ஹார்ட் பீட் திருடன் – 04
ஹார்ட் பீட் திருடன் – 04
சென்னையியின் மத்தியில் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் தன் முன்னிருந்தவரை அழுத்தமாகப் பார்த்த ஜோகித் “பைஃவ் சீ” என்றான்.அவரோ “இல்லை” என மறுக்க மறுநொடியே தன் பாக்கட்டில் இருந்து சிறிய துணியிலான பையை விரித்துக் காட்ட அப் பை முழுவதும் சிறிய இரத்தினக் கற்கள். ஜோகித் முன் இருந்தவருக்கோ கண்கள் அவ் இரத்தினக் கற்களுக்கு நிகராக ஜொலித்தது.
ஜோகித் முன் இருந்தவரோ ஒரு பெட்டியை வைக்க,ஜோகித்தும் சிறிய துணிப்பையை கொடுத்து விட்டு தனது கண்ணாடியை ஸ்டைலாக அணிந்தபடி பெட்டியடன் ஹோட்டலை விட்டு வெளியேறினான்.
Advertisement
மறு நாள் காலை அன்பு இல்லத்திற்குப் புறப்பட்டாள் மகிஷா, அப்போது கரனிடமிருந்து அழைப்பு வந்தது. “மகி பஸ் ஏறிட்டியா? “ இல்லடா பஸ் ஸ்டான்ட் போகத் தான் “ஒகே வெயிட் பண்னு நானும் வாரன்” என்றவன் சிறிது நேரத்தில் அவளுடன் இணைந்து கொண்டான். பஸ்சும் வர இருவரும் அதில் ஏறியமர்ந்தனர்.
“ மகி டொனேஷன் நம்ம ஏறியா ஹவுன்ஸிலர்ட பேசிருக்கன் பார்ப்போம் திங்கட்கிழமை ஆபிஸ்க்கு வரச் சொல்லிருக்கார்” என்றான். “இந்த மாத செலவுக்கு என்ன பன்னுறனே தெரியல” என்றாள் பெருமூச்சடன். “இனிக் கொள்ளை தான் அடிக்கனும் என்றான்” மகியும் பக்கவாட்டாக கரனைத் திரும்பிப் பார்த்தவள். “என்னடா” “பின்ன என்ன மகி ஒவ்வொரு மாதமும் இதே புலம்பல் தான் செய்ற” என்றான் கரன்.
இருவரும் பேசியபடி அன்பு இல்லத்தை வந்தடைந்தனர் மகியைக் கண்டதும் “ அக்கா” என ஓடி வந்து அனைத்துக் கொண்டனர் வெளியே விளையாடிய பிள்ளைகள் அனைவரும். அன்று பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் ஆசிரமத்தில் தான் இருந்தனர். மகியுடன் வந்த கரனை முன்பே தெரியும் என்பதால் அவனுடனும் பிள்ளை நன்றாகப் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு கேசினான்.
Advertisement
இருவரும் தேவியம்மாவின் அலுவலக அறைக்குச் செல்ல அவரோ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். மகியையும் கரனையும் கண்டவர் புன்னகையுடன் வரவேற்றார். தேவியம்மாவிற்கு முன்னிருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்ததும் நல விசாரிப்பின் பின் மகி “வட்டி உறுதிப் பத்திரம் தந்துடானாமா?” எனக் கேட்க அவரும் “இல்லையேமா” என்றார் யோசனையுடன். மகி வட்டிக்கு அழைக்க வட்டியோ தனது கரகரப்பான குரலில் “ வந்து வாங்கிட்டுப் போ’ என்றான் விதாண்டாவாதாமாக “அம்மா நான் பத்திரத்த வாங்கிட்டு வாரன்” என்றவள் கரனுடன் புறப்பட்டாள். இருவரும் ஆட்டோவில் வட்டியின் வீட்டிற்கு வந்தனர்.
Advertisement
இரண்டடுக்கு வீடு அது வட்டியின் செல்வச் செலுமை அவ் வீட்டில் தெரிந்தது. கம்பு தடியுடன் அவனது ஆட்கள் வேறு ஆங்காங்கு நின்றனர்.மகியையும் கரனையும் பாதி வழியிலேயே நிறுத்தி விடயத்தைக் கேட்க அவளும் “பத்திரத்தை வாங்கனும்” என்றாள். அப்போது வட்டி இருவருடன் பலத்த வாக்குவாதத்தில் இருந்தான். மகியையும், கரனையும் கண்டவன் சைகை செய்ய அடியாளொருவன் உறுதிப்பத்திரத்தைக் கொடுக்க இருவரும் வாங்கிக் கொண்டு வெளியேறினர். அவ் பங்களா போனீற வீட்டை விட்டு வெளியே வந்த பின் தான் இருவருக்கும் மூச்சே வந்தது “ மகி எப்படிக் காசு புறளுது பார்த்தியா? அடிச்சா இவன்கிட்ட அடிக்கனும் ஆக்கள்ற இரத்தத்தையே வட்டியா உறிஞ்சிடுவான் போல ” என்றான் கரன்.
“ கரன் அடிச்சுடுவம்” என்றாள் மகி கரனோ அதிர்ச்சியுடன் “எத” என்றான். “தேவைக்கு அதிகமாவே வச்சிருக்கான் அதுல கொஞ்சத்த எடுத்தா ஒன்னும் தப்பில்ல “ என்றாள். “ எம்மா தாயே நான் சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா நீ இப்பிடிப் பன்றியேமா” என்றான் கரன்.
“கரன் பார்க்குக்கு போயிட்டுப் போவோம் என்றவள் அருகில் உள்ள பார்கிற்கினுள் இருவரும் நுழைந்தனர். “கரன் நான் உண்மையா தான் சொல்றன்”. “மகி நீ என்ன சொல்றனு புரியுதா? திருடச் சொல்ற இது சரியா?” மகியோ கண்கலங்கியவள் “ கரன் கொஞ்சம் யோசிச்சுப் பாரு அங்க இல்லத்துல பிள்ளையல் நல்ல சாப்பாடு சாப்பிட்டே பல நாள் என்னோட ஒரு மாத சம்பளத்த நான் அப்படியே குடுத்தாலும் போதுமா?” என கண்கலங்கிக் கேட்க “ ஆட்கள் பார்க்காங்க மொதல கண்ண தொடச்சிக்க” என்றவன் “மகி பிடிபட்டா நம்ம கெரியரே இல்ல” “ கரன் வட்டி வீட்ல ஒரு சிசிடிவியும் இல்ல அவன் பேசினத வச்சிப் பார்த்தா இன்னைக்கு நைட்டு வீட்டுல இருக்க மாட்டான் இதான் சந்தர்ப்பம்” என்றாள்.
Advertisement
கரனுக்கோ மகி சொல்வது புரிந்தாலும் பயம் விடவில்லை . சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த ஜோகித்திற்கோ மகியின் கலங்கிய முகம் தென்பட மனதில் ஏதோ ஒரு உணர்வு அவளையே அவன் வைத்த கண் வாங்காது பார்க்க” மச்சான் புரிதா” என அர்ஜின் கேட்க நண்பனின் பார்வை இங்கில்லை என்பதை உணர்ந்த அர்ஜின் ஜோதிடத்தின் பார்வை சென்ற திசையைப் பார்க்க அங்கு மகி இருந்தாள்.” கரனோ அவள் கையை ஆதரவாக தட்டியவன் “ ஒகே” என்றான். அப்போது தான் அவள் சற்றுத் தெளிந்தது. “அழகா இருக்கால?” ம்ம்” ஜோடிப் பொருத்தம் கூட நல்லா இருக்கு ஜோகித் அவனை முறைக்க “கூழ் ப்படி அடுத்து என்ன ஏலமொன்னு நடக்கப் போது அங்க தான் போகனும், இங்க இருந்து ஏலம் நடக்குற இடத்துக்கான செர்வண்ட் எடுக்காங்க அதுல ஜாயின் பண்ணா சரி எல்லாம் ரெடி நைட்டே கிளம்புவோம்” என்றான் ஜோகித். பார்க்கை விட்டு இருவரும் வெளியே வரும் போது மகியை தன் விழிகளில் ஒருமுறை நிரப்பிக் கொண்டு பார்க்கை விட்டு வெளியேறினர்.
அந்த இரவு ரொம்ப அமைதியாக இருந்தது ஆனால் மகிஷாவோட மனசுக்குள்ள மட்டும் ஒரு சின்னப் புயல் அடிச்சுகிட்டே இருந்தது. அன்று பார்கில் இருந்து வந்த மகிஷா தேவியம்மாவிடம் காணி உறுதிப் பத்திரத்தைக் கொடுத்தவள் அன்று மாலை வரை அங்கேயே இருந்தாள் “ம்மா நாங்க போயிட்டுவாரம் ஏதும்னா கால் பண்ணுங்க” என்றவள் சொல்ல தேவியம்மாவும் அவர்களுக்கு விடை கொடுத்தார்.
அன்று இரவு மணி ஒன்பது இருக்கும் சில பொருட்களுடன் வட்டியின் வீடு இருந்த ஏறியாவிற்கு இருவரும் வந்தனர். “மகி இன்னொரு வாட்டி யோசிச்சுக்க” என்றான் கரண். அவனை முறைத்தவள் “நீ வரலனா விடு கரன் நான் பார்த்துக்கிறன்” என்றவள் முன்நோக்கிச் சென்றாள்.” மகி நில்லு நில்லு வாரன்” என்றபடி அவனும் அவளுடன் சேர்ந்து கொண்டான். வட்டியின் வீட்டிற்குப் பின்புறம் இருந்த மதிலருகில் வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்க்க மதிலை தாண்டுவதற்கு வாகாக மரமொன்று இருப்பதைக் கண்டனர். முதலில் கரன் ஏறி உள்ளே குதிக்க அவனைத் தொடர்ந்து மகிஷாவும் மதிலில் ஏறி நின்றாள்.அவளின் மூச்சுக் காற்றுக் கூட அவளுக்கு பெரிய சத்தமாக கேட்டது. இரவின் அமைதியில் தூரத்தே குரைக்கும் நாயின் சத்தம் ஒருவித பயத்தைத் தந்தது. இருப்பினும் இக் காரியத்தை முடிக்க வேண்டுமே அவளும் கரனைத் தொடர்ந்து மெல்ல உள்ளே குதிக்க வீடு சுற்றி இருட்டாக இருக்கவே வட்டி வீட்டில் இல்லாததை உறுதிப்படுத்தியது.
“டேய் கரன் நீ வெளிய இரு நான் இந்த ஜன்னல் வழியா உள்ள போறன்” என்றவள் ஜன்னலால் உள்ளே பார்த்தபடி உள்ளே குதித்தாள். குதித்த வேகத்தில் மூச்சு வாங்க நெஞ்சை பற்றி தன்னை ஆசுவாசப்படுத்தி நிமிர்ந்தவளுக்கோ திக்கென்றிருந்தது. நடு ஹாலில் வட்டியின் அடியாட்கள் இருவர் சரக்கடித்து மட்டையாகிக் கிடந்தனர்.
“ கரண் டன்” என அவனுக்கு குறுஞ் செய்தியை அனுப்பியவள் பதுங்கிப் பதுங்கி கீழிருந்து மூன்று அறையிலும் தேடினாள் பத்திரங்களைத் தவிர பெறுமதியான எதுவும் அங்கில்லை. மெல்ல மெல்லத் முதல் தளம் வந்தவள் ஒரு அறையைத் திறந்து மெல்ல உள்ளே நுழைய அதுவோ ஒரு பேர்ச்சுலர் அறை எப்படி இருக்கமோ அப்படி இருந்தது. அங்கிருந்த அலுமாரியைத் திறக்க வட்டுக்கட்டாய் பணமும் நகைகளும் இருந்தன. மனதில் தான் செய்யும் காரியத்தை நினைத்து மனம் சஞ்சலப்பட்டாலும் கண்முன் அன்பு இல்லமும், பிள்ளைகளும் வர நகைகளை கைகள் நடுங்க எடுத்தவள் பணத்தில் சில கட்டையும் எடுத்துக் கொண்டாள். அவற்றை தான் கொண்டு வந்த தோள் பையில் வைத்தவள்.மெல்ல பூனை நடை நடந்து கீழே வர வட்டியின் அடியாள் போதையில் தள்ளாடியபடி நின்றான்.
அவன் தன்னை கண்டு கொள்ளாதவாறு இருளில் மறைந்து மறைந்து ஜன்னல் வழியாக வெளியேறினாள்.அவள் வெளியே வந்ததைக் கண்டதும் தான் கரனுக்கு மூச்சே வந்தது. எந்நேரமும் வட்டி வரும் சாத்தியம் இருப்பதால் இருவரும் விரைந்து கேட்டின் வழியாலே சுற்றும் முற்றும் யாரும் இல்லை என்பதை உறுதிக்கடுத்திக் கொண்டு வெளியேறினர்.
அப்படியே இருவரும் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தவர்கள் அங்கிருந்த பயணிகள் இருக்கையில் அர்ந்தனர். மகியோ கைகளில் போட்டிருந்த கிளவுசைக் கழற்றி அருகில் இருந்த காணினுள் வீசியவள் கரணிடமிருந்து தண்ணீரைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“மகி என்னாச்சு நீ போய் வரும் மட்டும் எனக்கு பக்கு பக்குனு இருந்துச்சி” “ மகியோ சிரித்தபடி கண்சிமிட்டியவள் “எல்லாம் ஓகோ வட்டிட ஆளுங்க குடிச்சிட்டு மட்டயாகி கிடந்தானுங்க” என்றாள். அப்போது சென்னை செல்லும் பஸ் வர இருவரும் அதில் ஏறி அமர பஸ்சும் சென்னை நோக்கிப் புறப்பட்டது.
இருவரும் சில மணிநேரப் பயணத்தின் பின் சென்னையை அடைந்தனர்.”கரன் காலைல பார்க்கலாம்” என்ற மகி தனது குவாட்டஸிற்குள் நுழைந்து கொண்டாள்.
சென்னையை வந்தடைந்த ஜோகித் ஏலம் நடைபெறும் இடத்தில் வேலை செய்யும் செர்வண்டுடன் இனைந்து கொண்டான். மகிஷா திருடி என்றாள் ஜோகித்தோ திருடிக்கேத்த திருடன். அதுவும் இன்டர்நெஷனல் லெவலில் தான் அவன் திருட்டு இருக்கும்
ஜோகித் மகிஷாவின் இதயத்தை திருடுவானா அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
