Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 22.3

சமுதாயகூடத்துக்குள் தீனதயாளன் யமுனாவோடு நுழைய, அங்கு அதைவிட ஆச்சார்யபடுத்தும் விதத்தில் மேடை மணமக்களுக்காக தயாராய் இருந்தது அலங்காரத்தோடு.
“எப்புடி இருக்கு மாப்ளே..?” என வந்த சக்தியை கண்டு, 


Advertisement

“மாமா.. இதுக்கு தான் ராத்திரி இங்க தங்க வந்தீங்களா..?” என தீனா கேட்க,
“ஆமா மாப்ளே.. நேத்து வாணிய இறக்கி விடறப்போ உன்ற மொதலாளி போன போட்டு ஏற்பாடு எப்புடி ன்னு விசாரிச்சார். 

Advertisement

Advertisement

வுட்டுல இல்லாம இப்படி மண்டபத்துல தான் ன்னு சொன்னதும், நா ஆள் அனுப்பறேன் கூட இருந்து பாத்து பண்ணுங்கன்னு அவரு தான் ஐடியா தந்தார்.. உனக்கு ஏதோ சர்ப்ரைஸ்ஸாம்..” என்றார் புன்னகையோடு.
தங்கமணி தனக்காக செய்தவற்றில் நெகிழ்ந்து போய் இருந்த தீனாவிற்கு எதிர்பதமாய் கொதிக்கும் கொள்கலனாய் இருந்தார் ஜெயசீலன்.

Advertisement

அதிலும் வந்த உறவினர்கள் எல்லாம், “பரவாயில்ல.. காதலுச்சு கண்ணாலம் பண்ணாலும் அத ஏத்துக்கிட்டு இம்புட்டு தூரம் எல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கே.. ரொம்ப சந்தோஷமப்பு..” என்று சொல்ல,
“அடேய்.. நானெங்கடா இதெல்லா செஞ்சேன்..? எனக்கே தெரியாதேடா..!” என மனதுக்குள் குமைந்தாலும் முகத்தில் வற்றாத சிரிப்போடு சமாளிக்க வேண்டிய நிலை அவருக்கு.
தங்கமணி அருந்ததி வந்ததும் அவரிடம் விரைந்தவனை கட்டி தழுவியவர், 
“என்னடா சந்தோஷமா இருக்கீயா..?” என்றார் அவன் பின்னாலேயே வந்து நின்ற யமுனாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளார்ந்து.
“ரொம்ப ண்ணே.. எப்படி ரியாக்ட் பண்ணன்னு கூட புரியல.. நிஜமா இதெல்லாம் என் வாழ்க்கையில நடக்குமான்னு கூட யோசிச்சதில்ல.. ஆனா எல்லாத்தையும் சாத்தியமாக்கியிருக்கீங்க எல்லாரும் சேர்ந்து..” என சொல்லும் போதே நெகிழ்ச்சியில் குரல் கரகரக்க,
அவனை திசை மாற்றவென, “ஏன்டா தீனா,  உங்க அண்ணன மட்டும் தா கண்ணுக்கு தெரியுமோ..?” என அருந்ததி கேட்க,
“அண்ணி.. நீங்க வேற அண்ணன் வேறையா..?” என்ற போது அவனும் தன்னை சமன் செய்திருந்தான்.
அவன் தோளில் மெச்சுதலாய் தட்டிய தங்கமணி,  
“நல்லா சமாளிக்க கத்துக்கிட்டே.. இத வாழ்க்கையில பொண்டாட்டிகிட்டையும் காட்டி எப்படியோ பொழச்சுக்கடா.. என்ன மாதிரி அப்ப அப்போ ஏடாகூடமா மாட்டிக்காதே..” என்றிட, 
அருந்ததி அவரை முறைக்கவென திசை மாறிய பேச்சால் தீனாவின் முகம் சந்தோஷத்திற்கு தாவியது.
அதே மகிழ்வோடு யமுனா கை பிடித்து தீனா மேடை ஏற, அழகான ரோஜா மாலையை வாணியும் சக்தியும் அவர்களிடம் நீட்டினர்.
அதை வாங்கியவர்கள் மகிழ்ச்சியோடு ஒருவர் மற்றவரின் கழுத்தில் போட்டு சபைக்கு வணக்கம் வைத்து அமர்ந்தனர் அவர்களுக்கான இருக்கையில்.
அமர்ந்ததும் தனது உடையையும் மாலையையும் சரி செய்வது போல பாவனை காட்டிய யமுனா. “யோவ் கண்ணழகா.. என்ன எமோஷனல் ட்ராமா எல்லாம் ஓவரா..? இனி ரொமான்ஸ் மோடுக்கு போலாமா..?” என அவனுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுக்க,
“பாப்பா ஏற்கனவே செம ஹைப்ட்(Hype)ல இருக்கேன். இப்படி பேசி உசுப்பேத்தினா நீ சிக்கும் போது நிச்சயமா தாங்க மாட்டடீ..” என அவன் கிசுகிசுத்தாலும் அவன் கண்ணில் தெரிந்த தீவிரத்தில்,
“ஆத்தீ.. கொஞ்ச நேரம் அமைதியா இருந்துடு யமுனா.. அன்னைக்கே முழுசா தெரிஞ்சுக்கறதுக்குள்ளையே ஒருவழி ஆகிட்டே.. 
இப்போ இவர் இருக்கற நிலைமைக்கு சிக்கிடவே வேணாம்..” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் அதன் பிறகு வந்தவர்களிடம் மட்டுமே பேச்சை தொடர்ந்தாள்.
தம்பதிகளுக்கு துணையாய் மிகவும் பெரிய மனிதர்கள் இருவரும் மேடையில் இருக்க.. பாலா ஜெகாவை அவ்வப்போது, “குத்தி மாமா..” என அழைத்து வைக்க, அதை கேட்டு வருபவர் சிரிக்க.. என அந்த இடம் கலகலத்துக்கொண்டிருந்தது அவ்வப்போது.
வாணி மூலமாக தகவல் அறிந்து கஸ்தூரியின் சித்தப்பா, அவரின் பிள்ளைகள் என ஒரு கூட்டம் வந்திருக்க தீனாவிற்கு நெகிழ்ச்சியான சந்தோஷ தருணமாய் மாறியிருந்தது.
உணவுண்டு ஓய்வாக இருக்கும் போது தங்கமணியை தனியே அழைத்த தீனா, “பணத்த அனுப்பிவிட்டதுக்கு தேங்க்ஸ் ண்ணே. நீங்க இதெல்லாம் செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல..” என மீண்டும் சொல்ல, 
“டேய் நா கொடுத்தது..” என ஆரம்பித்தவர் தீனாவிற்கு பின் நின்றிருந்த ஜெயசீலனை கண்டுவிட்டு, 
“எல்லாமே கணக்குல இருக்கு.. வேலைக்கு வரும் போது கணக்கு வழக்கு பாத்துக்கலாம்..” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
தீனாவிற்கு, “அண்ணே ஏதோ சொல்ல வந்து மாத்தற மாதிரி இருக்கே..? சரி. வேலைக்கு போகும் போது கேட்டுக்கலாம்..” என நினைத்து அவனும் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அவர்கள் பேச்சை கேட்ட ஜெயசீலனோ, “அடச்சை.. அவென் பணமனுப்புவான்னு தெரிஞ்சிருந்தா மொத்தமா இம்புட்டு கொடு. 
நா எல்லா ஏற்பாட்ட பண்ணுறேன்னுட்டு அளவா கூப்புட்டு பேருக்கு செஞ்சுபோட்டு போயிருக்கலாம்.. இப்போ பாரு ஏன்னா ஆட்டம் போடுதுக..” என நொந்து கொண்டு நின்றார் தனியாக.
விருந்து முடிந்து ஓரளவு கூட்டம் குறைய அதுவரை லேசான சாரலாய் இருந்த மழை பலமாக பெய்ததால் மீதமிருந்த அனைவரும் மண்டபத்துக்குள் கூடியிருந்தனர்.
ஓரிடத்தில் இருக்க முடியாத பாலமுரளியின் கண்ணில் ஸ்பீக்கர் தட்டுப்பட அவனின் பிடிவாதத்தால்.. குமரன் சென்று சினிமா பாடலை அதில் ஒலிக்க விட.. வந்திருந்த குட்டி குழந்தைகள் எல்லாம் மேடைக்கு முன் இருந்த சேர்களை நகர்த்திவிட்டு ஆட்டம் போட துவங்கினர்.
அதில் ஒருவனாக தனது குட்டி கை காலை ஆட்டி.. ஆடுவதாய் பாலா செய்த சேட்டை கண்டு சிரிக்காத ஆளில்லை.
மேடையிலிருந்து பார்த்திருந்த தீனதயாளனுக்கோ சிரித்தே வாய் வலிக்குமோ.. எனும் நிலையில் தான் இருந்தான்.
அவனின் ஓயாத சிரிப்பும்,  மலர்ந்திருந்த முகம் மட்டுமே போதும் என்பது போல ஆசையாய் அவனை பார்த்திருந்தாள் யமுனா.
அவனை பார்த்த நாள் முதல் அவன் கண்ணில் தெரியும் ஒரு வித ஏக்கத்தை கண்டு தானே அவனை அவள் பின் தொடர்ந்தது. 
அப்படி இருக்க.. இன்று அவன் கண்ணில் தெரியும் அந்த மகிழ்ச்சி அவளை அவ்வளவு நிறைவாய் உணர வைத்தது. 
எதற்காக அவள் அவனை மணக்க விரும்பினாளோ அது நடந்த திருப்தி மனதில் எழ தன் கண்ணழகனை ஆசையாய் ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் ரசனை பார்வையை கண்டு கொண்டவன் மற்றவர் சிறுவர்களின் ஆட்டத்தை பார்த்திருப்பதை கவனித்து மின்னலென அவள், ‘என்ன செய்யப்போகிறான்..?’ என உணரும் முன், கன்னத்தில் தன் முத்திரையை பதித்து விலக, ஷாக் அடித்த உணர்வில் விழி விரித்து அமர்ந்துவிட்டாள் யமுனா.
அதை கண்டுவிட்டு இரு கண்ணையும் சிமிட்டிவிட்டு நமுட்டு சிரிப்பொன்றை உதிர்த்தவன் அவள் புறம் லேசாக சாய்ந்து, 
“ஆட்டத்த பாருடீ என் பொண்டாட்டி.. மாமன ராத்திரி நல்லா ரசிப்பீயாம்..” என காதோடு மீசை உரச சொல்லி விழக, அது தந்த கூச்சத்தால் வெக்கத்தில் தாமரையாய் மலர்ந்தது மங்கையின் மதி முகம்.
பாலமுரளி மற்றும் அவன் வயதுடைய குட்டி குழந்தைகளின் ஆட்டத்தை உற்சாகப்படுத்த கைகளை தட்டி, விசில் அடித்து.. என பெரியவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய மிகவும் குஷியாகி போனது அவர்களுக்கு.
தீனா தன்னருகே நின்றிருந்த ஜெகதீஷை பார்த்து, “நேத்து டேன்ஸ் போட்டில கலந்துக்கிட்ட சர்ட்டிபிகேட்ஸ் அத்தன காட்டுனே இப்ப ஆடலையா நீ..?” என கேட்க,
கண்களில் ஆசை இருந்த போதும், “அப்பா எதாவது சொல்வாறு ண்ணா..” என்றான் தயங்கி.
“ஜெகா, அண்ணா என்ன சொன்னேன்..? இனி எல்லாமே நா பார்த்துப்பேன்.. உனக்கு ஆடனுமுன்னு ஆசையா இருந்தா போ..” என்ற நொடி வேகமாய் தலையசைத்து குமரனிடம் சென்று ஏதோ சொல்லி வந்தவன் தீனாவின் முன் வந்து தயாராக நின்றான்.
பின்னால் ஒலிக்க தொடங்கிய மியூசிக்கிலேயே என்ன பாடல் என புரிய அங்கிருந்த அத்தனை பேரையும் அந்த வைப் தொற்றிக்கொண்டது.
மோனிகா பெலூஜி
எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும்
சுனாமியே உண்டாச்சி..
என பாடல் தொடங்க அவனின் நளித்தோடான ஆட்டத்தை கண்டு வியக்காத ஆளில்லை. தீனா யமுனா உட்பட.. 
‘அமைதியே உருவாய் எப்போதும் தாயுடன் இருக்கும் ஜெகதீஷூக்குள் இப்படி ஒரு திறமையா..?’ என வந்திருந்த அனைவருமே வியந்து தான் போயினர் அக்கணம்.
“ஏன்டீ..! இந்த சகுந்தலா இவென இத்தன நாளூ இதுக்கு தே மடியிலயே கட்டிக்கிட்டு அலஞ்சாளோ கண்ணு பட்டு போகுமுன்னு..?” என சொல்ல கேட்டிருந்த சகுந்தலாவிற்குமே உள்ளம் நிறைந்து போனது. 
தன் மகனை அவரே இப்படி ஒரு சந்தோஷ ஆர்ப்பரிப்பில் கண்டதில்லையே.. இதுவரையிலும்..! அதனால் உண்டான சந்தோஷத்தோடு அனைவரும் இருக்க, 
“தன்னை அடிக்க கை ஓங்கி சட்டையை பிடித்த.. தான் வெறுக்கும் தீனாவின் வைபவத்தில் இப்படி ஒரு ஆர்ப்பாட்டமா..? 
அதில் அவன் சந்தோஷமாய் இருப்பதா..?” என வயித்தெரிச்சல் பட மட்டுமே முடிந்தது ஜெயசீலனால். 
எல்லாம் அவரின் கை மீறி போனது போலானது இப்போதே.. 
இப்போது மட்டுமல்ல.. இனி எல்லாமே அவரின் எண்ணத்திற்கு அப்பாற்பட்டு தான் நடக்க போகிறது என்பதை அறியவில்லை அவர்.
ஜெகதீஷின் ஆட்டத்தை ரசித்தபடி அமர்ந்திருந்த தீனதயாளனின் மீதிருந்த பார்வையை அகற்ற கூட முடியாது தவித்தாள் யமுனா.
அன்றைய தினத்தில் அவனை கண்களவு செய்வதே பிரதான வேலையாய் போனது பாவைக்கு.
அவளின் பார்வை கண்டு அவன் காதோடு உரைத்த சில ரகசிய பேச்சுக்கள் வேறு அவளை தூண்டி விட வெக்கத்தில் முகம் சிவக்க தொடங்கியது அழகாய்..
நாள் முழுக்க
உன்னை கண்கள் தின்ற
பின்னும் உந்தன் சொற்கள்
மீது நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம்
வந்தும் கிட்ட தட்ட ஒட்டி
கொண்டும் மூச்சில் தீயும்
பற்றி கொண்டும் ம்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!