Skip to content
Post Views: 639

சிவா தன் விருப்பத்தை தன் குடும்பத்திடம் கூறி விட்டு அனைவரிடமும் கூறலாம் என எண்ணி தன் தாய் தந்தையை அழைத்து கொண்டு தன் சித்தப்பா வீட்டிற்கு வந்து இருந்தான்…
அவனும் நந்தினியும் கார்த்திகாவும் நிரவியும் அமர்ந்து பேசியதை கவனிக்காமல் உள்ளே சென்று விட வாணன் எதோ அழைப்பு வரவே பேசி கொண்டு இருந்தவன் நிரவி அழுது கொண்டே கார்த்திகாவிடம் பேசுவதை பார்த்தவர் வேகமாக அங்கு செல்ல அவர்கள் பேசியது அனைத்தையும் கேட்டார்… தன் மருமகள் அழுவதை பார்த்து தாங்க முடியாதவர் எதோ முடிவு எடுத்து விட்டு வந்ததே தெரியாமல் வீட்டிற்குள் சென்று விட்டார்…
அங்கு சிவா சந்தோசமாக இருந்தான்… ஏன் என்றே தெரியாமல் அவன் சந்தோசம் நந்தினி ஜனனி வர்ணனுக்கும் சந்தோசமாக இருந்தது… அது எல்லாம் வாணன் வரும் வரை தான்.. அன்று திருமணத்தை பற்றி பேசும் போது சிவா ரித்திகாவை பார்த்த மூன்றாவது ஆள் நந்தினி தான்… இப்போது நந்தினி சகஜமாக அனைவரிடமும் பேச ஆரம்பித்து இருந்தாலும் அளவாக தான் பேசுகிறார்…
Advertisement
ஜனனியிடம் மட்டும் முன் இருந்தது போல் பேச ஆரம்பித்து இருந்தார்… அதனால் அன்று சிவா பார்த்ததை அவரிடம் கூறி இருந்தார்… அவருக்ம் சந்தோசம் தான் ரித்திகா இந்த வீட்டிற்கு மருமகளாய் வருவதில்…. அங்கு அனைவரும் ரித்திகாவை அர்ஜுனன் சுபா இருவரின் சொந்த பெண்ணாய் தான் பார்க்கின்றனர்..
வர்ணன் “சொல்லு டா இன்னிக்கு என்ன எல்லார் கிட்டயும் பேசனும்னு சொல்லி வர சொல்லி இருக்க முக்கியமான விஷயமா..” என்று கேட்டார்…
“நில்லுங்க சித்தா அப்பா வரட்டும் சொல்றேன்” என்று கூறி சிறு பிள்ளையாய் கண் சிமிட்டினான்… அதை பார்த்த இரு தாய்மார்களுக்கும் சந்தோசம்… ஜனனிக்கு செல்ல மகனாகிற்றே….
Advertisement
வாணன் யோசனையாய் உள்ளே வர யாரும் அதை கண்டுபிடிக்கவில்லை… “அப்பா ரொம்ப நாளா என்னை கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னிங்கல… இப்போ நான் ஓகே சொல்றேன்… பொண்ணு யாருனு கேட்டா ரொம்ப சந்தோசப்படுவீங்க…” என்று அவன் கூறும் போதே இடையில் நிறுத்திய வாணன் “நீ எந்த பொண்ணை சொன்னாலும் நான் சந்தோசப்பட மாட்டேன் தம்பி.. நான் சொல்ற பொண்ணை கட்டிக்கோ.. நிரவி தான் பொண்ணு…” என்று கூறினார்…
Advertisement
அதை கேட்டு அனைவரும் அதிர்ந்துவிட்டனர்… சிவா அதிர்வாக “ப்பா என்ன சொல்றிங்க.. நிரவியை நான் அப்படி பாக்கல ப்பா…” என்று கூறினான்..
“சிவா சின்ன வயசுல இருந்தே நீ தானே அவளை பாத்துக்கிட்ட.. அவ மேல எவளோ பாசமா இருந்த.. அது எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டா சரி ஆகிடும்…” என்று கூறினார்..
“ப்பா எனக்கு ரித்திகாவை தான் பிடிச்சு இருக்கு… நிரவி மேல இருக்குறது பாசம்.. ரித்திகா மேல இருக்குறது காதல்… இப்பவும் எனக்கு நிரவியை பிடிக்கும்…” என்று கூறினான்…
Advertisement
அன்று வாணனுக்கு என்ன ஆனதோ சிவாவை நிரவியை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வைக்க கோவமாக பேச ஆரம்பித்து இருந்தார்…
அப்போது தான் அர்ஜுனன் வந்தார்.. அவர் பேசியதை கேட்டு அப்படியே நின்றுவிட்டார்…. “சிவா பைத்தியமா என்ன தான் அர்ஜுனன் சுபா அந்த பொண்ணை வளர்த்தாலும் அந்த பொண்ணு அவங்க சொந்த பொண்ணு இல்ல தானே.. யாரோ ஒரு பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா… வேண்டாம்டா உனக்கு தான் நிரவியை பிடிக்குமே அவளை கல்யாணம் பண்ணிக்கோ” என்று கோவமாக கூறினார்..
அந்த சத்தத்தில் தான் நிரவியும் கார்த்திகாவும் வீட்டிற்கு வந்தனர்… அர்ஜுனன் ஒருவித முக இறுக்கத்துடன் நின்று இருப்பதை பார்த்து நின்று விட்டனர்…
“அப்பா நீங்களா இப்படி பேசுறீங்க மாமாவும் அத்தையும் கேட்டா ரொம்ப உடைஞ்சு போயிடுவாங்க… அப்பா எனக்கு ரித்திகாவை ரொம்ப பிடிச்சு இருக்கு ப்பா… இப்படி எல்லாம் பேசாதீங்க ப்பா… ரொம்ப கஷ்டமா இருக்கு… அது இல்லாம நிரவிக்கும் எனக்கும் ஒன்பது வயசு வித்தியாசம் ப்பா… அவ இன்னும் காலேஜ் கூட போகல ப்பா…”கொஞ்சம் கலங்கி கூறினான்..
“தம்பி புரியாம பேசாத.. உனக்கும் நிரவிக்கும் தான் கல்யாணம்… பாப்பா காலேஜ் முடிச்சவாட்டி கூட கல்யாணத்தை வெச்சுக்கலாம்…” என்று பிடிவாதமாக கூறினார்…
கோவம் கொண்ட சிவாவோ “அப்பா எனக்கு ரித்திகாவை தான் பிடிச்சு இருக்கு..கல்யாணம் பண்ணா அவளை தான் பண்ணுவேன் இல்லைனா எனக்கு கல்யாணமே வேண்டாம்” என கோவமாக கூறினான்…
வாணனும் “இதுக்கு நானும் சம்மதிக்க மாட்டேன்… அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர கூடாது… நிரவி தான் இந்த வீட்டு மருமக” என்று உறுதியாக கூறினார்…
“ரித்திகா மேல் ஏன் இந்த வெறுப்பு என்று புரியாத அர்ஜுனன் நீங்க இன்னும் ரித்திகாவை என் பொண்ணா நினைக்கலயா அத்தான்” என்று வருத்தமாக கூறினார்…
அங்கு அர்ஜுனனை யாரும் எதிர்பார்க்கவில்லை… அதிர்ச்சியாக பார்த்தனர்… “அத்தான் உங்க விருப்பத்தை சொன்னிங்க.. எனக்கு சந்தோஷம் தான்.. ஆனா ரித்திகாவை இன்னும் வேற ஒருத்தர் பொண்ணா பார்க்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தான்… நீங்க அவளை வேண்டாம்னு சொன்னது எனக்கு வருத்தம் இல்ல… ஆனா அவ அவளை கேவலமா நினைச்சிட்டீங்கல..அவளை நாங்க எங்க சொந்த பொண்ணா தான் பாக்குறோம்.. நீங்க இப்படி பேசுவீங்கனு நான் நினைக்கல அத்தான்” என்று வருத்தமாக கூறினார்…
நிரவி வேகமாக அவரின் அருகில் வந்தவள் அவரின் கையை பிடித்து கொண்டு வாணனை பார்த்து “மாமா நீங்க இப்படி பேசுவீங்கனு நினைச்சு கூட பாக்கல… நீங்க வெளியில நாங்க பேசுனது வெச்சு இங்க வந்து பேசுறீங்க அப்படினு நினைக்குறேன்… ஆமா நான் அவரை லவ் பண்ணேன் தான்… ஆனா அது லவ் இல்லனு நான் புரிஞ்சிக்கிட்டேன்.. ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க மாமா… அவர் என் மேல பாசம் தான் வெச்சு இருக்காரு.. பாசத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் இருக்கு மாமா… யோசிங்க.. அப்பா வாங்க கிளம்பலாம்” என்று வெளியில் அழைத்து கொண்டு வந்து விட்டாள்..
நிரவி “அப்பா” என்று வருத்தமாக அழைக்க அர்ஜுனன் தன்னிலை மீண்டு “ஒன்னும் இல்ல குட்டிமா.. அப்பா பாத்துக்குறேன்…” என்று அவள் உச்சியில் முத்தமிட்டவர் அவளை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்…
அவர்கள் கிளம்பியதும் வீட்டில் பேரமைதி நிலவியது.. ஜனனி தான் வாணனிடம் “நீங்க இப்படி பேசுவீங்கனு நினைக்கவே இல்லை அத்தான்… இதை ரித்திகாவும் சுபாவும் கேட்டா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க..” என்று கொஞ்சம் வருத்தமாக கூறினார்….
சிவா எதுவும் கூறவில்லை வண்டியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்…
ஜனனியும் நந்தினியும் செல்லும் அவனை கவலையாக பார்த்து கொண்டு இருந்தனர்… வர்ணன் தான் “அண்ணா உனக்கும் பாட்டியோட ரத்தம் தான் ஓடுது அப்படினு காட்டிட்டல… நீ எப்படி ண்ணா இப்படி பேச கத்துகிட்ட… அந்த பொண்ணு உன்னை என்ன ண்ணா பண்ணிச்சு..” என்று வருத்தமாக கேட்டவர் கார்த்திகாவை அழைத்து “கார்த்தி வெளிய என்ன பேசுனீங்க… உனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லு” என்று கேட்டார்…
அவளும் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் கூறினாள்… ரித்திகாவை பார்த்து கொண்டு நிரவியை பார்க்காமல் விட்டது… அதன்பின் நிரவியின் கருத்து வேறுபாடு… அவள் புரிந்து கொண்டது… அதன்பின் ரித்திகா சிவா இருவரையும் தவறாக நினைத்தது… நிரவி அவளை பேசியது… அதன் அவள் திருவிழாவில் புரிந்து கொண்டது… அன்று அர்ஜுனன் வீட்டில் நடந்தது.. இப்போது வெளியில் இருவரும் பேசியது என அனைத்தையும் கூறினாள்… அவளே “அப்பா நிரவி முதல்ல அண்ணாவை லவ் பண்றதா தான் நினைச்சா ஆனா அவளே அது லவ் இல்ல.. அவ அண்ணா மேல வெச்சு இருக்குறது பாசம் அன்பு அப்படினு புரிஞ்சிகிட்டா.. ஆனா பெரியப்பா தப்பா புரிஞ்சிக்கிட்டாரு..” என்று வருத்தமாக கூறினாள்…
வர்ணனோ கேட்டியா ண்ணா.. நீயே தப்பா புரிஞ்சிகிட்டு எல்லாரையும் கஷ்டப்படுத்திட்ட.. எங்க யாருக்கும் நிரவி இந்த வீட்டுக்கு மருமகளா வரது பிரச்சனை இல்ல.. ஆனா சிவாவோட விருப்பம் அப்படினு ஒன்னு இங்க இருக்குல… உன் கிட்ட பேசுறதே வேஸ்ட் ண்ணா.. என்று கூறி அவரும் வெளியில் சென்றுவிட்டார்..
நந்தினி அழுது கொண்டே கிட்சன் சென்றுவிட ஜனனியும் அவர் பின்னே சென்றுவிட்டார்…. கார்த்திகாவும் தன் பெரியப்பாவை வருத்தமாக பார்த்து கொண்டே அறைக்கு சென்று விட ஹாலில் தனியாக தன் தாலியை கையில் தாங்கியவாறு வாணன் அமர்ந்துவிட்டார்…
error: Content is protected !!