Skip to content
Post Views: 1,475
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் -5
Advertisement
Advertisement
எப்படி என்னை தெரியும் மாயாவுக்கு, என்று அக்னி யோசிக்க..
” உங்களை ஆசிரமத்தில் பார்த்திருக்கிறேன்”. என்று மாயா சொன்னதும், “எப்போ?” என்றான் அக்னி…
Advertisement
அவன் நிறைய உதவி அனாதை ஆசிரமத்துக்கு செய்திருக்கிறான்.. அவன் நேரடியாகவும் செய்வான், நண்பர்களோடும் சேர்ந்து உதவி, நன்கோடை என்று செய்வான்.
இவள் எதை சொல்கிறாள் “எப்போ என்னை பார்த்தா” என்றான் அவளை யோசனையாக பார்த்து…
“அது” என்றவள்.. ” நீங்க மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு லேப்டாப் வாங்கி தந்தீங்களே அன்னைக்குத் தான் முதன் முதலில் உங்களை நான் பார்த்தேன்”…
” நீ அங்க இருந்தீயா? “..
” ஆமாம்” என்று தலையாட்ட…
” என்ன பண்ணிட்டு இருந்த அங்க”..
“நாங்க காலேஜிலிருந்து சண்டே, சண்டே ஆசிரமத்துக்கு வந்து மாற்று திறனாளி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் சொல்லி கொடுப்போம் அங்கே ஆசிரமத்துல இரண்டு கம்ப்யூட்டர் தான் இருந்தது.. பிள்ளைகள் நிறைய இருந்தாங்க எங்களுக்கு சொல்லி கொடுக்க முடியல..
நாங்க எல்லாரும் சேர்ந்து இன்னும் ரெண்டு கம்பூட்டர் வாங்கினோம்,, அதுவும் பத்தல.. சில பிள்ளைகளுக்கு கம்பூட்டர் முன்னாடி ரொம்ப நேரம் உட்கார முடியல,, லாப்டாப் வாங்களாமுன்னு நெனச்சோம் ,,
லாப்டாப் வாங்க டொனேஷன் கலேக்ட் பண்ண நிறைபேர் கிட்ட உதவி கேட்டாம் ஒரு லேப்டாப் கூட வாங்க முடியல, எல்லாரும் 100, 200, 500 ரூபாய் குடுத்தாங்களே தவிற பணம் சேரல,, நான் என் அப்பா கிட்ட கேட்டேன், உங்களால உதவி பண்ண முடியுமான்னு அப்பா ஒன்னு இல்லா இரண்டு லாப்டாப் வாங்கி தர்ரேன்னு சொன்னாங்க.. எங்களுக்கு 27 லாப்டாப் தேவை,, என்ன பண்ணாலமுன்னு யோசிச்சிட்டு இருந்தோம்.. திடிர்னு ஆசிரமத்துல இருந்து போன் வந்தது, ஒருதர் 27 லாப்டாப்பும் வாங்கி கொடுக்குறத சொல்லி இருக்காரு அப்படியின்னு,, எனக்கு ஆகாயத்துல பறக்குற மாதிரி இருந்தது,, அந்த நடக்க முடியாத பிள்ளைகள் வாழ்க்கையில் இனி கவலை இருக்காது, உட்கார்ந்து இடத்தில் இருந்தே வேலை பார்க்கலாம், அவங்க வாழ்க்கை நல்லா இருக்குமுன்னு யோசிச்சேன்..
நீங்க மறுநாள் ஆசிரமத்துக்கு வந்தீங்க, யாரையும் போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்க,, எல்லா பிள்ளைகளுக்கு லாப்டாப்பை உங்க கையால குடுத்துட்டு, பேசுனீங்க உங்க கம்பெனியில் இருந்து ஒருத்தர் ஆசிரமத்துக்கு வந்து உங்க எல்லாருக்கும் லாப்டாப் இயக்க சொல்லி தருவாங்க,, ஜாப் ட்ரெயினிங்கும் சொல்லி தருவாங்க.. உங்களுக்கு ஆசிரமத்திலே இருந்த படியே எல்லாருக்கு வேலை வாங்கி தர்ரேன் லாப்டாப் கத்துக்கோங்க, சில பேருககு என்னோடு கம்பெனியில் வேலை போட்டு தர்ரேன், நீங்க இங்க இருந்தபடியே வேலை பார்க்கலாம்,, வேற எந்த உதவி வேணுமுன்னாலும் எனக்குகிட்ட சொல்லுங்கன்னு சொன்னீங்க”,,…
அக்னி அவள் பேசுவதை கேட்டு அமைதியாக இருக்க..
“நீங்க சொன்னபடியே அங்க உள்ள சில பிள்ளைகளுக்கு வேலை கொடுத்துருக்கீங்க,, அத பார்த்து எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்,,..
இந்த காலத்துல இப்படி ஒரு நல்ல மனிதரான்னு உங்களை பார்த்தோம், நீங்க உதவி பண்ணதுக்காக உங்களுக்கு பாராட்டு விழா நடத்தா ஏற்பாடு பண்ணி உங்ககிட்ட சொல்ல வந்தோம்,, நீங்க எங்களை பார்க்கவே இல்லை ஒழுங்க படிச்சு சம்பாரிச்சி முடிஞ்சா, கஷ்டம் படுற பிள்ளைகளுக்கு உதவி பண்ண சொல்லுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டீங்க,, உங்கள பார்க்க முடியாம திரும்பி வந்தோம்,, இந்த காலத்துல இப்படி ஒருத்தரா, பாராட்டு வேணாமுன்னு யார்ராவது சொல்லுவாங்களா, உங்கள பத்தி பெருமை பேசிக்கிட்டு வந்தோம்,
ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் கஷ்டபடுறவருக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுத்து வீடியோ எடுத்து போடுறாங்க, ஆனா நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணிட்டு எப்படி இவ்வளவு அமைதியாக, அடக்கமா இருக்க முடியுது,, உங்களை மீட் பண்ணி நன்றி சொல்ல நாங்க பலமுறை முயற்சி பண்ணோம் உங்கள பார்க்கவே முடியல”,, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்,, என்னோட ரியல் லைப் ஹீரோ சார் நீங்க,,”
இங்க வாங்க” என்று அவன் காதில் “உங்களை தூரமா நின்னு நிறைய தடவை சைட்டு கூட அடிச்சிருக்கோம், யாருக்கு குடுத்து வச்சிருக்கோன்னு” என்று சிரித்தவளை..
“மாயா” என்று அவனும் சிரிக்க..
“போதுமா எங்க அப்பாவுக்காக உங்களை நான் கல்யாணம் பண்ணல, இப்ப வாச்சும் என் மனசு உங்களுக்கு புரிஞ்சுதா,, உங்களை விரும்பி தான் சார் நான் கல்யாணம் பண்றேன், உங்களை பார்க்க கூட என்னால முடியல இப்போ என் பக்கத்துல நீங்க இருக்கீங்க நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா சார்”.. என்றவளை பார்த்தபடியே அக்னி அமர்ந்திருக்க..
“இன்னும் நிறைய இருக்கு சார் உங்களை பத்தி பேச, நீங்க என்னென்னா உனக்கு புடிச்சிருக்கா புடிச்சிருக்கான்னு கேட்குறீங்க,, உங்கள பார்க்கவே முடியாதுன்னு கவலைப்பட்ட ஆளு நான்,, ஆனா இப்போ நீங்க என் வாழ்க்கை பூரா உங்க கூட,, எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருக்கு சார்”.. என்றவள் தன் கை விரித்து காட்ட..
அவள் தன்னை பற்றி ஒவ்வொன்றையும் சொல்ல, சொல்ல அவளையே ரசித்து பார்த்திருந்தான் அக்னி..
அவன் பார்வையை உணர்ந்தவள்.
” உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா சொல்லுங்க? “..
அவனோ மெல்ல சிரித்து “பிடிக்காமலேயே உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்”..
“அப்போ என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?””..
” பிடிச்சிருக்கு…… ” என்று இழுத்து சொன்னவனிடம்..
” ஏன் சார் அவ்வளவு கஷ்டமா இருக்கா? என்னை கல்யாணம் பண்றதுக்கு ” என்று வருத்தமாக மாயா கூற..
” உன் வயசு தான் எனக்கு பிரச்சனை மாயா சின்ன பொண்ணா இருக்கீயே”?..
” ஏன் சார் உங்களுக்கு 23 வயசு சின்ன பொண்ணா, நான் நிறைய பேரை பார்த்திருக்கிறேன், 12 டாம் கிளாஸ் முடிஞ்சதும் சில பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க,, என் பிரண்டு சில பேருக்கு காலேஜ் படிக்குறப்போ கல்யாணம் முடிஞ்சிருச்சு,, உங்களுக்கு என்னை பிடிக்கல தானா,, அது நால தான் இப்படி வயசு கம்மியின்னு பேசுறீங்க, பராவால சார் நான் உங்களுக்கு பிரண்டாவே இருக்கேன், நீங்க வேணா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க , எனக்கு தான் உங்களை கல்யாணம் பண்ண முடியல” என்று கண்கலங்கி பேசியவளை..
” ஏய் வாழு வாய மூடு, நான் சொன்னதை நீ ப்ரூவ் பண்ணுற “.
“என்ன பண்ணேன் நான்?”..
“நான் சொன்னத நீ சரியா புரிஞ்சுக்கல, நீ சின்ன பொண்ணு அதை எப்படி சொல்றது, அது எனக்கு 33 வயசு நான் செய்யறது எல்லாம் பெரிய மனுஷன் மாதிரி இருக்கும், நீ இப்பதான் காலேஜ் முடிச்சிருக்க உன் எதிர்பார்ப்பு எல்லாம் வேற மாதிரி இருக்கும், உன்னுடைய இடத்துல இருந்து நான் யோசிச்சேன்”..
“நீங்க ஒன்னும் என் இடத்துல இருந்து யோசிக்க வேண்டாம், எனக்கு உங்களை பாத்துக்குற மெச்சூரிட்டி இருக்கு, அதை விட உங்களை எனக்கு புடிச்சிருக்கு.. உங்க கூட இருக்கிறது எனக்கு பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்ன புடிச்சிருக்கா அத மட்டும் சொல்லுங்க சார்”..
“நீ ஒரு முடிவு பண்ணிட்ட” என்றான் அக்னி..
அவள் “ஆமாம்” என்று தலையாட்ட..
“அப்போ சரி கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் ஒரு புன்னகையோடு..
அவன் சம்மதம் சொன்னதும் கண்களை விரித்து அவனை பார்த்து..
“ஏ….” என்று கத்தியவள்..
அவனை பாய்ந்து வந்து அணைத்துக்கொள்ள…
அக்னி சாதாரணமாக சோபாவில் அமர்ந்திருக்க மாயா அவன் மேல் பாய்ந்து வந்து அணைத்தும் சோபாவில் அப்படியே அவளை அணைத்தபடியே சரிந்தான்..
“தேங்க்யூ, தேங்க்யூ, தேங்க்யூ சார் என்று அவனை அணைத்து படியாக நன்றி சொல்ல..
“மாயா மாயா ப்ளீஸ் எழுந்திரு”
என்றான் அக்னி..
அப்போது தான் மாயாவுக்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று தோன்ற,, “சாரி” என்று அவன் மேல் இருந்தவள் மெல்ல எழுந்து பிரிய,,..
அவள் பிரிந்தாலும் அவள் கழுத்தில் போட்டிருந்த செயின் அக்னியின் செயினோடு மாட்டிக் கொள்ள,, மீண்டும் அவன் மேல் விழுந்தவள்..
” ஜெயின் மாட்டிகிச்சு” என்றவளிடம்,,
” இரு நான் எடுத்து தர்ரேன்” என்றவன் இருவரின் ஜெயினை சிக்கலை விடுவிக்க பார்க்க முடியவில்லை…
அவள் தன் மேல் இருப்பது, அவனுக்கு பெரும் அவஸ்தையை தர..
மாயாவை அப்படியே தூக்கிபடியே தன் மடி மீது வைத்துக் கொண்டவன்,, செயினை கழட்ட,.. கழட்ட முடியவில்லை இரண்டு செயினும் ஒன்றோடு, ஒன்று சிக்கி கொண்டு கழட்ட வராமல் இருக்க.. அக்னி அவனின் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளின் கழுத்தில் போட்டு இருந்தான்…
அவனின் ஜெயினை கலட்டி தனக்கு போட்டதை பார்த்தபடியே இருந்த மாயாவை பார்த்தவன்..
“இனி என்னோடது எல்லாம் உன்னோடது மாயா,, ஜெயின் கழட்ட வரல, இது என் அப்பாவோட ஜெயின்,, அவர் மருமகளுக்கு கொடுக்குற முதல் கிப்ட்டா, இத வச்சுக்கோ”…
“நான் வேணா வீட்டுக்கு போனதும் கழட்டி கொடுத்துரட்டுமா?”..
“வேணாம் மாயா நீயே வச்சுக்கோ”, என்றவன் தன் மடிமீது உட்கார்ந்து இருந்தவளை பக்கத்தில் உட்கார வைத்து.. மனதில் என்ன வெய்ட்டுடா என்று அவளை சொல்லிக்கொண்டான்..
“உன் மாமியாரை பார்க்க போலாமா?”..
“ம்ம்ம்…” போலாமே என்று வேகமாக மாயா தலையாட்ட..
பார்வதியை பார்க்க தன் இல்லம் அழைத்து வந்தான்.
பார்வதியிட ம் எதுவும் சொல்லாமல் அக்னி மாயா வீட்டிற்கு அழைத்து வர..
விடாது நீண்ட நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டு , தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பார்வதி யாரு இந்த நேரத்துல என்று திட்டியே படியே வெளியே வந்தார்..
அக்னி வெளியே நின்று இருப்பதை பார்த்தவர், ” என்னடா இந்த நேரத்துல வந்திருக்க,? உடம்பு எதும் சரி இல்லையாடா” என்று கேட்டபடியே அக்னியின் அருகில் வர..
தனக்கு பின் இருந்த மாயாவை முன்னாடி கொண்டு வந்திருந்தான் பார்வதி பார்க்கும் படி..
பார்வதி மகன் செய்வது ஒன்று புரியாமல் பார்க்க.. தன் முன் ஒரு பெண்ணை அக்னி நிப்பாட்டியதும் யார் என்று பார்த்தார், காலையில் அக்னியின் போனில் இருந்த பெண் போலவே இருக்க..
” டேய் மருமகளா? ” என்றார் மகனிடம்..
“ஆமாம்” என்று அக்னி தலையாட்ட..
“பேரு என்னடா”??..
” அவகிட்டயே கேளு மா “..
“மாயா ஆண்ட்டி “.. என்றதும்.
“வா டா உள்ளே வா டா” என்று மாயாவின் கையை பிடித்தபடியே வீட்டின்னுள்ளே அழைத்து வந்தவர்.. தன்னோடு அவளை சோபாவில் அமர வைத்துக்கொண்டு,..
“அழகா இருக்க மாயா,, உன் பேரு கூட அழகா இருக்கு, ஏன்டா நெத்தியில பொட்டு வைக்கல?”..
“நான் மறந்துட்டேன் ஆண்ட்டி, அப்பா இந்து, அம்மா கிரிஷ்டியன்,, சோ இரண்டு பேரும் அவங்க, அவங்க சாமியை கும்பிடுவாங்க,, அம்மா இந்து கோவிலுக்கு வருவாங்க, அப்பாவும் சர்ச்சுக்கு போவாரு,, நாங்க ரெண்டு
சாமியையும் கும்பிடுவோம், பொட்டு வைக்க மறந்துட்டேன்”..
அக்னி அப்பொழுதுதான் மாயாவின் நெத்தியை பார்த்தான் அவள் நெத்தியில் பொட்டு இல்லை…
” அப்போ எங்க வீட்டுக்கு வந்தா இந்து சாமி கும்பிடுவியா”?..
“அதெல்லாம் நல்லா சாமி கும்பிடுவேன் ஆண்ட்டி”… என்றதும்.
” சமத்து மருமகள்” என்று மாயாவை கொஞ்சியவர்..
” என் பையனை உனக்கு பிடிச்சிருக்கா? உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தானே? “..
” எனக்கு அக்னி சாரை ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்ட்டி கல்யாணத்துக்கு சம்மதம்”
என்று மாயா சொன்னதும் அப்பாட என்று பெருமூஞ்சை விட்டார் பார்வதி..
மகனைப் பார்த்து “உனக்கு ஓகே தான்னேடா கல்யாணத்துக்கு”…
” ம்மா சம்மதம் இல்லாமலையா உன் மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்”..
நீயா பேசியது என்பது போல் மகனை பார்த்தார்.. சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டிக் கொண்டார்..
உலகநாதனின் கார் அக்னியின் வீட்டு வாசலில் வந்து நிற்க…
அக்னியின் வீட்டுக்குள் வந்தார் உலகநாதன்..
“டாடி வந்துருக்காங்க ஆண்ட்டி” என்று மாயா சொன்னதும்..
எழுந்து நின்ற பார்வதி உலக நாதனை பார்த்து “வாங்க வாங்க” என்று வரவேற்க..
“வணக்கம் மா” என்று அவர்கள் அருகில் வந்து அமர்ந்தார் உலகநாதன்..
“அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள..
“மாயா அம்மா வரலையா” என்றார் பார்வதி..
” அவங்க இல்லம்மா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க நான் மட்டும்தான் என் பொண்ணுக்கு” என்றதும்..
பார்வதிக்கு கண்கலங்கியது, தாய்யில்லாத பிள்ளையா மாயா என்று நினைத்து வருந்தியவர், இனி நான் தாய்யை போல அவளுக்கு எல்லாம் செய்வேன் என்று மனதில் நினைத்தவர்..
” சாரி சம்பந்தி தெரியாமல் கேட்டுட்டேன்”..
” பரவால்லம்மா உங்களுக்கு தெரியாம தான கேட்டீங்க”..
அனைவரும் பேசிக்கொண்டு இருக்க மாயா அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவள் அமர்ந்திருக்கும் தோற்றத்தை பார்த்த பார்வதி அவள் தன் தாயை நினைத்து வருந்துவது போல் தெரிய,
” வா மாயா காபி போடலாம்” என்று மாயாவை தன்னோடு கிச்சனுக்கு அழைத்து சென்றவர் ..
அவர்களுக்கு காபி தயார் செய்து அவளிடம் கொடுத்து “அக்னிக்கும், உங்க அப்பாவுக்கு கொடுத்துட்டு வா” என்றதும்..
“சரி ஆண்ட்டி” என்று பார்வதி கொடுத்து விட்ட காபியை எடுத்துக்கொண்டு அக்னியிடம் வந்து முதலில் நீட்ட..
ஒரு புன்னகையோடு அவள் கொடுத்த காபியை எடுத்துக்கொண்டான் அக்னி..
உலகநாதனிடம் காபியை நீட்ட மகளை பார்த்து சிரித்தவர் “கல்யாணம் ஆகமலையே அக்னி வீட்டுக்கு வந்து அப்பாவுக்கு காபி குடுக்குற சரி தான்” என்று மகளிடம் கேலி பேச..
“டாடி” என்று அவரிடம் செல்லம் கொஞ்சினாள்..
பார்வதி “மாயா” என்று கிச்சனில் இருந்து அவளை அழைக்க..
“இதோ வர்ரேன் ஆண்ட்டி” என்று சென்ற மகளை சந்தோஷமாக பார்த்தார்,, அவருக்கு மகள் வாழ்க்கையை எண்ணி கவலை சென்று விட்டது, அக்னியின் வீட்டில் தன் மகள் நன்றாக இருப்பாள், என்ற நம்பிக்கை வந்தது..
மாயா கிச்சன் வந்ததும் அவள் கையில் காப்பியை கொடுத்து “குடிடா” என்றார் காப்பியை..
பார்வதி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டவள் கிச்சனில் உள்ள மேடைகளில் ஏறி அமர்ந்து காபியை பருக…
பார்வதி 10 நிமிடத்தில் இனிப்பும் காரமும் செய்து எடுத்து கொண்டு ஹாலிற்கு வர..
பார்வதியின் பின்னாடியே மாயா வந்து கொண்டிருந்தாள்…
உலகநாதனுக்கு இனிப்பும், காரமும் ஒரு ப்பிளேட்டில் வைத்து பரிமாற,,
” எதுக்குமா நம்ம வீடு தானே ஏன் கஷ்டப்படுறீங்க” என்றார் உலகநாதன்..
“என் சம்பந்தியும், மருமகளும் முதல் முதலாக எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க இனிப்பும், காரமும் நான் கொடுத்தா தானே நல்லா இருக்கும்” என்று மாயாவுக்கும் ஒரு பிளேட்டில் வைத்து கொடுக்க..
அப்பாவும் மகளும் பார்வதி கொடுத்ததை உண்டு விட்டு “நல்லா இருக்கு” என்று பாராட்ட…
பார்வதி விசயத்திற்கு வந்தார்..
” எப்போ கல்யாணம் வச்சுக்கலாம் சம்பந்தி” என்றார் உலக நாதனை
பார்த்து..
” நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுங்க சம்பந்தி” என்றார்..
‘” சரிங்க என் பொண்ணு நிலா சிங்கப்பூர்ல இருக்கா, பையனும் வெளியூர்ல இருக்கான் ரெண்டு பேரும் கூட்டிட்டு முதல்ல நாங்க உங்க வீட்டுக்கு பொண்ணு பாக்க வர்றோம் ,, வர்ற அன்னைக்கு எல்லாம் பேசிக்கலாம்” என்று
பார்வதி கூற..
” சரி சம்பந்தி நாங்க கிளம்புறோம் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க நாங்க வரோம் என்று மாயாவை அழைத்துக் கொண்டு உலகநாதன் கிளம்பினார்..
அவர்கள் கிளம்பியதும் மகனை அணைத்துக் கொண்டார் பார்வதி..
“என்னம்மா” என்று அக்னி கேட்க..
” மனசு ரொம்ப நிறைவா இருக்குடா அக்னி மாயாவை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு,, ஆனா இந்த உலகநாதன் சம்பந்தியை தான் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு அவர் பெயர் கூட எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேடா” என்ற பார்வதியிடம்..
” நம்ம ஊர்ல பாதி பேரு உலகநாதன் தான்,, அது தாம்மா உனக்கு கேட்ட மாதிரி இருக்கு’ என்று கூறி சமாளித்துவிட..
உலகநாதன் யார் என்று தெரிந்தால் பார்வதி என்ன சொல்வாரோ, தாய்யை எப்படி சமாளிக்க என்று யோசித்தான் அக்னி,,
அடுத்த வந்த வார விடுமுறை தினத்தில் அக்னியின் மொத்த குடும்பமும் மாயா வீட்டிற்கு பெண் பார்க்க வந்திருந்தனர்..
error: Content is protected !!