Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 13

அத்தியாயம் 13

 

ஒரு மாத காலம் ஓடி இருந்தது. எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு தான் கீர்த்திஸ்வரனுக்கு. கூடவே கொஞ்சம் நிம்மதியும் தான்.


Advertisement

 

இதோ லதா இப்பொழுது தான் எழுந்து நடக்கவும் ஆரம்பித்திருந்தார்.

Advertisement

Advertisement

 

முழுதாய் எல்லாம் இல்லை. நடக்க பழகிக் கொண்டிருக்கிறார். முன்பை விட இப்பொழுது தான் பல்லவியின் உதவி அதிகமாய் தேவைப்பட்டது லதாவிற்கு.

Advertisement

 

அதைவிட லதாவிற்கு பல்லவி தான் சரி என்பதை போல அவளது மிரட்டலுக்கு மட்டும் பயந்து நடக்க ஆரம்பித்தார் லதாவும்.

 

“பாடா படுத்துறா ஈஸ்வர். நீயாவது கேளேன்!” என கீர்த்திஸ்வரனை தீர்ப்புக்கு லதா அழைத்தாலும்,

 

“அவ சொன்னா தானே நீங்க கேட்குறீங்க. உங்களை நடக்க வைக்குற அளவுக்கு எனக்கு பொறுமையா சொல்லித் தர தெரியல. அஞ்சலியாலயும் முடியல. வேற என்ன நான் பண்றது?” என்றுவிட்டான் அவனுமே.

 

அந்த அளவுக்கு இருக்கும் பல்லவியின் மிரட்டலும். வேறு யாரிடமும் இத்தனை உரிமை எடுத்துக் கொண்டது கிடையாது என பல்லவிக்குமே ஆச்சர்யம் தான் லதாவோடு தனது ஒட்டுதல்.

 

அது கூடவே தொடர்ந்து அஞ்சலி, கீர்த்திஸ்வரன் என அவர்கள் அனைவரிடமும் சேர்ந்து வந்திருந்தது தான் இன்னும் ஆச்சர்யம் அவளுக்கே.

 

இந்த ஒரு மாத காலத்தில் அவ்வளவு சேட்டைகள் அந்த வீட்டில் அவளால் நிகழ்ந்திருந்தது.

 

லாவண்யா வீட்டை விட்டு சென்றதோடு மகேஸ்வரன் வந்தவர் கீர்த்திஸ்வரனிடம் வரதராஜன் பேசியதை சொல்ல,

 

“இதெல்லாம் நமக்கு தேவையா ப்பா? அவங்க முன்னாடி அப்படி நாம நிக்கணும்னு என்ன இருக்கு? இவ்வளவுக்கும் தன் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறவனோட அப்பான்ற பேசிக் ரெஸ்பெக்ட் கூட அவர் உங்களுக்கு தரலை. ஏன்? நாம என்ன அவருக்கு கடன் குடுக்கணுமா?” என்றவன்,

 

“அவங்க பொண்ணு அதுக்கும் மேல!” என இங்கும் நடந்ததை சொல்லி தன் பங்கிற்கு தானும் தந்தையை குழப்பி விட்டிருந்தான்.

 

“இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தான் சொன்னேன். நடக்குறதை பார்த்தா கல்யாணம் பண்ணிக்கணுமானு இருக்கு!” என்று சொல்லி அவன் சென்றுவிட, அவருக்கும் அதில் குழப்பம் இருப்பதை மகன் அறியவில்லை.

 

அடுத்த இரண்டு நாட்களும் வராதராஜனிடம் இருந்து விடாது அழைப்பு வந்து கொண்டே தான் இருந்தது மகேஸ்வரனுக்கு.

 

ஆனாலும் ஏற்கவில்லை அவர்.

 

 தானே அனைவரையும் ஆட்டிப் படைக்க நினைக்கும் போது தன்னை ஆட்டி வைக்க நினைக்கும் வரதராஜன் மேல் கோபம் வர தானே செய்யும் அவருக்கு.

 

வரதராஜன் பரவாயில்லை என்பதை போல லாவண்யா அடுத்த ஒரு வாரத்தில் மகேஸ்வரனைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டாள்.

 

வந்ததும் லதா அறைக்கு கூட செல்லவில்லை. மகேஸ்வரனை தேடி வந்தவள் அவர் அங்கு வேலை செய்யும் தேவியை அழைத்து மகேஸ்வரனை அழைத்துவருமாறு சொல்லி இருக்க, தேவியும் அழைத்து வந்துவிட்டார்.

 

“வா லாவண்யா. ஒரு போன் பண்ணியிருக்கலாமே!” என்று ஹாலில் சத்தம் கேட்டபின் தான் லதா அறையில் இருந்த லதாவிற்கும் பல்லவிக்கும் லாவண்யா வந்த விஷயமே தெரிந்தது.

 

“என்னோட போனை எடுக்கலைனா நான் அப்படியே போய்டுவேன் நினைச்சீங்களா? உங்க பையன் என்ன சொல்றான். எனக்கு ரெண்டுல ஒண்ணு இன்னைக்கு தெரிஞ்சாகனும்!” என மகேஸ்வரனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் லாவண்யா.

 

“ச்சே! உங்க பையனுக்கு அதிர்ஷ்டம் கம்மி தான் லதாம்மா. என்ன சொல்லுங்க. நீங்க விரட்டி அடிச்சும் ஒரு வாரத்துல உங்களை தேடி தான் வந்திருக்கு அந்த பொண்ணு. அப்படிபட்ட பொண்ணை நீங்களும் உங்க பையனும் சேர்ந்து கொடுமை படுத்துறீங்க தெரியுமா? இதுவும் அஃபன்ஸ் தான். பாவம். சொத்துபத்து, அழகு, அறிவோட ஒரு பொண்ணு வந்தா உங்களுக்கு எல்லாம் கசக்குது இல்ல?” என பல்லவி லதாவிடம் கேட்க, பல்லவிக்கு பின் வந்து நின்று கைகட்டி நின்ற கீர்த்திஸ்வரனை கவனிக்கவில்லை பல்லவி.

 

லதா பல்லவியிடம் சொல்ல வந்ததை கூட “மூச்” என உதட்டில் கைவைத்து தடுத்துவிட்டான்.

 

“அப்படி என்ன உங்க பையன்கிட்ட பார்த்துச்சோ இந்த பொண்ணு! சரிதான் போ டானு மட்டும் லாவண்யா சொல்லிட்டு போயிருந்தா நானே அவளுக்கு விசிறி ஆகி இருப்பேன்.

 

 

திமிர் இருந்தும் திமிரா நடந்துக்க தெரியாத ஸ்டுபிட் கேர்ள் இந்த லாவண்யா” என்ற பல்லவி,

 

“எனக்கும் நீ வேண்டாம்னு சொல்லிட்டு லாவண்யா அப்படியே திரும்பி நடக்கணும். அப்ப ஒரு பேக்ரவுண்ட் சாங். அந்த பொண்ணோட அழகுக்கும் திமிருக்கும் எவ்ளோ மாஸா இருந்திருக்கும் தெரியுமா? இப்படி வந்து ஒவ்வொருத்தர் முன்னயும் எனக்கு அவன் தான் வேணும்னு அழுது வடிஞ்சு…” என்றவள் சொல்லில் லதாவே வாயில் கைவைக்க, பல்லைக் கடித்து நின்றான் கீர்த்திஸ்வரன்.

 

“அண்ணா! காபி வேணுமா டிபன் வைக்கவானு தேவி அக்கா கேட்க சொன்னாங்க” என அஞ்சலி வந்து நின்றவள் குரலில் தான் பல்லவி திரும்பியவள் மூச்சடக்கி நின்றுவிட்டாள் அங்கே கீர்த்திஸ்வரனைக் கண்டு.

 

“நல்லா நாலு கொட்டு கொட்டு டா அவ நடுமண்டையிலேயே!” லதா மகனிடம் சொல்ல,

 

கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கட்டிலுக்கு பின் மறைந்து கொள்ள செல்ல இருந்த பல்லவி தலையில் கையில் வைத்திருந்த காகிதத்தாள்கள் கொண்டு ஓங்கி ஒரு அடி வைத்தான் கீர்த்திஸ்வரன்.

 

“சார்! கதவை தட்டிட்டு வர மாட்டிங்களா. உள்ள ரெண்டு லேடிஸ் இருக்கோம்ல?” என அப்போதும் வாய் அடங்கவில்லை பல்லவிக்கு.

 

“இதெல்லாம் நீங்க குடுக்குற செல்லம் தான். என்ன வாய் பேசுறா. பார்த்துட்டு இருக்கீங்க!” அன்னையிடம் ஈஸ்வர் சொல்ல,

 

“சார்! நாங்க இப்படி தான் அப்பப்ப ஃபன் பண்ணிக்குவோம். நீங்க திடிர்னு கேட்டு தப்பா நினைச்சுட்டீங்க!” என்றவள் தலையை தேய்த்துக் கொள்ள,

 

“உங்க சேட்டையை ஆரம்பிச்சுட்டிங்களா? நான் ஸ்கூல் கிளம்பனும். சொல்லுங்க ண்ணா. என்ன வேணும் உங்களுக்கு?” என மீண்டும் அஞ்சலி கேட்க,

 

“ம்மா! இவ கூட சேராதீங்க!” என்று சொல்லிய ஈஸ்வர் கையில் இருந்த பேப்பர் பண்டலை அப்படியே தூக்கி அவள்மேல் எறிவது போல காட்டி அன்னை கைகளில் திணித்துவிட்டு அஞ்சலியோடு வெளியே சென்றான்.

 

மகேஸ்வரன் லாவண்யா பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் கீர்த்திஸ்வரன் மாடிப்படிகளில் இறங்கியவன் இவர்களை கண்டு கொள்ளாமல் அன்னை அறைக்குள் நுழைந்தவன் இப்பொழுது மீண்டும் அவர்கள் கண்முன் வந்து சாப்பிடும் இடத்தில் அமர்ந்தான்.

 

லாவண்யாவை சமாளிக்கவே முடியாமல் மகேஸ்வரன் அவள்முன் தடுமாறி நிற்க, கொஞ்சமும் அவர்களை கண்டு கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்திருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

“ஹௌவ் டேர்?” என அதற்குமே பொங்கினாள் லாவண்யா.

 

அதற்கு அதிகமாய் எதிர்வினை எல்லாம் காட்டவில்லை மகேஸ்வரன். மகனின் நடவடிக்கை அவனின் மனதை சொல்லுவதை போல தான் தெரிந்திருந்தது அவருக்கு.

 

அவனை பார்த்தபடியே, “அவனே எனக்கு இப்ப வேண்டாம்னு சொல்லும் போது நான் மட்டும் இப்ப என்ன பண்ணிட முடியும் லாவண்யா? கையை காலை கட்டியா கல்யாணத்தை பண்ணிட முடியும்?” என்றார் லாவண்யாவிடம்.

 

“அப்போ எனக்கு நீங்க குடுத்த நம்பிக்கை?” என்று கோபமாய் அவள் கேட்க,

 

“அந்த நம்பிக்கை அப்படியே இருக்கட்டும். அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒன்னும் சொல்லலையே! அவனுக்குன்னு நேரம் கேட்டிருக்கான். அப்பாவா நான் குடுத்து தான் ஆகணும்!” மகேஸ்வரன் சொல்ல, அதைக் கேட்கும் தூரத்தில் இருந்த கீர்த்திஸ்வரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

 

‘போராடி வாங்கி இருக்கேன். அவரே தந்ததாட்டம்..’ இப்படி தான் தோன்றியது கீர்த்திஸ்வரனுக்கு.

 

“இப்ப கூட யாரோ வந்திருக்கான்ற மாதிரி இருக்காங்க அதையும் கேட்க மாட்டிங்களா நீங்க?” என அவனைக் கண்டு எழுந்த கோபத்தில் லாவண்யா கேட்க,

 

“எல்லாத்துக்கும் அர்த்தம் தேடாத லாவண்யா. நீ அவன்கிட்ட இங்கருந்து போகும் போது சண்டை போட்டு தானே போன? பின்ன அவனா பேசணும்னு நினைச்சா எப்படி? எல்லா விஷயத்திலயும் நானும் தலையிட முடியுமா?” என அவள் தந்தை மேல் இருந்த கோபத்தையும் சேர்த்து மகேஸ்வரன் சுள்ளேன்று பேசிவிட,

 

‘அட! பரவால்லையே அப்பா!’ என்ற பார்வை பார்க்க தவறவில்லை கீர்த்திஸ்வரன்.

 

இன்றுமே தன்னை இந்த வீட்டில் யாருமே மதிக்கவில்லை என்ற குறைபாட்டோடு தான் அங்கிருந்து சென்றிருந்தாள் லாவண்யா.

 

தன் கையில் மகன் தந்து சென்ற தாள்களை பிரித்துப் பார்த்த லதா வியந்து பார்க்க, எட்டிப் பார்த்த பல்லவிக்கு இன்ப அதிர்ச்சி தான்.

 

“ஹேய்! எனக்கா?” என அவர் கையில் இருந்து கிட்டத்தட்ட பறித்து தன் கைக்கு கொண்டு வந்து ஒவ்வொன்றாய் பார்த்தாள் பல்லவி.

 

“லதாம்மா! நாலு அப்ளிகேஷன். அதுவும் நாலுமே யூனிவர்சிட்டி!” என இன்னும் விரித்த கண்களை சுருக்கவில்லை பல்லவி.

 

“ஹ்ம்! இப்படி உனக்காக அவன் கொண்டு வந்திருக்கான். நீ என்னென்ன கிண்டல் பண்ற அவனை? ஈஸ்வர் சொல்ற மாதிரி லாவண்யாவை விட நிஜமா உன்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கனும் போல!” என லதா அவளை முறைக்க, இன்னும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் மாறாமல் நின்றிருந்தாள் அவள்.

 

“நிஜமா நான் படிக்க போறேனா?” என கேட்டு அவள் கண்கள் இன்னும் அந்த தாள்களில் இருக்க, கீர்த்திஸ்வரன் மேலான மதிப்பு பலபடிகள் உயர்ந்தது அந்த நிமிடம்.

 

உதவி செய்வான் என எதிர்பார்த்தாள் தான் எனினும் இப்படி இத்தனை தூரம் எதிர்பார்க்கவில்லை அவளும்.

 

“நீ தானே கேட்ட? அப்ப நீ தான் படிக்கணும்! செலக்ட் பண்ணிட்டு அவன்கிட்ட சொல்லு. மத்ததை அவன் பார்த்துப்பான்” என்றார் லதாவும் அவள் மகிழ்ச்சியில் சந்தோஷம் கொண்டு.

 

இப்படி தான் அனைத்தும் நல்லவிதமாய் சென்று கொண்டிருந்தது.

 

சித்ரா கூட ‘இவ்வளவு தொல்லை செய்யணுமா அவங்களை?’ என கவலை கொண்டிருந்தார். லதா தான் அலைபேசியில் அவரிடம் பேசி,

 

“உன்னால தான் காலேஜ் போக மாட்டேன் கரஸ் போதும்னு சொல்லி வாங்கி இருக்கா பல்லவி. இதையும் தட்டிக்கழிக்க பார்க்காத!” என்றுவிட்டார்.

 

அதன்பின் இன்னுமே பல்லவியை கையில் பிடிக்க முடியவில்லை. இன்னும் மூன்று மாதங்களில் அவளும் படிக்க இருக்கிற மகிழ்ச்சியில்.

 

அடுத்து லாவண்யா அவள் தந்தை என தொடர்ந்த ஒரு மாத காலமும் இவர்களை சந்திக்கவே இல்லை. மகேஸ்வரனும் பொறுமையாய் இருந்தது கொஞ்சம் ஆச்சர்யம் தான் அவர் குடும்பத்தினருக்கு.

 

அடுத்து தன் குடும்பத்தை தொழிலை என பார்த்துக் கொண்டு கீர்த்திஸ்வரன் பிஸியாகிவிட, மருத்துவர் லதாவை நடக்க முயற்சி எடுக்க சொல்லி அடுத்து தான் பல்லவி அந்த பொறுப்பை தானே எடுத்துக் கொண்டதும்.

 

“நீ அம்மாவை நடக்க வைக்க ஹெல்ப் பண்ண போறியா?” என கீர்த்திஸ்வரன் இவளால் முடியுமா என்பதாய் பார்த்த போது,

 

“எனக்காக எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கீங்க? இன்னும் ஒரு பார்ட் டைம் வேலையும் வேற வாங்கி தர போறீங்க. உங்களுக்காக இதை கூட செய்ய மாட்டேனா?” என்றவளை,

 

“அது சரி!” என சிரிப்புடன் கடந்துவிட்டான் கீர்த்திஸ்வரன்.

 

“அதுக்காக மட்டும் தான் என் கூட இருக்கியா நீ?“ என பாவமாய் லதா கேட்க,

 

“ஒரு ஃப்ளோல பேசி வச்சேன் லதாம்மா. இப்படி ஐஸ் வச்சா தான் ஈஸ்வர் சார் புண்ணியத்துல வேலை கிடைக்கும். அதோட மூணு வருஷம் படிச்சு முடிச்சு உங்க பையன் தான் அப்பவும் எனக்கு வேலை தரணும்!” என்றவளை லதா அவள் முதுகில் மொத்தி எடுக்க, அஞ்சலி சிரிக்க என கலகலப்பாய் தான் நகர்ந்தது நாட்கள்.

 

அவனிடம் சொல்லியது போலவே உடனிருந்து பார்த்து லதாவை நடக்கவும் வைத்திருந்தாள் பல்லவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!