Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 13

கருப்பன் ஆட்டம் 13

நாட்கள் அதன் போக்கில் உருண்டோடி கொண்டிருக்க, மலர்விழி தினமும் காலையில் எழுந்து காலேஜ் சென்று வருவதும் இடையிடையே கருப்பனை எங்கேனும் பார்த்தால்

ஏதேனும் சொல்லி பேச்சுக் வளர்த்து கொண்டு இருப்பதுமாக நாட்கள் கடந்தது.



Advertisement

 ஊர் மக்களின் மத்தியில் கருப்பன் மலர்விழியின் புரளி தான்.

குட்டையில் ஆரம்பித்து அனைத்து இடங்களிலும் பரவி இருந்தது. 

Advertisement

அதனை மலர் அறியவில்லை. ஆனாலும் அது கருப்பனின் காதுக்கு சென்றடையவே செய்தது. ஆனால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 

Advertisement

ஏனென்றால் ஊர் மக்கள் இப்படித்தான் தன் இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை கதைக்கட்டி பேசுவார்கள் என்பதை அவன் முன்னமே அறிந்தது தானே!!

Advertisement

இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து பழக்கம் படுத்தினால், நம் வாழ் நாள் முழுவதும் அதையே செய்து கொண்டிருக்க வேண்டியது தான். அதனையும் அவன் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறானே! அதனால் வந்த அசட்டை தனமாக கூட இருக்கலாம்.

ஜல்லிக்கட்டுக்கான நாள் குறிக்கப்பட்டு இன்னும் இரண்டு நாட்களே மீதம் இருந்தன, அதற்கான வேலைகள் கிராமங்களில் திறம்பட செய்து கொண்டிருக்க, அந்த நேரம் மயிலின் அண்ணன் அய்யனாரை அழைத்து வருமாறு தனது ஆட்களிடம் கூறி அனுப்பி இருந்தான் கவுன்சிலர் செல்வம்.!

 அய்யனார் கவுன்சிலரின் உண்மைக்கு உரித்தான ஒருவன். கவுன்சிலர் ஏதேனும் கூறினால் முதலில் அதில் சரியாக தவறா என்று யோசித்தாலும், பின் அது தவறாகவே இருந்தாலும் கூட அது செல்வம் சொல்லிவிட்டான் என்ற விஷயத்திற்காக அதனை துணிந்து செய்வான். 

 இப்பொழுது செல்வத்தின் முன்பு வந்து நின்றிருந்தான் அய்யனார். 

“என்ன அய்யனாரு பாத்து ரொம்ப நாளாச்சு ஆளே அகப்படவே மாட்றியேப்பா?” என்று கேட்டான்.

அதற்கு அய்யனாரோ “என்னத்த அண்ணே சொல்ல சொல்றீங்க, எல்லாம் நம்ம நிலத்துல வெளஞ்ச பொருள ஒரு குறிப்பிட்ட லாபத்துக்கு வித்திட்டு வரதுக்கு தான் அலைஞ்சுகிட்டு திரியிறேன்” என்றான்.

 “சரி, சரி, உனக்கு விஷயம் தெரியுமா!” 

“விஷயமா! என்ன விஷயம்ண்ணே?”

“அட என்ன அய்யனாரு…. ஊருக்குள்ள இருந்துப்புட்டு என்ன விஷயமுன்னு அசால்டா கேக்குறவன்! இன்னும் ரெண்டு நாள்ல நம்ம ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்க இருக்குல்ல!”

“அதுத்தேன் அன்னைக்கு தோட்டி தண்டோரா போட்டப்பவே தெரியுமேண்ணே!”

“அதுக்கு அந்த கருப்பனும் தர்மனும் பேர் குடுத்துருக்காய்ங்களாமா?” 

 “இதுல பெருசா என்னத்த கண்டிங்க,எப்பவும் போல அவங்க பேரு கொடுக்கிறது தானே!” 

 “எப்பவும் போல பெயர் கொடுக்கிறது தான் அய்யனாரு, ஆனா இந்த முறை அவய்ங்க பேரு ஜெயிச்சுட்டான் அப்படின்ற லிஸ்டுக்கு போகவே கூடாது. 

இத்தனை வருஷமும் அவன் தான் மொத இடத்தை பிடிச்சு நிக்குறியான். ஆனா இந்த வருஷம் அவன் ஜெயிக்கவே கூடாது. ஏன் உனக்கு மேல ஒரு காளைய கூட அவன் அடக்க கூடாது” என்று தன்னுடைய வலது கையில் இல்லாத கட்டைவிரல் பகுதியை பார்த்துக்கொண்டே வன்மம் பொங்க கூறினான் கவுன்சிலர். 

 “அண்ணே! நீங்க சொல்றது ஒன்னும் விளங்கலையே!” 

 அதற்கு வஞ்சத்தின் உச்சத்தில் ஒரு பேய் சிரிப்பு சிரித்த கவுன்சிலர் “நான் சொல்றது மட்டும் நீ செய்யி அய்யனாரு மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்” என்றான்.

 “சரிண்ணே சொல்லுங்க, சிறப்பா செஞ்சுபுடுவோம்” என்று கவுன்சிலர் கூற வருவதை ஆர்வமாக கேட்டான் அய்யனார். 

பின் அவன் கூறிய விஷயங்களை கேட்டு அதனை பற்றி யோசித்த அய்யனார், “அண்ணே இது…!”என்ற தயங்க, 

“அய்யனாரு… நான் சொன்ன விஷயத்தை உன்னால் செய்ய முடியுமா? முடியாதா? உன்னால செய்ய முடியாதுன்னு சொல்லிடு, இருக்கவே இருக்காய்ங்க நம்ம பசங்க எவனாவது ஒருத்தன இறக்கி உட்டுட்டு போறேன்” என்று கவுன்சிலர் கேட்டான். 

 “ஐயோ என்னண்ணே! நீ ஒரு விஷயத்தை சொல்லிட்டா அத நான் என்னைக்குண்ணே செய்யாம இருந்திருக்கேன். நீ சொல்லிட்டல்ல இன்னும் ரெண்டு நாள்ல பாரு சிறப்பா செஞ்சு உட்ருவோம்” என்று கூறினான் அய்யனார். 

“அது! இதுக்கு தான் அய்யனாரு வேணுங்குறது. இத நான் ஏன் உன்கிட்ட குடுக்கிறேன்னா…. நம்ம கைவசம் எத்தனை பயலுவ இருந்தாலும் உன் அளவுக்கு கனக்கச்சிதமா காரியத்தை முடிக்கிறதுக்கு எவனும் பொறக்கல அய்யனாரு. சரி அப்போ நாளை மறுநாள் வாடிவாசல்ல பாப்போம், நீ கெளம்புப்பா” என்று செல்வம் கூறவும், 

சரி என்று விட்டு அய்யனார் கிளம்பி விட, போகும் அவனின் முதுகு புறத்தையே பார்த்து கொண்டு கருப்பன் மீதான வஞ்சத்தை ஒன்று சேர்த்து வன்மமாக புன்னகைத்துக் கொண்டான் கவுன்சிலர். 

அன்றைய பொழுது கருப்பன் கவுன்சிலரின் கட்டை விரலை வெட்டியதில் இருந்து அவனின் மனதிற்குள் குடைந்து கொண்டிருந்த ஒரு விஷயம்,

 எப்படியேனும் தன்னை எதிர்த்த கருப்பனுக்கு தகுந்த தண்டனை தன்னால் கொடுக்கப்பட வேண்டும் என்பதே! 

 அவனுக்கு எந்த இடத்தில் ஸ்கெட்ச் வைக்கலாம் என்று கவுன்சிலர் பலவாறு யோசித்துப் பார்த்து விட்டான். 

எப்படி யோசித்தும் தன்னுடைய பெயர் அதில் அடிபட அதிக வாய்ப்பு இருப்பதையும் அது வராமல் இருப்பதற்கு எங்கு எப்பொழுது சரியாக காய் நகர்த்தலாம் என்றும் அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேலையில் தான் ஜல்லிக்கட்டிற்கான அறிவிப்பு வந்தது எல்லாம். 

தனது கையில் லட்டை போன்ற ஒரு திட்டம் கிடைத்ததை துரிதமாக செயல்படுத்துவதற்கு அய்யனாரின் துணையை நாடி இருந்தான் செல்வம். 

 வந்துவிட்டது..! ஜல்லிக்கட்டுக்கான நாளும் வந்துவிட்டது..!

அன்று காலையில் எழுந்து காலேஜுக்கு கிளம்பி கொண்டிருந்த மலர்விழியை, இன்று தங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு இருப்பதாகவும் நீ இன்று காலேஜுக்கு விடுப்பு எடுத்து இங்கேயே இருக்குமாறு கூறிவிட, 

இது நாள் வரையில் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திராத மலர்விழிக்கும் அதனை பார்க்கும் ஆர்வம் கிளம்ப, அவள் காலேஜுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டாள். 

 பின் சிறிது நேரத்தில் அமுதா சாமி கும்பிட்டு அய்யனாருக்கு திருநீறு வைத்தவர் “ஐயா பார்த்து சூதானமாக விளையாடுயா” என்று கூறினார்…

 “சரித்தா நான் பாத்துக்குறேன். இன்னைக்கு நேத்தா விளையாட போறேன். எனக்கு தெரியும்” என்றவன் வீட்டில் இருந்து கிளம்பும்போது ஏதோ ஒரு பொருளை எடுத்து யாருக்கும் தெரியாமல் மறைத்து எடுத்துக்கொண்டு சென்றான். 

 அது வீட்டில் உள்ள எவரின் கண்ணிலும் சிக்கவில்லை. 

 அதே நேரம் தத்தமது அன்னையிடம் ஆசீர்வாதம் பெற்று கொண்ட கருப்பனும் தர்மனும் வாடிவாசல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது தர்மன் கருப்பனிடம்,

 “மச்சான் இந்த அய்யனார் பய என்னைக்கும் போல இன்னைக்கும் எதாவது வம்ப இழுத்துட்டு வருவனோ?” என்றான். 

“அது என்னைக்கு தான் நடக்காம இருந்திருக்கு. அந்த அய்யனார் பயலுக்கு வருஷா வருஷம் இதே பொழப்பு தானே! இன்னைக்கும் சிலுக இழுத்து வம்பு பண்ணாலும் அது எல்லாத்தையும் தாண்டி தான் நம்ம ஜெயிச்சு வரணும். எப்பவும் நடக்கிறது தானடா விடு பாத்துக்கலாம் வா” என்று விட்டு நண்பர்கள் இருவரும் வாடிவாசல் வந்திருந்தனர்.

 ஊருக்கு சற்று தூரத்தில் உள்ள ஒரு அகண்ட மணற்பரப்பில் இரண்டு புறமும் மேடை அமைத்து அதற்கு நடுவே காளைகள் திமிறி கொண்டு வெளி வருவதற்கான வாடிவாசலும் அமைக்கப்பட்டிருக்க, 

அதற்கு வெளியே காளைகளை வரவேற்று அதனை அடக்கி தங்களின் வீரத்தை பறைசாற்றுவதற்காக காத்துக் கொண்டு நின்றிருந்தனர் காளையர்கள். அதில் கருப்பனும், தர்மனும்,அய்யனாரும் அடக்கம்.

 மலர்விழியும், மயிலும், மயிலின் அம்மா அமுதாவும் வாடிவாசலில் சற்று தள்ளி இருந்த ஒரு இடத்தில் நின்று அந்த களத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 

வாடிவாசலும் திறக்க பட்டது. வாடிவாசல பிரிச்சுகிட்டு களத்துல நின்ன காளைங்க ஒவ்வொன்னும் ஒரு படையே திரண்டு வந்த மாதிரி அடுத்தடுத்து அடங்க மறுத்துச் சீறிப்பாயும்போது, அதன் வீரத்தை பார்க்கவே அனைவருக்கும் மெய் சிலிர்க்கும்! 

மாடுபிடிக்கிற காளையர்கள் மட்டும் என்ன சும்மாவா? ஒவ்வொருத்தனும் ஒரு திடகாத்திரமான உடற்கட்டினை கொண்டிருந்தனர். அவ்வளவு பெரிய காளையைக்கூட லாவகமா அடக்குறதை பார்க்கும்போது, அடடா, இவன் தான் உண்மையான வீரன்னு தோணும்!”

 முதல் முதலாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்த மலர்விழிக்கு அத்தனை ஆச்சரியம்! “ஏய்.. மயிலு! என்னடி இது நானெல்லாம் மாட்டுக்கு பக்கத்திலேயே போக பயப்படுவேன். மாடு கிட்ட கூட வர மாட்டேன். ஆனா இங்க எல்லாரும் இவ்வளவு அசால்ட்டா புடிக்கிறாங்க!!” என்று கேட்டாள். 

“இதெல்லாம் சாதாரணம் தாண்டி, இதுல எண்ணிக்கை கணக்குல யார் அதிகம் பிடிக்கிறாங்களோ அவங்களுக்கு தான் வின்னிங் பிரைஸ். எப்பவுமே…” என்றவள் 

“எப்பவுமே என் அத்தான் தான் அதிகமா மாட்ட அடக்கி முதல் பரிசு வாங்குவாரு, இந்த வட்டமும் அவர்தான் வாங்குவாரு பாப்போம் வா. சூப்பரா இருக்கும் பாரு!” என்று மயில் மீண்டும் வாடி வாசலில் கவனம் பதித்தாள். 

 “ஓ எப்பவுமே இந்த காட்டான் தான் முதல் பரிசு வின் பண்ணுவானா? பின்ன வின் பண்ணலன்னா தானே அதிசயம்!! எரும மாடு மாதிரி உடம்ப வளத்து வச்சிருக்கான். சரியான காட்டான்!!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளின் பார்வை அந்த கூட்டத்திலும் கருப்பனை தேடி பின் அவன் மீதே நிலை குத்தி நின்றது.

 வாடிவாசலில் காளைகள் சீறி பாய்ந்து வருவதையும், அதன் திமிலை பாய்ந்து பிடித்து அடக்கும் காளையர்களும் என அங்கே ஆரவாரமான உற்சாகமான சத்தம் எங்கிலும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. 

இப்பொழுது ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டி இருந்தது. அதில் மாடு பிடித்தவர்களின

எண்ணிக்கையாக கருப்பன் 18 மாடுகளையும் அய்யனார் 17 மாடுகளையும் பிடித்திருந்தனர். 

 அதனை அறிவிப்பாக வெளியிடவே, அதனை கேட்டு எரிச்சல் உற்ற கவுன்சிலர், அய்யனாரை பார்த்து சைகை செய்ய, அவனோ சரி என்பதை போல் கண்ணசைத்தான். 

களத்தில் முன்பு போல் கூட்டம் இல்லாமல், முன் நடந்த சுற்றுகளில் அதிக மாடுகளைப் பிடித்த நபர்களை மட்டுமே இறுதி களத்தில் இறக்கியிருந்தனர். அதில் நண்பர்கள் இருவரும் அய்யனாரும் என மூவரும் அடக்கம். 

 ஒலிபெருக்கியின் அறிவிப்பில் “கடைசியா இன்னும் நாலஞ்சு மாடு தான்ப்பா இருக்கு, இதுல ஜெயிக்கிறவனுக்கு ஒரு நாட்டு காளை மாடும், அப்புறம் ஒரு பைக்கும் பரிசு, மாட்ட புடிச்சுக்கோ! பரிசு வாங்கிக்கோ! என்று காளையர்களை உற்சாகப்படுத்தினர் அந்த விழா கமிட்டி குழுவினர். 

அனைத்து காளையர்களின் பார்வையும் வாடிவாசலை பார்த்துக் கொண்டிருந்தது. முதல் இரண்டு மாடுகள் சீறிவந்ததை மற்ற நபர்கள் பிடித்துவிட, அடுத்து வந்த மாடு எவர் கையிலும் அகப்படாமல் ஓடி இருக்க, 

 நான்காவதாக வந்த காளையை அய்யனார் அடக்கி இருந்தான். அதனால் இப்பொழுது போட்டியில் கருப்பன் 18 அய்யனார் 18 என சரிசமமாக இருந்தனர். 

 இப்பொழுது இறுதியாக ஒரு காலை சீறி கொண்டு வாடிவாசல் கட்டை பிரித்து சிலுப்பி கொண்டு வர, அதன் திமிலை லாபகரமாக முதலில் பிடித்தான் கருப்பன். 

அவன் பற்றிய அடுத்த கணமே அதன் திமிலை அய்யனாரும் பிடித்தான். அதனைப் பார்த்த விழாக் கமிட்டியினர் 

“யாராவது ஒருத்தன் புடிப்பா யாராவது ஒருத்தன் புடி” என்று கூறவே, இதனை விட்டு விட்டால் அவனிடம் தான் தோற்றுப் போக நேரிடும். இரண்டாவது கவுன்சிலரிடம் தான் கொடுத்த வாக்குறுதியையும் தன்னால் காப்பாற்ற முடியாமல் போய் விடும்” என்று அய்யனாரின் புத்தி யோசித்துக் கொண்டிருக்க,

அந்த களத்தை சுற்றி இருந்த அனைவரின் பார்வையும் திமிலை சுற்றி இருந்த கருப்பனின் அய்யனாரின் கைகளில் இருக்க,

 கருப்பனின் பார்வையும் நிலை குத்தி திமிலின் மீது இருக்க, அந்த காலையோ அந்த இரண்டு ஆஜனபாகுவான நபர்களையும் சேர்த்து இழுத்து சிலுப்பிக்கொண்டு அந்த களத்தை சுற்றிக் கொண்டிருந்தது. 

அதனை கவனித்த அய்யனார் தனது மற்றொரு கையால் இடுப்பில் சொருகி வைத்திருந்த, விஷமருந்து தடவிய பன்னருவாளை எடுத்து மாட்டின் கழுத்துக்கு கீழ் வழியாக கொடுத்து, கருப்பனின் வயிற்றிலும் இடுப்பிலும் சரமாரி பல கீறல்களை போட்டான். 

கருப்பனின் கவனம் முழுவதும் காளையின் மீது இருந்ததால் தன் உடலின் மீது உண்டான கீரல்கள் அவனின் எண்ணத்தில் பதியாமல் போயிருந்தது.

 அவனை ஜெயிக்கிறோமோ! இல்லையோ! ஆனால், கவுன்சிலர் கூறிய காரியத்தை தான் செய்து விட்டதால் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தோன்றியது அய்யனாருக்கு.

 அவனின் அந்த புன்னகையின் காரணம் அறியாத கருப்பனோ அவனின் முகத்தை கூர்ந்து புரியாத பார்வை பார்க்க, பன்னருவாளை அங்கு பரப்பி இருந்த வைக்கோல் புல்லில் யாருக்கும் தெரியாமல் வீசி எறிந்தவன் தனது கையை உதறிக்கொண்டு சென்றான் அய்யனார். 

அதன் பின் சில கணம் அந்த மாட்டின் திமிலை அழுத்திக்கொண்டு அதனோடு சேர்ந்து அதன் எல்லையை தொட்டிருக்கவும், கருப்பனே அதிக மாடுகளை அடக்கி இருப்பதாக கூறி பரிசு கருப்பனுக்கு தான் என்று அறிவிக்கப்பட்டது. 

 அந்த அறிவிப்பு வந்ததும் அனைவருக்கும் சந்தோஷம் என்றால், அதனை அனுபவிக்க வேண்டியவனோ அந்த விஷம் செய்த வீரியத்தின் காரணத்தால் காலை தரையில் ஊன்றி நிற்க முடியாமல், தடுமாறிய அந்த ஆறடி ஆஜான பாகுவான ஆண் மகன் அப்படியே பொத்து என்று அந்த வைக்கோல் புல்லின் மேல் விழுந்தான்.

கருப்பன் வேட்டை தொடரும்…

💝அக்கினியின் அனலும் அனலின் தாக்கமும்💝💝💝

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!