Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நேற்று பார்த்த நிலா முகம்

நேற்று பார்த்த நிலா முகம் – 13

“முட்டாள்.. படிச்ச முட்டாள். எல்லாம் உன்னால வந்த்துடி..

நீ மட்டும் அன்னிக்கு கொஞ்சம் ஸ்மார்ட்டா நிதானமா நடந்துக்கிட்டு இருந்திருந்தா,

இப்ப இப்படி எல்லாமே கை மீறி போய் இருக்காது!”

நீயெல்லாம் படிச்சு என்ன புண்ணியம்?



Advertisement

தோ.. படிக்காத அந்த பட்டிகாட்டு மகி கிட்ட நாம எல்லோரும் தோத்து நிக்கிறோம்! என்று கத்திக் கொண்டிருந்தான் ராமு.

ப்ரியாவின் வீட்டில் அனைவரும் கூடியிருந்தனர்!

அனைவரும்?

Advertisement

ராமு, வனிதா, ப்ரியா அவளின் கணவன் எல்லோரும் தான்!

Advertisement

விசயம் அவர்கள் காதுகளுக்கும் வந்து விட்டிருந்தது!

ராஜு போய் கமலா அம்மாவை முதியோர் இல்லத்தில் இருந்து அழைத்து வந்து தனியே ஒரு சிறிய வீட்டை எடுத்து குடி போனது,

பின் ராஜு தற்காலிகமாக ஸ்டாஃப் பஸ் ஓட்டிக்கொண்டிருப்பது எல்லாம் அவர்களுக்கு பழைய செய்தி தான்!

Advertisement

ராஜுவுக்கும் அந்த மகிக்கும் கூட திரும்ப கல்யாண பேச்சு வார்த்தை மீண்டும் பேசப்பட்டு,

முடிவு செய்யப்பட்டிருப்பதும் கூட அவர்களுக்கு பழைய செய்தி தான்!

ஆனால் புதிய செய்தி,  கமலா அம்மாவின் பேரில் ஒரு டாக்ஸி ஓடிக் கொண்டிருப்பதும்,

கூடவே அந்த சந்துரு உதவியுடன் கமலா அம்மா வாங்கிப் போட்டிருக்கும் அந்த இரண்டு பிளாட்டுகளும் தான்!

கூடவே அவற்றின் இன்றைய மதிப்பு!

ராமுவால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!

எப்படி இது எல்லாம் தன்னை மீறி நடந்திருக்கு!

இந்த அம்மா ஏதோ  பாபா கோவிலுக்கு போறேன், கோவிலுக்கு போறேன்னு போயிட்டு வந்துட்டு இருக்குன்னு பார்த்தா,

பெரிய பெரிய வேலையெல்லாம் பார்த்து வச்சுருக்கு!

எனக்கு தெரியாம அந்த ராஜு பய, இன்னொரு பார்ட் டைம் வேலைப் பார்த்து கொஞ்சம் காசு சேர்த்துருக்கான்!

நிச்சயமா எனக்கு சர்ப்ரைஸா எதாச்சும் வாங்கி கொடுக்கணும்னு கூட நினைச்சு சொல்லாம இருந்திருப்பான் போல!

அதுவும் இல்லாம நானும் ஒரு  விசயம் அன்னிக்கு யோசிக்காமல் விட்டுட்டேன்!

ராஜு ஒரேடியா விசாவை கேன்சல் பண்ணிட்டு வந்திருந்தா வெறும் அஞ்சு லட்சம் பணத்தோடவா வந்திருப்பான்!

செட்டில்மென்ட் பணம் நிறைய வந்திருக்குமே!

நான் அதை எப்படி மறந்தேன்? எல்லாம் இந்த லூஸு சிறுக்கியால வந்தது!

இவ மட்டும் அன்னிக்கு கார் விசயத்துல பைக் விசயத்துல அவன் கிட்ட வாய விடாம இருந்திருந்தா, விசயம் இவ்வளவு தூரம் போய் இருக்காது!

அம்மாவையும் போய் அழுது கிழுது சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கலாம்!

அம்மா,  சந்துரு வீட்டில் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் நாம தேடாம இருந்தது தப்பு!

அதை விட தப்பு, “அப்பாயிய என் பிரன்ட் ஓல்ட் ஏஜ் ஹோம்ல பார்த்தாளாம் அப்பா, அவளோட பிறந்த நாளுக்கு சாப்பாடு போட போனப்ப!” என்று அன்றே யாழினி வீட்டில் வந்து சொன்னதுக்கு அப்புறமாவது நாம போய் அம்மாவை எதாச்சும் பேசி சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்துருக்கணும்!

“அம்மா வந்தா சும்மா இருக்காதுடா.. கல்யாண வீட்டுல வச்சு ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கும். இன்னும் என் மவனுக்கு கல்யாணம் ஆகலன்னு!

அப்புறம் என் புருஷன் வீட்டில், நாத்தனார் எல்லாம் ரொம்ப பேச ஆரம்பிச்சுடுவாங்க!

அதனால கல்யாணம் வரைக்கும் அது அங்கேயே இருக்கட்டும்” என்று இந்த பிரியா பேச்சை கேட்டுக்கிட்டு அப்பவும் சும்மா இருந்திட்டோம்!

இப்ப என்ன பண்றது? தன்னைத் தானே நொந்து கொண்டான் ராமு!

“என்னை எதுக்கு முட்டாள் முட்டாள்னு சொல்றீங்க? நானும் ஏதோ அன்னிக்கு என் தம்பிய அப்படி ராஜு திட்டிப்புட்டானு கோவத்துல கத்திட்டேன்!” என்றாள் வனிதா!

“அதோடவா விட்ட! அவன்கிட்ட வாக்கு மூலம் இல்ல கொடுத்துருக்க? பைக் என் புருஷன் பேர்ல இருக்கு!

கார் என் பேர்ல இருக்குன்னு? பேசாதடி நீ!

அப்படியே உன்னோட தம்பி உத்தமன் பாரு!

அப்படியே அவன ஒரு வார்த்த சொன்னா தான் என்ன?

கடைசியில என்ன ஆச்சு? ராஜு சொன்ன மாதிரி அவன் ஒரு குட்டியோட தான் பைக்கில் சுத்தியிருக்கான்!

ராஜு அவன் காசில் வாங்கின பைக், அவனையே ஏத்திக்கிட்டு போகலன்னா சும்மா இருப்பானா?” ராமு கத்த,

“என்ன என்னைய மட்டுமே சொல்லிட்டு இருக்கீங்க?

நான் அப்படி சொன்னது என்னமோ தப்பு தான்!

ஆனா நீங்க என்னை அடிக்க ஆரம்பிச்சதும் சுதாரிச்சுக்கிட்டேன்!

அது அத்தோட போய் இருக்கும்!

ஆனா உங்க அக்கா ரொம்ப சரியா அப்ப அங்க வந்து, நிறுத்துங்கடா உங்க ட்ராமாவைன்னு சொல்லி,

நாம வாங்கி வச்சுருக்க பிளாட் பத்தியெல்லாம் அவன் கிட்ட போட்டு விட்டது!” வனிதாவும் கத்தினாள்!

“சரிம்மா.. நான் பண்ணதும் தப்பு தான்! ஆனா ராஜுவ வெளியே விடாம என் வீட்டில் கைக்குள்ள வச்சுருந்தேன்!

நீ என்ன பண்ணின? என் புருசனுக்கு போனை போட்டு, வேலைய விட்டுட்டு வந்திருக்க வெறும் பயலுக்கு காலம் பூரா கஞ்சி ஊத்தி காப்பாத்த போறீங்களான்னு கேட்டு நக்கல் பண்ணி,

நாங்க அவன இங்க இருந்தும் வெளியே அனுப்பி வச்சுட்டோம்! அதுக்கு என்ன பண்றது?” என்றாள் ப்ரியா!

“வாத்துடி.. அவன்.. பொன் முட்டை போடுற வாத்து!

காலத்துக்கும் நமக்கு சம்பாரிச்சு போட்டுட்டு இருந்திருப்பான்!

 இப்படி பொம்பளைங்களா சேர்ந்து அந்த வாத்தோட வயத்தை கிழிச்சு வச்சுட்டீங்க!

போச்சு.. அவ்வளவு தான்! அந்த மகியை கல்யாணம் பண்ணினான் அவ்வளவு தான்!

மொத்தமா அவனை அவ கண்ட்ரோல்ல எடுத்துடுவா!

அன்னிக்கே சந்துரு பய சொன்னான். அண்ணே வாங்கி போடுங்கண்ணே, பெரிய பஸ் ஸ்டாண்ட் அங்க போக போவுது. ரேட் ஏறிடும்னு சொன்னான்!

நான் தான் கேக்கல! கேட்டுருந்தா , அன்னிக்கே அந்த ரெண்டு பிளாட்டும் என் பேர்ல வாங்கியிருப்பேன்!

இன்னிக்கு தேதிக்கு அதோட விலை.. நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஏறி இருக்கு!

அம்மா இன்னமும் இந்த வீட்டுல அதோட பங்கை இன்னமும் நமக்கு விட்டு கொடுக்கல!

அதோட ராஜு கேஸ் போட்டான்னா மொத்தமும் கைய விட்டு போய்டும்!” என்று மீண்டும் கத்த ஆரம்பித்தான் ராமு!

“சும்மா பொம்பளைங்களால் போச்சு போச்சுன்னு சொல்லாதீங்க!

பொம்பளைங்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் அன்னிக்கு அந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தினோம்!

அத மறந்திடாந்தீங்க ஆமா” என்றாள் வனிதா!

“ஆமா இவ ஒருத்தி! ஃபேமினிசம் பேச வந்த நேரத்த பாரு!” சலிப்பாக சொன்னான் ராமு.

“இப்ப என்ன பண்றது மச்சான்?“

“எப்படியும் நம்மள கல்யாணத்துக்கு கூப்பிடாம இருக்காது அம்மா!

அப்ப அங்க போய் எதாச்சும் வம்பு பண்ண முடியுதான்னு பார்ப்போம்!

இல்ல கல்யாணம் ஆகி வந்தவுடன், அவங்கள இந்த வீட்டுக்கு எப்படியாவது கூட்டிட்டு வந்து

இந்தா.. இதுங்கள வச்சு பாலிட்டிக்ஸ் பண்ணி, அந்த மகியை வீட்டை விட்டு துரத்திடலாம்!

அதெல்லாம் என் பொண்டாட்டியும் உங்க பொண்டாட்டியும் நல்லாவே பண்ணுவாங்க” என்றான் ராமு இன்னமும் நம்பிக்கையோடு!

—-

“மகி.. நான் மெயின் ரோட்டில் வெயிட் பண்றேன். சீக்கிரம் வந்திடு!” என்றான் ராஜு.

“இதோ கிளம்பிட்டேன்” என்றவாறு போனை கட் செய்து ஹான்ட்பேகில் போட்டுக் கொண்டு மெயின் ரோட்டுக்கு விரைந்தாள் மகி.

ராஜுவின் மென்டர், வழிகாட்டி – அவனின் ஜிஎம் கோபால் அண்ணாவும் அவரது மனைவி மாயாவும் இன்று அவர்கள் குழந்தைகளுடன்  ஒரு சில சொந்த வேலைகளுக்காக திருச்சி வந்திருக்கிறார்கள்.

திருவெறும்பூர் அருகே ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறார்கள்.

இன்னும் நாலு நாட்களுக்கு இங்கே இருந்து விட்டு, பின் துபாய் திரும்பி விடுவார்கள்.

ராஜுவின் கல்யாணம் வரை இங்கு இருக்க முடியாது என்பதால், ராஜுவை, மகியை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு வந்து பார்க்கும்படி கோபால் அண்ணா சொல்லியிருந்தார்.

கோபால் அண்ணா பட்டுக்கோட்டையை சேர்ந்தவர். மாயா கேரள நர்ஸ். காதல் திருமணம்!

மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் பெரிய மனுசியே ஆகி விட்டாள்!

ஆனால் இருவர் வீட்டிலும் இன்னமும் அவர்கள் திருமணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை!

ஆனால் அதற்கு அவர்கள் இருவருமே வருத்தப்படவும் இல்லை!

என் வீடு.. என் மனைவி.. என் மகள்கள் என் வாழ்க்கை என்று வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்!

ராஜுவை திருமணம் செய்து கொள்ளும்படி மிகவும் வலியுறுத்துவார்.

“உனக்குன்னு பேமிலி வேணும்டா! கூட பிறந்தவங்க எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் தான்!

ஆனா கடைசி வர நம்ம கூட வரப் போறது நம்ம பொண்டாட்டி தான்!

உன் அம்மா கவலைப் படுறது ரொம்ப நியாயம் தான்!

சீக்கிரம் கல்யாணம் பண்ணு” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், மகியைப் பற்றி சொன்னதும்,

அவன் அம்மாவிற்கும் மிகவும் பிடித்து இருக்கு என்று சொன்னதும்,

“நீ சொல்றத வச்சுப் பார்த்தா, அந்த மகி ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுதுடா!

அவ ஒரு ரேர் காம்பினேசன்!

இவ்வளவு திறமையான, அதே சமயம் அன்பான அடக்கமான பொண்ணு! இந்த காலத்துல ரொம்ப ரேர்!

நீ அவளை மிஸ் பண்ணிடாதே!

உன்னை மாதிரி கேரக்டருக்கு அவ தான் சரி! அவ மாதிரி கேரக்டருக்கும் நீ தான் சரி!

நீங்க ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருப்பீங்கடா!

சீக்கிரம் போய் கல்யாணம் பண்ணிட்டு வர வழிய பாரு” என்று சொல்லி தான் அவனை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அப்படி ஊருக்கு போனவன், போன வேகத்திலேயே லீவை கேன்சல் பண்ணி விட்டு திரும்பி வரவும் ரொம்பவும் வருந்தினார்!

“என்னடா.. இப்படி ஆகி போச்சு.. சரி..

நீ கொஞ்ச நாள் எதப் பத்தியும் நினைக்காம வேலைய பாரு. பார்த்துக்கலாம்” என்று சொல்லி இருந்தார்!

அருகே வந்து விட்டாள் மகி.

வந்தவளை அப்படியே தலை முதல் கால் வரை பார்த்தான் ராஜு.

அவன் முகத்தில் கொஞ்சம் ஏமாற்றம்!

மகி அதை கவனியாமல், அவன் அருகே வந்தவள்,

“ஐய்.. அப்பாச்சி.. ஆர்.ஆர்.310! எதுங்க இது? யாரோட வண்டி? இந்த வண்டில..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

கடுப்பானான் ராஜு!

“சந்துரு பிரண்டோட வண்டி! நான் என் பியான்சியோட லாங் ரைட் போகணும்னு ஆசையா வாங்கிட்டு வந்து கொடுத்துருக்கான்!

நீ ஏறு வண்டியில!” என்றான் கொஞ்சம் கோபமாகவே!

“ஆமா நாம எங்க போறோம்?

உங்க சார் பேமிலி எங்க ஸ்டே பண்ணி இருக்காங்க?” என்றாள் பைக்கின் இருபுறமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டே!

“ஏன்? எங்க போறோம்னு மேடம்கிட்ட சொன்னா தான் வருவீங்களா?

எல்லாம் உன் அத்தை மாமா, உன் அம்மா உன் வீட்டு ஆட்டுக்குட்டி வரை பர்மிசன் வாங்கியாச்சு!

பிஎல் லெட்டர் வேணுமா? பார்க்குறியா?” என்றான் இன்னமும் கோபமாகவே!

“என்ன ஆச்சு இவருக்கு?’ என்று யோசித்தவள்,

அது சரி.. சில பேர் இப்படி தான் டிரைவ் பண்ணும் போது கொஞ்சம் கோபமாக தான் பேசுவாங்க என்றே நினைத்துக் கொண்டு சும்மா இருந்தாள்.

ஆனால் கொஞ்ச தூரம் போனவுடன், ஒரு மெடிக்கல் அருகே நிறுத்தியவன்,

“உனக்கு ஃபேஸ் மாஸ்க் எதுவும் வேணுமா?” என்று கேட்டான்!

“மாஸ்க்கா இப்ப எதுக்கு?” என்றாள் அவள் ஆச்சர்யமாக!

“வேண்டாமா? போவுது போ! பெரிய மனசுதான்!” என்றான் ராஜு.

இப்பவும் ஒன்றும் புரியாமல் பைக் கண்ணாடியின் வழியே அவனைப் பார்த்தாள்! ஏன் இவ்வளவு கோவம் இவருக்கு?

ஒன்றும் பேசாமல் வந்து கொண்டிருந்த ராஜு, ஒரு ஆட்டோ ஸ்டேன்ட் அருகே பைக்கை நிறுத்தி விட்டு,

“நான் லொக்கேசன் அனுப்புறேன், நீ ஆட்டோவில் வந்திடுறியா?” என்றான்

“ஏன்.. உங்களுக்கு இப்ப வேற எங்கயும் போகணுமா?”

“அப்படியெல்லாம் ஒரு வேலையும் இல்ல!”

“அப்புறம் என்ன பைக்கிலேயே போகலாமே!”

“பைக்கில் போயி.. என்ன ஆவ போவுது?” என்றான் முணு முணுப்பாக.

“உங்களுக்கு என்ன தான் ஆச்சு இன்னிக்கு? வள்..வள்ளுன்னு விழுந்திட்டே இருக்கீங்க?”

“பின்ன என்னடி..  ஒருத்தன் எதுக்குடி.. ஓசி பைக் எல்லாம் எடுத்துக்கிட்டு வரணும்!

கட்டிக்க போறவ கூட ஜாலியா ரைட் போகணும்னு தானே!

இல்லன்னா நானே ஒரு கேப் புக் பண்ணி உன்னை கூட்டிட்டு போக மாட்டேனா?”

“சரிங்க. அதுக்கும் நீங்க கோபப் படுறதுக்கும் என்ன சம்பந்தம்?

ஏன் காரணமே இல்லாம இப்படி கோபம் உங்களுக்கு?”

“காரணமே இல்லாமலா? முதல்ல உன் டிரெஸ்ஸை பாரு. கழுத்து வரைக்கும் கவர் பண்ணியிருக்கிற காலர் வச்ச டாப்ஸ்!

அதில கழுத்தை சுத்தி இன்னொரு ஷால் வேற!

கட்டிக்க போறவன் கூட முத முதலா வெளியே போறோமேன்னுற சென்ஸ்  கொஞ்சமாச்சும் இருக்காடி உனக்கு?

அதான் நான் நக்கலா மூஞ்சிய மட்டும் ஏன் விடனும் அதுக்கும் ஒரு மாஸ்க் போட்டுக்க.. மாஸ்க் வேணுமான்னு கேட்டேன்!

நானும் ஒவ்வொரு ஸ்பீட் ப்ரேக்லயும் ஏத்தி ஏத்தி இறக்குறேன்!

நீ என் மேல சாஞ்சுக்குவன்னு! நீ என்னடான்னா அப்படியே பின்னாடி சாய்ஞ்சி சாய்ஞ்சி பாலன்ஸ் பண்ணிட்டு வர்றே!

நான் என்ன வண்டி ஓட்ட தெரியாமலா வெடுக்கு வெடுக்குனு ஸ்பீட் ப்ரேக்ல ஏத்தி எறக்கிறேன்!

ரெண்டு கன்ரியிலயும் ஹெவி லைசன்ஸ் வச்சுருக்கறவன் நானு!

கொஞ்சம் கூட என்னைக் கட்டிக்கிட்டு வரனும் நினைக்காத, கருணை இல்லாத உன்ன கூட்டிட்டு வர்றதுக்கு, நீ தனியே ஆட்டோவில வர்றது பெட்டர்!” என்றான் கடுப்பாக.

“அய்யோ.. இது தானா? அது பழக்க தோஷங்க!

இப்ப என்ன உங்கள அப்படியே கட்டிக்கிட்டு வரனும் அவ்வளவு தானே! வரேன். இப்ப வண்டிய எடுங்க.

ஸ்.ஸ் அப்பா… என்னமா கோபம் வருது உங்களுக்கு.. நான் எப்படி தான் சமாளிக்க போறேனோ!” என்றபடி அவன் முதுகோடு கட்டிக் கொண்டு போனாள் மகி!

அவளுக்கு அவர்கள் சென்ற இடத்தில் இன்னமும் நிறைய ஆச்சர்யங்கள் காத்துக் கொண்டிருந்தன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!