Skip to content
Post Views: 488
” லிஸன் நதிகா.. இப்போ நான் உன்னை கூட்டிட்டு சுத்தி காட்டினது என்னை பத்தின எல்லா உண்மைகளையும் நீ தெரிஞ்சுக்க தான்..
பார்த்தியா?? இந்த ஆம்புலன்ஸ் தான் என் வீடு.. இரவு பகல் பார்க்காம என் வேலை.. கிடைச்ச இடத்தில் உணவு.. இப்படி ஒருத்தன் கூட வாழ எந்த பொண்ணும் விரும்ப மாட்டா… அண்ட் ஒன் மோர் திங்க்.. ஐ லவ் திஸ் ஜாப்.. யாருக்காகவும் என்னால இந்த வேலையை விட முடியாது…” என திடமாய் கூறி தன் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்து, சற்று முன் தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் கோபமாய் கூறிக் கொண்டிருந்தான் வெற்றிச் செல்வன்…
அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டே தன் சுடிதார் துப்பட்டா முனையை கையில் பிடித்து சுற்றி கண்களில் கண்ணீர் வடிய நின்று கொண்டிருந்தாள் நதிகா ஶ்ரீ…
காலை தரையில் உதைத்து நிமிர்ந்த வெற்றி, “ப்ச்.. அழுகாத நதி.. பொறுமையா சொல்லுறேன்.. நல்லா கேட்டுக்கோ… என்ன மாதிரி ஆள் கூட எல்லாம் நீ மட்டும் இல்ல எந்த பெண்ணாலும் நிம்மதியா வாழ முடியாது….
Advertisement
உன்னை அந்த மனித மிருகங்கள் கிட்ட இருந்து காப்பாற்றி கூட்டிட்டு வரத்தான் அப்படி ஒரு பொய் சொன்னேன்… உன் கழுத்தில் தாலியும் கட்டினேன்.. இப்போ சொல்லுறேன்… நீ என் கூட வா.. நானே உன்னை நல்ல ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறேன்.. யாருன்னே தெரியாத உன் அம்மாவுக்கு இறுதியா நான் செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காக இதை செய்யுறேன்…” என அத்தனை கோபத்திலும் கனிவாய் கண்ணியமாய் தன் கண்களை பார்த்து கூறுவதிலேயே அவனின் உயர்ந்த குணத்தை உணர்ந்து கொண்டாள் மாது…
இருந்தும் என்ன பலன்?? அவன் தான் விடாப்பிடியாய் விரட்டுகிறானே??
” இ… இல்லங்க.. மா..” என பேச தயங்கி நின்றவள், தீர்க்கமான ஒரு முடிவோடு,
Advertisement
” தா… தாலி கட்டின உங்க கூடத்தான் வாழணும்னு வி.. விரும்புறேன்… என்னை முழுசா நம்பி பாதுகாப்பு கொடுத்த ஒரே ஆண்மகன் நீங்க தான்.. உ.. உங்க வேலையை விட சொல்ல மாட்டேன்.. நான்.. நானே கூட வேலைக்கு போய் பணம் சம்பாரிச்சி படிச்சுக்கிறேன்.. ஆனா பிளீஸ்.. உங்க கூடவே இருந்துக்கிறேனே பிளீஸ்…” என கண்களாலும் தன் வார்த்தைகளாலும் கெஞ்சிக் கொண்டிருந்தாள் இருபத்தி ஒரு வயதான இளம் பெண் நதிகா…
Advertisement
இடுப்பில் கையை ஊன்றி அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த வெற்றி,
” ஆனா என்னால எப்போதும் உனக்கு துணையா மட்டும் இருக்க முடியாது.. இன்னும் சொல்ல போனா, இரவு பகல் பார்க்காம நான் வேலை பார்க்கணும்.. அது ஏன் உனக்கு புரியல பொண்ணே?? நீ எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு இப்படி எதுவும் என் கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது…” என கோபமாய் கூறியவன், தன் மனைவியாகி தன்னிடம் அகதியாய் வந்து நிற்பவளை கண்டு மனதுக்குள் துடித்துப் போனான்..
ஆம்.. ஆணவன் வாழ்க்கை எப்படியோ தடம் புரண்டு இப்படி ஒரு இடத்தில் அவனை நிற்க வைத்திருக்க,
Advertisement
பெண்ணவளோ தன் தாயின் உயிருக்காக தன்னோடு போராடி, இரவும் பகலுமாக தனக்கு துணையாய் நின்று, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தன் துயரில் பங்கு கொண்டு, தன்னை தன் தாயின் இழப்பில் இருந்து தேற்றிய தூயவன்..
கலங்கமென ஊரார் தன்னை பற்றி பேசிய பேச்சுக்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு நம்பிக்கையாய் தன் கரம் பற்றியவனோடு சேர்ந்து வாழ முடியாமல் நிற்கதியாய் நிற்பதை எண்ணி துவண்டு போனாள்….
தாயும் மகளுமாக தனித்து வாழ்கையில் அவள் கண்ட ஆண்கள் பலர் கண்ணியம் தவறி தவறான கண்ணோட்டத்தில் அவளை அணுகி இருக்க,
வெற்றியோ அவளிடம் கருணையாக மட்டுமின்றி தோழனாகவும் பழகினான்..
பழகிய ஒரே நாளில் அவளை பற்றி புரிந்து கொண்டு யாருமற்ற அவளுக்கா இதோ இப்போது வரை துணை நிற்கிறான் அவள் மனதின் நாயகன்…
நீண்ட பெரு மூச்சு விட்ட வெற்றி, ” இங்க பாரு பாப்பா.. இதுக்கு மேல என்னால பொறுமையா சொல்ல முடியாது.. நீ வாழ வேண்டிய பொண்ணு.. நான் வாழ்க்கை மேல எந்த நம்பிக்கையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாழும் ஒரு ஜடம்… உன் உணர்வுகளை புரிஞ்சுக்காம நான் உன்னை நிந்திக்க கூட செய்வேன்.. தனிமரமா வாழ்ந்து பழகிய எனக்கு இந்த ஆசா பாசமெல்லாம் தெரியாது…
நீ வா.. எனக்கு தெரிஞ்ச நம்பிக்கையான ஒரு விடுதியில் உன்னை சேர்த்து விடறேன்..” என பல்லை கடித்துக் கொண்டு கூற,
அவளோ தலை குனிந்து கொண்டே,
” இல்ல.. உங்க வாழ்க்கையில் நானும் ஒரு துணையா உங்க கூட வாழனும்.. என் அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்துக்காக இல்ல.. ஏனோ உங்களோட அருகாமை எனக்கு பாதுகாப்பையும் மனநிம்மதியையும் கொடுக்குது.. இதுவரைக்கும் யார் கிட்டயும் கிடைக்காத ஒரு அரவணைப்பு உங்களோட தோழமையான பேச்சில் கிடைச்சது…
அப்புறம் அம்மாவோட ஆசையும் கூட நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறது தான்.. புரிஞ்சிக்கோங்க… பிளீஸ்…” என கெஞ்சிக் கொண்டு நின்றாள்…
எழுந்து நின்று அவள் பேச்சில் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றவன், தன் கழுத்தை வளைத்து நீவி, ” இப்போ என்ன உன் கூட வாழணும் அவ்வளவு தானே?? என கோபமாய் கேட்டு கண்களை மூடி திறந்தவன், தெளிவான ஒரு முடிவோடு,
” சரி உன் வழிக்கே வரேன்.. நல்லா கேட்டுக்கோ… எனக்குன்னு தனியா வீடு இல்ல.. வா உன் வீடு இருக்கும் ஏரியாவிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம்… அங்க நான் எல்லா நேரமும் உன் கூட இருக்க மாட்டேன்.. அங்க நீ தான் உன்னை சுத்தி இருக்க மிருகங்கள் கிட்ட இருந்து உன்ன பாதுகாத்துக்கணும்..
நான் வருவேன்.. பணம் கொடுப்பேன்… ரொம்ப சொற்பமான பணம் தான் என் வருமானம்.. அதில் தான் நீ குடும்பம் நடத்தனும்… இது தான் நான் உனக்கு கொடுக்கும் சோதனை…
அதை நீ செஞ்சுட்டா என் கூட காலம் முழுக்க சேர்ந்து வாழலாம்… இல்லன்னா நான் சொன்னது போல ஒரே மாசத்தில் உன்னை விவாகரத்து செஞ்சிட்டு, உன்னை அந்த மகளிர் விடுதியில் தங்க வச்சு தான் படிக்க வைப்பேன்.. என் கண்டிஷன் உனக்கு ஓகே அப்படின்னா வா போகலாம்…” என கையை நீட்டி அவளை கேள்வியாக புருவம் உயர்த்திப் பார்க்க,
அவளோ தனக்காக துணையாய் நின்ற தன் கணவனின் தனிமையை போக்கி அவனுக்கு வாழ்க்கை முழுக்க இன்பத்தை கொடுக்கவே துணிந்து அவன் கைகளில் தன் கைகளை கொடுத்தாள்..
” ஒரு நாள் பழகிய ஒருவனோடு திருமணம் எனும் பந்தத்தில் கரம் பிடித்த உடன் காதலா??” என அவள் மனசாட்சியே அவளை கேலி செய்ய,
” இது காதல் தானா என தெரியவில்லை… ஆனால் ஏதோ ஓர் உள்ளுணர்வு.. தன் மீது நம்பிக்கை கொண்டு பல மிருகங்களிடம் இருந்து காத்த அவன் வாழ்க்கையில் தன்னாலான மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும் ஆழமான உள்ளுணர்வு…
தன் கணவனாகியவனின் இன்ப துன்பத்தில் சரி பாதியாக தானிருக்க வேண்டும் எனும் எண்ணமும் தான்…” என பதில் அளித்தவள் அறியவில்லை,
காதலின் மையப்புள்ளியே தன் துணைக்கு உறுதுணையாய் இறுதி வரை இருந்து இன்பத்தை கொடுக்க வேண்டும் எனும் உள்ளுணர்வே என…
“ஹேய்… என்ன யோசனை?? பிடிக்கலனா இப்போவே கூட சொல்லிடு.. நான் உன்னை ஹாஸ்டல் கூட்டிட்டு போறேன்..” என சொடக்கிட்டு அவளை நிகழ்விற்கு கொண்டு வர,
” இ.. இல்ல.. இல்ல.. நான்.. நான் உங்க கூடவே வரேன்.. ஹான்… போ… போகலாம்..” என கூறி அவன் விரல்களை இறுக்கி கோர்த்துக் கொண்டாள்..
அவள் விரல்களை பார்த்து ஏளன புன்னகை சிந்தியவன், ” பார்க்கலாம் எத்தனை நாளைக்குன்னு??” என ஏளனமாக கூறி அவளை அழைத்துக் கொண்டு தன் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்தான்..
சில நிமிட பயணத்தில் இருவரும் நதிகாவின் வீட்டை அடைய,
நேற்று காலை முதல் நடந்த அனைத்தும் அவள் நினைவில் வந்து போக, கண்களில் கண்ணீருடன் தூரத்தில் தெரிந்த தன் அம்மா வீட்டை திரும்பி பார்த்தவள்,
” அம்மா.. உங்க தேர்வு எப்பவும் சரியா தான் இருக்கும்னு நம்புறேன்.. உங்க ஆசைப்படி கண்டிப்பா அவரோட சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ்வேன்… அவரோட வாழ்க்கையிலும் சந்தோஷத்தை கொடுப்பேன்…” என மனதோடு சபதம் எடுத்துக் கொண்டு அவனருகே நின்றாள்…
அவனோ அவளின் கலங்கிய முகத்தை கண்டு, ” எல்லா வலிகளையும் ஒரு சின்ன பொண்ணு உன்னால தாங்கிக்க முடியாது நதிகா.. இப்பவும் சொல்லுறேன் வா ஹாஸ்டல் போலாம்…” என மீண்டும் ஒருமுறை கூற,
தன் பார்வையை மாற்றி கண்களில் வழிந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்,
” அம்மா சொன்னது போல இரும்பு மனுஷன் தான் இவரு… ஹும்.. எப்படி இவர் வச்ச சோதனையை எல்லாம் தாண்டி வருவேன் தெரியல… அதனால நீ தான் அம்மா எனக்கு துணையா இருக்கணும்.. ” என வேண்டிக் கொண்டவள் அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அமைதியாய் நின்றாள்…
சுற்றி எங்கும் கண்களை சுழல விட்டவன் கண்களில் தென்பட்டது அந்த
” வீடு வாடகைக்கு” எனும் விளம்பர பலகை…
அந்த வீட்டின் முன் அவளையும் அழைத்துக் கொண்டு சென்றவன், வீட்டின் உரிமையாளரை அழைக்க,
உள்ளிருந்து வந்த வயதான பெண்மணி அவரோ, ” வீடு உங்களுக்கு இல்…” என கூற வரும் முன் அவன் கையில் இருந்த கத்தையான பணத்தை கண்டு வாயை மூடிக் கொண்டு, ” இதோ பாருப்பா… உனக்காக தான் வீடு கொடுக்கிறேன்.. தண்ணி வரி, கரண்ட் பில், வாடகை எல்லாம் மாசா மாசம் சரியா மூணாம் தேதி கைக்கு வந்திடனும்… உன்னை தவிர வேற யாரும் இவளை தேடி இந்த வர கூடாது.. குறிப்பா ஆம்பளைங்க யாரும் வரவே கூடாது…” என கூறிக் கொண்டிருக்க,
வெற்றி அவரின் கடைசி வரியில் முகத்தில் இறுக்கத்தை கூட்டி, அவர் கையில் பத்தாயிரம் ரூபாயை திணித்தவன்,
” என் பொண்டாட்டியை பத்தி பேசும் போது பார்த்து பேசணும்… உங்க கண்டிஷன் எல்லாம் ஓகே தான்.. இப்போவே குடி வரோம்.. அண்ட் இவ கிட்ட நான் இல்லாத நேரம் தப்பா பேசினா அப்புறம் நடக்க போற விபரீதங்களுக்கு நான் பொறுப்பு இல்ல…” என பேச்சோடு பேச்சாக மிரட்டலையும் விடுத்து அங்கிருந்த தனி வீட்டிற்குள் நுழைந்தான் வெற்றி செல்வன்…
அவன் வார்த்தைகளில் நெஞ்சுருகி போனவள், அவன் கைகளை பிடித்துக் கொண்டு நிமிர்வாய் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே தன் புதுமண வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைத்தாள் நதிகா ஶ்ரீ….
இருவரும் இரு வேறு மனநிலையில் தங்களின் உறுதியான முடிவோடு புது வீட்டில் காலெடுத்து வைத்திருந்தனர்…
வெற்றியின் எண்ணம் வெல்லுமா?? நதிகாவின் காதல் வெல்லுமா??
❤️🔥 தொடரும்… ❤️🔥
தொடர்ந்து கதையை படித்து உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் தோழமைகளே!!!….
error: Content is protected !!