Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

எந்தன் ஜீவநதி – 33.1

நதி 33
“பாப்பா.. இந்தா சாத்துக்குடி ஜூஸ். கொஞ்சம் குடிடா..” என்றவனின் முகமோ லேசாக வியர்வை துளிகள் துளிர்க்க ஆரம்பித்த வண்ணம் இருந்தது.


Advertisement

பிரசவத்திற்காக மருத்தவமனையில் இருந்த யமுனாவிற்கோ இப்போது அவளின் நிலையை விட அவளவனின் நிலை எண்ணி தான் அதிக பயமே..
“அம்மா, சக்தி அண்ணாவ வரச்சொல்லுங்க..” என அருகே இருந்த அவளின் தாயை வெளியே அனுப்பியவள்,

Advertisement

Advertisement

தன் ட்ரிப்ஸ் இறங்காத கையை இறக்கையாய் விரிக்க, பாந்தமாய் அவளுள் அடங்கியவனின் விழிகள் லேசாக கலங்க தொடங்கியது.
“அச்சோ, என்னாச்சு என்னோட தயா குட்டிக்கு..?” என தன் கழுத்தோடு புதைந்திருந்தவனின் பின்னந்தலையை லேசாக வருட,

Advertisement

“என்னால தானே..? சாரி பாப்பா..” என்றான் மெல்லிய குரலில்.
அதில் கோபம் கொண்டவள் தடவிய கூத்தலை இறுக்கமாய் வலிக்கும் படி பற்றி நிமிர்த்தி, அவனின் விழி பார்த்து, “யோவ்.. திரும்ப இதையே ஆரம்பிச்சே கொன்னுடுவேன் பாத்துக்க..
ஒன்பது மாசம் ஓயாம இதே டைலாக்க சொல்லி சொல்லி உங்களுக்கு அலுத்துச்சோ இல்லையோ.. கேட்டு எனக்கு அலுத்துப்போச்சு..
அதும்.. இப்படியெல்லாம் ஆகுமுன்னு தெரியாம நீங்க பண்ண மாதிரி.. கொழந்த புள்ள ரியாக்ஷன் கொடுக்கறது இருக்கே… எப்பா..” என அவள் கடுப்பாக சொல்ல,
“இல்ல பாப்பா.. இப்பவே வேணாமுன்னு..” என ஆரம்பித்தவன் பேச்சு அவளின் முறைப்பில் அடங்கிவிட,
அவனின் உள்ளத்தை நன்கு அறிந்தவளாக, “எத்தன வருஷம் ஆகி புள்ள வந்தாலும்.. நா இத தாங்கி தான் ஆகனும்.. தயா. 
அதனால ஒழுங்கா வெளிய போய் உங்க குட்டி பாப்பா வர்ற வரை சமத்தா இருக்கனும்..” என அவனின் முன் தலை முடியை கோதி ஆதுரமாய் சொல்லும் போதே வலி உண்டாக.. 
“ம்மா..” என்றிருந்தாள் தன்னை மறந்து.
அதை கேட்ட மாத்திரத்தில் அவளின் முகம் காட்டிய பாவனையில் நடுநடுங்கி போனான் அந்த வளர்ந்த ஆண் மகன்.
அவளின் கன்னத்தை நடுங்கும் கரத்தால் பற்றிக்கொண்டவன்,
“என்ன பண்ணுது பாப்பா.. டாக்டர கூப்பிடவா..?” பதட்டத்தில் அவன் பரபரக்க,
அந்த நேரம் உள்ளே வந்த மரகதம்,  சக்தி வாணி மூவருக்கும் வலி கூடி விட்டதோ.. என்ற பதட்டம் ஒட்டிக்கொண்டது.
அவசரமாக அவளை நெருங்கிய வாணி, “யமுனா என்னம்மா.. வலி செறுத்து படிச்சிடுச்சா.. டாக்டர்கிட்ட போய் சொல்லவா..?” எனும் போதே வந்த வலி மறைந்து போக,
“அண்ணி, வலி இன்னும் செறுத்து பிடிக்கல.. விட்டு விட்டு தான் வருது..” என்றதும், 
மரகதம், “பனிக்குடம் உடஞ்சிருந்தாலும் போட்ட ட்ரிப்ஸால இப்ப தானே வலி ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் ஆகுது.. 
வலி இன்னும் நல்லா புடுச்சு புள்ள பொறக்க நேரமாகும்..” என்றிட,
“என்ன..! நேரமாகுமா..? அதுவரை வலி வந்துட்டே இருக்குமா..?” என அதிர்ந்து.. முகம் வெளுக்க கேட்டவனை கண்டு, ‘சிரிப்பதா..? அழுவதா..?’ என தெரியவில்லை யமுனாவிற்கு.
‘ஒருபக்கம் தனக்காக தவிப்பவனை கண்டு சந்தோஷம் தான் என்றாலும்.. இப்படி தவிப்பவனை எப்படி தேற்ற. 
இது இயற்கை.. என எப்படி புரிய வைக்க..’ என்ற ஆயாசமும் அவளுள்.
‘எத்தனை சொன்னாலும் திரும்ப “அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..” ன்னு ஆரம்பிச்சிடுவாரு இவரு’ என நினைத்த யமுனா அவனை விடுத்து சக்தியிடம் திரும்பியவள்,
“அண்ணா ஒரு சின்ன ஹெல்ப்..” என்றிட,
“என்னம்மா..? சொல்லு எதாச்சும் வேணுமா..?” என்றார் பாசமாய்.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம்‌ ண்ணா.. கொழந்த பொறக்கற வரை இவர மட்டும் இந்த ஹாஸ்பிட்டல விட்டு ஒரு கிலோமீட்டர் தள்ளி கூட்டிட்டு போயிடுங்க.. 
இல்ல.. எனக்கு பதிலா கத்தி இவரு பண்ணற கலாட்டால டாக்டர் என்ன வெளியே தொறத்திடுவாங்க..” என்றதும், 
தீனா முகம், ‘ஞே..!!’ என்ற பாவனை காட்ட சுற்றியிருந்தவர்களுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“பாப்பா.. நா இங்கையே இருக்கேன். நிச்சயமா எதுவும் கலாட்டா பண்ணமாட்டேன்..” என அவளின் கையை மென்மையாய் பற்றிக்கொண்டே.. சிறுபிள்ளை போல சொல்பவனை கண்டு இறக்கம் சுரந்தாலும், 
‘அவனால் தான் படப்போகும் வேதனையை காண முடியாது..’ என நினைத்தவள், 
“நீங்க பண்ணற அலப்பறையில நா இங்க புள்ளைய பெத்தெடுப்பேனா..? இல்ல உங்கள பாப்பேனா..? வேணாம் சாமி.. முதல்ல இடத்த காலி பண்ணுங்க..” என கண்டிப்பான குரலில் யமுனா சொல்ல,
வாணியின் கண் அசைவை புரிந்து கொண்ட சக்தி, “மாப்ளே.. நீ வா முதல்ல..” என இழுத்துச்செல்ல.. அவளையே திரும்பி பார்த்தபடியே வெளியே சென்றான்.
அவனை பார்த்த வாணி, “மொத நாளு ஸ்கூல்ல புள்ளைய விட்டுட்டு போற அம்மாவ அந்த புள்ள பாக்கற மாறி பாக்கறத பாரு..! 
இவனுக்கே புள்ள வரப்போகுது. இன்னும் சின்ன புள்ள கணக்கா செஞ்சிட்டு இருக்கான்..” என சிரிப்போடு சொல்ல,
அருகே இருந்த மரகதத்திற்கோ மசக்கையால் வாடி வதங்கி கிடந்த மகளுக்காக அவர்கள் வாசலில் வந்து நின்றவனின் நினைவே.
குழந்தை வந்ததை உறுதி செய்த மறுநாள் முதலே மசக்கை யமுனாவை பாடாய் படுத்த ஆரம்பிக்க, அவள் எடுக்கும் வாந்தியை கண்டு தீனா தான் பயந்து போனான்.
உடனே அவளை கிளப்பிக்கொண்டு டாக்டரிடம் சென்று நின்றவனை மேலும் கீழும் பார்த்த டாக்டர், 
“த்ரீ டூ ஃபோர் மன்த்ஸ் இந்த மாதிரி ப்ராப்ளம் எல்லாம் வரும் தான்.. அதுக்காக அதிகமா மெடிசின் எல்லாம் எடுக்க கூடாது..‌ ரொம்ப ஆனா மட்டும் இதை கொடுங்க..” என கொடுத்த மருந்து எல்லாம் வேலைக்கே ஆகவில்லை.
வாணியோ சகுந்தலாவோ மாறி மாறி வந்து இருந்து செய்து கொடுத்த எல்லாமே அடுத்த நொடி வெளியே வந்துவிட பத்தே நாட்களில் பாதியாகி இருந்தாள் பெண்.
அவனின் சோர்ந்த முகம் கண்டு கேட்ட தங்கமணியிடம் எல்லாவற்றையும் சொல்லி, “ஏ ண்ணே.. அண்ணிக்கும் இப்படி தான் இருந்துச்சா..?” என்றான் பாவமாய்.
“ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் டா. இரு அருந்ததி கிட்ட கேட்டு சொல்றேன். 
பாப்பாங்களுக்கு அவ எதாவது செஞ்சு கொடுத்தாளான்னு..?” என உடனே மனைவிக்கு அழைத்துவிட்டார்.
மறுபுறம் இருந்த அருந்ததியோ, “நானும் போய் பார்த்தேன் யமுனாவ. ஓஞ்சு தான் கிடக்கறா. எனக்கு என்னமோ இது அவ மனசுல இருக்கற விசனத்தால இருக்குமோ ன்னு இருக்கு.
ஒருதடவ அவ வீட்டு ஆளுங்கள பாத்தா எல்லாம் சரியாகிடும்..” என்றதும் அதை கேட்டிருந்த தீனா,
அடுத்த நாளே வாணியை யமுனாவிற்கு துணையாக இருக்க வைத்தவன்,
‘விசயம் தெரிந்து.. அவளின் எதிர்பார்ப்பு நடக்காமல் போனால் வருத்தம் தான் மிஞ்சும்..’ என்பதால்,
“ஒரு ஆர்டர் விசயமா வெளியூர்‌ போகனும் பாப்பா. நைட்டுக்குள்ள வந்திடுவேன்..” என சொன்னவன் அதிகாலையிலேயே கிளம்பிவிட்டான் மாமனார் வீட்டிற்கு.
அவனை கண்டதும் ஓடி வந்து வரவேற்ற கங்காவும், கிருஷ்ணாவும், “மாமா.. நல்லா இருக்கீங்களா..? அக்கா எப்படி இருக்கா..? அவ வரலையா..?” என ஒருசேர கேட்க,
“அவ நல்லாவே இல்ல..” என்றவனின் தழுதழுத்த குரலில் அவனை கேள்வியாய் முத்தரசன் பார்க்க, 
“அவ உண்டாகி இருக்கா மாமா..” என்றதும், 
தினமும் போன் செய்தோ அல்லது போட்டோ, வாய்ஸ் நோட் என அனுப்பும் யமுனா கடந்த பதினைந்த நாட்களாய் எதுவும் அனுப்பாமல் இருந்ததில், ‘என்னவானது..?’ என்ற யோசனையில் இருந்தவருக்கு விசயம் தெரிந்ததும் எழுந்தது மகிழ்ச்சியே.
இருந்தபோதும் இத்தனை நாள் ஓயாமல் பேச முயன்றவள் இதை சொல்லாமல் தவிர்த்ததை எண்ணி,
‘தினமும் பேசிட்டு இருந்தப்ப காதல் பண்ணதையும் இப்படி தான் மறச்சா.. மாமனாரு இறந்தத மட்டும் சொல்ல முடுஞ்சுது. நல்லவிசயத்த சொல்ல முடியல..’ என நினைத்தவரின் எண்ணம் புரிந்தது போன்று,
“அவ நினப்பு மொத்தமும் உங்க எல்லார் மேல தான் இருக்கு.. ஆனா உங்ககிட்ட பேசற நிலைமைல அவ இல்ல..” என்றவன் அவளின் நிலையை சொல்லி, 
“எனக்கு தான் அம்மா இல்ல.. அவளுக்கு இருக்கறப்போ அவளோட ஏக்கத்தை போக்க வேணுமே.. இல்லன்னா நா என்ன ஆம்பள.. நல்ல புருஷன். அதான் உங்கள தேடி வந்தேன். 
உங்க பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல. வேலைக்கு வந்த இடத்துல அவள மனசார விரும்பினது நான் தான். 
இல்லாத என்னோட அம்மா ஸ்பரிசத்த அவகிட்ட உணர்ந்ததால தான்.. அவள விடவே முடியாம உங்ககிட்ட இருந்து பரிச்சிட்டேன்.. எல்லாம் என்னோட சுயநலத்துக்காக மட்டுமே நா பண்ணது.
அதுக்கு என்னை என்ன வேணுமுன்னாலும் சொல்லுங்க.. ஆனா யமுனா பாவம் மாமா.. அவ உங்கள எல்லாம் ரொம்ப தேடறா.. 
ப்ளீஸ், என்னோட தப்பை மன்னிச்சு அவள வந்து ஒரே ஒரு தடவ பாருங்க..” என இருகரம் கூப்பி நின்றவனை நினைத்து ஆச்சரியமே மொத்த குடும்பத்திற்கும்.
‘யமுனா தீனாவை விரும்ப ஆரம்பித்த காரணம் முதல்.. கடைசி நாளில் நடந்தது வரை.. மொத்தமும் அறிந்தவள் அங்கே தானே இருக்கிறாள்..!!! 
அவளின் மூலம் அனைவருக்கும் விசயம் தெரியுமே..! 
ஆனால், இவனோ கதையையே மாற்றி.. மொத்த தவறும் தன் மீது போட்டுக்கொண்டு தங்களின் மகளுக்காக கையோந்தி நிற்கிறானே..!’ என பெற்றவர்களாய் அவர்கள் உள்ளம் உருகத்தான் செய்தது.
ஆனாலும் இவ்வளவு நாட்களுக்கு பிறகு சட்டென வீம்பை மொத்தமாக விட்டு வர முடியாத முத்தரசன்,
“மரகதோ வயக்காட்ட விட்டுட்டு என்னால வர முடியாது. கங்கா இங்கே எல்லாம் பாத்துப்பா.. நீ கூட போய் பாத்துட்டு வா..” என்று 
சொல்லிவிட சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது தீனாவிற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!