Skip to content
Post Views: 875
அத்தியாயம் 03**1
மகள் அடி வாங்கியது தாங்காமல் கோமதி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இருந்தார்.. பிள்ளைக்கு பெரிய அளவில் எதுவும் பிரச்சனை வராமல் இந்த காயம் ஆறி போக வேண்டும். என மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தார்..
Advertisement
சரவணன் மில்லுக்கு சென்றிருந்தார்..
செழியன் விளையாடச் சென்று விட்டான்.
Advertisement
Advertisement
அதனால் பேபியம்மா தமிழை மருத்துவமனை அழைத்துச் சென்றது யாருக்கும் தெரியாமல் போனது இப்பொழுது ஆட்டோவில் வந்து இறங்கியதும் கணவன் தகவல் சொன்னதால் வேகமாக கோமதி ஓடிவந்தார்..
Advertisement
முதலில் கதிரை கண்டதும் அப்படியே நின்று விட்டார். ரொம்ப காலம் கழித்து அவர் தம்பியை பார்க்கிறார்..
“ வாயா நல்லா இருக்கியா? ஆத்தா எப்படி இருக்கு? தங்கச்சி,தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?.. ”
கதிர் பதில் சொல்லும் முன் “ ஏண்டி தங்கத்தை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போவியா?. அதைவிட்டு வீட்டுக்கு வந்த பிள்ளையை தெருவில் வைச்சு விசாரிச்சிட்டு இருக்க.. ” என்றார்.
“ நீ ஏன்மா சொல்ல மாட்ட. ரொம்ப காலம் கழிச்சி தம்பிய பார்த்த பாசம் அப்படியே பொங்கி வழியுது போல இருக்கு. அதான் என் பொண்ணு கண்ணுக்கு தெரியல. என்னடி அப்படித்தானே சங்கதி..” என்றார் சரவணன்..
அப்போதுதான் மில்லில் இருந்து வந்து அவரது இரு சக்கர வாகனத்தை விட்டு இறங்கி நிற்க கோமதியும் தம்பியை பார்த்து விசாரித்ததை வைத்தும் தாய் பேசியதை வைத்தும் பேசினார்..
அங்கு நடப்பவற்றை பார்த்த கதிர் மாமனை திரும்பி ஒரு பார்வை பார்த்தான். ‘ இவனெல்லாம் எனக்கு ஒரு ஆளா?. ’ என்பது போல் அவரும் அவனை ஒரு நொடி பார்த்துவிட்டு கடந்து விட்டார்.
“ ஆமா வந்துட்டாரு புள்ள மேல பாசம் அப்படியே பொங்குது அவருக்கு. எவளோ என்னமோ சொன்னா புள்ளைக்கு அடிக்கிறதா?. நான் அவளுக்கு கொடுத்த ஒரு அடி மாதிரி நீயும் குடுத்துட்டு பேசி இருகனும்யா. பெரிய ரோசக்கார ஆளா இருந்தா என் பிள்ளை மேல நீ எப்படி கை வைக்கலாம்னு இழுத்து சாத்திருக்க வேண்டாம் அந்த எடுப்பட்ட நாயை.. பிள்ளை மேல தப்பு இருக்கா இல்லையா? அதுவும் கேட்கல. மாட்ட அடிக்கிற போல அடிச்சி வச்சிருக்க இப்ப புள்ளைக்கு உடம்பு காச்சல் கண்டுட்டு.. என் தம்பிய மொறைக்கிறது. என்னை சொல்லுறது இது மட்டும் தான் தெரியும்.. ” இன்று என்ன சூட்டில் இருந்தாரோ கோமதி நன்றாக கணவரை வாங்கி விட்டார்..
கோமதி பேசியதை வைத்து இன்று என்ன நடக்குமோ என பேபியம்மாக்கு பயம் வந்து விட்டது..
அங்கிருந்த ஒரு சேரை இழுத்து போட்டு அதில் தமிழை அமர வைத்திருந்தான் கதிர் தமிழுக்கு பக்கத்திலேயே நின்றான்.. அதை பார்த்துவிட்டு வேகமாக கோமதியின் அருகே வந்தவர் “ அடியே கூறு கெட்டவளே.! உனக்கு இப்ப என்ன வந்துச்சு பேசாம இருக்க மாட்ட நீ.. ”
“ பேசாம போயிரு அத்த. உன் பிள்ளையை ஒரு சொல்லு சொன்ன ஒடனே அவருக்கு ஏத்துக்கிட்டு வராத.. ”
“ அடியே மங்குனி கதிர் இருக்காண்டி. என் புள்ளன்னு இல்லை அவனை உங்க அறைக்குள்ள கூட்டிட்டு போய் வச்சு அவனை மிதிச்சாலும் ஏன்னு நான் கேட்க மாட்டேன்.. என்னால மிதிக்க முடியல நீயாவது அவன மிதி. தங்கத்தை அடிச்ச விஷயம் தெரிஞ்சா என்ன நடக்குமோனு எனக்கு பக்கு பக்குனு இருக்கு. நான் எதுவுமே சொல்லிக்கல அவன்கிட்ட. தங்கத்துக்கு காய்ச்சல் மட்டும் தான் சொன்னேன்.. இப்ப உன் வாயால நீயே கெடுத்துகிட்ட. நடக்க போற பிரச்சனையை நீயே சமாளிச்சுக்க ஆள விடு.. ” என்று கூறி விட்டு சென்றுவிட்டார் பேபியம்மா..
கதிர் ஏதாவது ஒரு தேவைக்கு இங்கே வந்தால் அக்கா வீடு என்று உரிமையாக வீட்டுக்குள் செல்ல மாட்டான்.. பேபியம்மாவின் சின்னவீட்டின் முன்புதான் சேர் போட்டு இருந்து வந்த விஷயத்தை பேசிவிட்டு சென்று விடுவான்..
இப்பொழுதும் அப்படித்தான் இவ்வளவு நேரம் நின்றவன். தமிழை பேபியம்மா அவர் வீட்டுக்குள் அழைத்து சென்றதும் அந்த சேரை எடுத்துக் கொண்டு அவரின் வீட்டின் முன்பு போட்டு இருந்து விட்டான்..
அப்போது அவனுக்கு காபி கலந்து கொண்டு வந்து கோமதி கொடுத்தார். அதை வாங்கியவன் என்ன நடந்தது என அக்காவிடம் கேட்டு விளக்கமாக தெரிந்து கொண்டான்..
தம்பிக்கு விளக்கத்தை சொல்லிவிட்டு மகளுக்காக காச்சிய கஞ்சி எடுத்துக் கொண்டு வந்து பேபியம்மாவின் கையில் கொடுத்தார் கோமதி.. அதை சிறுக சிறுக பேபியம்மாவும் தமிழுக்கு கொடுத்தார்.. அவள் குடிக்க கஷ்டப்படுவதை பார்த்து எழுந்து வந்த கதிர் அதை வாங்கி அவளை மீண்டும் தோளில் சாய்த்து வைத்து அவனே கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தான்.. நிமிர்ந்து அவனைப் பார்த்துக் கொண்டே அவளும் அவன் கொடுத்ததை கஷ்டமாக இருந்தாலும் அவன் கொடுத்தான் என்பதற்காகவே கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடித்தாள்..
அதை பார்த்த பேபியம்மா
“ மனசு நிறைஞ்சு போச்சு. எங்க என் தங்கம் ஒரு வாய் சோறு சாப்பிடாமல் இருந்திடுவளோ ன்னு ரொம்ப பயந்துட்டேன்.. இப்ப நீ கொடுக்கவும் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டாளே அது போதும் எனக்கு..
இப்படித்தான்டா நான் அவளை ஊட்டி ஊட்டி வளர்த்தேன். இந்த பாவி பைய கட்டையில போறவன் என் தங்கத்தை இப்படி அடிச்சு காய்ச்சலில் படுக்க வைச்சுட்டானே.. என் மனசு கொஞ்சம் கூட அறவே இல்லை.. என் ராசா நீ நல்லா இருக்கணும்.. ” என்று சொல்லி பாசமாக கதிரின் தலையை தடவி விட்டார்..
அப்போதுதான் 18 வயது நிரம்பிய அந்த வீட்டின் மூத்த வாரிசு செழியன் எங்கிருந்தோ அவனது சைக்கிளில் வந்து சேர்ந்தான்..
யார் மீதோ இருந்த கோபத்தை மகனை கண்டவுடன் அங்கிருந்த சிறு கம்பை எடுத்து போதும் போதும் என்ற அளவுக்கு அடித்துவிட்டார் கோமதி..
“ அம்மாஆ என்ன ம்மா ஆஆஆஆ வலிக்கிது விடுமா.. மாமா என்னனு கேளு மாமா ஆஆஆஆ.. ”
மகன் அழும் சத்தம் கேட்டு உள்ளே கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த சரவணன் வேகமாக எழுந்து வெளியே வந்து அவனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்..
“ அறிவு இருக்காடி உனக்கு தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை கை நீட்டுற?. ”
“ ஆமா எங்களுக்கு அறிவு இல்ல.. அவருக்கு ஏகத்துக்கும் வளர்த்து வச்சிருக்காங்க. சும்மா போங்க என்கிட்ட வாங்கி கட்டிக்காதீங்க.. நான் கோயிலுக்கு போறேன் நீ வீட்ல இரு. எங்கயும் போகாதன்னு சொல்லிட்டு தான் நான் போனேன்.. இவன் நான் சொன்னதை கேட்டு வீட்டுல இருந்தா பாப்பாவை அத்தை தனிய ஆஸ்பத்திரி கூட்டிட்டு போக வேண்டிய தேவை வந்துருக்காது தானே.. அவங்களுக்கு இப்ப இளமை திரும்புதா என்ன?. 13 வயசு புள்ளையா இருந்தாலும் அவள கைதாங்களா கூட்டிட்டு போறதுக்கு அவங்களால முடியுமா?.. புள்ளைக்கு திடீர்னு காய்ச்சல் கண்டுட்டு. நீயும் வீட்ல இல்ல, நானும் இல்லை. வீட்டில் இருந்தவன்கிட்ட சொல்லிட்டு தானே போனேன். அதை கொஞ்சமாவது மதிச்சு வீட்டுல இருந்தானா?. அவன் பாட்டுக்கு ஊர் மேய போயிட்டு இப்பதான் ராசா வந்தார். அப்ப அடிக்காம தூக்கி வச்சு உன் பிள்ளையை கொஞ்ச சொல்றீயா மாமா?.. ” என்றார் கோமதி..
“ எங்கடா போன..? ”
“ அப்பா நான் எட்டிப் பார்த்தேன் அப்பத்தா மடியில பாப்பா தூங்கிட்டு இருந்தா.. அப்பத்தா மருந்து போட்டதும் பாப்பா தூங்கிட்டா போல இனி பிரச்சினை இல்லைன்னு நினைச்சு பிரண்ட்ஸ் விளையாட கூப்பிட்டதும் போயிட்டேன் ப்பா..”
“ சரி சரி இனிமே இப்படி செய்யக்கூடாது உள்ள போ. நீ இருந்திருந்தால் அம்மாக்கு கொஞ்சம் உதவியா இருந்திருக்கும் தானே.. அதுக்கு தான் உங்க அம்மா அடிச்சா இனி இப்படி செய்யக்கூடாது.. அம்மாவும்,அப்பத்தவும் என்ன சொன்னாலும் உடனே கேட்டு நடந்துக்கணும்.. நீ தான் இந்த வீட்டு ஆம்பள புள்ள.. நீ தான் எல்லாரையும் பொறுப்பா பாத்துக்கணும் சரியா? ” என்றார்..
“ சரிப்பா.. ” என்று விட்டு செழியன் வேகமாக அவனது அறைக்குள் சென்று விட்டான்..
நேரம் இரவு எட்டு மணி ஆகிவிட்டது கதிர் இனி ஊருக்கு சென்று சாப்பிட வேண்டும் என்றால் ஒன்பது மணி கடந்து விடும். அதனால் தம்பி இங்கேயே சாப்பிட்டு செல்ல வேண்டும் என நினைத்து கோமதி விட்டுக்குள் சென்றார்..
வெளியே யாரும் இல்லாததை பார்த்த கதிர் எழுந்து தன் மாமன் அருகே வந்தான்..
“ எங்க போறீங்க நில்லுங்க.. ”
கோமதி உள்ளே போனதும் அவரும் போக திரும்பியவரை நிற்க வைத்தான்.. அவரும் திரும்பி அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றார்..
“ என்னடா இப்ப வம்பு பண்ணுறியா.. ”
“ ஆமா நீங்க என் ஆசை முறைபொண்ணு தானே உங்ககிட்ட வம்பு வளர்த்துக்கிட்டு நிக்க. எனக்கு வேற வேலை இல்ல பாருங்க.. பெரிய மனுஷன்னு பேர் சொல்லிக்கிட்டா மட்டும் போதாது. நாலையும் விசாரிச்சு தான் முடிவு எடுக்கணும்னு தெரியல. அந்த பச்ச புள்ள மேல இப்படி கை வைச்சிருக்கிய. இதுதான் கடைசியும் முதலும் பாப்பாவ அடிக்கிறது. இனி அடிச்சீயன்னு கேள்விப்பட்டேன் நடக்கிறதே வேற சொல்லிட்டேன்.. ” என்றான்..
“ என்னடா பண்ணுவ நீ?. நான் பெத்த பொண்ணு. நான் அடிப்பேன் என்னமும் செய்வேன் அதை கேட்க நீ யாருடா.. ”
“ நான் யாருங்கறது இப்ப முக்கியம் இல்ல.. நான் யாருன்னு போக போக உங்களுக்கே தெரியும்.. சொன்னத மனசுல வச்சுக்கோங்க.. வாயால இனி சொல்ல மாட்டேன்.. அத்தையும் அக்காவும் இங்கே ஏதும் பிரச்சினை நடக்குமோன்னு பயப்படுறாங்க. ஏற்கனவே பாப்பா உடம்பாலையும் மனசாலையும் ரொம்ப கஷ்டப்பட்டு போயிருக்கா. திரும்ப ஒரு பிரச்சினை வேண்டாம். அதுதான் தனியா கூப்பிட்டு சொல்றேன் கேட்டு நடந்தால் உங்களுக்கு நல்லது.. ” என்றான்..
அவன் பேசியது எதிரில் நின்ற சரவணனுக்கு மட்டும் தான் கேட்டிருக்கும் வார்த்தையில் அமைதி தான் ஆனால் கண்களோ ரௌத்திர மூர்த்தியாக நின்றான்..
தன்னைவிட சின்னப் பையன் தன்னை பேசியதை பொறுக்காமல் கோபத்தோடு விட்டுக்குள் சென்றார் சரவணன்..
தன்மேல் தவறு இருப்பதாலும் தன்னால் தன்மகள் கஷ்டப்படுவதாலும் மட்டுமே இந்த பொறுமை அவருக்கு. இல்லையென்றால் இங்கே மாமனுக்கு மச்சானுக்கும் இடையே ஒரு கைகலப்பு நடந்திருக்கும்..
error: Content is protected !!