Skip to content
Post Views: 820
அத்தியாயம் 04**1
Advertisement
சின்னத்தம்பி கலாவதி தம்பதியரின் ஒரே புதல்வி தான் கோமதி..
Advertisement
கலாவதி மிகவும் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு தான் வளர்ந்தவர் ஒரு வேளை சாப்பாடு கூட அவருக்கு ஒழுங்கா கிடைத்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும் அப்படி கஷ்டத்தில் வளர்ந்தவர்
Advertisement
அவர் சரியான முறையில் உணவு உண்ணாத காரணத்தால் அவர் கையால் பலருக்கு உணவளிக்க வேண்டும் என்று ஆசையில் அவர் வீட்டிற்கு முன்பு சிறிய அளவில் உணவகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்..
Advertisement
சின்னத்தம்பி பக்குவம் இல்லாதவர். அதாவது யாராவது உடனே அவர் கையில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு உதவி என்று கேட்டால் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து விடுவார். அவர்கள் திருப்பி தருவார்களா? மாட்டார்களா? இல்ல தங்கள் குடும்பத்திற்கு எதுவும் தேவை இருக்குமா? என்ற சிந்தனை எதுவும் அவரிடம் இருக்காது. உதவி என்று கேட்டால் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்..
நன்றாக கஷ்டப்பட்டு உழைப்பார். ஆனால் அந்த உழைப்பின் பலனை அவர் அனுபவித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரின் குணம் தெரிந்து அவரை ஏமாற்றுவதற்காகவே சிலர் அவரிடம் பணம் கேட்பார்கள்.. இது ஆரம்பத்தில் கலாவதி க்கு தெரியாமல் இருந்தது. கணவன் சம்பளமே இவ்வளவு தான் என அவர் கொடுக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி வந்தார்..
கலாவதியின் அண்ணன் ஆறுமுகம் தான் தங்கையின் கணவனை பற்றி தங்கையிடம் சொல்லி அவனை கண்டித்து குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடந்தும் படி அறிவுரை கூறினார்..
கொண்டான் கொடுத்தான் குடும்பம்..
ஆறுமுகம் கலாவதி, மகேஸ்வரி மூவரும் அண்ணன் தங்கச்சிகள்.
சின்ன தம்பியும், பேபியம்மாவும் அண்ணன் தங்கை..
பேபியம்மாவிற்கும் தன் அண்ணனின் செயலில் விருப்பம் இல்லை தான் ஆனால் எவ்வளவு சொல்லியும் சின்னதம்பி கேட்பதாக இல்லை. அதனால் கலாவதிக்கு தான் அவரும் பக்குவம் சொல்லி அறிவுரை சொன்னார்..
சின்னதம்பி ஊதாரியாக செலவழிக்கும் பழக்கம் கொண்டவர் இல்லை, தேவையில்லாத பொருட்களின் மீது ஆசைப்படுவது குடி போதை,புகை பழக்கம் அப்படியும் இல்லை.. பெண் சகவசமும் இல்லை..
விரும்பியதை ஆசையாக உண்டு. அவர் குடும்பத்திற்கும் கொடுத்து. தன் தங்கை குடும்பத்திற்கும் கொடுத்து அந்த மாதிரி பழக்கம் இல்லை.. பணம் என யார் வந்து கேட்டாலும் அவர் கையில் இருந்தால் தூக்கி கொடுத்து விடுவார் அதில் அவருக்கு அப்படி ஒரு சந்தோஷம்..
மனைவியிடமும்,மற்றவர்களிடமும் எப்போதும் அவர் சொல்வது இன்று மற்றவர்கள் உதவி என்று கேட்கும் போது நாம் செய்தால் நமக்கு கஷ்டம் வரும் போது உதவி தேவைப்படும்போது அந்த உதவி இரண்டு மடங்காக நமக்கு கிடைக்கும்.. அதனால் உதவி என்று வந்து கேட்டால் இல்லை என்று சொல்லாமல் நான் இருக்கிறதை கொடுக்கிறேன் நாளை அது என் பிள்ளைகளுக்கு போய் சேரட்டும் என்பார்..
தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும் என்று பலவகையாக அவரை சுற்றியுள்ள அனைவரும் சொல்லிப் பார்த்தார்கள் ஆனால் அவர் அதை காதில் எடுப்பதாக தெரியவில்லை..
கணவன் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்தால் கணவனை பற்றி புகார் சொல்லலாம்.. அப்படி எதுவும் இல்லை அன்பான மனிதன்தான் சின்னத்தம்பி ஆனால் இந்த பண விஷயத்தில் மட்டும் தான் கோட்டை விடுவார்
அதனால் கலாவதியும் அதை அனுசரித்து போக பழகிக்கொண்டார். கணவன் தனக்கு என தரும் பணத்தை மிச்சப்படுத்தி கொண்டு தான் உணவகம் வைத்து உழைத்து தன் மகளுக்கு தேவையானவற்றை தேடிக் கொள்ள நினைத்தார்..
ஆறுமுகம் தன் தங்கை ரொம்ப கஷ்டப்படுவதையும் மச்சான் பொறுப்பில்லாமல் இருப்பதையும் பார்த்து இனி அவரை வெளியே விடுவது சரியில்லை என நினைத்து தன் தச்சு மில்லில் அவரை வேலைக்கு வைத்துக் கொண்டார்..
ஏன் எதற்கு தன்னை தங்களுடன் இணைத்து இருக்கிறார் மச்சான் என எந்த கேள்வியும் கேட்காமல் அங்கேயும் ஆறுமுகம் சொன்ன அனைத்து வேலைகளையும் மாடாகவே உழைத்தார் சின்னத்தம்பி..
கோமதிக்கும் ஐந்து வயது ஆகிய காலம் அது..
கோமதி மீது சரவணனுக்கு மிகவும் பற்றும் பாசமும் அதிகம்..
அவனுக்கு என கிடைக்கும் அனைத்தையும் இரண்டாக பிரித்து கோமதிக்கும் கொடுத்து விடுவான்..
இந்திரன் இவர்களுடன் அண்டாமல் ஒதுங்கியே இருப்பான்..
சிறு வயதில் இருந்து தாயின் முந்தானையை பிடித்து சுற்றும் ரகம்..
ஆறுமுகமும் தன் பிள்ளை தங்கை பிள்ளை என்று இல்லாமல் கோமதியை தன் பிள்ளை போல தன் மகனுக்கு உடை எடுத்தால் அவளுக்கும் தன் மகனுக்கு தின்பண்டம் வாங்கினால் அவளுக்கும் என பார்த்து பார்த்து தான் செய்தார்..
இதை கலாவதி வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை..
தன் தங்கையின் குடும்பம் என்று இல்லாமல் சின்ன தம்பியின் கடின உழைப்புக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டும் அதை சரியாக மூன்றாக பிரித்து சின்னதம்பிக்கு ஒரு பங்கை கொடுத்துவிட்டு இரண்டு பங்கை தன் தங்கையிடம் எடுத்துக் கொண்டு சென்றார்..
சின்னதம்பி இல்லாத நேரமாக தன் தங்கையிடம் அந்த பணத்தை கொடுத்து விவரத்தையும் சொல்லும் பொழுது கலாவதிக்கு கண்கள் கலங்கிவிட்டது. இவ்வளவு பணம் தன் கணவன் உழைத்திருக்கிறார் அதில் பாதியைத்தான் முதல் இருந்த முதலாளி கொடுத்திருக்கிறார் அதையும் கணவன் வாங்கி தானம் செய்துவிட்டு அதிலும் கால்வாசி பங்கு தான் தன் கையில் கொடுக்கிறார் என்று நினைத்து மிகவும் மனம் வருந்தினார்..
குடும்ப கஷ்டம் காரணமாக மகேஸ்வரி ஐந்து வருட காண்ட்ராக்டில் கோமதிக்கு இரண்டு வயது இருக்கும் பொழுது சவுதி நாட்டுக்கு சென்று இருந்தார்..
ஆறுமுகத்தின் தாய் தந்தைக்கு மிகுந்த கடன் அவர்கள் இருக்கும் வீட்டில் கூட அவரின் தந்தை கடன் வாங்கி இருந்தார்..
ஆறுமுகம் தன்னால் கடன் அடைக்க முடியும் என தங்கையை வெளிநாடு செல்ல விடாமல் தடுக்க பார்த்தார் ஆனால் அவரும் சுயமாக தச்சு மில்லை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்த காலம் அது.
அப்படி இருக்கும் பொழுது அவருக்கும் குடும்பம் இருப்பதால் அனைத்தையும் அண்ணன் தலையில் கட்டுவது சரியில்லை தனக்கு திருமணம் வயதும் இன்னும் வரவில்லை அதனால் பொறுமையாகவே கடனை தானே அடைத்துக் கொள்வதாக கூறி அண்ணனின் பேச்சையும் மீறித்தான் வெளிநாடு சென்றார் மகேஸ்வரி..
இப்படியாக சின்னத்தம்பி ஆறுமுகத்திடம் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது அண்ணன் கணவரின் உழைப்பில் கொடுக்கும் பணத்தை மிச்சப்படுத்தி மகளுக்கு நகை சேர்த்தார் கலாவதி..
அவர்கள் இருக்கும் இடம் சின்ன தம்பியின் சொந்த இடம் என்பதால் வீடு, இடம் பற்றி பிரச்சினை இல்லை..
கணவனின் பணம் கிடைத்தும் கலாவதி தன் உணவகத்தை விடவில்லை..
பக்கத்து வயலில் வேலை செய்யும் ஆண், பெண்களுக்கு மதியம் உணவு சமைத்து கொடுக்கும் பழக்கம் உள்ளது..
அன்றும் அதே போல் மதிய உணவை சமைத்துக் கொண்டு வயலுக்கு சென்றார். உணவு கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக் கொண்டு திரும்பி வரும் வழியில் பாம்பு கடித்து விட்டது யாரும் உதவிக்கு வர வில்லை இறந்து விட்டார்..
மதிய நேரம் அந்த வயலின் வேலைகள் மூன்று நாட்களுக்கு முன்பே முடிந்து விட்டதால் அந்த வயல் வெறுமையாகவே கிடந்தது. அந்த வயலை கடந்துதான் தற்பொழுது உணவு கொடுக்கும் வயலுக்கு செல்ல வேண்டும். அதனால் அந்த வேலை முடிந்த வயலில் ஆள் நடமாட்டம் இல்லாததாலும் பாம்பு கடித்த உடனே கலாவதியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது..
இரண்டு மணி நேரம் கழித்து தான் அந்த வழியாக அந்த இடத்தின் முதலாளி வந்து அவரை பார்த்துவிட்டு உடனடியாக ஆறுமுகத்துக்கு தகவல் சொன்னார்..
வேலையை அப்படியே போட்டுவிட்டு ஆறுமுகம், பேபியம்மா இனி அங்கே வேலை செய்த சின்னத்தம்பி என அனைவரும் ஓடி வந்தார்கள்..
ஆறுமுகம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் தன் தங்கையில் ஒருத்தி வெளிநாட்டில் கிடந்து கஷ்டப்படுகிறாள். இன்னொருத்தி குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறாள் உங்களுக்கு ஏன் இந்த தலையெழுத்து உங்களையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இருவரில் யாரும் அதற்கு சம்மதிக்க வில்லை..
உணவகத்தை மூடிவிட்டு வீட்டிலேயே இரு இப்பொழுதுதான் கணவனின் பணம் அதிகமாக கையில் கிடைக்கிறது அதை வைத்து குடும்பம் பண்ணு என ஆறுமுகம் எவ்வளவோ சொல்லியும் பெண் பிள்ளை வைத்திருக்கிறோம் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது இரண்டு உழைப்பு இருந்தால் நல்லது என கூறிவிட்டார் காலாவதி..
முன்பு சின்னதம்பி கொண்டு வந்து தரும் பணம் அவர்களின் அன்றாட தேவைக்கு போதாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள்..
இந்த ஒரு வருடமாக கணவன் தந்த பணத்தை வைத்து மகளுக்கு 20 சவரன் நகை தேடிக் கொண்டார் கலாவதி..
கணவன் எப்பொழுது எப்படி மாறுவார் என்று தெரியாததால் அவர் இருக்கும் வரையில் மகளுக்கு தேவையானது செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் அண்ணன் சொல்லயும் மீறி உணவு சமைத்து எடுத்து வந்து தன் காலத்தை முடித்துக் கொண்டார்..
அடுத்து என்ன? யார் அழுதும் மாண்டவர்கள் வரப்போவதில்லை என்று உண்மை புரிந்து நல்ல முறையாக கலாவதியை அடக்கம் செய்தார்கள்..
கலாவதியின் காரியம் முடிந்ததும் தான் மதியைப் பற்றிய சிந்தனை அனைவருக்கும் ஓடியது..
இன்னும் இரண்டு வருடம் உள்ளதால் மகேஸ்வரியும் உடனடியாக நாட்டிற்கு வர முடியாத சூழ்நிலை..
கோமதி பேபியம்மாவின் கையில் சேர்ந்தாள்..
உண்மையில் சின்னத்தம்பி கலாவதி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை கலாவதின் பிரிவின் பிறகுதான் அனைவரும் புரிந்து கொண்டார்கள் மனிதன் பாதியாக உடைந்து விட்டார்..
அப்படி இருந்தும் மகள் இருக்கிறாள் என்ற காரணத்தால் குடிப்பழக்கத்தை நாடவில்லை..
மனைவி இருந்த வீட்டுக்கு செல்லாமல் தங்கையுடனே இருந்து கொண்டார்..
மீண்டும் மில்லில் வேலை செய்து வரும் பணம் மொத்தத்தையும் தங்கையின் கையில் ஒப்படைத்து மகளை பார்த்துக் கொள்ளும்படி கூறினார்..
சரவணனுக்கு தான் மிகவும் கொண்டாட்டம் கோமதி இனி தன்னுடனே எப்போதும் இருப்பாள் என்று நன்றாகவே பார்த்துக் கொண்டான்.
அவளும் விவரம் தெரிந்த பின் மாமா மாமா என்று சரவணன் பின்னாடியே சுற்றித்திரிந்தாள்..
சரவணன்,இந்திரன், கோமதி மூவரையும் பேபியம்மா ஒன்றாகவே பள்ளிக்கு தயார் படுத்தி அனுப்புவார்.. இந்திரன் தனியாக செல்வான். சரவணன் கோமதியை அழைத்துக் கொண்டு செல்வான் இப்படியே இவர்களின் காலம் இரண்டு வருடம் முடிந்து விட்டது..
பேபியம்மாக்கு தன் அண்ணனை நினைத்து மிகவும் கவலை.. இந்த சிறு வயதிலேயே மனைவியை இழந்து ஒற்றை பெண் பிள்ளையுடன் அவரின் காலம் சென்று விடுமோ என பயம்தான்..
ஐந்து வருட காண்ட்ராக்ட் முடிந்து மகேஸ்வரி நாடு திரும்பியதும் தன் அக்கா மகளை கண்ணீரோடு வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்..
முன்பிருந்தே ஊரில் இருக்கும் கடனை அடைத்து விட்டு தன் கையில் இருக்கும் மிச்ச பணத்திற்கு தனக்கும் அக்காவுக்கும், பேபியமாக்கும் ஒரே மாதிரி உடைகள் நகைகள் எடுத்துக் கொண்டார்..
அக்காவிற்கு என வாங்கியது அனைத்தும் அவரைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது..
கண்ணில் கொட்டிய கண்ணீரை துடைத்துக் கொண்டு அண்ணனுக்கு கிராமத்தில் இருக்கும் அவளின் தாய் தந்தைக்கு அண்ணன் பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கியது அனைத்தையும் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு சின்னதம்பிக்கு வாங்கியதை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்தார்..
மகேஸ்வரிக்கு சின்னத்தம்பி மீது தீராத கோபம். தன் மாமா மட்டும் அந்த பணத்தை தானம் பண்ணும் குணம் மட்டும் இல்லாமல் உழைக்கும் பணத்தை அக்காவின் கையில் கொடுத்திருந்தால் அக்கா இப்படி தனக்கென ஒரு தொழிலை தேடி அந்த தொழில் மூலமாக அவள் உயிரும் பிரிந்து இருக்காது என தீராத கோபம்..
முகம் கொடுத்து சின்ன தம்பியை பார்த்து அவருக்கு வாங்கியவற்றை கொடுக்க அவளுக்கு பிடிக்கவில்லை..
சின்னதம்பி அதெல்லாம் எதிர்பார்க்கவில்லை.. ’ நல்லா இருக்கியா மகேஷ்.. ’ என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டு ஒதுங்கிக் கொண்டார்..
மகேஸ்வரி வந்து ஆறு மாதத்திற்கு பின்பும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்ததனால் பேபியம்மா தான் மகேஷ் மற்றும் சின்ன தம்பியின் திருமணத்திற்கு அடிபோட்டார்..
இன்று மாலை நேரம் வேலை முடித்து கணவனும், அண்ணனும் வீட்டுக்கு வந்தார்கள்.. இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு பேபியம்மா கணவன் முகம் பார்த்து தன் விருபதை கூறினார்..
இருவருக்கும் விருப்பம் என்றால் தாராளமாக திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறினார் ஆறுமுகம்..
தாய்,தந்தையுடன் ஊரில் இருந்த மகேஸ்வரிவை அடுத்த நாள் அழைத்து அவரிடம் விருப்பதைக் கேட்க முதல் முடியாது என்றவர் அக்காவின் மகளை கருத்தில் கொண்டு சரி என கூறினார்..
திருமணத்திற்கு மகேஸ்வரி போட்ட முதல் கண்டிஷன் எப்பொழுது அண்ணன் மில்லில் தான் வேலை செய்ய வேண்டும்.. வேலை செய்து வரும் பணம் அனைத்தும் தன் கையில் தரவேண்டும். அதை வைத்து தான் குடும்பம் நடத்துவதாகவும் அதற்கு சம்மதம் என்றால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லுவேன் என்றும் கூறினார்..
தன்னுடைய உதவி குணம் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் உதவும் என்று நினைத்தவர் அதே தன் மனைவியின் உயிரை பரித்த காரணத்தால் இனி அப்படி செய்ய மாட்டேன். பணம் அனைத்தையும் உன்னிடமே கொடுப்பேன் என்று உறுதி கொடுத்துதான் திருமண முடித்தார் சின்னதம்பி..
முன்பு கலாவதியும் சின்ன தம்பியும் வாழ்ந்த வீட்டை விற்று விட்டு அந்த பணத்தை கொண்டு பக்கத்து ஊரில் இடம் வாங்கி மண்ணால் ஆன சிறிய வீட்டைக் கட்டி அங்கேயே வாழ்க்கை ஆரம்பித்தார்கள்..
அக்கா மகள் என்று புறக்கணிக்காமல் தன் மகள் போல் அன்பாகவும்,பாசமாகவும் வளர்த்தார் மகேஸ்வரி.. ஆனால் கோமதி ஆரம்பத்திலேயே சித்தி என்று அழைத்தாள். அதனால் அம்மா என அழைக்கும் பழக்கம் வராமல் சித்தி என்று அழைக்க ஆரம்பித்தாள்..
error: Content is protected !!