Skip to content
Post Views: 673
“ மாமா நானும் ரொம்ப காலமா யோசிச்சேன் எல்லாரையுமே அனுசரிச்சு போற மாமா ஏன் என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிறார்..
இப்பதான் எனக்கு அதுக்கு காரணம் தெரிஞ்சிருக்கு காரணம் தெரியாமல் மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டேன் காரணம் தெரிஞ்சதால கொஞ்சம் ஆறுதலா இருக்கு..
Advertisement
எப்படி இந்த நகை வாங்கினன்னு கேட்டீங்க தானே?.
Advertisement
நேற்று கடையில் இருந்து நடந்ததை நினைத்து பார்த்து சரவணனுக்கு பதில் கூறினான் கதிர்.
Advertisement
என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த கதிருக்கு ராஜு கிட்ட இருந்து அழைப்பு வந்தது..
Advertisement
கைபேசி சத்தமிட்டு அழைப்பு வரவும் அதை எடுத்து பார்த்து விட்டு கோமதியிடம் வெளியே போய் பேசி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே வந்தான்..
“ டேய் மாப்பிள்ளை கதிர் நீ இப்ப எங்க இருக்க .. ”
“ நான் லட்சுமி கோல்ட் ஜுவல்லரி வந்திருக்கேன் மாப்பிள்ளை..”
“ நல்லதா போச்சு நாங்களும் பஜார்ல தான் இருக்கோம். நம்ம அண்ணாச்சி டீ கடைக்கு வா மாப்பிள்ளை.. ” என்றான் ராஜு.
“ அக்கா கொஞ்சம் அவசரமா போகணும் இதுதான் நகை எப்படி இருக்குன்னு பார்த்துக்கோங்க.. இதோ வந்துடுறேன் மாமா.. ” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்..
ராஜூ சொன்ன டீக்கடை கொஞ்சம் பக்கம்தான் வேகமாக பைக்கில் அங்கே சென்றான் ராஜூவோடு வேறு ஒருவரும் இருந்தார்..
அந்த நம்பரை அவனுக்கு முன்பே தெரியும்..
கதிரும் வந்ததும் மூவருக்கும் டீ சொல்லிய ராஜு “ மாப்பிள்ளை இவர உனக்கு ஞாபகம் இருக்கா?. ”
“ ஏன் தெரியாம அண்ணனை மறக்க முடியுமா?. ”
“ ரொம்ப நல்லது தம்பி. நீங்க ரொம்ப பெரிய மனசு பண்ணி எனக்கு அந்த ஒரு மூடை கடலையை தந்தீங்க. அந்த மூடை கடலையை விதைத்த இடம் மட்டும் எனக்கு அமோக விளைச்சல் தம்பி.. போன முறை கடைசி நேரத்தில் நீங்கள் கடலை பயிர் செஞ்சி விக்கிறது எனக்கு தெரிய வந்தது அதனால உங்ககிட்ட ஒரு மூட மட்டும் வாங்கினேன்..
இந்த முறை தம்பி எனக்கு மட்டுமே எல்லாத்தையும் தரணும்..”
“ அண்ணன் தப்பா நினைக்க வேண்டாம். போன முறை உங்களுக்கு அந்த ஒரு மூடை கூட வந்து இருக்காது ஆனா ராஜு உங்களுக்கு தெரிஞ்சவன்னு தான் இல்லன்னு சொல்லாம கொடுத்தேன்..
வழமையா குடுக்குற கஸ்டமருக்கு கொடுக்கணும். அவங்களும் என்ன நம்பித்தான் எப்பயுமே இருப்பாங்க. வேறு யாரிடமும் வாங்க மாட்டாங்க..”
“ சரி தம்பி உங்க வழமையான கஸ்டமருக்கும் கொடுங்க. எனக்கு இல்லன்னு சொல்லாம பார்த்து பண்ணி தாங்க..
இந்தாங்க இதுல முன்பணம் இரண்டு லட்சம் இருக்கு.. பிடிங்க.. ”
“ ஐயோ அண்ணா பணம் எல்லாம் இப்ப வேணாம்.. எடுக்கும் போது தாங்க போதும்.. விளைச்சல் எப்படின்னு தெரியாமல் உங்களுக்கு எத்தனை மூடை கடலை தருவேன்னு என்னால சொல்ல முடியாது. அதனால பணம் இப்ப வேண்டாம்.. ”
“ தம்பி நான் ஒரு மூடை வாங்கியதற்கே அமோக விளைச்சல்.. உங்க நல்ல மனசுக்கு விளைச்சல் எல்லாம் எந்த ஒரு பாதிப்பும் வராது.. இந்த இரண்டு லட்சம் பணத்தை புடிங்க. உங்க கஸ்டமருக்கு குடுத்துட்டு எனக்கு எத்தனை மூடை தர முடியுமோ தாங்க. பணம் மிச்சம் இருந்தால் அதை பிறகு பார்த்துக்கலாம் முதல் பணத்தை புடிங்க.. ” எனக் கூறி ரெண்டு லட்சம் பணத்தை கதிர் கையில் கொடுத்தார் அந்த நபர்..
பணத்தை கை நீட்டி வாங்க அவனுக்கு சங்கடமாக இருந்தது..
பொருள் கொடுக்காமல் பணத்தை வாங்குவதற்கு. ஆனால் அதற்கு ராஜூதான் மிகவும் அவனை சமாதானப்படுத்தினான். “ எதற்கும் அட்வான்ஸ் கொடுத்து தான் முன்பதிவு செய்து வைப்பார்கள்.. அதனால் இதை நீ கடனாக நினைக்காமல் உன் பொருளுக்கு முன் பணமாக நினைத்துக்கொள்.. ” என வெகுவாக சமாதானம் கூறித்தான் அனுப்பிவைத்தான்..
என்ன செய்வது என தெரியாமல் தின்டாடி நின்ற போது ஒரு பற்றுக்கோளாக கிடைத்த பணத்தை அவருக்கு நன்றி சொல்லிவிட்டு எடுத்துக்கொண்டு நகைக்கடையில் கொடுத்து நகைகளை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்..
தாயிடம் எதையும் மறைப்பதில்லை.. இதயும் கூறினான்.. மனம் சுணங்கினாலும் பொருளுக்கு முன்பணம் என அவரும் மகனின் இக்கட்டான நிலையை நினைத்து சமாதானப்படுத்தி கொண்டார்..
அன்று இரவு கதிர்,ராஜு, அன்பு, மூவரும் கோமதி வீட்டுக்கு வந்து மேடை அலங்காரங்கள் செய்து விட்டு மிகவும் தாமதமாக நள்ளிரவு 12 மணியளவில் தான் வீடு வந்த சேர்ந்தார்கள்..
எப்படி பணம் கிடைத்து நகையை பெற்றுக் கொண்டான் என கதிர் கூறவும் அதைக் கேட்ட சரவணன்
“இது எனக்கு தெரிந்திருந்தால் நான் நடக்க விட்டு இருக்க மாட்டேன்.. இது என் கண்ண மறைச்சு நடந்தது அதனால நீ செஞ்சு காட்டிட்ட.
இப்பயும் நான் உன்ன தாழ்த்தி பேசல இந்த முன் பணத்தை வாங்கி நீ நகை வாங்கி போட்டுட்ட. நாளைக்கு அந்த கடலையை கொடுத்து ஏதாவது செய்யணும்னு ஒரு பிளான் வச்சிருந்திருப்ப அது கெட்டுப் போயிடுச்சு. அடுத்த விவசாயம் பாக்குறதுக்கு நெல் பயிரோ இல்ல திரும்பவும் கடலை போடுறதுக்கோ எவ்வளவு செலவு இருக்கும் mm அதுக்கெல்லாம் எங்க போவ பணத்துக்கு..
நாலையும் யோசிச்சு தான் நான் உனக்காக பேசுறேன்.. என்னடா மாமா நம்மளை இவ்வளவு குறைத்து நினைக்கிறார்ன்னு நீ தப்பா எடுத்துகிட்டா அது உன்ன பொருத்தது.. ”
“ நான் பூமி தாயை ரொம்ப நேசிக்கிறேன்..
ஒரு காலமும் பூமி தாய் எங்களை கை விட்டு விடமாட்டார்.. இந்த ரெண்டு லட்சம் பணத்துக்கு மேலயே நான் பணம் எடுப்பேன்..
என்னோட அடுத்த பயிற் செய்கை எல்லாம் அதற்கு அப்புறம் பார்த்துக் கொள்ள வேண்டியது.. செய்ய வேண்டிய முறைன்னு ஒன்னு இருக்கு மனசுக்கு திருப்தியா,சந்தோசமா கட்டாயம் செய்யணும்.
அது செஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இத நான் ஒரு வீன் செலவா பார்க்கல போதுமா..
அப்புறம் பாப்பாவ ரொம்ப பிடிக்கும்தான் அது கல்யாண லெவலுக்கு போகும்னு நீங்களா நினைச்சா அது உங்க தப்பு..
பாப்பா இப்ப படிக்கிற பிள்ளை.. படிப்பு தான் முக்கியம்.. இந்த வயதிலேயே அவ கல்யாணத்த பத்தி பேசி அதை பாப்பா ஒருவேளை கேட்டா அவ மனசுல தவறான எண்ணம் வந்துடும் படிப்பு கெட்டுப் போயிடும்..
எனக்கு மட்டும் பாப்பாவ பிடிச்சா போதாது. பாப்பாவுக்கு என்ன பிடிக்கனும். அது படிச்சு முடிச்சு விவரம் தெரிஞ்சு அதுக்கு பிறகு காதல்னா என்ன கல்யாணம்னா என்னன்னு விவரம் தெரிந்ததுக்கு பிறகு பாப்பாக்கு என்ன புடிச்சா அதுக்கு அப்புறம் பார்க்க வேண்டிய விஷயம் எங்க கல்யாணம்..
என்ன விட நீங்க தான் ரொம்ப நம்புறீங்க போல நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி விடுவோம்னு
அதுதான் பயந்து முன்கூட்டியே வாக்குறுதி எல்லாம் கேக்குறீங்க..
இப்ப உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன்.. பாப்பாவுக்கு என்ன பிடிக்குமா இருந்தா இந்த கல்யாணம் யார் தடுத்தாலும் கட்டாயம் நடக்கும்..
நான் இதுவரைக்கும் பாப்பா கிட்ட நேரடியா தவறா எதுவுமே அவளுக்கு கேக்குற மாதிரி அவளுக்கு தெரியிற மாதிரி பேசிக்கிட்டதும் இல்ல.. நடந்துக்கிட்டதும் இல்லை.. எல்லாமே என் மனசுக்குள்ள வச்சுக்கிட்டு ஒதுங்கி தான் இருக்கேன்..
நீங்களே கண்ட நேரத்தில் பேசி பாப்பாக்கு அது தெரியப்படுத்தாதீங்க அது இரண்டு பேருக்குமே நல்லது..
நீங்க எனக்கு நல்லது தான் பண்ணி இருக்கீங்க மாமா.. இப்ப என் செவளை என் கூடவே இருக்கு.. அதுவும் எனக்கு தம்பி மாதிரி தான்..
மாடும் என் கை விட்டு போகாமல் நான் செய்ய வேண்டிய சீரும் செஞ்சிட்டேன்.. அதுக்கு நீங்க தான் பெரிய ஒரு உதவி செஞ்சீங்க.. ரொம்ப நன்றி.
கண்டதையும் யோசிக்காமல் எப்பயோ நடக்க போறத நினைச்சு கவலைப்பட்டு உடம்பை கெடுக்காம ஆரோக்கியமா இருங்க.. நீங்க ஆரோக்கியமா இருந்தா தான் என் அக்கா உங்க கூட சந்தோஷமா வாழும்.. அக்கா முகத்தில் எப்போதுமே சிரிப்பு இருக்கணும்..
ஏன் இவ்வளவு நாளும் நீங்க என்ன ஒதுக்கி வச்சுக்குறீங்கன்னு எனக்கு காரணம் தெரிஞ்சதுக்கப்புறம் மனசு அமைதியா இருக்கு ரொம்ப நன்றி.. வரட்டா..” என கூறி விட்டு அங்கிருந்து சென்றான்..
கதிர் வந்து அவனது இடத்தில் மீண்டும் படுத்ததும் சரவணன் அந்த பக்கம் வந்து பேபியம்மாவின் வீட்டை எட்டி பார்த்துவிட்டு மீண்டும் அவரது பெரியவீட்டின் அறைக்குள் சென்று விட்டார்..
சரவணன் கதிர் இருவரும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை பேசி இருப்பார்கள்..
கதிருக்கு உறக்கம் கொஞ்சமும் அண்டவே இல்லை..
மேலும் அரை மணி நேரம் கடந்ததும் கண் மூடி இருந்த கதிரை தட்டும் உணர்வு தெரிந்ததும் கண்விழித்து எழுந்து அமர்ந்தான்..
“ சின்னி மாமா நான் தான் தமிழ்.. ”
“ என்ன பாப்பா இந்த நேரம் தூங்காம நீ என்ன பண்ணுற?.”
“ வாங்க மாமா கொஞ்சம் பேசணும்.. ”
“ இந்த நேரத்தில் என்ன பாப்பா பேசணும்.. எல்லாம் காலையில் பேசிக்கலாம்.. இன்னைக்கு தான் சடங்கு கழிச்சிருக்கு. இந்த நேரத்தில் நீ வெளியே நிற்கிறது சரியில்ல வீட்டுக்குள்ள போ.. ”
“ ஐயோ மாமா ப்ளீஸ் ரொம்ப தூரம் எல்லாம் வேணாம். பக்கத்துல வாங்க.. நீங்க பேச வரலன்னா நான் இங்கிருந்து உள்ள போகவே மாட்டேன்..”
“ என்ன பாப்பா வந்து இப்படி இம்ச பண்ணுற. வா என்ன பேசணும் சொல்லு?.. ”
“ மாமா உங்களுக்கு எத்தனை வயசு?. ”
“ இருப்பத்தி நாலு.. ”
“ எத்தனை வயதில் கல்யாணம் கட்டுவீங்க.. ”
“ அதெல்லாம் இப்ப தெரியாது. செல்விக்கு கல்யாணம் கட்டணும் அன்புக்கு ஒரு வேலை தேடி கொடுக்கணும். எனக்கு ஒரு தொழில் வைக்கணும். நிறைய இருக்கு அதெல்லாம் அப்புறம் பார்க்க வேண்டிய விஷயம் ஏன் இதெல்லாம் நீ கேக்குற?..”
“ நீங்களும் அப்பாவும் பேசினத நான் கேட்டேன் மாமா..
எனக்கு சின்னி மாமாவை ரொம்ப பிடிக்கும்..
எனக்கு கல்யாண வயசு வந்ததும் அப்பா கல்யாணம் பேச ஆரம்பிச்சா நான் சின்னி மாமாவை தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிப்பேன்.. இல்லாட்டி செத்துப் போயிருவேன்னு அப்பா கிட்ட சொல்லுவேன்.
அப்பா உங்களுக்கு என்ன கட்டி வைப்பார் தானே..
நீங்க சின்னத்துல என்னோட பேசுற மாதிரி இப்ப பேசுறது இல்ல.. ஒதுங்கி போறீங்க ஏன்னு எனக்கு தெரியாம நான் ரொம்ப அழுது இருக்கேன் மாமா..
இப்பதான் அப்பாதான் காரணம்னு தெரியும்..
நீங்க போட்ட நெக்லஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அது எப்பவுமே நான் வைத்திருப்பேன்..
நான் என்ன கேட்டாலும் இல்லன்னு சொல்லாம அப்பத்தா செஞ்சு தருவாங்க. அதனால எனக்கு உங்கள கல்யாணம் பண்ணுறதுக்கு அப்பத்தா உதவி மட்டும் போதும்..
இதை இதோட நான் மறந்துடுவேன்.. மாமா இனி எப்போ உங்கள நான் பார்க்க போறேன்.. நான் படிக்கணும் இதுல மனசு தவற விட மாட்டேன்னு நானே நம்புறேன்..
என் மாமா மனசு கவலைப்பட்டால் என்னால நிம்மதியா இருக்க முடியாது. தாங்கிக்க முடியாது. அதனால உங்க சின்ன பொண்ணு எப்பவுமே உங்களுக்கு மட்டும் தான் இல்லாட்டி மண்ணுக்கு..
இது உங்க கிட்ட சொல்லனும்னு தான் மாமா அப்பா போனதும் நான் உங்களை வந்து எழுப்பினேன்,
எதையும் போட்டு கவலைப்படாமல் நிம்மதியா இருங்க.. கல்யாண வயசு வந்ததும் தன்னால எல்லாம் நடக்கும்.. இல்லாட்டி நான் நடத்திக் காட்டுவேன்..
சரவணனா? சரவணன் பெத்த மகள் தமிழான்னு? அப்ப பாப்போம்..
நீங்க நினைக்கிற மாதிரி நான் படிப்பில் எல்லாம் அவ்வளவு கெட்டிக்காரி இல்ல மாமா.. எனக்கு ஏனோ படிப்பு வரவே மாட்டேங்குது. அதுக்காக காதல் தான் காரணம்னு நீங்க நினைக்க வேண்டாம்..
எனக்கு அஞ்சாம் அஞ்சாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படிக்கும் போது படிப்பு அவ்வளவா வரல. அதுக்காக படிக்காம இருக்க மாட்டேன். என்னால முடியுற வரை முயற்சி செஞ்சு நான் படிப்பேன்..
படிப்பு முடிகிற வரைக்கும் இனி இதைப்பற்றி நான் மட்டும் பேசவேமாட்டேன்..
என் மாமா மனசு கவலையை போக்கத்தான் இப்ப நான் இந்த உறுதிய உங்களுக்கு சொல்றேன்..
சரி மாமா நிம்மதியா போய் உறங்குங்க. காலையில் பார்க்கலாம்.. என்று கூறிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தமிழ் உள்ளே சென்றுவிட்டாள்..
கதிருக்குத்தான் என்ன யோசிப்பது என்ன செய்வது என்று எதுவும் தெரியவில்லை.. அவளை சிறு பெண் என நினைத்திருந்தவன் இந்த அளவுக்கு விவரமாக அவள் பேசவும் அதை நினைத்து அவள் எனக்குத்தான் என மகிழ்வதா?இல்லை இந்த வயதில் இப்படி நினைக்கிறாள் என கவலை கொள்வதா? என்று தெரியாமல் இருந்தான்..
சரவணனை பற்றி தெரிந்து கொண்டான்..
தமிழின் முடிவையும் தெரிந்து கொண்டான்..
இனி அனைத்தும் காலத்தின் கையில்.
அவளுக்கு விருப்பம் என்றால் அவளை ஒருபோதும் விட மாட்டேன் என மனதில் உறுதி கொண்டு அதற்கு தொழிலில் முன்னேற வேண்டும் என அதை மனதில் நினைத்துக் கொண்டு உறங்க முற்பட்டான்..
சரவணனும், கதிரும் அதன் பின்பு கதிரும், தமிழும் பேசிய அனைத்தையும் வேறொருவரும் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை இவர்கள் யாரும் அறியவில்லை..
error: Content is protected !!