Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 11

அத்தியாயம் 11

 

அடுத்த இரண்டு நாட்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. லாவண்யாவும் தோழி திருமண விழாவில் பிஸியாகிவிட, அது இன்னும் வசதியானது.


Advertisement

 

இந்த இரண்டு நாட்களில் பல்லவி லதாவுடன் சேர்ந்து அவ்வளவு பேச்சுக்கள்.

Advertisement

Advertisement

 

கூடவே, “என் அம்மாக்கு மட்டும் உங்ககிட்ட நான் இப்படி எல்லாம் பேசுறேன்னு தெரியணும். ஸ்ட்ராயிட்டா வாயில தான் சூடு!” என பல்லவி சொல்ல,

Advertisement

 

“ஏன் இப்ப தான் நாம கிளோஸ் ஆகிட்டோமே! அப்பவும் சித்ரா திட்டிட முடியுமா? “ என லதா முறைக்க,

 

“அம்மா அப்படி தான் லதாம்மா. இப்ப நான் படிக்குறதுக்கு உங்ககிட்ட ஹெல்ப் கேட்டேன் சொன்னதுக்கே பயங்கரமா திட்டினாங்க. உன்னை உதவி பண்ண அனுப்பினா நீ உதவி கேட்டுட்டு வந்திருக்கியான்னு. அம்மா என்ன சொன்னாலும் கேட்டுப்பேன் தான் நானும். ஆனா படிக்கணும்னு ஆசை இருக்கே. அதுவும் அந்தந்த வயசுல தான். காலம் போனா கிடைக்குமா?” என்ற பல்லவி,

 

“ஆனா நான் படிச்சு மட்டும் நல்ல பொசிஷன் போய்ட்டேன்னா. உங்க பையன் தர்ற காசை டபுளா அவர்கிட்ட வட்டியோட கொடுத்துடுவேன். அதுல எல்லாம் சரியா இருப்பேன்!” என்பவள் ஆசை புரிய தான் செய்தது லதாவிற்கு.

 

இந்த இரண்டு நாட்களும் அஞ்சலிக்கும் தேர்வு விடுமுறை. அவளும் பல்லவியுடன் சேர்ந்து கொண்ட நேரம்.

 

அடுத்த நாள் லாவண்யாவிற்கு முன்பே விஷயம் லாவண்யாவின் தந்தை வரதராஜன் காதுகளுக்கு வந்து சேர்ந்தது.

 

வேறு யாரோ சொல்லி அவர் தெரிந்து கொள்ள மகேஸ்வரன் விரும்பவில்லை. கூடவே இது முதலில் லாவண்யாவிற்கு சொல்வதும் முறையில்லை என்று நினைத்தவர் தானே சென்று வராதராஜனிடம் சொல்ல, எதுவும் பேசாமல் அமைதியாய் அவரை பார்த்தார் வரதராஜன்.

 

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். இப்ப வேண்டாம்னு ஒத்த காலுல நிக்குறான். என்ன பண்றதுனே புரியல!” என்று அவர் பார்வைக்கு விளக்கம் கொடுத்தார் மகேஸ்வரன்.

 

“இப்ப நான் என் பொண்ணுகிட்ட என்ன சொல்றது? என்னை விடேன்! அவ தான் ரொம்ப ஆர்வமா இருந்தா இந்த கல்யாணத்துல!” வரதராஜன் சொல்ல,

 

“கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போட தான் சொல்லிருக்கான். மத்தபடி எந்த குறையும் இல்லாமல் இப்ப நினைச்சதை விட நல்லாவே பண்ணிருவோமே?” என்றார் நயைந்த மகேஸ்வரனும்.

 

“கொஞ்ச நாள்? ரெண்டு வருஷம்ன்றது உனக்கு கொஞ்ச நாளா?” என்றார் கோபத்தை அடக்கிய வரதராஜன்.

 

இரண்டு வருடமா மூன்று வருடமா என மகேஸ்வரனுக்கே குழப்பம் தான். மகன் பேசிய விதமே இப்பொழுதும் அவருக்கு புரியவில்லை.

 

 

திருமணத்தை இப்போதைக்கு தானே நிறுத்தி வைக்கிறான் என நிம்மதி கொள்ளும் அளவிற்கு அவரை மாற்றி இருந்தான் பேச்சின் மூலம் கீர்த்திஸ்வரன்.

 

இதில் வரதராஜன் இரண்டு வருடம் என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்ததற்கே கண்கள் சிவக்கப் பார்க்க, எதற்கு இந்த வயதில் இப்படி அங்கேயும் இங்கேயுமாய் இத்தனை தன்னை அல்லாட வைக்கின்றனர் என நொந்து போனார்.

 

“லுக் மகேஸ்வரன்! லாவண்யாக்கு உன் பையனை பிடிச்சிருச்சுன்றதால தான் அமைதியா இருக்கேன். ரொம்ப சீண்டிப் பார்க்காத. நீ சொல்ல வேண்டியதை சொல்லிட்ட இல்ல? லாவண்யா மட்டும் இப்ப உன் பையனை வேண்டாம்னு சொல்லட்டும்.. அத்தோட எல்லாத்தையும் நான் முடிச்சுக்குவேன்!” என்று வரதராஜன் சொல்ல,

 

தன் குடும்பம் தன் தொழில் என தான் தான் மற்றவர்களை அடக்கி ஆண்டு பழக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு பெரிதாய் தன்மானத்தில் அடிவாங்கியதை போல சுருக்கென்று தான் வந்தது.

 

அப்படி என்ன இவனும் இவன் பெண்ணும் தான் உலகத்தில் இருக்கிறார்களா? லாவண்யா வேண்டாம் என்றே சொல்லட்டுமே! என்று தோன்ற வைத்துவிட்டது மகேஸ்வரனுக்கு வரதராஜனின் இந்த திமிர்பேச்சு.

 

இவர்களிடம் பையனை கொடுத்து தான் அடிபணிந்தும் நிற்க வேண்டுமா? அதுவும் அவள் சொல்லி என் மகனை இவர்கள் தேர்வு செய்வதா வேண்டாமா எனும் நிலை என்றால் இவர்கள் என் மகனுக்கும் மதிப்பு தரவில்லை தானே என தன் அவமான உணர்வில் தான் ஒவ்வொன்றாய் தோன்ற ஆரம்பித்தது மகேஸ்வரனுக்கு.

 

எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்துவிட்டாலும் இப்படி ஒருவன் முன் அமைதியாய் வந்து பழக்கமில்லாதவருக்கு அதுவுமே அத்தனை எரிச்சலை கொடுக்க வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் முடங்கிக் கொண்டார் அன்று முழுதும்.

 

மகஸ்வரன் சென்றதும் வரதராஜன் மகளுக்கு அழைக்க, “ஈஸ்வர் கால் பண்ணினாங்க ப்பா. அங்க தான் போய்ட்டு இருக்கேன்!” என்றாள் லாவண்யா. அவள் குரலில் கூட அத்தனை துள்ளல்.

 

ஏன் அவன் அழைத்திருப்பான் என புரிந்தவர், “அப்பா கொஞ்சம் பேசணும். வீட்டுக்கு வர்றியா?” என அங்கே மகள் செல்வதை தடுக்க நினைத்து கேட்க,

 

“நோ ப்பா! ஈஸ்வர் ஃபர்ஸ்ட் டைம் கால் பண்ணி பேசணும் சொல்றது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் திமிர்பிடிச்சவன். இதுவரை என் பேச்சை கேட்டதே இல்ல அவன். அது தான் டிஸ்டர்ப் ஆகுது. அவனை அப்படியே விட முடியாது ப்பா. கொஞ்சம் விட்டுப் பிடிக்கணும். நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன்!” என்றவள் அடுத்து தந்தை பேசும்முன் வைத்துவிட்டாள்.

 

கீர்த்திஸ்வரனிடம் இன்னும் இதுநாள் வரையிலும் அதிகமாய் பேசி பழக்கம் இல்லை வரதராஜனுக்கு. அவனுடைய பேச்சு பழக்கம் என எதுவும் தெரியாது. மகளிடம் என்ன சொல்வானோ என ஒரு எண்ணம். எதையும் அமைதியாய் மகள் கையாள மாட்டாளே என ஒரு எண்ணம்.

 

அதற்கு தான் தானே பேசலாம் என லாவண்யாவை அவர் அழைக்க, அவனை தான் பார்ப்பேன் என அடம்பிடித்து சென்று கொண்டிருக்கிறாள் மகள்.

 

லதா அருகே பல்லவி என்னவோ பேசியபடி அமர்ந்திருக்க, ஆழ்ந்த சிந்தனையோடு அங்கேயே தனியே அமர்ந்திருந்தாள் அஞ்சலி.

 

“உங்க குடும்ப ரகசியத்தை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க லதாம்மா. அதுவும் உங்க பையன் அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்ல போறதை கூட என்கிட்ட சொல்றிங்க!” என பல்லவி கிண்டல் செய்ய,

 

“வாயை மூடு டி! என் வீட்டுக்காரர் மட்டும் நீ இப்படி சொல்லும் போது வந்திருக்கணும். என்னையும் சேர்த்து வீட்டைவிட்டு வெளில துரத்தி இருப்பார்!” என்ற லதா,

 

“அன்னைக்கே என்ன சொன்னேன் உன்கிட்ட? இப்ப கல்யாணம் வேண்டாம்னு தான் அவன் சொல்றான். அதை தான் அந்த லாவண்யாகிட்ட கூட சொல்ல போறான். நீ மொத்தமா முடிச்சுவிட்ட மாதிரி சொல்ற? இதுக்கு தான் ஈஸ்வர் வெளியாட்கள் முன்னாடி பேசவே மாட்டான். நீயே இப்படி சொன்னா வெளில என்னென்ன பேசுவாங்க!” என்றார் முறைத்து.

 

“அதென்ன நீயே? நானும் வெளியாள் தான். நீங்க தான் இப்படி என்கிட்ட உளறிட்டு இருக்கிங்க!” என பல்லவி சொல்ல, அதை உணர முடியாத அளவுக்கு அவளோடு இணைந்திருந்தார் லதா.

 

“சும்மா இரு. லாவண்யா எப்ப வருவாளோனு நானே பயந்து போய் இருக்கேன். அவன் பேசினா பக்கத்துல இருக்கவங்களுக்கே கேட்காது. லாவண்யா பேசினா எட்டூருக்கு கேட்கும். இவன் வேற வீட்டுக்கு வர சொல்லிருக்கான். என்ன பண்ண போகுதுங்களோ!” என லதா புலம்ப,

 

“உங்களுக்கு விவரம் புரியல லதாம்மா. அன்னைக்கு உங்க பையன் என்ன சொன்னார்னு மறந்து போச்சா? ஆபீஸ்க்கு வந்து லாவண்யா கத்தினா. நல்லவேளை நான் ரூம்ல இருந்ததால வெளில கேட்கலனு சொன்னாரா? இன்னைக்கும் அந்த மாதிரி அந்த பொண்ணு கத்தி வெளில விஷயம் பரவிட கூடாதுன்னு விவரமா தான் உங்க பையன் வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க!” என்று சொல்ல,

 

“ஆமாவா?” என்றார் அதிர்ச்சியாய் லதா.

 

அதுதான் நிஜமான நிஜமும் கூட. அவள் சத்தமிட்டு சண்டையிட்டால் கூட சரி தான். ஆனால் ஈஸ்வர் இப்பொழுது தானும் இன்று பதிலுக்கு பதில் பேசியாக வேண்டிய கட்டாயம். அது வெளியில் மற்றவர்கள் பார்வைக்கு நடப்பதை விரும்பாமல் தான் இங்கே வர சொல்லி இருந்தான்.

 

லதாவின் அதிர்ச்சியில் பல்லவி சிரித்தவள், “என்ன சொன்னாலும் நம்பிடுறது” என்றவள் அப்பொழுது தான் அஞ்சலியை கவனித்தாள்.

 

“அஞ்சலி!” என அழைத்தபின் தான் அஞ்சலியின் கவனமே இங்கே வர,

 

“கூப்பிட்டீங்களா அண்ணி?” என்றாள் தெளிந்தவள்.

 

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று அவள் கேட்க,

 

“இல்லையே! சும்மா தான்!” என்றாள் அஞ்சலி.

 

“எக்ஸாம் டென்ஷனா அஞ்சலி?” என்றார் லதாவும் மகளை கவனித்து.

 

“இல்லையே ம்மா! சும்மா என்னவோ யோசிச்சுட்டு இருந்தேன். நீங்க சாப்பிடுறிங்களா? எடுத்துட்டு வரவா?” என அஞ்சலி பேச்சை மாற்ற,

 

“ஆண்ட்டி! ஈஸ்வர் எங்க!” என்று லாவண்யா வந்துவிட்டாள்.

 

“என் பேக்ல இல்லையே லதாம்மா?” என தன் கைப்பையை எடுத்த பல்லவி எதையோ தேடிவிட்டு,

 

“நீங்க எங்கேயும் வச்சுட்டீங்களா?” என்று அந்நேரம் பார்த்து அவள் கேட்க, லாவண்யாவின் முகத்தில் அத்தனை கோபசூடுகள்.

 

“பல்லவி?” என லதா முறைக்க,

 

“இப்ப தானே சைன் பண்ண பெண் கேட்டீங்க என்கிட்ட? அதான் என்கிட்ட இல்லைனு சொன்னேன். உங்ககிட்ட இருக்கா இல்லையா?” என்றாள் மீண்டுமாய் பல்லவி.

 

அவளைக் கண்டுவிட்டு முறைத்து எதுவும் சொல்லாமல் லாவண்யா ஈஸ்வர் அலைபேசிக்கு அழைத்தபடி வெளியேற, அருகில் நின்ற பல்லவியின் காதைப் பிடித்துக் கொண்டார் லதா.

 

“வாய் வாய்! நீ வந்த நேரம் நான் படிச்சிட்ருந்த புக்ல மார்க் பண்ண பெண் கேட்டேன். அதை நீ எப்ப எந்த நேரத்துல சொல்ற? ஏற்கனவே என்ன பண்ணுவாளோனு இருக்கு. நீ வேற!” என வலிக்க அவள் காதைப் பிடித்து அவர் இழுக்க,

 

“எனக்கு அப்ப தான் நியாபகம் வந்துச்சு லதாம்மா. ஆஹ்ஹ்!” என்று பல்லவி சத்தமிட, பார்த்த அஞ்சலிக்கு அப்பொழுது தான் சிரிப்பு வந்தது.

 

மேலும் சில நிமிடங்கள் இவர்கள் பேசிக் கொண்டிருக்க, லாவண்யாவின் சத்தம் எதிர்பார்த்தபடி இவர்கள் அறை வரை கேட்க,

 

“ஆபீஸ் ரூம்குள்ள அவங்க போறதை தான் பார்த்தேன் ம்மா. இப்ப ஹால்க்கு வர்றாங்க லாவண்யா அண்ணி!” என்றாள் வெளியில் எட்டிப் பார்த்து நின்ற அஞ்சலி.

 

ஈஸ்வர் தான் லாவண்யாவை அலுவலக அறைக்கு அழைத்து சென்று பேசி இருக்க, அவன் சொல்லிய செய்தியில் கோபம் கொண்டு அவனை பேசியபடி ஹாலுக்கே வந்துவிட்டாள் லாவண்யா.

 

“என்ன! சீட் பண்றிங்களா நீயும் உன் அப்பாவும்? என்னை ஏமாத்த பாக்குறீங்களா?” என்றபடி வெளிவந்தவள் குரல் நன்றாய் கேட்க,

 

“நான் என்ன சொல்றேன் நீ என்ன சொல்ற?” என பின்னோடே வந்திருந்தான் ஈஸ்வரும்.

 

“லதாம்மா!” என லதாவிடம் மெதுவாய் பல்லவி என்னவோ சொல்லவரவும் அவள் வாயை கை கொண்டு மூடிய லதா,

 

“எதாவது சொன்ன!” என்று மிரட்டிவிட்டு, வெளியில் கேட்கும் சத்தத்தில் கவனத்தை வைத்தார்.

 

முடிவில், “எனக்கு தெரியாது. எனக்கு அடுத்த மாசம் என் கல்யாணம் நடந்தே ஆகணும்!” என்று லாவண்யா குரல் கேட்க,

 

அதுவரை அவளை சமாதானம் செய்ய முயன்ற கீர்த்திஸ்வரன், “அப்போ ஒரு நல்ல பையனா உன் அப்பாவை பார்க்க சொல்லு. கிளம்பு!” என்றவன் அதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பதாய் மாடிக்கு தன் அறை நோக்கி படியேற ஆரம்பித்துவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!