Skip to content
Post Views: 295
மழை விடுவதாக இல்லை இனி பொறுத்திருந்து லாபம் இல்லை என நினைத்த கண்மணியோ மழையும் பாராமல் இறங்கி நடந்தாள், அதைக்கண்ட குணாவோ தானாக தனது வண்டியில் ஏறிக் கொண்டு அவள் செல்லும் பாதையில் மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தான், அவளோ அவன் வருகிறான் என தெரிந்ததும் அச்சப்பட்டாள்
வழியில் கையேந்திபவன் வரவும் அவளுக்கு பசி உணர்வு அதிகமாக தானாக அவளின் நடை நின்றது, அவளின் பேச்சை கூட கால்கள் கேட்க தவறியது, அதில் அவளோ அந்த கடையில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என கேட்டு வாங்கிக் கொண்டாள், ஓரிடமாக மழையில் படாமல் நின்றபடி சாப்பிடலாம் என ஆரம்பிக்கையில் குணாவும் அங்கே வருவதைக்கண்டு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பார்த்தாள், அவனும் சாப்பிடவே வந்தான், ஆனால் பணம் இல்லை. அதனால் சாப்பாட்டையே ஏக்கமாக பார்க்க கடைக்காரனோ
”என்ன தம்பி ஏதாவது வேணுமா சொல்லு”
”இல்லை வேணாம்“
Advertisement
”சாப்பிட வந்துட்டு சாப்பிடாம போனா எப்படி சாப்பிடு வா இரண்டு இட்லி தரேன்”
”இல்லை என்கிட்ட பணம் இல்லை” என தயக்கமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டான், அவன் சென்றதும் அவளுக்கு கஷ்டமாகிப் போனது, அவளுக்கும் பசி, ஆனால் சாப்பிட தோன்றவில்லை, சரி ஹாஸ்டலில் சென்று சாப்பிடலாம் என நினைத்து தனது சாப்பாட்டை பார்சலாக்கி எடுத்துக் கொண்டு வீதியில் நடக்கும் போது கவனித்தாள்
தூரத்தில் மழைக்கு ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றான் குணா, அவனைக்கண்டதும் என்ன நினைத்தாளே சட்டென ஓடிச் சென்று கையேந்தி பவனில் ஒரு டிபன் வாங்கி அதை பார்சலாக்கி அதை எடுத்துக் கொண்டு மழையில் நடையும் ஓட்டமுமாக வந்தாள், அதை எதேச்சையாக கண்ட குணாவோ
Advertisement
”இவள் ஏன் இப்படி ஓடிவர்றா, இந்த மழையில எப்படி நனையறாள்ன்னு பாரு, காய்ச்சல் வந்தா என்னாகிறது, மழையில நனையாதேன்னு சொல்லலாமா வேணாமா” என அவன் நினைப்பதற்குள் அவளோ அங்கிருந்த அவனின் வண்டியின் மீது தான் கொண்டு வந்த பார்சலை ஒரு நொடியில் வைத்துவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள், அவள் சென்றதும் அவன் அவசர அவசரமாக என்ன அது என பார்க்கலானான், உள்ளே டிபன் இருக்கவே அதிர்ந்தான், பசியின் காரணமாக கடகடவென சாப்பிட்டான், புது தெம்பு கிடைக்கவே மழையை பாராமல் தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்றான்
Advertisement
இருவரும் மழையில் நனைந்திருக்க இருவருக்குமே சளி பிடித்துக் கொண்டு தும்மல், இருமல், காய்ச்சல் என இரவில் உறக்கம் வராமல் தவித்தே போனார்கள்.
மறுநாள் காலையில் இருவருக்குமே பயங்கர காய்ச்சல் எடுக்க விசாரித்துக் கொண்டே ஜிஎச்சுக்கு சென்றார்கள், அங்கு இருவரும் எதேச்சையாக பார்த்துக் கொண்டாலும் காய்ச்சலால் இருவருமே துவண்டிருக்க மருத்துவரை காண்பதுதான் முதல் வேலை என நினைத்து மருத்துவரின் வருகைக்காக வரிசையில் காத்திருந்தார்கள்.
ஆண்கள் வரிசையில் குணாவும் பெண்கள் வரிசையில் கண்மணியும் நின்றிருந்தாள், குணாவும் இருமினான், கண்மணியோ தும்மினாள், அவன் இப்போது தும்மினான், இவள் இப்போது இருமினாள், இருவரும் காய்ச்சலுடன் இருப்பது பார்த்தாலே தெரிந்தது
Advertisement
அவளோ ஓரவிழியில் அவனை பார்த்தபடிதான் இருந்தாள், அவனும் எதேச்சையாக பார்ப்பது போல அவனும் அவளை பார்த்தபடிதான் இருந்தான், மருத்துவரும் ஒவ்வொருவரையும் பார்த்து மருந்து மாத்திரை தந்தபடி இருந்தார், முதலில் அவளின் தருணம் வந்தது, மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு மருந்து மாத்திரையுடன் வெளியே வந்தாள்
அடுத்து குணா சென்றான், அவன் வரும் வரை இவள் காத்திருந்தாள், அவனும் மருந்து மாத்திரையுடன் வந்தவன் அங்கு கண்மணி இருக்கவே பார்த்தான், அவளோ அவன் வந்ததைக்கண்டதும் ஹாஸ்டல் நோக்கி நடக்கலானாள், அவனும் தனது லாட்ஜ் நோக்கி பைக்கில் விரைந்தான்.
காய்ச்சலை வைத்துக் கொண்டு இருவராலும் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை தோன்றவும் ஒன்றாக விடுமுறை எடுத்துக் கொண்டார்கள், கல்லூரிக்கு வந்த கமலியும் கவினும் குணாவும் கண்மணியும் இல்லாமல் போனதைக்கண்டு அதிர்ந்தார்கள்
”என்னது இரண்டு பேருமே வரலையா“
”அதானே என்னாச்சி இவங்களுக்கு“
”தெரியலையே“
”வா வா போலாம்”
”எங்க”
”அவங்களை தேடி போகலாம்”
“எதுக்கு?“
”ஏன் அவங்க வரலைன்னு தெரிஞ்சிக்கலாம் கிளம்பு”
”ஏய் பெல் அடிச்சிடுச்சி“
”அடிச்சாலும் பரவாயில்லை வா” என கவினை கையோடு இழுத்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறிய கமலியோ
”கவின் நீ குணாவுக்கு என்னாச்சின்னு போய் பாரு போ” என சொல்லிவிட்டு அவள் கண்மணிக்கு என்ன ஆனது என காண விரைந்தாள்.
கவினோ குணா தங்கியிருக்கும் லாட்ஜில் வந்து அங்கிருந்த மேனேஜரிடம் விசாரித்தான், குணாவிற்கு காய்ச்சல் என தெரிந்துக் கொண்டதும் நேராக கல்லூரிக்கே வந்துப் பார்த்தான், அங்கு கமலி இருந்தாள் அவளிடம் வந்தவன்
”ஏய் கமலி வந்துட்டியா கண்மணிக்கு என்னாச்சி அவளை பார்த்தியா”
”பார்க்கலை ஆனா விசாரிச்சேன் அவளுக்கு காய்ச்சலாம் அதான் லீவு“
”ஓஹோ அங்க குணாவுக்கும் காய்ச்சலாம் படுத்திருக்கான்”
”என்ன இரண்டு பேருக்கும் சொல்லி வைச்ச மாதிரி காய்ச்சல் அடிக்குது“
”இங்க பாரு க்ளாஸ்ல நிறைய பேருக்கு உடம்பு சரியில்லை அவங்க மட்டும் லீவு கிடையாது நேத்து யாரெல்லாம் மழையில நனைஞ்சாங்களோ அவங்களும் லீவு எடுத்திருக்காங்க”
”ஆமாம் சரிதான் சரி சரி பரவாயில்லை ஆமா விழாவுக்காகவே வகுப்புகள் எடுக்கலையாம்”
”அப்படியா”
”ஆமாம் எல்லாரும் ரிகர்சல் பண்ண போயிட்டாங்க நாமளும் ரிகர்ஸல் பண்ணலாமா“
”ஓ எஸ் வா வா” என அவளை அழைத்துக் கொண்டு ஆடிட்டோரியம் சென்றான், அங்கு இவர்களைப் போலவே மற்றவர்களும் ரிகர்ஸலில் இருக்க இவர்களும் டான்ஸ் ரிகர்ஸல் செய்யலானார்கள்.
அந்த நாள் கல்லூரியே ரிகர்ஸலில் மூழ்கிகிடக்க மாலை நேரத்திற்குள் குணாவிற்கும் கண்மணிக்கும் காய்ச்சல் குணமாகிவிட அவர்கள் வேலைக்குச் சென்றார்கள்.
குணாவோ தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்தான், எதிரே இருந்த சூப்பர்மார்க்கெட் அவனது கவனத்தை இழுத்தது, வேலை செய்ய மனம் போகவில்லை, கால்கள் நகராமல் தடுக்கவே வேறுவழியின்றி அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தான், பொருட்களை வேடிக்கை பார்ப்பது போல கண்மணியை தேடினான், அவளோ பில் கவுன்டரில் பிசியாக இருந்தாள், அவள் செய்யும் வேலையை பார்த்துவிட்டு நகர்ந்தான், அதில் அவளுக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு தோண்றி சட்டென நிமிர்ந்து கடந்து செல்லும் குணாவை பார்த்துவிட்டாள்
அவளுக்கு ஒரே குழப்பம், அவன் சென்ற பின்பு திடீரென கரண்ட் கட் ஆகவும் அவளால் பில் போட இயலவில்லை, ஆனாலும் கையால் கணக்கு போட்டாள், அதில் வந்திருந்தவர்கள் வரை பில் போட்டு முடித்து பார்த்தாள், யாருமில்லை, அதனால் கரண்ட் வரட்டும் என வெளியே சென்று நின்றாள், எதிரே இருந்த கட்டிடத்தின் முன் குணாவின் பைக் இருந்தது, அதன் நெம்பரை பார்த்து வைத்துக் கொண்டாள், அதேநேரம் அவனும் கரண்ட் கட்டானதால் வெளியே வந்து நின்றான் குணா, இருவரும் எதிர் எதிர் கட்டிடத்தில் நின்றபடியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்
அந்நேரம் கரண்ட் சட்டென வந்ததும்தான் தெரிந்தது ஒருவரை ஒருவர் இன்முகத்துடன் பார்த்தது, இருவரின் இதழ்களில் புன்னகை தவழ்ந்திருந்தது, அதை மின்சார வெளிச்சம் காட்டிக் கொடுக்க இருவருக்குமே வெட்கம் வந்து சட்டென உள்ளே சென்றுவிட்டார்கள்.
குணாவுக்கோ தன்னை நினைத்தே வெட்கம் வந்தது அன்று அவன் எடுத்த பாடம் அவ்வளவு அருமையாக இருந்தது என அனைத்து மாணவர்களும் பாராட்ட, அதற்கு காரணம் அனைத்தும் கண்மணிதான் என அவன் நினைத்த அடுத்த நொடி அவளின் நினைவு வர அவசர அவசரமாக பில்டிங் விட்டு இறங்கி வந்து எதிரே சூப்பர் மார்க்கெட்டை நோட்டம் விட்டான்.
கண்மணிக்கும் அன்றைய நாள் மகிழ்ச்சியாகவே இருந்தது, இத்தனைக்கும் நிறைய பேர் வந்திருந்தார்கள், சலிப்பே இல்லாமல் இன்முகத்துடன் அவள் அவர்களுக்கு பில் போட்டுக் கொடுப்பதைக்கண்ட முதலாளியே அவளை மெச்சிக் கொள்ள அந்த பாராட்டை நினைத்தபடியே ஹாஸ்டலுக்கு செல்ல கடையை விட்டு வெளியே வந்தவளின் கண்கள் தானாக எதிரே பார்க்க அங்கு குணா இருக்கவும் தன்னால் வெட்கம் வந்து சட்டென தலையை தாழ்த்திக் கொண்டு ஹாஸ்டல் நோக்கி நடக்கலானாள்.
அவள் செல்வதைக்கண்டு குணாவும் மென்மையாக புன்னகைத்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு அவள் செல்லும் பாதையில் மெதுவாக வண்டியை ஓட்ட அவளுக்கு அது தெரிந்துப் போனது, ஆனாலும் திரும்பி பாராமலே நடந்தாள், அவனும் அவளை பின்தொடர்வதை நிறுத்தவில்லை, அவளின் ஹாஸ்டல் வரை வந்துவிட்டு அவள் பத்திரமாக உள்ளே சென்ற பின்புதான் நிம்மதியடைந்து தன் வழி பார்த்துச் சென்றான், அவன் சென்றதைக்கண்ட கண்மணிக்கு கோபமே வரவில்லை
”ரொம்ப அக்கறைதான்” என சொல்லிக் கொண்டே தனது அறைக்குச் சென்று ஓய்வெடுத்தாள்
மறுநாள் கல்லூரியில் புது பிரச்சனை, பாட்டு பாட பெயர் கொடுத்தவர்கள் காய்ச்சல் வந்து விடுமுறை எடுத்துக் கொள்ள அந்த இடம் காலியாக இருக்கவே வாத்தியார்களுக்கு தலைவலியே வந்தது, எப்படியாவது பிரச்சனையை சரிகட்ட வேண்டும் என நினைத்து யாரை பாட வைக்கலாம் என பார்க்கையில் அவர்களுக்கு குணா, கண்மணியின் நினைவுதான் வந்தது, அவர்களை தேடிச் சென்றார்கள்.
குணாவும் கண்மணியும் மட்டும்தான் வகுப்பில் இருந்தார்கள், மற்றவர்கள் எல்லாம் ரிகர்ஸல் செய்ய ஆடிட்டோரியம் சென்றுவிட அந்த இருவருக்கு மட்டும் என்ன பாடம் எடுப்பது என நினைத்து வாத்தியார்களும் வராமல் போக அவர்கள் இருவரும் தங்களின் இருப்பிடத்திலேயே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள், அதை கவினும் கமலியும் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க அவ்விடம் வந்த வாத்தியார் ஒருவர்
”ரிகர்ஸல் பண்ணாம இங்க என்ன வேடிக்கை“
”எல்லாம் வீட்லயே முடிச்சாச்சி சார் சும்மா போர் அடிக்குதுன்னு இப்படி வந்தோம்”
”போங்க க்ளாஸ்க்கு போங்க” என சத்தம் போட்டுவிட்டு அவர் சென்றுவிட கவினோ நொந்துக் கொண்டே கமலியிடம்
”கமலி இவங்களுக்குள்ள ஒரு ரியாக்ஷனும் தெரியலையே, அவங்களை பாரு ஏதோ நாளைக்கே பரிட்சைங்கற மாதிரி விழுந்து விழுந்து படிக்கறாங்க, இவங்களுக்குள்ள கோபமும் வெறுப்பும் வந்த மாதிரி தெரியலையே, இதுவரைக்கும் எத்தனை கடிதங்களை தந்தோம், முதல் முறைக்கே கோபம் வந்து பொங்கி எழுவாங்கன்னு பார்த்தா அமைதியாவே இருக்காங்க, க்ளாஸ்ல யாரும் இல்லை நல்ல வாய்ப்பு, தாராளமா ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கலாமே ஏன் செய்யலை, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு தலையே வலிக்குது“
“ப்ச் அதெல்லாம் இல்லை, முதல் கடிதம் வைச்சப்ப அவங்க அதை படிக்காம தூக்கி எறிஞ்ச மாதிரியே எல்லா கடிதத்தையும் தூக்கி எறிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன், ஒருவேளை அதை படிச்சிருந்தா நிச்சயம் அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கனுமே”
”இந்த கடிதம் கொடுக்கறதை நிப்பாட்டிக்கலாம் அதனால ஒரு பலனும் இல்லை”
”அப்போ கிப்ட் தரலாம்”
”என்னது கிப்டா
”ஆமாம் கடிதத்தை படிக்கலைன்னா என்ன கிப்டை பார்ப்பாங்கள்ல அதை பார்த்து அவங்களுக்கு கோபம் வரும்ல“
”அதுசரி இப்ப கிப்ட்டுக்கு எங்க போறது”
”எங்கயும் போக வேணாம், நான் வாங்கிட்டு வந்துட்டேன் இதோ பாரு” என சொல்லி அவள் வாங்கி வந்த இரண்டு பொம்மைகளை காட்டினாள்
ஒன்று சின்ன பையன் ரோஜாபூ வைத்து காதலியின் முன் மண்டியிட்டு கெஞ்சுவது போன்று இருந்தது, இன்னொன்று பெண் பொம்மை தனது காதலனிடம் ஹார்ட்டின் வடிவ தலையனையை தருவது போன்று இருந்தது இரண்டையும் வாங்கிப் பார்த்த கவினுக்கு மிகவும் பிடித்திருந்தது
”வாவ் இந்த பொம்மைங்க ரொம்ப அழகா க்யூட்டா இருக்கு” என்றான் கவின் அதற்கு கமலியும்
”சூப்பராயிருக்குல்ல அதனாலதான் வாங்கினேன்“
”பரவாயில்லையெ உனக்கும் ரசனையிருக்கே”
”ஏய்“ என கோபப்பட
”இல்லை குணா போல ஒருத்தனை நீ காதலிக்கறேன்னு சொன்னதும் உன் ரசனை கேவலமா இருக்கும்னு நினைச்சேன் ஆனா இல்லை கிப்ட் நல்லாதான் இருக்கு“
”கூடவே லெட்டரும் வைக்கப் போறேன்”
“திரும்பவும் லெட்டரா”
”ஷ்ஷ் இதுதான் கடைசி போதுமா” என சொல்லி ஒரு காதல் கடிதத்தை காட்ட கவினோ
”ஒண்ணு இருக்கு இன்னொண்ணு”
”அதை நீதான் எழுதனும்”
”ஓ ஆமாம்ல ப்ச் டான்ஸ் ரிகர்ஸல் பண்ணதுல டைம் கிடைக்கலை ஒண்ணு செய்யலாம் நீ என்ன எழுதியிருக்கியோ அதையே நான் காப்பி பண்ணிடறேன் கொடு”
”முடியாது சொந்தமா எழுது அப்பதான் வித்தியாசம் இருக்கும்“
”எப்படியிருந்தாலும் அவங்க படிக்கப் போறதில்லை அப்புறம் என்ன“
“என்னிக்காவது ஒரு நாள் படிப்பாங்க எனக்கு நம்பிக்கையிருக்கு போய் முதல்ல ஒரு கடிதம் எழுது சீக்கிரம்”
”எழுதறேன் ஆனா அதை எப்படி அவங்க பையில வைக்கறது”
”பொறு ஏதாவது வாய்ப்பு கிடைக்காமலா போகும் கிடைக்கும் அப்ப வைச்சிடலாம் வா” என அவனை அழைத்துக் கொண்டு ஆடிட்டோரியம் சென்றாள்.
அங்கு கவினும் அமர்ந்து உருகி உருகி ஒரு காதல் கடிதம் எழுதி அதை கமலியிடம் தர அவளோ அதை கிப்ட்டுக்குள் மறைத்து வைத்து இரண்டு கிப்டையும் தயார்படுத்திவிட்டு சரியான தருணத்திற்காக காத்திருந்தாள்.
வகுப்புக்குள் நுழைந்த வாத்தியார்களோ அங்கு படித்துக் கொண்டிருந்த குணாவையும் கண்மணியையும் கண்டு வியந்தார்கள்
”நீங்க ரெண்டு பேரும் இப்படி சின்சியரா படிக்கறதை பார்த்தா பெருமையா இருக்கு” என சொல்ல அவர்களின் கவனம் கலைந்தது, எழுந்து நின்று மரியாதை தர அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு தங்களது பிரச்சனையை எடுத்துச் சொல்லி
”வேற வழியேயில்லை நீங்க ரெண்டு பேரும் பாடித்தான் ஆகனும்” என சொல்ல அவர்கள் சற்று தயங்கினார்கள், பேசவில்லை
”முடியாதுன்னு சொல்லாதீங்க, கண்டிப்பா பாடித்தான் ஆகனும், அதனால எந்த பாட்டுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க, சீக்கிரம் ஈவ்னிங் விழா நடக்கறப்ப எந்த சொதப்பலும் இருக்க கூடாது ஓகே” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட தொய்வாக அமர்ந்துவிட்டாள் கண்மணி.
அவளின் சலிப்பைக்கண்டு குணாவும் இவள் எங்கே தன்னுடன் பாடப்போகிறாள் என நினைத்து அவன் தன் இருப்பிடத்தில் அமர்ந்து படிக்கலானான், அவளோ திரும்பி அவனைப் பார்த்தாள் அவன் படிப்பதைக்கண்டு
”இவனுக்கு நம்மகூட பாட விருப்பமில்லை போல, நாம ஏன் கவலைப்படனும் அவனே படிக்கறான் நாமளும் படிக்கலாம், அடுத்த வாரம் டெஸ்ட் இருக்கு” என நினைத்து படிக்கலானாள்.
மாலையில் விழா நேரம் வரவும் அனைவரும் ஆடிட்டோரியத்தில் கூடினார்கள், மாணவ மாணவிகள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது, அந்த இடமே களைகட்டியது, கூச்சலும், சிரிப்பும், கலகலப்பும் நிறைந்து வழிந்தது, வாத்தியார்களும் குவிந்தனர், மேடையில் கல்லூரி தாளாளர், பிரின்சிபால் என அனைவரும் அமர்ந்திருக்க ஒரு வாத்தியார் ஒருவர் கல்லூரியை பற்றியும் அதன் பெருமைகளை பற்றியும் விரிவாக விளக்கி பாராட்டிவிட்டு அமர்ந்தார்
அடுத்து வந்த வாத்தியார் விழா நிகழ்ச்சிகளை தொடங்க வைத்தார், அதற்காகவே மேடை காலியாக்கப்பட்டது, அனைவரும் ஆர்வமாக பார்க்க ஒவ்வொரு மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை காட்டிக் கொண்டிருந்தார்கள், கமலியும் கவினும் கூட குணா கண்மணி இருவரும் என்ன செய்கிறார்கள் என பார்க்க அவர்களோ அந்த விழாவுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல ஓரமாக இருக்கையில் அமர்ந்து அப்போதும் ஏதோ நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தார்கள், அதைக்கண்டு நொந்துப் போனான் கவின்
”இவங்களை திருத்த முடியாது“
”ப்ச் அவங்களை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது ஏதாவது செய்யனும்”
”என்னத்த செய்றது, ஒரு விசயம் கேள்விப்பட்டியா இன்னிக்கு அவங்களை பாட சொல்லி வற்புறுத்தியும் ரிகர்ஸல் கூட செய்யாம படிச்சிக்கிட்டு இருக்காங்க பாரு”
”எனக்கும் அந்த விசயம் தெரியும், வாத்தியார்ங்க வந்து சொல்லியும் அதை மதிக்காம இவங்க இப்படி நடந்துக்கறாங்கன்னா இவங்களுக்கு எவ்ளோ திமிர் இருக்கனும், இவங்க திமிரை அழிக்கனும், ஏதாவது செய்து இவங்களை மேடை ஏத்திவிடனும், இவங்களால பாட முடியாம திக்கி தடுமாறி நிக்கறதை பார்த்து எல்லாரும் கேலி செய்வாங்க, அதுல அவங்க அவமானப்படுவாங்கள்ல அதை நான் பார்த்து ரசிக்கனும்”
”அதுக்கு என்ன செய்யப் போற“
”பொறுத்திருந்து பார்” என சொல்லிவிட்டு கமலி மட்டும் வேறு பக்கமாக யாரையோ தேடிக் கொண்டு சென்றாள்.
5 நிமிடத்தில் மறுபடியும் கவினிடம் வந்து நின்றாள்
”எங்க போன கமலி“
”இப்ப பாரு என்ன நடக்குதுன்னு”
”அப்படி என்ன செய்துட்டு வந்திருக்க” என அவன் கேட்கும் போதே மேடையில் இருந்த வாத்தியார் மைக்கில் அறிவிப்பு தந்தார்
”அடுத்ததாக இனிமையான குரலில் அற்புதமாக பாட வருகிறார்கள் எம்எஸ்சி மாணவ மாணவி குணா மற்றும் கண்மணி அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் குணா கண்மணி” என அவர் சொல்ல கவின் வாயடைத்துப் போய் கமலியைப் பார்க்க அவளோ குரூரமாக சிரித்தாள்
”என்ன செஞ்சி வைச்சிருக்க அவங்களுக்கு இது தெரியுமா”
”தெரியாது”
”அய்யோ போச்சி”
”ஷ்ஷ் அவங்க மேடையில ஏறி அவமானப்படனும், அதுக்குதான் இப்படி செய்துட்டு வந்தேன், அவங்க அவமானப்பட்டு போன பின்னாடி நம்ம டான்ஸ் இருக்கு, நாம சந்தோஷமா ஜாலியா டான்ஸ் பண்ணலாம் சரியா”
”சரிதான்” என அலுத்துக் கொண்டே என்ன நடக்கப் போகிறது என பார்த்தான் கவின்
மேடையில் தங்கள் பெயரை உச்சரிக்கவும் குணாவும் கண்மணியும் அதிர்ந்துப் போனார்கள், குழப்பத்துடனே எழுந்து மேடைக்குச் சென்று ஒருவரை ஒருவர் கலக்கமாக பார்த்துக் கொண்டார்கள், அவர்களுக்கு மைக் தரப்பட அதை வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டார்கள்.
மாணவ மாணவிகளோ கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் குணாவோ கண்மணியை தயக்கத்துடன் பார்க்க அவளோ அவனை குழப்பத்துடன் பார்த்தாள், என்ன பாடுவது என டிஸ்கஸ் கூட செய்யவில்லை, ரிகர்ஸலும் செய்யவில்லை, இப்போது யார் முதலில் ஆரம்பிப்பது என்ற பிரச்சனை வேறு, இருவரும் பாடாமல் திக்குமுக்காடி நிற்பதைக்கண்டு மாணவ மாணவிகள் கலாய்க்கலானார்கள்.
அவர்களின் கேலி கிண்டல் கண்மணியின் மனதை பாதிக்க, அவள் கலக்கத்துடன் தலையை தாழ்த்திக் கொண்டு நிற்க அதைக்கண்ட குணாவிற்கு மனது வலித்தது, பிரச்சனையை சரியாக்க எண்ணினான், ஆனால் எப்படி என தெரியாமல் திண்டாடினான்
அவர்களின் பரிதாபமான நிலைமையை கவினும் கமலியும் மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்த நேரம், அவர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக குணா பாட ஆரம்பித்தான்.
”கண்மணி” என அவனது இனிமையான குரலில் உச்சரிக்க அவளுக்கு திக்கென்றது, அவள் அவனை வியப்புடன் பார்த்தாள், அதற்கே மாணவ மாணவிகள் அமைதி காக்க அவனுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது
”கண்மணி அன்போட காதலன்” என அவன் சொல்ல சொல்ல அனைவருக்கும் புரிந்துப் போய் கைதட்டல் அதிகமாக அவனோ கண்மணியைப் பார்த்தபடியே நின்று
குணா : கண்மணி அன்போட காதலன்…
நான்… நான்… எழுதும் லெட்டர் சீ மடல்…
இல்ல கடுதாசி வச்சிகலாமா…
வேணாம் கடிதமே இருக்கட்டும்… படி…
என சொல்ல அவளுக்கு வார்த்தையே வரவில்லை, அவனையே ஆச்சர்யமாக பார்க்க அவனோ மறுபடியும் அவளைப் பார்த்து
குணா : கண்மணி அன்போட காதலன்…
நான்… நான்… எழுதும் லெட்டர் சீ மடல்…
இல்ல கடுதாசி வச்சிகலாமா…
வேணாம் கடிதமே இருக்கட்டும்… படி…
என அழுத்தமாக சொல்ல அவளுக்கு அப்போதுதான் புரிந்தது அவளும் அவனைப் பார்த்தபடியே மென்மையான குரலில் இனிமையாக பாடினாள்
கண்மணி : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
அவளின் அந்த இனிமையான குரல்வளம் அவனை வசீகரிக்க அவளையே மெய்மறந்து பார்த்தான், மேற்கொண்டு அவன் அமைதியாக இருக்க மாணவ மாணவிகளின் மத்தியில் கூச்சலும் சலசலப்பும் கைதட்டலும் அதிகமாக, அதில் அவனது கவனம் கலைந்து சற்று தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தான்.
குணா :பாட்டாவே படிச்சிட்டியா…
அப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்ல…
இங்க பொன்மணி போட்டுக்க…
பொன்மணி உன் வீட்டுல சௌக்கியமா…
நா இங்க சௌக்கியம்…
கண்மணி: பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
குணா : உன்ன நெனச்சு பாக்கும் போது…
கவிதை மனசுல அருவி மாறி கொட்டுது…
ஆனா அத எழுதனுன்னு ஒக்காந்தா…
அந்த எழுத்துதான் வார்த்தை…
கண்மணி : உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
குணா : அதான்…
கண்மணி: அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது…
குணா : அதே தான்… ஆஹா… பிரமாதம்…
கவிதை கவிதை… படி…
கண்மணி : கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
குணா : லா லா லா லா…
லா லா லா லா லா லா…
உன்னை எண்ணிப் பார்க்கையில்…
கவிதை கொட்டுது…
அதை எழுத நினைக்கையில்…
வார்த்தை முட்டுது… ஓஹோ…
கண்மணி அன்போடு காதலன்…
நான் எழுதும் கடிதமே…
குணா– லா லா லா லா…
லா லா லா லா லா லா…
கண்மணி பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா…
நான் இங்கு சௌக்கியமே…
குணா : லா லா லா லா…
லா லா லா லா லா லா…
என பாடிக் கொண்டிருக்க அவளுக்கு கூச்சமாகிப் போனது. என்னவோ குணா தனக்காகவே பாடியது போலவே உணர்ந்தாள், வெட்கம் அவளை தீண்ட அவளின் கன்னங்கள் சிவந்துவிட அதைக்கண்ட குணா அதிர்ந்தான்
…. தொடரும்
error: Content is protected !!