வீட்டு வேலைக்கென அன்று ஆட்கள் வருவதால் அலாரம் வைத்து எழுந்து கொண்டனர் புதுமண ஜோடிகள் வேறு வழியின்றி.
Advertisement
வாணி அன்றும் சமைத்து அனுப்புவதாய் சொல்ல மறுத்து விட்டு இவர்களுக்கானதை காலையிலேயே சமைத்து முடித்திருந்தாள் யமுனா.
எழுந்து குளித்ததும் அறைக்குள் சென்ற தீனா இன்னும் வெளியே வராததை கண்டு, ‘என்னாச்சு.. டையர்டுல திரும்ப தூங்கிட்டாரோ..?’ என நினைத்தபடி உள்ளே வர அங்கே யோசனையில் ஆழ்ந்திருந்தான் தீனா.
Advertisement
Advertisement
“ஏங்க.. என்னாச்சு..? எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..?” என கேட்டபடி அவனருகே வர,
அவளை ஏறிட்டு நோக்கியவன் அவளையும் தனக்கு அருகே அமர்த்தி, “ஒண்ணுமில்ல பாப்பா. நேத்து நீயும் மாமாவும் அவர பேசியே மடக்கி எல்லாத்தையும் அவரையே செய்ய வச்சது சந்தோஷம் தான்.
Advertisement
ஆனா அவரு மட்டும் அப்ப உணர்ச்சிவசப்பட்டு என்னை கார்னர் பண்ண சக்தி மாமா முன்னாடி அம்மா விசயத்தை எடுத்திருந்தா என்ன ஆகியிருக்குமுன்னு.. திடீர்ன்னு தோணுச்சா.. அதான்..” என்றிட,
நீங்க சொல்லாததை அவரா வெளியே சொல்லி.. வர்ற பிரச்சனையால நீங்க இங்கிருந்து திரும்ப போயிட்டா.. அவருக்கு உங்கள நிறுத்தி வைக்க வேற எந்த வழியுமே இல்ல.. இல்லையா.. அதனால அடக்கி தான் வாசிப்பார்.
அந்த நம்பிக்கைய வச்சு தான் அவரோட சூதை உடச்சு அவர் கையால இதை செய்ய வச்சிருக்கேன்..” என சீரியஸ்ஸான பாவனையில் சொல்லிக்கொண்டிருந்தவள்,
“இதெல்லாம் செய்ய கொஞ்சமாச்சும் மண்டைல க்ரைன் இருக்கனும் மாமோய்.. உங்களுக்கு தான் உங்க அப்பா விசயத்துல அது அப்ப அப்போ ஆஃப் ஆகிடுதே..” என நக்கலாய் பேசி வம்பிழுக்க,
அவளை வேகமாய் இடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கியவன், “இந்த வாய் அடங்கவே அடங்காதில்ல.. ராத்திரில இருந்து ஓவரா பேசி உசுப்பேத்திட்டே இருக்கு.. அத அடக்கிடலாமா..?” என அவளை நெருங்கும் போதே வெளியே ஆட்களின் சத்தம் கேட்க,
“ஆளுங்க வந்துட்டதால இப்ப தப்பிச்சிட்டே. இன்னைக்கும் நம்ம மட்டும் தானே இங்கே.. இரு அப்ப வச்சுக்கறேன்..” என அவளுக்கு மட்டும் கேட்கும் படி கிசுகிசுத்தவன், அவசரமாய் அவளின் இதழில் மென்முத்தமதை பதித்தே சென்றான்.
அவன் செய்த செயலில் உண்டான கூச்சத்தை தன் கால் விரல்களை நிலத்தில் அழுத்தி கட்டுப்படுத்தியவள், ‘தானும் எதாவது செய்ய வேண்டுமா..?’ என பார்க்க பின்னாலேயே சென்றாள்.
அதன் பின்னான நாட்கள் மின்னலென விரைய.. இதோ தீனா யமுனாவிற்கென தனி ராஜ்ஜியம் அந்த வீட்டில் சுபமாய் ஆரம்பித்திருந்தது.
ஜெகதீஷிடம் வாணியும் சக்தியும் எப்படி பேசினார்களோ, வந்ததும் அந்த அறையை ரசித்து பார்த்தானே ஒழிய.. ஏன் எதற்கென்ற கேள்வி வரவே இல்லை அவனிடம்.
அது ஒரு விதத்தில் தீனாவிற்கு நிம்மதியாக இருந்தது என்றே சொல்லலாம்.
அந்த வாரத்திலேயே ஒருநாள் தங்கமணி வீட்டு விருந்துக்கு சென்று, வேலை பார்க்குமிடத்தில் எல்லாருக்கும் பிரயாணி பார்சலை கொடுத்து எளிமையாய் அவர்களின் திருமண விருந்தை முடித்திருந்தனர்.
அங்கே சென்று வந்த இரு தினத்தில் தீனதயாளனும் வேலைக்கு என செல்ல ஆரம்பித்திருக்க.. காலை வேளை யமுனாவிற்கு பரபரப்பாகவே கழிந்தது.
தீனா ஆறு மணிக்கு கிளம்பினாலே ஒன்பதுக்கு தான் கம்பெனியை அடையவே முடியும்.
திருப்பூரை பொறுத்தவரை எட்டு மணிக்கே வேலை நேரம் ஆரம்பித்து விடுமே.. அங்கேயே இருந்தவரை அவனுக்கு அது பெரிதான விசயமே இல்லை.
இப்போது அந்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்றால், மூன்று பஸ் மாறி செல்ல அந்த நேரம் கடந்துவிடுகிறது.. என ஆறு மணிக்கு முன்னமே கிளம்ப,
அதுக்கு முன் அவனுக்கான காலை மதிய உணவை தயாரிக்கவென யமுனா இன்னும் சீக்கிரமே எழ வேண்டிய சூழ்நிலை.
இரவில் தீனா தேடலை அவளிடம் முடித்து அவளை உறங்க விடவே நேரமாக.. காலையும் இப்படி அரக்க பறக்க எழுந்து செய்வதை கண்டவனுக்கு மிகவும் கஷ்டமாகி போனாலும்.. இளமை தரும் உந்துதலில் அவளை விட்டு விலகி இருப்பதும் மிகவும் கடினமாக தான் இருந்தது அவனுக்கு.
“எனக்காக நேரமே எழுந்து சமைக்க வேண்டாம்.. பாப்பா..” என தீனா சொன்ன போது,
“நீங்க அலையறதுக்கும்.. நைட் சரியா தூங்காம இருக்கறதுக்கும் சத்தான ஆகாரம் இல்லாம இருந்தா உடம்பு என்னத்து ஆகும்..? நா மதியம் கூட தூங்கிப்பேன்..” என பிடிவாதமாய் அவளும் செய்து தர, வேறு என்ன அவன் செய்வான்.
இப்படியே பத்து நாட்கள் கடந்த நிலையில் அன்று வேலை குறைவாக இருக்க, முகத்தில் புதுமணமகனுக்கான அத்தனை பூரிப்பும் இருந்த போதும்.. ஏதோ ஒன்றை நினைத்து அவன் குழம்புவதை கண்டு கொண்ட தங்கமணி, “எப்படி போகுதுடா மேரேஜ் லைஃப்..?” என கேட்க மொத்தமாய் புலம்பி தள்ளிவிட்டான்.
“இதெல்லாம் வருமுன்னு தெரிஞ்சு தானே யோசிச்சு பேசுன்னு அன்னைக்கு சொன்னேன். கேட்டீயா..?” என ஆதங்கமாய் சொன்னவர்,
“ஒரு ஐடியா சொல்லவா..? சிவனேன்னு ஒரு வண்டிய வாங்குடா. ஷார்ட்கட் எடுத்தா ரெண்டு மணி நேரத்துல வந்திடலாம். நைட்டும் சீக்கிரமா வீட்டுக்கு போகலாம்..” எனச்சொல்ல,
தங்கமணி ஏற்கனவே கொடுத்த பணத்தில் முக்கால் பாகம் அன்று விருந்திலேயே முடிந்திருக்க, மிச்சமிருந்ததில் அவர்கள் அறைக்கு கட்டில் மெத்தை பீரோ என பொருட்களை வாங்கியிருந்தான்.
இனி உடனடியாக வண்டி என்றால்.. ஈஎம்ஐ போட்டாலும் முன் தொகை வேண்டுமே..? என்ற எண்ணத்தில்,
“அடுத்த மாச சம்பளம் வாங்கிட்டு பார்க்கலா ண்ணே..” என்றுவிட்டு எழுந்து சென்றிருந்தான் தன் வேலையை தொடர.
அவனுக்கு அந்த சிரமத்தை தராமல் அவனுக்கு பிடித்ததாய் முன்பு குமரனிடம் சொல்லியிருந்த வாகனம், அந்த வார இறுதியில் அவன் கைக்கு வந்து சேர்ந்தது தங்கமணியின் உபயத்தால்.
“ஏற்கனவே நீங்க கொடுத்த பணத்தையே சம்பளத்துல பிடிச்சுக்க சொல்லியும் முழுசா போட்டிருக்கீங்க. இதுல இதுவும் ஏன் ண்ணா..?” என தீனா அவர் முன் சங்கடமாய் நிற்க,
சம்பளம் வாங்க, வெளி யூனிட் ஆட்கள் என நிறைய பேர் இருந்ததால் சிறிது நேரம் காத்திருக்க சொன்ன தங்கமணி,
ஓரளவு தனிமை கிடைத்ததும், “கொஞ்ச வருஷத்துக்கு முன்னே சாப்பாட்டுக்கு கூட வச்சுக்காம மொத்தமா தொடச்சு உங்க அப்பாகிட்ட கொடுத்துட்டு சாப்பிடாம திரிஞ்சே ஒரு நாள் முழுக்க.. நியாபகம் இருக்கா..?” என்றார் கடுப்பாக.
“இருக்கு ண்ணே. அதான் அப்ப இருந்து எனக்கு தேவையானத எடுத்துக்கறேனே..” என்றான் தவறை திருத்திக்கொண்ட பாவனையில் தீனா.
“நல்லா எடுத்தே.. நீ சேத்து வைக்கற லட்சணம் தான் எனக்கு நல்லா தெரியுமே..!
உங்க அண்ணிகிட்ட போய் இந்த பையன் செய்யற வேலைய பாருன்னு.. புலம்பினேன்.
அப்போ தான் அவ சொன்னா.. மொத்தமா பணத்த நீங்க கொடுத்தா அவன் அள்ளி கொடுத்துட்டு தான் இருப்பான். நீங்க அவனுக்கு கொடுக்கற சம்பளத்துல புடுச்சுட்டு கொடுங்க.. பின்னாடி அவனுக்கு யூஸ் ஆகுமுன்னு.
ஆடிட்டர் சொன்னாருன்னு நம்ம ரெண்டு பேர் பேர்லையும் சேர்த்து ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கனுமுன்னு செஞ்சோம் நியாபகம் இருக்கா..?” எனக்கேட்டதும்,
நியாபக இடுக்கில் தேடி சில வருடத்திற்கு முன் அதாவது தங்கமணி மகளின் திருமணம் முடிந்த போது அப்படி செய்தது நினைவில் எழ, ‘ஆமாம்..’ என தலையசைத்தான்.
“அப்ப இருந்து உனக்கு சம்பளத்துல போட்ட இன்க்ரீமென்ட், அது போக நீ தனியா பேசி புடுச்ச பார்ட்டிங்களுக்கு அனுப்பற சரக்குக்கு – –% கமிஷன் கால்க்குலேட் பண்ணி போட்டதுன்னு எல்லாம் அந்த அக்கவுண்ட்ல தூங்கிட்டு இருந்துச்சு. இதான் அதோட பாஸ் புக்.
நா உனக்கு கொடுத்தது உன்னோட பணம் தான். இப்ப வண்டி வாங்கினதும் அதே பணத்த எடுத்து தான்.. மிச்சமிருக்கறது..” என அவர் காட்டிய கணக்கை கண்டவனுக்கு ஒரு நொடி ஆனது அதில் இருந்த எண்ணை முழுவதும் உள்வாங்க.