Skip to content
Post Views: 1,645
“அடியேய்.. பாப்பா.. இப்போ நீ தான்டீ வில்லங்கமா பேசறே..!
நா கொஞ்சம் ஒட்டிக்கோ கட்டிக்கோ அளவுக்கு கூட யோசிக்கல. ஆனா நீ.. சீமந்தம் வரை பேசறே. இதுலயே தெரியலையா யாரு மோசமுன்னு..” என்றவனுக்கு அவள் சொன்ன விசயம் கற்பனையில் எழ வெட்கம் வேறு வந்து தொலைத்தது.
Advertisement
“பின்னே.. சும்மா சீண்டிக்கிட்டே இருந்தா.. நாங்களும் என்ன தான் பண்ணறது..?
Advertisement
அதான் தடாலடியா ஒரு முடிவுக்கு வந்திடலாமுன்னு பாக்கறேன். என்ன மாமா ரெடியா..?” என்று சவாலாய் யமுனா அழைக்க,
Advertisement
“அடியேய் பாப்பா.. உனக்கு என்னமோ ஆகிடுச்சுடீ.. ஒழுங்கா பெட்டிய கட்டிட்டு ஊருக்கு கிளம்பற வழிய பாரு.
Advertisement
இல்ல.. நிஜமா வந்து உன்னை ஸ்வாஹா பண்ணிடப்போறேன். அப்புறம் விளையாட்டு விபரீதமா போயிடும்.. பார்த்துக்கோ.” என தீனா தீவிரமான குரலில் சொன்னதும்,
“அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டிங்கன்னு தெரிஞ்சு தானே பேசறேன்..” என அலட்டாமல் அவனை அவள் வார,
“விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைக்கறே..? நிஜமா சிக்குனா நீ என்ன ஆவேன்னு தெரியாது பாத்துக்கோ..” என்றான் எச்சரிக்கையாகவே.
“அதையும் பாக்கத்தானே போறேன்.. கூடிய சீக்கிரமே..” என அவள் அதற்கும் கிண்டலாய் பேச,
“நீ அடங்கவே மாட்டையாடீ..” என்றவன்,
அந்த வித பேச்சு வார்த்தையில் மேலும் மூழ்கி வீணாய் வில்லங்கத்தை வாங்கி கடைசியில் உணர்வு பிடியில் சிக்கி தவிக்க விரும்பாது,
“ஆமா பாப்பா, உங்க வீட்டுல நம்ம காதலுக்கு மறுப்பு சொன்னா என்ன பண்ணுவே..?” என்றதும்,
“அதெல்லாம் சொல்ல மாட்டாங்கன்னு ஒரு தைரியம் தான். ஒரு வேள அவங்க அப்படி முடியாதுன்னு சொல்லிட்டா..” என்றவள் சிறிது இடைவெளி விட்டு,
“தயா.. என்னைய விட்டுட மாட்டீங்க தானே.?” என யமுனா கவலையாய் கேட்க ஆழ்ந்த அமைதி அந்த புறம்.
சிறிது நேரமாகியும் பதில் வராததால், “என்ன லைன் கட்டாகிடுச்சா..?” என காதிலிருந்து போனை எடுத்து பார்த்தவள் அது இன்னும் இணைப்பில் இருப்பதாய் காட்ட,
“கண்ணழகா..?” என்றாள் மறுமுறை.
அப்போதும் அமைதியே பதிலாக, “என்னாச்சு..?” என்றுவிட்டு மீண்டும் சோதித்தவள்,
“ஹலோ.. கேட்குதா..? தயா.. தயா.. கேட்குதா..?” என்றாள் கொஞ்சம் சத்தமாகவே.
பேசும் லைனில் பிரச்சனையோ..? என்று ஆராய்ந்தபடி இருந்தவள் சில நொடி அமைதியாக.. அப்போது தான் அந்த பக்கம் இருந்தவனின் மூச்சு சத்தம் அவளுக்கு லேசாக கேட்டது.
“யோவ் கண்ணழகா.. இந்த பக்கமிருந்து தொண்ட தண்ணி வத்த இந்தா கத்து கத்தறேனே.. பதில் சொல்ல என்ன உங்களுக்கு..?
வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிட்டு இருக்கீங்க..? லைன்ல இருந்துட்டே.. அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?” என்றதும்,
“என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா..?” என்றான் தீனா ஆழ்ந்த குரலில்.
“என்ன நம்பிக்கை..? என்ன கேட்கறீங்க..?” என்றாள் யமுனா புரியாதவளாய்.
“ம்ம்.. உன்ன கழட்டி விட்டுடுவேனோ ன்னு.. தான்..” என்றவனின் பாவனையே அவனின் கோபத்தை காட்ட,
‘எதுக்கு இந்த கோபம்..?’ என யோசித்தவளின் மூளையில் பளிச்சென விசயம் விளங்க,
“அடப்போடா கிறுக்கா.. உங்ககிட்ட விளையாட்டா எதாவது பேச முடியுதா..? எல்லாத்தையும் யோசிச்சே பேச முடியுமா..?
ஆசையா பேசினா உசுப்பேத்தி விடறேன்னு சொல்றீங்க.
கிண்டலா பேசினா நம்பிக்கை இல்லையா..? தும்பிக்கை இல்லையா..?ன்னு பேசறீங்க.
உங்க மேல நம்பிக்கை கடலளவு இருந்தாலும் உங்க வாயால, ‘விட்டுட மாட்டேன்டீ..’ ன்னு சொல்றத கேட்க ஆசப்பட்டது ஒரு குத்தமா..?
அப்படி சந்தேகப்படறவ தான் கொஞ்ச முன்னே அப்படி பேசினேனா..?
உங்களப் போய் லவ்வ பண்ணி நான் படற பாடு.. அய்யோ..” என சலிக்க,
“ஏய் குள்ளச்சீ.. என்னடீ சந்தடி சாக்குல டா வெல்லாம் போடறே..? நேர்ல வந்தேன் அப்படி பேசற வாய கடுச்சு கொதறிடுவேன் பாத்துக்கோ.. எதுக்குடீ, அப்போ அப்படி பேசினே..?” என்றான் இன்னும் வீம்பாக.
“எப்பா ராசா.. நா பேசினதுக்கு பேரு விளையாட்டு.. புருஞ்சுதா..?
இந்த ஜென்மத்துல நீங்க என்ன விட்டுடமாட்டிங்கன்னு நம்பிக்கை இருக்கு.
அப்படி ஒரு வேள நீங்க விட்டாலும், விடாம விக்ரமாதித்தன் வேதாளமா உங்க முதுகுல காலத்துக்கும் சுமக்க வைப்பேனே ஒழிய.. உங்கள விட்டுட்டு போற ஐடியா எல்லாம் எனக்கு இல்ல..” என்றாள் தீவிரமான பாவனையில்.
அதில் இளகியவன், “வேதாளம் எப்பவும் விட்டுட்டு போயிடும். விக்ரமாதித்தன் தான் போய் பிடிச்சிட்டு வருவான்.. தெரியுமா..?” என்றிட,
“ஆமா. இப்போ அது தான் ரொம்ப முக்கியம். போங்க..” என்றவள்,
“இங்கே பாருங்க தயா.. எனக்கு தாலின்னு ஒண்ணு ஏறினா அது உங்க கையால தான். அது இல்லன்னா நா உயிரோட இல்ல ன்னு அர்த்தம்..” என்றாள் உறுதியாக.
“ஏய்.. லூசு.. என்ன பேச்சு இது..? என்ன நடந்தாலும் சரி உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.
என்னை தாண்டி வேற யாரும் உன்னை கட்டிக்க விடமாட்டேன்.. அப்படி ஏதாவது நடந்தாலும் நீ என்னோட தான் கடைசி வரை வாழ்ந்தாகனும்..” என்றவனின் விழியில் வழிந்த தீவிரம் அவளறியவில்லை.
“ஊருக்கு போனதும் சமயம் பாத்து நீயும் பேசிடு. நானும் வீட்டுல பேசிட்டு.. அப்புறமா முடிவு பண்ணலாம் சரியா..?
என்ன வந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணனும். அதவிட்டுட்டு இப்படி இன்னொரு தடவ பேசினா நடக்கறதே வேற..” என்றான் தொடர்ந்து.
“ம்ம்.. சரிங்க. ஆனா போனதும் வீட்டுல இதை பத்தி பேச முடியாது. தீபாவளி முடுஞ்சதும் பொறுமையா விசயத்த சொல்லி பார்க்கறேன்.
கொஞ்சமே கொஞ்சம் பயமா இருக்கு தயா..” என்றாள் குரல் தழுதழுக்க.
“பாப்பா.. என்ன நீ..? எல்லா வீட்டுலையும் ஆரம்பத்துல கோபம் தான் படுவாங்க.
இவ்வளவு வருஷமா வீட்டுக்காக எவ்வளவு பொறுப்பா எல்லாமே எடுத்து செஞ்சிருக்கே..?
அப்ப உன்னோட முடிவுல தப்பு இருக்காதுன்னு அவங்களுக்கும் தெரியும். எதையும் பொறுமையா அவங்களுக்கு சொல்லி புரிய வச்சிடலாம்.
அப்படி ஒருவேள உன்னால பேச முடியாதுன்னா சொல்லு நானே நேர்ல வர்றேன்..” என்றிட,
“இல்ல.. இல்ல தயா.. நானே பேசிட்டு சொல்றேன்..” என்று அவள் அவசரமாய் சொல்ல,
“ம்ம்.. சரி. பார்த்து ரெடியாகு. பஸ் ஸ்டேண்ட் போற டைமுக்கு ஆட்டோ எடுத்துட்டு வர்றேன்.. சரியா..?” என்றான் அக்கறையாக.
“சரிங்க. அதுக்குள்ள நீங்க எதாவது சாப்பிடுங்க..” என்றதும், “சரி..” என்றவன்,
அவளிடம் சொன்னது போலவே அவர்களை சரியான நேரத்திற்கு அழைத்து சென்று பஸ் ஏற்றி விட்டு, ‘அவர்களுக்கு வழியில் தேவைப்படும்..’ என நினைத்ததை எல்லாம் வாங்கி கொடுத்தவன், மறுநாள் காலை தனக்கான பஸ்ஸில் ஏறினான்.
இருவரின் பயணமும் அவரவர் ஊரை நோக்கி ஆரம்பித்தது தங்களின் காதலை வீட்டில் சொல்லிவிடும் எண்ணத்தோடு.
இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுவார்களா.. இரு வீட்டிலும்..?!
error: Content is protected !!