Skip to content
Post Views: 1,293
என் ஜீவன் உன்னை சேருமா
Advertisement
அத்தியாயம் -15
Advertisement
Advertisement
மாயாவுக்கு தந்தை எழுந்து வருவதற்குள் அனைத்து பிரச்சனையும் முடித்து..
அவரை நிம்மதியாக சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு உண்டான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்..
Advertisement
ரியாவுக்கு எப்படி 500 கோடி பணம் கொடுப்பது என்று யோசித்தாள் மாயா.
உலகநாதன் ஒருமுறை இவளிடம் சொல்லி இருக்கிறார். அப்பா வெளிநாட்டில் சிலர் பேங்க்குகளில் பணம் போட்டு வைத்துள்ளதாகவும், அப்புறம் அவளிடம் ஒரு பெரிய டைரியை காட்டி, இதில் முக்கியமான விஷயம் இருக்கு மாயா சப்போஸ் அப்பா உடம்புக்கு ஏதாவது பிரச்சனையின்னா இந்த டைரியை பாரு என்று கூறியிருக்க.. உடனே அந்த டைரியை தேடி வீட்டிற்கு கிளம்பினாள்..
வீடு அமைதியாக இருந்தது ரியா, ரிஷி, ரிஷியின் அம்மா என்று மூன்று பேரும் மட்டும் வீட்டில் இருக்க.. மாயாக நேராக தந்தையின் அறைக்கு சென்றாள். அந்த டைரியை தேட எந்த இடத்திலும் தேடியும் டைரி எங்கேயும் கிடைக்கவில்லை..
கொஞ்ச நேரம் கழித்து தேடினாள்,, மறுபடியும் வேற அறையில் தேடினாள் எவ்வளவு நேரம் தேடியும் எந்த அறையிலும், எங்கேயுமே டைரி இல்லை தேடி தேடி சோர்ந்து போனவள் படுத்து தூங்கி விட்டாள்..
மறுநாள் தந்தையை பார்க்க சென்றவள் தந்தையிடம் “எங்க டாடி டைரியை வச்சிருக்கீங்க” என்று அவள் புலம்ப அவர் மயக்கத்தில் மகளின் புலம்புகளை கேட்டுக் கொண்டிருந்தார்..
மாயா உலகநாதன் ஆபீஸிலும் டைரியை தேடிக் கொண்டிருந்தாள், அவள் 2 நாள்களாக தேடியும் டைரி எங்கேயும் கிடைக்கவில்லை ..
டைரியைத் தேடி ஓய்ந்து போனாள் மாயா..
மறுநாள் காலையிலே வேகமாக எழுந்தவள் தன் தாய் பெர்நிலா ஃபோட்டோ முன்பு நின்று வணங்கிக் கொண்டிருந்தாள்.. அவளுக்கு நிறைய நேரம் குழப்பமாக இருந்தாள் தாயை வணங்கி விட்டு அவரிடம் புலம்புவது பழக்கம்.. அதே போல் பெர்னிலா போட்டோ முன்பு நின்று வேண்டிக் கொண்டிருக்க,, திடீரென்று காற்று வேகமாக வீசியது பெர்னிலா புகைப்படம் ஆட என்னவென்று போட்டோவை பார்த்தாள் மாயா,, பெர்னிலா போட்டோவுக்கு பின் ஒரு கவர் இருந்தது,, அது என்ன கவர் என்று மாயா திறந்து பார்த்தாள்,, அதில் அவள் தேடிய டைரி இருக்க..
மாயாவுக்கு டைரியை பார்த்தவுடன் தான் ஏதோ உயிர் வந்தது போல அப்பாடா என்று சோபாவில் அமர்ந்தாள்..
டைரியை திறந்து பார்த்தாள். உலகநாதன் எங்கெங்கு பணம் வைத்திருக்கிறார்.. என்னென்ன சொத்து வாங்கியிருக்கிறார்? யாரிடம் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்,, எவ்வளவு பணம் இருப்பு வைத்திருக்கிறார், எவ்வளவு கடன் இருக்கிறது,, அவரின் சொத்து மதிப்பு என்ன, எந்த ஷேர் மார்க்கெட்டில் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணிக்கிறார், எந்தெந்த பேங்கில் எவ்வளவு பணம் போட்டு இருக்கிறார், என்று எல்லா தகவலும் இருக்க மாயாவுக்கு தன் தந்தையை எண்ணி அவ்வளவு பெருமையாக உணர்ந்தாள்..
டைரியை பார்த்தவுடன் இந்தியாவில் உள்ள பணத்தை எல்லாம் சேர்க்க ஆரம்பித்தாள் அதில் மொத்தம் 150 கோடி மாயாவின் கையில் இருந்தது..
உலகநாதன் வெளிநாட்டில் இரண்டு பேங்கில் பணம் போட்டு வைத்திருக்க அதை எடுக்க முயற்சி பண்ணினாள்..
ஒரு வெளிநாட்டு வங்கியில் உலகநாதன் வராமல் பணம் தர முடியாது என்று கூறி விட.
இன்னொரு வெளிநாட்டில் வங்கியில் உலகநாதனின் மெடிக்கல் சர்டிபிகேட் வைத்து மாயா பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூற அந்த பணத்தை வாங்க வெளிநாட்டுக்கு போக நினைத்தாள்..பார்த்திபனை அழைத்துக் கொண்டு.
பார்த்திபன் மனைவிக்கு இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் பார்த்திபன் வர முடியாது என்று கூறிவிட்டான்..
மாயா தனியாக வெளிநாடு கிளம்பினாள். மாயா பலமுறை வெளிநாடு சென்று வந்த பழக்கம் இருந்தாலும்,முதல் முறையாக தனியே செல்வதற்கு ஒரு மாதிரி இருந்தாலும் எப்படியாவது ரியாவின் பிரச்சினையை முடித்தாக வேண்டும் என்று வெளிநாட்டிற்கு வந்து இறங்கினாள்..
ஒரு நல்ல ஹோட்டலில் தங்கியவள், பார்த்திபனுக்கு போனில் அழைத்து வந்து விட்டதாக தகவல் சொல்லிவிட்டு தந்தையைப் பற்றி விசாரித்து விட்டு,, பயண களைப்பில் உறங்கி போனாள்..
மறுநாள் எழுந்து குளித்து ரெடியாகி வங்கிக்கு வர..
அவளுக்கு எங்கே செல்வது யாரிடம் கேட்பது இதைப் பற்றி ஒன்றும் புரியவில்லை.. உலகநாதன் வங்கி கார்டையும் வைத்து விசாரிக்க..
அவர்கள் இங்கே போ, அங்கே போ. பேப்பர் எங்கே என்று அவளை அலைய விட.
மாயா நொந்தே போனாள் அவர்கள் கேட்கும் சில டாக்குமெண்ட் பேப்பர் இவளிடம் இல்லை.
அவளுக்கு தெரிந்த சில டாக்குமெண்ட மட்டும் மாயா எடுத்து வந்திருக்க,, அதை வைத்து பணம் பெற முடியாது என்று அவர்கள் சொல்லிவிட,,
என்ன செய்வது என்று முளித்துக்கொண்டு நின்றிருந்தாள்..
மாயா மீண்டும் உலகநாதனின் பணம் பெறுவதற்கு ஏதாவது ஐடியா இருக்கா என்று பேங்க் மேளாலரிடம் கேட்க,,அவர்கள் இந்த டாக்குமெண்ட் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது,, சப்போஸ் இந்த பேங்க்ல யாராவது பணம் போட்டு இருந்தால். அவர்கள் உங்களுக்கு சுருட்டி கொடுத்தால் பணம் பெறலாம் என்று கூற..
நான் இங்க யாரை போய் தேடுவேன்,, யார் எனக்கு சுருட்டி கொடுப்பார் ஐயோ இங்கே வந்ததே வேஸ்ட் ஆகிவிட்டது வேற வழி இல்லையா என்று முளித்துக் கொண்டிருக்க,,
” அந்த பேப்பர் இருந்தால் பேசலாம் மேடம்,, இல்லனா கிளம்புங்க “என்று அவர் சொல்லிவிட..
நான் வந்தே இருக்க கூடாது என்று புலம்பிக்கொண்டே..
மாயா டாக்குமெண்ட் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க..
மாயா பக்கத்தில் யாரோ வந்து நின்று அவரின் கார்டை நீட்டி அவர்களிடம் மாயாவுக்கு உதவி பண்ண வந்ததாக சொல்ல அந்த உதவி பண்ண வந்தவனின் குரலை கேட்டே அவன் யார் என்று புரிந்து கொண்டவள்..
இவன் உதவி யாருக்கு வேணும் என்று அனைத்து டாக்குமெண்ட்டுகளை அவளின் பையில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்,,.
இவனின் உதவியே தேவையில்லை என்று அவள் கிளம்ப..
அவளை நகர விடாமல் தன்னோடு சேர்த்து பிடித்துக் வைத்துக் கொண்டான் அக்னி..
மாயா அக்னியை பார்த்து முறைக்க..
” பணம் வேண்டாமா”? பணம் வாங்கத்தானே வந்தா?..என்றான் அக்னி..
“உங்க உதவி எனக்கு தேவையே இல்லை” என்றாள் மாயா..
அதற்குள் அக்னியின் கார்டை சரிபார்த்த பெண்.. மாயாவின் டாக்குமெண்ட்டை கேட்க,,.
அவள் கையில் இருந்த பைலை பிடுங்கி அப்பெண்ணிடம் கொடுத்தான் அக்னி..
மாயா அவனை தீயாய் முறைக்க..
“இங்கே இரு, அப்பறமா அத்தானை ஆசையா முறைக்கலாம் ” என்றவன், அப்பெண்ணிடம் அனைத்தையும் பேசி,, இந்தியாவில் உள்ள மாயாவின் வங்கி அக்கவுண்டில் பணம் வந்து விடுமாறு அவரிடம் பேசி முடித்து விட்டு வந்தவன்..
சில டாக்குமெண்டில் மாயவிடம் சைன் வாங்கியவன் அதை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்து..
“எல்லா வேலயும் முடிஞ்சிடுச்சு மாயா,, நீ இந்தியா போறதுக்குள்ள பணம் உன் அக்கவுண்ட்ல ஏறி இருக்கும்” என்றான் அக்னி..
அவனிடம் இருந்து உலகநாதனின் கார்டை வாங்கியவள் “தேங்க்யூ” என்று ஒரே வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்..
அக்னி தான் அவள் பின்னாடியே சென்றான், அவள் ரூம் செல்லும் வரை அவள் பின்னாடியே சென்றவன்,, அவனின் ரூம்பிற்கு சென்றான்..
இருவரும் ஒரே பிளைட்டில் தான் இந்தியா வந்தனர்,, ஆனால் இருவரும் பார்த்துக் கொள்ளவும் இல்லை, பேசிக் கொள்ளவும் இல்லை,, தனித்தனியே தெரியாதவர் போல வந்து சேர்ந்தனர், ஆனால் அக்னி மாயாவை தன் கண் பார்வையிலே வைத்திருந்தான்..
மாயாவுக்கு அக்னியை எண்ணி குழப்பமாக இருந்தது. இந்த அக்னி ஏன் இதெல்லாம் எனக்கு செய்கிறார். ஏன் இந்த மாதிரி அவர் என்னிடம் நடந்து கொள்கிறான்.. அவனுடைய குணம் தான் என்ன?..
முதலில் பாசம் காட்டி என்னிடம் பேசினார்,, பின்பு கல்யாணத்தின் போது அன்பு காட்டி என்னை தூக்கி வைத்துக் கொண்டாடினார்,, பின்பு என்னை வேண்டாம் என்று தல்லி வைத்தார்,, இவர் ஏன் எனக்கு உதவி செய்கிறார்…. இன்னொரு முறை இவனிடம் ஏமாற எனக்கு தெம்பு இல்லை சாமி,, அவன் பக்கம் கூட திரும்பக் கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள் மாயா..
மாயா அங்கே இங்கே என்று பணம் புரட்டி 350 கோடி அவளால் ஏற்பாடு பண்ண முடிந்தது.
இன்னும் 150 கோடிக்கு என்ன செய்ய என்று யோசித்தவள்.. ஊட்டியில் உள்ள தன்னுடைய எஸ்டேட்டை விக்க முயற்சி பண்ணினாள்..
சிலர் அதை மோசமான விலைக்கு கேட்க இவளுக்கு கொடுக்க மனம் வரவில்லை, பார்த்திபன் தான் லோன் போடலாமா, வேற வழி இருக்கான்னு பார்க்கலாம் என்று மாயாவுக்கு அறிவுறுத்த சரி என்றிருந்தாள்.
மாயாவும், பார்த்திபனும் பேங்க் பேங்காக அலைந்தார்கள்.. சில தனியார் லோன் கம்பெனிக்கும் கூட அலைந்து பார்த்தார்கள் யாரிடம் பணம் பெற முடியாவில்லை.. லால் மாயாவுக்கு பணம் கொடுக்க கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்..
உலகநாதன் ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்,, மாயாவுக்கு யாரும் பணம் கொடுக்கக்கூடாது என்று அனைவரும் சொல்லி வைக்க.
மாயாவை எங்கு பணம் கேட்டு போனாலும் இல்லை, இல்லை என்ற பதிலே வர.. மாயா நொந்தே போனாள்,,
பார்த்திபன் தனக்கு தெரிந்த ஒரு சேட்டு இருக்கிறார் அவரிம் பணம் வாங்கி தருவதாக சொல்லி சென்றான்..
அவரும் லாலுக்கு தெரிந்தவராக இருக்க,, அவரும் பணம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்..
பார்த்திபனுக்கு புரிந்தது லால் அனைவரிடம் சொல்லி வைத்திருக்கிறான்.. பணம் கிடைக்கப் போவதில்லை என்று புரிந்து…
பார்த்திபன் “எங்கே போனாலும் பணம் கிடைக்காது மாயா” என்றான்..
error: Content is protected !!