Skip to content
Post Views: 834
அத்தியாயம் 09
சரவணன் தமிழுக்கு நண்பன் மகனை திருமணம் செய்ய கேட்பதாக வீட்டில் கூறவும் பேபி அம்மா ஒரே அடியாக முடியவே முடியாது தன் அண்ணன் மகன் இருக்க தன் பேத்தியை யாருக்கும் வெளிய கொடுக்க மாட்டேன் என ஒத்தை பிடியில் நின்று விட்டார்..
Advertisement
Advertisement
சரவணன் இதுவரை தாயின் வார்த்தையை மறுத்து பேசியது இல்லை..
Advertisement
சரி நண்பனின் மகனை திருமணம் செய்ய வேண்டாம் என்றால் அவள் படித்து முடிக்கும் வரை திருமண பேச்சு எடுக்க கூடாது என சரவணன் கூறிவிட்டார்..
Advertisement
செழியனை கடையில் விட்டு விட்டு தான் அவர் வீட்டிற்கு வந்தார். அதனால் கோமதி, தமிழ்,பேபி அம்மா மூவரை வைத்து தான் இந்த திருமண பேச்சை பேசினார்..
“ மன்னிச்சுக்கோங்க அப்பா எனக்கு சின்னி மாமாவை மட்டும் தான் கல்யாணம் பண்ணனும் வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்.
உங்களுக்கு மாமாவை பிடிக்காது நீங்க மாமாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும்..
நான் கட்டினால் சின்னி மாமாவை தான் கட்டுவேன். இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேண்டாம்.அப்படி நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணினா நான் யாருக்குமே இல்லாம மண்ணுக்கு போயிருவேன்.. ” என்று தன் முடிவை ஒரே போடாக போட்டு விட்டாள் தமிழ்..
“ ஐயோ ஐயோ ஐயோ தங்கமே!! என்ன வார்த்தை பேசிட்டா? உன்னை இப்படி மண்ணுக்கு கொடுக்கவா நான் கஷ்டப்பட்டு மார்லயும்,தோள்ளையும் போட்டு அருமை பெருமையா வளர்த்தேன்..
அடேய்!! பாவி பயலே என் தங்கம் மட்டும் தவறாக ஏதாவது செஞ்சுச்சுன்னா நானே உனக்கு நஞ்சு வைத்து உன்னை கொன்னுடுவேன் டா..
இங்க பாருடா சரவணா!! நல்லா கேட்டுக்கோ என் தங்கத்துக்கு கல்யாணம் ஒன்னு நடந்தா அது என் அண்ணன் மகன் கதிர்வேலழகன் தான் மாப்பிள்ளை.
நான் நடத்தி வைப்பேன் என் கட்டையில உசுரு இருக்கிற வரைக்கும் இது மாறாது. எனக்கும் இப்ப இளமை திரும்பல அதனால இன்னும் ஒரு மாசத்துக்குள்ளையே நான் என் தங்கத்துக்கும் கதிருக்கும் கல்யாணம் பண்ணி வைப்பேன்.. வர விரும்பினால் தாயாக,தகப்பனா வந்து பிள்ளையை ஆசீர்வாதம் பண்ணுங்க. கல்யாணம் புடிக்கல, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி போயிருங்க. உன் விருப்பத்துக்கு கண்டவனையும் என் தங்கத்துக்கு மாப்பிள்ளையா கொண்டு வரணும் நெனச்சா அப்புறம் இந்த பேபி அம்மாவை வேற மாதிரி பார்ப்ப நீ.. ” என்றார்..
“ பாப்பா அப்பா சொன்னா கேக்க மாட்டியா நீ? உனக்கு இந்த கஷ்டமான வாழ்க்கை தேவையில்ல ராசாத்தி..
அப்பா உனக்கு நல்ல வசதியான படிச்சவனா,அருமையான மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன். நீ அந்த சின்ன வீட்டில அவ்வளவு பேருக்கு ஆக்கி வேலை பார்த்து குடும்பம் பண்ணி கஷ்டப்படணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?. ”
“ அப்பா இப்ப எனக்கு கல்யாணம் நடந்தால் நான் உங்க கூட 19 வருஷம் தான் இருந்திருக்கேன்..
இனி மேல் நான் சாகுற வரைக்கும் இருக்கபோறது கல்யாணம் கட்ட போறவங்க கூட தான்..
அதுவே என் சின்னி மாமாவை நான் கல்யாணம் கட்டினால் அக்கா பொண்ணு அவர் என்னை உருகி உருகி காதலிக்கிறாரு என்ன கையில் வைத்து தங்கமா தாங்கி பார்த்து பாரு..
இந்த வசதி வாய்ப்பு ஏசி வாழ்க்கை இது எல்லாம் அத்தியாவசிய சாப்பாடு உடுப்பு போல இல்லை..
என்னோட வாழ்க்கை என் மனசுக்கு பிடிச்சவரோட வாழ்ந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்..
இப்ப அப்பத்தா சொன்ன மாதிரி அம்மா உங்களுக்கு கிடைக்காட்டி நீங்க விட்டுருப்பீங்களா? இதே இடத்துல தாத்தாவும் உங்களுக்கு அம்மாவை தரமாட்டேன்னு தடுத்து இருந்தால் நீங்கள் விட்டு இருப்பீங்களா? நீங்களே லவ் பண்ணி அம்மா தான் வேணும்னு அந்த சின்ன வயசுலயே அம்மாவை கல்யாணம் பண்ணின நீங்க இப்ப எங்க காதலுக்கு தடையா இருக்கீங்க..
நீங்களும் மாமாவும் என் சடங்கு அன்னைக்கு பேசினதை நான் கேட்டேன் அப்பா.
மாமாவோட நிரந்தர வேலை இந்த வசதி மட்டும் தான் உங்களுக்கு அவர் எனக்கு மாப்பிள்ளையாக்க பிடிக்காம இருக்கு அப்படி நினைச்சீங்கன்னா நீங்க இருந்து பாருங்க மாமா உங்கள விட பெரிய உயர்ந்த நிலமைக்கு வந்து சந்தோஷமா நாங்க வாழ்வோம்.
அது இல்ல உங்களுக்கு மாமாவே மொத்தத்துல பிடிக்காதுன்னா அதுக்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது..
அப்பத்தா சொன்ன மாதிரி ஒரு மாதத்தில் எங்களுக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணினால் நான் உங்களுக்கு காலத்துக்கும் மகளா இருக்கணும் என் உறவு உங்களுக்கு வேணுமா இருந்தால் நீங்க வாங்க. இல்ல உங்களுக்கு உங்க பிடிவாதம் தான் முக்கியமா இருந்தா உங்க பிடிவாதத்தை பாருங்க.
நான் என் மாமாவை தான் அப்பத்தா குறிக்கிற நாள்ல கல்யாணம் பண்ணிப்பேன்..
இதோ அம்மா இருக்காங்களே இவ்வளவு நடக்குது பெத்த பொண்ணு கல்யாணத்தை பத்தி பேசுறாங்க அதுக்கு நீங்க விருப்பம் இல்லன்னு சொல்றீங்க பொண்ணுக்காக ஒரு வார்த்தை வாயை திறந்து பேசினாங்களா ?
அவங்களுக்கும் நீங்க தான் முக்கியம். அவங்க வாழ்க்கை தான் முக்கியம். உங்க லவ் தான் முக்கியம். உங்களை எதிர்த்து அம்மா ஒரு வார்த்தை இந்த கல்யாண விஷயத்துல பேசவே இல்ல. சொந்த தம்பி. அவங்க பெத்த பொண்ணுக்கும் கல்யாணம்.
ஆனா யாரோ மாதிரி அவங்க தள்ளி தான் இருக்காங்க ஏன்?.
அம்மா இதுக்கு முன்னாடி உங்களை எதிர்த்து பேசி சண்டை பிடிச்சு பழக்கம் இல்லையா? எங்க கல்யாண விஷயத்துல அம்மா அமைதியா இருக்கறதுக்கு காரணம் என்ன?..
காலத்துக்கும் நீங்க பெத்த பொண்ணு உறவு வேணுமா இருந்தா கல்யாணத்து வந்து முன்ன நின்று நடத்திக் கொடுங்க.
இல்லன்னா நான் என் மாமாவை கல்யாணம் பண்ணி உங்களுக்கு எல்லாம் உதாரணமாக சந்தோஷமான ஒரு வாழ்க்கையை நாங்க வாழ்ந்து காட்டுவோம்.. ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் தமிழ்.
“ வளர்த்த கடா மார்ல பாயறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பெத்த தகப்பன் என் பேச்சு கேட்காம எனக்கு மனசுக்கு பிடிச்சவங்க தான் நான் கல்யாணம் பண்ணுவேன்னு உன் மக அதை காட்டிட்டு போயிட்டா?.
ஒருவேளை உன் தம்பி சொன்ன மாதிரி நல்ல இடத்துல இருந்து இருந்தா நான் பண்ணி கொடுத்திருப்பேனோ என்னமோ தெரியாது.
ஆனால் தெரிஞ்சு என் பொண்ண அவனுக்கு கட்டி கொடுக்க எனக்கு மனசு ஒப்பல. அதனால நான் வரமாட்டேன்.
இந்த கல்யாணத்துக்கு விரும்பினால் நீ போய் உன் மகளுக்கு உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வை.
இல்லையா நீயும் போகாத அம்மா சொல்லிச்சு தானே யாரும் வராட்டியும் நான் பண்ணுவேன்னு பாத்துக்கட்டும். ஆனா என் பொண்ணுக்கு ஆக வேண்டிய சீரு,நகை நட்டு செலவு பண்ட பாத்திரம் எல்லாம் குறைவில்லாமல் கல்யாணத்துக்கு போய் சேரனும்.. ” என்று கூறினார் சரவணன்..
தந்தை பேசியதை கேட்ட தமிழ அவ் விடத்துக்கு வந்தாள்..
“ அப்பா இங்க பாருங்க நீங்க முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தி சந்தோஷமா உங்க மகளுக்கு சீர் செய்தாலே மாமா அதை வாங்குறது சந்தேகம் தான்..
இப்ப நீங்க வராத கல்யாணத்துக்கு உங்களோட சீரும்,பணமும் யாருக்கு வேணும்.. அதை வாங்கினால் நான் என் மாமாவை மாமாவோட லவை அவமதிக்கிற மாதிரி..
அங்க என்ன இருக்கோ அத வச்சு என் மாமாவோட சந்தோசமா வாழ்கை ஆரம்பிப்பேன்..
நீங்க வந்து ஆசிர்வாதம் தந்தா சந்தோஷம்.
இல்லையா அது மனசுக்குள்ள ஓரமா குத்திக்கிட்டே இருக்கும் ஆனாலும் பரவால்ல அதுதான் எங்களோட விதி என்று நாங்க ஏத்துக்கிட்டு இருப்போம்.
ஆனால் காசு, பொருள், சீர் மட்டும் எதுவுமே அந்த ஏரியா பக்கமே வரக்கூடாது.. ” என்றாள்..
“ நல்லா சொல்லு தங்கம் அந்த மரமண்டை புத்தியில உரைக்கிற மாதிரி சொல்லு.
அவன் வரமாட்டானாம் ஆனால் காசு பணத்தை பிச்சை போடுற மாதிரி அனுப்புவானாம்..
யாருக்குடா வேணும்?
உன் பிச்சை பணம்..
என்கிட்ட இருக்க என்னோட சொத்து. நகை என் காசு எல்லாமே என் தங்கத்துக்கு மட்டும் தான்.. அது அவ்வளவும் என் புருஷன் எனக்கு சம்பாதித்து தந்தது.
என் தங்கத்துக்கு மட்டும் தான் கொடுப்பேன்.. உன்னோடத நீங்களே வச்சுக்கோங்க. நீங்க வந்து தாய் தகப்பனா மரியாதையா சந்தோசமா புள்ளைங்க கல்யாணத்தை நடத்த வக்கு இல்லை. காசு பணத்தை அனுப்புறாராம்.
நாளைக்கு அது தானே உனக்கு ஒன்னுனா ஓடி வரப் போகுது..
நான் என் அண்ணன் மகள உனக்கு கட்டி வச்சேன். நீயும் என்ன வச்சு பாக்குற. என் அண்ணன் மகளும் சொந்த அத்தைன்னு என்ன வச்சு பாக்குது. எல்லாருக்கும் மேல என்னுடைய தங்கம் இருக்கு.. அதையும் விட என்கிட்ட காசு,பணம் இருக்கு.
நல்ல மக்களை சம்பாதிச்சு வச்சிருக்கேன். அவங்க ஒரு ஆள் வந்து சம்பளத்துக்கு வேலை செஞ்சாலும் என்ன நல்லபடியா பாத்துப்பாங்க.
இதே இது உன் மகனுக்கு அன்னியத்தில் பொண்ணு எடுத்தா எப்படி உங்க கடைசி காலத்தை அவ பாப்பான்னு நீ நினைக்கிற?
என்னவா இருந்தாலும் என் தங்கம் தான் உங்களுக்கு ஓடி வரணும் அதை மனசுல வச்சுக்கோங்க.. ” என்று மனதில் ஆதங்கத்தை கொட்டி விட்டு கல்யாணத்துக்குரிய வேலையை பார்க்க ஆரம்பித்தார்..
பேபியம்மா ராஜியையும் கணவனையும் விட்டு நாள் குறித்து திருமணத்துக்குரிய ஏற்பாடுகளை பண்ணியும் கண் எதிரே சரவணன் பார்த்து நின்றானே தவிர எதற்கும் ஒரு அடி கூட எடுத்து வைத்து மகள் கல்யாணத்துக்கு எதுவும் எடுத்து கட்டி செய்யவும் இல்லை. அவர் போவதை பற்றி யோசிக்கவும் இல்லை..
கணவனையே பின்பற்றி கோமதியும் மகள் கல்யாணத்துக்கு எதுவும் செய்யவில்லை.. ஆனால் மனதில் மிகவும் வருத்தம் உள்ளது அவருக்கு ஆனால் கணவனை மீறி செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை..
தன் தம்பியை தன் மகள் மணம் முடிக்கிறாள்.. தம்பி நன்றாக தன் மகளை பார்த்துக் கொள்வான். அதனால் மகள் வாழ்க்கை பற்றி கவலை இல்லை. என்ற சந்தோசம் அவர் மனதை ஓரளவுக்கு ஆற்றியது ஆனால் கல்யாணத்தை பார்க்க முடியாத வேதனை மட்டும் இருந்தது..
அப்படி இப்படி என்று ஒரு மாத காலம் ஓடி இதோ இன்று திருமண நாளும் விடிந்தது.
கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்துக் கொண்டு அவர்கள் காத்திருக்க கதிர் அவன் வாங்கிய காரிலேயே மாப்பிள்ளையாக வந்து இறங்கினான்..
பொண் தோழியாக நிலாவும் மாப்பிள்ளை தோழனாக செழியனும் இருந்தார்கள்..
கதிர்,ரமேஷ்,செழியன்,ம ணி, அன்பு இவர்கள் அந்த காரில் வந்து இறங்கியதும் செழியன் மணமகனை அழைத்துக் கொண்டு வந்து மணமேடையில் அமர வைத்ததும் ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார்..
மந்திரம் ஓதி முடித்ததும் மணப்பெண்ணை அழைத்து வரக் கூரியதும் மணமகளை நிலா, ராஜி செல்வி,மூவரும் சேர்ந்து அழைத்து வந்து கதிரின் பக்கத்தில் அமர வைத்தார்கள்..
பேபியம்மாவை தாலி எடுத்து கொடுக்க சொல்லவும் அவர் மாட்டேன் என்றார்..
தமிழ் கட்டாயப்படுத்தவும் சரி என சந்தோஷமாக அவர் இஷ்ட தெய்வமான முருகனை வேண்டிக்கொண்டு தன் பேத்தி மற்றும் அண்ணன் மகன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நினைத்து தாலி எடுத்து அவர் நல்ல மனதுடன் ஆசீர்வதித்து தாலி கொடுக்கவும் அதை கதிர் வாங்கி தன் சின்ன பொண்ணு முகத்தை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்..
வீடியோ,போட்டோவும் எடுத்திருந்தார்கள்.. கல்யாணத்திற்கு வெளியே யாருக்கும் சொல்லவில்லை..
அவர்களது நெருங்கிய சொந்தங்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து வீட்டில் விருந்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்..
வீட்டில் இருந்தால் சரவணன் கோமதியும் அங்கு இருப்பார்கள் கேள்வி வராது இங்கே ஆட்களை அழைத்தால் தாயும் தகப்பனும் வரவில்லை என்ற கேள்வி வந்து அது பேசும் பொருளாக ஆகிவிடும் என்று பேபியம்மா நினைத்து மதிய விருந்திற்கு தான் அனைவரையும் அழைத்திருந்தார்..
இங்கே முடித்ததும் மணமக்களை காரில் அழைத்துக் கொண்டு கதிர் வீடு சென்று அங்கே விளக்கேற்றி மகேஸ்வரி மற்றும் சின்னத்தம்பி படத்திற்கும் விளக்கேற்றி பூ வைத்து வணங்கி விட்டு அங்கே இனிப்பை சாப்பிட்டுவிட்டு நேராக விருந்திற்கு சரவணன் வீட்டுக்கு தான் வந்தார்கள்..
சரவணன் அங்கு நிக்காமல் அவரது மில்லை நோக்கி சென்றுவிட்டார்.. இதெல்லாம் பார்ப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை போல்..
கோமதி யாருக்கு வைத்த விருந்தோ என அவர்கள் வீட்டுக்குள் இருந்து விட்டார்..
வீட்டில் விருந்து வைப்பதால் அவர்கள் இருவரும் வேலையாக இருப்பார்கள் என்று நினைத்தவர்கள் விருந்து தயாராக இருந்ததால் வந்திருந்த விருந்தினர்களை அழைத்து பரிமாறினார்கள். ரமேஷ், செழியன், அன்பு, மணி என ஆண்கள் அனைவரும் சேர்ந்து பந்தியை கவனித்தார்கள்.. வந்திருந்தவர்களின் மனது வாடாமல் அவர்களை நன்கு கவனித்து அனுப்பினார்கள்..
வீட்டின் முன்பு சிறிதாக ஒரு பந்தல் போட்டு அதில் மேடை மாதிரி அமைத்திருந்தார்கள். அதில் தமிழும் கதிரும் ஜோடியாக நிற்கவும் அங்கே அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனடியாக சென்றார்கள்..
இந்த விருந்து அனைத்தும் முடிந்து ஆட்கள் ஓரளவிற்கு குறைந்ததும் சீராக மூச்சுவிட்டு அமர்ந்த போது மாலை நான்கு மணி ஆகிவிட்டது..
விருந்து உணவைக்கூட சரவணன் கோமதி சாப்பிடவில்லை.
விருந்தின் மொத்த செலவும் பேபியம்மா தான் எடுத்துக் கொண்டார்..
ஊரில் விசேஷம் திருமணம் என சொன்னால் சரவணன், கோமதி பேபியம்மா என அனைவரும் சொன்னவர்களுக்கு சென்று அதிகமாகவே மொய் வைப்பார்கள்.. அவர்களுக்கும் மரியாதை நிமித்தமாக இவர்களும் அதிகமாகவே மொய் வைத்திருந்தார்கள்.
கணிசமான தொகை பணம் சேர்ந்திருந்தது பரிசு பொருட்களும் வந்திருந்தது..
மாமனுக்கு மோதிரமும், செயினும் செழியன் செய்திருந்தான்.. அதை கதிர் ஏற்றுக் கொள்ளவில்லை.. ஆனால் தான் உழைத்த பணத்தில் தன் மாமனுக்கு செய்ததாக சொல்லவும் மறுத்து பேசாமல் ஏற்றுக் கொண்டான்.. தங்கைக்கும் நகையாக வளையல் மற்றும் கோதுமை மாலையும் செய்திருந்தான்..
ராஜி, ரமேஷ் தம்பதி இருவருக்கும் ஆளுக்கு ஒரு சவரனில் மோதிரம் போட்டிருந்தார்கள்..
செல்வி, மணி தம்பதி கதிருக்கு ஒரு சவரனில் கைச்செயின் தமிழுக்கு ஒரு சவரனில் வளையலும் செய்து போட்டார்கள்..
பேபியம்மா அவரின் மொத்த நகையையும் அதாவது தோடு, செயின் இவற்றை மட்டும் அவருக்கு வைத்துக் கொண்டு அனைத்து நகைகளையும் பேத்திக்காக குடும்பத்தின் முன்பு வைத்து சீராக கொடுத்து விட்டார்.. அதை கதிர் வேண்டாம் எனவும் அவனை திட்டி அடக்கி விட்டார்..
நகை மட்டுமே அப்பொழுது கொடுத்தார்.. வீட்டுக்கு தேவையான பொருட்கள் என சீராக எதுவும் செய்யவில்லை.. அதற்கு பணமாக தமிழின் வங்கி கணக்கில் போட்டு விட்டார்..
அதை அவர்களின் வாழ்க்கைக்கு தேவைக்கேற்ப அந்த பணத்தை உபயோகப்படுத்திக் கொள்ளட்டும் என்று அவர் பொருட்களாக வாங்கி கொடுத்தால் எப்படியும் கதிர் வேண்டாம் என மறுப்பான் அதனால் பணமாகவே தமிழுக்கு கொடுத்துவிட்டார்..
இனி கதிரின் முன்னேற்றத்திற்கும் தொழிலுக்கும் அந்த பணத்தை தமிழ் கொடுத்து அவனை முன்னேற்றுவது அவளின் சாமர்த்தியம்..
இப்படியே மாலை நேரம் நெருங்கியதும் நல்ல நேரத்தில் கதிரின் வீட்டில் தமிழையும், கதிரையும் தம்பதிகளாக அங்கே அழைத்து வந்தார்கள்..
திருமணம் என பேச்சு அடிபட்டதும் கதிர் கட்டில், மெத்தை,தலையணை புது ஃபேன் என அத்தியாவசிய தேவைக்கான முக்கியமான பொருட்களை புதிதாகவே அவனது அறையில் வாங்கி போட்டு விட்டான்..
வீட்டுக்கு வெள்ளை அடித்து வீட்டையும் சுத்தம் செய்து வைத்திருந்தான்..
மணி அவர்கள் இருவருக்கும் இரவு உணவை அவனது வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருந்தான்..
மகேஸ்வரியின் மறைவுக்குப் பின் அன்பும், கதிரும் தான் அந்த வீட்டில் இருந்தார்கள்.. செல்வியும் திருமணம் செய்து சென்றதால் கதிர் தான் இருவருக்கும் சமைப்பான்..
அன்பு காலையில் வேலைக்கு சென்றால் இரவு ஆகும் வருவதற்கு இரவு உணவு உண்டு விட்டு அண்ணனுடன் சமையல் வேலையில் சின்ன சின்ன உதவிகள் செய்துவிட்டு அறையில் படுத்து விடுவான்..
இவர்கள் புதுமண தம்பதிகள் அவர்களின் வாழ்க்கையை ஆரம்பித்து கொஞ்சம் பிடிப்பு வரும் வரைக்கும் அன்பை ராஜி தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டாள்..
கதிர் அக்காவிடம் வேண்டாம் எனக் கூறவும் தன் தம்பியை தான் பார்த்துக் கொள்வதாகவும் உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க என ராஜியும், ரமேஷும் கூறி வாயடைத்து விட்டார்கள்..
இரவு உணவாக இட்லியும் அதற்கு கறி குழம்பு மணி கொண்டு வந்து கொடுக்கவும் அதை உண்டு விட்டு பாலும் குடித்துவிட்டு கதிர் அந்த பாத்திரங்களை கழுவி வைத்து சமையல் மேடையும் சுத்தப்படுத்திவிட்டு அறைக்குள் வர தமிழ் அறையில் அவள் இடத்தில் ஓரமாக படுத்து இருந்தாள்..
அவன் ஆசைப்பட்ட திருமணம்தான். ஆசைப்பட்ட பெண் தான்.
அவளும் உரிமையாக திருமணம் செய்து கொண்டு அவனது வீட்டில் அவனது அறையில் அவனது கட்டிலில் படுத்து இருக்கிறாள்,
ஆனால் அடுத்த கட்டம் என்னவென அவனுக்கு தெரியாத குழப்பத்தில் தான் அறை வாசலில் தமிழ் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தான் கதிர்வேலழகன்..
error: Content is protected !!