Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –17

கண்மணியோ

”முடியாது தப்பு”

”அட வா உன்னை நான் ஒண்ணும் செய்ய மாட்டேன், இன்னிக்கு நான் ரொம்ப ஜாலியா சந்தோஷமா இருக்கேன், என்னோட சந்தோஷத்தை உன்கூட பகிர்ந்துக்கனும்னு ஆசைப்படறேன்” என்றான் குணா

”எதுக்கு இந்த சந்தோஷம்”



Advertisement

”சொல்லத்தெரியலை ஆனாலும் ஹாப்பியா இருக்கேன் வாயேன்”

”வேணாம் குணா யாராவது பார்த்தா தப்பாயிடும்“

”கண்மணி யார் பார்த்தா நமக்கென்ன நாம ஒண்ணும் தப்பு செய்யலையே வா கிளம்பலாம்”

Advertisement

”ஏன் அவசரப்படற”

Advertisement

”அந்த கமலி மோப்பம் பிடிச்சி வர்றதுக்குள்ள நாம இந்த இடத்தை விட்டுப்போகனும்“

”அவள் வந்தா நமக்கென்ன“

”அவள் பொறாமை பிடிச்சவ, அவளோட கொள்ளிக்கண்ணு உன் மேல படவே கூடாது”

Advertisement

என சொல்ல அவளுக்கு சிரிப்பே வந்தது

”சரி சரி வா ஏறு”

”படிப்பு”

”நாளைக்கு சன்டே லீவு, மன்டேதானே டெஸ்ட் இருக்கு, பார்த்துக்கலாம், ஏறு ஏறு வா” என அவசரப்படுத்த அவளுக்கும் ஆசையாக இருந்தது

அதனால் அவளும் வண்டியில் ஏறிக் கொள்ள அவனோ எடுத்த எடுப்பிலேயே வேகத்தை கூட்டி ஓட்ட அவள் பயந்து அவனை இறுக்கமாக பற்றிக் கொண்டாள், அந்த அணைப்புக்காகவே வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றான் குணா.

நேராக சினிமாக்கு அழைத்துச் சென்றான், சினிமா தியேட்டரைக் கண்டதும் கண்மணி திட்டுவாள் எதிர்ப்பாள் என எதிர்பார்த்த குணாவிற்கு ஏமாற்றம், அவளோ தியேட்டரைக்கண்டதும் சிறுபிள்ளை ஐஸ்க்ரீம்க்கு மகிழ்வது போல மகிழ்ந்தாள்

”ஐஐ தியேட்டரு”

”ஏன் இதுக்கு முன்னாடி இதை நீ பார்க்கலையா”

”நிறைய முறை பார்த்திருக்கேன் ஆனா தியேட்டருக்கு ஒரு முறை கூட போனதில்லை“

”ஏன் போகலை”

”போகலை, படிப்பு படிப்புன்னு அதுலயே காலம் போயிடுச்சி, இந்த டிவி சினிமா இதுல எல்லாம் பெரிசா விருப்பம் இல்லை, அதோட நாங்க ஏழ்மையில வாழ்ந்ததால பெரிசா காசு செலவு பண்ண ஆயிரம் முறை யோசிப்போம், தியேட்டருக்கு போய் சினிமா பார்க்கற காசுக்கு ஏதாவது உருப்படியா வாங்கலாம்னு தோணும்”

”நான் தனியாள்ங்கறதால நிறைய இங்கல்லாம் வந்ததில்லை, அப்படியே என்னிக்காவது நான் வந்தாலும் தனியா உட்கார்ந்து சினிமா பார்க்கறதுக்கு அலுப்பு சலிப்பா இருக்கும், அதனாலயே நானும் தியேட்டர் பக்கம் வரலை, இன்னிக்கு என்னமோ தெரியலை, புது படம் வந்திருக்கு, தனியா பார்க்கறதை விட உன்கூட சேர்ந்து பார்க்கலாம்னு ஆசை வந்தது, அதான் கூட்டிட்டு வந்துட்டேன், உன் விருப்பத்தை கூட நான் கேட்கலை, உனக்கு என்கூட படம் பார்க்க விருப்பமா“

”கண்டிப்பா முதல் முறை தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கப் போறேன் ஜாலியா இருக்கும்ல“

”ரொம்ப ஜாலியா இருக்கும் வா வா” என அவளை அழைக்க அவளும் உற்சாகமாக அவனுடன் சென்றாள், அவனே டிக்கெட் எடுக்கச் செல்ல அவளோ

”ஆமா எங்க டிக்கெட் எடுக்கற”

”பால்கனியில எடுக்கவா, அங்கன்னா கூட்டம் குறைவா இருக்கும், நிம்மதியா படம் பார்க்கலாம் கீழன்னா ரொம்ப கூட்டமா இருக்கும், புது படங்கறதால மக்களோட கூச்சல் அதிகமா இருக்கும்”

”இல்லை எனக்கு கீழேதான் படம் பாக்கனும்னு ஆசையா இருக்கு பால்கனி வேணாம்”

”ஏய் உன்னால எப்படி”

”என்ன எப்படி? படத்தை பார்க்கறவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நான் தெரிஞ்சிக்கனும்”

”அங்க ரொம்ப சத்தமா இருக்கும் கண்மணி”

”பரவாயில்லை குணா ஜாலியா இருக்கும்ல ப்ளீஸ்” என அவள் கெஞ்ச அதற்கு மேல் அவன் தயக்கமின்றி டிக்கெட் வாங்கி வந்தான்.

புது படம் என்பதால் பயங்கர மக்கள் கூட்டம், அப்போதே சிலர் அந்த படத்தின் பாடலை செல்போனில் ஓடவிட்டு டான்ஸ் ஆடிக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள், அதைக்கண்ட கண்மணிக்கு மிகவும் பிடித்திருந்தது அவளின் மகிழ்ச்சியை ரசித்தான் குணா.

பெல் அடிக்கவும் அனைவரும் வரிசையில் நின்றபடியே தியேட்டருக்குள் சென்றார்கள், குணா தனது டிக்கெட்டில் இருந்த நெம்பரை வைத்துக் கொண்டு கண்மணியை பத்திரமாக அழைத்துச் சென்று தங்களுக்கு என ஒதுக்கிய இருக்கைகளில் அமர்ந்தார்கள், அவளோ அந்த தியேட்டரையே ஏதோ தாஜ்மஹாலை பார்ப்பது போல அதிசயமாக பார்த்தபடி வந்தாள்

”குணா இங்க இப்படித்தான் இருக்குமா, ஆமா இது என்ன இப்படியிருக்கு, ஆமா ஏன் இவ்ளோ டிம் லைட் போட்டிருக்காங்க, குணா அங்க பாரேன், எத்தனை ஸ்பீக்கர்ஸ் இருக்குன்னு, ஏசி போட்டிருக்காங்களா ஜில்லுன்னு இருக்கு இல்லை, ஆமா இதுதான் ஸ்க்ரினா இவ்ளோ பெரிசா இருக்கு” என அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் குணா.

அதற்குள் படம் ஓட ஆரம்பிக்க அந்த அரங்கமே அமைதியாகவிட்டது, அவளும் படம் பார்க்கலானாள், அவளின் ஆச்சர்யம் மகிழ்ச்சி இவை இரண்டும் குணாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது, தனிமையில் படம் பார்த்தவனுக்கு கண்மணியுடன் பார்ப்பது அலாதி சுகமாக இருந்தது.

படத்தில் ஹீரோ என்ட்ரி வந்தாலே போதும் மக்கள் கூச்சல் போட அதை அவள் வெகுவாக ரசித்தாள், அவர்களுடன் இணைந்து இவளும் கைதட்டி ஆரவாரம் செய்ய குணா இதை எதிர்பார்க்கவில்லை, அதற்காக அவளை தடுக்கவும் இல்லை, அவள் செய்வதை செய்யட்டும் என செய்யவிட்டு வேடிக்கைப் பார்த்தான், அவளும் மகிழ்ச்சியாகவே இருந்தாள், தனது சொந்த விருப்பு வெறுப்பை விடுத்து சிறுபிள்ளை போல நடந்துக் கொண்டாள்.

பாடல் காட்சி வந்தால் அதை ஆசையுடன் பார்த்தாள், சண்டை காட்டி வந்தாலும் ரசித்தாள், ஒரு இடத்தில் முத்த காட்சி வரும் போது சட்டென அவள் குணாவை பார்க்க அவனுக்கு வியர்த்துக் கொட்டியது

”இப்ப எதுக்கு அதை பார்த்துட்டு என்னை பார்க்கற”

”இல்லை நீ காலையில சொன்னியே, அது இப்ப எனக்கு ஞாபகம் வந்தது, அதான்” என இழுத்து இழுத்து அவள் சிணுங்கலுடன் பேச அவனுக்கு ஏசியிலும் குப்பென வேர்த்துக் கொட்டியது

”கண்மணி இப்படி இழுத்து பேசாத, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு எப்பவும் போல சாதாரணமா பேசு” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு சரியென்பது போல் தலையாட்டிவிட்டு படத்தை பார்க்கலானாள்.

சென்டிமெண்ட் சீனில் உருகினாள், க்ளைமேக்ஸ் சீனில் அழுதாள், அத்துடன் படம் முடியவும் முதல் ஆளாக எழுந்தவளை அமர வைத்தான் குணா

”வா போகலாம் படம் முடிஞ்சிடுச்சி“

“பொறு கூட்டம் போகட்டும், நாம பொறுமையா போகலாம் இல்லைன்னா தள்ளுமுள்ளுல மாட்டிக்குவோம்” என சொல்ல அவளும் அமைதியாக காத்திருந்தாள்

கூட்டம் குறையலானாது, இவர்கள்தான் கடைசி அந்நேரம் அவளே எதிர்பார்க்காத வண்ணம் அவளின் கன்னத்தில் பச்சக் என ஒரு முத்தம் தந்துவிட்டு எதுவும் நடக்காதது போல எழுந்து நின்று

“வா கண்மணி எல்லாரும் போயிட்டாங்க, கிளம்பலாம் வேலைக்கு நேரமாயிடுச்சி” என குணா அழைக்க அவளோ அவன் தந்த முத்தத்தில் சொக்கிப் போயிருந்தாள், அவன் அழைக்கவும் அவளுக்கு எதுவும் புரியவில்லை

”ஆஆ என்ன சொன்ன” என அவள் மிரட்சியுடன் கேட்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது, நமட்டுச் சிரிப்புடன் அவளின் கையை பற்றி எழுப்பி தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியேறி சென்றான்.

பைக்கை ஸ்டான்டில் இருந்து கொண்டு வந்தவன் அவளை பார்த்து ஏறுமாறு சைகை செய்ய அவளும் அமைதியாக ஏறிக் கொண்டாள், அவளின் அமைதி அவனுக்கு குழப்பத்தை தந்தது, அவள் தான் தந்த முத்தத்தை விரும்புகிறாளா இல்லை வெறுக்கிறாளா என தெரியாமல் உள்ளுக்குள் பதட்டப்பட்டான்.

செல்லும் வழியில் அவளிடம் பேசினான்

”அப்புறம் கண்மணி எப்படியிருந்தது படம்” என கேட்க அவளும் இயல்பாக

”ரொம்ப நல்லாயிருந்தது குணா“

”ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் எப்படியிருந்தது”

”ம் ஓகே”

”பாட்டெல்லாம் கேட்க நல்லாயிருக்குல்ல”

”ஆமாம் சூப்பராயிருக்கு”

”கடைசியில க்ளைமேக்ஸ் பார்த்தியா”

”இந்த படத்துக்கு ஏத்த முடிவுதான்”

”அப்புறம் நான் கொடுத்த முத்தம் எப்படியிருந்தது”

”நல்லாயிருந்தது” என உளறினாள், பின் வெட்கப்பட்டு அவனது தோளில் செல்லமாக ஒரு அடி போட அவனோ குதூகலமாகி

”பிடிச்சிருக்கா“

”படம்தானே பிடிச்சிருக்கு”

”அதை கேட்கலை நான் கொடுத்த முத்தம் உனக்கு பிடிச்சிருக்கா”

”பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வ“

”இன்னொரு முத்தம் தருவேன், அதுவும் பிடிக்கலைன்னா வேற மாதிரி முத்தம் தருவேன்”

”அய்யோ போதும் போதும் எனக்கு இதுவே பிடிச்சிருக்கு”

”எது”

”அதான் அது”

”நான் தந்த முத்தமா“

”ஆமாம்“

”ரொம்ப பிடிச்சிருக்கா”

”ம் நான் எதிர்பார்க்கவேயில்லை“

“நானும்தான்”

“ம்”

”இதுதான் எனக்கு முதல் தடவை இப்படி முத்தம் தர்றது“

”எனக்கும்தான்”

”உனக்கு கொடுக்கறப்ப நான் ரொம்ப பயந்துட்டேன், நீ என்னை அடிப்பியோ திட்டுவியோன்னு நினைச்சேன்”

”திட்டனும்னு தோணலை”

”பரவாயில்லை உனக்கு என்மேல அந்தளவுக்கு நம்பிக்கை வந்திருக்கே“

”இன்னும் டெஸ்ட் ரிசல்ட் வரலை”

”அய்யோ தாராளமா வரட்டும், கண்டிப்பா நான் நிறைய மார்க் எடுப்பேன் கண்மணி, அதுக்கு அப்புறம் பாரு, வாடகை வீட்டை எடுக்கறேன், உன்னை கூட்டிட்டுப் போறேன்”

”நானும் சமைச்சி போடறேன்”

”சரி அப்புறம் கண்மணி ஒண்ணு கேட்கவா”

”என்னது”

”நான் தந்த மாதிரி நீ எனக்கு தரமாட்டியா”

”எதை சொல்ற”

”அதான் முத்தம்”

”ம்ஹும் போ முடியாது எனக்கு கூச்சமா இருக்கு”

என அவள் உடல் நெளிய அவனுக்கு சுகமாக இருந்தது

”நெளியாத என்னால தாங்க முடியலை, உனக்கு நான் கொடுத்த முத்தம் ரொம்ப பிடிச்சிருக்குன்னா இன்னொரு முத்தம் தரவா” என ஆசையாக கேட்க அவளுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

அவனும் அந்த அணைப்பை ரசித்தபடியே அவளை ஹாஸ்டலில் இறக்கிவிட்டு தனது லாட்ஜ்க்கு சென்றான், அன்று முழுவதும் இருவருமே சந்தோஷமாக இருந்தார்கள்

மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் இருவருமே தாமதமாக எழுந்தார்கள், மதியத்திற்கு மேல் குணா கண்மணியை பார்க்க வந்தான், அவளோ ஒரு இடமாக அமர்ந்துபடித்துக் கொண்டிருக்க அதைக்கண்டவன் அவளது படிப்பை கெடுக்க வேண்டாம் என நினைத்துக் கொண்டு திரும்பிச் செல்ல முயல்கையில் கண்மணி அவனை பார்த்துவிட்டாள், அவனை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள் போல அவனே வரவும் அப்படியொரு மகிழ்ச்சி, அவனிடம் வந்து நாணி கோணி நிற்க அவனுக்கு உல்லாசமாக இருந்தது

”படிக்காம இங்க என்ன செய்ற போ போய் படி“

”நீ வந்திருக்கல்ல அதான் வந்தேன்”

”நான் சும்மா இந்த பக்கம் காத்து வாங்க வந்தேன்”

”ஆமா இங்கதான் காத்து வீசுதாமா”

”ஆமாம் இங்கதான் தென்றல்காத்து வீசுது”

”போ குணா“

”ஆமா படிச்சி முடிச்சிட்டியா”

”முடிச்சிட்டேன் ஈசியா இருக்கு சப்ஜெக்ட் நீ படிச்சிட்டியா”

”இதை படிக்க தனியா நேரம் வேற ஒதுக்கனுமா என்ன? எல்லாம் நைட் படிக்கிறேன் அப்புறம் என்ன செய்யப் போற”

”தெரியலை”

”சரி வா வெளிய போய் வரலாம்”

”எங்க”

“நீயே சொல்லு“

”கோயில்”

”டபுள் ஓகே வரேன்” என சொல்லியவள் அப்போதே அவனுடன் கிளம்பிச் சென்றாள்.

கோயிலுக்கு செல்லும் வரை குணாவும் கண்மணியும் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டு வந்தார்கள், குணாவோ அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்து பரவசத்தில் மிதந்தான், அவனது தலைமுடி காற்றில் கலைவதைக் கூட விரும்பாத கண்மணியோ உரிமையுடன் அவனது தலைமுடியை கோதி விட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது, அதற்காகவே தன் தலைமுடியை கலைத்து கலைத்து விட அவளும் சிரமம் பார்க்காமல் சிரிப்புடனே கோதி விட்டாள்.

அவளின் அந்த சின்ன அக்கறை கூட அவனை வெகுவாக ரசிக்க வைத்தது, கோயில் வந்ததும் முதல் ஆளாக கண்மணி இறங்கிச் செல்ல அவனோ வியந்தான், தனது பைக்கை ஓரம் கட்டிவிட்டு பார்க்கையில் கண்மணி எங்கே சென்றாள் என்று கூட தெரியாமல் ஒவ்வொரு இடமாக தேடலானான்

அவளோ அவன் அவ்வாறு தன்னை தேட வேண்டும் என்பதற்காகவே ஓடி ஒளிந்து விளையாட அவனோ பதட்டமானான்

”அய்யோ கண்மணி எங்க போன நீ” என கவலையுடன் அவன் தேடுவதைக்கண்ட கண்மணி புரிந்துக் கொண்டாள்

”சே பாவம் குணா பயந்துட்டாப்ல, இப்ப என்ன செய்யலாம், அவர் கூட விளையாடனும்னு ஆசையாயிருக்கு, அவரையும் விளையாட வைக்கலாம்” என நினைத்தவள் வேண்டுமென்றே அவன் முன் மின்னல் போல வந்து நின்றாள், அவள் வரவும் நிம்மதியானான் குணா

”கண்மணி” என அன்பாக அழைக்க அடுத்த நொடி சட்டென அவள் ஓடி ஒளிய அவனோ திடுக்கிட்டான், அப்போதுதான் அவன் புரிந்துக் கொண்டான், தன்னுடன் கண்மணி விளையாடுகிறாள் என்று, அதற்காகவே அவனும் விளையாடினான் மகிழ்ச்சியுடன், அவளை தேடி அலைந்தான், அவளும் அவன் தன்னை தேடுகிறான் என்றதும் வேண்டுமென்றே ஓடி ஒளிய அவனும் ஒவ்வொரு இடத்தில் அவளை பார்த்தும் நெருங்கி வருவதற்குள் அவள் ஓடவே அவளை மடக்கி பிடிக்க எண்ணி அவள் பாராத வண்ணம் குணா ஒளிந்துக் கொண்டான்.

குணா வருகிறான் என நினைத்த கண்மணியோ அவன் வராமல் போகவே ஏமாந்துப் போய் தான் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வர அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான் குணா, அதில் அவள் திடுக்கிட்டு பின் முகம் மலர்ந்தாள், அவனின் அந்த அணைப்பில் இருந்து விடுபட அவள் போராடவில்லை. சில நொடிகள் அப்படியே இருக்கவிட்டு பின் அவனை விட்டு விலகி நின்றாள், அவளின் முகத்தில் தெரிந்த வெட்கசாயலைக்கண்ட குணாவோ ரசித்தபடியே அவளை அணைக்க வர அவளோ மறுபடியும் ஓட அந்த விளையாட்டை ரசித்தபடியே அவனும் ஓடினான்

வழியில் கமலி எதிர்ப்பட்டாள், அவளை சிறிதும் எதிர்பார்க்காமல் தெரியாமல் அவள் மீது மோதிவிட்டு

”சாரி சாரி” என்றவன் கமலிதான் என்றதும்

”ஓ கமலி நீதானா, சாரி தெரியாம மோதிட்டேன்” என சிரிப்புடன் சொல்ல அவளோ கோபத்துடன்

”நீ எப்பவுமே கவனக்குறைவா நடந்தது இல்லையே, இப்ப என்ன புதுசா நடந்துக்கற, அதுவும் சாரி எல்லாம் சொல்ற இது நீதானா” என அவள் பேச பேச வேண்டுமென்றே அவளையே பார்த்தபடி நின்றான்

”ஹலோ குணா உன்கிட்டதான் பேசறேன் காதுல விழலையா” என எரிந்து விழுந்தாள்

”ஒரு காலத்தில நான் உன்னை பார்க்கனும்னு ஆசைப்பட்ட, இப்ப நான் உன்னை பார்க்கிறேன் ஆனா நீ என்னை திட்டற, காலம் ரொம்ப மாறிடுச்சில்ல கமலி”

”காலம் மாறலை நான்தான் மாறினேன், அப்ப காதலுக்காக உன் பின்னாடி நாயா பேயா அலைஞ்சேன், ஆனா நீ என்னை மதிக்கலை, இப்ப வந்து இப்படி பேசற இதுக்கு என்ன அர்த்தம்”

”கரெக்ட் அன்னிக்கு எனக்கு விருப்பம் இல்லை, அதனால உன்னை வெறுத்தேன், இப்ப உனக்கு என் மேல விருப்பம் இல்லை அதனால என்னை நீ வெறுக்கற, இதுதான் காலத்தோட கட்டாயம்”

”உளறாத குணா“

”இப்பவும் நீ என்னை விரும்பறியா” என பட்டென கேட்க அவள் சட்டென

”இல்லையே இல்லைவே இல்லை” என அலற அவனோ சிரிப்புடன்

”நல்லது அப்படியே இரு, தப்பித்தவறி கூட நீ என்னை விரும்பிடாத, நான் உனக்கு என்னிக்குமே கிடைக்க மாட்டேன்”

”ஏன் வேற யாரையாவது நீ காதலிக்கறியா”

”இல்லைன்னு சொன்னா நீ நம்ப மாட்ட, ஆமாம்னு சொல்ல எனக்கு மனம் வரலை, இப்போதைக்கு நான் படிப்பை விரும்பறேன், படிச்சி பெரியாளாகி லைப்ல செட்டில் ஆன பின்னாடிதான் காதலை பத்தியும் கல்யாணத்தை பத்தியும் நான் யோசிக்கனும்”

”அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகும்”

”ஆகட்டும் எத்தனை வருஷம் ஆனாலும் எனக்காக நீ காத்திருக்க போறதில்லை, அதனால உன் வழியை பார்த்து நீ போ, என் வழியை பார்த்து நான் போறேன், மறுபடியும் நாம சந்திக்க வேணாம்”

”வார்னிங்கா“

”சே சே அட்வைஸ்”

”கண்மணியை உனக்கு பிடிச்சிருக்குல்ல”

”கண்மணியா எந்த கண்மணி“

”நடிக்காத எனக்கு எல்லாம் தெரியும், நீ அவள்கூட பழகற விசயத்தை நம்ம கூட  வகுப்புல படிக்கற பொண்ணு ஒருத்தி சொல்லிட்டா“

”ஓ பரவாயில்லையே, நீயில்லாதப்ப என்னை வேவு பார்க்க ஆளுங்க எல்லாம் வைச்சிருக்க போல, இதெல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிட்டு என்ன செய்யப் போற”

”விசயத்துக்கு வா கண்மணியை நீ விரும்பறல்ல”

”இல்லை”

”இல்லையா”

”ஆமாம்”

”ஏன்”

”இது என்ன கேள்வி, இல்லைன்னு சொன்னா ஏன்னு கேள்வி கேட்கற, அப்போ ஆமாம்னு சொன்னா அதுக்கு என்ன கேள்வி கேட்ப“ என கேட்க அவளோ பதில் சொல்ல தடுமாறினாள்

”கமலி நடந்ததை மாத்த முடியாது, நடக்கறதை கட்டுப்படுத்த முடியாது, நடக்கப் போறதை பத்தி தெரிஞ்சிக்க முடியாது, யாருக்கு தெரியும், எதிர்காலத்தில என்னவேணும்னாலும் நடக்கலாம் அதனால“

”அதனால”

”என் வழியில வராத, என் பேரை பயன்படுத்தி நீ என்னென்ன செய்தன்னு எனக்கு தெரியும், அது சம்பந்தமா நான் ஒருத்தர்கிட்ட மன்னிப்பு கேட்டேன், உன்னை சும்மா விடக்கூடாது ஏதாவது செய்யனும்னு நினைச்சேன், என்னை பழிவாங்க நீ இறங்கின மாதிரி உன்னை பழிவாங்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது

ஆனா எதுக்குன்னு விட்டுட்டேன், இனிமேல என் பெயரை பயன்படுத்தி நீ ஏதாவது தப்பு செய்தன்னு தெரிஞ்சது அப்புறம் இந்த குணாவை நீ வேற மாதிரிதான் பார்ப்ப ஜாக்கிரதை” என மிரட்டலாக சொல்லிவிட்டு அவன் கண்மணியை தேடிக் கொண்டு செல்ல, கமலிக்கு அவனின் மிரட்டல் பயத்தை தந்தது, பயத்தில் அவள் கண்கள் கலங்கிவிட்டது, அவசரமாக கவினை தேடிச் சென்றாள்.

மறுபக்கம் கண்மணி ஒளிந்திருந்த இடத்தில் கவின் திடீரென வந்து நின்றான், அவனைக் கண்டதும் அவள் பயப்படவில்லை, மாறாக அவ்விடம் விட்டு செல்ல முயன்றவளின் முன்னால் வீம்புக்கென்று வந்து நின்றான் கவின்

”என்ன வேணும் உனக்கு”

”என்னால உன்னை மறக்க முடியலை கண்மணி”

”அதனால”

”நான் இப்பவும் உன்னை காதலிக்கிறேன்”

”காதலோட புனிதத்தை கெடுக்காத”

”என்ன சொல்ற”

”என் பேரை வைச்சி நீ செய்த தப்பெல்லாம் குணா மூலமா நான் தெரிஞ்சிக்கிட்டேன், அசிங்கமா இல்லை, அந்த குணா யார்னே எனக்குத் தெரியாது, அவனுக்கு போய் நான் எழுதின மாதிரி காதல் கடிதங்கள் தந்திருக்க, கிப்ட் தந்திருக்க, சே அதுகூட பரவாயில்லை, கடைசியா நீ தந்த கிப்ட் இருக்கே சொல்லவே நா கூசுது, உண்மையா காதலிக்கற எவனும் இப்படி கேவலமா நடந்துக்க மாட்டான்”

”அய்யோ கண்மணி இதுக்கெல்லாம் நான் காரணம் இல்லை அந்த கமலிதான் காரணம்”

”நீயும்தானே இதுல உடந்தை, உன்னைப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு“

“அப்படி சொல்லாத, நான் கமலிகிட்ட எவ்வளவோ சொன்னேன், ஆனா அவள் கேட்கலை, அவள் குணாவை பழிவாங்க ஆசைப்பட்டு உன்னை இதுல இழுத்துவிட்டா”

”ஏன் அந்த காலேஜ்ல நான் மட்டும்தான் பொண்ணா வேற யாரும் இல்லையா, அந்த குணாவை பழிவாங்க வேற யாரையாவது பார்த்திருக்கலாமே, என்னை ஏன் இழுக்கனும், இது தப்பில்லையா, ஓ அவள் குணாவை பழிவாங்க நினைச்ச மாதிரி நீ என்னை பழிவாங்க என்னை இதுல இழுத்துவிட்ட அப்படித்தானே”

”இல்லை கண்மணி அந்த நேரத்தில கமலி என்னென்னவோ சொல்லி என் மனசை மாத்திட்டா“ என்றான் கவின்

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!