Skip to content
Post Views: 657
அத்தியாயம் 07**1
காலை நேரம் ஏழு மணி கதிர் வீடு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
Advertisement
தமிழுக்கு சீர் செய்வதற்கு 11 தட்டுக்கள் தயார் பண்ணி வைத்திருந்தார்கள்.
Advertisement
Advertisement
அவர்களின் நெருங்கிய சொந்தம் அதாவது ராஜியின் மாமியார் குடும்பத்தில் ரமேசின் அண்ணன் மனைவி, ரமேஷின் தங்கை இனி அவர்களுக்கு நெருங்கி பழக்கமான அக்கம் பக்கத்து உறவுகள் என 11 சுமங்கலி பெண்கள் கொண்ட குழு சீர் தட்டோடு கோமதியின் வீட்டை நோக்கி அந்த சிறிய வேனில் பயணத்தை தொடங்கினார்கள்..
அவர்களை பின்தொடர்ந்து கதிரும் அவனது உயிர் நண்பன் ராஜு பைக்கில் பின் தொடர்ந்தார்கள்..
Advertisement
கோமதி வீட்டில் அனைத்தும் தயாராக இருந்தது..
இவர்களும் சென்று சேர்ந்ததும் உரிய நேரத்துக்கு அவளுக்கு சடங்கு கழித்து தண்ணீர் வார்த்து தமிழை அலங்காரம் செய்து மேடைக்கு அழைத்து வந்தார்கள்..
அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பரிசு கொடுத்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு உணவு உண்டுவிட்டு சென்றார்கள்.. இப்படியே அன்றைய விழா நாள் மதியம் மூன்று மணி வரை தொடர்ந்தது..
கதிர் கொண்டுபோன சீரை பற்றி அனைவருமே புகழ்ந்து பேசினார்கள்.. ஐந்து சவரன் ஆரம். அந்த ஆரம்தான் மிகவும் கண்ணை கவரும் வகையில் அழகாக இருந்தது. அவனே அவளுக்காக சொல்லி செய்தது என்பதால் அது மிகவும் அழகாக அவனது அன்பைப் போல் ஜொலித்தது..
ராஜி கொண்டு வந்த நகையும் அவளே போட்டு விட்டாள்.
கதிர் எடுத்து வந்த நகையை மமேஸ்வரியை வைத்து கதிர் போட வைத்தான்..
கதிர் குடும்பமும் புகைப்படத்துக்கு நின்றார்கள்..
கதிர் தனியாக தமிழுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான்..
விருந்தில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து அனைவருக்கும் அவனே ராஜுடன் சேர்ந்து தம்பி அன்பு, செழியன் சரவணனின் மில்லில் வேலை செய்யும் ஆட்கள் என அனைவரும் சேர்ந்து ஒரு குறையும் இல்லாமல் பந்தியை கவனித்து வந்தவர்களை நல்ல முறையிலே உணவருந்த விட்டு அனுப்பி வைத்தார்கள்..
சரவணன் வீட்டில் நடக்கும் முதல் விசேஷம் காசை பார்க்காமல் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்..
போட்டோ, வீடியோ என கலை கட்டியது..
மகளின் விசேஷம் என்பதால் சரவணன் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தார்.. விசேஷம் முடிந்து அனைவரும் கலைந்து போனதும் குடும்பத்தினர் மட்டும் இருந்த நிலையில் அவரது முகம் மிகவும் வித்தியாசமான தோற்றத்தை கொடுத்தது அதை கதிர் கவனித்துவிட்டான்.
அவனுக்கும் இரண்டு நாட்களாக ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதை இன்று எப்படியாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நேரம் பார்த்து காத்திருந்தான்..
பேபியம்மாவின் முகம் பூரித்து போய் இருந்தது.
தன் செல்ல பேத்திக்கு விசேஷம் என்று பேபியின் முகத்தில் இருந்த சிரிப்பு அவரது முகத்தில் பன்மடங்கு எதிரொளித்தது..
கோமதி, செல்வி, ராஜி மகேஸ்வரி இவர்களுக்கு நடுவில் இருந்த தமிழின் முகத்தை பார்ப்பதும் ராஜுடன் பேசுவதுமாக இருந்தான் கதிர்..
“ இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு நாம கிளம்புவோம்.. ” என கூறி ராஜுவை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்பக்கம் சென்றான் கதிர்..
அங்கே போடப்பட்ட சாப்பிட்ட இலைகள் மற்றும் குப்பைகள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி விட்டு பந்தி நடந்த இடத்தையும் துப்புரவு செய்துவிட்டு இன்னும் வெளியே இருந்த வேலைகளையும் செய்து விட்டு வந்தார்கள் நால்வரும்..
வீட்டுக்குள் போட்டது போட்டபடி இருக்கவும் வேலைகளை வீட்டுப் பெண்கள் கோமதி,செல்வி,ராஜி மூவரும் செய்தார்கள்.. உதவிக்கு இரு பெண்களையும் வைத்துக் கொண்டார்கள்..
மாலை நேரம் ஐந்து மணி அனைவருக்கும் காபியும், பலகாரமும் கோமதி தட்டில் வைத்துக் கொடுக்க செல்வியும், ராஜியும் பரிமாறினார்கள். அதை எடுத்த கதிர் ராஜுடன் சேர்ந்து உண்டு முடித்ததும் அக்காவிடம் சொல்லிவிட்டு வெளியேற கிளம்பினான் கதிர்..
“ எங்க போற கதிர் நீ.. ” என்றார் பேபி யம்மா.
“ அத்த நேரம் ஆயிடுச்சு கொஞ்சம் வேலை இருக்கு டவுன்ல. அதை முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும். அங்கேயும் ஆடு, கோழி, மாடுகள் எல்லாம் பார்க்கணுமே. எல்லாதுக்கும் சாப்பாடு வைக்கணும் அம்மாவும் ராஜி அக்கா, செல்வி எல்லாம் இருந்து நாளைக்கு தான் வருவாங்க.. ”
“ அவங்க எல்லாம் நாளைக்கு வருவாங்க எனக்கும் தெரியும்.. நீயும் நாளைக்கு தான் போற இன்னைக்கு ஒரு நாள் இங்கே தான் நீ இருக்க.. அங்க இருக்கிற ஜீவன்களும் முக்கியம்தான் அதுக்கு வேற ஏற்பாடு பண்ணிக்கோ சாப்பாடு தண்ணி வைக்கிறதுக்கு..
என் அண்ணன் போனதுக்கு பிறகு என் அண்ணன் சொந்தமே எனக்கு இல்லாத மாதிரி ஆயிடுச்சு. நீங்களும் விருந்தாளி மாதிரி காலைல வாரிங்க. சாயங்காலம் போயிடுவீங்க. நெருங்கின சொந்தம் மாதிரி இருந்து எல்லாத்தையும் முடிச்சு கொடுத்துட்டு ஆறுதலா போக வேண்டாமா? இப்படித்தான் நாங்க ராஜி கல்யாணத்துக்கு வந்து முடிந்த உடனே போனோமா?.. ” என்றார்..
“ என்ன அத்தை பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு. நான் இரவு தங்குறது இல்லன்னு தெரியும் தானே உங்களுக்கு.. என் அக்காவுக்கு அப்பா ஸ்தானத்திலிருந்து எல்லாமே நான் செய்வேன்.. பிறந்து விட்டு குடும்பமா எப்போவும் நாங்க இருப்போம்..” என்றான்..
“ அது இல்லன்னு இப்ப யார் சொன்னா? என் பொண்ணுக்கு தாய் மாமன் சீர சிறப்பா செஞ்சிட்ட. எனக்கு பொங்கல், தீபாவளி சீர் இந்த வயசுலயும் நீ எனக்கு அனுப்பிக்கிட்டு தான இருக்க.. நான் இப்ப நினைச்சாலும் பத்து நாள் வந்து என் குடும்பத்தோட என் சித்தி கூட தங்கச்சி தம்பி கூட சந்தோசமா இருந்துட்டு வர முடியும்..
அத்தைக்கு வயசு போயிடுச்சு அவங்களால நான் அங்க வந்தா இங்க எல்லாம் பார்க்க முடியாது என்று காரணத்தால் தான் நான் அங்க வந்து தங்குவதில்லை.. என் பையனுக்கு பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிச்சு கொடுத்து என் பொறுப்ப முடிச்சுட்டு நான் வந்து மாச கணக்குலையும் என் சித்தி வீட்டுல என் தம்பி வீட்டுல சந்தோசமா இருப்பேன்..”
உண்மையில் கதிர் கிளம்பிய போதே பேபியம்மா அவனை அனுப்பி இருக்க வேண்டும்..
உண்மையில் அண்ணன் இல்லாத இடத்தில் அண்ணன் மகன் தன் குடும்பத்தை பார்த்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்..
வீட்டில் அம்மா, தங்கை, தம்பி தனியே இருப்பார்கள் மற்றும் அவனை நம்பி ஆடு,மாடு,கோழிகள்,பயிர்கள் என இருக்கிறது இரவிலும் களவு போகாமல் கண்ணும் கருத்துமாக காவல் காக்க வேண்டும் என்பதால் அதிகம் எங்கேயும் இராத்தங்க மாட்டான்..
அவனைப் பற்றி தெரிந்தும் அவனை தடுத்து நிறுத்தியது அவனது மனதை நோக வைக்க போகிறது என்பது அவருக்கும் தெரியாது..
இன்னும் கொஞ்ச நேரம் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என ஆசையிலும் அத்தையின் பேச்சை தடுக்க முடியாமலும் பேபியம்மாவிடம் சரி என்று கூறியவன் பக்கத்தில் இருக்கும் மற்றொரு நண்பனுக்கு அழைத்து இன்று இரவு அவனது வீட்டில் தங்கி அனைத்தையும் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டான்.. அவனும் நண்பனுக்கு உதவும் பொருட்டு சரி எனக் கூறினான் மணி..
கதிரும்,செழியனும்,ராஜும், அன்பும் ஜோடி சேர்ந்து கேரம்போர்டு விளையாடினார்கள்..
கோமதி, ராஜியும் செல்வியும் சேர்ந்து அவர்கள் குடும்பத்துக்கு சாதாரண உணவாக இரவு இட்லி அவித்து மீதம் இருந்த குழம்பை சூடு பண்ணி வைத்து உணவு தயாரிக்க எழுந்து சென்றார்கள்..
தமிழை அழைத்துக் கொண்டு பேபியம்மா, மகேஸ்வரி, நிலா மூவரும் வீட்டுக்குள் சென்று விட்டார்கள்..
சரவணன் எழுந்து வயலை நோக்கி சென்றார்..
விளையாட்டில் வின் பண்ணிய சந்தோசத்தில் நேரம் போனதே தெரியாமல் கதிர் டீம் விளையாடிக் கொண்டிருந்தது..
மகேஸ்வரி பேபியம்மாவும் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்தார்கள்..
தமிழும் நிலாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. அங்கே பெண்கள் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தார்கள்..
இப்படியாக நேரம் எட்டு மணியை நெருங்கியதும் வயலுக்கு சென்று இருந்த சரவணன் வந்ததும் இரவு உணவை அனைவருக்கும் எடுத்து வைத்தார்கள்..
அனைவரும் வீட்டு பந்தலில் முன்பிருந்தே உணவை உண்டு விட்டு உறங்குவதற்கு ஆயத்தப்படுத்தினார்..
வீட்டுப் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி ரெண்டு நாட்களாக வேலையும் சரியான தூக்கமின்மையும் காரணமாக உடம்பு அப்படி வலி எடுத்தது அதனால் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் என நினைத்து அனைவரும் படுப்பதற்கு தயார் படுத்தினார்கள்…
மகேஸ்வரி, பேபி அம்மா,தமிழ்,நிலா நால்வரும் பேபியம்மாவின் வீட்டுக்குள்..
ராஜி,செல்வி,கோமதி மூவரும் பெரியவீட்டின் கூடத்தில்.. சரவணன் அவரது அறையில். செழியனும்,அன்பும் செழியன் அறையில்..
ராஜு,கதிரும் வழமை போல் பேபியம்மாவின் வீட்டு முன் பந்தலில் போட்டிருந்த கட்டிலில் அவர்களது உறக்கத்தை தொடர்ந்தார்கள்…
கதிருக்கு உறக்கம் வரவில்லை உறங்கும் ராஜு தொல்லை செய்யாமல் அசையாமல் ஒரே இடத்தில் கண்ணை மூடி படுத்து இருந்தான்..
அவனது சிந்தனைகள் பலவிதமாக பயணித்தது..
error: Content is protected !!