Skip to content
Post Views: 1,734
“என் வயித்துல உள்ள பாப்பா கிட்ட தினமும் நான் சொல்லுவேன்.. உங்களுக்காக யாழினி அக்கா வெளியே காத்துட்டு இருக்க, உங்களை பார்க்க. அவள் உங்களை நல்லா பாத்துப்பான்னு, நீ தாண்டா அந்த குட்டி பிள்ளைகளை பாத்துக்கனும். அவங்களுக்கு ஒன்னும் தெரியாது, நீதான் அவங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுக்கனும், நீதானே அம்மா வயித்துல உள்ள பிள்ளைகளுக்கு அக்கா”…
“ஆமாம் மீ நான் பாப்பாவை பாத்துப்பேன்”….
Advertisement
“யார் சொல்லுறதை கேட்காத,, நீ தாண்டா எங்க வீட்டு மகாராணி, இனிமே உன்னை எல்லாரும் நல்லா பாத்துப்பாங்கடா, எங்க கிட்ட வந்துடுடா, மீ உன்னை நல்லா பாத்துப்பேன்”… என்றதும்..
Advertisement
“சரி மீ, நான் உங்க கூட வர்ரேன்”….என்றதும்.
Advertisement
ஒரு கரம் யாழினியை அப்படியே தூக்க..
Advertisement
யார் என்று வைஷு நிமிர்ந்து பார்க்க.. சஞ்சனா யாழினியை முறைத்து பார்த்துக்கொண்டு
அவளோ பயந்தது போல் அவளை பார்க்க… “உன் ரூம் போ யாழினி” என்று சஞ்சனா கூறியதும்..
யாழினி வைஷுவை பார்க்க..
“என் பொண்ணை என் கிட்ட குடு சஞ்சனா” என்றதும்.
சஞ்சனா தன்னிடம் வேலைபார்க்கும் பணி ஆட்களிடம் “யாழினியை என் ரூம்புக்கு கூட்டிட்டு போங்க” என்றதும்…
“ஆண்ட்டி நான் மீ கூட போறேன்” என்று யாழினி அழுக..
“யாழ் இவங்க உன்னை நல்லா பாத்துக்க மாட்டாங்க, ஆண்ட்டி உன்னை நல்லா பாத்துப்பேன் நீ நம்ம ரூம்புக்கு போ'”..
“இல்ல ஆண்ட்டி மீ வந்துட்டாங்க, என்னை அவங்க பாத்துப்பாங்க, எனக்கு என் நானாவை பார்க்கனும், நான் மீ கூட போறேன்”..
“யாழ் பழச எல்லாம் மறந்துட்டீயா, இவளுக்கு ரெண்டு பிள்ளைகள் பிறக்க போகுது, இவளால எப்படி உன்னை பாத்துக்க முடியும்? கிளம்பு”…
“இல்லா ஆண்ட்டி நான் மீ கூட தான் போவேன்” என்று அடம் பிடிக்க..
“யாழினி எனக்கு யாரும் இல்லடா உன்னை விட்டா” என்று நீண்ட நேரம் பேச, யாழினி குழம்பி நிற்கும் நேரம் சஞ்சனா பணி ஆட்களிடம் அவளை தூக்கி கொண்டு அவள் அறைக்கு செல்ல சொல்ல.. யாழினி “மீ.. மீ.. என்று அழுது கொண்டே சென்றாள்..
யாழினியை தடுக்க போன வைஷுவை சஞ்சனா பிடித்துக்கொள்ள..
பத்ரியை இன்னொரு ஆள் வந்து பிடித்துக்கொண்டான்..
யாழினி கொஞ்ச நேரத்தில் அழைத்து சென்றிருந்தனர்..
வைஷுவுக்கு கோபம் தலை கேற..
“சஞ்சனா”.. என்று கத்த..
“கூல்,, கூல் வைஷு,” என்று சிரித்தவள் , “உனக்கு தான் இரண்டு பிள்ளை பிறக்க போகுதுல, அப்பறம் ஏண்டி உனக்கு யாழினி வேணும்,, ஒழுங்கா இங்கே இருந்து போயிடு,, உனக்கு பிறக்க போகுற பிள்ளைகளை பாரு” என்றதும்..
“யாழினி தாண்டி என் முதல் பிள்ளா”..
“ஓ…… நீ யா பெத்த?. பெத்தவளே வேற கல்யாணம் பண்ணி , சந்தோஷமா பிள்ள பெத்து வாழுறா,, நீ ஏண்டி உன் பிள்ளன்னு சொல்லுற, கோர்ட்டே தீர்ப்பு சொல்லி ஆச்சு யாழ் என் கூட தான் இருப்பான்னு, நீ ஏண்டி இங்க யாழினியை தேடி வந்த கிளம்பு”… என்று சஞ்சனா கூற..
“யாழினி இல்லாம நான் போக மாட்டேன்” என்று கூற.
“சு… சு… ரொம்ப லேட்டா வந்துட்டா, யாழினியை கேட்டு, உன்கிட்ட கொடுக்க முடியாது. நீ இங்கே இருந்து கிளம்பி போ”..
சஞ்சனாவின் பணியாட்கள் யாழினியை, அவர்கள் அறையில் வைத்து பூட்டி விட்டு வந்து சாவியை சஞ்சனாவிடம் தர.. அதை வாங்கி பத்திர படுத்தி கொண்டவள்..
“நீ என்ன பண்ணாலும் யாழினியை தர முடியாது”…
“சஞ்சனா என் பொண்ணை இவ்வளவு நாள் நீ பாத்துகிட்டதும் போதும் ரொம்ப நன்றி… பிலிஸ் என் பொண்ணை என்கிட்ட கொடுத்திடு, உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ நாங்க கொடுத்திடுறோம், வேற என்ன வேணுமுன்னாலும் கேளு”… என்றதும் சிரித்தவள்..
“பணமா, நகையா,,,?. இல்ல வேற ஏதாவது எனக்கா, நான் இருக்குற இடத்தை பார்த்துமா பணம் வேணுமான்னு கேட்குற?.. என் கிட்ட இல்லாத பணமா?”… என்று சிரித்தவள்…
“எனக்கு உன் புருஷனையும், இந்திராதேவியையும் பழி வாங்கணும், யாழினி எனக்கு வேணும், அவ்வளவு தான்”… என்று சஞ்சனா கூறியதும்..
“அப்படி என்ன என் புருஷனும்,, அத்தையும் பண்ணிட்டாங்க உனக்கு, அவங்களை நீ பழிவாங்க துடிக்குற?” .. என்று வைஷு கேட்டதும்..
“உன் புருஷனை கல்யாணம் பண்ண ஆசை பட்டேண்டி நான்.. நான் எதுக்கு அவன்னை கல்யாணம் பண்ண ஆசைப்பட்டேன், எல்லாம் என் அண்ணன் பொண்ணுக்காக,, அதுக்கு தான் உன் புருஷன் கிட்ட பி. ஏ, வா வேலைக்கு சேர்ந்தேன்..
எப்படியாவது அவனை என் வழிக்கு கொண்டு வந்து கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு,.. ஆனா உன் புருஷன் என் எண்ணம் தெரிஞ்சு என்னை இந்திராதேவிக்கிட்ட பி. ஏ வா சேர்த்து விட்டான்..
என்னடி கொற எனக்கு, என்னை விட நீ என்ன பேறழகியா? சொல்லுடி,, என்னை ஏமாத்திட்டான் உன் புருஷன், என் எண்ணம் தெரிஞ்சு என்னை விலக்கி வச்சுட்டான்,, அவனை சும்மா விட சொல்லுறீயா.. மாட்டேன் விட மாட்டேன்,, யாழினியை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க,, அழனும், அவனும், அவன் அம்மா இந்திராதேவியும் அழனும், உன் மாமியார் யாழினியை நெனச்சு பைத்தியாகாரியா ஆகனும்,, என்னை ஆயா வேலை பாக்க வச்ச அவ. சும்மா விடுவேன் நான் அவளை” என்று சிரிக்க..
“சஞ்சனா சாரி சஞ்சனா எல்லாத்துக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுகிறேன். என்கிட்ட யாழினியை குடுத்துடு, நான் யாழினியை நல்லா பாத்துப்பேன்”…
“எப்படி பாத்துப்பா? உனக்கு தான் ரெட்ட பிள்ளை பிறக்க போகுதே.. அதை பார்த்துக்கவே உனக்கு கஷ்டம்.. உன் ரெட்டை பிள்ளைகளை வளக்கவே உனக்கு ஆள் வேணும்,, நீ எப்படி யாழினியை பாத்துப்பா, கிளம்பு உன் கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்ல” என்று கூறிவிட்டு சஞ்சனா நடக்க..
அவளை பின் தொடர்ந்த வைஷு “சஞ்சனா, சஞ்சனா ” என்று அவளை அழைத்துக்கொண்டே பின்தொடர..
திடிர் என்று பயங்கரமா சத்தம், பூகம்பம் போல் நிலம் நடுக்க, என்னாச்சு என்பது தெரியாமல், அனைவரும் நிமிர்ந்து பார்க்க..
வைஷு நிற்கும் ஏதிர் திசையில் ஒரு 5 மாடி கட்டிடம் கீழே தீ பற்றி எரிய…
என்னாச்சு என்று அனைவரும் பார்க்க.. சஞ்சனாவிடம் வேலை செய்யும் பணியாள் வந்து “மேம் குக்கிங் சிலிண்டர் வெடிச்சிருச்சு மேம்” என்று சொல்லிக்கொண்டு இருக்க.. மீண்டும் அதே போல் இன்னொரு சிலிண்டர் வெடித்து, சத்தம் கேட்ட சஞ்சனா அந்த பில்டிங்கை நோக்கி “யாழினி” என்று ஓட..
வைஷுவுக்கு அவள் யாழ் என்று கத்தியதும் பயந்து போனவள்..
அவளின் பின்னால் ஓடி வந்து “என்னாச்சு என் பொண்ணுக்கு! யாழ் எங்கடி?”…
சஞ்சனா எரியும் பில்டிங்கை காட்டி “யாழினி ஐந்தாவது மாடியில இருக்கா” என்றதும்..
“என்ன சொல்லுற?”,,..
“ஆமாம் வைஷு, நானும் அவளும் இந்த பில்டிங்குல தான் இருக்கோம்” என்றதும்.
அரண்டு போனாவள் எப்படி? எப்படி? என் பொண்ணை காப்பாற்றுவேன் என்றவள்.. சஞ்சனாவை கவனிக்கவே இல்லை.. அந்த பில்டிங்கை சுற்றி, சுற்றி ஓடினாள்.. கீழே நெருப்பு வேகமாக எறிய, கீழே இருந்து செல்ல முடியாது என்று நினைத்தவள்..
யோசிக்க..
அந்த பில்டிங் எதிர் பில்டிங்குள் ஓடினாள்.. சஞ்சனா அவள் பின்னோடு வர..
“யாழினி ரூம் நம்பர் என்ன, அவள் எந்த பக்கம் இருக்கிறாள்” என்று சஞ்சனா விடம் கேட்டவள்.. ஐந்தாவது மாடிக்கு செல்ல லிப்ட் வழியே செல்ல பார்க்க.. லிப்ட்டு மேலேயே இருந்து வராமல் நின்று இருக்க,,
வைஷு கட, கடவென மாடிபடி ஏற..
பத்ரி அக்காவின் பின் வந்தவன், “அக்கா பாத்துக்கா மெதுவா போ” .. என்று சொல்லியதை காதில் வாங்காதவள்.. மூச்சு வாங்க 5 மாடி ஏறி இருந்தாள்..
சஞ்சனாவிடம் அவர்கள் அறை எந்த பக்கம் என்று கேட்டு தெரிந்தவள்.. அவர்கள் இருக்கும் எதிர் பக்க அறைக்குள் நுழைந்தாள்.. அந்த அறையில் யாரும் இல்லாததால்.. வேகமாக யாழினி இருக்கும் அறை எதிர் பால்கனிக்கு வந்திருந்தாள் வைஷு..
பால்கனியில் இருந்து யாழினி இருக்கும் அறையை பார்க்க.. யாழினி அழும் சத்தம் மட்டும் கேட்டது..
மகளுக்கு ஒன்று மில்லை என்று மனதை தேற்றியவள்..
“யாழ், யாழ் குட்டி” என்று பால்கனியில் நின்று கத்த..
தன் மீ யின் சத்தம் கேட்டு யாழினி சரியா பால்கனி கதவு பக்கம் வர..
வைஷு யாழினியை பார்த்ததும், “யாழ், யாழினி” என்று மகளை அழைக்க…
“மீ” என்று வைஷுவை தேடிய யாழினி எதிர் பில்டிங்கில் இருந்து சத்தம் வருவதை உணர்ந்து பார்க்க.. அங்கே வைஷு பால்கனியில் நிற்பதை பார்த்து,
“மீ ,,.. வா மீ எனக்கு பயமா இருக்கு”,, என்று யாழினி அழுக..
“குட்டிமா அழாதட,,, அம்மா இருக்கேன், பால்கனி கதவை திறடா” என்றதும்..
யாழினி பால்கனி கதவை திறக்க முயல அது முடியவில்லை அது லாக்காகி இருக்க யாழினியால் திறங்க முடியவில்லை. “மீ திறக்க முடியல” என்று அழுத மகளிடம் “அம்மா அங்க வர்ரேன்டா அழாத” என்றவள்..
என்ன பண்ணலாம்,,? எப்படி போக? என்று யோசித்தவள் .. சஞ்சனாவிடம் “பெரிய கயிறு வேணும், வேகமாக கொண்டு வர சொல்லு” என்று அவளிடம் கூற..
சஞ்சனா அவள் பணியாட்களிடம் சொல்ல உடனே கயிறு வந்தது..
கீழே பயர் இன்சின் வந்து தீயை கட்டு படுத்த தண்ணீரை அடித்து கொண்டு இருக்க, புகை அதிகமாக வர கண் எறிய தொடங்கியது….
வைஷு பத்ரியை இரண்டு மூன்று பக்கெட் தண்ணீர் கொண்டு வர சொன்னாள்.. கயிறை எங்கே கட்டலாம், யாழினியிடம் எப்படி சொல்லலாம் என்று யோசித்த வைஷு.. பக்கத்தில் இருந்து கனாமான ஆடைகளை தன் மேல் ஆடைக்கு மேல் ஆடை போல் அணிந்து கொண்டவள், தண்ணீரை தன் மேல் ஊற்றி கொள்ள..
சஞ்சனா இவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் பார்க்க.. கயிறை தன்னை சுற்றி கட்டியவள் எதிர் திசையில் இரண்டு பில்டிங் நடுவில் இருந்த கம்பியில் கயிறை கட்டியவள் குதிக்க தயாராக,, “என்ன பண்ண போற வைஷு” என்று சஞ்சனா பயந்து அவளை கேட்க.. அவள் எதிரில் உள்ள பால்கனிக்கு குதிக்க போவதாக சொல்ல..
“ஐயோ வேண்டாம் வைஷு,, பயர் மேன் எல்லாம் வந்துட்டாங்க, யாழினிக்கு ஒன்னும் ஆகாது காப்பாத்திடலாம்,, நீ இரு, உனக்கு ஏதாவது ஆகிட போகுது”.. என்றாள் அவளின் கையை பிடித்து..
“காது கேட்குதா உனக்கு, என் பொண்ணு கத்துற.. அவள விட என் உயிர் பெருசா, சப்போஸ் எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, அது யாழினி காப்பாத்துனதுக் கப்பறமா தான் நடக்கும் ,, என் வீ. பி கிட்ட யாழினியை கொடுத்துடு,, பிலிஸ்”.. என்றவள் குதிக்க தயாராக..
அவள் பேசியதை கேட்டு, துடித்தவள் இது தான் தாய் பாசமா, தன் உயிர் கொடுத்து பிள்ளை உயிர் காப்பாற்ற நினைக்கும் தாய் பாசத்தை பார்த்து. நான் எல்லாம் இவள் முன் ஒன்றுமில்லை ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு இவளுக்கு அப்படி என்ன.. ஒரு வேகம் என்றே ஆச்சரியமாக பார்க்க.. இறங்கும் கயிரை தம்பியின் கையில் கொடுத்தவள்..
சஞ்சனாவிடம் இன்னொரு கயிரை கொடுத்து “இதை பிடிச்சுக்கோ, நான் குதிச்சவுடனே இரண்டு செகென்ட்ல இத பிடிச்சு இழு, சரியா இழு அப்பா தான், நான் எதிர் பால்கனி போக முடியும்”.. என்று கூற..
“எனக்கு பயமா இருக்கு வைஷு”.. என்றதும்..
“நீ என்னோட ஸ்கை டான்ஸ் பாக்கலை யா, எனக்கு எல்லாம் ஒரு கயிரே, போதும், இப்போ இரண்டு கயிரு, ஒன்னும் ஆகாது, நான் சொன்னதை மட்டும் செய்” என்றவள்..
வீ. பி யை மனதில் நினைத்து கொண்டு கீழே குதிக்க,, பத்ரியும் சஞ்சனாவும், வைஷு சொல்லியது போல சரியா கயிறை இழுத்து விட்டு இருக்க.. வைஷு யாழினி இருக்கும் பால்கனி கம்பியில் தொங்கி கொண்டு இருந்தாள்..
அவளோ அசால்ட்டா பால்கனி கம்பியை பிடித்து ஏற..
இங்கே வைஷு செய்யும் செயலை பார்த்து பத்ரியும், சஞ்சனாவும் விழிவிரித்து பயந்து பார்க்க.. புகைவேற அதிகம் வருவதால் கண்கள் எறிய..
இருவரும் பயந்து “பார்த்து ஏறு வைஷு” என்று அவள் ஏறுவதை பார்த்து பயந்து கூற..
வைஷு பால்கனி கம்பியை பிடித்து ஏறியவள், பால்கனி கதவை திறக்க முயல, கதவை திறக்க முடியவில்லை புகை வேற அதிகம் வருவதால் வைஷுவுக்கு கண்கள் எறிய,, வெட்ப காற்று மேலே சூடேற,, நேரம் குறைவாக உள்ளது வேகமாக என்று சன்னல் கதவை உடைக்க பார்க்க. அது முடியவில்லை.. உள்ளே இருந்து யாழினி வேற “மீ பயமா இருக்கு” என்று அழுதுகொண்டு இருக்க..
“அம்மா வந்துட்டேன்டா” என்றவள் பால்கனி சன்னல் கண்ணாடி கதவை திறக்க முடியாது என்று உணர்ந்தவள்.. மகளை காப்பாற்ற சன்னலை உடைக்க ஆயுதம் இல்லாமல் தன் கையை ஆயுதமாக்கி உடைக்க அவளால் முடியவில்லை மீண்டும், மீண்டும் கையை வைத்து கண்ணாடி கதவை தன் முட்டியையும், காலையும் வைத்து அடிக்க, சன்னல் கதவு உடைந்து விட..
மகளை உள்ளே இருந்து தூக்கி அணைத்து கொண்டாள்..
யாழினி “மீ. மீ ” என்று அழுக..
“யாழ் அழகூடாது, அம்மாவை இறுக்கமா பிடிச்சுக்கனும்,” என்றவள் மகள் மீது ஈரமான துணியை வைத்து மூடியவள், கண்ணை திறக்க கூடாது, என்றவள், மகளை முதுகில் வைத்தை இறுக்காம கட்டி விட்டு..
கீழே தீ எறிவது குறைவது போல் தெரிய.. பத்ரியின் கயிறை மெல்ல, மெல்ல விட சொன்னவள். பால்கனி கம்பி வழி இறங்க.. கீழே அடுத்து இறங்க வழியில்லமால் குதிக்க,, பத்ரி மெல்ல, மெல்ல கயிறை விட…
கயிர் நீளம் பத்தாமல் வைஷுவும், யாழினியும் பாதி வழியில் தொங்கி கொண்டு இருக்க..
சரியாக வந்து சேர்ந்தான் வீ. பி.. கரும் புகை இடையில், தீ எறிய. தன் மனைவியும், மகளும் அந்தரத்தில் தொங்குவதை பார்த்து நின்றிருந்தான்..
error: Content is protected !!