Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 10.3

“அக்கா…!!” என ஓடி வந்து கட்டிக்கொண்ட தம்பியை வாஞ்சையோடு தலையை தடவி விட்ட யமுனா, 
“கிருஷ்ணா.. எப்படிடா இருக்கே..? ஒரு வருஷத்துல நல்லா வளந்துட்டடா.. வீடியோ கால்ல பார்க்க தெரியவே இல்ல. நேர்ல பாத்தா தான் தெரியுது..” என்றாள் பூரிப்பாக.


Advertisement

அதில் லேசான வெக்கம் வர, “இல்லக்கா.. எங்க க்ளாஸ்ல என்ன விட வளத்தியா இன்னும் நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?” என்றான் கிருஷ்ணா.

Advertisement

இதற்கிடையே, “ஏன்டா.. உன்னோட அந்த அக்கா மட்டும் தான் கண்ணுக்கு தெரியறாளா..? என்னையெல்லாம் கண்ணுக்கே தெரியலையா..?” என அவனிடம் வம்புக்கு சென்றாள் கங்கா.

Advertisement

“அய்யே.. நீ போய் நாலு மாசங்கூட ஆகல. ஆனா அக்கா ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் வருது. 

Advertisement

அப்போ அதுகிட்ட பேசாம உன்னையா கொஞ்சுவாங்க..?” என அவனும் அவளோடு மல்லுக்கட்ட..
“போதும் நிறுத்துங்க உங்க சண்டைய. வாங்க வீட்டுக்கு போலாம்..” என்றபடி யமுனா கனமான ஒரு பையை தூக்க,
“கொடுக்கா.. அதை நா தூக்கறேன்..” என்றான் கிருஷ்ணா.
“பரவாயில்லடா. நானே தூக்கிப்பேன். நீ இந்த சின்ன பைய மட்டும் தூக்கிக்கோ..” என்றவள், 
பஸ் நிறுத்ததிலிருந்து அவர்கள் வீட்டிற்கு வரப்பு வழியாக சென்றால் பக்கம் என்பதால் அது வழியாகவே பேசிக்கொண்டு நடந்தனர்.
பேசும் போதே தாய் தந்தை பற்றி விசாரித்து கொண்டவள் வீட்டை அடைந்ததும், “ம்மா..” என அழைத்து ஆசையாய் அன்னையை கட்டிக்கொள்ள,
லேசாக அவனை விலக்கிவிட்டவர், “பஸ்ஸூல வந்தது அலுப்பா இருக்கும். வெண்ணீ வெச்சிருக்கேன். குளிச்சிட்டு வா சாப்பிடலாம்..” என்றுவிட்டு சமையலறைக்கு சென்றுவிட யோசனையாய் அவரை பார்த்தனர் பிள்ளைகள் மூவரும்.
‘போன வருடம் தான் வந்த போது அவர் நடந்து கொண்ட விதமென்ன..? இப்போது ஏன் இப்படி..?’ என்ற சந்தேகம் எழுந்தாலும், 
அவர் சொன்னது போலவே விடிய விடிய தூங்கியும் தூங்காது வந்த அயர்வு உடலை அழுத்த மாற்று உடையை எடுத்துக்கொண்டு புலக்கடைக்கு சென்றாள் யமுனா.
கங்கா, கிருஷ்ணாவிடம் அவனுக்கு வாங்கி வந்தது பற்றி சொல்லிக்கொண்டிருக்க ஆவல் மிகுதியில் பையிலிருந்து எடுக்க போனவனை தடுத்தவள், “அக்கா வந்து காட்டுவா..” என தடுத்துக்கொண்டிருந்தாள்.
“ஏய்.. நீயும் போய் குளிச்சுட்டு வாடீ..” என உள்ளிருந்தே தாய் அதட்டல் போட,
“டேய்.. எது உனக்கு.. எது மத்தவங்களுக்குன்னு அக்காவுக்கு தான் தெரியும். எல்லாத்தையும் எடுத்து கலச்சிடாதே..” என்று எச்சரித்துவிட்டு கங்காவும் தனக்கான உடையோடு வெளியேறினாள்.
இரு மகள்களும் வந்து உணவு உண்டு முடிக்கும் வரையில் வராத தந்தை பற்றி யமுனா விசாரிக்க,
“வந்திடுவாங்க. ஒரு வேலையா போயிருக்காங்க..” என்ற தாயிடம் தோண்டி துருவி விசயத்தை கேட்க தெம்பு இன்றி ஆளுக்கு ஒரு பக்கம் சுருண்டு கொண்டனர் பயண அலுப்பில்.
யமுனா கண் விழிக்கும் போது மதிய உணவு வேளை வந்திருக்க மெல்லிய குரலில் பெற்றோர் எதோ வெளி திண்ணையில் அமர்ந்து பேசுவது கேட்டாலும் விசயம் புரியாமல் எழுந்து வெளியே வந்திருந்தாள்.
“வாம்மா.. பிரயாணம் சௌகரியமா இருந்துச்சா..?” என்ற தந்தைக்கு பதில் சொன்னவள்,
“அம்மா பசிக்குது..” என்றதும் மறுமொழி பேசாது எழுந்து சென்று சாப்பாட்டை எடுத்து வைத்தார் அவர்.
ஏதோ வித்தியாசமாக பட்டாலும், ‘எதையும் வழிய சென்று கேட்டு என்ன செய்ய..?’ என நினைத்து அமைதியாகி போனாள் யமுனா.
உண்ட கையோடு தனது பேக்கிலிருந்து பணத்தை எடுத்து வந்து தந்தையிடம் கொடுத்தவள்,
“அக்கவுண்ட் க்கு அனுப்பினது போக வரும் போது கொடுத்த காசுப்பா..” என நீட்ட யோசனையோடு அவளின் முகத்தை பார்த்தவர், பின் என்ன நினைத்தாரோ எதுவும் சொல்லாது வாங்கிக்கொண்டார்.
கங்காவும் எழுந்து உண்டு முடித்த பின் கிருஷ்ணாவிற்கென தீனா வாங்கி கொடுத்துவிட்ட டீசர்ட், பட்டாசுகளை கொடுக்க கிருஷ்ணாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.
இதற்கு முன் சில முறை வாங்கி வந்திருந்தாலும் இந்த முறை வாங்கி வந்திருப்பது அவனுக்கு அவ்வளவு பொருத்தமாய் அமைந்து போனதில் அவனை கையில் பிடிக்க முடியவில்லை.
“அக்கா.. சூப்பரா செலக்ட் பண்ணியிருக்கே..! எல்லாமே பக்காவா இருக்கு. கலர்ஸ் கூட ரொம்ப நல்லா இருக்கு. தேங்க்ஸ்..” என அவளை கட்டிக்கொண்டு அப்படி ஒரு ஆட்டம்.
“ரொம்ப அக்காவ பாராட்டாத.. அவ ஒண்ணும் உனக்காக பாத்து எடுக்கல. இதெல்லாம் அங்கே..” என கங்கா உணர்ச்சிவசப்பட்டு பேச,
அவசரமாக இடையிட்ட யமுனா, “அங்கே கம்பெனிக்கு டீசர்ட் நிறைய சேல் பண்ண கொண்டு வந்திருந்தாங்க கிருஷ்ணா. அங்கே இருக்கறவங்க செலக்ட் பண்ணி கொடுத்தாங்க. அப்படி தானேடீ..?” என கண்ணை உருட்டி சொல்ல,
அப்போது தான் தன்னை மறந்து என்ன காரியம் செய்யவிருந்தேன்..? என்பதே விளங்கியது கங்காவிற்கு. 
ஏற்கனவே தீனா, ‘இங்கே பாருடாம்மா.. அங்கே வீட்டுல யமுனா நேரம் பார்த்து பக்குவமா எங்க விசயத்தை சொல்லிக்குவா. நீ அவசரப்பட்டு சொல்லி வச்சா அப்புறம் எங்களுக்கு தான் சிரமம். 
அங்கே யமுனா சொல்லி, அதனால எதாவது உங்க ரெண்டு பேருக்கு பிரச்சினைன்னா எந்த நேரமுன்னு இல்லாம எனக்கு கூப்பிட்டு தகவலை சொல்லிடனும்.. சரியா..?’ என்றிருக்க,
இப்போது தன் தவறு புரிந்தவளாய், ‘ஆமாம்..’ என தலையசைத்தாள்.
இவர்களின் பேச்சு எதை கிருஷ்ணா கவனித்தான்..? அவனின் எண்ணம் எல்லாமே உடையில் அல்லவா இருந்தது.
சற்று நேரத்தில் அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவுகளின் குழந்தைகளுக்கு என யமுனா இங்கிருந்து எடுத்து சென்ற பனியன் செட்டுக்களை கொடுத்துவிட்டு, அவர்களின் நலம் விசாரித்து என அன்றைய நாள் அவளை பொறுத்த வரை நன்றாகவே கழிந்தது.
இரவின் தனிமையில் யாருக்கும் தெரியாமல் தீனாவிற்கு தனது போனிலிருந்து மெசேஜ் அனுப்பி வைத்தவள், அவன் பதில் சொல்லும் வரை கூட வைத்திருக்காமல் அவசரமாய் அணைத்து வைத்தாள்.
கங்காவுக்கு விசயம் தெரியும் என்றாலும் கூடவே சுற்றும் தம்பிக்கு தெரியாமல் பகலில் பேசவும் மெசேஜ் அனுப்பவும் முடியாமல் இருந்தவளுக்கு அந்த இரவு மட்டுமே அதை செய்ய முடிந்தது. 
அவர்கள் வீட்டில் தனி அறை இரண்டு இருந்தாலும் இரவில் கூடத்தில் பாய் போட்டு ஒன்றாக படுப்பதே அவர்களின் இத்தனை வருட பழக்கம்.
அப்படி இருக்க, ‘போனை நோண்டிக்கொண்டு இருந்தால் தேவையில்லாத பிரச்சினை ஏன்..?. 
அதிலும் தான் நினைத்து வந்ததை சொல்லி அவர்களிடமிருந்து சம்மதம் வாங்கும் வரை அடக்கி வாசிப்பது நல்லது..’ என நினைத்தவளுக்குள் ஒரு வித பயமும் இருக்க அதை செய்திருந்தாள்.
மறுநாள் விடியலில், “அக்கா.. இங்கே பாரு..! இந்த கிருஷ்ணா உன் போனை உடச்சிட்டான்..” என்ற கங்காவின் குரலில், 
பதறி வீட்டுக்குள் ஓடி வந்தவள் கண்டது சார்ஜரில் இருந்த போன் கீழே விழுந்து நொறுங்கி போயிருந்ததையே..
“அக்கா.. நா இல்லக்கா.. இந்த லூசு தான் எடுத்து உடைச்சா..” என்றான் கிருஷ்ணா.
“இல்ல.. நா எதுக்கு எடுக்கறேன். நீ தான் எடுத்தே..” என கங்கா அவன் தலையில் கொட்ட, 
“நீ பாத்தியா..? நா வரும் போதே இப்படி தான் இருந்துச்சு.. அதான் வந்து எடுத்தேன்..” என்று அவன் இவளை அடிக்க என இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொள்ள,
அப்போது தான் பாலோடு உள்ளே வந்த அவர்களின் அன்னையோ, “ச்சை.. தீபாவளி அதுவுமா காலங்காத்தால என்ன சண்ட..?” என அதட்டினார்.
“அம்மா.. இங்கே பாரு அக்கா போனை..” என கங்கா காட்ட,
“அத்தன விலை போட்டு அவ வாங்கி வச்சத யாரு உடைச்சது..? மரியாதையா உண்மைய சொல்லல கரண்டிய காயப்போட்டு இழுத்திடுவேன்..” என பிள்ளைகள் இருவரையும் அவர் மிரட்ட,
“அம்மா.. நா சார்ஜர்ல போட்டது சரியா நிறுத்தி வைக்காம போயிட்டேன் போல. அதுல தான் கீழ விழுந்திடுச்சு.. அவங்கள திட்டாத..” என வருத்தமாக யமுனா சொல்ல,
“ஒரு பொருள பத்திரமா பாத்துக்க தெரியுதா..? இதுல தனியா வேற உன்னைய விட்டு வச்சிருக்கோம்..” என திட்டிக்கொண்டே சமையலறைக்கு அவர் சென்று விட,
உடைந்த போனை கையில வைத்திருந்தவளின் உள்ளத்தில் ஏதோ ஒரு நடுக்கம்.
அதற்கு காரணம் புரியாத போதும் அதன் தாக்கம் அவளை பதட்டத்தோடே அந்த தீபாவளி நாளை கடக்க வைத்தது.
அதோ இதோவென தீபாவளியும் ஓடிப்போய் ஒரு நாள் முடிந்து விட தான் சொல்ல வேண்டிய விசயத்தை எப்படி ஆரம்பிப்பது.. என்ற தயக்கத்தோடே வலம் வந்து கொண்டிருந்தாள் யமுனா.
அன்று இரவும் வந்து விட, ‘அய்யோ.. என்ன நாள் பாட்டுக்கு ஓடிட்டே இருக்கு.. எப்படியாவது நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வந்து சொல்லிடனும்..” என்ற முடிவோடு உறங்கினாள்.
தீபாவளி முடிந்து அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது அவர்களின் வழக்கம் என்பதால், அங்கு சென்று வேண்டுதலை வைத்துவிட்டே தன் மனதை வீட்டில் சொல்ல நினைத்தாள் யமுனா. 
கங்காவும் யமுனா வீட்டில் பேசும் நேரத்திற்காகவும் இவர்களின் முடிவுக்காகவும் அமைதியாகவே காத்திருந்தாள்.
ஆனால் இருவரின் எண்ணத்திற்கும் எதிராக அன்று கோவிலில் வைத்தே யமுனாவின் திருமணம் நடக்கப்போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லையே..!!! 
 
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா…
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!