Skip to content
Post Views: 614
அத்தியாயம் 07**2
மஞ்சள் நீராட்டு விழா சடங்கு தான் ஆனால் கல்யாணம் போன்று விமர்சையாகவே சரவணன் செய்திருந்தார்..
Advertisement
தமிழ் முன்பு மாமா,மாமா என அவனை சுற்றி தான் திரிவாள்..
Advertisement
Advertisement
ஆனால் தற்பொழுது அவனை பெரிதாக நிமிர்ந்தும் பார்ப்பதில்லை..
பேபியம்மாவின் உடன் உறங்குவாள் அதை தவிர்த்து அவளது அறையில் உறங்குவதானால் அங்கே ஏசி போடப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் கொண்டு பெரிய வீடுதான். அறைக்குள்ளையே அட்டாச் பாத்ரூம். விடும் முழுவதும் மார்பில் பதிக்கப்பட்டு வீடு என அழகாகவே இருந்தது..
Advertisement
அந்த வீட்டு உள்ளே கதிர் போகவில்லை என்றாலும் வீட்டவர்களின் பேச்சை கேட்டு வீட்டை பற்றி ஒரு அளவு தெரிந்து வைத்திருந்தான்..
‘ டேய் அழகா உன் மாமகிட்ட பொண்ணு கேக்கணுமா இருந்தா நீ இன்னமும் உயரத்துக்கு போகணும்..
உனக்கு நிரந்தர தொழில் ஒன்னு கைல எப்பவுமே இருக்கணும்..
இந்த விவசாயம்,ஆடு,மாடு,கோழி வளர்ப்பு இதெல்லாம் தவிர சரவணன் மாமா மில் வச்சு நடத்துற மாதிரி நிரந்தர வருமானம் வரும் தொழிலும் ஒன்னு ஆரம்பிக்கணும்..
என்ன தொழில் செய்யலாம் எப்படி முதலீடு போடலாம் பணம் எப்படி சேமிக்கலாம் என்று எல்லாம் திட்டம் போட்டு கையில் ஒரு நிரந்தர தொழில் இருந்ததா தைரியமா போயி மாமா நான் நல்ல இடத்துல இருக்கேன்..
உங்க பொண்ண நல்லா வச்சு பார்த்துப்பேன்னு அந்த விரைச்ச மூஞ்சி மாமன்கிட்ட பொண்ணு கேக்கலாம்.. அவர் ஏன் எப்பவுமே நம்மளை முறைச்சு பார்க்கிறார்ன்னு இன்னைக்கு வரைக்கும் காரணம் தெரியல..
அவர பார்த்தா இந்தா மாப்பிள்ளை வச்சுக்கோன்னு உன் சின்ன பொண்ண தூக்கி அவ்வளவு ஈஸியா கையில கொடுத்துடுற ஆள் மாதிரி தெரியல..
ரொம்ப போராடனும் போல போராடுவதற்கு உரிய வலுவா நிரந்தர தொழில் வேணும்.. ’ என்ன செய்யலாம் யாரிடம் சரியான ஆலோசனை கேட்கலாம் என்ன செய்தால் முன்னேறலாம் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்..
அப்போது மணியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது..
ராஜுவை எழுப்பாமல் அழைப்பை ஏற்று காதில் வைத்துக் கொண்டு எழுந்து வீட்டின் பின் பக்கம் சென்றான்..
மணியையும் விசேசத்திற்கு அழைத்திருந்தான் கதிர் ஆனால் அவன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை.. அவன் தான் மருத்துவமனையில் இருக்கும் தாயை போய் பார்த்துக் கொள்ள வேண்டும்..
மணிக்கு கூட பிறந்த பெண்கள் யாரும் இல்லை.. அவனுக்கு முதல் ஒரு அண்ணன் இருக்கிறார். ஆனால் அவன் திருமணம் செய்து வேறு ஊரில் இருப்பதால் தாயை வந்து பார்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலை அதனால் மணி தான் எப்போதுமே பார்த்துக் கொள்வது..
தாயை இரவு பார்த்துவிட்டு வந்து கடையில் உணவு உண்டு விட்டு அப்பொழுதுதான் கதிர் வீட்டுக்கு வந்தான்..
கதிர் போகும்போது வேண்டிய அளவு உணவு, தண்ணீர் என கோழிகளுக்கு வைத்துவிட்டு ஆடு,மாடுகளையும் புல்லுகளை கட்டி விட்டது தண்ணீர் வைத்து தான் வந்தான்..
பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துக் கொள்வார் தான்..
மணி வந்து விட்டதாகவும் எத்தனை ஆடு,மாடு,கோழிகள் உள்ளது என அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு தீன்,தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்துவிட்டு தோட்டத்தையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரப்போவதாகவும் கதிருடன் பேசிக்கொண்டே வயல் வரம்பில் கையில் டார்ச் லைட்டுடன் இறங்கி நடந்தான் மணி..
ஒரு பிரச்சனையும் இல்லை அனைத்தும் சரியாக இருக்கிறது. என பார்வையிட்டு வந்து கூறிவிட்டு மணி வைத்ததும் கைபேசி வைத்துவிட்டு கதிர் திரும்பிய போது சரவணன் எதிரே நின்றார்..
“ அப்புறம் இவ்வளவு பிஸியான மச்சான் அம்மா சொன்னாங்கன்னு இங்க தங்கி இருக்க தேவையே இல்லையே..
எங்கம்மா உங்க பிஸி டைம் தெரியாம சொல்லி இருப்பாங்க. இல்ல நீயே போக போறேன்னு சொல்லி போயிருக்க வேண்டியது தானே..
பரவாயில்லையே நீங்க பெரிய ஆள் தான்.! எவ்வளவு ஏற்பாடு பண்ணினாலும் கடைசில அதே நகையை சீரா கொண்டு வந்துட்டீங்களே மச்சான்..
கோமதி,ராஜி,செல்வி,அன்பு இவங்கள மாதிரி நீயும் எனக்கு தாய் மாமா பெத்த புள்ள. ஆனா இவங்கலெல்லாம் பாக்குற எனக்கு ஏன் உன்ன பாக்க புடிக்க மாட்டேங்குது எப்பயாவது யோசித்து இருக்கியா?
கோமதியை நான் எப்படி லவ் பண்ணி கல்யாணம் கட்டினேன் என்று உனக்கு தெரிய வாய்ப்பு இல்லை.. ஏன்ன அப்ப நீ அஞ்சு வயசு குழந்தை பிள்ளை..
இப்ப பார்ப்பேன்னு நினைக்கிறேன் ஏன்னா இப்போ உங்க மனசுலயும் காதல் வந்துருச்சு உங்க மனசுல காதல் இருக்கிறதால் மத்தவங்க எப்படி லவ் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சிருக்கும்..
ஆமா நான் இவ்வளவு ஏற்பாடு பண்ணியும் நீ எப்படி நகைய அஞ்சு பவுனு சீரா கொண்டு வந்து கொடுத்த என் பொண்ணுக்கு..
நீ சீர் கொடுத்து தான் இங்கே என் பொண்ணுக்கு நிறையணும்னு இல்லை.. ஆனாலும் நீ அதை கொடுக்க கூடாதுன்னு நான் ரொம்ப தடுத்தேன்..
எப்படியும் ஒரு சவரன் நகை சீர் செய்வன்னு நான் நினைச்சிருந்தேன். அதுக்கு சரி ஆடு விக்கட்டும் ஆடு வித்தால் அந்த காசு போதும்.
ஏதோ என் தாய் மாமா குடும்பம் பெயர் கெட்டுப் போகாமல் சீர் செய்யட்டும்னு விட்டேன்..
என் பொண்ணுக்கு சீர் செய்வதுக்காக என் மச்சான் கிட்ட இருக்க சொத்து அந்த மாட்ட ஏன் வித்து என் மச்சான் கஷ்டப்படுவானேன் நல்ல எண்ணத்தில் நான் தான் மாடு விக்கிறதை தடுத்தேன்..
இந்த ஏரியாவில் மாடு பிடி வியாபாரி அவரை பிடித்து அவரை கவனித்து அவருக்கு தகவல் சொன்னா போதும் ஏரியால யாருமே மாடு விக்க முடியாது. வாங்க முடியாது. அவ்வளவு பேருக்கும் அவர் தகவல் சொல்லிப் பார்த்துக் கொள்வார்.
அப்படி ஒரு சின்ன உதவிதான் என் மச்சானுக்கு செஞ்சேன்..
மாடு கேட்டவங்க எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லாமல் குறைந்த விலைக்கு கேட்டாங்க..
நான் இவ்வளவு ஏற்பாடு பண்ணியும் நீ அதையும் மீறி அந்த நகையை போட்டு இருக்கேன்னா அப்ப உங்க அம்மாவோட வார்த்தையை மீறி கடன் வாங்கி இருக்கேன்னு தானே அர்த்தம். அது உங்க அம்மாக்கு தெரியாம பார்த்து இருக்க?.
என் தாய் மாமா புள்ளையா நீ இருந்தாலும் எனக்கு என் மகள் தான் முக்கியம்..
மத்தவங்களோட பழகுற மாதிரி உன்னோடயும் மாப்பிள்ளைன்னு தோளில் கையை போட்டு சந்தோஷமா சிரிச்சு பேசி உனக்கு ஒரு தொழில் வைக்கிறதுக்கு ஐடியா குடுத்து உன்னை முன்னேத்தி விடக்கூடாதுன்னு இல்லை..
அப்படி நான் செய்து உன்னை முன்னேத்தி விட்டு மாப்பிள்ளைன்னு தோளில் கை போட்டு பழகினால் நாளைக்கு நீ வந்து மாமா பொண்ணு கொடுன்னு கேட்க மாட்டேன்னு என்ன நிச்சயம்..
ஏதோ இப்ப உங்க குடும்பம் கஷ்ட ஜீவனம் இல்லாம ஓரளவு ஓடுது அதனால நானும் கண்டுக்காம இருக்கிறேன்.
ராஜிக்கு நகை போட்டு கல்யாணம் பண்ணி கொடுத்த மாதிரி செல்விக்கும் நகை போட்டு கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டியது என் பொறுப்பு அந்த பொண்ணோட கடமையை நான் கட்டாயம் செய்வேன்..
என் அப்பாவோட வியாபாரத்துக்கு ஆர்டர் பிடிக்கவும் பொருள் வாங்கவும் துணைக்கு போன போது தான் மாமாவும் தவறினார்..
எனக்கு அது ரொம்ப வருத்தம் தான் நீயும் அந்த நேரம் ரொம்ப சின்ன பொடியன்..
உங்க அப்பா மட்டும்தான் உங்களுக்கு எல்லாமே..
இவ்வளவு கஷ்டம் இல்லாம எங்களுக்கு ஈக்குவலா இல்லாட்டிலும் ஏதாவது ஒரு நிலைமையில் இருந்திருப்பீங்க..
அன்பையும் நான் சும்மா விடமாட்டேன் அவனுக்கும் ஏதாவது நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணி கொடுப்பேன்..
நீங்க என் தாய் மாமா குடும்பம் மற்றது என் பொண்டாட்டியோட நெருங்கின சொந்தம். நீங்க கஷ்டப்படுவதை பார்த்து என் மதி வருத்தப்பட்டால் என்னால அதை தாங்கிக்க முடியாது..
என் உயிர் மூச்சு எங்க இருக்குன்னு கேட்டா என் மதிட சந்தோஷத்துல இருக்குன்னு நான் சொல்லுவேன்..
நீ கேக்கலாம் சின்ன வயசுல இருந்தே நீங்களும் எங்க அக்காவை விரும்பி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ஏன் என்னோட விருப்பத்திற்கு தடையா நிக்கிறீங்க?.
என் சூழ்நிலை வேற உன்னோட சூழ்நிலை வேற..
எனக்கு கூட பிறந்தது ஒரு தம்பி அவனும் இப்ப எங்க இருக்கான்னு தெரியாது.
பொறுப்பு கடமைன்னு பெருசா இல்ல. ஆனா உனக்கு அக்கா, தங்கச்சி, தம்பி பொறுப்பு கூட இருக்கு..
நீ இப்ப செய்ற மாதிரி அக்கா,தங்கச்சி அவங்க புள்ளைகளுக்கும் சீர் செய்யணும். செல்விக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.. இன்னும் அந்த சின்ன ஓட்டு வீட்ல தான் இருக்கீங்க. உனக்கு இன்னும் நிரந்தர தொழில் இல்லை..
உன்னை என் பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா இங்கு வாழ்ற மாதிரி சந்தோசமா,நிம்மதியா எந்த கஷ்டமும் இல்லாமல் உன் கூட வாழுவான்னு என்ன நிச்சயம்..
இன்னைக்கி இந்த காய் சமைச்சா நாளைக்கு எந்த காய் சமைக்கணும்னு யோசிக்கிற ஆளுங்க நீங்க..
வாரம் ஒரு நாள் கறி விருந்து வைப்பீங்களா? இங்க மூணு நேரமும் மதியை சும்மா இருக்க வச்சிட்டு கடையில விருந்து வாங்கி கொடுக்க என்னால முடியும்..
உன்ன காயப்படுத்தணும்றது என் நினைப்பு இல்லை..
நீ என்னதான் செஞ்சாலும் ஒரு காலமும் என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி தர நான் விட மாட்டேன்..
இதுல மதியோ இல்லை எங்க அம்மாவோ குறுக்க வந்தாலும் அவங்களுக்கு என்ன பதில் கொடுக்கணும்னு எனக்கு தெரியும்..
இப்ப நீ எனக்கு ஒரு வாக்கு கொடுத்தா உன் சூழ்நிலையை நான் அப்படியே தலைகீழா மாத்தி காட்டுறேன்..
உங்க பொண்ணு தமிழ் எனக்கு வேணாம் மாமான்னும் ஒரு வார்த்தை சொல்லு ..
வாடா மாப்பிள்ளைன்னு கட்டிப்பிடிச்சு உன்னை கொஞ்சி நாளைக்கே உனக்கு எது சரியான தொழில் நீ எதுல சரியான முதலீடு பண்ணுனா முன்னேறலாம்னு ஐடியா கொடுத்து அதுக்கு முன் பணமும் நானே கொடுத்து உனக்கு உதவி செய்கிறேன்..
அப்படியே நீ செல்விக்கு கல்யாணம் பண்ணின பிறகு தான் பண்ணுவ நானே உனக்கு ஏத்த பொண்ணா பாத்து முன்ன நின்னு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்..
என்ன சொன்னது எல்லாத்தையும் கேட்டு சைலன்ட்டா நிக்குற எதுவும் பேச மாட்டேங்குற நான் கேட்ட வாக்கு கொடுக்கிறியா?.”
error: Content is protected !!