Skip to content
Post Views: 2,888
யாதுமாகி #33
வீட்டுக்கு வந்த வெங்கடாசலம் அமைதியாக தனதறைக்கு போய்விட்டார்.
நேத்ரா நீ பண்ணினது தப்பு! வேதம் மகளை கடிந்து கொண்டார்.
என்னம்மா தப்பு?அவங்க என் முன்னாடி உங்களை தரக்குறைவா பேசலாமா? அது சரியா? தாயிடம் வாதிட்டாள் நேத்ரா.
Advertisement
சரி,தவறு எல்லாம் இப்போ பேச முடியாதுடா. அதற்கான காலம் கடந்து விட்டது. சோர்ந்து போய்விட்டார் வேதம்.
ஏன் பேச முடியாது? என்ன காலம் கடந்து போச்சு?
இப்போ எதுக்கு என்கிட்ட மல்லுக்கு நிக்குற?அந்த அம்மா சரியில்லைன்னுதான் உங்க அப்பா இந்த வரன் வேண்டாம் என்று சொன்னார்.நீ பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நின்னியே…
Advertisement
குத்திகாட்டுறியாம்மா? கண்ணீர் திரளும் விழியை உயர்த்தி தாய் முகம் நோக்கினாள்.
Advertisement
உரலுக்குள்ள தலையை விட்டுட்டு உலக்கைக்கு பயந்தா எப்படி? கோபத்தில் சொல்லிவிட்டார்.
வேதம் வார்த்தை கேட்டு நேத்ரா முகம் வெளிறி தாயைப் பார்க்க…
நேத்ரா உன்னை நோகடிக்க சொல்லலைடா.யதார்த்தம் சொன்னேன்.
Advertisement
இனி சரி தப்பு பேசியோ, பார்த்தோ ஆகப்போவதில்லை.
ஏம்மா நான் வாழாவெட்டியா இங்கேயே இருந்துடுவேன்னு உங்களுக்கு பயமா இருக்கா?
ச்சீ…வாயை மூடு! ஒத்த பிள்ளை பெத்து,செல்லம் கொடுத்து,வளர்க்க தெரியாம வளர்த்து அது இஷ்டத்துக்கு விட்டுட்டாங்கன்னு ஊரில் நாலு பேர் பேசுவாங்க. இதெல்லாம் தேவையா?
யாரோ பேசிட்டு போகட்டும். நாலு பேர்,நாலு பேருன்னு நாம எந்த நாலு பேரை பற்றி கவலை படறோம்னு புரியல. ஏன்னா நீங்க சொல்ற அந்த நாலு பேருமே, நாலு பேரு என்ன சொல்லுவாங்கனு தான் புலம்புறாங்க. கடைசியா யாருதான் அந்த நாலு பேர்?
தாய் மகள் விவாதம் தெரிந்து தொண்டையை செறுமியபடி வெங்கி வந்து நின்றார்.
நேத்ரா அப்பாக்கு தலை வலிக்குது. ஒரு டீ போட்டு எடுத்துட்டு வரியாடா? பரிவுடன் மகளை கேட்டார்.
இதோப்பா…பத்து நிமிஷத்தில் எடுத்துட்டு வரேன்,கிச்சனுக்கு ஓடினாள்.
வேதா பிள்ளையை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிற… ஓ…லாயர் மாமியார் என்ற பவுசா? நக்கலாய் சிரித்தார்.
வந்துடப் போகுது வாயில…வேலையை பார்த்துட்டு போங்க. அலட்சியமாய் கணவரை எதிர்கொண்டார் வேதம்.
ஏன்டி…அந்த பொண்ணு மனசு நொந்து போய் வந்து இருக்கு. வந்து இறங்கினதும் உன் வியாக்கியானத்தை ஆரம்பிச்சுட்ட?
ஒரு நல்ல குடும்பத்து தாய் எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் நடந்துக்கிறேன்.
இதுதான் தாய்க்கு அழகா? அவர் நையாண்டியாய் சிரித்தார்.
கோபமா வந்த பெண்ணை தூபம் போட்டு கிளப்பி விடணுமா ? சிலிர்த்துக்கொண்டார்.
இப்போ என்ன.. அவ நிரந்தரமா இங்கேயே தங்கிடுவான்னு பயப்படறியா?
உன் மாப்பிள்ளை பொண்டாட்டி பிள்ளையை பிரிந்து இருக்க மாட்டார். அவரால் இருக்கவும் முடியாது.
அதுக்கு? வேதம் தீ பார்வை பார்த்தார்.
எப்படியும் நாலு நாளில் வந்து நிற்பாரு உன் மாப்பிள்ளை, அதுவரைக்கும் குழந்தை நிம்மதியா இருந்துட்டு போகட்டும். மனையாளின் கன்னம் தட்டினார்.
இது தான் பொறுப்புள்ள அப்பா பேசுற பேச்சா?
அப்பா, இஞ்சி ஏலக்காய் டீ! பெரிய கப்பில் தந்தைக்கும், மீடியம் சைஸ் கப்பில் தாய்க்கும் கொண்டு வந்தாள்.
நேத்து வாசனை கட்டி இழுக்குதுடா…அட்டகாசம், இவ்வளவு நல்லா டீ போடுறியே….மகளை வானளாவ புகழ்ந்தார் வெங்கி.
ம்க்கும்…பொண்ணு ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிட்டா..முகத்தை திருப்பி தோள்பட்டை வரை ஒரு வெட்டி விட்டு போனார் வேதம்.
அவ கிடக்கிறா, பொறாமையில் இப்படி பேசுறா…நீ போய் ரெஸ்ட் எடுடா தங்கம். அப்பா போய் சரவணபவனில் லன்ச் வாங்கிட்டு வரேன்.மகளின் கன்னம் வருடிவிட்டு போனார் வெங்கி.
தந்தையின் தேறுதலில் நெகிழ்ந்து போனாள்.
“——————-”
ஜோதி இங்கே வா! கோபக் குரலில் மருமகளை அழைத்தார் அன்னம்.
என்ன என்று எரிச்சலுடன் முந்தானையை உதறி கொண்டு எதிரில் வந்து நின்றார்.
ஜோதி நீ பண்றது எல்லாம் நல்லாவா இருக்கு?
அருவெறுப்பாய் ஒரு பார்வை பார்த்தார் அன்னம்.
அதற்கெல்லாம் அசருபவர் ஜோதி அல்லவே.. என்ன பண்றேன்? எது நல்லா இல்ல? கித்தாய்ப்பாய் கேட்டார்.
உனக்கு ஐம்பது கடந்தாச்சு, பேரக்குழந்தை பார்த்தாச்சு. இன்னும் உன் எள்ளளும்,துள்ளலும் குறையவே இல்லையே..
வாழவேண்டிய பொண்ணு வயித்தெரிச்சலை கொட்டிக்கிறியே…நீயும் ரெண்டு பொண்ணுகளை பெத்தவ தானே? வார்த்தை சாட்டையை வலுவாய் சுழற்றினார் அன்னம்.
மண்டைக்கனம் கொண்டவளை கட்டிக்கிட்டு வந்தது உங்க பேரனோட தப்பு. அதுக்கு என் மேல பாயறீங்க? கத்தினார் ஜோதி.
உன்னை விடவா மண்டைக்களம் கொண்டவங்க இந்த பூமியில் இருந்து விட முடியும்? கேவலமான லுக்குடன் கேட்டு வைத்தார் அன்னம்.
என்ன பேச்சு பேசுறீங்க நீங்க? வரிந்து கொண்டு வந்தார் ஜோதி.
மருமகளை கொடுமைப்படுத்துவதாக நினைத்து உன் மகனோட சந்தோஷத்துக்கு குழி பறிக்கிறியே அது புரியுதா உனக்கு? காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கணும். ஏன் இப்படி எதுக்கெடுத்தாலும் குற்றம் குறைன்னு அந்த பொண்ணை குதறிக்கிட்டே இருக்க?ஒரு முடிவோடு தான் கேட்டார் அன்னம்.
விஷ்ணுவும், வேணும். பார்வையாளராகவே இருந்தனர்.
காத்தடிச்சா குப்பை வந்து கோபுரத்தில் ஒட்டிக்குமாம். அதுபோல வந்தவ உங்க அழகு பேரன் பொண்டாட்டி. கோபுரத்தில் இருந்தாலும் குப்பைக்கு குப்பை புத்தி போகலை.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? .மனதின் கசடை வார்த்தையில் துப்பினார் ஜோதி.
விஷ்ணு ரௌத்திரத்துடன் தாயை முறைக்க…
அந்த குப்பை காத்துல கோபுரத்திற்கு வந்தது இருக்கட்டும்.முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த குப்பை எப்படி கோபுரத்துக்கு வந்துச்சு? கோபமாய் கேட்டார் அன்னம்.
ஏய்…யாரைப் பார்த்து என்ன பேசுற? உனக்கு அவ்வளவு தான் மரியாதை… அந்த திமிர் பிடித்தவளும் நானும் ஒன்னா? நான் ஜோதி,ஆத்திரம் கண்ணை மறைக்க க்ஷண நேரத்தில் மாமியாரிடம் அவர் கை ஓங்க…குறுக்கே வந்த வேணு ஓங்கிய கன்னத்தை வளைத்து பிடித்து பளார் என அறைந்தார்.
சாதுவான கணவர் இப்படி பொசுக்கென்று கை நீட்டுவார் என எதிர்பார்க்காத ஜோதி கண்ணகியாய் முறைத்தார்.
என்னடி பேசுற? கொன்னுடுவேன் ராஸ்கல். என் அம்மாவை கை ஓங்குற அளவிற்கு தைரியம் வந்துடுச்சா? மீண்டும் ஒரு அறை கொடுத்தார்.
பயத்திலும் அவமானத்திலும் அழுகையிலும் கன்னத்தைப் பற்றிய படி கணவரை நோக்க…
நான் தகுதி தராதரம் பார்த்திருந்தால் நீ என் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் சாணம் அள்ள தான் தகுதியானவ.
நான் ஆசைப்பட்ட பாவத்துக்கு மறு பேச்சு பேசாம உன்னை கட்டி வைத்தவங்க எங்க அம்மா. அவங்களையே அடிக்க கை ஓங்குற….
விரும்பி தான் கட்டிக்கிட்டேன் ஆனா விதியை நொந்துகிட்டு தான் உன் கூட குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். வேணு கேட்டதில் நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டியது போல் துடித்தார் ஜோதி.
நானும் இன்னைக்கு திருந்துவ நாளைக்கு திருந்துவன்னு விட்டு பிடிச்சா நீ ஓவரா போயிட்டு இருக்க. என் பிள்ளை வாழ்க்கையை நாசம் பண்ணிடுவ போலிருக்கு.
இதோ பாரு இந்த வீட்டில் உனக்கு இருக்கும் சகல உரிமையும் என் மருமகளுக்கும் இருக்கு.அவளை வாழ விடாமல் பண்ணினால் நீயும் இங்கே வாழக்கூடாது.
போடி…எங்கேயாவது போய் தொலை! உன்னை பார்த்தாலே எனக்கு கோபம் அதிகமாகுது. ஆவேசமாக மனைவியை இழுத்து தள்ளினார்.
கணவனின் வலிமையை தாக்குபிடிக்க முடியாமல் இடறியவர் அன்னத்தின் காலடியில் போய் விழுந்தார்.
வேணு என்னப்பா இது? உன் வயசுக்கு இப்படி நடந்துக்கலாமா? அன்னம் மகனை அதட்டியபடியே மருமகளை தூக்கினார்.
நாலையும் யோசித்து மரியாதை,குடும்ப கௌரவம் என்று அமைதியாய் போறதினால் தான் இவளுக்கு குளிர் விட்டு போச்சு!
பெரும்பாலான ஆம்பளைங்க குடும்ப விஷயத்தில் தலையிடாமல் போறது கையாலாகாத்தனம் இல்லை. குடும்பத்தோட நிம்மதி போயிடக் கூடாது என்ற ஒரு காரணம்தான்.
என் புள்ள எவ்வளவு தான் தாங்குவான்? அவன் பொறுமை எல்லை கடந்துவிட்டால் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு வெளியே போயிடுவான்.
எனக்கு என் பொண்டாட்டியை விட என் புள்ள முக்கியம்.அவன் நிம்மதியும் சந்தோஷமும் முக்கியம்.
அழுது வீங்கிய முகத்துடன் மகனை பார்த்தார் ஜோதி. விஷ்ணு எதையும் கண்டுகொள்ளவில்லை. ஜன்னல் வழியே தோட்டத்து செடிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் மனதில் எண்ணியதை தான் அவன் தந்தை பேசினார் என்பதில் அவனுக்கு மகிழ்ச்சியே.
எல்லோரும் ஒரே அணியில் இருக்கீங்களா? அடிவாங்கியும் அகங்காரம் குறையவில்லை ஜோதிக்கு.
என்னடி பேசுற?மீண்டும் ஓங்கிய வேணுவின் கரத்தை கோபமாய் தட்டி விட்டார் அன்னம்.
வேணு இப்படித்தான் உன்னை வளர்த்தேனா? இதுதான் வீரமா? மகனிடம் கத்தினார்.
அடிங்க.. அடிச்சு கொல்லுங்க! நான் செத்து தொலையறேன் பெருங்குரலில் ஆவேசமாய் அழுதார் ஜோதி.
நீ வீட்டை விட்டு வேணும்னாலும் போ, உலகத்தை விட்டு வேணாலும் போ!..மண்ணெண்ணெய் ஊத்தி கொளுத்திக்கோ, கயிறு போட்டு கூட தொங்கு. அது உன் இஷ்டம். இருக்கிறவங்க நிம்மதியை கெடுக்காதே சொல்லிட்டேன்.
எதிரில் ஆவேசமாய் நின்ற மனைவியை இழுத்து சோபாவில் தள்ளிவிட்டு சிங்கமென வெளியேறினார் வேணு.
பரம சாதுவான வேணு இன்று வெகுண்டு விட்டார். மகனின் தவிப்பு மருமகளின் கண்ணீர் அவரை வெகுவாய் கலங்க வைத்துவிட்டது.
இதுவரை மனைவியிடம் அவர் கை நீட்டியது இல்லை. அவ்வளவு சகிப்புத்தன்மை கொண்ட மனிதன் தான் இன்று பொறுக்க முடியாமல் அறைந்து விட்டார்.
இப்போ உங்களுக்கு திருப்தியா? மாமியாரிடம் சீறினார் ஜோதி.
அவன் அடித்தது கொஞ்சம் கூட தப்பே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே இதை செய்திருந்தா எல்லாம் சுமுகமா இருந்திருக்கும்.
இந்த ஜென்மத்தில் நீ திருந்த போவதில்லை. இன்னும் என்னென்ன ஏழரையை கூட்ட போறியோ? கடவுளுக்கே வெளிச்சம்.அன்னம் வெறுப்புடன் பேசிவிட்டு போனார்.
அழுது அவமானத்தில் கன்றிய முகத்துடன் மகனை ஏறிட்டார். நீ எல்லாம் ஒரு மகனா? உன்னை பத்து மாசம் சுமந்தவளை என்ன பேச்சு பேசுறாங்க? நீ பார்த்துட்டு நிற்கிறயே…அவன் சட்டையை கொத்தாக பற்றினார்.
அலட்டல் இன்றி அவர் கரத்தை விலக்கியவன், நான் உங்க மகனா? சிரித்தபடி கேட்டான்.
ஜோதி வலியுடன் பார்க்க… நீங்க சுமந்து பெத்தீங்க சரி, வளர்த்ததெல்லாம் என் பாட்டி தானே..
தன் பிள்ளையோட சந்தோஷத்தை தன் சந்தோஷமா நினைக்கிறவ தான் உண்மையான தாய்.நெருப்பை உமிழ்ந்து விட்டு சென்றவன் சற்று நின்று இன்னும் கொஞ்ச நாளில் இதுக்கெல்லாம் முடிவு கட்டுறேன்! தீர்க்கமாய் உரைத்துவிட்டு வெளியேறினான்
error: Content is protected !!