Skip to content
Post Views: 3,021
நேத்ரா என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா? அவன் கரங்களை தன் மார்பில் பொதித்துக் கொண்டான்.
நீங்க என்னை புரிஞ்சுகிட்டீங்களா?
வேதனையை அடக்கி எச்சில் கூட்டி முழுங்கியது அவள் தொண்டைக் குழியில் தெரிந்தது.
என்னை விட உன்னை நல்லா புரிந்தவங்க யாரு? அவள் விரல்களுக்கு மென்மையான அழுத்தம் கொடுத்தான்.
Advertisement
நீங்க….? என்னை….புரிஞ்சுகிழித்தீங்க! வெடுக்கென அவன் கரத்தை தட்டி விட்டாள்.
நேத்துமா நான் இல்லாம நீ இருக்க மாட்ட! உன் கண்ணில் எனக்கான காதலை பார்த்து தான் எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசையே வந்துச்சு.
அதுக்குதான் என்னை நாய் குட்டி மாதிரி நடத்துறீங்களா? பொறி பறக்கும் தீயாய் அவள் விழிகள் அனல் கக்க முயன்றது.
Advertisement
முட்டாள்….நாய்க்குட்டி அது இதுன்னு பேசிட்டு! நீ இந்த விஷ்ணுவோட இதய சாம்ராஜ்யத்தில் மகாராணி .
Advertisement
உங்க சாம்ராஜ்யமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்.இந்த வாழ்க்கையே வேண்டாம்னு எங்கேயாவது போய் தொலைஞ்சா நிம்மதியா இருக்கும்.
வேண்டாம்னு போகணும்னா என் தாலியை தலை குனிந்து வாங்குறதுக்கு முன்னாடி போய் இருக்கணும் இப்போ டூ லேட்டுடா பட்டுக்குட்டி.
அது சரி நிம்மதியா போக விட்டுடுவீங்களா நீங்க…?
Advertisement
அது எப்படி போக விடுவேன்?என் பொண்டாட்டியையே விடமாட்டேன்…என் குழந்தையோட அம்மாவா வேற போயிட்ட உன்னை விட்டு விடுவேனா?
என்னை விட்டு போகணும்னா ஒன்னு நான் செத்தா போகலாம்,இல்லை நீ செத்தா போகலாம்.ரெண்டும் இப்போதைக்கு நடக்காது! சிறு குழந்தை போல் கண் சிமிட்டி சிரித்தான்.
நான்சென்ஸ்! என்ன பேச்சு இது துக்கிரியா… அவன் வாயைப் பொத்தினாள்.
நீ பேசும்போது எனக்கும் வலிக்குது. வர கோபத்துக்கு செம்மையா அடித்து வெளுக்கணும்னு தோணுது உன்னை அடிச்சா எனக்கு வலிக்கும்.
நீ சூரியனா என்னை சுட்டாலும் நான் பூமி போல் உன்னையே சுற்றி சுற்றி வருவேன்…” யூ ஆர் மை சோல்” மென்மையாய் நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.
இவனை என்ன செய்தால் தகும்? உடைந்து போனாள்.இவன் என்னை சீக்கிரம் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பி வைத்து விடுவான் போல… இவனை எண்ணி கோபமும் வருது, காதலும் பொங்குது! கண்களை மூடி தலையை குலுக்கிக் கொண்டாள்.
“—————-”
குழந்தையை கொண்டு வந்து வேணுவிடம் கொடுத்தான் விஷ்ணு.
வாங்க, வாங்க, என்னை பெத்த ஐயா வாங்க! நீங்க குட்டி பொன்னுசாமி கவுண்டரா தங்கம்! குழந்தையை ஆசையாய் வாங்கி இதழ் பதியா முத்தத்தை இரு கன்னங்களிலும் வைத்தார்.
மங்களம் காபி கொண்டு வா! வேணு குரல் கொடுத்தார்.
என்ன மகாராணிக்கு இன்னும் விடியலையா? நொடித்துக் கொண்டு சோபாவில் வந்தமர்ந்த ஜோதி சொடக்கு போட்டு பேரனுக்கு விளையாட்டு காட்டினார்.
காலையிலே ஆரம்பிச்சுட்டியா உன் ராமாயணத்தை? வேணு சலித்துக் கொண்டார்.
நான் பேசினாலே உங்களுக்கு எரியுமே?சீறினார் ஜோதி.
உனக்கு மருமக பொண்ணு கூட செட் ஆகலைன்னா அந்த பொண்ணை பற்றி பேசுவதை நிறுத்தேன்…. கண்டிப்பான குரலில் பேசினார்.
இப்போ என்ன சொல்லிட்டேன்? வீட்டுக்கு வந்த மருமகள் காலங்கோலம் எழுந்து வாசல் பெருக்கி கோலம் போட்டு,பூஜை செய்து அடுப்படி வேலையை கவனிக்க வேண்டாமா? அப்படியே பம்பரமா சுத்துற வயசு இல்லையா?
என் பொண்டாட்டி மட்டுமா இந்த வீட்டு மருமகள்? சட்டென்று கேட்டான் விஷ்ணு.
இல்லையா பின்ன? பதிலுக்கு கேட்டார் ஜோதி.
ஹா ஹா… மருமகளே என் ஆசை மருமகளே! பூஜை அறையில் இருந்து வந்த அன்னம் ஜோதியின் கன்னம் தட்டினார்.
ஜோதிக்கு இப்போது புரிந்தது. என் பொண்டாட்டி உனக்கு மருமகள் என்றால்,நீ என் பாட்டிக்கு மருமகள். நீ என்றைக்கு காலங்கோலம் எழுந்து வேலை செய்து கிழித்தாய்? என்பதையே
பூடகமாக கேட்டிருக்கிறான் கிரிமினல் லாயர்.
மகனை ஒரு கண்ணாலும், மாமியாரை ஒரு கண்ணாலும் கோபமாய் பார்த்தபடி இருக்க….மங்களம் காபியோடு வந்தார்.
அப்பா இந்த குடும்பத்தோட வரவு செலவு, நல்லது கெட்டது எதிலாவது நேத்ரா தலையிடறாளா? எனக்காக அமைதியா பொறுத்துட்டு இருக்கா அவளை தயவு செய்து யாரும் சீண்டாம இருங்க! காபி குடித்த கப்பை டீபாய் மீது வைத்துவிட்டு விறு விறுவென்று மாடி ஏறி போய்விட்டான் விஷ்ணு.
இப்போ யாரை ஜாடை மாடையா எச்சரிக்கை பண்ணிட்டு போறான் உங்க சீமந்த புத்திரன்? அப்பட்டமாய் எரிச்சல் வழிந்தது ஜோதியின் குரலில்.
மருமகளே ஜாடை மாடையா இல்லை நேரடியாகவே உன்னை தான் சொல்லிட்டு போறான். வாழ வேண்டிய பிள்ளைங்க வாழ்க்கையில் கும்மி அடிக்காதே! அன்னம் அஞ்சாது நெத்தியடியாய் சொல்லிவிட்டு போனார்.
என்னது…. நான் அவன் வாழ்க்கையை கெடுக்கிறேனா ரௌத்திரமானார் ஜோதி.
“இல்லையா பின்ன…” என்று மனதில் நினைத்த வேணு, ஜோதி நம்ம காலம் முடிஞ்சு போச்சுன்னு இளசுகளுக்கு வழி விட்டு சூதானமா வாழ கத்துக்கிட்டா எந்த குடும்பத்திலும் பிரச்சினையே வராது என்றவர் பேரனை தூக்கிக்கொண்டு தெரு பக்கமாய் விளையாட்டு காட்ட சென்றார்.
“—————”
நேத்ரா வா சாப்பிடலாம்! தலைவாரிக் கொண்டே மனைவியை அழைத்தான்.
நீங்க சாப்பிட்டு கிளம்புங்க! நான் பொறுமையாய் சாப்பிட்டுக்கிறேன்.உப்பு சப்பு இல்லாத குரலில் சொன்னாள்.
சரி வா எனக்கு பரிமாறு! அவளை விடாப்பிடியாய் அழைத்து சென்றான்.
தம்பி நீங்க கேட்ட ஆப்பம் தேங்காய் பால்,வேர்க்கடலை சட்னி செய்திருக்கேன் மங்களம்மா கொண்டு வந்து வைத்தார்.
நீங்க போங்க நேத்ரா பரிமாறுவா… அவரை அனுப்பி வைத்தான்.
நேத்ராவுக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து அவனே பரிமாறினான்.
நேத்து மா உட்காரு சாப்பிடலாம்! அவளுக்காக தான் ஆப்பம்,தேங்காய் பால் செய்ய சொல்லி இருந்தான்.
நேத்ராவுக்கு புரியாமல் இல்லை. தான் இருக்கும்போதே அவளை சாப்பிட வைக்க முயற்சிக்கிறான்.
பிகு செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.
நேத்ரா ஒரு மர்டர் கேஸ் விஷயமா கடலூர் கோர்ட்டுக்கு போகிற வேலை இருக்கு வர லேட் லைட் ஆகும். மதியம் கரெக்ட் டைமுக்கு சாப்பிடு! குழந்தை பத்திரம். பேசிக் கொண்டே அவளுக்கு இன்னும் ஒரு ஆப்பம் வைத்தான்.
சாப்பிட்டு மாடி ஏறியவள் பின்னே அவனும் சென்று வாட்ச் கட்டிக் கொண்டு கேஸ் கட்டுகளை எடுத்து வைத்தபடியே நேத்ரா அம்மா ஏதாவது பேசினால் இக்னோர் பண்ணிட்டு போயிடு! ரொம்ப பொறுக்க முடியலைன்னா சரிக்கு சரி பேசிடு.அதுக்காக குழந்தையை தூக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிடாதே!
அவள் விழிகளை உருட்டி கருமணிகள் இரண்டும் குத்திட்டு நிலைத்து நிற்க அனலாய் முறைத்தாள்.
கருப்புக்கோட்டை கையில் எடுத்துக் கொண்டவன் பை நேத்துமா என்றான் விழி வழி காதலை கடத்தி….
ம்ம்ம்ம்ம் என்றாள் வாயை திறவாத வார்த்தையில்.
கல்யாணமாகி ஒன்றரை வருஷமே ஆகல அதுக்குள்ள சலிச்சுக்கிற! முன்னெல்லாம் வேற மாதிரி வழி அனுப்புவியே செல்லம்! கிறக்கமாய் அவள் தோள் வளைவில் முகம் புதைத்தான்.
வெட்கி சிவந்த முகத்துடன் அவனை சிரமப்பட்டு விலக்கினாள்.
சண்டை பாட்டுக்கு சண்டை ஒரு பக்கம் நடந்தாலும் இதெல்லாம் ஒரு பக்கம் நடக்கணும்! பட்டென்று அவள் இதழில் இதழ் பொருத்தினான்.
திமிர இயலாது கரைந்து உறைந்து நின்றாள். அவள் சுகிக்கும் சுகம் அவனை சூடேற்ற…வர வர ரொம்ப அழகாகிட்டே போற செல்லம், என்று அவள் கன்னத்தை காக்கா கடி கடித்து முத்தமிட்டான்.
அவள் செயல் இழந்து தொய்ந்து நிற்க… பை செல்லம் என்று மீண்டும் ஒரு முத்தமிட்டு அவளை விடுவித்து கிளம்பினான்.
“—————-”
கதவில் சாய்ந்து அவன் செல்லும் திக்கையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
என் சிந்தை முழுதும் உறைந்து நிற்கும் என் விந்தை மனிதன் நீ!
இன்னும் அவன் ஸ்பரிசம் உணர்ந்து நாணத்துடன் கண் மூடினாள்.
இவனை உணர எனக்கு இந்த ஜென்மமே போதாது… சற்று சலிப்பும் நிறைய மகிழ்வுமாய் அவன் கொடுத்துச் சென்ற முத்தத்தை உணர்ந்து உள்வாங்கினாள்
“————-”
காதலிக்கும் காலத்தில் அவள் பிறந்தநாள் அன்று அவன் கொடுத்த முதல் முத்தம்! நினைவில் இருந்து மீட்டெடுக்கும் போதே அவள் மெல்லிய மேனி வீணையாய் மீட்டியது அந்த சுகம் தந்த நினைவுகளை…
நேத்ரா இப்போ வந்து திடீர்னு உனக்கு பர்த்டே என்று சொன்னால் நான் என்ன செய்ய…? பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கொஞ்சினான்.
திடீர்னு சொன்னா உங்க ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று டெஸ்ட் பண்ணி பார்த்தேன்! அலட்டிக் கொள்ளாமல் தோளை குலுக்கினாள்.
எனக்கு செயின் போடற பழக்கம் இல்லை தன் கழுத்தை தடவிக் கொண்டான்,இந்த யானை முடி மோதிரம் உனக்கு லூசா இருக்கும்.உனக்கு வேறு என்ன கொடுக்க….ஒரு நொடி தலையில் தட்டி யோசித்தவன் சட்டென்று அவளை இறுக்கி அணைத்து அவள் செவ்விதழ் கவ்வி முத்தமிட்டான்.
அவனது திடீர் முத்த தாக்குதலில் மொத்தமாய் செயலிழந்து போனாள். கயல் விழிகள் இரண்டும் பயத்தில் மூடிக்கொண்டது.
அவன் மு(மொ)த்த பரிசை அவள் ஏற்கவும் இல்லை,
மறுக்கவும் இல்லை. படபடவென்று இதயம் எகிறி துடிக்க வியர்வையில் நனைந்தவளை சட்டென்று விடுவித்தான்.
அவள் கண்களில் கண்ணீர் கோடுகள் கண்டவன் குற்ற உணர்விற்கு பதிலாக கோபமே கொண்டான்.
ஏய் இப்போ எதுக்குடி அழற? உன்னை என்ன பண்ணிட்டேன்? ஒரு முத்தம் தானே… நான் கொடுக்கும் எந்த பரிசையும் விட இதுதான் உன்னத பரிசாய் இருக்கும்! முதல் முத்தம் மறக்குமா? அவளை இழுத்து அணைத்தான்.
தன் அனுமதி இல்லாமல் முத்தமிட்டவனை முறைத்துக் கொண்டே கார் கதவை திறந்து இறங்கினாள்.
போடி போ! நானா உன் பர்த்டேவை கேட்டேன்? நீ தானடி என்ன கிப்ட் கொடுப்பேன்னு கேட்ட.. சத்தமாய் கத்தினான். அவள் திரும்பி பாராது வேகமாய் சென்றாள்.
இரண்டு நாள்,மூன்று நாள்…ஒரு வாரம் ஆனது. அவனிடமிருந்து ஒரு மெசேஜோ,போன் காலோ ஏதுமில்லை.
நேத்ரா தவித்து போனாள் அப்பப்பா எவ்வளவு கோபம் வருது இந்த மனுஷனுக்கு! நியாயமா நான் தானே கோபப்படணும்.
மனம் கேளாது சாரி என்று மெசேஜ் பண்ணினாள்.
அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
கால் பண்ணி பார்த்தாள் கட் பண்ணிக் கொண்டே இருந்தான்.
சுரேந்தருக்கு கால் பண்ணினாள் அண்ணா அவர் இல்லையா?
இருக்கானே…இதோ பக்கத்தில் தான் இருக்கிறான். எய்ட் பிளாக் ஸ்டேடியத்தில் ஷட்டில் விளையாடுகிறோம்.
விஷ்ணு,நேத்ரா லைனில்…அவன் கையில் போனை கொடுத்துவிட்டு நகர்ந்து கொண்டான்.
இப்போ எதுக்குடி கால் பண்ற?பெரிய குயின் எலிசபெத் மாதிரி சீன் போட்டுட்டு போன… இப்போ என்ன டேஷ்க்கு கால் பண்ற? காச் மூச்சென்று கத்தினான்.
நீங்க பண்ணினது தப்பு இல்லையா? மூக்கை உறிஞ்சியபடி கேட்டாள்.
இல்லை… என் பொண்டாட்டிக்கு நான் கிஸ் பண்ணினது தப்பு இல்ல…
என்னது பொண்டாட்டியா? அவள் திகைத்தாள்.
முடிவு பண்ணிட்டு தானே லவ் பண்ணினேன் அப்புறம் என்ன சந்தேகம் உனக்கு?
உனக்கு கொஞ்சம் டிரமாடிக்கா இருக்கும்,இருந்தாலும் சொல்றேன். தாலி கட்டினால் தான் நீ என் பொண்டாட்டின்னு இல்லை! உன் லவ்வை என்னைக்கு அக்சப்ட் பண்ணிக்கிட்டேனோ அப்போவே நீ என் பொண்டாட்டி. தான்.
இல்லை எங்க வீட்டுக்கு….அவள் வார்த்தைகள் வராமல் தடுமறினாள்.
உங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னா என்ன மயிருக்கு என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணின? கர்ஜித்த படியே போனை அனைத்து சுரேந்தர் மீது வீசினான்.
error: Content is protected !!