Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பனின் காரிகையவள் 💝 17

கருப்பன் ஆட்டம் 17

கருப்பன் அறையில் நின்றிருந்த மயிலை அறையில் இருந்து வெளியில் அனுப்பி வைத்திருந்தான். 



Advertisement

 மயில் அறையிலிருந்து சென்றதும் கருப்பன் புறம் திரும்பிய மலர், “இ…இப்ப எ…எதுக்கு மயில வெளிய போக சொ….சொன்னிங்க..?” என்று படப்படப்பாக கேட்டாள். 

 “ஏன்னா.. நான் உன்கிட்ட பேசணும்..!”

Advertisement

Advertisement

 “நீங்க என்கிட்ட பேசுறதுக்கு மயில எதுக்கு வெளிய போக சொன்னீங்க….?” 

 “ஏன்னா… அன்னைக்கு ஹாஸ்பிடல்ல நீ என்கிட்ட பேசும்போது அந்த ரூம்ல உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்லன்னு நான் நினைக்கிறேன்…!” என்று கருப்பன் கூறியதும் மலர்விழியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

Advertisement

‘அப்படின்னா அன்னைக்கு நான் பேசுனது எல்லாம் இவருக்கு ஞாபகம் இருக்கும் போலையே..! என்னை நினைத்தவள்,

 “உங்க கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்ல நான் போறேன்” என்று கூறியவள் திரும்பி அங்கிருந்து செல்ல பார்க்க,

“ஏ கேடி நில்லுடி..!” என்றான் கருப்பன்.

“என்ன டி போட்டு பேசிட்டு இருக்கீங்க..?”

 “நீ என்னை எத்தனையோ தடவை டா போட்டு பேசி இருக்க, அதுக்கு இது சரியா போச்சு. இது என் வீடு, நீயே வாண்டடா உள்ள வந்துருக்க, என்கிட்ட இருந்து தப்பிச்சு போலாம்னு மட்டும் நினைச்சுடாத, இங்க வா…!” என்று கருப்பன் கூறவும்,

தலை குனிந்தவாரே அவன் புறம் திரும்பி நின்றால் மலர்விழி. 

அவளைபார்த்து “நம்ம வீட்டுக்கு போலாமா…?” என்று கேட்டான் கருப்பன்.

 அவன் அவ்வாறு கேட்டதும் பட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தால் மலர். 

“ஏ.. ஏ..என்ன சொன்னீங்க..?”

 “ஏன் உன் காது எதுவும் வேலை செய்யலையா…? நான் சத்தமா தானே சொன்னேன். நம்ம வீட்டுக்கு எப்ப போலாம்னு கேட்டேன்…!” என்று மீண்டும் அவன் தெளிவாக அழுத்தமாக அவள் முகம் பார்த்து கேட்டான். 

 “நம்ம வீடா…! நம்மளுக்கு ஏது வீடு நானே எங்க வீட்ல இருந்து வந்து தங்க இடம் இல்லாம மயில் வீட்ல ஓசிக்கு ஒட்டிக்கிட்டு இருக்கேன்”.

 “உன்னை யாரோட வீட்லயும் ஓசிக்கும் ஒட்டிக்கிட்டும் இருக்க சொல்லல, நம்ம வீட்டுல உன்ன மகாராணி மாதிரி இருக்க சொல்றேன்.!” என்றான் கருப்பன். 

 அவன் அவ்வாறு கூறியதும் மலர்விழி அவன் முகம் பார்க்க முடியாமல் நாணிச் சிவந்தவளாக, தனது விழிகளை தாழ்த்தியவள் அமைதியாக நின்றிருந்தாள். 

 “சொல்லுடி நம்ம வீட்டுக்கு போயிடலாமா..!”

 “நான் அன்னைக்கு சொன்னது எல்லாமே உங்களுக்கு கே..கேட்டுச்சா..! அது எல்லாம் உங்களுக்கு ஞா..ஞாபகம் இருக்கா..!” 

 “நான் என்ன கோமாவுலயா போய் படுத்து இருந்தேன். நீ பேசுனது மறந்து போறதுக்கு.. லைட்டா உடம்பு சரியில்லாமல் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுக்காக நீ என்ன பத்தி என்கிட்ட பேசினதெல்லாம் நெனவுல இல்லாம போயிடுமா என்ன..?”

 “அது.. அது.. ஏதோ உங்களுக்கு உங்க.. உங்க..!” என்று மலர் பேச வார்த்தைகளை திரட்ட முடியாமல் திணற,

“எது.. எங்க..!” என்று தலை தாழ்த்தி அவளின் முகம் பார்த்து குறும்பாக புன்னகைத்து கேட்டான் கருப்பன். 

‘ஐயோ இவரு விடமாட்டாரு போலவே..!’ எண்ணிக் கொண்டவலாக, 

 “அது..உங்களுக்கு ஒரு மணி நேரம்தான் டைம் அப்படின்னு டாக்டர் கெடு கொடுத்துட்டாங்க. அதனால வெளியே இருந்த உங்க அம்மா, உங்க ஃப்ரெண்டு எல்லாரும் உங்கள நெனைச்சு ரொம்ப அழுதுட்டு இருந்தாங்க.

அதனால தான் நான் உள்ள வந்து உங்க கிட்ட சும்மா பேசுனேன்”.  

“எனக்கு ரொம்ப முக்கியமான, 

என்ன ரொம்ப ரொம்ப நேசிக்குற என் அம்மாவும் என் நண்பனும் கூட வெளிய நின்னுட்டு இருந்தப்போ நீ எதுக்கு ரூம்குள்ள வந்து அப்படி பேசுன…?”

 “அதான் ஸ்.. சொன்னேனே..! உங்ககிட்ட பேசி பார்த்தா உங்களுக்கு சுயநினைவு மீண்டு நீங்க சரியாகி வந்துருவிங்கன்னு தோணுச்சு அதனாலதான் அப்படி பண்ணேன்” 

 “எனக்கு நினைவுகள் வரணும், நான் பழைய மாதிரி மீண்டு வரணும்னு நினைக்கிறவ எதுக்குடி உங்க வீட்டுல வாழனும், உங்க கூட வாழனும், உங்களுக்குள்ள பொதஞ்சு வாழனும்னு சொன்ன…?” என்று அவளின் விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு கேட்டான் கருப்பன். 

 ‘ஐயையோ பாயிண்ட்டா கேக்குறாரே..!’ என்று நினைத்துக் கொண்ட மலர் அவனை பார்க்க முடியாமல் திரும்பி நின்று கொண்டாள். 

 “பதில் சொல்லுடி எனக்கு நினைவுகள் வரணும்னு நினைக்கிறவ, வேற எதாவது பேசாம ஏன் அப்படி எல்லாம் கேள்வி கேட்ட..? 

அப்போ… உனக்கு அதுதான் விருப்பமா..! என்ன உனக்கு புடிச்சிருக்கா..! என்கூட நம்ம வீட்டுல வாழணுமா..! எனக்குள்ள பொதஞ்சு வாழணுமா…! உனக்கு விருப்பம்னு எனக்கும் டபுள் ஓகே..!” என்று கூறினான் கருப்பன். 

“அது.. ஏதோ பேசணும்னு என் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுனேன் அவ்வளவுதான். மத்தபடி மனசுல வச்சுக்கிட்டு எதையும் பேசல அப்படி பேசணுன்ற அவசியமும் எனக்கு இல்லை. 

இங்க இருந்தா நீங்க தேவை இல்லாம பேசிட்டு இருப்பிங்க உங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு, நான் வெளியே போறேன்” என்றவள் அறையில் இருந்து வெளியேறி சென்று விட்டாள்.

போகும் அவளையும் அவள் ஏதேதோ பேசி உளறி சமாளித்ததையும் நினைத்து இதழ் விறிய புன்னகைத்தான் கருப்பன். 

 மலர்விழி அந்த வீட்டின் கூடத்திற்கு வரும் போது, கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்த கூல்ட்ரிங்கஸோடு வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் தர்மன். 

 கிச்சனில் பொன்னுத்தாயிடம் பேசிக் கொண்டிருந்த மயில் தர்மன் வந்ததை கவனித்து விட்டு

 “அத்த கலரு வந்துருச்சு வாத்த குடிப்போம்” என்றழைக்க, 

“இல்லடி மயிலு நீ போய் குடி, உனக்கு தானே கதிரு வாங்கியார சொல்லி இருக்கியான்” என்று கூறினார். 

“அத்தான் எனக்காக வாங்கியார சொல்லி இருந்தாலும் கூட, எனக்கு இந்த ரெண்டு கலரு பத்தாதே..” என்று கூறிவிட்டு கூடத்திற்கு வந்தவள் தர்மன் நீட்டாமலேயே அவனிடமிருந்து அதனை பிடுங்கியவள், 

“என்ன..! கலர் ஜில்லுன்னே இல்ல..?”என்று கேட்டாள். 

“கதிரு கலர் மட்டும்தான் வாங்கிட்டு வர சொன்னியான். பிரிஜ்ஜூல வச்சு சில்லுனு ஐஸ் போட்டு கொண்டுட்டு வான்னு எல்லாம் எதுவும் சொல்லல.” 

 “அதுக்கு இப்படியா பச்ச தண்ணி கணக்கா வாங்கிட்டு வருவ..? இதை மனுஷன் குடிப்பானா..?”

“அதுக்குத்தான் நான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்..” என்றான் தர்மன். 

“ ஏன் என்னை பார்த்தா உனக்கு மனஷியா மாதிரி தெரியலையாக்கும்”

“தெரிஞ்சிருந்தா நான் ஏன் அப்படி கேட்க போறேன்..?”

“ரொம்பத்தான் பேசுற. உன்ன ஒரு நாளைக்கு கவனிச்சுக்கிறேன்” என்று கடைசி வார்த்தையை அவள் சத்தம் இல்லாமல் கூற,

 அதனை கவனித்த தர்மனோ “கவனிச்சுக்கோ,, கவனிச்சுக்கோ,, உன்னை யாரு செல்லம் வேணாம்னு சொன்னா..!”என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

 அதற்கு மனதிற்குள் அரும்பிய புன்னகை முகத்தில் படற விடாமல் தடுத்து பிடித்தவள், 

“ஆங், ஆசை தான்….!”என்று கூறி முகத்தை கோணி காட்டிவிட்டு

அங்கே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து அவன் குடுத்த கலரை இல்லை இல்லை அவனிடமிருந்து பிடிங்கிய கலரை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தாள். 

 அதன் பின் தன் கையில் உள்ள மற்றொரு கலர் பாட்டிலை மலரின் கையில் கொடுத்தான் தர்மன்.

 அதனை வாங்காத மலரோ “அண்ணா அதெல்லாம் வேண்டாம். நீங்களே குடிங்க..!” என்று கூறினாள் 

அதற்கு தர்மனோ “புடித்தா எல்லாத்துக்கும் தான் வாங்கிட்டு வர சொல்லி இருக்கியான்” என்று கூறி அவள் கையில் திணித்தான்.

 அதற்கு மலர்விழியோ “அப்போ அண்ணா உங்களுக்கு..?” என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் “பாரு உனக்காவது என் மேல கொஞ்சம் அக்கறை இருக்கு, கலர் எனக்கு இல்லையேன்னு எவ்ளோ அக்கறையா கேக்குற? உன் கூடயே ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கே..! அத பாரு எனக்கு வேணுமான்னு கூட ஒரு வார்த்தை கேட்காம உக்காந்து மடக்கு மடக்குன்னு எதையோ குடிக்குற மாதிரி குடிச்சுட்டு இருக்கு” என்று கூற வாயில் முழுவதும் கலர் பாட்டிலை திணித்து கண்களை உருட்டி உருட்டி அவனை பார்த்து முறைத்தாள் மயில்.

 அதன் பின் தர்மன் கருப்பனுடன் அறைக்குள் இருந்துவிட, கூடத்தில் அமர்ந்திருந்த இருவரும் கையில் உள்ள கூல்ட்ரிங்க்ஸை குடித்துக் கொண்டு நிமிர,

அந்தக் கூடத்தின் மையத்தில் உள்ள சுவற்றில் இரு புகைப்படங்கள் மாட்டப்பட்டு அதில் மாலை சூட்டி இருந்தது.

 அதில் ஒரு புகைப்படத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், மற்றொரு புகைப்படத்தில் 20 வயதுடைய ஒரு இளம் பெண்ணின் புகைப்படமும் இருந்தது. 

இரண்டையும் மாறி மாறி பார்த்த மலரின் விழிகள் அதிர்ந்து மயிலிடம் திரும்பியவள், “யாரடி இவங்க ரெண்டு பேரும்…? என்று கேட்டாள்.

 அதற்கு மயிலோ “இது எங்க மாமா கருப்பு அத்தானோட அப்பா” 

“அப்போ இது…!”என்று மற்றொரு புகைப்படத்தை விரல் நீட்டி கேட்க, 

“அத பத்தி இங்க பேச வேண்டாம்டி முதல்ல கலர குடி நம்ம கிளம்புவோம்” என்று மலரின் காதில் கிசுகிசுத்தாள் மயில்.

அவள் அவ்வாறு கூறவும் ஏனென்று ஒன்றும் புரியாமல்..! சரி என்று விட்டு தனது கையில் உள்ள ஜூஸை குடித்து முடித்து இருவரும் பொன்னுத்தாயிடம் கூறிவிட்டு தங்களின் வீட்டை நோக்கி கிளம்பி இருந்தனர். 

 கருப்பனின் வீட்டிலிருந்து கிளம்பியதும் மலர் மயிலிடம் “ஏ மயிலு யார்டி அந்த போட்டோல இருந்தது. அவங்கள பத்தி அங்க வச்சு ஏண்டி பேச வேணாம்னு சொன்ன…?” என்று கேட்டால் பரபரப்பாக,

அதற்கு மயிலோ ‘இவ தெரிஞ்சுக்காம விட மாட்டா போலயே!’ என்று எண்ணி பெரு மூச்சை இழுத்து விட்டு தன் கண்களை அழுந்த மூடி திறந்தவள் “அந்த போட்டோல இருந்தவ பேரு மீனா..!”

“மீனா..! ரொம்ப நல்ல பேரா இருக்குல்லடி..!” என்று கேட்டால் மலர்.

 “அது இப்ப ரொம்ப முக்கியம்…!” என்று கடுகடுத்தால் மயில்.  

 “இப்ப நான் என்னடி சொல்லிட்டேன் எதுக்கு இப்ப நீ கடுப்பா பேசுற..?” என்று கேட்டால் மலர்.

“இந்தாடி அந்த சிறுக்கிய பத்தி பேச எனக்கு துளியும் விருப்பம் இல்ல. ஆனாலும் நீ கேட்குறியே மாத்தி மாத்தி கேக்குறியே அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக நான் இப்போ உன்கிட்ட சொல்றேன். இடையில எந்த க்ராஸ் கேள்வியும் கேட்காம வா..!”என்றால் மயில்.

 “சரி சரி நான் இடைமறைச்சு எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். நீ சொல்லு…!” என்று மீனாவை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்ட மலர்விழி அடுத்த கணமே..!

 “அந்த போட்டோல மாலை போட்டு இருந்ததாங்களே மீனா அவங்க செத்து போய்ட்டாங்களா…? எப்படி செத்து போனாங்க…? என்னாச்சு அவங்களுக்கு…?” என்று மயில் மீனாவை பற்றி கூற வருவதற்கு வாய் எடுக்கும் முன்பு அடுத்த கேள்வியை கேட்டிருந்தால் மலர்.

அதற்கு மயிலோ “அவ செத்தெல்லாம் போகல, உயிரோட தான் இருக்கா..!” என்றாள். 

“உயிரோடு இருக்கிறவங்களுக்கு எதுக்குடி மாலை போட்டு இருக்காங்க…!” என்று மலர் மீண்டும் ஒரு கேள்வியை கேட்க, 

அதற்கு அவளை ஒரு நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தால் மயில். 

அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்ட மலரோ “சரி இனிமே நான் எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். சொல்லுடி..! அவங்களுக்கு என்ன ஆச்சு…?” என்று அவளை அடுத்த கேள்வியும் கேட்டு வைத்தாள். 🤦🏻‍♀️ 

கருப்பன் வேட்டை தொடரும்…

💝கருப்பனின் காரிகையவள்💝💝💝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!