Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 25.1

நதி 25
யமுனாவின் கண்ணீர் முகம் தீனாவை வதைக்க.. சில நொடி, ‘என்ன செய்வது..? அவளை எப்படி அணுகுவது..?’ என தலை முடியை கோதியபடி நின்றுவிட்டவனை, “அத்தே..” என்ற பாலமுரளியின் குரலே மீட்டது.


Advertisement

‘வாணி வந்தாச்சா..?’ என்ற எண்ணத்தோடு வெளியே வந்தவன் கண்டது.. பாலாவை தூக்கி வைத்துக்கொண்டு வாணியையும், சக்தியையும் இன்முகமாக வரவேற்ற யமுனாவையே.
பாலமுரளியின் குரலை கேட்டதும்.. கிச்சன் சிங்க்கிள் முகம் கழுவியிருப்பாள் போல.. முகமெல்லாம் இன்னும் நீர் திவலைகள் நிறைந்திருந்தது.

Advertisement

Advertisement

“என்ன யமுனா முகத்த கழுவிட்டு தொடைக்காம கூட இவன கொஞ்சிட்டு நிக்கறே..?” என சிரிப்போடு வாணி கேட்க,
“ஆசையா வந்த மருமகன கொஞ்சறத விட அது முக்கியமா அண்ணி..” என்றவள் முறையாக அவர்களுக்கு தண்ணீர் தந்து உபசரிக்கவும் தவறவில்லை.

Advertisement

“என்ன மாப்ளே.. இன்னும் கிளம்பலயா..? மழை வர்றதுக்குள்ள போயிட்டு வந்திடோனுமுன்னு இவ பாடா படுத்தினா..” என சக்தி சிரிப்போடு தீனாவிடம் கேட்க,
“இதோ இப்ப கிளம்பனுங்க மாமா..” என்றவன் பார்வை யமுனாவை தான் தழுவியிருந்தது.
அவளோ மும்முரமாக மருமகனின் கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் இவனை கண்டு கொள்ளவே இல்லை.
நேற்றே ஜெயசீலனும், சகுந்தலாவும் கோவிலுக்கு வாணியோடு சேர்ந்து போய் வரும்படி சொல்லியிருக்க..
இப்போது இவர்கள் மட்டுமென்ற நிலையில் யோசித்த தீனா, சக்தியை அழைத்து சொன்ன ஏற்பாட்டின் படி இரு டூவலரில் ஜோடியாக கிளம்பியிருந்தனர்.
யமுனாவோடு தனிமையில் பேசி.. அவளை சரி செய்ய நினைத்து தீனா இதை செய்ய.. ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட மருமகனை துணைக்கு அழைத்துக்கொண்டாள் யமுனா விவரமாக.
“அத்தே கூத நா..” என அவன் சொன்னது தான் தாமதம்.. 
“நீ வாடா செல்லம்..” என தூக்கி இருவருக்கும் இடையில் அமர்த்தியிருந்தாள் சொகுசாய்.
‘வட போச்சே..’ எஃபெக்ட் தான் தீனா முகத்தில்.
அவனின் பாவனையை கண்டு கொண்ட சக்திக்கு தீனா யமுனாவோடு தனியாக வர விரும்புவது புரிந்து மகனிடம் ஆசை காட்டி பேச..
அவனே விட்டு வர நினைத்தாலும் யமுனா விட வேண்டுமே..? 
முடிவில் கடுப்பாக வண்டியை கிளப்பியிருந்தான் தீனா.
அவனை வெறுப்பேற்றவென்றே பாலாவோடு சிரித்து பேசி.. விளையாடி என வந்தவளை கண்ணாடி வழியாக முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்.
சக்தி வாணியிடம், “பாவன்டீ மாப்ளே.. இந்த புள்ள அவனெதுக்கு திட்டம் போடறான்னு புரியாம நம்ம புள்ளைய வச்சு வெளையாண்டுட்டு வாறா..” என கேலியாய் சொல்லி சிரிக்க, 
“ச்சு.. கம்முன்னு இருங்க மாமா.. எனக்கு என்னமோ இதுங்களுக்குள்ள என்னமோ ன்னு தோணுது..” என்றாள். 
“எப்புடி சொல்றே..? எனக்கப்படி எதுவுந்தெரியலையே..?” என்றவனுக்கு,
“ஊட்டுலையே அவனை அவ கண்டுக்கவே இல்லங்க மாமா.. சாப்பாடும் பாலாவ காரணங்காட்டு என்னைய தானே அவனுக்கு போட வச்சா.. அப்புறம் அவங்கேட்கறதுக்கு பாலாவ வச்சே தா பதிலு சொன்னா..” என ஒவ்வொன்றாய் வாணி சொல்ல,
“ஓ..! அப்போ ரெண்டு பேருக்குமெடையில ஊடலோ..? அப்ப…” என்றவன் அடுத்து சொன்ன பாவனையில்,
சக்தியின் முதுகில் செல்லமாய் அடித்தவள், “ச்சு.. சும்மா இருங்க மாமா..” என்றவளின் முகத்தில் அவ்வளவு வெக்கம்.
அவர்களும் இதெல்லாம் கடந்து தானே வந்துள்ளனர். 
அதனை கொண்டு அவர்கள் நினைக்க.. இங்கே இவர்கள் வாழும் லட்சணம் எங்கே அவர்களுக்கு தெரிந்திருந்தது.
“வர்றப்போ பாலாவ எப்படியாவது நம்ம கூப்புட்டுக்கனுமுங்க..” என்ற வாணியின் எண்ணம் புரிந்தது போல நமுட்டு சிரிப்போடு சக்தி தலையசைத்தான்.
ஆனால் இவர்களின் திட்டத்தை தாண்டி.. வேறு ஒரு புது திட்டத்தை மனதில் போட்டுக்கொண்டு தான் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தான் தீனா.
பொங்கல் வைத்து, சிறப்பாக பூஜையை முடித்து.. என நேரம் கடந்து கொண்டிருக்க, சக்தியை தனியே அழைத்து சென்ற தீனா சொன்னதை கேட்டு அப்படி ஒரு சிரிப்பு சக்திக்கு. 
ஆனாலும் அதை அவனுக்கு காட்டாமல் மறைத்தபடி, ‘மாப்ளே.. நீ பொழச்சுக்குவே..’ என மனதோடு நினைத்தவர் அவனின் திட்டத்திற்கு ஒத்துழைக்க தயாரானார். 
மழைக்காற்றின் குளுமையிலும்.. கோவில் போகும் குஷியிலும் நேரமே எழுந்திருந்த பாலா.. லேசாக தூக்கத்திற்குள் செல்வதை கண்டு வாணியிடம் ஜாடை காட்டிய சக்தி, 
“மாப்ளே கிளம்பலாம்..” என அவர்கள் வந்த வண்டிக்கு அருகே செல்ல,
“அண்ணி.. பையன எங்கிட்ட கொடுங்க..” என்ற யமுனாவிடம்,
“அவந்தூக்கத்துல என்னைய தான் தேடுவான் யமுனா, நானே வச்சுக்கறேன்.. நீ தீனாவோட வா..” என்றுவிட்டு அவர்கள் வண்டியில் ஏறியிருந்தார்.
வேறுவழியின்றி தீனாவை ஒட்டியும் ஒட்டாமலும் விலகி அமர்ந்தவளை கண்டு நமுட்டு சிரிப்போடு வண்டியை கிளம்பியவன்.. கொஞ்ச தூரம் சென்றதும் சக்தியிடம் தலையசைத்து விட்டு வண்டியை வேறு பாதைக்கு திருப்பியிருந்தான்.
அதுவரை இயல்பாக இருந்த யமுனா.. ‘என்ன அவங்க அந்த ரூட்ல போறாங்க..! இவரு ஏன் இப்படி போறாரு..?’ என யோசிப்பதற்குள் தீனாவின் கையில் வண்டி பறக்கத்தொடங்க,
பயத்தில் அவசரமாக அவனின் இடையோடு கையிட்டு அணைத்திருந்தாள் தன்னிச்சையாக.
அத்தோடு விடாமல் தார் சாலையிலிருந்து பிரிந்து சென்ற அந்த ஒத்தையடி மண்சாலையில் வண்டியை தீனா அதே வேகத்தோடு செலுத்த, குண்டும் குழியாக இருந்த வழியில் இந்த வேகம் ஆபத்து என்பதை உணர்ந்த யமுனாவோ,
“யோவ் கண்ணழகா.. என்ன.. என்னைய விலவைக்க எதாச்சும் திட்டமா..?” என்றிருந்தாள் வேகமாய்.
“அதெல்லாம் உனக்கு தானே கைவந்த கலை பாப்பா..” என நக்கலாக தீனா சொன்னாலும், அவள் அவனோடு பேசிவிட்ட குதூகலத்தில் வாகனத்தின் வேகத்தை வெகுவாக குறைத்திருந்தான்.
அதை கண்டு அவனின் திட்டம் புரிந்து பின்னிருந்து முறைத்தவளை கண்ணாடி வழியே கண்டு கண் சிமிட்டினான் உல்லாசமாய்.
அதில் ஒரு நொடி மயங்கினாலும்.. தன்னை திட்டியதை மனதில் கொண்டு வந்தவள் உதட்டை கோணிக்காட்டி திரும்பிக்கொள்ள மீண்டும் வேகமெடுத்தது வாகனம்.
“அச்சோ..! என்ன பண்ணறீங்க..?” என யமுனா பதற, 
“ஒழுங்கா எங்கூட பேசிட்டு வந்தா நார்மல் ஸ்பீடுல வண்டி போகும். இல்லையா.. இன்னமும் வேகத்த கூட்டுவேன்..” என மிரட்டும் தோணியில் பேசியவனுக்கு.. இந்த வழித்தடம் எல்லாம் தண்ணீர் பட்ட பாடு திருப்பூர் செல்லும் வரை என்பது தான் யமுனாவிற்கு தெரியாதே..!
‘அவன் மிரட்ட மட்டும் தான் செய்வான்..’ என நினைத்ததற்கு மாறாக இன்னும் வேகத்தை அவன் கூட்ட, 
“அய்யோ.. பேசித்தொலையிறேன்.. வேகத்த குறைங்க. பயமா இருக்கு..” என்ற நொடி அப்படியே வேகத்தை மட்டுப்படுத்தியவன், 
“பயப்படாத பாப்பா.. அப்படியெல்லாம் கன்ட்ரோல் மிஸ் ஆகற அளவு ஓட்டமாட்டேன்..” என்ற போது ஓரீடத்தில் வண்டியை முழுதாய் நிறுத்தியிருந்தான்.
கேள்வியாய் பார்த்தவளை இறங்கச்சொன்னவன், “கொஞ்ச நேரம் இப்படி உட்காரலாம் வா..” என அழைத்து சென்று.. அவன் அமர்ந்திய இடத்தின் இயற்கை எழிலில் மனம் மயங்கி போனது யமுனாவிற்கு.
தென்னை மரத்தோப்புக்கு இடையே வாய்க்கால் வழியாக தண்ணீர் ஓட மழை பெய்து ஓய்ந்த நேரம் என்பதால் இயற்கையான காற்றோடு ஈரப்பதமான காற்று இதமாய் தழுவ அத்தனை குளுமை அங்கே.
அந்த வாய்க்காலுக்கு குறுக்காக பாலம் போன்ற அமைப்பில்.. அவளை அமர்த்தி.. அருகே தானும் அமர்ந்து இருவரின் காலையும் தண்ணீரில் நனையும் படி செய்த போது யமுனாவிற்குள் லேசான பயமிருந்த போதும் அத்தனை இதம்.
அது தந்த நிறைவில் காலை நடந்ததெல்லாம் மறந்து.. தீனாவின் கரத்தோடு தன் கரம் கோர்த்து அவனின் தோளில் சாய்ந்திருந்தாள் தானாகவே.
மெல்லிய புன்னகையோடு அவளின் தலை மீது தானும் தலை சாய்த்து அந்த நொடியே அனுபவிப்பது போல விழி மூடிக்கொண்டான் தீனா.
தண்ணீரில் மூழ்கியிருந்த பாதம் அசைத்து ஆசையாய் நீரில் விளையாடியபடி சாய்ந்திருந்தவளுக்கு,
“சாரி பாப்பா..” என்ற தீனாவின் ஆழ்ந்த குரல் செவியோடு உரசி வர மெல்லிய சிலிர்ப்பு அவளுடலில். 
அது நீரினாலா.. அல்லது அவனின் செய்கையாலா.. அவளாலேயே பிரித்தறிய முடியவில்லை.
அதில் எழுந்த கூச்சத்தோடு, காலை நடந்ததும் நினைவில் எழ.. அவனிடமிருந்து விலக முயன்றவளின் இடையோடு கையிட்டு அணைத்து பிடித்தவனின் கரம் அவளின் வெற்றிடையில் அழுத்தமாய் பதிய, விழி விரித்து அவனை அதிர்ந்து பார்த்தாள் யமுனா.
“சொல்ல வர்றத முழுசா கேளு பாப்பா.. நீ செஞ்ச விசயத்துக்காக மட்டும் எனக்கு கோபம் வரல.. 
உன்னைய இப்படி ஒரு இடத்துல கொண்டு வந்து நிறுத்திட்ட என்மேலேயே கோபம்.. ஒரு இயலாமை தந்த டென்ஷன்..” என்றவனின் வார்த்தையை அவள் கிரகிக்கும் முன்,
“நைட்டும் நீ அவ்வளவு அழுதே.. அதுவே எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா..?
அது போக காலைல நீ செஞ்சதால அவங்க உயிருக்கு எதாவதுன்னா அது வேற. 
அதே அவங்க இனி எப்பவும் படுக்கையிலன்னா.. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? 
வாணி அவ மாமியாரை பார்த்துக்கிட்டத அனுபவமா பார்த்தவன் நான். 
அதுமட்டுமில்ல என்னோட அம்மாவும் அப்பத்தாவ அப்படி ஒரு நிலைமையில வச்சு தான் பார்த்தாங்க.. 
எனக்கு பெருசா அம்மா பார்த்தது தெரியாது தான். ஆனா, வாணி சொல்லி கேட்டிருக்கேன். 
அந்த வீட்டு பொண்ணுங்களுக்கே அது ஒரு சாபமோன்னு ஒரு செக்கண்ட் தோணிடுச்சு.. தப்பு தான். 
ஆனா என் இடத்துல இருந்து யோசி பாப்பா..” என சொல்ல அப்படி நடந்திருந்தால் என்ற பயம் இப்போது முழுதாய் எழுந்தது அவளுள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!