Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என்  ஜீவன் உன்னை சேருமா 3

என்  ஜீவன் உன்னை சேருமா



Advertisement

  அத்தியாயம் -3

Advertisement

Advertisement

  உலகநாதனின்     மூத்த மகள்  ரியா  திருமணம்  முடிந்து 3 மாதங்கள் ஆகின..

 அக்னியின்  நித்திரையில் அவ்வப்போது மாயா  மணப் பெண் கோலத்தில் வந்து சென்று கொண்டிருந்தாள்..

Advertisement

 சின்னப்  பெண் என்று அவளின்  எண்ணங்களை  தன் மனதில் இருந்து  ஓரம் கட்டி இருந்தான் அக்னி.

 மாயா  படிக்கும் ஐஐடி  காலேஜில்  கேம்பஸ்  செலக்ஷன்  நடந்து கொண்டு இருந்தது.. பைனல் இயர் படிக்கும் மாணவர்கள் வேலைக்காக நிறைய கம்பெனிகள் வந்து குவிந்திருக்க,  மொத்த மாணவர்களும் அவர்களுக்கு பிடித்த கம்பெனியை   தேர்வு  செய்து கொண்டிருந்தனர்..  கேம்பஸ்  வேலைக்காக  செலக்ஷன் நடந்து  கொண்டிருந்தது..

 இதில் நிறைய ஃபாரின் கம்பெனிகள்,  தமிழ்நாட்டு கம்பெனிகள், வேறு மாநிலத்தில் உள்ள பல கம்பெனிகள்  வந்து குவித்திருக்க..

மூன்று நாட்களாக  செலக்சன் நடந்து கொண்டிருந்தது..

இதில் அக்னியின்  கம்பெனியும் வந்திருந்தது, அவன் கம்பெனிக்கு தேவை ஆனா மாணவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தனர்..

அக்னி கடைசி நாளில்  தான் செலக்ஷன் பண்ண  வந்திருந்தான்..

 அவன் கம்பெனிக்கு  தேவையான ஆட்களை செலக்ட் பண்ணிக் கொண்டிருக்க.. நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் அவனுக்கு சோர்வாக இருக்க. சற்று  வெளியே வந்திருந்தான்,

தேநீர் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற  சுற்றி தேடினான் கடைகள்  இருப்பது போல் தெரிய வில்லை.. ஒரே மாணவர்களின்  கூட்டம்  மட்டுமே தெரிந்தது..

 “ஹாய் சார்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க திரும்பி பார்த்தான் அக்னி..

மாயா நின்று இருந்தாள்.. அழகிய ரெட் கலர்  டாப்பும், ப்ளு நிற ஜீன்சில் தன்னை நோக்கி வரும் மாயாவை பார்த்து நின்றிருந்தான் அக்னி.

தன் கனவில்  தினமும் மணக்கோலத்தில் வந்து    தொல்லை தந்த பெரிய பெண், இன்று குட்டி பெண்ணாக தன் முன் வர…

 “ஹாய் சார்” என்று அவனின் அருகில் வந்து நிற்க..

 அவளின் பெயர் தெரியாதது  போல் “யூ , யூ”  என்று நடித்தான்..

 “மாயா சார்” என்றாள்.

 “ஓ..  மாயா  உலகநாதன் சார் பொண்ணு, ரைட்” என்றான்.

“ஆமாம்” என்று அழகாய் தலையாட்டி  சிரித்த பெண்ணை மீண்டும் தன் கண்ணீல் புகைப்படம் எடுத்துக்கொண்டவன்..

 “எங்கே இங்கே” என்று  இருவரும் ஒன்று போல் கேட்டு சிரிக்க.

 “எங்க காலேஜ்  சார்” என்று  மாயா சொல்ல..

” இங்கே தான் நீ படிக்கிறியா” என்றான்  ஒன்றும் தெரியாதது  போல்..

 “ஆமாம் சார்” என்றவுடன்..

” வெரி குட் இந்த காலேஜில் படிக்கிறது ரொம்ப பெரிய விஷயம்,  ரொம்ப ஹார்டு  வொர்க் பண்ணுவ  போல” என்றதும்..

 “அப்படியெல்லாம் இல்ல சார் படிக்கிறது  ரொம்ப பிடிக்கும்”.

” வெரி குட் கேம்பஸ்சில்  செலக்சன் ஆகிட்டீயா? “.

“ம்ம்ம்ம் “…

 “எந்த கம்பெனி?”..

 “ஆப்பிள் சார்”?  என்றாள்..

 “மும்பையா, அமெரிக்காவா?” என்றதும்.

 “அமெரிக்காவுக்கு  இன்னும் மூணு மாசத்துல கிளம்புறேன் சார்”…

 “சூப்பர் மாயா”.. என்று மனதார பாராட்டினான் ..

 “சார் ரொம்ப சோர்வா தெரியுறீங்க காபி குடிக்கலாமா என் கூட வருவீங்களா?”.. என்று மாயா கேட்க..

 அவனுக்குமே அது தேவையா இருக்க  “சரி போலாம்  மாயா” என்றான்..

 “வாங்க” என்று சைக்கிள் நிற்கும் சைக்கிள் ஸ்டாண்டுக்கு அவனை அழைத்து   வந்தாள்..

 ஒரு சைக்கிளை  அவனிடம் தந்து “போலாமா” என்று   அவனிடம் கேட்க..

 “என்ன சைக்கிளில்  போகணுமா?”  என்றான்.

 “ஆமாம் சார் இங்கே  இருந்து கேண்டீன் 2 கிலோமீட்டர் நடந்து போக முடியாது அதனால  சைக்கிளில் தான் போக முடியும்  வாங்க போகலாம், ஒரு சின்ன  ரைடு ”   என்று அழகாய் சிரித்தவள்   சைக்கிளில்  ஏறி அமர்ந்துகொண்டு  “போலாமா” என்று கேட்டவளை பார்த்து கொண்டே தன்னையும் பார்த்தான்..

அவனோ புல் கோர்ட் சூட்டில் இருக்க, தன்னை பார்த்து சிரித்துக்கொண்டவன் , கோர்டை கலட்டி சைக்கிள் முன் மடித்து வைத்தவன்.. கையில் உள்ள பட்டனை கலட்டி மடித்து “போலாம் மாயா”  என்று சைக்கிளை பல வருடம் கழித்து மெதுவாக ஓட்டினான்..

 மாயா  வேகமாக செல்ல,  அக்னி மெதுவாக இயற்கையை  ரசித்து  அனுபவித்துக் கொண்டு ஓட்டினான், சென்னை வெயில் தெரியாத வாறு, பெரியதாக வளர்ந்து நிற்க்கும் மரங்கள், மான் கூட்டம் அங்கங்கே  கூட்டமாக நிற்க, சில குரங்குகள் வேற சத்தம் போட்டு குதித்து கொண்டு இருந்ததை பார்த்தபடியே மெதுவாக  சைக்கிளை  ஓட்டிக்கொண்டு வந்தான்..

அக்னி மெதுவாக வருவதை பார்த்த மாயா அவளும் அவனோடு மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தவள்.

 “என்ன சார் பழைய ஞாபகமா?”.. என்றாள்..

 “ஆமாம்” என்று சிரித்தபடியே சைக்கிளை ஆட்டிக் கொண்டே, ஓட்டி வந்தான் அக்னி..

அனைத்தையும் ரசித்தபடியே வந்தவன்.. “தேங்க்யூ மாயா”  என்றான்.

 “ஏன் சார் எதுக்கு தேங்க்  யூ?”..

 “மனசு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு மாயா..  ரொம்ப வொர்க் டென்ஷனா இருந்தேன்,  இப்போ  ரொம்ப பிரஷ்சா  உணருரேன் தேங்க்யூ ஃபார் திஸ்”.. என்றான்.. மனதார..

 அவனைப் பார்த்து சிரித்தவள் “வாங்க சார் கேண்டீன் வந்துடுச்சு” என்று உள்ளே அவனை அழைத்து சென்றவள்..

அவனை ஒரு  டேபுளில் உட்கார சொல்லி விட்டு..

 “நான் போய் வாங்கிட்டு வரேன் நீங்க இங்க இருங்க” என்ற மாயா கேன்டின் உள்ளே சென்று கையில் இரண்டு பிளேட் உணவோடு வர..

 என்ன பிளேட் என்பது  போல் பார்த்தா அக்னியிடம்..

 “டைம் 12:30 ஆச்சு சார் லஞ்ச் சாப்பிடலாம்,   காபி  வேண்டாம்,  லஞ்ச் சாப்பிட்டு,  காபி வாங்கி தரேன்”  என்றவளை..

என்ன செய்வது இவளை என்று ஆசையாக பார்த்திருந்தான் அக்னி,   தனக்காக  அவள் செய்யும் ஒவ்வொன்றையும்  ரசித்தான், அவள் கொண்டு வந்ததை பார்க்க.. மட்டன் பிரியாணியும் சிக்கன் கிரேவியும் இருந்தது..

 “இருங்க வாட்டர் பாட்டில்  எடுத்துட்டு வர்ரேன்” என்று மீண்டும் சென்று எடுத்து வந்தவள்..

 “சாப்பிடுங்க சார்” என்று சொல்லி அவளும் அவன் எதிரில்  அமர்ந்தவள்.

 அவள் பிளேட்டில் உள்ள பாதி பிரியாணியை  அக்னி  பிளேட்டுக்கு மாற்றி  இருந்தாள்..

 ஏன் என்பது போல் அக்னி அவளை  பார்க்க.

 “எனக்கு இது போதும் சார் உங்களுக்கு தான்  இது  பத்தாது” என்றவள்..

அவன் எதிரில் அமர்ந்து கொண்டு உண்ண, ” நீ எப்பையும்  இப்படி தான் இருப்பியா  மாயா? “.

” இப்படியின்னா எப்படி சார் எனக்கு புரியல”…

” அது அடுத்தவங்க உணர்வ புரிஞ்சு நடத்துகிறியே அதுக்கு தான் கேட்டேன்”..

” அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்,  உங்க முகத்தை பார்த்தேன் சோர்வா தெரிஞ்சுது  காபி வாங்கி கொடுக்கலாமேனு  யோசிச்சேன், அப்புறம் டைம் பார்த்தேன் லஞ்ச் டைம் அதான் லஞ்ச் வாங்கிட்டு வந்தேன்   அவ்வளவுதான்”..

 இருவரும்  பேசிக்கொண்டே உண்டு முடித்து சாப்பிட்டதற்கு எவ்வளவு  பணம் என்று அக்னி கேட்க   “நான் பே பண்ணிட்டேன் சார்  வாங்க கிளம்பலாம்” என்றாள்.. “நான் பே பண்றேன் மாயா” என்று அக்னி கூற..

 “அட வாங்க அக்னி சார் ஒரு பிரியாணிக்கு இவ்வளவு எல்லாம் பேசாதீங்க வாங்க”  என்று அவனை வெளியில் அழைத்து வந்தாள்..

 “உனக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சா மாயா?”..

“இல்ல சார் இன்னைக்கு கேம்பஸ் இன்டர்வியூ  நடக்குதே, அதனால காலேஜ்  லீவு  தான்”..

 “அப்போ நீ ஆடிட்டோரியம் வர்ரியா இல்ல ஹாஸ்டல் கிளம்புறியா?”..

“ஹாஸ்டல் தான் போகணும் உங்களை ஆடிடோரியத்துல விட்டுட்டு நான்  கிளம்புறேன் சார்”.

 என்றவள் அவனிடம் பேசியபடியே  சைக்கிளை ஓட்ட..

” எனக்கு வழி தெரியும்  மாயா நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்”.

 “சார்  இங்க பாக்குறதுக்கு எல்லாம் ஒரே  இடம் மாதிரி தான் தெரியும், உங்களை நான் ஆடிட்டோரியத்துல  விட்டுட்டு போறேன் சார் வாங்க”..என்றவள் அவனிடம் பேசியபடியே  சைக்கிளை ஓட்டிக்கொண்டு வர..

 “ஹலோ  மாயா மேடம் எனக்கு இங்கே உள்ள  எல்லா இடமும்,  தெரியும்” என்றதும்..

” எப்படி சார்  இங்கே அடிக்கடி  வருவீங்களா” என்று கேட்டவளை பார்த்து ரசித்து  சிரித்தவன்.

 “நானும் இங்க  தான் படிச்சேன்.” என்றான்..

  “என்ன இங்கே தான் படிச்சீங்களா?”

” ஏன் உனக்கு சந்தேகமா”..

” ஏன் சார் என்கிட்ட முதல்லயே சொல்லல்ல”..

 “நீதான் எனக்கு புதுசா கேம்பஸ் சுத்தி காட்டுற மாதிரி சுத்தி காட்டி பேசுனியா அது கூட நல்லா தான் இருந்தது, அதனால  கேட்டுட்டு வந்தேன்”.

 “போங்க சார் நான் ஏதோ லூசு மாதிரி  இந்த இடத்தைப் பற்றி சொல்லிட்டே வந்து இருக்கேன், நீங்களும் எதோ புதுசா கேட்டதுபோல்  ரசிச்சிகிட்டு வந்தீங்க”.

 “நாம படிச்ச காலேஜ் எப்பையும் நமக்கு பெஸ்ட் தானே மாயா அதை இன்னொருத்தர் சொல்லி கேட்குறப்போ சந்தோசம்  தானே”  என்று இருவரும் பேசிக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டே வர.

 மான்கள்  கூட்டமாக ஓடி வருவதை பார்த்த அக்னி..

” மாயா நில்லு” என்றான்.

 மாயா   மான்களை பார்த்து ப்பிரேக் பிடித்து நிற்பதற்கு  முன்பாக மான்கள்  கூட்டம் வேகமாக ஓடி வர, மாயா சைக்கிளில் இருந்து இறங்குவதற்கு முன் ஒரு பெரிய மான் மாயாவின்  மேல் ஓடி வந்த வேகத்தில் மோத,

“ஆ” என்ற சத்தத்தோடு பக்கத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டாள் மாயா..

 அக்னி வேகமாக ஓடி  வந்து அவளை தூக்க, அவளுக்கு எழ முடியவில்லை, எழ முடியாமல்  சிரமப்பட்டவளை பிடித்து தூக்கி மேலே கொண்டு வந்தவன்.

” ஓகேவா  மாயா, அடி ஏதாவது பட்டு இருக்கா பாரு”   என்றதும்.

தன் கையையும்,  காலை உதரியவள்..

“ஒன்னும் இல்ல சார் லைட்டாதான் அடி” என்றவள். பக்கத்தில்  உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர..

 அவளையே  பார்த்துக் கொண்டிருந்த அக்னி அவள் கழுத்தில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்தவன்,,,  “மாயா உன் கழுத்துல  ரத்தம் வருது பாரு” என்றவன்..

அவளை நெறுங்கி கழுத்தில் அடிபட்டு இருக்கா என்று பார்க்க.. அவள்  கழுத்தில் அடிபடவில்லை.. அவள் தலையில் இருந்து ரத்தம் வேகமாக வருவதை பார்த்தவன்.

உடனே தன் கைகுட்டையை எடுத்து அடிப்பட்ட இடத்தில் வைத்து அழுத்தி ரத்தம் வராமல்  பிடிக்க..

அக்னி பிடித்ததும் வலியில் “ஆ…” என்று  முணங்கியவளுக்கு அப்போது தான் தலையில் அடி பட்டதே அவளுக்கு தெரிந்தது.. அக்னி தலையை பிடித்ததும்  வலியை உணர்ந்தாள்,,. “சார் வலிக்கு” என்று கூற.

 “ஒன்னும்  இல்ல மாயா   சின்ன அடி தான், பயப்படாத  சரியா போயிடும்” என்றவன், அவன் போனை எடுத்து அவன் டிரைவரிடம் அவர்கள் இருக்கும் இடத்துக்கு காரை  எடுத்து வர சொன்னவன்,

 ஐந்து நிமிடத்தில் கார் வந்தது.

 மாயாவின் தலையில் ரத்தம் வராமல் அக்னி அழுத்தி பிடித்திருந்த  அவன் கைகுட்டை  முழுவதும் ரத்தத்தால்  நனைந்து விட..

 பக்கத்தில்  இருந்த அவனின் கோர்டை  எடுத்தவன் அதை கிழித்து அவளின் தலையை அழுத்தி பிடித்துக்கொண்டான்..

  சின்ன காயம் தான் ஆனால் இரத்தம் அதிகமாக  வர பயந்துவிட்டான் அக்னி..

 மாயாவுக்கு  காயத்தின் வலியை விட அக்னி பிடித்திருப்பதே வலியை உண்டாக்க,,

 “சார் நீங்க தலையை புடிச்சிருக்குறது  வலிக்கு”.. என்று  கூற.

” கொஞ்ச நேரம் பேசாம வா மாயா, ரத்தம் அதிகமா வருது அமைதியா இரு”..

மாயாவுக்கு  மயக்கம் வருவது போல் இருக்க.

  கார் வந்தவுடன் அவளை  வேகமாக காரில்  ஏற்றியவன்..  “பக்கத்தில் உள்ள ஹாஸ்பெட்டலுக்கு போ” என்று டிரைவரிடம்  கூறினான்.

 “சார்”  என்று அழைத்த மாயா  கண்ணை  மூட…

 “மாயா, மாயா” என்று  அவளை தட்டி எழுப்பி  அவளுக்கு மயக்கம் வராமல் தடுத்தவன். அவளை தன்  தோளில் சாய்ந்து பேசிக்கொண்டே  வந்தான்..

“தலை வலிக்குது”  என்று முணங்கியவளை….

” ஒன்னும் இல்லடா மாயா,  ஒன்னும் இல்ல இப்போ ஹாஸ்பிடல்   போய்விடலாம்” என்றவன்.

 “வேகமாக போடா”.. என்று டிரைவரை பார்த்த கத்த..

 டிரைவர் வேகமாக காரை ஓட்டினார்..

” மாயா, மாயா பாப்பு முளிச்சுக்கோ  டா” என்றான் அவளின் கன்னத்தை தட்டியபடியே..

கண்ணை திறந்து பார்த்தவள்.. “நான் பாப்பாவா உங்களுக்கு” என்றவள், கண்ணை மூட.

” மாயா.. கண்ண தொற  மாயா” என்று அவளிடம்  பேசியபடியே  ஹாஸ்பெட்டல்  வந்து சேர்ந்தான்..

 அவளை  தன் கையில் தூக்கி கொண்டே வந்து ஹாஸ்பெட்டலில் சேர்த்து விட்டான்.

 டாக்டர் மாயாவை  பார்த்துவிட்டு “சின்ன  காயும்  தான் தையல் போடனும்,  ரத்தம்  அதிகமா போயிருக்கு, அதனால ரத்தம் மட்டும் ஒரு யூனிட் ஏத்தனும்”  என்று கூற..

 “நான் வேணா பிளட் கொடுக்கலாமா? டாக்டர்” என்றான் அக்னி..

 “செக் பண்ணி பாத்துட்டு சொல்லுறோம்,” என்று அக்னியின்  ரத்தத்தை   செக் பண்ண,  அக்னியின் ரத்தமும்  மாயாவின்  ரத்தமும் ஒரே ரத்த குரூப்பாக  இருக்க,..

 அக்னி மாயாவுக்கு   ரத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கும் போது   தான் நினைவு வந்தவனாக,  உலகநாதனுக்கு  போன் செய்து விசயத்தை மெதுவாக சொல்லி ஹாஸ்பெட்டலுக்கு  அவரை  வர சொல்ல..

 உலகநாதன்  உடனேயே  அடித்து  பிடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தார் மகளை  பார்க்க…

அக்னி  மாயாவுக்கு பிளட் குடுத்து விட்டு, அவள் மயக்கமாக இருக்க, அவளை பார்த்துக்கொண்டே அந்த அறையில்  அமர்ந்திருந்தான்..

 உலகநாதன்  மாயா இருக்கும், அறை கதவை திறந்து கொண்டு வந்தவர் “கண்ணம்மா,  கண்ணம்மா”  என்று அழைத்துக்கொண்டே வந்து மாயாவை  பார்த்து  அழ..

  கதறி  அழும் உலகநாதனையே பார்த்திருந்தான்  அக்னி . மாயா மயக்கத்தில் இருக்க.

 தலையில் கட்டோடு கட்டிலில் படுத்திருக்கும்  தன்  மகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதவரிடம்..

அவரின்  முன் நின்ற அக்னி.. “சார் சின்ன காயம்  தான் அழாதீங்க, அவ மயக்கத்துல இருக்கா”…

 “என்னாச்சு  என் பொண்ணுக்கு அக்னி? “.

 நடந்ததை அப்படியே அவரிடம் சொன்னான்..

” பெரிய அடி  ஒன்னும் இல்ல  சார், சின்ன அடிதான்  தலையில தையல் மட்டும் போட்டு இருக்காங்க பிளட் மட்டும் கொஞ்சம் அதிகமா போயிடுச்சு அவ்வளவுதான்”  என்றான்.

அப்போது தான் உலகநாதன் அக்னியை பார்த்தார், அவனின் சட்டை முழுவதும்  ரத்த கறைகள் இருக்க…

அக்னியின்  கையை பிடித்துக்கொண்ட உலகநாதன்  நன்றி  என்று  அணைத்துக்கொண்டவர், “தாங்யூ அக்னி, சரியான நேரத்துல என்பொண்ணை ஹாஸ்பெட்டலுல வந்து சேர்த்துருக்க”…..

மாயா மெல்ல கண்விழித்து “டாடி” என்று அழைக்க.. மகளை  திரும்பி பார்த்தவர்.

அவளிடம் வேகமாக வந்து “கண்ணம்மா, என்னாச்சுடா” என்று அவளின் கைபிடித்து அழுக..

 “டாடி எனக்கு ஒன்னும் இல்ல, அக்னி சார் தான் எனக்கு ஃபர்ஸ்ட்  எய்ட்  பண்ணி ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு வந்து சேர்த்துட்டாங்க, எனக்கு ஒன்னும் இல்ல”.. என்ற மகளின் தலைகோதியவர்..

அக்னியை நன்றியோட பார்த்துவிட்டு..

“வேற  எங்கையாவது அடி பட்டு இருக்க மாயா”  என்று   மகளிடம் கேட்க…

“இல்லைபா”, என்றவள். “நல்லா வேளை சின்ன காயம் தான், நான் அமெரிக்கா போகுறதுக்குல்ல சரியாகிடும்”.. என்று மாயா கூற..

“நீ அமெரிக்கா எல்லாம் போக வேண்டாம்,  நான் சொல்லுற பையனை கல்யாணம் பண்ணிட்டு என் கூடவே இரு”.. என்ற தந்தையை  மாயா அதிர்ச்சியாகி பார்த்தாள்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!