தென்றலாய் என் காதல் -3

- அத்தியாயம் – 3
மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்றான் விக்ரம்.
அவனை முறைத்து…. உனக்கு எல்லாம் என்ன மரியாதை வேற கிடக்கிறது.
Advertisement
நீ மட்டும் இல்ல. இந்த ஆண்கள் வர்கமே இப்படி தான்.
பெண்களை பார்த்தால் போதுமே என்று சாடினாள்.
“இங்க பாரு பொண்ணே,
Advertisement
நானும் உன்ன சந்திச்சதுல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்
Advertisement
இப்போ பார்த்தாலும் ஆண்களை துச்சமாகவே நினைக்கிறாய்.
உனக்கு என்ன தான் பிரச்சனை” என்றான் கோபத்தின் உச்சாணி கொம்பத்தில்.
ஏன் என் பிரச்சனை என்னவென்று சொன்னால் சார் தீர்த்து வைத்து விடுவீர்களோ?
Advertisement
போயா போ…சும்மா என்றாள் கடு கடுத்த முகத்துடன்.
ஏய்…நீ நான் யாருனு தெரியாம பேசிகிட்டு இருக்க.
யோவ்…நீ யாராக வேண்டும் என்றாலும் இருந்துட்டு போ.
எனக்கு பிரச்சனை இல்லை.
நீ ஒரு தான் எனக்கு பிரச்சனை என்றாள் சிந்து.
என்ன டா இவ, சரியான பைத்தியமா இருப்பா போலே இருக்கு என்றது அவள் காதில் கேட்டு விட்டது.
ஹலோ…. வாட் யூ சே…ப்ளீஸ் டெல் மீ அகைன் என்றாள்.
ஏன் உன் காது என்ன செவிடா.
நீ ஒரு பைத்தியம்னு சொன்னேன் என்றான் விக்ரம்.
உனக்கு எவ்ளோ தைரியம் என்று அவனை அடிக்க கையை ஓங்கினாள் சிந்து.
அவள் கையை லாவகமாக பிடித்து வலைத்தான் விக்ரம்.
“என்ன டி…. ஒரு ஆம்பளைய கை நீட்டி இவ்ளோ பேர் முன்னாடி அடிக்க வர?”
“சரி நானும் போனால் போகுது என்று விட்டால்
நீ என்னவோ உன்னை பெரிய ராணி என்று நினைத்து கொண்டு எல்லை மீறி போகிறாய்” என்றான்.
டேய் மரியாதையா கையை எடுய்யா?
என்னங்க எல்லாரும் பார்த்துட்டு நிக்குறிங்க?
பட்ட பகல்ல ஒருத்தன் இத்தனை பேர் முன்னாடி ஒரு பொண்ணு கிட்ட இப்படி வன்மையா நடந்துக்கறான் இப்படி வேடிக்கை பார்த்துட்டு நிக்குறிங்க?என்றாள் சிந்து.
யோவ்…கையை விடு என்றார் கூட்டத்தில் ஒரு பெரியவர்.
அவன் யார் கூறியதையும் காதில் வாங்கி கொள்ளவில்லை.
அவள் கையை மேலும் இறுக்கினான்.
ஆ….. வலிக்குது என்ன விடு என்று தன் கையை அவனிடம் இருந்து பிரிக்க போராடினாள் சிந்து.
அவன் இரும்பு கரம் அவளை வதைக்கவே செய்ததே தவிர சற்றும் தளர்ச்சியடையவில்லை.
பற்களை கடித்து கொண்டு இப்போ நான் என்ன செய்தேன்னு இப்படி என்னிடம் நடந்து கொண்டாய் சொல் என்று அதட்டினான் விக்ரம்.
எதுக்காக நீ என்ன அப்படி பார்த்த என்றாள்.
எப்படி?!!
தப்பா…
தப்பான?!
வக்கிரமாக.
அப்படியா?’
எதை வச்சு நீ, நான் உன்னை வக்கிரமாய் பார்த்தேன் என்கிறாய்.
ஹம்ம்…உன் பார்வையை வைத்து தான் என்றாள்.
இங்க பாருங்க மக்களே. நீங்களே நியாயத்தை சொல்லுங்க.
இவங்க என் எதிர் சீட்ல உக்கார்ந்து இருக்காங்க.
ஏதேர்ச்சியாக நான் அவர்களை சில சமயம் பார்க்க நேரிடலாம், அதற்காக நான் வக்கிரத்துடன் பார்க்கிறேன் என்று ஆகிவிடுமா?
சரி அது இருக்கட்டும், நான் உன்னை பார்க்கிறேன் என்று உனக்கு எப்படி தெரியும்?’ சொல் என்றான் விக்ரம்.
சற்றே தடுமாற்றதுடன் அது…அது…வந்து நீ…நீ பாக்குறதை நான் பார்த்தேன் என்றாள்.
ஓ…அப்போ நீயும் என்னை வக்கிரதோடு தான் பார்த்து இருக்கிறாய் அல்லவா என்றான் விக்ரம்.
ஏய்…உனக்கு என்ன பைத்தியமா?
நான்…நா…எப்படி அப்படி எல்லாம் சீ என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
ஏன் நீ ஒரு பொண்ணுன்றதாலையா? என்றான் விக்ரம்.
அவள் அவனை எரிக்க பார்த்தாள்.
என்ன முறைக்குற? “
நல்லா கேட்டுக்கோ உனக்கு எப்படி உன் மேல செய்யாத தவறுக்காக பழி போட்டா வலிக்குதோ அதே போலே தான் எனக்கும்.
இங்கு ஆண்,பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
எல்லாருக்கும் உணர்வுகள் பொதுவானது.
உன்னை நான் பார்த்தேன் அதை நான் ஒப்பு கொள்கிறேன்.
உன் கண்கள், அழகாக இருந்தது அதை ரசித்தேன்.
இதில் என்ன இருக்கிறது.
அழகான எதுவாகினும் கண்கள் அதை ரசிக்கத்தான் செய்யும்.
நானும் ரசித்தேன் அவ்ளோ தான்.
ஆனால் அதற்காக இப்படி என் கேரேட்டரையே அசிங்கப்படுத்துவாயா சொல்.
அவள் தலையை தாழ்த்தினாள்.
கூட்டத்தை பார்த்து…
ஒரு பொண்ணு ஒரு குற்றசாட்டை எடுத்து வச்சா போதுமே?
போட்டி போட்டுக்கிட்டு வந்திருவீங்க, நியாயம் கேட்க.
அவங்க சொல்றது உண்மையா பொய்யானு கூட தெரியாது.
ஒடனே வீடியோ எடுத்து வைரல் ஆக்கி அவன் பிஃவுச்சரை போய் கெடுக்க வேண்டியது.
அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கும். அதை மறந்துறாதீங்க
மொதல்ல போங்க எல்லாரும் போய் அவங்க அவங்க வேலையை பாருங்க என்று எரிந்து விழுந்தான்.
அனைவரும் மௌனமாய் கலைந்தனர்.
இங்க பாரு, மொதல்ல பொண்ணா லக்ஷனமா நடந்துக்கோ.
ஏதோ பஜாரி மாதிரி நடந்துக்கற.
பொண்ணுனா மொதல்ல நிதானம் வேணும்.
ஒரு பொண்ணால ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
அதுக்காக உன் இஷ்டத்துக்கு இப்படி எல்லாரையும் ஆட்டி படைக்கலாம்னு நினைக்காத.
ஆளப்பாரு…நல்லா முருங்கைக்காக்கு கை கால் முழச்ச மாதிரி.
இனி யார் கிட்டையாவது வம்பு இழுத்த
அப்புறம் பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன் என்று அவள் கையை உதறினான் விக்ரம்.
அவளுக்கு அழுகை முட்டி கொண்டு வந்தது.
தன் உடமைகளை எடுத்தவள் வேகமாக வாசலை நோக்கி ஓடினாள்.
அதை கவனித்தவன் ஓய்…என்று சொடக்கு போட்டு அழைத்தான்.
அவள் அவன் புரம் திரும்பினாள்.
எங்க போற?
ட்ரெயின் இன்னும் நிக்கல. ரோசப்பட்டு செத்து தொலைஞ்சுராதா?
ட்ரெயின் நின்னதும் உன் ரோஷத்தை காட்டிக்கோ. வா வந்து உக்காரு என்றான் தெனாவட்டாக.
அவள் அசையாது அதே இடத்தில் நின்று இருந்தாள்.
அக்கா.. வாங்க என்று ப்ரியா அழைத்து வந்து தன் அருகே அமர்த்தி கொண்டாள்.
அவன் அவளை பார்ப்பதை தவிர்த்தான்.
சிந்துவோ நொடிக்கு ஒரு முறை அவனை பார்த்தாள்.
அவள் பார்ப்பதை உணரவே செய்தான் விக்ரம்.
ஆனாலும் அதை பெரிதாய் கண்டுக்கொள்ளவில்லை.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் வர அனைவரும் அவர் அவர் தன் உடமைகளை எடுத்து கிளம்பினர்.
ப்ரியா சிந்துவின் கை பேசி என்னை தன் கைபேசியில் சேமித்து கொண்டாள்.
அக்கா பாய் என்று அவளை ஒரு முறை அணைத்து, நைஸ் டு மீட் யூ அக்கா.
நான் கால் பண்றேன் என்று விட்டு தன் தாத்தா பாட்டியுடன் விடை பெற்றாள்.
விக்ரம் மறந்தும் அவளை பார்க்கவில்லை.
ஆனால் சிந்து இறுதி வரை அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.
அவன் வேகமாக ட்ரெயின்னை விட்டு இறங்கி தன் கை கடிகாரத்தை பார்த்து கொண்டே நடக்க..
யாரோ இருவரும் அவன் உடமைகளை கையில் எந்தி…அவனை பாத்துக்காப்போடு அழைத்து சென்றானர்.
அதை தூரத்தில் இருந்து பார்த்து நின்றாள் சிந்து.
ச்ச…நாம தான் தப்பு பண்ணிட்டோமோ?
அவசரப்பட்டு பேசிட்டோம்.
சாரி கேக்கலாம் பார்த்தால் அவர் என்னிடம் முகம் கொடுக்கவே இல்லையே.
எல்லாம் என்னை சொல்லவேண்டும்.
எப்போது பார்த்தாலும் கோபம், திமிர், அகங்காரம்.
இனியேனும் சற்று குறைத்து கொள்ளத்தான் வேண்டும் ஹ்ம்ம்…என்று பெருமூச்சு விட்டு ஆட்டோவை நாடி சென்றாள்.
ஏய்…சிந்து, நில்லு டி என்ற அழைப்பில் திரும்பினாள்.
ஏய்…ரஞ்சி.
கூப்பிட வர மாட்டேன்னு சொன்ன.
மேடம் ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு சொல்லிட்டு இப்போ என்ன என்றாள் சிந்து.
பிஸி தான்.
ஆனா என்ன பண்றது சிந்து.எனக்கு என் வேலையை விட என் பிரண்ட் தானே முக்கியம்.
அதான் பர்மிசன் போட்டு ஓடி வந்துட்டேன் என்றாள் ரஞ்சிதா.
அடேங்கப்பா…புல் அரிக்குது என்றாள் சிந்து.
சரி…சரி…வா நாம ஸ்கூட்டியில் போகலாம் என்று கையை பிடித்து இழுக்க,
அடியே வேண்டாமுடி…
கொஞ்சம் நாள் வாழ்ந்துட்டு போறேன் என்றாள் சிந்து.
உனக்கு இன்னும் உன் குறும்பு போகல,
இப்போ எல்லாம் நான் நல்லா ஓட்ட காத்துக்கிட்டேன் வா டி என்று இழுத்து சென்றாள் ரஞ்சிதா.
கடவுளே என்னை காப்பாத்து என்றபடி சென்றாள் சிந்து.
காரில் சிந்துவின் நினைவுகளோடே சென்றான் விக்ரம்.
சார்…நேத்து மீட்டிங் என்ன ஆச்சு.
எல்லா டீலும் நமக்கு ஓகே ஆயிருச்சுல என்றான் மேனேஜர் மனோகர்.
இல்ல…எல்லா டீலயும் ரிஜெக்ட் பண்ணிட்டேன் என்றவன் மீண்டும் அவள் நினைவுகளில் மூழ்கினான்.
என்ன ஆச்சு நம்ம பாஸ்க்கு.
எப்போ பார்த்தாலும் பிஸ்னஸ் பத்தியே பேசிட்டு இருப்பாரு.
இப்போ என்ன இவ்ளோ அமைதியா இருக்காரு.
சரி இல்லையே என்று நினைத்தான் மனோ.
என்ன மனோ…நீ என்ன யோசிக்கிறேன்னு எனக்கு தெரியுது.
ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு என்றான் விக்ரம்.
நாக்கை கடித்து சிரித்து ஓகே பாஸ் என்று கூறினான்.
யார் அவ?
அவ பேர் கூட தெரியாது.
ஆனா அவளை பத்தியே சிந்திக்க வச்சுட்டா.
ரொம்ப தைரியம் தான்.
பொண்ணுங்கனா இப்படி தான் தைரியமா இருக்கனும்.
பாரதி கண்ட புதுமை பெண் போலே.ஹ்ம்ம்…என்றான் மனோ.
ஆனா!!! அவன் ஏன் ஆண்களை இவ்ளோ அதிகமா வெறுக்குறா என்றான் கேள்வியாய்.
தெரியலையே பாஸ் என்றான் மனோ.
அப்போது தான் தன்னை சுதாரித்தான் விக்ரம்.
தன்னை அறியாமலே சிந்துவை பற்றி பேசி கொண்டு இருந்ததை நினைத்து,
ச்ச…. என்ன ஆச்சு எனக்கு என்றான்.
அதான் சார் எனக்கும் ஒன்னும் புரியல.
கோயம்பத்தூர்ல எதுவும் காத்து கருப்பு அண்டி இருக்குமோ?
இல்ல மோஹினி ஏதாவது.
சடாப்…வாயை மூடிக்கிட்டு வண்டியை ஓட்டு என்றான் விக்ரம்.
ஹ்ம்ம்.. என்று தலையை வேகமாக ஆட்டினான்.
மனோ…..!!
எஸ் சார்.
அம்மாவை பார்த்துக்க ஆள் அப்பாய்மெண்ட் பண்ண சொன்னேனே.
எஸ் சார்.அப்பொய்ன்மெண்ட் பண்ணியாச்சு சார்.
நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு வந்துருவாங்க என்றான் மனோ.
ஹ்ம்ம்…குட்.
ஆள் எப்படி என்னனு விசாரிச்சியா?
எஸ் சார்.
நல்ல பொண்ணுனு தான் பேசிக்கிறாங்க.
ஹ்ம்ம்…. சரி என்று தன் லாப்டாப்பில் வேலையில் புதைந்தான்.
ரஞ்சி எப்படி டி. உன் ரேஸியும் கொடுத்து அப்பிலே பண்ண வேலையில் நான் எப்படி டி.
ஏதாவது பிரச்சனை ஆகிட்டா?
அதெல்லாம் ஒன்னும் இல்ல சிந்து.
நீ தானே சொன்ன என்ன வேலையா இருந்தாலும் பரவாயில்லை. பணம் அதிகம் கிடைக்கணும்னு.
அதெல்லாம் சரி தான் ஆனால் இப்படி ஆள் மாறாட்டம் பண்ணா தப்பு இல்லையா?
ஏய் லூசு மாதிரி பேசாதடி.
அங்க என்ன ஆபீஸ் ஒர்க்கா பார்க்க போற
வயசான ஒரு லேடி.
அவங்கள பார்த்துக்க ஒரு ஆள் தேவை.
அது நீயா இருந்தாள் என்ன?
நானா இருந்தா என்ன?
நீ இன்டெர்வியூக்கு வர முடியாததால தானே நான் அட்டென்ட் பண்ணேன்.
விடு அவங்களுக்கு முகம் கூட நியாபகம் இருக்காது டி.
பயந்து தொலையாத.
சென்னைக்கு வந்துட்டல இனி பொய் எல்லாம் பேச சீக்கிரம் கத்துக்குவ என்றாள் ரஞ்சிதா.
தென்றல் மீண்டும் வீசும்….*
