Skip to content
Post Views: 1,626
கோபமாக தனது தோளில் இருந்த துண்டை உதறியபடி அவர்களை கடந்து சகுந்தலாவை தேடி அவர் செல்லப்போக,
“ஹலோ.. ஃபயர் சர்வீஸா..?” என்ற யமுனாவின் குரலில்,
Advertisement
‘எதுக்கு அவுங்களுக்கு கூப்பிடுது இந்த புள்ள..?’ என்ற யோசனையோடு அவர் அவளை பார்க்க,
“இங்கே ஒருத்தர் வயிறு பத்திக்கிட்டு எரியுது. கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா..?” என்றதில் அவளின் நக்கல் புரிந்திட முறைத்தபடி அவர் நிற்க,
Advertisement
Advertisement
“என்னது ஜெல்யூசில் வாங்கி ஊத்தவா..? அட நீங்க வேற சார்.. இந்த வயித்தெரிச்சலுக்கு ஒரு பாட்டில் பத்தாதுன்னு தானே வண்டியவே கேட்கறேன்..” என இன்னும் தீவிரமான பாவனையில் சொல்லிவிட்டு.. அவரை மிதப்பான பார்வையோடு கடந்து சென்றிருந்தாள்.
அதில் மேலும் கடுப்பாகி உள்ளே சென்ற வேகத்தில், “ஏய்.. வெளிய என்ன நடக்குதுன்னு இல்லாத நீ இங்கன என்னத்த வெட்டி முறிக்கறே..?” என்றார் கோபத்தை கண்ணில் காட்டி பற்களுக்கிடையே வார்த்தையை கடித்து துப்பிய படி வெளியே இருப்பவர்களின் காதில் விழாதவாரு கேட்க,
Advertisement
“ஏனுங்க இம்புட்டு கோவோ..? நானே காத்தால இருந்து வலியில கெடக்கறது தெரியாதா உங்களுக்கு..?
நீங்க நேத்து சொன்னத கேக்க போயி தே இந்த நிலமையில கிடக்கேன்..” என நேற்று தான் செய்ததையும் அதற்கு யமுனாவின் பதிலடியையும் சொல்லிய சகுந்தலா,
“அவ ரொம்ப வெவரமான புள்ளையா இருக்கா.. அவள அனுசரிச்சு போயிட்டா நல்லது தானேங்க..” என அவரின் வார்த்தை முடியும் முன்,
“எல்லா எனக்கு தெரியும்.. உன்ற சோலிய பாரு..” என்றவர் யோசனையோடு அங்கிருந்து வெளியேறினார்.
****
சக்தி தனக்கு வந்த போனில் மிக மும்முரமாக பேசியவன், “வாணி சித்த இங்க வா..” என சத்தமாக அழைக்க வாணியோடு தீனாவும் வெளியே வந்திருந்தான்.
“ஏங்க மாமா.. எதுக்கு கூப்புட்டீங்க..?” என வாணி கேட்ட கேள்வியையே தீனா விழியால் வினவ,
ஒரு நொடி தீனாவை பார்த்தவன் திருதிருவென விழித்துவிட்டு பின் சுதாரித்து, “அது வந்து வாணி சமயக்காரங்க காலைக்கு மத்தியானத்துக்கு செய்ய வெங்காயம் காயெல்லா வெட்டி வைக்கனுமுன்னு ராத்திரிக்கே மண்டபத்துக்கு வந்திடுவாங்கலாம்.
அதா நா போய் அங்கன ஒரெட்டு பாத்துட்டு அப்புடியே நம்மூட்டு போயிடறேன்.
இன்னிக்கு ஒரு நா இங்கையே தங்கிக்கோங்க.. என்னைய ராவுக்கு காணோமுன்னு தேடாதேன்னு சொல்ல தான் கூப்புட்டேன்..” என்றிட,
“அப்போ ராவுக்கு சாப்புட வரலையா நீங்க..?” என்றாள் வாணி அக்கறையுடன்.
“அங்கனவே சமயக்காரங்க அவுகளுக்கு செய்வாங்கலாம். அதுல பாத்துக்கறேன்.. பாலாவ பாத்துக்கோ..” என்றவன் வண்டியில் ஏற,
“மாமா, நானும் வர்றேன் இருங்க. நீங்க தனியா போய் என்ன பண்ணுவீங்க..?” என தீனா சொல்ல,
“மாப்ளே எனக்கே அங்கன ஒரு ஜோலியும் இல்ல. சும்மா அவுக செய்யறத வேடிக்கே தே பாக்க போறேன்.
இதுல நீயும் வந்து என்னத்த செய்ய போறே..? போயி நல்லா தூங்கி எழு. முகமே வாட்டமா கிடக்கு..” என்றவர் வேகமாக அங்கிருந்து விரைந்தார்.
‘மாமா முழியும் பேச்சும் சம்மந்தமே இல்லாம இருக்கே..? என்னையும் கழட்டிவிட்டுட்டு இவ்வளவு வேகமா ஏன் ஓடறாரு புரியலையே..!’ என்ற யோசனையில் சக்தி சென்ற திசையை பார்த்திருந்த தீனாவை பார்த்து,
“தீனா, நாளைக்கி எப்படியும் எல்லாரோடவும் பேசிட்டு இருக்கோனும்.. ரெஸ்ட் எடுக்கெல்லாம் முடியாது.
யமுனாகிட்ட சொன்னதுக்கு தூக்கம் வரலன்னுட்டா.. நீயாச்சும் போய் சித்தே நேரம் தூங்கு. டிப்பன் ஆனதும் உசுப்பறேன்..” என்ற வாணி உள்ளே செல்ல,
அவருக்கு பின்னே வந்த தீனா, “இல்ல வாணி.. ஒட்டுக்கா சாப்புட்டே தூங்கிக்கறேன்.. படுத்தா எழுந்துக்க கஷ்டமா இருக்கும்..” என்றான்.
அவன் பேச்சை கேட்ட வாணி உடனடியாக இரவு சமையலை தொடங்க யமுனாவும் உதவியதால் ஏழு மணிக்கெல்லாம் அனைத்தும் தயாராகியிருந்தது.
‘நாளை விருந்தை முடித்த பின் கிளம்பிக்கொள்ளலாம்..’ என இருந்த சிலருக்கும் சேர்த்து பரிமாற.. உண்டவர்கள் நேற்று போல வாணியிடமிருந்து வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்பியிருந்தனர்.
யமுனா வாணி உண்டு.. மற்றதை ஒதுக்கி வைத்த பின் மருதாணி வைக்க அமர, அவர்களை பார்த்த படி கூடத்திலேயே பாயை விரித்து அதில் தலை சாய்த்த தீனாவை இரு பக்கமிருந்தும் ஆக்ரமித்து இருந்தனர் அவனின் தம்பியும் மருமகனும்.
ஐவரும் பேசி சிரித்தபடி வேலையை செய்ய, சற்று நேரத்திற்கெல்லாம் தீனா பேசாமல் நல்ல உறக்கத்திற்குள் சென்றிருந்தான். அவன் அமைதியாக பிள்ளைகளும் அவர்களோடு உறங்க,
“என்ன இவன் இங்கனவே படுத்துட்டான்..? உள்ள போயி படுத்தா நீயும் போவலாமில்ல.. இரு எழுப்பி விடறோன்..” என வாணி சொல்ல,
“அண்ணி விடுங்க நல்லா அசந்து தூங்கறாங்க. நம்மளும் இங்கையே படுப்போம்..” என்றவளை சங்கடமாக வாணி பார்க்க,
“அச்சோ அண்ணி.. ஏன் இப்படி..? அதெல்லாம் பிரச்சனை இல்லை. காலம் முழுக்க உங்க தம்பி கூட தானே இருக்க போறேன். ஒரு நாளைக்கு உங்க கூட இருந்தா என்ன..? வாங்க..” என்றாள் புன்னகையோடு.
மறுநாள் விடியல் நிறைவான சந்தோஷத்தை திருமண ஜோடிகளுக்கு வாரி வழங்கவென வந்து சேர்ந்தது.
முதல் ஆனந்த அதிர்ச்சியாக தீனா கண் விழித்ததும் கண்டது குமரனை.
“டேய் குமரா..!” என தாவி வந்து அணைத்து, “நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல..” என்றான் சந்தோஷமாக.
“உன்னோட பங்ஷன் நா வராம நடந்திடுமா ண்ணே..?” என்றவன் ஒரு பெரிய பையை அவனிடம் நீட்ட,
“என்னடா இது..?” என்றபடி தீனா வாங்கினான்.
“உள்ள உனக்கும் யமுனாக்கும் ட்ரஸ் இருக்காம். மணியண்ணே கொடுத்து விட்டார்.
அவங்க ஒரு எட்டு ஒம்பது மணி வாக்குல வருவாங்க.. நீங்க கிளம்பறப்போ போட ட்ரஸ் வேணுமில்ல அதான் என்கிட்ட கொடுத்து விட்டாங்க..” என்றவனை வாணியும் யமுனாவும் வந்து வரவேற்று குடிக்க டீ கொடுக்க,
“யமுனா, உன்னைய ரெடி பண்ண அருந்ததி அண்ணி ஆளுக்கு சொல்லியிருக்காங்கலாம். அவங்க இன்னும் அரமணி நேரத்துல வந்திடுவாங்க..” என குமரன் அடுத்த ஆச்சரியத்தை அளித்தான்.
அதன் பிறகு வந்த நேரம் மின்னலாய் விரைய, அருந்ததி ஏற்பாடு செய்திருந்த பியூட்டிஷியன் உபயத்தால் அழகான அலங்காரத்தில் தேவதை என ஜொலித்தாள் யமுனா.
அவளை கண்ட தீனதயாளனின் நிலை தான் கவலைக்கிடமாக இருந்தது.
“சாதாரணமா சேல கட்டுனாலே கன்ட்ரோல் மிஸ்ஸாகும்.
இதுல இப்புடி அழகா சேல கட்டி, ஃபுல் மேக்கப்ல வந்து நின்னு என்னைய மொத்தமா சாச்சா எப்புடி தான் இன்னைக்கு முச்சூடும் தாங்குமோ..?
ஆண்டவா, என்னை இந்த அழகான ராட்சசிகிட்ட இருந்து நீ தான் காப்பாத்தி விடனும்..” என மானசீகமாய் வேண்டுதலை வைத்து முடித்தான்.
மணமக்களுக்கான மேட்சிங் செட் என்பதால் யமுனாவின் புடவைக்கு ஏற்றபடியான வேட்டி சட்டையில் தீனாவும் அசத்தலாய் தயாராக,
யமுனா கண்ணாலேயே மெச்சுதல் பாவனையை காட்டியதோடு ஒற்றை புருவம் உயர்த்தி, “அசத்தறீங்க கண்ணழகா..!” என மற்றவர் அறியாத வகையில் இதழசைக்க, மொத்தமாய் உறைந்து போனான் அதில்.
இதழ் சுவை அறியாத போதே அவளின் இத்தகு அசைவுக்கு அவனின் ஆசை ஹார்மோன்கள் குத்தாட்டம் போடும்.
இதில் முந்தைய நாள் காலை உணர்ந்த அந்த தேன் சுவை நினைவில் எழுந்து கொண்டால் அவன் நிலை..!!!
“ராட்சசி ஆரம்பிச்சுட்டா.. தீனா ஸ்டெடியா இருக்கனும். இல்ல மொத்த உறவுக்காரங்க முன்னாடி மானம் போயிடும்..” என திரும்ப திரும்ப மனதுக்குள் உருவேற்றி கொண்டவன்,
“அவ பக்கம் பாத்தா தானே மைண்டு ஸ்லீப் ஆகுது. அவ பக்கமே திரும்பாம சமாளிச்சிடலாம்..” என அவன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்க இவர்களுக்காக தயாராக காத்திருந்தார் ஃபோட்டோகிராபர் மற்றும் வீடியோ எடுப்பவர்.
சுற்றிலும் தோட்டம் வயல் என அழகான கிராமத்து பின்னணியில் அம்சமாய் ஒரு ஜோடி கிடைத்தால் சும்மா இருப்பார்களா அவர்கள்..?!!
தங்களுக்கு தேவையான அத்தனை விதமான போஸையும் அவர்களை கொடுக்க வைக்க,
யமுனா பெரிதாய் பாதித்தது போல இல்லாமல் இயல்பாய் அவனோடு ஒன்ற அவன் பாடு தான் படு திண்டாட்டம் ஆனது.
அதிலும் மிக நெருக்கமாக அணைத்து நெற்றியோடு நெற்றி முட்டி.. மூக்கோடு மூக்கு உரசி என போட்டோகிராபர் அடுக்கிக்கொண்டே போக தீனா ஒரு வழியாகி போனான்.
அவர்களுக்கு தேவையானதை அவர்களை வைத்து தெளிவாக வாங்கிய பிறகே அந்த சமுதாய கூடத்துக்குள் விட்டனர் அவர்கள்.
“அப்பாடா ஒருவழியா விட்டானுங்களே..! இன்னும் கொஞ்ச நேரம் அவகிட்ட நின்னிருந்தா விருந்தாவது ஒண்ணாவது போங்கடா ன்னு அவள வீட்டுக்கு தூக்கிட்டு போயிருப்பேன்..” என மனதுக்குள் சொல்லி, மானசீகமாய் தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து வெக்கமும் பட்டுக்கொண்டான் யமுனாவின் கண்ணழகன்.
error: Content is protected !!