Skip to content
Post Views: 1,466
அத்தியாயம்-8
அமைதியான அந்த நெடுஞ்சாலையில் வசீகரனின் கார் இருட்டைக் கிழித்துக்கொண்டு வேகமாக சென்றது. குளிந்த காற்று அதிதியின் முகத்தில் மோதும்படி கார் கண்ணாடியை இறக்கிவிட்டிருந்தான் வசீகரன்.
அவ்வப்போது கடந்து போன ஒரு சில வாகனங்களின் ஒலியைத்தவிர பெரும்பாலும் நிசப்தமே நிறைந்திருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்தவன் எதோ தோன்ற இடப்புறம் திரும்பி பார்க்க, அதிதி விரிந்த விழிகளால் அவனையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
Advertisement
அந்த பார்வையில் என்ன இருந்ததோ தெரியவில்லை மயிர்க்கூச்செரிந்தது அவனுக்கு..
சட்டென்று பார்வையை சாலையின் பக்கம் திருப்பினான்.
‘எப்போது விழித்தாள் இவள்? ஏன் எதுவும் பேசாமல் இப்படி என்னை விழுங்குவதுபோல் பார்க்கிறாள்..?’ காரில் நிலவிய அமைதியின் கனம் தாளாமல் ரேடியோவை ஆன் செய்தான்..
Advertisement
“வரும் வழியில் பனி மழையில்
Advertisement
பருவ நிலா தினம் நனையும்
முகில் எடுத்து முகம் துடைத்து
விடியும்வரை நடைபழகும்
Advertisement
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவமகள் விழிகளிலே கனவு வரும்..”
என்று SPB பாடிக்கொண்டிருந்தார்.
‘சிட்சுவேஷன் சாங் வேற..’ என்று அதை நிறுத்திவிட்டு.. மீண்டும் திரும்பி அவளைப்பார்த்தான்.
அவள் அதே போலவே அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல்..
“ஏய் கிட்டி..ஆர் யூ ஓகே..?” என்று கேட்டு மௌனத்தைக் களைத்தான்.
“சீனியர்..”
“ம்ம்..”
“சீனியர்..”
“ம்ம் சொல்லு..”
“வசி..”
“பார்ரா.. வசியா? கேட்டாலும் கூப்பிட மாட்ட.. இப்ப என்ன கேக்காமலே..ஹாங்..?” என்று கேலியாக அவன் கேட்க..
பதில் கூறாமல் அவள் கை நீட்டி அவன் கன்னத்தைப்பிடித்துக் கிள்ளினாள்.
“ஹேய்.. கிட்டி என்ன பண்ற?”
“இல்ல இது கனவா.. நிஜமான்னு பார்த்தேன்..”
“இது நிஜம் தான் .. உனக்கு ஏன் இப்படிலாம் தோணுது?”
“எப்படி இப்படி எந்த ஆங்கில்ல பார்த்தாலும் அழகா இருக்கீங்க?? நிஜமாவே உங்கள பெத்தாங்களா? இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா?”
“ஹேய் போதும் போதும் ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்கு.. ஆமா எத்தனை க்ரேன்பெர்ரி உள்ள போச்சு??” என்று விளையாட்டாக பேச்சை மாற்றினாலும் அவனுக்கு வெட்கத்தில் முகம் சிவப்பதை தடுக்கமுடியவில்லை..
“ சோ கியூட்..” என்று அவன் சிவந்த கன்னத்தை மீண்டும் பிடித்துக் கிள்ளினாள்.
அவள் கையை தட்டிவிட்டு “போதும் கிட்டி பிஹேவ்..” என்றான் கராரான குரலில்.
அவனது அதட்டலான குரலில் உதட்டைப் பிதுக்கி முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.
அதைப்பார்த்ததும் பக்கென்று சிரித்துவிட்டான்..
அவன் சிரிப்பதைப்பார்த்து அவளும் சிரித்தபடி..
“சிரிக்கும் போது நீங்க இன்னும் அழகா இருக்கீங்க..”என்றாள்.
“ஐயோ போதும் கிட்டி முடியல.. நீ பேசாம கண்ணைமூடித்தூங்கு அதுவே பெட்டர்..”
“ம்ஹும்..கண்ணை மூடினா உங்க அழகு முகம் மறைஞ்சிபோகுமே..”
‘எங்க சுத்தினாலும் திரும்ப அங்கயே வந்து நிக்குறாளே ஆண்டவா..’
“இன்னிக்கு என்னோட பர்த்டே ல்ல..அதான் கொஞ்சம் அழகா தெரியறேன் போல..”என்று சாதரணமாக கடக்க முயன்றான்.
“இன்னிக்குன்னு இல்ல எப்பவுமே நீங்க அழகு தான். உங்கள முதல் மொதல்ல பார்த்தேனே அன்னிக்கே நான் காலி…. ஃப்ளாட்டு..
வாரணம் ஆயிரம் படத்துல அப்பா சூரியா சொல்லுவாரே.
“ இத விட ஒரு அழகான அழக யாரும் பாத்திருக்க மாட்டாங்கன்னு ..” அந்த மாதிரி..
அப்புறம்… அடுத்து உங்கள பேஸ்கெட்பால் விளையாடும் போது பார்த்தேன்..
அப்போ எப்படி இருந்தீங்க தெரியுமா..?எதோ அந்த விளையாட்டே உங்களுக்காகத்தான் படைக்கப்பட்ட மாதிரி.. அவ்ளோ ஆளுமையோட.. என் கண்ணு உங்களத்தவிர வேற எதையும் பார்க்கல..
யூ ப்ளேட் லைக் ய ட்ரீம்..அப்போ உங்களுக்கே தெரியாம உங்கள ஒரு ஃபோட்டோ கூட எடுத்தேனே…” என்று கூறிவிட்டு கிளுக்கிச்சிரித்தாள்.
இடையில் குறுக்கிடலாம் என்று நினைத்தவன் அதிதி அவனை பார்த்த நாளில் இருந்து தன்னுடைய உணர்வுகளை எல்லாம் வரிசையாக சொல்லத்தொடங்கவும் தன்னையறியாமல் கவனித்து கேட்கலானான் வசீகரன்.
இந்த சமயத்தை விட்டால் அதிதியின் மனதில் இருப்பதை தான் தெரிந்துகொள்ளவே முடியாது என்பது அவனுக்குத்தெரியும். அதனால் அதற்கு மேல் அவள் பேசுவதைத் தடுக்க அவன் முயற்சிக்கவில்லை.
தான் செய்வது நியாயப்படி சரியா தவறாக என்ற தர்க்கத்திற்கெல்லாம் அவன் அப்போது தயாரில்லை.சரியோ தவறோ.. அதிதி தன்னைப்பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவனுக்கு தெரிந்தே ஆகவேண்டும்.
வசீகரனின் மனவோட்டம் இப்படியாக இருக்க மறுபக்கம் இது எதையுமே அறியாமல் அதிதி அவள் பாட்டுக்கு தடையை உடைத்துக்கொண்டு வரும் காட்டாறு போல தன் மனதை அவனிடம் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள்..
“அப்புறம் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்கள பார்க்கறதுக்காகவே டெய்லி விடிய காலையில அலாரம் வச்சி எழுந்து வாக்கிங் வருவேன் தெரியுமா?” என்றதும் அவனுக்கு தூக்கிவாரி போட்டது. ‘அப்போ காலையில் அதிதி வருவது எதேர்ச்சை இல்லையா?’
அசட்டுசிரிப்பு சிரித்தவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“காலங்காத்தால எழுந்து வர்றது கஷ்டமாதான் இருக்கும், ஆனா நீங்க என்னை பார்த்து அழகா ஒரு ஸ்மைல் பண்ணுவீங்களே அந்த சிரிப்புக்காக விடிய விடிய கூட முழிச்சிருக்கலாம்ன்னு தோணும்..”
என்று அவள் ரசித்து கூற..
“போதும் போதும் இந்த அழகு புராணம்..எனக்கு உள்ளங்கால் வரைக்கும் கூசுது..அழகா இருக்கறத தவிர என்கிட்ட வேற எந்த தகுதியுமே இல்லையா?” என்று விளையாட்டு போல் கேட்டாலும் அவனுக்கு சிறிது வருத்தமாகத்தான் இருந்தது.
அழகாக பிறந்தது அவனுடைய மரபணு, அதில் அவன் பெருமையடைய ஒன்றும் இல்ல, ஒரு மனிதனாக தான் யார் என்பதுதானே அவன் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும்.
அழகைவிட்டால் தன்னிடம் சொல்லிக்கொள்ள வேறு ஒன்றுமே இல்லையா? என்று எண்ணி அவன் மனம் சோர்ந்தது.
“யாரு சொன்னா.. உங்க கிட்ட எவ்ளோ நல்ல குவாலிட்டீஸ் இருக்கு தெரியுமா?? யு ஆர் பியூட்டிஃபுல்… ஹாண்ட்ஸம்..” என்று அதிதி தொடங்கவும்
“ரெண்டும் ஒன்னும்தான்..” என்றான் ஆயாசத்துடன்.
“ஷ்ஷூ.. குறுக்க பேசாதீங்க சீனியர்..” என்று அவனைப் கடிந்துவிட்டு அவள் மறுபடியும் முதலிலிருந்து
“யூ ஆர் பியூட்டிஃபுல், ஹாண்ட்ஸம்” என்று ஆரம்பிக்க அவன்
“ஸ்ஸ்ஸப்பா..”என்று தலையில் அடித்துக்கொண்டான்.
அதை கவனியாமல் அதிதி தொடர்ந்தாள்.
“…ஸ்மார்ட், இண்டெலிஜெண்ட், மல்டி டேலெண்ட்டட், அத்லெடிக், ஸ்வீட், கியூட்.. எல்லாத்துக்கும் மேல கைண்ட் ,எம்பதெட்டிக், வெரி குட் சோல்..”என்று அடுக்கிக்கொண்டே போக வசீகரன் ஒரு கணம் பேச்சிழந்து போனான்.
தன்னைப் பற்றி தான் நினைப்பதைவிட மற்றவரிடமிருந்து தெரிந்து கொள்வதுதானே தன் சுயமதிப்பையும் தன்னம்பிக்கையயும் அதிகரிக்கும்..
அதிதியின் ஆழ்மனதிலிருந்து எந்தவித பொய்ப்பூச்சும் இல்லாமல் உண்மையாக வெளிப்பட்ட வார்த்தைகள், அவன் முன்னே கண்ணாடியை வைத்து அவனையே பார்க்க செய்வது போன்று இருந்தது.
“நீங்க காலேஜ்ல கிங் மாதிரி.. நானோ நோபடி.. ஆனா என்கிட்ட கூட நீங்க எவ்ளோ கைண்ட்டா என்னை மதிச்சி நடந்துகுறீங்க..அதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சது.”
“நீங்க அழகுதான் ஆனா அதைவிட உங்க நல்ல மனசு தான் பேரழகு..”
வசீகரனுக்கு அவனையறியாமல் கண்கலங்கியது. இப்படி அவனை யாரும் சொன்னதில்லை, அன்று அவன் இருந்த மனநிலைக்கு அதிதியின் வார்த்தைகள் அருமருந்தாக அமைந்தது. அப்படியே அவளைக் கட்டிக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. ஆனால் அதிதி முழுமையாக தன் நிலையில் இல்லாத நேரத்தில் அது மிகவும் தவறாக இருக்கும் என்று உணர்ந்து தன்னைப் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“எனக்கு உங்கள எவ்ளோ புடிக்கும்.. தெரியுமா..?”
“எவ்ளோ புடிக்கும்..?”
“இவ்ளோ..” என்று சிறுபிள்ளை போல இருகைகளையும் முடிந்த வரையில் விரித்து காட்டினாள்.
“ஹ ஹா..” என்று சிரித்தவாறு அவளைப்பார்த்தான். ஆனால் அவள் முகம் சட்டென்று தீவிரம் காட்டியது..
“ஆனா வசி.. நீங்க ஏன் என்கிட்ட இவ்ளோ நல்லபடியா நடந்துகறீங்க..? அதனாலதானே நான் .. நான் ..” என்றவளின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.. மனதில் சொல்லவொண்ணா பாரம் அழுத்த அவளுக்கு மூச்சடைத்தது, சுவாசிப்பதே மறந்துவிட்டவள் போல் நெஞ்சை அழுத்திப்பிடித்துக்கொண்டு வாயை திறந்து திறந்து மூட.. அதைக்கண்டு பதறியவன் வேகமாக வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான்.
வண்டி நின்றதும் தன் பக்க கதவைத் திறந்து கொண்டு வெளியே இறங்கினாள் அதிதி.
வேகமாக அவளிடம் வந்தவன் “என்ன ஆச்சி கிட்டி..” என்று அவளது இரு தோளையும் பற்றி குனிந்து அவள் முகம் பார்த்தான்
அவள் மூச்சுவிட சிரமப்படுவதைப்பார்த்து..
“இட்ஸ் ஓகே.. ஜஸ்ட் பிரீத்..கம் ஆன் பிரீத் வித் மீ.. பிரீத் இன்.. பிரீத் அவுட்..” என்று பொறுமையாக அவளை ஆழ்ந்து சுவாசிக்க வைத்து சமநிலைப் படுத்தினான்.
மூச்சுத்திணறல் நின்றாலும் அவள் கண்ணீர் நிற்கவில்லை..
அவள் முகத்தை கையில் ஏந்தி..
“என்னம்மா..” என்று அவன் கவலையுடன் கேட்டதுதான் போதும் அவன் மார்பில் சாய்ந்து அழுது தீர்த்தாள்.
அவள் அழுது முடியும் வரை பேசாமல் அவள் முதுகைத் ஆறுதலாகத் தடவியபடி நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் அவள் அழுது முடித்ததும். அவள் முகத்தைத் துடைத்து அருந்த தண்ணீர்க்கொடுத்து அவளை மீண்டும் காரில் அமரவைத்து சீட் பெல்டைப் போட்டுவிட்டு நிமிர்ந்தவனின் சட்டையை தன் இரு கைகளாலும் பிடித்து அருகிழுத்தாள்.
இருவரது முகமும் சற்று நகர்ந்தால் கூட முத்தமிட்டுவிடக்கூடிய இடைவெளியில் இருந்தது. அதிதியின் அழகிய பெரிய கண்கள் நீர்த்திரையுடன் அவனை ஏறிட்டது. அவ்வளவு நெருக்கத்தில் மூச்சுவிட மறந்து அவன் அவளைப்பார்த்திருக்க
“உங்களுக்கு கேர்ள்ஃப்ரண்ட் இருக்கறத ஏன் என்கிட்ட சொல்லல…? முன்னாடியே சொல்லி இருந்தா..நான் இப்படி .. நான்..” என்று பேசமுடியாமல் அவள் திணற..
அவன் முதுகு கசையடி வாங்கியது போல் விரைத்தது.
“ஷ்ஷ்…எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் இப்ப அமைதியா தூங்கு..” என்று அவளுக்கு மட்டுமே கேட்குமாறு கரகரப்பான குரலில் கூறிவிட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான்.
அதிதியும் அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவள் போல் அப்படியே அயர்ந்து தூங்கிப்போனாள்.
மறு நாள் காலையில் அதிதி கண்விழித்ததும் உலகம் தலைகீழாக சுழன்று பின் நேரானது.. எழுந்து அமர முடியாமல் தலை வெடித்துவிடுவது போல வலித்தது. நா வறண்டு தொண்டை கமற, தண்ணீர் குடித்தால் தேவலாம் போல தோன்றியது.
சிரமத்துடன் மெல்ல எழுந்தவள் தலைவலி தாளாமல் அப்படியே தலையைப்பிடித்து அமர்ந்துவிட்டாள்.
“என்ன மேடம் எழுந்தாச்சா..? என்று கேட்டபடி “இந்தா இந்த தண்ணியக்குடி..” என்று பாட்டிலை நீட்டினாள் ஷிவாங்கி..
அவள் நீட்டிய பாட்டிலை வாங்கி தண்ணீர் குடிக்க தன் காய்ந்த தொண்டை அவளுக்கு நன்றியுரைத்தது.
பக்கத்தில் அசைவு தெரிய திரும்பிப்பார்த்தால் , ஒருவர் படுக்கவே கச்சிதமாக இருக்கும் அந்த பங்க் பெட்டில் சுருங்கிப் படுத்திருந்தாள் வர்ஷினி.
“அந்த மேடமும் எழுந்துட்டாங்க போல.. அவளுக்கும் தண்ணியக்குடு, டேபிள்ல தலைவலி மாத்திரை வச்சிருக்கேன் ரெண்டு பேரும் போட்டுக்கோங்க..அப்புறம் பிரெட் ஜாம் இருக்கு சாப்பிடுங்க..
எனக்கு டைம் ஆச்சி நான் கிளாஸ்க்கு கெளம்புறேன். நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு ரெஸ்ட் எடுங்க..” என்று கூறிவிட்டு கிளம்பப்போனவளைத் தடுத்து.
“ஹேய்.. ஷிவா நில்லுடி.. நேத்து என்ன ஆச்சி..நான் எப்படி ரூமுக்கு வந்தேன்.. எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை.. சொல்லிட்டுப்போ..”
“நீங்க நேத்து ஹாஸ்ட்டலுக்கு வந்து சேந்ததெல்லாம் மேகி மாதிரி டூ மினிட்ஸ்ல சொல்ற கதையா.. அதெல்லாம் சகாப்தம்.. சரித்திரம் விலாவரியா சிலபஸ் போட்டு ஒரு செமஸ்ட்டருக்கு கிளாஸ் எடுக்கவேண்டியது,” என்று கேலியாக தொடங்கியவள்
“நான் ஈவினிங் வந்து வச்சிக்கிறேண்டி ரெண்டு பேரையும்.. பார்ட்டிக்கா போறீங்க பார்ட்டி. மாட்டியிருந்தா TC குடுத்து ஃபேர்வெல் பார்ட்டி வச்சிருப்பாங்க.. ஜஸ்ட் மிஸ்ல எஸ்கேப் ஆகியிருக்கீங்கடி பக்கிகளா.. அப்படியே பொத்துனாப்புல உங்கள உள்ளக்கூட்டிடு வந்து படுக்கவைக்கறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே.. அந்த பழனி ஆண்டவருக்குதான் தெரியும். இப்படியே பேசிட்டு இருந்தா என் நேரமும் எனர்ஜியும் தான் வேஸ்ட் ஆகும், அப்புறம் வந்து பாத்துக்கறேன் உங்கள..” என்று திட்டிவிட்டு ஷிவாங்கி கிளம்பி சென்றுவிட்டாள்.
என்ன நடந்தது என்று யோசித்தவளுக்கு கடைசியாக கேசவிடம் பேசியதுதான் நன்றாக நினைவிருந்தது, அதன் பிறகு எதோ ஜூஸ் குடித்தது, தலை சுற்றியது, வசீகரன் காரில் வந்தது..
“என்ன வசீகரன் காரில் வந்தேனா? அது கனவில்லையா?
வசீகரனிடம் எதோ ரொம்ப நேரம் பேசினாள், அதுவும் என்ன பேசினாள் என்பது வரை ஒவ்வொன்றாக நினைவு வந்தது, ஆனால் அதில் எது உண்மையில் நடந்தது எது தன் மனதின் கற்பனை என்று பகுத்தறியமுடியவில்லை அவளால்.
அவளது நினைவுகள் பாதிக்கு பாதி உண்மையாக இருந்தால் கூட வசீகரனை இந்த ஜென்மத்தில் ஏறெடுத்தும் பார்க்கமுடியாது என்று மட்டும் புரிந்தது.
என்ன பண்ணிவச்சிருக்க அதிதி.. அவன் கிட்ட போய் என்னவெல்லாம் பேசி வச்சிருக்க.. ஐயோ இனி எந்த மூஞ்சிய வச்சிட்டு அவன பார்ப்பேன்..”
தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு..
அப்போது பக்கத்திலிருத்த மொபைலின் திரை ஒளிர அதை எடுத்துப்பார்த்தாள்.
“ஹவ் ஈஸ் த ஹேங்ஓவர் பேபி..?” என்ற வசீகரனின் குறுஞ்செய்தி அவளைப்பார்த்து நகைத்தது..
error: Content is protected !!