சிவா கரண் இருவரும் தேவையே இல்லாமல் சத்யா மேல் கோவத்தை வளர்த்து கொண்டனர்… அவளால் தான் தீனா ஜானகி இருவரும் சண்டையிட்டு கொண்டனர் என எண்ணி கொண்டனர்…
Advertisement
வடிவம்பாள் நேராக தீனாவிடம் வந்தவர் “இன்னும் எவளோ நாள் தான் நான் கெட்டவளா நடிக்கணும் ய்யா.. தேவையே இல்லாம பிள்ளைங்க மேல கோவப்படுறேன்… மகிமா அழுவுறப்ப கஷ்டமா இருக்கு… அது கண்ணீருக்கு காரணமானவளா ஆகுறேன்னு கஷ்டமா இருக்கு… எப்போ தான் எல்லா உண்மையையும் சொல்லுவ நீ… சீக்கிரம் எல்லாத்துக்கும் முடிவு கொண்டு வா ய்யா..” என்று கூறினார்….
Advertisement
Advertisement
தீனாவோ “இன்னும் ஒரே நாள்… நாம எதிர்பாக்காத நினைச்சு கூட பாக்காத இன்னொரு விஷயம் தெரிஞ்சு இருக்கு… அது என்னனு நாளைக்கு சொல்றேன்” என்று கூறினான்
Advertisement
அதற்கு அவரோ “சரி ய்யா சீக்கிரம் எல்லா பிரச்சனையும் முடி… நான் வீட்டுக்கு கிளம்புறேன்…” என்று கூறி கிளம்பிவிட்டார்….
அன்று இரவு விஷ்ணுவும் உடன் இல்லாததால் தீனா மது அருந்தி கொண்டு இருந்தான்…. தீனா கோவமாக இருந்தால் மட்டுமே மது அருந்துவான்… அவன் அதிகமாக அருந்தாமல் விஷ்ணு பார்த்துகொள்ளவான்…
ஆனால் இன்று அவன் அருவி வீடு சென்று விட்டதால் அவனை தடுக்க யாரும் இல்லாமல் அதிகமாக அருந்தி விட்டான்… அதிகமாக அருந்தினாலும் நிதானம் தவறாமல் தான் இருந்தான்… இரவு ஒரு பத்தரை மணிக்கு மேல் இருக்கும்… தன் அறையில் இருந்து வெளியில் வந்த தீனா தன் வண்டியை எடுத்து கொண்டு எங்கோ சென்றான்… (பி.கு: மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்…. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்)
அப்போது தண்ணீர் குடிக்க வெளியே வந்த சிவா தீனா வெளியில் செல்வதை பார்த்து அவன் பின்னால் சென்றான்… அவன் வண்டியை எடுத்து கொண்டு செல்வதை பார்த்தவன் தன் வண்டியை எடுத்து கொண்டு வேகமாக அவன் அறியாமல் அவனை பின் தொடர்ந்தான்…
தீனாவின் வண்டி தோப்பு வீட்டில் நிற்பதை பார்த்து கோவம் அடைந்தவன் தன் நிதானத்தை இழக்காமல் என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டு நின்றான்…
தோப்பு வீட்டில் சத்யா வாசலில் கயிற்று கட்டிலில் அமர்ந்து அபியை தன் மடியில் படுக்க வைத்து கொண்டு ஒரு இடத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்… தீனா வண்டியை விட்டு இறங்கும் போது அவன் கொஞ்சம் தடுமாறியதிலேயே அவன் குடித்து உள்ளான் என அறிந்த சத்யா இன்னும் அவன் மேல் கோவத்தை வளர்த்து கொண்டாள்…
அவன் மது அருத்தினாலே திட்டுபவள் அவன் அருந்தி விட்டு வண்டி ஓட்டி கொண்டு வந்துள்ளான் என அறிந்து மேலும் மேலும் அவளுக்கு கோவம் அதிகம் தான் ஆகியது…
தீனா அபியை தூக்க முற்படும் போது தடுத்த சத்யா “குடிச்சிட்டு என் புள்ளையை தொடாத தீனா…” என்று கோவமாக கூறினாள்…
அவன் கேட்காமல் குழந்தையை தூக்க வர அவனின் கன்னத்தில் அறைந்தவள் “சொன்னா கேட்க மாட்டியா… என் புள்ளையை தொடாதனு சொன்னேன்.. என்னால உனக்கு எந்த பிரச்னையும் வேண்டாம்… நாளைக்கு நானும் என் புள்ளையும் திரும்பியும் கேரளவே போறோம்… எங்களால யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம்…” என்று கூறி அவனை தள்ளிவிட்டவள் அபியை தூக்கி கொண்டு வீட்டினுள் செல்ல பார்த்தாள்…
ஆனால் அவளால் போக முடியவில்லை… தீனா அவளின் புடவையின் முந்தானையை பிடித்தவன் அவளை போக விடாமல் தடுத்தான்…. அபியை வைத்து கொண்டு அவளால் எதுவும் செய்யவும் முடியவில்லை….அவள் நிற்பதை பார்த்து அவளின் சேலையை விட்ட நொடி கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்று இருந்தான்… ஆம் அறைந்து இருந்தாள்….
“என் மூஞ்சிலயே நீ முழிக்காத… நாளைக்கு தான் இந்த ஊருல இருக்க கடைசி நாள்… மூனு வருஷம் எப்படி என்னை தேடாம இருந்தியோ அதே மாதிரி இப்பயும் இருந்துக்கோ… என் பையனை எனக்கு பாக்க தெரியும்…” என்று கோவமாக கூறியவள் வீட்டிற்குள் சென்று விட்டாள்…
தலையை பிடித்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவன் பின் என்ன நினைத்தானோ வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சென்று விட்டான்.. சிவாவால் அவனை பின் தொடரவே முடியவில்லை… அந்த அளவிற்கு வேகமாக தீனா சென்று இருந்தான்….
வீட்டிற்கு தான் சென்று இருப்பான் என எண்ணி அவன் வீட்டிற்கு சென்று இருக்க அவன் அடுத்த நாள் மாலை வரை வீட்டிற்கு வரவில்லை… ஜானகி ஒரு ஆர்பாட்டமே செய்து இருந்தாள்… சிவா நேற்று நடந்ததை அவளிடம் கூறி இருக்க ஜானகி கோவத்தின் உச்சிக்கே சென்று இருந்தாள்…
அவள் கோவமாக தோப்பு வீட்டிற்கு சென்றாள்… அங்கு அபி தொட்டியில் இருக்கும் தண்ணீரில் குளித்து கொண்டு இருக்க சத்யா அவனை ரசித்து கொண்டு இருந்தாலும் தீனாவை காலையில் பார்க்காதது தான் யோசித்து கொண்டு இருந்தாள்…
எப்போது அவள் மருத்துவமனை செல்லும் போது அவளை பார்த்து விட்டு தான் செல்வான்… நாளை அவள் கேரளா செல்வதாய் ஏற்பாடு செய்து இருந்தாள்… அதனால் இன்று கடைசியாய் ஆசையாய் அவனை ரசித்து விடலாம் என அவள் எண்ண அவன் தான் எங்கேயோ சென்று இருந்தானே….
அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே எதோ சத்தம் கேட்டது… அவள் திரும்பி பார்க்கும் போதே ஜானகி அவளை அறைந்து இருந்தாள்… அபி அதை பார்த்து அழ ஆரம்பித்துவிட்டான்… அவன் உள்ளாடை மட்டும் அணிந்து இருந்தான்… அப்போது தான் அவள் கழுத்தில் இருக்கும் செயினை பார்த்தாள்…
அது தீனா குடும்பத்தின் பரம்பரை சங்கிலி… அதை பார்த்து மேலும் கோவமடைந்தவள் குழந்தையின் கழுத்தில் இருந்து ஒரே இழுப்பில் இழுத்து இருந்தாள்…. அதில் அபியின் கழுத்தில் இருந்து ரத்தம் வலிய ஆரம்பித்து இருந்தது…
அதை பார்த்து சத்யா பதற ஆரம்பிக்க ஜானகி மனசாட்சியே இன்றி “ஏய் உனக்கும் என் மாமாவுக்கும் என்ன சம்பந்தம்… ஒழுங்கா என் மாமாவை விட்டு போயிடு… உன்னை மாதிரி கேவலமானவ இங்க இருக்கவே கூடாது… ஒழுங்கா இந்த ஊரை விட்டு போ… உனக்கு எல்லாம் அடுத்தவங்க புருஷன் தான் கிடைச்சானா… முதல்ல விஷ்ணு இப்போ என் மாமாவா… அசிங்கமா இல்லை.. இதுல எங்க குடும்பத்து பரம்பரை செயின் உன் மகனுக்கா… அவன் யாருக்கு பிறந்தானோ கண்டவன் கூட படுத்து பையனை பெத்து இருப்ப.. அந்த அசிங்கமானவனுக்கு எங்க பரம்பரை செயின்னா…” என்று இன்னும் அவள் எதோ பேச ஆரம்பிக்க சப்பென்று ஒரு அறை விழுந்து இருந்தது…
கோவமாக அது யாரென்று அவள் நிமிர்ந்து பார்க்க அங்கு மகிமா தான் காளி அவதாரமாய் நின்று இருந்தாள்…. அதை பார்த்து ஜானகிக்கே ஒரு நொடி பயமாய் விட்டது… அது எல்லாம் ஒரு நொடி தான் பின் அலட்சியமாய் “ஏய் என்னை நீ அடிப்பியா… அவளோ தைரியமா… இவளுக்காக என்னை அடிக்கிறியா… நியாயமா நீயும் அவளை அடிக்கணும்… என்னை அடிக்குற அவளோ திமிரா…” என்று அவள் திருப்பி மகிமாவை அடிக்க போக விஷ்ணு மகிமாவை தன் கைவளைவில் வைத்தவன் ஜானகியை கீழே தள்ளி இருந்தான்….
அபிக்கு ரத்த போக்கு அதிகமாகி இருக்க சத்யா வீட்டில் இருக்கும் மெடிக்கல் கிட்டில் இருந்து முதல் உதவி செய்ய ஆரம்பித்தாள்… ஆனால் ரத்தம் மட்டும் நிற்கவே இல்லை.. அதை பார்த்து பயந்த சத்யா “ண்ணா தம்பிக்கு கழுத்துல ரத்தம் நிக்க மாட்டிங்குது ண்ணா… பயமா இருக்கு… ஹாஸ்பிடல் போலாம் ண்ணா… தம்பி மயக்கத்துக்கு போறான்…” என்று அழுக ஆரம்பித்து இருந்தாள்…
விஷ்ணு அபியை தூக்கி கொண்டு போக சத்யா அவன் பின்னே செல்ல பார்த்தாள்…. ஆனால் ஜானகி அவளை போக விடவில்லை… “முதல்ல எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போ… உன் ட்ராமா எல்லாம் அப்பறம் பண்ணு… உன் பையன் ஒன்னும் சாக எல்லாம் மாட்டான்…” என்று மனசாட்சியே இன்றி அவள் பேச சத்யா அவளை கன்னத்தில் அறைந்துவிட்டு விஷ்ணுவை பின் தொடர்ந்தாள்….
ஜானகி போகும் அவளை தான் கோவமாக பார்த்து கொண்டு இருந்தாள்…. சிவா அவள் பின்னே வந்தவன் அவள் நடந்து கொண்டு இருந்த விதம் அவள் பேசியது என அனைத்தையும் கேட்டு திகைத்து நின்று விட்டான்…. சிவா கரண் இருவரையும் பொறுத்தவரை ஜானகி அமைதியின் சிகரம்… அவளால் யாரையும் காயப்படுத்த தெரியாது… இருவருக்கும் தாய் போன்றவள்… ஆனால் இவள் குழந்தை என்றும் பாராமல் அவள் செய்தது பேசியது என கேட்டு அதிர்ந்து விட்டான்….
அந்த இரவு தீனா தோப்பு வீட்டிற்கு வர அங்கு மகிமா மட்டும் தான் சோகமாக அமர்ந்து இருப்பதாய் பார்த்த தீனா “மங்கி குட்டி நீ எங்க இங்க இருக்க…. எங்க என் பொண்டாட்டியும் பையனும்” என்று கேட்க அவள் அழுது கொண்டே அனைத்தையும் கூறி விட அவனுக்கு கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது…
அவன் கோவமாக ஜானகியை தேடி செல்ல மகிமா அவனை தடுத்து “அண்ணா… இப்போ அதை விடுங்க… அண்ணி அழுதுட்டே இருக்காங்க… அது இல்லாம மாமா கோவமா இருக்காங்க உங்க மேல….” என்று கூறியவள் அவளும் கதவை அடைத்து விட்டு அவனையும் அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றாள்…
சத்யா அங்கு அழுது கொண்டு இருக்க விஷ்ணு கோவமாக நின்று இருந்தான்… தீனா வருவதை பார்த்த விஷ்ணு அவனை அறைந்து விட்டான்…. ஆனால் அவன் அதை கண்டுகொள்ளாமல் சத்யாவிடம் செல்ல அவளோ அவனை கோவமாக அறைந்து இருந்தாள்…