முற்றி கத்தலாகி மருமகளை நோக்கி இவர் வசவுகளை கொட்ட உங்களை விட்டு என்னால இருக்க முடியாது என்று வெட்கம் கெட்டு அனைவர் முன்னும் அவனைக் கெஞ்சி நின்றவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அல்லவா அன்று சென்றான்.
Advertisement
Advertisement
அவன் அருகில் செல்லவே முடியாது கடித்து குதறி வாயில் போட்டு மென்று துப்பி விடுவான் அன்று கொஞ்சம் குறைவாகப் பேசியிருக்கலாம் என்று இந்த ஒருமாதமாகத் தினமும் தன்னையே திட்டிக்கொள்கிறார்தான் ஆனால் என்ன செய்ய இந்த வாய் எப்பொழுது அடங்கியிருக்கிறது.
Advertisement
அன்று ஹோட்டலுக்கு என்று வெளியே செல்ல வந்தவர்களைப் பிடித்து நிறுத்தித் தாயும் மகளும் நியாயம் கேட்க வாசனுக்கு வேலை இல்லை என்பது உண்மைதான் என்று ராமலிங்கம் கூற சித்ரா நம்பவில்லை.
“நீங்களும் என்னப்பா அவங்களோட சேர்ந்துக்கிட்டு பேசுறீங்க வாரத்துல ரெண்டு நாள் அவர் வேலைக்குப் போறார் அதோட வீட்டிலேயும் வேலை செய்றார் அப்புறம் எப்படி இவங்க சொல்றது உண்மையாகும்” என்று கேட்டாள்.
அவளால் நம்ப முடியாது ஏன் தங்களால் கூட முதலில் நம்ப முடியவில்லையே என்று எண்ணிய மருதவேலு “உன் புருஷனுக்கு போனை போடு” என்றான்.
“அவர் எதுக்கு” என்றாள் அவள்.
“நீ கூப்பிடுறியா நானே கூப்பிடட்டுமா” என்றவனின் குரலின் அழுத்தத்தில் கணவனுக்கு அவள் அழைக்க “நான் எதுக்கு வரணும் தப்பு செஞ்சது உன் அண்ணன் பொண்டாட்டி அதுக்கு நான் வந்து விளக்கம் சொல்லனுமா வர முடியாது நான் என்ன இவனுக்கு வேலைக்காரனா” என்று எகிறினான்.
“சரி வர வேண்டாம் உன் புருஷன் பேர்ல ஒரு கேஸ் இருந்தது அது என்னனு அங்கேயே போய் விசாரிப்போம் அப்படியே நாலு பெரிய மனுஷங்களையும் கூப்ட்டுப்போம் இப்போ எங்களுக்குப் பதில் சொல்ல முடியாதுன்னா எல்லார் முன்னாடியும் சொல்லட்டும், அவங்க அப்பா அம்மாவும் சேர்ந்துதானே பொய் சொல்லி ஏமாத்தியிருக்காங்க” என்றவன்.
“அப்பா நீங்கப் பெரியவங்களை கூப்பிடுக நான் கார் எடுக்குறேன் நேரா போலீஸ் ஸ்டேஷன் போவோம்” என்க.
அலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தவன் “ஏய் இப்போ எதுக்கு உன் அண்ணன் அங்க போகணும் சொல்றான் அதெல்லாம் வேண்டாம் நாங்களே வரோம்” என்று வைத்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் தாய் தந்தையோடு வந்து சேர்ந்தான்.
மருதவேலு ஒன்றும் பேசவில்லை ராமலிங்கம் தான் தொடங்கினார் “சொந்தம் ஏமாத்தமாட்டீங்கன்னு நம்பித்தானே நீங்கக் கேட்ட எல்லாத்தையும் போட்டு எங்க சக்திக்கு மீறி இந்தக் கல்யாணத்தை நடத்தினோம் எவ்ளோ பெரிய விஷயத்தை மறச்சிருக்கீங்க அதும் ரெண்டு வருஷமா வேலையே இல்லாம வீட்டில இருக்கார் உங்க பிள்ளை அதுவும் போதாதுன்னு பிரச்சனை வேற”.
“கொஞ்சமாவது மனசாட்சி இருந்தா இதை மறச்சு இந்தக் கல்யாணத்தை நடத்தியிருப்பீங்களா இவங்க என்ன செய்யப் போறாங்க வக்கத்தவங்கதானே அப்படினு ஒரு எண்ணம் பொண்ணை வேற குடுத்துருக்கோமே அந்த இளக்காரம் இல்லையா, இப்போவும் என் புருஷன் பொய் சொல்லல அவருக்கு வேலை இருக்குனு நம்பிகிட்டு நிக்குறா ஒருத்தி சொல்லுங்க நான் சொல்றது உண்மையா இல்லையா” என்றார் ராமலிங்கம்.
“அவன் எந்தத் தப்பும் செய்யல அவனுக்கு நேரம் சரியில்லாம அவன் மேல ஒரு பழி விழுந்துடுச்சு அதுல மனசு சங்கடப்பட்டு கிடந்தான் அதான் அவனுக்கு ஆறுதலா இருக்குமே அவன் வாழ்க்கைக்கும் நிம்மதி கிடைக்குமேன்னு சித்ராவை கேட்டோம், வாசனுக்கு சித்ராவை ரொம்ப பிடிக்கும் அதான் அவளையே கட்டிவெச்சோம்” என்ற அத்தையை பார்த்துப் பல்லைக் கடித்தான் வேலு அவன் தங்கையோ கணவனைக் காதலாய் பார்த்தாள்.
“நீங்கப் பேசுறது உங்களுக்கே சரின்னு படுதா இங்க கேள்வியே ஏன் எங்ககிட்ட இந்த விஷயங்களைச் சொல்லாம ஏமாத்தினீங்க அதுதான் அதுக்கு பதில் சொல்லுங்க” என்றார் ராமலிங்கம்.
“எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க என்ன ஏமாத்தினாங்க அவனுக்கு என்ன வேலையேவா கிடைக்காம போய்டும் அவன் படிப்புக்கு எப்போனாலும் நல்ல வேலை கிடைக்கும் அவன் என்ன படிக்காத முட்டாளா” என்றவர் பார்வை மருதவேலுவின் மீது பதிய.
அதுவரை கணவனின் கையைப் பற்றி அமைதியாக நின்றவள் “இங்க பேச்சு உங்க மகனைப் பத்தி மட்டும்தான் அதை மட்டும் பேசுங்க என் புருஷனை நீங்கப் பேசக் கூடாது” என்றாள் காமாட்சி அழுத்தமான குரலில்.
“பச் ராணியம்மா” என்றான் மருதவேலு அதட்டலாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“பாத்தியா அவ திமிரை என்ன மயிலு உன் அண்ணன் குடும்பத்துக்கு இதுதான் மரியாதையா உன் மருமகளை பேசவிட்டு வேடிக்கை பாக்குறியா” என்றார் வாசனின் தாய்.
‘உடனே மயிலம்மாவால் ஒன்றுமே அப்பொழுது பேச முடியவில்லை மருமகனுக்கு வேலை இல்லையா அதுவும் இரண்டு வருடமாக அதை மறைத்து ஒரு திருமணம் இந்த அறிவுகெட்ட கழுதை இதைக் கூடத் தெரிந்துகொள்ளாமல் என்ன வாழ்ந்தாள் இத்தனை நாட்களாக’ என்ற அதிர்ச்சியில் இருந்தார்.
“என்ன மயிலு கேட்டுட்டே இருக்கேன் அப்படியே நிக்குற” என்ற குரலில் மீண்டவர்.
“ஏன் அண்ணா இப்படி பண்ணீங்க உங்களை நம்பித்தானே என் பொண்ணை குடுத்தேன் எங்க பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்” என்றார் மயிலம்மா அண்ணனை நேரே பார்த்து.
“அம்மா அதுதான் அவருக்கு வேலை கிடைக்கும்னு அத்தை சொல்றாங்கள்ல ஏதோ கஷ்டகாலம் எல்லாருக்கும் எல்லாமும் சரியாவே நடக்குதா அதெல்லாம் அவர் நல்ல வேலைக்குப் போவார்” என்றவள் வாசனை திரும்பிப் பார்த்தாள்.
“ஆமா அத்தை எனக்கு நல்ல வேலை கிடைக்கும், முன்னாடி ஏன் சொல்லலைனா நீங்கச் சித்ராக்கு வேற வரன் பாத்தீங்க எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் வேலை இல்லன்னு தெரிஞ்சா அவளை எனக்குக் கட்டித்தர மாட்டீங்களோன்னு பயத்துல சொல்லல அத்தை இப்போவும் சின்ன சின்ன வேலை எல்லாம் செய்றேன் சீக்கிரமே பெரிய கம்பெனில கிடைச்சுடும் அதுக்குள்ள எதுக்கு உங்களுக்குச் சொல்லிக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லல” என்றான் மிகவும் அடக்கமாக.
அப்படியே உருகி விட்டது சித்ராவுக்கு மயிலம்மாவும் அந்த வலையில் விழுந்துதான் விட்டார் ‘அடிதூள்’ என்று மனதில் நினைத்துக்கொண்டாள் காமாட்சி.
“இவ்ளோதான் விஷயம் இதுக்கு உன் மருமக என்னமாதிரி நாடகம் போட்டிருக்கா பாரு” என்றார் வாசனின் தாய்.
“இங்கபாரு வேலு என்னமோ இவ வீட்டில எல்லாமே ஒழுக்கமா இருக்குற மாதிரி ஆளுக்கு முந்தி இவ எதுக்கு இதைத் தூக்கிட்டு வந்தா இவளை நீ கவனி அவ செய்ற திருட்டுத்தனத்தை மறைக்க இப்படியொரு பிரச்சனையைக் கிளப்பி விட்டிருப்பா” என்ற மயிலம்மாவை “போதும்” என்ற கர்ஜனையில் அடக்கினான் மகன்.
“இனி ஒரு வார்த்தை பேசக் கூடாது நீங்க, அவ உங்ககிட்ட சொன்னாளா இல்ல உங்க மககிட்டத்தான் சொல்லிச் சண்டை பிடிக்கச் சொன்னாளா இந்த வீட்டு பொண்ணோட வாழ்கையாச்சேன்னு என்கிட்டே… அவ புருஷன்கிட்ட இந்த அறிவு கெட்டவளோட அண்ணன் கிட்ட சொன்னா”.
“நான்தான் அப்பாகிட்ட சொன்னேன் விசாரிச்சேன் கண்டுபிடிச்சேன் நாங்க சொன்ன எதையுமே நம்பாத ஏத்துக்கமுடியாத நீங்க உங்க மருமகன் சொன்னதும் அப்படியே நம்புறீங்க”.
“ஆபிஸ் உள்ளேயே போக முடியாத உங்க மருமகன் என் பொண்டாட்டியை எப்படி வேவு பாத்தாராம் அதையும் கேட்டுச் சொல்லுங்களேன் இப்போகூட நாங்க யாரோட வாழ்க்கைக்காகப் பேசுறோம்னு உனக்குப் புரியலல” என்றவன்”.
“இது சரிவராது நாம தனி தனியா போய்டலாம், ஒரு இட்லி மாவுக்கு கணக்கு சொல்ற அவகிட்ட… அப்படியே அவளுக்குன்னு எடுத்திருந்தாலும் அவகிட்ட எப்படிம்மா நீ அப்படி பேசலாம் என் பொண்டாட்டிமா எனக்கு இருக்குற எல்லா உரிமையும் இந்த வீட்டில அவளுக்கும் இருக்கு அதுவும் அவ யாருக்காக எடுத்தா எனக்காக உன் பிள்ளைக்காக அதாவது உங்க புத்தியில உரைச்சுதா இல்லையா”.
“எனக்கு ஒரு வேலை சாப்பாடு போடவாம்மா கணக்கு பாத்த நீ” என்று மகன் கேட்க ஆடிப்போனார் மயிலம்மா.
“ஐயோ இல்ல வேலு” என்றவர் ஏதோ கூற வர “வேண்டாம்” என்று தடுத்தான்.
“உன் வீட்டுக்காரருக்கு வேலை இல்லாதது உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அப்படித்தானே” என்றான் தங்கையைப் பார்த்து.
“ஆமாம், அவர் சொல்றதும் சரிதானே அவருக்கு வேலை இல்லனு சொன்னா நீயே கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டு இருந்திருக்க மாட்ட ஏற்கனவே வேண்டாம் வேண்டாம்னு தானே சொன்ன அந்தப் பயத்துலதான் அப்படி செஞ்சிட்டார் சீக்கிரமா அவருக்கு வேலை கிடைக்கும்” என்றாள் மிதப்பாகவே.
“சந்தோசம் நல்லா இருந்தா சரிதான், அப்போ நான் எதுவும் கேள்வி கேக்க கூடாது அப்படியா” என்க.
“எதுக்கு கேக்கணும் இவ்ளோ நாள் எனக்குத் தெரியல இப்போ தெரிஞ்சிருச்சே அப்புறம் என்ன இதுவே கல்யாணத்துக்கு அப்புறம் வேலை போயிருந்தா அவரை விட்டுட்டா வர முடியும் என் வாழ்க்கை நான் பாத்துப்பேன்” என்றாள்.
“ரொம்ப சந்தோசம்” என்றவன் “உங்ககிட்ட எல்லாம் பேச்சுவாங்க நான் கல்யாணம் கட்டி கூட்டிட்டு வரல இதுக்கு ஒரு முடிவு தெரியற வரைக்கும் அவங்க பாட்டி வீட்ல இருக்கட்டும்” என்றவன் அவளைக் கிளம்ப சொல்ல.
அவனை அதிர்வோடு பார்த்தவள் “மாட்டேன்” என்றாள் விழிகளால் அவனும் அடமாக நின்றான்.
“நான் போகமாட்டேன் நீங்க இருப்பீங்களா என்னை விட்டு என்னால உங்களை விட்டு இருக்க முடியாது” என்று அழுதவளை பிடிவாதமாக அழைத்துச்சென்று விட்டிருந்தான்.
அதன் பிறகு வீடு தேடும் வேலைதான் மும்முரமாக நடந்தது லைன் வீடுகள் இல்லையென்றால் சிங்கள் பெட் ரூம் பிளாட் அப்படித்தான் தேடினான்.
தந்தையால் முன் போல ஷேர் ஆட்டோகூட தொடர்ந்து ஓட்ட முடியவில்லை சித்ராவும் பிரசவத்துக்கு வந்துவிடுவாள் ஏதேனும் அவசரம் என்றால் என்ன செய்ய, வெளியூர் சவாரிக்கு போகும் நாட்களில் ஏதேனும் அவசரம் என்றால் அருகில் காமாட்சியாவது இருப்பாளே ஒட்டி உறவாட அவனுக்கும் விருப்பம் இல்லை… கடமை அதைச் செய்யாமல் விட முடியவில்லை.
இபோழுதுதான் வீடு அமைந்தது மேல் மாடியில் ஒற்றை படுக்கை அறை வீட்டை இவர்களுக்கும் கீழே தாய் தந்தைக்கும் என்று முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டான் பொருட்களை அங்கேயும் இங்கேயுமாகப் பிரித்துப் போட்டுக்கொண்டான்.
சமையல் அறை பொருட்கள் மட்டும் ஒன்றுமே அவன் எடுக்கவில்லை எதுவுமே வேண்டாம் என்று மறுத்துவிட்டான் இதையெல்லாம் பற்றிப் பேசத்தான் மனைவியை அழைத்தது அவள்தான் எடுக்கவில்லையே, சரி வந்தபிறகு நேரில் சென்றே பேசிக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டான்.
சவாரி முடிந்து மறுநாள் அதிகாலை வந்துவிடுவான் ஆகாயால் அப்படியே கிளம்பிவிட்டான் திரும்பி வந்து மனைவியைப் பார்க்க இவன் ஆசையாகக் காத்திருக்க இறுதியில் அவன் மனைவிதான் அவனை வந்து பார்த்தாள் அதுவும் மருத்துவமனையில்.
அன்று அதிகாலை நான்கு மணிக்கே வந்துவிட்டான் வந்தவன் உறங்ககூட இல்லை அப்படியே குளித்துக் கிளம்பி பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான் போகும் வழியில் மார்க்கட்டில் நிறுத்தி மல்லிப்பூ வேறு.
காலையிலே மனைவியைப் பார்த்துச் சமாதானப்படுத்தி விஷயங்களைச் சொல்லிச் சம்மதிக்கவைத்து அலுவலத்துக்கு அனுப்பாமல் அப்படியே கடத்திக்கொண்டு புதுவீடு சென்று கெஞ்சி கொஞ்சி ஒரு மாத தவிப்பை ஏக்கத்தை ஆசையை அவளிடம் பகிரப் பறந்து சென்றான் அவன் அவஸ்த்தை புரியாத அரைவேக்காட்டு நாய் ஒன்று “வள்” என்று குறைத்துக்கொண்டு வண்டியின் முன்னே பாய ஒரு நொடி தடுமாற்றத்தில் தார் சாலையில் வண்டி சறுக்கிக்கொண்டு சென்றது.
தன் வேலை முடிந்தது என்று நாய் படுத்து உறங்கிவிட இவன் தலையில் கட்டோடும் காலில் கட்டோடும் மருத்துவமனை பெட்டில் கிடந்தான், விழுந்தபிறகும் அவன் தெளிவாகவே இருந்தான் காலில் நல்ல அடி என்பது அப்பொழுதே தெரிந்துவிட்டது அதிகம் ஆட்கள் இல்லை இருந்தவர்கள் சிலர் ஓடி வர ஆட்டோ பிடித்து அவனே ஹாஸ்பிடல் சென்றுவிட்டான் நண்பனை அழைத்துப் பைக்கை எடுத்துக்கொள்ளச் சொன்னான்.
சிகிச்சை நடக்கையில் தந்தைக்கு அழைத்துச் சொன்னான், காமாட்சிக்கு இருப்பே கொள்ளவில்லை மணி ஒன்பதயும் கடந்துவிட்டது தினமும் அவள் அலுவலகம் செல்லும் நேரம் அழைத்துவிடுவான் அவள் எடுப்பதில்லையே தவிர அவன் அழைப்பு நின்றதில்லை இன்று நேரம் கடந்துவிட்டது வேலை ஒன்றும் ஓடவில்லை.
“எனக்குப் போன் பண்ணாம என்ன வேலை இவருக்கு” என்று கோபம் கூட வந்தது அதற்குமேல் பொறுமை இல்லாமல் அழைத்துவிட்டாள், அவனிடம் பேசக் கூடாது அவன் குரலைக் கேட்டால் போதும் என்று எண்ணி அவள் அழைக்க எடுத்ததோ அவள் மாமனார்.
“அம்மாடி உனக்குத்தான் கூப்பிடனும் நினச்சேன் வேலுக்கு ஆக்சிடன்ட் இங்க” என்று மருத்துவமனை பேர் சொன்னதும் உடைந்துவிட்டாள், விவரம் சொல்லி அனுமதி வாங்கவே நேரம் ஓடிவிட்டது வேகமாக வெளியில் ஓடி வந்தாள் வண்டியை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை ஆட்டோ பிடித்துக்கொண்டாள், இத்தனை நேரம் பிடித்துவைத்திருந்த கண்ணீர் கன்னம் தாண்டியது.
நல்ல உறக்கத்தில் இருந்தான் மருதவேலு “ஊசி போட்டிருக்காங்க கொஞ்ச நேரத்துல முழிச்சுடுவான்” என்றார் ராமலிங்கம் தலை ஆட்டிக் கேட்டுக்கொண்டாள்.
“ஒண்ணுமில்லம்மா கால்ல தான் கொஞ்சம் அடி அதிகம், ஒரு மாசம் ஆகும்போல” என்றார் அவர் உதடு கடித்து நின்றிருந்தாள், அவள் நிலை புரிந்தவர் “நான் வெளில இருக்கேன் ஏதாவதுன்னா கூப்பிடுமா” என்று வெளியேறினார்.
அடுத்தநொடி அவனை நெருங்கி அமர்ந்தாள், அவனை அப்படி பார்க்கவே முடியவில்லை முகம் முழுதும் தாடி மண்டி கிடந்தது இளைத்து போயிருந்தான் தலையில் கட்டு கையில் சிராய்ப்பு… அவன் முகம் சின்னதாகச் சுருங்கியது வலிக்கிறதோ என்று பார்த்திருந்தாள்.
இன்னும் நெருங்கி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள் விழிநீர் அவன் முகத்தில் விழ “ராணியம்மா” என்றான் மிக மிக மெலிதாக, அவள் அவனிடமிருந்து விலகி அவனைப் பார்க்க விழிகளை மெல்ல திறந்து அவளைப் பார்த்தான் அவன் இதழ்கள் மெலிதாகப் புன்னகைத்தது.
“நீங்க ட்ரைவரா ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாத ட்ரைவர்” என்றாள்.
அவன் சிரித்தான் “எனக்கு ரொம்ப கோபம் அடிக்கக்கூட முடியல இப்படி படுத்திருக்கீங்க” என்றவளுக்கு வார்த்தைகளுக்குப் பதில் கேவல்தான் வந்தது.
“அழாதீங்க ராணியம்மா எவ்ளோ நாள் கழிச்சு பாக்குறேன் இப்படி அழுதா எப்படி எனக்கு ஒண்ணுமில்ல சரியாயிடும், நீ சாப்பிடுறியா இல்லையா” என்றான் மெல்ல.
அவள் அவனை முறைக்க அவள் கையைப் பற்றியவன் “அடிபட்டதை விட ரொம்ப வலிக்குது நீங்க என்னை விட்டு விலகி நிக்குறது” என்றான் ஏக்கம் சுமந்த விழிகளோடு, அவன் மார்பில் முகம் புதைத்தவள் கொஞ்சம் அழுத்தமாகவே கடித்தாள் அவன் தாடியில் கை நுழைத்து மொத்தமாகப் பற்றி வலிக்க இழுத்தாள் மறுகையால்.
வலித்தது அவனுக்கு அந்த வலி மிக மிகத் தேவையாக இருந்தது அப்படியொரு நிறைவும் சுகமும் அவனுக்கு, அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டான்.
“ஏன் இப்படி என்ன கோலம் இது” என்றாள் அவன்மீது சாய்ந்துகொண்டு.
“பார்த்து ரசிக்க என் ராணியம்மா என் கூட இல்லையே” என்றான்.
அழுகை அழுகை மட்டுமே காமாட்சிக்கு அவளுக்குத்தான் உடம்பு முடியவில்லையோ என்று என்னும்படி முகம் எல்லாம் வீங்கிவிட்டது, விவரம் அறிந்து மயிலம்மா வர, இரவுணவை சமைத்து எடுத்துக்கொண்டு பால் ஒரு பிளாஸ்கில் டீ ஒன்றில் என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர் அன்னம்மாவும் மாசிலாமணியும்.
“இப்படியே அழுதிட்டு இருந்தா அவரை யார் பாக்குறது நீ வீட்டுக்குப் போ அப்பா இருப்பார்” என்றார் அன்னம்மா, உடனே விழிகளைத் துடைத்துக்கொண்டவள் “நானே இருக்கேன் அழமாட்டேன்” என்றாள்.
இரண்டு நாட்கள் இருக்கட்டும் என்று மருத்துவர் கூறியிருக்க “காலைல சாப்பாடு எடுத்துட்டு நாங்களே வரோம் வெளில வாங்க வேண்டாம்” என்ற அன்னம்மா மகளுக்கு எதுவும் தேவையா என்று கேட்டுக்கொண்டார் அவளுடைய உடையையும் எடுத்துவர சொன்னாள்.
“சரி” என்றவர்கள் கிளம்பினர், ராமலிங்கம் மனைவியை முறைத்தார் வெறும்கையோடு வந்திருந்தார் மயிலம்மா.
“நான் நிக்கவா” என்றவரை பார்த்த மருதவேலு தந்தையை பார்த்து “அப்பா ப்ளீஸ் உங்களுக்குப் புண்ணியமா போகும் கூட்டிட்டு போங்க ரெண்டு நாள்ல நானே வீட்டுக்கு வந்திடுவேன் அதுவரைக்கும் நீங்க அங்க பாருங்க” என்றுவிட்டான், மகனின் மனது புரிந்து மயிலம்மாவை அழித்துக்கொண்டு சென்றுவிட்டார் ராமலிங்கம்.
கணவனுக்கு உணவு கொடுத்து மாத்திரைகளைக் கொடுத்து முடித்துத் தானும் உண்டுமுடித்து அனைத்தையும் ஒதுங்க வைத்தாள் காமாட்சி, சாய்வாக அமர்ந்திருந்தவன் அவள் பக்கம் கை நீட்ட வேகமாக வந்தவள் அவன் கையைப் பற்றிக்கொண்டு “படுக்கணுமா வலிக்குதா” என்க.
“இல்லை” என்றவன் அவள் நெற்றி கன்னம் என்று வருடி இதழில் விரலை நிலைக்க விட்டு அவள் விழிகளைப் பார்த்தான், அவள் விழிகள் மெல்ல மூடிக்கொள்ள அவனுடைய ஏக்கமும் தவிப்பும் அவள் இதழ்களில் இளைப்பாறியது.
இரண்டு நாட்களும் அவனை விட்டு விலகாமல் இருந்தாள் காமாட்சி அன்று வீட்டிற்கு செல்லலாம் என்று மருத்துவர் கூற அவளைத்தான் பார்த்தான் மருதவேலு.
“வீட்டுக்குப் போலாம்” என்றாள் அவனிடம்.
“நான் உன்னை அங்க வரக்கூடாதுன்னு சொல்லிப் பாட்டி வீட்டில விட்டுட்டேன் என் மேல கோபமா இருக்க நீ அதை மறந்துட்டு வருவியா” என்றான்.
“உங்களை விட்டுட்டு இருக்க முடியாதுன்னுதான் போக மாட்டேன்னு சொன்னேன் இப்போவும் அதே காரணம் தான் எனக்கு உங்ககூட இருக்கணும்” என்றபோதே அவள் விழிகள் மீண்டும் கலங்கியது.
விழிநீரை துடைத்தவன் “அப்போ நம்ம வீட்டுக்குப் போலாமா” என்க.
“சரி” என்றாள்.
மாமியார் மாமனாரிடம் முன்பே விஷயத்தைச் சொல்லியிருந்தான் வீடு மாறிவிட்டதை இன்று மகள் மருமகனோடு அவர்களும் கிளம்பினர் அங்குச் செல்லும்வரைக்குமே அவளுக்குத் தெரியவில்லை வேறு வீட்டுக்குச் செல்கிறோம் என்று.
அவள் விழிவிரித்து கணவனைப் பார்க்க அவள் தோளில் கையிட்டவன் “என் ராணியமாவுக்காக ஒரு மாளிகை கட்டறவரைக்கும் இங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சீக்கிரமே அதையும் கட்டலாம்” என்றான்.
“மாளிகை எல்லாம் வேண்டாம் உங்க ஆசை படி ஒரு வீடு உங்களோட நான் அதுதான் வேணும் எனக்கு” என்றாள்.
“நடக்கும்” என்றவன் மனைவியோடு உள்ளே நுழைந்தான்.
error: Content is protected !!