Skip to content
Post Views: 1,703
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் -23 pre final
Advertisement
வைஷுவும், பத்ரியும் இலங்கை வந்து இறங்கினர்கள்.
Advertisement
Advertisement
வைஷுவிற்கு சஞ்சனா இருக்கும் ஹோட்டலை கண்டு பிடிப்பது பெரிய விசயம் இல்லை, அது தான் கூகுல் இருக்கே, அனைத்தையும் கேட்டவுடன் தகவல் சொல்ல..
ஏற்கனவே ஒரு தரம் சௌசன்யா ராம் குடும்பத்தை பற்றியும், ஊரையும் பற்றி சொல்லி இருக்க. அந்த ஊரில் இருந்தது. சில ஹோட்டல்களே அதை வைத்து சஞ்சனா இருக்கும் ஹோட்டலை கண்டு பிடித்து, தம்பியோடு வந்து விட்டாள்..
Advertisement
“இப்போ என்ன பண்ண போற?”.. என்று பத்ரி கேட்டதும்..
“முதல்ல ஒரு ரூம் புக் பண்ணுடா,, புட் ஆடர் பண்ணு பசிக்குது”,, என்று சோர்வாக வைஷு கூற..
“சரிக்கா” என்றவன் ரூம்பை புக் செய்து விட்டு,, உணவை ரூம்பிற்கு கொண்டு வர சொல்லிவிட்டு,, வைஷுவை அழைத்துக்கொண்டு அறைக்கு சொல்ல..
வைஷு அறைக்கு சென்றதும் கட்டிலில் படுத்து விட்டாள்..
அவள் கஷ்டபடுவதை பார்த்த பத்ரி “அக்கா சொல்லுறேன்னு கோபப்படாத, நீ மாமா சொன்னதை கேட்டு இருந்திருக்கணும்”.. என்றதும்.. வைஷு அமைதியாக இருந்தாள் ..
உணவு வந்ததும்,, வைஷுவை எழுப்பி உணவை சாப்பிட வைக்க.. வைஷு கொஞ்சமாக உண்டு விட்டு “போதும்டா ” என்றவள்..
கட்டிலில் சரிந்து படுத்து விட..
பத்ரி உண்டு முடிக்க.. அவன் நண்பன் அழைத்திருந்தான் போனில்,, நான் பேசினால் வைஷுவுக்கு தொந்தரவாக இருக்கும் என்று , பால்கனியில் நின்று பேசிகொண்டே சுற்றி பார்க்க.. ஒரு ஹோட்டல் அமைந்த டிசைன் போலவே அனைத்து பில்டிங்கும் இருக்க அதை பார்த்தபடியே கீழே பார்த்தான், நிறைய குழந்தைகள் பார்க்கில் விளையாடிக்கொண்டிருக்க.. போன் பேசிய வாறே பார்கில் விளையாடு பிள்ளைகளை பார்த்திருந்தான்..
அதில் யாழினி போல் ஒரு பெண் பிள்ளையை பார்த்தவன்.. அது யாழினி தானா என்று மீண்டும் பார்க்க.. யாழினியே தான் என்று உறுதி செய்தவன்,,.. “அக்கா வைஷு கா யாழினி, க்கா, , கீழே விளையாடுறா வா, வந்து பாரு” … என்று பத்ரி அழைக்க..
வேகமாக எழுந்து பால்கனி வந்தவள் “எங்கேடா? யாழ்”.. என்றதும்..
“கீழே பார்கில் விளையாடுறா பாரு”… என்று கூற….
வைஷு கீழே குனிந்து பார்க்கில் விளையாடும் பிள்ளைகளை பார்க்க, அதில் யாழினி மாதிரி ஒரு பெண் பிள்ளை விளையாடி கொண்டு இருக்க…
வைஷு தன் மகள் தான் அது என்று உறுதி செய்தவள்.. அடுத்த நொடி யாழினியை நோக்கி ஓடினாள்.
“அக்கா பாத்து மெதுவா போ” என்று வைஷு பின்னாடியே அவனும் ஓடினான்….
யாழினி சில பிள்ளைகளோடு கண்களில் துணியை கட்டி கண்ணாமூச்சி விளையாட..
வைஷு யாழினியை நோக்கி சென்றிருந்தாள்..
யாழினி கண்களில் துணியை கட்டி இருப்பதால் வைஷுவை பார்க்க வில்லை..
யாழினி அருகில் வந்து வைஷு நிற்க..
தன்முன்னாடி யாரோ பெரியவர் ஒருவர் நிற்பதை உணர்ந்தவள், அவரை தொட்டு பார்த்து “தள்ளி போங்க” என்று சொன்னவள்.. அவளை கடந்து போக முடியாமல் நிற்க..
மகளின் கையை பிடித்தது “மீ….” என்று அவளை கட்டிகொண்டு அழுத மகளை அணைத்துக்கொண்டாள் வைஷு…
“மீ.. மீ..” என்று மகள் அழுகவும்.. “யாழ் குட்டி, யாழ்குட்டி, என் செல்லம் எங்கேடா போன” என்று மகளை முத்தாட..
கண்னை திறந்து பார்த்த யாழினி.. மீண்டும் அழ… “யாழ்… அழாதடா, அழாதடா குட்டிமா, அம்மா வந்துட்டேன்டா, அழாதடா என் தங்கம்” என்று மகளை அணைத்து சமாதானம் பண்ணினாள்..
“மீ.. ஏன் மீ… என்ன விட்டு போனா”… என்று அழுதவளை.
“சாரிடா, சாரிடா அம்மாவை மன்னிச்சிடுடா”… என்று கூற..
“எனக்கு நானா கிட்ட பேசனும் மீ…” என்ற மகளை முத்தமிட்டவள்..
“இரு. இரு உன் நானாவுக்கு கூப்பிடுறேன்”.. என்றவள் கணவனுக்கு போனில் அழைக்க…
அப்போது தான் இலங்கை வந்து இறங்கினான் வீ. பி…. மனைவி அழைத்ததும் கோபத்தில் போனை எடுத்து “எங்கடி இருக்கா?”… என்றான் கோபமாக..
“பாவா யாழ் பேசுறா” என்றதும். மகள் என்றதும் கோபம் தனிந்தவன்,, கோபத்தை கைவிட்டு…. மகளை “பங்காரம்” என்று அழைக்க..
“நானா,, நானா” என்று மகள் அழும் சத்தம் கேட்டு துடித்து போனவன்..
“டேய் பங்காரம், ஏன்டி றா, நானா இருக்கேன்டா அழுவாத றா பங்காரம்,, நானா வந்துட்டே இருக்கேன்”… என்றதும்..
“நானா , ஐ மிஸ் யூ நானா, சாரி நானா” என்று அழுத மகளிடம் “போனை மீ…. கிட்ட கொடு” என்றான்…
“ஓகே நானா” என்று வைஷுவிடம் போனை தர..
“லொகேஷன் அனுப்படி, என் பொண்ணை அழாம பாத்துக்கோ..”..என்ற கணவனிடம்..
“சாரி பாவா, சாரி” என்றதும்..
“உன்னை வந்து வச்சுக்கிறேன், என் பொண்ணு பேசுனதால அம்மணி தப்பிச்ச” என்றவன் போனை கட் பண்ண.. வைஷு பத்ரியிடம் போனை கொடுத்து “பாவாவுக்கு லொகேஷன் அனுப்பு” என்றவள் மகளை தூக்க..
அவளால் துக்க முடியவில்லை, தம் கட்டி மகளை தூக்கி ஒரு மர சேரில் அமர்ந்தவள் மகளை தன் மடிமீது அமர வைத்தாள்….
யாழ் “வேண்டாம்” என்று மறுத்தும் தன் மடிமீது மகளை உட்கார வைத்தவள்.. மகளின் தலை கோதி “ஏன்டா நம்ம வீட்ட விட்டு சஞ்சனா ஆண்ட்டி கிட்ட போனா?”..
யாழினி தலை குனித்து கொண்டு பேசமால் அமைதியாகி விட…
“சொல்லுடா என்னாச்சு உனக்கு,, மீ… கிட்ட சொல்லு, அம்மா ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றதும்..
யாழினி வைஷுவின் மேடிட்ட வயிறை பார்த்தவள்.. ஏதோ சொல்ல வர, பின்பு குனிந்து கொள்வதையும் பார்த்த வைஷு..
“நீ என்ன பீல் பண்ணி சஞ்சனாவோட போன, மீ கிட்ட சொல்லுடா, உனக்கு என்னடா பிரச்சனை?”.. என்றதும் வைஷுவின் கழுத்தை கட்டிக்கொண்டு யாழினி தேம்ப…
“அம்மா உன்னை ஒன்னும் சொல்லமாட்டேன், உனக்கு என்ன தோனுதோ சொல்லு”..
“மீ… நீங்க என் கூட இல்லாம இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது மீ “… என்றவள் சொல்ல தயங்க..
சொல்லு என்பது போல் மகளின் முதுகை தட்டி கொடுக்க..
“எனக்கு வயிறு ரொம்ப வலிச்சது மீ”.. என்றதும் துடித்து போன வைஷு “எப்போடா?”…
“நீங்க இல்ல மீ அப்போ, நானா கிட்ட சொல்ல முடியல மீ.. நானா என் கிட்ட சரியா பேசுறது இல்ல.. வீட்டுக்கே வரல.. பாட்டி சௌசன்யா பாப்பை பார்த்துட்டு என்னை பாத்துக்கல மீ… என்னை பார்த்து,..
நீ சாப்பிட்டு ஸ்கூலுக்கு போன்னு சொல்லிட்டு போயிடுவாங்க மீ,, நம்ம வீட்டுல யாரும் என்கிட்ட பேசுறது இல்ல மீ, ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பாப்பை பார்க்க போனேன்..
பாட்டி என்னை திட்டுறாங்க,, இப்போ தான் தூங்குற, நீ இப்போ பாப்பா கிட்ட போகக்கூடாது, உன் ரூம் போன்னு,, நான் என் ரூம் போயி அழுதுட்டே தூங்கிட்டே மீ,, நைட்டு ரொம்ப நேரம் ஆகிடுச்சு, எழுந்து கீழே வந்தேன் மீ.. எல்லாரும் தூங்கிட்டு இருந்தாங்க.. எனக்கு ரொம்ப பசிச்சது மீ.. டைன்னிங் டேபளில் சாப்பாடு இல்ல.. பிரிஜ்சில் ஐஸ்கிரீம் மட்டும் தான் இருந்துச்சு, அதை எடுத்து சாப்பிட போனேன் நானா என்னை பார்த்து, நைட்டு யாருக்கும் தெரியாம ஐஸ்கிரீம் சாப்பிடுறீயான்னு கேட்டு கோபத்தில் அடிச்சிட்டாரு மீ” என்று அழுத மகளை அணைத்து சமாதானம் பண்ண..
“அப்பறம் அழுதுட்டே என் ரூம் போயி தூங்கிட்டேன்..
மறுநாள் காலையில் நல்ல பசி மீ.. எழுந்து குளிச்சிட்டு கீழே வந்த,, பாட்டி என்னை திட்டுறாங்க, யாருக்கும் தெரியாம ஐஸ்கிரீம் சாப்பிடுறீயான்னு,, என்னை சாப்பிடுன்னு யாரும் சொல்லல்ல மீ,, ஒழுங்க ஸ்கூலுக்கு போன்னு சொல்லிட்டு போயிட்டாங்க..
என்னால முடியல மீ… ஸ்கூலுக்கு போகுற வழியில என்னோட ட்ரெஸ்சுல எல்லாம்” என்று தேம்ப..
“என்ன ஆச்சுடா யாழ்”… என்று வைஷு கேட்க….
“என் ட்ரெஸ் எல்லாம் பிரியட்ஸ்னால, ரெட் ஆகிடுச்சு எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல.. அழுதுட்டே இருந்தேன்..
டிரைவர் அங்கிள் நான் ஏன் அழுவுறேன்னு தெரியாம பாட்டிக்கு, நானாவுக்கு போன் போட்டாங்க இரண்டு பேரும் போனை எடுக்கல.. உனக்கும் போன் போட்டாங்க மீ.. உங்க போன் சுட்ஸ் ஆப்புன்னு வந்துச்சு.. அப்பறம் சஞ்சனா ஆண்ட்டிக்கு டிரைவர் போன் பண்ணாங்க, ஆண்ட்டி அஞ்சு நிமிசத்துல வந்துட்டாங்க,, என்கிட்ட என்னாச்சுன்னு கேட்டாங்க,, எனக்கு பசிக்குது, வயிறுவேற வலிக்குதுன்னு சொன்னேன்.. என் ராம் அண்ணா பொண்ணு இப்படி கஷ்ட படுறாலேன்னு சொல்லி என்னை கட்டி பிடிச்சு அழுதாங்க.. அப்பறம் அவங்க வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போயிட்டாங்க என்னை நல்லா பாத்துகிட்ட மீ… நான் செஞ்சது தப்பா மீ?”….. என்றதும்..
“தப்பு இல்லடா, நீ செஞ்சது தப்பே இல்ல உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்குனதுக்கு நாங்க தான் காரணம்”.. என்றவள்..”இனி அப்படி உன்னை கஷ்டபட மீ விட மாட்டேன், மீ கூட வந்துடுடா”… என்றதும்..
“மீ”.. என்றவள், “ஆண்ட்டி ஒன்னு சொன்னாங்க” என்றதும்..
“சொல்லுடா யாழ், சஞ்சனா என்ன சொன்னா?”.. என்றவள் தன் சுடிதார் சால்லை கொண்டு மகளின் முகம் துடைக்க..
“நீங்களும், நானாவும் புது பாப்பா வந்ததும், என்னை பாத்துக்க மாட்டீங்களா, என்னை கொடுமை படுத்துவீங்களா” என்ற மகள் கேட்டதும், கதறி அழ தோன்ற..
நான் அழுதாள் மகள் பயந்து விடுவாள் என்று
அமைதியாக கண்கலங்கி மகளை பார்த்தவள்..
என் மகள் வாயால் இப்படி கேட்க வைத்து விட்டாயே கடவுளே என்று மருகியவள். கண்களை துடைத்துக்கொண்டு..
“என் பொண்ணுடா நீ,, என் முதல் பிள்ளைடா நீ, என் உயிர்டா, உனக்கு அடுத்தது தான் உங்க நானாவே எனக்கு, புரியுதா, நீ தான் எனக்கு முதல்ல ,, அப்புறம் தான் எல்லாம் எனக்கு, ஏன் இந்த பாப்பா கூட” என்று தன் வயிறை தொட்டு காட்டியவள்.
error: Content is protected !!