Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

20. கல்பனா செந்தில்குமார்-என் ஜீவன் உன்னை சேருமா

என் ஜீவன் உன்னை சேருமா 7

என்  ஜீவன்  உன்னை  சேருமா

  அத்தியாயம்  – 7



Advertisement

Advertisement

    பார்வதிக்கு மகன் வந்தது மிகவும் சந்தோஷம், எங்கே ஒரு பிடித்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்வானோ என்று எண்ணி வருந்தியவர்க்கு  அவன்  மாயாவோடு   இணைந்து கைகோர்த்து   வந்ததை பார்த்தவருக்கு  பரமதிருப்தி..

Advertisement

 உலகநாதனுக்கு  சொல்ல வேண்டுமா,, அக்னி வந்தது மகளின் முகத்தில் தெரிந்த  சந்தோஷத்தை பார்த்தவர். மனதில் சிரித்துக்  கொண்டார் நான் கேட்டதுக்காகத்தான் தன்  மகளை திருமணம் செய்ய வேண்டா   வெறுப்பாக திருமணம் செய்ய  கோள்ள  ஒத்துக் கொண்டானோ  என்று  அக்னியை   நினைத்திருக்க இன்று அவனின் முகத்திலும் மகள் மேல் உள்ள பாசம்,  காதல் தெரிய அப்பாடா என்று பெருமூச்சு விட்டார் உலகநாதன்… இனி தன் மகள் வாழ்க்கை நன்றாக  இருக்கும் என்று நினைத்துக்கொண்டார்..

Advertisement

 மாயா  கை காண்பித்த இடத்திற்கு அவளை  அழைத்துச் சென்றான் அக்னி,,

மாயா   அக்னியிடம் “எனக்கு முகூர்த்த புடவை  எடுக்க உதவி பண்றீங்களா”? என்றதும்..

“சரி” என்றவன் அவளோடு சேர்ந்து புடவைகளை  பார்க்க,  “ஒரு புடவை தானா மாயா”  என்றான் அவளிடம்..

 “இல்லை அத்தை எனக்கு நலங்கு, ரிசப்ஷன், துணைப்பட்டு என்று சில புடவைகளை எனக்காக எடுத்து செலக்ட் பண்ணி வச்சிட்டாங்க  இப்போ முகூர்த்தப்பட்டு மட்டும்தான் எடுக்கணும்..”

” ஓ” என்றவன் “இப்போ நம்ம கல்யாணத்துக்கு மட்டும் தான் எடுக்கணுமா உனக்கு ஏதாவது விருப்பம் இருக்கா எதாவது  மாடல் இருக்க  சொல்லு அதே மாதிரி பார்க்கலாம்”..

 “அப்படி ஒன்றும் எனக்கு ஐடியா இல்லையே” என்றாள் மாயா..

 அக்னி அங்கு கலைந்திருந்து அனைத்து புடவைகளையும் பார்த்தவன் “புதிதாக என்ன டிசைன் வந்திருக்கு என்று கடைக்காரர்களிடம்” அக்னி கேட்க.

 அவர் சில புடவைகளை  கொண்டு வந்து காட்ட,, அவனுக்கு  எதுவுமே பிடிக்கவில்லை எல்லாம் ஓல்ட் மாடலாக   தெரிய தன் போனை எடுத்தவன் அதில் சிலவற்றை பார்த்துவிட்டு கடைக்காரரிடம் காண்பித்து இந்த மாதிரி சாரீஸ்  எல்லாம் இங்க இருக்கா”  என்றான்..

 “இந்த மாதிரி சாரிஸ் எல்லாம் நீங்க இல்ல சார் உங்களுக்கு வேணுமுன்னா ஸ்பெஷலா நெஞ்சு தருவாங்க, ஓகேன்னா நீங்க சாரிஸ்சை   பார்த்துட்டு ஆர்டர் பண்ணிட்டு போங்க ஒன் வீக்குல உங்க கையில வந்து சேரும்” என்று கடைக்காரர் சொல்ல..

“சரி”என்றவன் ..

 “அம்மா”  என்று பார்வதியை  அழைக்க ” இதோ வர்ரேன்” என்றவர் அனைவருக்கும் உடை எடுத்து  முடித்திருக்கா..

 “நாங்க எல்லாருக்கும் எடுத்துட்டோம்  அக்னி, மாயா நீ எடுத்துட்டியாடா புடவை” என்றார் மருமகளிடம்..

 “இல்லை அத்தை” என்று  அவள் தலையாட்ட…

” அம்மா இந்த கடையில தான் புடவை எடுக்கணுமா வேற எங்கேயும்   புடவை எடுக்க  கூடாதா” என்றான்..

 “அப்படியெல்லாம்  ஒன்னும் இல்ல அக்னி , உனக்கும் மாயாவுக்கும்  ஏதாவது வேற கடை பிடிச்சிருந்தா  நீ மாயா கூட்டிட்டு போய் வாங்கி கொடு,, மாயாவுக்கு பிடிச்சிருந்தா போதும்” என்றார் பார்வதி..

 தன் செல்போனில் இருந்த சில புடவை மாடல்களை பார்வதியிடம்  காண்பிக்க..

 “சூப்பரா   இருக்கு அக்னி, இது  மாதிரியே மாயாவுக்கு  வாங்கி கொடு” என்றார்…

“சரி” என்றவன் “நீங்களும் வாங்க, எல்லாரும் போகலாம்”  என்றான்..

“இல்ல அக்னி தேவ் பையன் வேற அழுகுறான் உடம்பு முடியல, நிலா பொண்ணு  வேற  நச்சு நச்சுன்னு அழுகுறா, நாங்க எல்லாரும் வீட்டுக்கு போறோம் நீ மாயாவுக்கு புடிச்ச மாதிரி எடுத்து கொடு, அப்பறம் இந்த பிள்ளைகள் ரிசப்ஷனுக்கு ஏதோ சோலியாம், இல்ல,  ஏதோ காக்ரா சோலியாம் மிடி மாதிரி இருக்குமுல்ல, அந்த மாதிரி மாயாவுக்கு ஒன்னு எடுத்து குடு, நிலா சொன்னா”. என்றவர் மாயாவின் கன்னத்தை தட்டி விட்டு சென்றார்.

மாயா உலகநாதனை பார்க்க..

“நீ மாப்பிள்ளை கூட போயிட்டு எடுத்து வாடா” என்று அவரும் கிளம்பிவிட்டார்.

   அனைவரும் கிளம்பியது அவர்களை  பார்த்து மாயா சோகமாக நிற்க.

” வா மாயா” என்று அவளை தன்   காரிற்கு அழைத்து சென்றான்…

அவன் வந்ததது  சென்னையில் உள்ள  புகழ்பெற்ற  ப்பிரைடல் சில்க் சாரி கடைக்கு..

 இந்த கடையை பார்த்ததுமே அசந்து போனால் மாயா..

 நிறைய பெண் பொம்மைகளை நிக்க வைத்து.. அந்த பொம்மைகளுக்கு கல்யாணத்தில் அணிவது போல் உடைகளை உடுத்தி, அதற்கு ஏற்றவாறு நகைகளையும்  போட்டு  அழகாக நிற்க  வைத்து இருந்தார்கள்.. அதை பார்த்ததும்  மாயா அசந்து விட்டாள்..

ஒவ்வாறு பொம்மையும்  வித விதமான கல்யாணம் பெண்கள் உடுத்துவது போல்  உடை உடுத்தி இருக்க..

அதில் அக்னி நினைத்தது போல்  ஒரு பொம்மை  ப்பிரின்சஸ் அணிவது போல் டபுள் சாரி  அணிந்து  கொண்டு  நிற்க. அதை காண்பித்தவன்  “இதை போல் டிசைன்  வேணும்” என்று கேட்க..

 அவர்களை மேல்  தளத்திற்கு  அனுப்பி வைத்தார் கடைகாரர்..

 அந்த தளம்  முழுக்க அக்னி கேட்ட மாதிரி  கலெக்ஷனாக  இருக்க…

மாயா  கண்கள் விரிந்தது இப்படி ஒரு கடையா சென்னையில் என்றே பார்த்து இருந்தாள்..

 பல வண்ண நிறத்தில் அழகான புடவைகள் வரிசையாக பொம்மைகளுக்கு  அணிவித்து இருந்தனர்…

 எதை எடுப்பது, எதை வாங்குவது என்றே மாயாவுக்கு தெரியவில்லை  அனைத்துமே அழகாய் இருக்க. அவளுக்கு அனைத்தும்  பிடித்து இருக்க..

அக்னியோ கடைக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தான்..

 அவன்   ஏ. ஐ மூலமாக மாயாவுக்கு  பொருத்தமாக இருக்கும் உடையை அணிந்து பார்க்கலாமா என்று கேட்க..

கடைக்காரர் அதுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தார்..

 கடையே ஒரு அரை மணி நேரம் சுற்றிப் பார்த்தான் அதில் ஒரு ஐந்து மாடல் புடவைகளை  செலக்ட் செய்து..

 மாயாவை  தன்னோடு அழைத்து “இதில்  உனக்கு எது பிடிச்சிருக்கு பாரு மாயா” என்று அவன் கேட்க..

அவள்  ‘எல்லாமே அழகா இருக்கு, நீங்களே எனக்கு செலக்ட் பண்ணி கொடுங்க” என்றாள்..

 அவன் செலக்ட் பண்ண புடவைகளில், அவளுக்கு பிடித்தமான கலர்சை  எடுத்து வரச் சொன்னவன். அதே மாடலை ஏ ஐ மூலம் மாயாவுக்கு அணிவித்து கம்ப்யூட்டரில் பார்த்தான்..

 ஒவ்வொன்றும், ஒவ்வாறு விதமாக மாயாவுக்கு   அழகாய்  இருக்க.. என்ன செய்வது என்று யோசித்தவன் 5 புடவைகளை  எடுத்துக் கொண்டான்..

 மாயாவுக்கு ஆச்சரியமாக இருந்தது  ஏ ஐ   மூலம் புடவை உடுத்தி தன்   உருவத்தை பார்த்தவள் இது நான் தானா?  என்று ஆச்சரியமாக பார்த்தாள்.. தன் பிம்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை அந்த புடவையில்  தேவதை போல் இருந்தவளை அவளே ரசித்து  அப்படியே விழிவிரித்து  பார்த்துக் கொண்டிருந்தாள்..

 அக்னி அந்த 5  புடவைகளையும் வாங்கியது  இவளுக்காக   தெரியவில்லை.. அவளோ தன் பிம்பத்தை கம்ப்யூட்டரில் பார்த்த படியே இருந்தாள்..

அக்னி  மாயாவை  வைத்து எடுத்து வீடியோ,  போட்டோவை  தனக்கு  அனுப்புமாறு கேட்டுக் கொண்டான்…

 அசந்து போய் பார்த்து நின்றவளை “வா மாயா” என்று அவளை  வேறு தளத்திற்கு அழைத்து வந்தான்.

 அங்கே வட இந்திய கலாச்சார  உடைகள் இருக்க, சோலி, காக்ரா சோலி போன்ற பிரம்மாண்டமா ரிசப்ஷன் கலெக்ஷன் அதிகமாக இருக்க.. மாயாவிடம்  சில மாடல் சோழி ட்ரெஸ்சை  அவளை அணிந்து  வரச் சொன்னவன்..

 அதில் அவளுக்கு பொருத்தமாக இருக்கும் சோலியை  செலக்ட் செய்து..

 “இந்த மாடல்ல நான் கேட்ட மெட்டீரியலை வைத்து தைத்து தரணும்” என்று அவன் கேட்க..

“சரி சார்” என்று கடைக்காரர் நிறைய மாடல்ஸ் துணிவகை மெட்டிரியலை  எடுத்துக்காட்ட அக்னிக்கு எந்த ஒரு க்கிளாத்தும் பிடிக்கவில்லை.. “வேற,  வேற”  என்று கேட்க..

 ” இதில் எதுவும் உங்களுக்கு

 புடிக்கலையா சார்” என்றான்…

அக்னி “இல்லை” என்று  கூற..

 “ஒரு நிமிஷம் சார்” என்றவன் உள்ளே சென்று அவன் போனில் உள்ள ஒரு லிங்கை அக்னிக்கு அனுப்ப..

 அக்னி  அந்த  லிங்கை ஓபன் செய்து பார்த்தான் அதில் விதவிதமான காக்கிராச்சோலி, புகைப்படங்கள் இருக்க.. அதை பார்த்தவன் மாயாவை அழைத்து “இதில் உனக்கு எது பிடிச்சிருகான்னு  பாரு மாயா”, என்றான்..

 அனைத்தும் மிக அழகாக இருந்தது    மாயாவுக்கு தேர்வு செய்ய கஷ்டமாக இருக்க.

 அக்னியை  பார்த்தாள்..

 அவன் “நீ  தான்  செலக்ட் பண்ணனும்”  என்று முறைத்து  சிரிக்க..

 அவனின் புஜத்தில்  செல்லமா அடித்தவள் “வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து செலக்ட் பண்ணலாம்” என்று அவனோடு சேர்ந்து அமர்ந்து இருவரும் அவர்களுக்கு பிடித்து  ஒன்றை செலக்ட் பண்ண..

 அந்த உடையை ஏ ஐ  மூலம் மாயாவுக்கு அணிவித்து பார்த்தவன் “வாவ்” என்றிருந்தான்…

 மாயாவுக்கு அவன் தனக்கு  ஒவ்வொன்றையும் செலக்ட் பண்ணி கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி..

 எப்படி இவரால. இப்படி எல்லாம் யோசிக்க முடியுது…  எல்லாமே பெஸ்ட்டா இருக்கனுமுன்னு  நினைக்கிறாரு என்றே  அவனை  பார்த்திருந்தாள்…

 கடைக்காரர் பில்லிங் அமோன்டை அக்னி இடம் சொல்ல அதை  கேட்ட மாயா அதிர்ச்சி  ஆனால்  பல லட்சங்களில் பில் இருக்க,,   “இவ்வளவு  காஸ்லியா எல்லாம்  எனக்கு  உடை வேண்டாம், விலை ரொம்ப அதிகமா இருக்கு, ஒன் டைம் யூஸ் பண்ணுறதுக்கு, இவ்வளவு  விலை இருக்குற உடை  வேண்டாம்”  என்று மாயா கூற..

 அவளின்  கன்னத்தில் தட்டியவன்.. “என் மாயாவுக்கு எல்லாமே கம்மிதான்” என்று  பில் பே பண்ணிவிட்டு வர..

 கடைக்காரர் நீங்கள் எடுத்த  உடைகளுக்கு ஜுவல்  செட் ஏற்பாடு பண்ணி தருவதாக சொல்ல..

 “இல்லை வேண்டாம் நான் வேற இடத்துல ஆர்டர் பண்ணிட்டேன்” என்றான் அக்னி..

 மாயா அவனை பார்த்து “என்ன சொல்றீங்க என்ன ஆர்டர் பண்ணி இருக்கீங்க” என்றாள்..

 அவளை தனியே அழைத்து வந்தவன் “ஆமாம்  மாயா என்  பிரண்டோட  ஒரு வெட்டிங் பங்ஷனுக்கு ராஜஸ்தான் போனேன், அங்கே அந்த கல்யாண பொண்ணு  போட்டு இருந்த ஜுவல் ரொம்ப அழகா இருந்தது அதே மாதிரி உனக்கு வாங்கணுமுன்னு  நினைச்சேன்  சோ ஆர்டர் பண்ணிட்டேன்” என்றான் கூலாக..

 அவள் ஆச்சரியமாக  அவனை பார்க்க..

 “இரு” என்றவன் அவன் போனில்  ஆர்டர் பண்ணி இருந்த நகைகளின்  போட்டோவை மாயா விடம் காட்ட…

 அதை பார்த்து மீண்டும் அதிர்ச்சியானவள் , “பொண்ணு வீட்டுல தானே நகை எல்லாம்  போடுவாங்க நீங்க ஏன் எனக்கு இவ்வளவு செய்றீங்க” என்றாள்..

 “நீ எல்லாரையும் மாதிரி சாதாரண பொண்ணு இல்லையே மாயா,  என்னோட மாயா எண்ணில்  சரிபாதி”  என்றான் காதலாக..

 “போங்க” என்றவள் அவன்  மார்பில் சாய்ந்து கண்கலங்கி நிற்க.

 “போலாமா மாயா எனக்கு நீ தான் ட்ரெஸ்  செலக்ட் பண்ணி  எடுத்து தரணும்” என்றான்…

 “சரி” என்று உற்சாகமானவள். அவனுக்கு பிடித்தவாறே, அவள் உடைக்கு  ஏற்றவாறு அதே கலரில் அவனுக்கு  நிறைய உடைகள்  எடுத்தாள்..

 இருவரும்  கல்யாணத்தை  பேசிக்கொண்டே வர….

 அக்னி உலகநாதன் வீட்டின் முன் காரை நிறுத்தி இருந்தான்..

 அப்போதுதான் மாயா  கவனித்தாள் தன் வீட்டில் முன் அக்னியின்  கார் நிற்பதை..

 அவள் முழிப்பதை பார்த்தவன் மனதில் சிரித்து.. “பாய்  மாயா” என்றான்..

 “உங்களை யார் இவ்வளவு  சீக்கிரம் என்னை  வீட்டுக்கு வந்து விட சொன்னா” என்றாள் கோபமாக..

“மாயா டைம் ஆச்சு உலகநாதன் சார் திட்ட போறாரு கிளம்பு” என்றான்..

 “உங்களை யாரு வர சொன்னா புடவை கடைக்கு” என்றாள் மீண்டும் கோபமாக..

  “ஏய் நீ தானே,  நான் வரலைன்னு ரொம்ப பீல் பண்ணி அழுத,  இப்ப ஏன் வந்தேன்னு கேக்குற”?..

 “போங்க” என்றவள்  காரை விட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருக்க..

 “என்னடா” என்றான்  அவளை தன் மீது   சாய்த்த படியே..

 “அது உங்க கூடவே இருக்கணுமுன்னு  தோணுது” என்றவுடன்..

 அக்னி சத்தம் போட்டு சிரிக்க..

 “சிரிக்காதீங்க நான் கோபமா இருக்கேன்” என்றாள்..

 “சாரி  மாயா  பேபி,,  பேபி கோபம் போக நான் என்ன பண்ணனும்”?….

 “ஒன்னும் பண்ண வேண்டாம் இப்படியே இருங்க” என்றவள்  அவன் மீது சாய்ந்தபடியே இருந்தாள்..

 இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க, சில நிமிடம் கழித்து மாயா காரை விட்டு இறங்கும் நேரம் அவளின் கையை பிடித்து இழுத்து இருந்தவன்….

 அவள் முகம் முழுவதும் அழுத்தமாய்  முத்தம் மழை பொழிய.. கண் மூடியபடி அமைதியாக இருந்தாள். அவன்  நிறுத்தியதும்  முடிந்ததா என்பது போல் கண்ணை  திறந்து பார்க்க..

 அவனோ கள்ளச் சிரிப்போடு மாயாவின் இதழ்லோடு இதழ் இணைய….

 மாயாவுக்கு இவன் என்னவன் என்று  அவனைப்  பற்றுகோல்  போல  பற்றி கொண்டு அவனோடு இணைந்து அவளும் முத்த யுத்தம் செய்ய..

 அக்னிக்கு  இன்னும் வசதியாகி போனது  விடமாட்டேன் உன்னை என்பது போல் அவளின் அமிர்த உமிழ்   நீரை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..

 மாயாவுக்கு ஒரு விதமான  சொல்லமுடியாதபடி  ஒரு  உணர்வு..   அவன் மீது மொத்த பாரத்தையும் செலுத்தி, அவன் மேலே மயங்குவது போல் அவள் சரிய..  அவளுக்கு தன்  இதழில் இருந்து  விடுதலை கொடுத்தவன்..

 தன்னோடு அணைத்து வைத்துக்   கொண்டான்..

 மாயா அவனுக்கு முகம் காட்ட மறுத்தவள், அவனின்  கழுத்தோடு முகத்தை மறைத்து வைத்துக் கொண்டாள்..

 இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருக்க அக்னியின் கைகள் அவள் இடுப்பில் ஊர்வலம் வர..

 ” அக்னி அத்தான் போதும்  எனக்கு மயக்கமா  வருது”  என்று அவனின்  கையை  பிடித்து தள்ளி விட்டாள்..

 அவளில் அத்தான் என்ற சொல்லை  கேட்டவன்..

 “என்ன சொன்ன மாயா மீண்டும் சொல்லு” என்றான்..

 “நான் என்ன சொன்னேன்”?. என்று மறுபடியும் அவள்  யோசிக்க..

 “அத்தான் சொன்ன  அத்தான் சொல்லு”  என்றான்.

 அவள்  மாட்டேன் என்று  தலையை ஆட்ட..

 “ப்ளீஸ் மாயா  இன்னொரு வாட்டி சொல்லுடா”..

 “அப்போ கண்ணை  மூடுங்க “..

” சரி” என்ற  அக்னி கண்ணை மூடிக்கொள்ள..

 கார் கதவை மெல்ல திறந்து வைத்தவள் ,, அவன் காதருகில்  வந்து  “அக்னி அத்தான், அக்னி அத்தான்” என்று இரண்டு முறை  சொல்லி அவன் கன்னத்தை நன்றாக கடித்து  விட்டு ஓடி விட்டாள்..

 “ஏய்  மாயா” என்று  செல்லமாக  அவளை அழைத்து அவனின் கன்னத்தை தடவிக் கொண்டே அவளை பார்க்க,, அவளோ வீட்டின் உள்ளே   ஓடிவிட்டாள்.

 அக்னிக்கு  உடம்பெல்லாம்   புது ரத்தம் பாய்வது  போல் உணர்ந்தவன்.

 மாயாவை நினைத்தபடியே காரைக்  எடுத்துக்  கொண்டு அவன் வீட்டிற்கு  சென்றான்..

 இரண்டு வாரங்கள் எப்படித்தான் சென்றது என்றே தெரியவில்லை..

 நாளை மாயாவும், அக்னிக்கும் சர்ச்சில் வைத்து மோதிரம் மாற்றிக்  கொள்ளும்படி நாள்  வைத்திருக்க அன்றே சாயங்காலம் ரிசப்ஷனுக்கு  ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது

 அக்னியின்  சித்தப்பா குடும்பம் ஊரிலிருந்து  கல்யாணத்திற்கு   வந்திருந்தனர்,,  நல்ல வேலை சித்தப்பா வரவில்லை  அவர் வந்திருந்தால் அன்றே கல்யாணம் இன்று  போயிருக்கும் என்று பெருமூச்சு விட்டான் அக்னி..

 அக்னியின்  குடும்பம் ரெடியாகி முதலில் சர்ச்சுக்கு செல்ல..

 பின்பு மாயா  வருவதாக ஏற்பாடு செய்திருந்தனர்..

 அக்னி குடும்பத்தோடு சர்ச்சுக்கு சென்று இறங்கி இருந்தான்.

 சர்ச்சில் அவனை வரவேற்க நிறைய பேர் இருந்தனர்.. அவனை  பேண்டு வாத்தியத்தோடு கலைஞர்கள் இசை எழுப்பி உள்ளே அழைத்து  சென்றனர்..

 கருநீல கோர்ட்டும்  லைட் கலர் ஷர்ட்டும்  அவனை இன்னும் கம்பீரமாக காட்டியது..

 அக்னி வந்து பத்து  நிமிடத்தில் மாயாவின் கார் சர்ச்சு  வாசலில்  வந்து நின்றது..

 முதலில் உலகநாதன் இறங்கி.  பின்  உள்ள  காரின்  கதவை திறந்து மகளை அழைத்தார்..

 மாயா  வெண்மை நிற லாங் பிராக் அணிந்து முகத்தில் லேசான வெண்மை  நிற  வலை போன்ற  துணியை  தலையில்  போட்டு முகத்தை மறைத்து  கையில் பூங்கொத்தோடு தன் தந்தையின் கைப்பற்றி தேவதை போல் நடந்து வந்தாள்..

 அக்னி தன்னவளையே  பார்த்திருந்தான்,  அத்தனை மகிழ்ச்சி  மாயாவின் முகத்தில்.. உலகநாதனின் முகத்திலும் அத்தனை சந்தோஷம்.. உலகநாதனின்  முகத்தில் சந்தோஷத்தை பார்த்தவன்.

 நாளையிலிருந்து    உன் முகத்திலும்,உன் பொண்ணு மாயா  முகத்திலும் சிரிப்பே  இருக்காது,, உலகநாத.. என்றவனின்   மனம்  ஏரிமலை போல்  கொதித்து கொண்டிருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!