Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 22.1

நதி 22
வீட்டிற்கு சென்றிருந்த வாணி திரும்ப வரும் போது மருதாணி இலையும் தன்னிடமிருந்த பட்டு சேலைகள் சிலதையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்.


Advertisement

மருதாணியை பார்த்த யமுனா, “வாவ் அண்ணி..! எனக்கு இப்படி மருதாணி இலை அரச்சு வைக்க ரொம்ப பிடிக்கும். கரெக்ட்டா கொண்டு வந்துட்டீங்க. கொடுங்க நா அரைக்கிறேன்..” என அதை வாங்க போக,
“புதுபொண்ணு கைல எல்லா பக்கமும் ஆகிட்டா நல்லாவா இருக்கும்..? நானே அரச்சு வச்சுவிடறேன். 

Advertisement

Advertisement

இந்த இத மொதோ(முதலில்) பாரு ..” என்ற வாணி துணிகள் அடங்கிய பையை யமுனாவிடம் கொடுத்துவிட்டு மருதாணி அரைப்பதற்கான ஆயத்தங்களை தொடங்கினார்.
“அண்ணி, நாளைக்கு விருந்துக்கு என்ன கலர் சேல கட்டன்னு புரியாம மொத்தமா அள்ளிட்டு வந்துட்டீங்க போலவே..? நா செலக்ட் பண்ணி கொடுக்கவா..?” என சிரிப்போடு கேட்க,

Advertisement

“இல்ல யமுனா.. உன்னோட பெட்டில நார்மலா கட்டற மாறி சேல தான் உங்கூட்டுல வச்சு அனுப்பியிருக்காங்க. காலைல நீ எடுத்து வைக்கறப்போ நானுங்கூட தானே இருந்தேன்.. 
நாளக்கி நெறைய பேர் வாரப்ப நீ சாதாரணமா இருந்தா நல்லா இருக்காதில்ல.. 
அதான் உங்கிட்ட இருக்கற ப்ளவுஸூக்கு எது மேட்ச் ஆகுதோ அத கட்டிக்கிட வைக்கலாமுன்னு எங்கிட்ட இருக்கறதுல நல்லா இருக்கறதா பாத்து எடுத்துட்டு வந்தேன்.
நியாயமா பாத்தாக்க புதுசு தா எடுத்திருக்கனும். திடீர்ன்னு வந்த செலவு.. அதுலையும் அப்பா வேற எக்கச்சக்கமா ஆளுகல கூப்புட்டு விட்டிருக்காங்க.. இதுக்கே அவன் எப்புடி சமாளிப்பானோன்னு இருக்கு..! 
மாமா பணம் ஏற்பாடு பண்ணனுமான்னு கேட்டதுக்கு நா பாத்துக்கறேன்னு சொல்லிட்டானாம். இதுல புதுசு எடுக்கனுமுன்னா..” என தயக்கத்தோடே வாணி சொல்ல,
“அண்ணி, நீங்க எதுக்கு எனக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்கறீங்க..? 
உங்க தம்பிய பத்தி தெரியாமையா நா கல்யாணம் பண்ணியிருக்கேன்..? 
அதோட இப்போ இந்த கல்யாணமே திடீர்ன்னு எந்த யோசனையும் இல்லாம நடந்ததுன்னு எனக்கும் தெரியும் தானே..? அதனால இதை நா தப்பா எடுத்துப்பேன்னு நினைக்கவே நினைக்காதீங்க.
உண்மைய சொன்னா எனக்காக யோசுச்சு இவ்வளவு செஞ்சதுக்கு நா தேங்க்ஸ் தான் சொல்லனும்..” என்றவள்,
வாணியின் கன்னத்தை கிள்ளி விட்டு, “ச்சோ ஸ்வீட் நாத்தனார் நீங்க..” என்றிட வாணிக்கு அத்தனை நிறைவு.
சூழ்நிலையை அனுசரித்து போகும் குணமுள்ள பெண் தன் தம்பிக்கு வாய்த்திருப்பதை எண்ணி.
அவர்கள் தங்களுக்கான பேச்சு வார்த்தையில் மூழ்கியிருக்க, வெளியே ஒரு உரிமை போராட்டம் நடந்துகொண்டிருந்தது தீனாவிடத்தில்.
சக்தியின் வண்டியிலிருந்து இறங்கிய பாலமுரளி உள்ளே முதல் ஆளாக ஓட.. அங்கே அவன் கண்டதோ.. தீனா அருகே மிக நெருக்கமாக அமர்ந்து சிரிப்போடு எதையோ பேசிக்கொண்டிருந்த ஜெகதீஷை தான்.
அதில் யோசனையோடு அவர்களை பார்த்து நின்றுவிட்டவனை கடந்து வாணி உள்ளே சென்றுவிட்டிருந்தார். 
‘இப்போது மாமாவிடம் போவதா..? இல்லை, புது அத்தையிடம் செல்லம் கொஞ்ச அம்மா பின் போவதா..?’ என்ற யோசனை அந்த சுட்டிப்பயலுக்கு.
‘இத்தனை நாள் தன்னை மட்டுமே கொஞ்சும் மாமா எப்படி இவனிடம் இப்படி சிரித்து பேசலாம்..?’ என்ற சிறுபிள்ளைக்கே உண்டான சிறு பொறாமை உண்டாக அவனின் கால்கள் தன்னால் தீனாவிடம் சென்று நின்றது.
பேசி சிரித்தபடி இவனை பார்த்த தீனா, “என்னடா மாப்பி, உன்னோட அத்தைய விட்டு இந்த மாமா பக்கம் காத்து வீசுது..?” என கிண்டலாக கேட்க,
அவனை தன் குட்டி கண்களால் முறைத்தவன், “இவ எதுக்கு..?” என்றான் ஜெகதீஷை காட்டி.
அவனின் முற்று பெறாத வார்த்தையை கேட்ட சகோதரர்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்காமல் பார்க்க, அவசரமாய் ஜெகாவை தள்ளிவிட்டு அந்த இடத்தில் சென்று அமர்ந்தான் பாலமுரளி.
அதில் தான் அவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட தீனா அவனை சீண்டவென, “அவன ஏன்டா தள்ளி விட்டே..? என்னோட தம்பியவே தள்ளி விடுவீயா நீ..? 
நீ வாடா அண்ணா மடியில உக்காந்துக்கோ.. அவன் அப்புறம் எப்படி தள்ளி விடறான்னு பார்க்கறேன்..?” என ஜெகாவிடம் சொல்ல,
கிடைத்த வாய்ப்பை விடாமல் ஜெகதீஷூம் தீனா மடியில் அமர செல்ல, அவனுக்கு முன் முந்திக்கொண்டு மாமன் மடிக்கு பாலா தாவ, இருவரின் சின்ன பிள்ளை சண்டையில் தீனா மீதே இருவரும் விழுந்து புரள அழகான கலாட்டா அங்கே ஆரம்பம் ஆனது.
“பாரு ண்ணா அவன் என்னைய விட மாட்டிங்கறான்..” என ஜெகா குற்றப்பத்திரிகை வாசிக்க,
“எ மாமா.. நா தரமாட்டே.. போ..” என பாலா தீனாவின் மடியில் ஏறி கழுத்தோடு இறுக்கி கட்டிக்கொள்ள ஜெகதீஷின் முகம் வாடிப்போனது.
அதை கண்ட தீனா அவனை அருகே அமர்த்தி அவன் தோளில் கை போட்டு நெருக்கிக்கொண்டவன், “ஜெகா.. உன் கூட நல்லா பேசி விளையாண்டுட்டு அண்ணா உன்கூட பேசாம இருந்தப்ப நீ எப்படி ஃபீல் பண்ணே..?” எனக் கேட்க,
“ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ண்ணா.. அழுகையா வந்துச்சு..” என்றான் சோகமாக.
“ஹ.. இப்போ பாலா குழந்தையா இருக்கும் போதிருந்து அவன்கூட நா இப்படி தானே இருக்கேன்..? 
இப்போ நீ வந்ததும் அவன விட்டுட்டு உன்கூட மட்டும் நா பேசினா அவன் உன்ன மாதிரி ஃபீல் பண்ணுவானா மாட்டானா..?” என்றான் தமையனாய் சரியாக உறவுகளை வழிநடத்த வேண்டிய கடமையோடு.
சற்றே யோசித்த ஜெகாவும் தெளிந்த முகத்தோடு, “ஆமா ண்ணா அவனும் ஃபீல் பண்ணுவான். பாவம் குட்டி பையன் தானே.. அவனுக்காக நா விட்டு கொடுட்டு நா எப்பவும் போல இருக்கேன். நீங்க அவனோடவே இருங்க..” என்றதும்,
அவனின் முன் உச்சி முடியை விரலால் கோதிவிட்ட தீனா, “என்னோட தம்பி இவ்வளவு மெச்சூர்ட் பாயா..?!” என அவனை பாராட்டும் தொணியில் சொன்னவன்,
“யாரும் யாருக்காவும் விட்டு கொடுத்துட்டு விலக வேணாம். நா உங்க ரெண்டு பேருக்குமே உரிமையானவன் தான். 
என்ன.. அவன் உன்னை விட சின்ன புள்ளைன்னு அவனுக்கான சலுகை கொஞ்சம் அதிகம் அவ்வளவு தான்.
இன்னொன்னு என்னன்னா எனக்கு இவன்கிட்ட இருக்கற அதே உறவும் உரிமையும் உனக்கும் இருக்கு. 
அதனால அவனை நீ பிரிச்சு பார்க்காம நம்மளோட சேர்த்து பார். நாம ரெண்டு பேரோட மூணு பேர் ன்னா இன்னும் ஜாலியா இருக்கும் தானே..?” என்றதும்,
விழிகள் பளபளக்க, “ஆமா ல்ல.. அவனுக்கு நானும் மாமா..!” என இத்தனை வருடம் மனதில் பதியாத உறவை உணர்வுபூர்மாய் உணர்ந்த மகிழ்ச்சியோடு,
“டேய் பாலா.. என்ன மாமா சொல்லுடா..” என தன் உரிமையை நிலைநாட்டவென அவனிடம் பேச,
‘இதுவரை வலிய சென்று பேசினாலும் முகத்தை பார்க்காதவன், இப்போது மாமா வா..?!’ என்பது போல தீனாவின் கழுத்தோடு புதைத்து வைத்திருந்த முகத்தை நிமிர்த்தி தீனாவை கேள்வியாய் பார்க்க,
“ஆமா பாலாக்குட்டி.. இவனுனக்கு குட்டி மாமா..” என்றதும், 
கிளுக் கென சிரித்த பாலா, “குத்தி மாமாவா..?” என்றதும், 
“டேய் குட்டி மாமாடா.. குத்தி கித்தின்னா நிஜமா குத்திடுவேன்..” என ஜெகாவும் சிரிப்போடு அவனை சீண்ட, 
“குத்தி தா..” என அவனும் விடாமல் சொல்ல என அழகான பிணைப்போடு அங்கே அந்த இடம் களைகட்டியது.
வெளியே சென்றுவிட்டு வந்த ஜெயசீலனின் கண்ணில் முதலில் விழுந்த காட்சியே இதுவாகி போக.. அவருக்கோ வயிற்றுக்குள் இருந்து பொங்கிய அனல்.. மூச்சுக்காற்றாய் வெளிவந்தது.
அதில் தீனாவை விட ஜெகதீஷை பொசுக்கும் உத்வேகமே அதிகம். 
அதை அவரின் பார்வையை கொண்டு கண்டு கொண்ட தீனா, இத்தனை வருடம் அவரின் முகத்தை காண ஏற்படும் அருவருப்பால் காணாது தவிர்த்தவன்.. இன்றோ, 
ஒற்றை ஆளாய் நூற்றுக்கும் மேலான நபர்களை திறமையாக கையாளும் ஆளுமை மிக்க நிர்வாகியாய் நிமிர்ந்து தீர்க்கமான பார்வையை அவரை நோக்கி வீசியபடி.. தனது ஒற்றை கரத்தால் ஜெகதீஷை தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்தான்.
இதுவரை தன்னை காணாத தீர்க்க பார்வையிலேயே ஒரு நொடி திகைத்தவர், 
“என்னை மீறி அவனை தொட்டு பாரு..” என்பதான சவாலாய் அவனை அணைத்திருந்த விதத்தில், மேலும் வயிற்றுக்குள் பெட்ரோலை மொத்தமாக கொட்டியது போல உள்ளே எரிய தொடங்கியது.
அந்த கனல் சகோதரர்களை எரிக்குமா..? இல்லை அவரையேவா..? என்பது காலத்தின் கையில்.. 
எப்போது காலம் ஒருவர் பக்கமே நிற்காது தானே..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!